MCQ Questions

குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 6th Social Science Lesson 11 Questions in Tamil

6th Social Science Lesson 11 Questions in Tamil

11. குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

1. இரும்பு கீழ்க்கண்ட எந்த பேரரசு எழுச்சிபெற முக்கிய காரணமாயிருந்தது?

A. அவந்தி

B. மகதம்

C. அங்கம்

D. காசி

விளக்கம்: B. மகதம்

சமூக மாற்றத்தில் இரும்பு குறிப்பிடத்தக்க பங்கினை வகித்தது. கங்கைச் சமவெளியின் வளமான மண், இரும்பினாலான கொழுமுனையின் பயன்பாடு ஆகியவற்றால் வேளாண் உற்பத்தி அதிகரித்தது. இரும்பை பயன்படுத்துவதில் ஏற்பட்ட நிபுணத்துவம் மற்றைய மகாஜனபதங்களை விட மகதம் எழுச்சி பெற முக்கிய காரணமாயிற்று.

2. கீழ்க்கண்டவற்றுள்  கணா என்னும் சொல் குறிக்கும் பொருள் எது?

A. சரிசமமான சமூக அந்தஸ்தை கொண்ட மக்கள்

B. சரி சமமற்ற சமூக அந்தஸ்தைக் கொண்ட மக்கள்

C. மத வரி

D. தரிசு நிலம்

விளக்கம்: A. சரி சமமான சமூக அந்தஸ்தைக் கொண்ட மக்கள்

மேலும் சங்கா என்றால் மன்றம் என்று பொருள். கண சங்கங்கள் சிறிய நிலப்பகுதியில் மேட்டு குடி மக்களை கொண்ட குழுவால் ஆளப்பட்டது. கன சங்கங்கள் சமத்துவ மரபுகளை பின்பற்றின.

3. 6 ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் எத்தனை வகை அரசுகள் செயல்பட்டன?

A. 2

B. 3

C. 4

D. 6

விளக்கம்: A. 2

அவை கண-சங்கங்கள்  – முடியாட்சி முறைக்கு முன்னாள் மேட்டுக்குடி மக்கள் அடங்கிய குழுவின் ஆட்சி  மற்றும் முடியாட்சி அரசுகள் – மன்னராட்சி முறையில் அமைந்தவை ஆகும். முடியாட்சி முறை அரசில் ஒரு குடும்பம் நீண்ட காலம் ஆட்சி செய்யும் போது அது அரச வம்சமாக மாறுகிறது. இந்த அரசுகள் வைதீக வேத மரபுகளை பின்பற்றின.

4. 6 ஆம் நூற்றாண்டில் கங்கைச் சமவெளியில் எத்தனை மகா ஜனபதங்கள் காணப்பட்டன?

A. 4

B. 8

C. 12

D. 16

விளக்கம்: D. 16

மக்கள் குழுவாக குடியேறிய தொடக்ககால இடங்களே ஜனபதங்கள் ஆகும். பின்னர் ஜனபதங்கள் குடியரசுகளாகவோ, சிற்றரசுகளாகவோ ஆனது. கங்கைச் சமவெளியில் இரும்பின் பரவலான பயன்பாட்டால் பரந்து விரிந்த மக்கள் வாழும் பகுதிகள் தோன்றின. இதனால் ஜனபதங்கள் மகாஜனபதங்களாக மாற்றம் பெற்றன.

5. கீழ்க்கண்டவற்றுள்  ஆறாம் நூற்றாண்டில் இருந்த நான்கு முக்கிய ஜனபதங்களில் இல்லாதது எது?

A. மகதம்

B. அவந்தி

C. பாஞ்சாலம்

D. கோசலம்

விளக்கம்: C. பாஞ்சாலம்

அங்கம், மகதம், வஜ்ஜி, காசி, மல்லம், குரு, கோசலம், அவந்தி, சேதி, வத்சம், பாஞ்சாலம், மத்சயம், சூரசேனம், அஸ்மகம், காந்தாரம் மற்றும் காம்போஜம் ஆகிய 11 ஜனபதங்களில் மகதம், அவந்தி, கோசலம் மற்றும் வத்சம் ஆகிய நான்கு முக்கிய மகாஜனபதங்கள் இருந்தன.

6. சரியாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.

1. வத்சம் – கோசாம்பி, அலகாபாத்

2. அவந்தி – உஜ்ஜயினி

3. கோசலம் – கிழக்கு உத்ராஞ்சல்

4. மகதம் – வைஷாலி

A. 1 & 2

B. 2 & 3

C. 3 & 4

D. 1 & 4

விளக்கம்: A. 1 & 2

மேலும் கோசலம் – கிழக்கு உத்திரப் பிரதேசம் மற்றும்  மகதம் – பீகார் . இந்த நான்கு மகாஜனபதங்களில் மகதம் ஒரு பேரரசாக உருவானது.

7. கீழ்கண்டவற்றுள் மகதம் பேரரசாக உருவானதற்கான காரணங்கள் யாவை?

1. அடர்ந்த காடுகள்

2. அதிக அளவிலான இயற்கை வளங்கள்

3. வணிக, வர்த்தக வளர்ச்சி

4. வளமான மண்

A. 1,  2 & 3

B. 2, 3 & 4

C. 1, 3 & 4

D. அனைத்தும்

விளக்கம்: D. அனைத்தும்

மகதம் கங்கைச் சமவெளியின் கீழ்ப்பகுதியில் அமைந்திருந்ததால் வளமான மண் வேளாண் விளைச்சலை அதிகரித்தது. மேலும் இங்கிருந்த அடர்ந்த காடுகள் கட்டுமானத்திற்கு தேவையான மரங்களையும் படைகளுக்குத் தேவையான யானைகளையும் வழங்கியது. வணிக வர்த்தக வளர்ச்சி மக்களை இடம் விட்டு சென்று கலை மற்றும் தொழில் மையங்களில் குடியேற செய்தது. இதனால் நகரமயமாதல் ஏற்பட்டு மதம் பேரரசாக எழுச்சி பெற்றது.

8. மெகஸ்தனிஸ் இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் இருந்தார்?

A. 10

B. 12

C. 14

D. 15

விளக்கம்: C. 14

கிரேக்க ஆட்சியாளர் செலுக்கஸ் நிகேட்டரின் தூதுவராக, சந்திரகுப்த மௌரிய அரசவையில் இருந்தவர். அவர் எழுதிய நூலின் பெயர் இண்டிகா. மௌரியப் பேரரசை பற்றி நாம் தெரிந்து கொள்ள இந்நூல் ஒரு முக்கிய  சான்றாகும்.

9. மௌரிய பேரரசின் தலைநகர் எது?

A. மதுரா

B. வாரணாசி

C. தட்சசீலம்

D. பாடலிபுத்திரம்

விளக்கம்: D. பாடலிபுத்திரம்

மௌரியர்கள் முடியாட்சி முறையை பின்பற்றினர். அவர்களின் வரலாற்று காலம் ஏறத்தாழ கி.மு 322 முதல் 187  வரை. மௌரிய பேரரசின் முக்கிய அரசர்கள் சந்திரகுப்தர், பிந்துசாரர், அசோகர் போன்றோர் ஆவர். மௌரிய பேரரசின் மாபெரும் தலைநகரான பாடலிபுத்திர நகருக்கு 64 நுழைவு வாயில்களும், 570 கண்காணிப்பு கோபுரங்களும் இருந்தன.

10. மௌரியப் பேரரசை மகதத்தில் நிறுவியவர் யார்?

A. சந்திரகுப்த மௌரியர்

B. பிந்துசாரர்

C. அசோகர்

D. பிம்பிசாரர்

விளக்கம்: A. சந்திரகுப்த மௌரியர்

மௌரியப் பேரரசே இந்தியாவின் முதல் பெரிய பேரரசு ஆகும். சந்திரகுப்த மௌரியர் இப்பேரரசை மகதத்தில் நிறுவினார். பத்ரபாகு எனும் சமணத்துறவி சந்திரகுப்தரை  தென்னிந்தியாவிற்கு அழைத்து சென்றார்.

11. கீழ்கண்டவர்களுள் சல்லேகனா முறைப்படி உயிர் துறந்தவர் யார்?

A. அசோகர்

B. பத்ரபாகு

C. சந்திரகுப்த மௌரியர்

D. பிந்துசாரர்

விளக்கம்: C. சந்திரகுப்த  மௌரியர்

இது ஒரு சமண சடங்கு முறையாகும். இம்முறைப்படி உண்ணா நோன்பிருந்து சந்திர குப்தர் கர்நாடகாவில் உள்ள  சரவணபெலகுலாவில் உயிர் துறந்தார்.

12. கிரேக்கர்கள் பிந்துசாரரை எவ்வாறு அழைத்தனர்?

A. ஆலம் ஷா

B. அமிர்தகதா

C. சிம்ஹசேனா

D. பிந்துசாரர்

விளக்கம்: B. அமிர்தகதா

பிந்துசாரரின் இயற்பெயர் சிம்ஹசேனா. இவர் சந்திரகுப்த மௌரியரின் மகனாவார். அமிர்தகதா என்பதன் பொருள் எதிரிகளை அழிப்பவன் என்பதாகும். பிந்துசாரரின் ஆட்சியின்போது மௌரியரின் ஆட்சி இந்தியாவின் பெரும் பகுதியில் பரவியது.

13. பிந்துசாரர் தன் மகன் அசோகரை எந்த பகுதியின் ஆளுநராக நியமித்தார்?

A. மகதம்

B. வத்சம்

C. அங்கம்

D. உஜ்ஜயினி

விளக்கம்: D. உஜ்ஜயினி

மௌரிய அரசர்களில் மிகவும் புகழ்பெற்றவர் அசோகர் ஆவார். பிந்துசாரருக்கு பின் மதத்தின் அரசரானார். அவர் தேவனாம்பிரியர் என்று அழைக்கப்பட்டார். கடவுளுக்குப் பிரியமானவன் ஒன்று என்பது இதன் பொருளாகும். அசோகர் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல இன்றுவரை ஒளிர்கிறார்  என்று வரலாற்று அறிஞர் H.G. வெல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

14. கலிங்க போர் பற்றி அசோகர் எந்த பாறைக் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார்?

A. 12

B. 14

C. 10

D. 8

விளக்கம்: A. 12

அசோகர் கி.மு 261 ல் கலிங்கத்தின் மீது போர் தொடுத்தார். அப்போரில் வென்று கலிங்கத்தை கைப்பற்றினார். அப்போரின் பயங்கரத்தை அசோகரே தன்னுடைய 13ஆவது பாறைக் கல்வெட்டில் விவரித்துள்ளார்.

15. அசோகரின் எந்த கல்வெட்டு தர்மத்தின் பொருள் குறித்து விளக்குகிறது?

A. 5

B. 6

C. 2

D. 4

விளக்கம்: C. 2

கலிங்கப் போருக்குப் பின்னர் அசோகர் ஒரு பௌத்தர் ஆனார். தர்மத்தின் கொள்கையை மக்களுக்கு பரப்புவதற்காக அவர் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டார். அது அனைத்து மதங்களின் சாரமாகவுள்ள மிக உயர்ந்த கருத்தான மனிதாபிமானத்தை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது.

16. அசோகர் கீழ்கண்ட எவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்?

1. இரக்க உணர்வு

2. புனிதத்தன்மை

3. சுய கட்டுப்பாடு

A. 1 & 2

B. 2 & 3

C. 1 & 3

D. அனைத்தும்

விளக்கம்: D. அனைத்தும்

மேலும் அரக் கொடை, தூய்மை, உண்மையுடைமை  மற்றும் மூத்தோர், ஆசிரியர், பெற்றோர் ஆகியோரிடத்தில் மரியாதையுடனும் பணிவுடனும் நடந்து கொள்ளல் வேண்டும் போன்றவைகளுக்கு அசோகர் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.

17. கீழ்க்கண்டவர்களுள் மூன்றாவது புத்த மாநாட்டை கூட்டியவர் யார்?

A. அசோகர்

B. பிம்பிசாரர்

C. அசுவகோசர்

D. காலசோகா

விளக்கம்: A. அசோகர்

அசோகர் தன்னுடைய மகன் மஹிந்தவையும் மகள் சங்கமித்ராவையும்  பௌத்தத்தை பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பி வைத்தார். தர்மத்தின் கொள்கைகளைப் பரப்புவதற்காக மேற்காசியா, எகிப்து, கிழக்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளுக்கு சமயப் பரப்பாளர்கள் அனுப்பி வைத்தார். அசோகர் தர்ம மகாமாத்திரர்கள் என்னும் புதிய அதிகாரிகளை நியமித்தார். பேரரசு முழுவதிலும் பௌவுத்தத்தை பரப்புவதே அவர்களுடைய பணியாகும்.

18. அசோகருடைய ஆணைகள் எத்தனை?

A. 22

B. 33

C. 44

D. 11

விளக்கம்: B. 33

அவைகள் தூண்களிலும் பாறைகளிலும் குகை சுவர்களிலும் பொறிக்கப்பட்டுள்ளன. அவை அமைதி, நேர்மை, நீதி ஆகியவற்றின் மீது அசோகர் கொண்டிருந்த நம்பிக்கையையும் மக்களின் நலன் மீது அவர் கொண்டிருந்த அக்கறையையும் விவரிக்கின்றன.

19. அசோகரின் கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துமுறை பற்றி சரியாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.

1. சாஞ்சி – பிராமி

2. காந்தகார் – கிரேக்கம் மற்றும் அராமிக்

3. வடமேற்குப் பகுதிகள் – கரோஸ்தி

A. 1 & 2

B. 2 & 3

C. 1 & 3

D. அனைத்தும்

விளக்கம்: D. அனைத்தும்

20. கீழ்க்கண்ட எந்தெந்த  அசோகரின் கல்வெட்டுகளில் மூவேந்தர்களைப் பற்றிய குறிப்பு உள்ளது?

1. 2

2. 4

3. 13

4. 11

A. 1 & 2

B. 1 & 3

C. 2 & 4

D. 2 & 3

விளக்கம்: B. 1 & 3

அசோகருடைய 2 மற்றும் 13ஆம் பாறை கல்வெட்டுகள் மூவேந்தர்களான பாண்டியர், சோழர், கேரள புத்திரர் ஆகியோரையும் சத்திய புத்திரர்களையும்  பற்றி குறிப்பிடுகின்றன.

21. கீழ்கண்டவர்களுள் மௌரியரின் அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் யார் யார்?

1. புரோகிதர்

2. சேனாதிபதி

3. மகா மந்திரி

4. இளவரசர்

A. 1, 2 & 3

B. 2, 3 & 4

C. 1, 3 & 4

D. 1, 2,  3 & 4

விளக்கம்: D. 1, 2, 3 & 4

அரசரே மௌரிய பேரரசின் மேலான இறையாண்மை மற்றும் அதிகாரம் உடையவர் ஆவார். மந்திரி பரிஷத் எனும் அமைச்சரவை அரசருக்கு உதவியது. அரசர் ஒரு மிகச் சிறந்த உளவுத்துறையை கொண்டிருந்தார்.

22. கீழ்க்கண்ட எந்த இடத்தில் உள்ள அசோகரது கல்வெட்டு  பாலி மற்றும் பாகா என்னும் இரண்டு வரிகளை பற்றி குறிப்பிடுகிறது?

A. லும்பினி

B. சாரநாத்

C. வஜ்ஜி

D. வாரணாசி

விளக்கம்: A. லும்பினி

நிலங்களே அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தந்தது. மொத்த விளைச்சலில்  1/6 பங்கு ( பாகா ) நிலவரி வசூல் செய்யப்பட்டது. காடுகள், சுரங்கங்கள், உப்பு மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட வரிகள் அரசுக்கு கூடுதல் வருவாயாக அமைந்தன. அரசு வருவாயில் பெரும்பகுதி ராணுவ ஊதியம், அரசு அதிகாரி ஊதியம், அறக்கட்டளைகள், நீர்ப்பாசன திட்டங்கள் போன்ற பொதுப் பணிகள் ஆகியவைகளுக்காக செலவழிக்கப்பட்டது.

23. மௌரியரின் ராணுவ நிர்வாகத்தில் எத்தனை குழுக்கள் காணப்பட்டன?

A. 4

B. 5

C. 6

D. 8

விளக்கம்: A. 6

மௌரியர் நிர்வாகத்தில்  அரசரே படைகளின் தலைமைத் தளபதியாக இருந்தார். 30 நபர்களை கொண்ட  குழு ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தன. அவை கடற்படை, ஆயுதப்படை( போக்குவரத்து மற்றும் வினியோகம் ), காலாட்படை, குதிரைப்படை, தேர்ப்படை மற்றும் யானைப்படை..

24. நகர நிர்வாகம் கீழ்க்கண்ட எந்த அதிகாரியின் கீழ் இருந்தது?

A. கோபா

B. ஸ்தானிகா

C. நகரிகா

D. விஸ்தா

விளக்கம்: C. நகரிகா

நகரத்தை நிர்வாகம் செய்வதற்காக 30 உறுப்பினர்களை கொண்ட குழுவானது 5 உறுப்பினர்களைக் கொண்ட ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. நகரிகா என்ற அதிகாரிக்கு ஸ்தானிகா, கோபா எனும் அதிகாரிகள் உதவி செய்தனர்.

25. ஜூனாகத் கல்வெட்டு கீழ்க்கண்ட எந்த ஏரி உருவாக்கப்பட்டதை பதிவு செய்துள்ளது?

A. ருத்ரசாகர் ஏரி

B. சங்மா ஏரி

C. சந்திர தால் ஏரி

D. சுதர்சனா ஏரி

விளக்கம்: D. சுதர்சன ஏரி

ருத்ரதாமனின் ஜூனாகத்/ கிர்னார் கல்வெட்டு சுதர்சனா ஏரி எனும் நிலை உருவாக்கப்பட்டதை பதிவுசெய்துள்ளது. இதற்கான பணிகள் சந்திரகுப்த மௌரியரின் காலத்தில் தொடங்கப்பட்டது. அசோகரின் காலத்தில் பணிகள் நிறைவு பெற்றன.

26. மாஸாகாஸ் என்பது எதனால் செய்யப்பட்ட நாணயம்?

A. வெள்ளி

B. தங்கம்

C. செம்பு

D. எதுவும் இல்லை

விளக்கம்: C. செம்பு

மௌரியர் காலத்தில்  பணம் வணிகத்திற்காக மட்டும் பயன்படுத்தப்படவில்லை. அரசாங்கம் பணியாளர்களுக்கு ஊதியத்தை பணமாகவே வழங்கியது. மயில், மலை மற்றும் பிறைச்சந்திர வடிவமைக்கப்பட்ட வெள்ளி நாணயங்கள், மாஸாகாஸ் என்று அழைக்கப்பட்ட செப்பு நாணயங்கள் ஆகியன அரசினுடைய நாணயங்களாக இருந்தன.

27. கீழ்க்கண்ட எந்தெந்த இடங்களில் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டது அர்த்த சாஸ்திரம் குறிப்பிடுகிறது?

1. பனாரஸ்

2. வங்காளம்

3. அசாம்

4. மதுரை

A. 1, 2 & 3

B. 2, 3 & 4

C. 1, 3 & 4

D. அனைத்தும்

விளக்கம்: D. அனைத்தும்

மௌரியர் காலத்தில் வணிகம் செழிப்புற்றது. குறிப்பாக  கிரேக்கம், மலேசியா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளுடன் பெருமளவு வணிகம் நடைபெற்றது. காசி ( பனாரஸ் ), வங்கா ( வங்காளம் ), காமரூபா ( அசாம் ) மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மதுரை ஆகிய இடங்களில் சிறப்பு மிக்க துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன என்று அர்த்த சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

28. யகஷன் மற்றும் யக்ஷி  என்பது கீழ்கண்ட எதை குறிக்கும்?

A. உருவச் சிலைகள்

B. மத வரிகள்

C. கிராம அதிகாரிகள்

D. படைவீரர்கள்

விளக்கம்: A. உருவச் சிலைகள்

மௌரியர் கால கலையை உள்ளூர் கலை அரசு  கலை என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். நீர், வளம், மரங்கள், காடுகள், காட்டுச் சூழல் ஆகியவற்றோடு தொடர்புடைய கடவுள் யக்ஷன் மற்றும் யக்ஷாவின் பெண் வடிவமான யக்ஷி ஆகியவை உள்ளூர் கலைகள் ஆகும். அரண்மனைகள் மற்றும் பொதுக் கட்டிடங்கள், ஒற்றைக் கல் தூண்கள், பாறை குடைவரை கட்டடக்கலை, ஸ்தூபிகள் ஆகியன அரச கலைகளாகும்.

29. நாகார்ஜுன கொண்டாவில் உள்ள மூன்று குகைகளில் யாருடைய கல்வெட்டுக்கள் இடம்பெற்றுள்ளன?

A. அசோகர்

B. தசரத மௌரியர்

C. பிந்துசாரர்

D. நந்திவர்மன்

விளக்கம்: B. தசரத மௌரியர்

இவர் அசோகரின் பேரன் ஆவார். புத்தகயாவுக்கு வடபுறம் பல குகைகள் உள்ளன. பராபர் குன்றிலுள்ள 3 குகைகளில் அசோகருடைய அர்ப்பணிப்பு கல்வெட்டுக்கள் உள்ளன ( இக்குகைகள் யாருக்காக அமைத்து தரப்பட்டன என்ற விபரங்கள் அடங்கிய கல்வெட்டுகள் ).

30. மௌரிய பேரரசின் கடைசி அரசர் யார்?

A. ஷலிஷுகா

B. சம்புருத்தி

C. தசரதன்

D. பிருகத்ரதா

விளக்கம்: D. பிருகத்ரதா

இவர் அவருடைய படைத் தளபதியான புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார். அவரே சுங்க அரச வம்சத்தை நிறுவியவர் ஆவார். அசோகருக்கு பின் வந்த அரசர் மிகவும் வலிமை குன்றியவர்களாக இருந்தனர்.  பாக்டீரியா நாட்டை சேர்ந்த கிரேக்கர்களின் படையெடுப்பு பேரரசை மேலும் வலிமை குன்ற செய்தது. இதுவே மௌரிய பேரரசின் வீழ்ச்சி காரணமாக அமைந்தது.

31. கீழ்கண்ட எந்த சீனப் பேரரசர் சீன கோட்டைகளின்  சுவர்களை இணைத்து சீன பெருஞ்சுவரை உருவாக்கினார்?

A. ஷென் ஷுபாவோ

B. குன்-சி-ஹங்

C. ஜியோமின்-ஸுவன்

D. லியாங்-ஹங்

விளக்கம்: B. குன்-சி-ஹங்

சீனப் பெருஞ்சுவர் பழங் காலத்தில் கட்டப்பட்ட தொடர்ச்சியான பல கோட்டைகளின் சுவர் ஆகும். குன்-சி-ஹங் என்னும் பேரரசர் தனது பேரரசின் வட எல்லையைப் பாதுகாப்பதற்காக  கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இந்த சுவர்களை இணைத்தார்.

32. ஒலிம்பியாவின் ஜியஸ் கோயில் எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது?

A. மூன்றாம் நூற்றாண்டு

B. நான்காம் நூற்றாண்டு

C. ஐந்தாம் நூற்றாண்டு

D. ஏழாம் நூற்றாண்டு

விளக்கம்: C. ஐந்தாம் நூற்றாண்டு

கிறிஸ்  நாட்டிலுள்ள ஒலிம்பியாவில்  கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் ஜியஸ் என்ற கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!