MCQ Questions

இந்தியா – மௌரியருக்குப் பின்னர் 6th Social Science Lesson 25 Questions in Tamil

6th Social Science Lesson 25 Questions in Tamil

25] இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

1. அசோகரின் மறைவுக்குப் பின்னர் தெற்கே ____________ சுதந்திர அரசர்களாயினர்.

A) சுங்கர்கள்

B) கன்வர்கள்

C) சேடிகள்

D) சாதவாகனர்கள்

விளக்கம்: தெற்கே அசோகரின் மறைவுக்குப் பின்னர் சாதவாகனர்கள் சுதந்திர அரசர்களாயினர்.

2. தங்கள் சுதந்திரத்தைப் கலிங்கத்தில் பிரகடனப்படுத்தியவர்கள்____________

A) சுங்கர்கள்

B) கன்வர்கள்

C) சேடிகள்

D) சாதவாகனர்கள்

விளக்கம்: கலிங்கத்தில் சேடிகள் தங்கள் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தினர்.

3. குப்தப் பேரரசு நிறுவப்படுவதற்கு முன்னர் வடக்கே சுங்கர்களும், ____________ ம் ஆட்சி புரிந்தனர்.

A) சுதவாகர்கள்

B) கன்வர்கள்

C) சேடிகள்

D) சாதவாகனர்கள்

விளக்கம்: குப்தப் பேரரசு நிறுவப்படுவதற்கு முன்னர் வடக்கே சுங்கர்களும் கன்வர்களும் ஆட்சி புரிந்தனர்.

4. மகதம் ____________ பண்பாட்டின் முக்கிய மையமாகத் திகழ்ந்தது.

A) சமணம்

B) பௌத்தம்

C) சைவம்

D) வைஷ்ணவம்

விளக்கம்: மகதம் முன்பிருந்தது போல் ஒரு பேரரசாக இல்லாது போனாலும் அது தொடர்ந்து பௌத்தப் பண்பாட்டின் முக்கிய மையமாகத் திகழ்ந்தது என்பதை இவ்விடத்தில் குறிப்பிட்டாக வேண்டியுள்ளது.

5. மௌரியப் பேரரசின் வீழ்ச்சியின் விளைவாக இந்தியாவின் மீது படையெடுத்தவர்கள் அல்லாதவர்கள் எவர்?

A) பார்த்தியர்கள்

B) குஷாணர்கள்

C) குப்தர்கள்

D) சாகர்கள்

விளக்கம்: மௌரியப் பேரரசின் வீழ்ச்சியின் விளைவாக வடமேற்கிலிருந்து சாகர்கள், சித்தியர்கள், பார்த்தியர்கள், இந்தோ – கிரேக்கர்கள் அல்லது பாக்டீரிய – கிரேக்கர்கள், குஷாணர்கள் போன்றோர் இந்தியாவின் மீது படையெடுத்தனர்.

6. மௌரியப் பேரரசின் கடைசி அரசர்____________

A) அக்னிமித்ரர்

B) வாசுதேவர்

C) பூமிமித்ரர்

D) பிரிகத்ரதா

விளக்கம்: மௌரியப் பேரரசின் கடைசி அரசர் பிரிகத்ரதா.

7. பிரிகத்ரதா அவரது தளபதி____________ கொல்லப்பட்டார்.

A) அக்னிமித்ரர்

B) வாசுதேவர்

C) பூமிமித்ரர்

D) புஷ்யமித்ரர்

விளக்கம்: பிரிகத்ரதா அவரது தளபதி புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார்.

8. மகதத்தில் சுங்க வம்சத்தை நிறுவியவர்____________

A) அக்னிமித்ரர்

B) வாசுதேவர்

C) பூமிமித்ரர்

D) புஷ்யமித்ரர்

விளக்கம்: புஷ்யமித்ர சுங்கர் மகதத்தில் தனது சுங்க வம்சத்தை நிறுவினார்.

9. புஷ்யமித்திரர்____________ தனது தலைநகராக்கினார்.

A) உஜ்ஜயினி

B) அவந்தி

C) லும்பினி

D) பாடலிபுத்திரம்

விளக்கம்: புஷ்யமித்திரர் பாடலிபுத்திரத்தைத் தனது தலைநகராக்கினார்.

10. புஷ்யமித்ரர் பாக்டீரியாவின் அரசன் ____________ ன் படையைப் முறியடித்தார்.

A) இரண்டாம் கட்பிஸிசிஸ்

B) நாகசேனா

C) மிலிண்டா

D) மினான்டர்

விளக்கம்: பாக்டீரியாவின் அரசன் மினான்டரின் படையைப் புஷ்யமித்ரர் வெற்றிகரமாக முறியடித்தார்.

11. கூற்று(A): புஷ்யமித்ரர் வேதமதத்தைத் தீவிரமாகப் பின்பற்றியவர்.

காரணம்(R): அவர் தனது பேரரசின் அந்தஸ்தை நிலை நாட்டுவதற்காக ஒருமுறை குதிரைப்பலியை நடத்தினார்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: புஷ்யமித்ரர் வேதமதத்தைத் தீவிரமாகப் பின்பற்றியவர். அவர் தனது பேரரசின் அந்தஸ்தை நிலை நாட்டுவதற்காக இருமுறை அஸ்வமேத யாகம் நடத்தினார்.

12. மேற்கு நோக்கி விரிவடைந்து புஷ்யமித்திரரின் அரசு____________, விதிஷா ஆகியவற்றை உள்ளடக்கியதானது.

A) உஜ்ஜயினி

B) அவந்தி

C) லும்பினி

D) பாடலிபுத்திரம்

விளக்கம்: புஷ்யமித்திரரின் அரசு மேற்கு நோக்கி விரிவடைந்து உஜ்ஜைனி, விதிஷா ஆகியவற்றை உள்ளடக்கியதானது.

13. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] மினான்டர் காபூலையும் சிந்துவையும் தன்கைவசம் வைத்துக் கொண்டார்.

2] மினான்டர் விதர்பாவையும் கைப்பற்றினார்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மினான்டர் காபூலையும் சிந்துவையும் தன்கைவசம் வைத்துக் கொண்டார். புஷ்யமித்ரர் விதர்பாவையும் கைப்பற்றினார்.

14. கலிங்க அரசர் ____________ தாக்குதலையும் புஷ்யமித்ரர் முறியடித்தார்.

A) ஆனந்தவர்மன்

B) கருணாகரன்

C) லோகேஸ்வர கலிங்கன்

D) காரவேலன்

விளக்கம்: கலிங்க அரசர் காரவேலனின் தாக்குதலையும் புஷ்யமித்ரர் முறியடித்தார்.

15. பார்குத், ____________ ஆகிய இடங்களிலுள்ள பௌத்த ஸ்தூபிகளில் காணப்படுகிறது.

A) சாரநாத்

B) மதுரா

C) காந்தாரம்

D) சாஞ்சி

விளக்கம்: பார்குத், சாஞ்சி ஆகிய இடங்களிலுள்ள பௌத்த ஸ்தூபிகளில் காணப்படுகிறது.

16. ஸ்தூபிகளின் சுற்றுச்சுவர்களிலும் வாயில்களிலும் கற்களுக்குப் பதிலாக மரத்தைப் பயன்படுத்தும் முறை ____________ காலத்தில் நடைமுறைக்கு வந்தது.

A) பார்த்தியர்கள்

B) குஷாணர்கள்

C) சுங்கர்

D) சாகர்கள்

விளக்கம்: ஸ்தூபிகளின் சுற்றுச்சுவர்களிலும் வாயில்களிலும் கற்களுக்குப் பதிலாக மரத்தைப் பயன்படுத்தும் முறை சுங்கர் காலத்தில் நடைமுறைக்கு வந்தது.

17. புஷ்யமித்ர சுங்கருக்குப் பின்னர் பதவியேற்றவர்____________

A) அக்னிமித்ரர்

B) வாசுதேவர்

C) பூமிமித்ரர்

D) வசுமித்ரர்

விளக்கம்: புஷ்யமித்ர சுங்கருக்குப் பின்னர் அவருடைய மகன் அக்னிமித்ரா அரச பதவி ஏற்றார்.

18. காளிதாசர் இயற்றிய மாளவிகாக்னிமித்ரா நாடகத்தின் கதாநாயகன்____________

A) அக்னிமித்ரர்

B) வாசுதேவர்

C) பூமிமித்ரர்

D) வசுமித்ரர்

விளக்கம்: அக்னிமித்ரர் தான் காளிதாசர் இயற்றிய மாளவிகாக்னிமித்ரா நாடகத்தின் கதாநாயகன் எனக் கருதப்படுகிறார்.

19. மாளவிகாக்னிமித்ரா நாடகம்____________ கிரேக்கர்களைச் சிந்து நதிக்கரையில் வெற்றி கொண்டதாகக் குறிப்பிடுகின்றது.

A) அக்னிமித்ரர்

B) வாசுதேவர்

C) பூமிமித்ரர்

D) வசுமித்ரர்

விளக்கம்: மாளவிகாக்னிமித்ரா நாடகம் அக்னிமித்ரரின் மகன் வசுமித்ரர் கிரேக்கர்களைச் சிந்து நதிக்கரையில் வெற்றி கொண்டதாகக் குறிப்பிடுகின்றது.

20. சுங்கவம்சத்தினர்____________ ஆண்டு காலம் ஆட்சி புரிந்தனர்.

A) 100

B) 200

C) 300

D) 400

விளக்கம்: சுங்கவம்சத்தினர் நூறு ஆண்டு காலம் ஆட்சி புரிந்தனர்.

21. கடைசி சுங்க அரசர்____________

A) நாராயணர்

B) சுசர்மன்

C) சிமுகா

D) தேவபூதி

விளக்கம்: தேவபூதி கடைசி சுங்க அரசராவார்.

22. ____________ என்பவரால் தேவபூதி கொல்லப்பட்டார்.

A) வாமிதேவர்

B) பூமிமித்ரர்

C) நாராயணர்

D) வாசுதேவ கன்வர்

விளக்கம்: தேவபூதி தன்னிடம் அமைச்சராகப் பணி புரிந்த வாசுதேவ கன்வர் என்பவரால் கொல்லப்பட்டார்.

23. மகதத்தில் கன்வர் வம்சத்தை நிறுவியவர்____________

A) வாமிதேவர்

B) பூமிமித்ரர்

C) நாராயணர்

D) வாசுதேவர்

விளக்கம்: வாசுதேவர் மகதத்தில் கன்வர் வம்சத்தை நிறுவினார்.

24. பாக்டீரியாவைச் சேர்ந்த கிரேக்கர்களின் ஆக்கிரமிப்புகளிலிருந்து கங்கைப் பள்ளத்தாக்குப் பகுதியைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்தவர்கள்____________

A) பார்த்தியர்கள்

B) குஷாணர்கள்

C) சுங்கர்கள்

D) கன்வர்கள்

விளக்கம்: பாக்டீரியாவைச் சேர்ந்த கிரேக்கர்களின் ஆக்கிரமிப்புகளிலிருந்து கங்கைப் பள்ளத்தாக்குப் பகுதியைப் பாதுகாப்பதில் சுங்கர்கள் முக்கியப் பங்கு வகித்தனர்.

25. புஷ்யமித்திரரும் அவருக்குப் பின்வந்தோரும் வேதமத நடைமுறைகளுக்குப் புத்துயிர் ஊட்டி, ____________ வளர்த்தனர்.

A) சமணம்

B) பௌத்தம்

C) சைவம்

D) வைணவம்

விளக்கம்: புஷ்யமித்திரரும் அவருக்குப் பின்வந்தோரும் வேதமத நடைமுறைகளுக்குப் புத்துயிர் ஊட்டி, வைணவத்தை வளர்த்தனர்.

26. சுங்கர்களின் அரசைவை மொழி ____________

A) ஹிந்தி

B) தேவநாகரி

C) அசோக பிராமி

D) சமஸ்கிருதம்

விளக்கம்: சமஸ்கிருத மொழி படிப்படியாக ஏறுமுகம் பெற்று அரசவை மொழியானது.

27. புஷ்யமித்திரர் ஆதரித்த இலக்கண அறிஞர்____________

A) தனதேவன்

B) குணாதியா

C) அஸ்வகோஷர்

D) பதஞ்சலி

விளக்கம்: சமஸ்கிருத மொழியின் இரண்டாவது இலக்கண அறிஞரான பதஞ்சலியைப் புஷ்யமித்திரர் ஆதரித்தார்.

28. சுங்க அரசர்களின் சமகாலத்தவர்____________

A) ஆனந்தவர்மன்

B) கருணாகரன்

C) லோகேஸ்வர கலிங்கன்

D) காரவேலன்

விளக்கம்: கலிங்க அரசர் காரவேலர் சுங்க அரசர்களின் சமகாலத்தவர் ஆவார்.

29. காரவேலர் பற்றிய கல்வெட்டு ____________

A) செந்தலை

B) அசோகர்

C) கிர்னார்

D) ஹதிகும்பா

விளக்கம்: காரவேலர் பற்றிய செய்திகளை நாம் ஹதிகும்பா கல்வெட்டிலிருந்து பெறுகிறோம்.

30. பௌத்தர்களைத் துன்புறுத்தியவர்____________

A) வாமிதேவர்

B) பூமிமித்ரர்

C) நாராயணர்

D) புஷ்யமித்திரர்

விளக்கம்: புஷ்யமித்திரர் பௌத்தர்களைத் துன்புறுத்தினாலும் இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் பார்குத், சாஞ்சி ஆகிய இடங்களிலுள்ள பௌத்த நினைவுச் சின்னங்கள் சீர்செய்யப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டன.

31. ____________ உள்ள மாபெரும் ஸ்தூபியும் அதைச் சுற்றியுள்ள சுற்றுச் சுவரும் சுங்கர்களின் காலத்தவையாகும்.

A) சாரநாத்

B) மதுரா

C) சாஞ்சி

D) பார்குத்

விளக்கம்: சாஞ்சியில் உள்ள மாபெரும் ஸ்தூபியும் அதைச் சுற்றியுள்ள சுற்றுச் சுவரும் சுங்கர்களின் காலத்தவையாகும்.

32. கன்வ வம்சம்____________ அரசர்களை மட்டுமே பெற்றிருந்தது.

A) மூன்று

B) ஐந்து

C) ஆறு

D) நான்கு

விளக்கம்: கன்வ வம்சம் நான்கு அரசர்களை மட்டுமே பெற்றிருந்தது.

33. கன்வர்களின் ஆட்சி____________ ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.

A) 35

B) 25

C) 45

D) 50

விளக்கம்: கன்வர்களின் ஆட்சி 45 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.

34. ____________ எழுச்சிவரை மகதத்தின் வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதுவும் நிகழவில்லை.

A) சாதவாகனர்கள்

B) குஷாணர்கள்

C) சாகர்கள்

D) குப்தர்கள்

விளக்கம்: கன்வர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர், குப்தர்களின் எழுச்சிவரை மகதத்தின் வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதுவும் நிகழவில்லை.

35. கடைசிக் கன்வ அரசர்____________

A) வாசுதேவர்

B) பூமிமித்ரர்

C) நாராயணர்

D) சுசர்மன்

விளக்கம்: கடைசிக் கன்வ அரசர் சுசர்மன்.

36. சுசர்மன் யாரால் கொல்லப்பட்டார்____________

A) கிருஷ்ணா

B) சதகர்ணி

C) ஹாலா

D) சிமுகா

விளக்கம்: கடைசிக் கன்வ அரசனான சுசர்மன், ஆந்திராவைச் சேர்ந்த வலிமை மிகுந்த குறுநில மன்னரான சிமுகா என்பவரால் கொல்லப்பட்டார்.

37. சாதவாகன வம்ச ஆட்சிக்கு அடிக்கல்லை நாட்டியவர் ____________

A) கிருஷ்ணா

B) சதகர்ணி

C) ஹாலா

D) சிமுகா

விளக்கம்: சிமுகா சாதவாகன வம்ச ஆட்சிக்கு அடிக்கல்லை நாட்டினார்.

38. குஷாணர்கள் வட இந்தியாவில்____________ ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.

A) 200

B) 300

C) 400

D) 350

விளக்கம்: குஷாணர்கள் வட இந்தியாவில் 300 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.

39. தென்னிந்தியாவில் சாதவாகனர்கள்____________ ஆண்டுகள் கோலோச்சினர்.

A) 300

B) 350

C) 400

D) 450

விளக்கம்: தென்னிந்தியாவில் சாதவாகனர்கள் (ஆந்திரர்) 450 ஆண்டுகள் கோலோச்சினர்.

40. சிமுகா ஆட்சி புரிந்த ஆண்டுகள்____________

A) 25

B) 24

C) 28

D) 23

விளக்கம்: சாதவாகன வம்சத்தை நிறுவிய சிமுகா இருபத்துமூன்று ஆண்டுகள் ஆட்சிபுரிந்ததாகக் கூறப்படுகிறது.

41. சிமுகாவை தொடர்ந்து பதவியேற்றவர்____________

A) கிருஷ்ணா

B) சதகர்ணி

C) ஹாலா

D) கௌதமிபுத்திரர்

விளக்கம்: சிமுகாவை தொடர்ந்து அவருடைய சகோதரர் கிருஷ்ணா பதவியேற்றார்.

42. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] கிருஷ்ணரும் அவருடைய சகோதரியின் மகன் சதகர்ணியும் பத்தாண்டுகள் வீதம் ஆட்சி புரிந்தனர். இவர்கள் காலத்தில் சாதவாகன அரசு பேரரசானது.

2] வடமேற்கில் ராஜஸ்தான் முதல் தென்கிழக்கே ஆந்திரா வரையிலும் மேற்கில் குஜராத் முதலாக கிழக்கே கலிங்கம் வரையிலுமாக விரிந்து பரந்த பேரரசை இவர்கள் ஆட்சி செய்தனர்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: கிருஷ்ணரும் அவருடைய சகோதரியின் மகன் சதகர்ணியும் பத்தாண்டுகள் வீதம் ஆட்சி புரிந்தனர். இவர்கள் காலத்தில் சாதவாகன அரசு பேரரசானது. வடமேற்கில் ராஜஸ்தான் முதல் தென்கிழக்கே ஆந்திரா வரையிலும் மேற்கில் குஜராத் முதலாக கிழக்கே கலிங்கம் வரையிலுமாக விரிந்து பரந்த பேரரசை இவர்கள் ஆட்சி செய்தனர்.

43. இரண்டு அஸ்வமேத யாகங்களை நடத்தியவர்____________

A) கிருஷ்ணா

B) சதகர்ணி

C) ஹாலா

D) கௌதமிபுத்திரர்

விளக்கம்: தனது பேராதிக்க நிலையின் அடையாளமாகச் சதகர்ணி இரண்டு அஸ்வமேத யாகங்களை நடத்தினார்.

44. சாதவாகன அரச குடும்பத்தின் மாபெரும் மன்னர் ____________

A) கிருஷ்ணா

B) சதகர்ணி

C) ஹாலா

D) கௌதமிபுத்திரர்

விளக்கம்: சாதவாகன அரச குடும்பத்தின் மாபெரும் மன்னர் கௌதமிபுத்திர சதகர்ணியாவார்.

45. கௌதமி பாலஸ்ரீயால் வெளியிடப்பட்டது____________

A) மெய்க்கீர்த்தி

B) சப்தசதி

C) கார்கி சம்கிதா

D) நாசிக் மெய்க்கீர்த்தி

விளக்கம்: கௌதமிபுத்திரர் சதகர்ணி அன்னை கௌதமி பாலஸ்ரீயால் வெளியிடப்பட்டது நாசிக் மெய்க்கீர்த்தி.

46. சாகர், யவனர் (கிரேக்கர்) பகலவர் (பார்த்தியர்) ஆகியோரை அழித்து ஒழித்தவர் ____________

A) கிருஷ்ணா

B) சதகர்ணி

C) ஹாலா

D) கௌதமிபுத்திரர்

விளக்கம்: கௌதமிபுத்திர சதகர்ணி அன்னை கௌதமி பாலஸ்ரீயால் வெளியிடப்பட்ட நாசிக் மெய்க்கீர்த்தியில் (பிரசஸ்தியில்) இவர் சாகர், யவனர் (கிரேக்கர்) பகலவர் (பார்த்தியர்) ஆகியோரை அழித்து ஒழித்தார் எனக் கூறப்பட்டுள்ளது. பேரரசின் எல்லைகளும் இம்மெய்க்கீர்த்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன.

47. கௌதமிபுத்திரர் சதகர்ணியின் பேரரசு பகுதிகள் அல்லாதது எது?

A) மகாராஷ்டிரா

B) குஜராத்

C) மாளவம்

D) ஒடிசா

விளக்கம்: கௌதமிபுத்திரர் சதகர்ணியின் பேரரசு மகாராஷ்டிரா, வடக்கு கொங்கன், பெரார், குஜராத், கத்தியவார், மாளவம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது.

48. கூற்று(A): கௌதமிபுத்திரர் சதகர்ணியின் நாணயங்களில் கப்பலின் வடிவம் பொறிக்கப்பட்டிருந்தது.

காரணம்(R): ஆந்திரர்கள் கடல்சார் நடவடிக்கைகளில் பெற்றிருந்த திறன்களையும். அவர்களது கப்பற்படை வலிமையையும் உணர்த்துகின்றன.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: கப்பலின் வடிவம் பொறிக்கப்பட்டுள்ள கௌதமிபுத்திரர் சதகர்ணியின் நாணயங்கள் ஆந்திரர்கள் கடல்சார் நடவடிக்கைகளில் பெற்றிருந்த திறன்களையும். அவர்களது கப்பற்படை வலிமையையும் உணர்த்துகின்றன.

49. ____________ கல்வெட்டானது தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் அரசு உருவாக்கத்தில் தென்னிந்தியா வகித்த முக்கியப் பங்கைப் பற்றிக் கூறுகிறது.

A) அயோத்தி கல்வெட்டு

B) ஜுனாகத்/கிர்னார் கல்வெட்டு

C) டேரியஸின் கல்வெட்டு

D) போகர் கல்வெட்டு

விளக்கம்: போகர் கல்வெட்டானது தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் அரசு உருவாக்கத்தில் தென்னிந்தியா வகித்த முக்கியப் பங்கைப் பற்றிக் கூறுகிறது.

50. ____________ சாதவாகன அரசர் ஒரு சிறந்த சமஸ்கிருத அறிஞர்.

A) கிருஷ்ணா

B) சதகர்ணி

C) ஹாலா

D) கௌதமிபுத்திரர்

விளக்கம்: சாதவாகன அரசர் ஹாலா ஒரு சிறந்த சமஸ்கிருத அறிஞர்.

51. சட்டசாய் (சப்தசதி) எனும் நூலை எழுதியவர்____________

A) கிருஷ்ணா

B) சதகர்ணி

C) ஹாலா

D) கௌதமிபுத்திரர்

விளக்கம்: சட்டசாய் (சப்தசதி) எனும் நூலை எழுதியதன் மூலம் அரசர் ஹாலா புகழ் பெற்றிருந்தார்.

52. சட்டசாய் (சப்தசதி) எனும் நூல் எம்மொழியில் எழுதப்பட்டது?

A) சமஸ்கிருதம்

B) ஹிந்தி

C) தேவநாகிரி

D) பிராகிருதம்

விளக்கம்: சட்டசாய் (சப்தசதி) எனும் நூல் பிராகிருதமொழியில் எழுதப்பட்டது.

53. சட்டசாய் (சப்தசதி) எனும் நூல்____________பாடல்களை கொண்டது.

A) 600

B) 500

C) 700

D) 800

விளக்கம்: சட்டசாய் (சப்தசதி) எனும் நூல் 700 பாடல்களை கொண்டது.

54. சாதவாகனர்கள்____________ பௌத்த ஸ்தூபிகளைக் கட்டினர்.

A) மகாராஷ்டிரா

B) குஜராத்

C) மாளவம்

D) அமராவதி

விளக்கம்: சாதவாகனர்கள் அமராவதியில் பௌத்த ஸ்தூபிகளைக கட்டினர்.

55. ____________ல் உள்ள புத்தரின் நின்ற கோலத்திலான வெண்கலச் சிலையானது அமராவதி பாணியை ஒத்துள்ளது.

A) சீனா

B) மியான்மர்

C) பர்மா

D) வியட்நாம்

விளக்கம்: வியட்நாமில் உள்ள ஒக் – யோ என்னும் தொல்லியல் ஆய்விடத்தில் கண்டறியபட்ட புத்தரின் நின்ற கோலத்திலான வெண்கலச் சிலையானது அமராவதி பாணியை ஒத்துள்ளது.

56. கீழ்காண்பனவற்றுள் கலைகளுக்கும் அற்புதமான கட்டடங்களுக்கும் பெயர் பெற்றவை அல்லாதவை எவை?

A) காந்தாரம்

B) மதுரா

C) அமராவதி

D) பாடலிபுத்திரம்

விளக்கம்: காந்தாரம், மதுரா, அமராவதி, புத்த கயா, சாஞ்சி, பாகுத் ஆகிய இடங்கள் கலைகளுக்கும் அற்புதமான கட்டடங்களுக்கும் பெயர் பெற்றவையாகும்.

57. ____________ சிற்பக் கலைப்பள்ளி பௌத்த, சமண, வேதமதக் கடவுளர்களின் பிம்பங்களையும் முழு உருவச்சிலைகளையும் வடிவமைத்தது.

A) காந்தாரம்

B) மதுரா

C) அமராவதி

D) பாடலிபுத்திரம்

விளக்கம்: மதுரா சிற்பக் கலைப்பள்ளி பௌத்த, சமண, வேதமதக் கடவுளர்களின் பிம்பங்களையும் முழு உருவச்சிலைகளையும் வடிவமைத்தது.

58. ____________ என்ற இடத்தில் கல்லால் ஆன முத்திரை ஒன்று கணடுபிடிக்கப்பட்டது.

A) மியான்மர்

B) வியட்நாம்

C) தாய்லாந்து

D) இந்தோனேஷியா

விளக்கம்: தாய்லாந்தில் நாக்கான் பதோம் என்ற இடத்தில் கல்லால் ஆன முத்திரை ஒன்று கணடுபிடிக்கப்பட்டது. அதுவும் அதே வடிவத்தில் அமைந்துள்ளது.

59. பாக்டீரியா, பார்த்தியா ஆகியவற்றின் கிரேக்க அரசர்கள் இந்தியாவின்____________ எல்லைப்புறப் பகுதிகளை ஆக்கிரமித்தனர்.

A) வட கிழக்கு

B) வட மேற்கு

C) தென் மேற்கு

D) தென் கிழக்கு

விளக்கம்: மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் பாக்டீரியா, பார்த்தியா ஆகியவற்றின் கிரேக்க அரசர்கள் இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புறப் பகுதிகளை ஆக்கிரமித்தனர்.

60. கூற்று(A): பார்த்தியர்களும் குடியேறிய இடத்தில் வாழ்ந்த மக்களோடு திருமண உறவு கொண்டு இரண்டறக் கலந்தனர்.

காரணம்(R): இது இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் இந்தோ – கிரேக்கர், இந்தோ பார்த்தியர் குடியிருப்புகள் உருவாக உதவியது.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: பார்த்தியர்களும் குடியேறிய இடத்தில் வாழ்ந்த மக்களோடு திருமண உறவு கொண்டு இரண்டறக் கலந்தனர். இது இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் இந்தோ – கிரேக்கர், இந்தோ பார்த்தியர் குடியிருப்புகள் உருவாக உதவியது.

61. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] வடமேற்கு இந்தியாவையும் பஞ்சாப் பகுதியையும் கைப்பற்றிய அலெக்சாண்டர் அவற்றை தனது பிராந்திய ஆளுநர்களின் பொறுப்பில் விட்டுச் சென்றார்.

2] அவற்றில் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த பாக்டீரியா, பார்த்தியா ஆகிய இரு சத்ராபிகள் (மாநிலங்கள்) தங்கள் கிரேக்க ஆளுநர்களின் தலமையில் கிளர்ச்சி செய்து அவர்களின் கீழ் சுதந்திர அரசுகளாயின.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: வடமேற்கு இந்தியாவையும் பஞ்சாப் பகுதியையும் கைப்பற்றிய அலெக்சாண்டர் அவற்றை தனது பிராந்திய ஆளுநர்களின் பொறுப்பில் விட்டுச் சென்றார். அவற்றில் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த பாக்டீரியா, பார்த்தியா ஆகிய இரு சத்ராபிகள் (மாநிலங்கள்) தங்கள் கிரேக்க ஆளுநர்களின் தலமையில் கிளர்ச்சி செய்து அவர்களின் கீழ் சுதந்திர அரசுகளாயின.

62. பார்த்தியா____________ தலைமையிலும் சுதந்திர அரசுகளாக அறிவித்தன.

A) மாவோஸ்

B) பெர்னெஸ்

C) அர்சாகஸ்

D) டயோடாடஸ்

விளக்கம்: பார்த்தியா அர்சாகஸ் தலைமையிலும் சுதந்திர அரசுகளாக அறிவித்தன.

63. பாக்டீரியா சத்ராபி____________ தலைமையிலும் சுதந்திர அரசுகளாக அறிவித்தன.

A) முதலாம் மாவோஸ்

B) முதலாம் பெர்னெஸ்

C) அர்சாகஸ்

D) முதலாம் டயோடாடஸ்

விளக்கம்: பாக்டீரியா சத்ராபி முதலாம் டயோடாடஸ் தலமையிலும் சுதந்திர அரசுகளாக அறிவித்தன.

64. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] இந்தோ – கிரேக்க ஆட்சியாளர்கள் அச்சு வார்க்கும் முறையை அறிமுகம் செய்து, நேர்த்தியான வடிவங்களில் நாணயங்களை வெளியிட்டனர்.

2] இம்முறையை இந்தியர்கள் இவர்களிடமிருந்து கற்றுக்கொண்டனர்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: இந்தோ – கிரேக்க ஆட்சியாளர்கள் அச்சு வார்க்கும் முறையை அறிமுகம் செய்து, நேர்த்தியான வடிவங்களில் நாணயங்களை வெளியிட்டனர். அவற்றில் எழுத்துக்களும் சின்னங்களும் உருவங்களும் பொறிக்கப்பட்டன. இம்முறையை இந்தியர்கள் இவர்களிடமிருந்து கற்றுக்கொண்டனர்.

65. இந்தியாவின்____________ கலைப்பள்ளி கிரேக்கர்களின் சிற்பக் கலைக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது.

A) காந்தாரம்

B) மதுரா

C) அமராவதி

D) பாடலிபுத்திரம்

விளக்கம்: இந்தியாவின் காந்தாரக் கலைப்பள்ளி கிரேக்கர்களின் சிற்பக் கலைக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது.

66. ____________ குகைகளைக் குடைந்தெடுக்கும் முறையைக் கிரேக்கர்களிடமிருந்து கற்றனர்.

A) தேரவாத பௌத்தர்கள்

B) வச்சிராயன பௌத்தர்கள்

C) மகாயான பௌத்தர்கள்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: மகாயான பௌத்தர்கள் குகைகளைக் குடைந்தெடுக்கும் முறையைக் கிரேக்கர்களிடமிருந்து கற்றனர். அதன்மூலம் குடைவரைச் சிற்ப கட்டடக்கலையில் சிறப்புத்திறன் பெற்றவராயினர்.

67. ____________ இந்தியாவில் இந்தோ – கிரேக்கரின் ஆட்சிக்குச் முற்றுப்புள்ளி வைத்தனர்.

A) சாதவாகனர்கள்

B) குஷாணர்கள்

C) சாகர்கள்

D) குப்தர்கள்

விளக்கம்: இந்தியாவில் இந்தோ – கிரேக்கரின் ஆட்சிக்குச் சாகர்கள் முற்றுப்புள்ளி வைத்தனர்.

68. பண்டைய நாடோடி இன ஈரானிய சித்தியர்கள்____________

A) சாதவாகனர்கள்

B) குஷாணர்கள்

C) சாகர்கள்

D) குப்தர்கள்

விளக்கம்: சாகர்கள் பண்டைய நாடோடி இன ஈரானிய சித்தியர்கள் ஆவர்.

69. ____________ மொழியில் இவர்கள் சாகர்கள் என அறியப்பட்டனர்.

A) சமஸ்கிருதம்

B) ஹிந்தி

C) தேவநாகிரி

D) பிராகிருதம்

விளக்கம்: சமஸ்கிருத மொழியில் இவர்கள் சாகர்கள் என அறியப்பட்டனர்.

70. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] நாடோடி இனத்தவரான சாகர்கள் பெரும் எண்ணிக்கையில் இந்தியாவுக்குள் நுழைந்து வடக்கு மற்றும் மேற்கிந்தியா முழுவதும் பரவினர்.

2] இவர்கள் துருக்கிய நாடோடிப் பழங்குடியினர்க்கு எதிரானவர்கள்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: நாடோடி இனத்தவரான சாகர்கள் பெரும் எண்ணிக்கையில் இந்தியாவுக்குள் நுழைந்து வடக்கு மற்றும் மேற்கிந்தியா முழுவதும் பரவினர். இவர்கள் துருக்கிய நாடோடிப் பழங்குடியினர்க்கு எதிரானவர்கள்.

71. சாகர்களின் ஆட்சியானது____________ என்பவரால் காந்தாரப்பகுதியில் நிறுவப்பட்டது.

A) மாவோஸ்

B) பெர்னெஸ்

C) அர்சாகஸ்

D) டயோடாடஸ்

விளக்கம்: சாகர்களின் ஆட்சியானது மாவோஸ் அல்லது மோகா என்பவரால் காந்தாரப்பகுதியில் நிறுவப்பட்டது.

72. மாவோஸ் தலைநகர்____________

A) காபூல்

B) காந்தாரா

C) கத்தியவார்

D) சிர்காப்

விளக்கம்: மாவோஸ் தலைநகர் சிர்காப் ஆக இருந்தது.

73. ____________ கல்வெட்டில் மாவோஸ் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

A) அயோத்தி கல்வெட்டு

B) மோரா கல்வெட்டு

C) டேரியஸின் கல்வெட்டு

D) போகர் கல்வெட்டு

விளக்கம்: மோரா கல்வெட்டில் மாவோஸ் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

74. ____________ நாணயங்களில் புத்தர், சிவன் ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன

A) மாவோஸ்

B) பெர்னெஸ்

C) அர்சாகஸ்

D) டயோடாடஸ்

விளக்கம்: மாவோஸ் நாணயங்களில் புத்தர், சிவன் ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

75. சாகர் வம்சத்தின் மிக முக்கியமான, புகழ்வாய்ந்த அரசர்____________

A) கிருஷ்ணா

B) ஆனந்தவர்மன்

C) ருத்ரதாமன்

D) கனிஷ்கர்

விளக்கம்: சாகர் வம்சத்தின் மிக முக்கியமான, புகழ்வாய்ந்த அரசர் ருத்ரதாமன் ஆவார்.

76. ஜுனாகத்/கிர்னார் கல்வெட்டு யாருடையது___________

A) கிருஷ்ணா

B) ஆனந்தவர்மன்

C) ருத்ரதாமன்

D) கனிஷ்கர்

விளக்கம்: ஜுனாகத்/கிர்னார் கல்வெட்டு – ருத்ரதாமன்.

77. தூய சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட முதல் கல்வெட்டுக் குறிப்பு___________

A) அயோத்தி கல்வெட்டு

B) ஜுனாகத்/கிர்னார் கல்வெட்டு

C) டேரியஸின் கல்வெட்டு

D) போகர் கல்வெட்டு

விளக்கம்: ருத்ராதமனின் ஜுனாகத்/கிர்னார் கல்வெட்டு தூய சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட முதல் கல்வெட்டுக் குறிப்பாகும்.

78. சாகர்களின் பிராந்திய ஆளுநர்கள்___________

A) விஷ்யாபதி

B) ஷபத்தி

C) விஷ்யாப்ஸ்

D) ஷபத்திராபஸ்

விளக்கம்: சாகர்கள் ஷபத்திராபஸ் அல்லது சத்ரப்ஸ் என்னும் பெயர்களில் பிராந்திய ஆளுநர்களை நியமித்து, அவர்கள் தங்கள் பகுதிகளை நிர்வகித்தனர்.

79. கூற்று(A): இந்தியாவில் சாகர்கள் இந்தியச் சமூகத்தினுள் இரண்டறக் கலந்து வாழ்ந்தனர். நாளடைவில் அவர்கள் இந்தியப் பெயர்களைச் சூட்டுக் கொண்டனர்.

காரணம்(R): இந்திய மத நம்பிக்கைகளையும் ஏற்கத் தொடங்கினர்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: இந்தியாவில் சாகர்கள் இந்தியச் சமூகத்தினுள் இரண்டறக் கலந்து வாழ்ந்தனர். நாளடைவில் அவர்கள் இந்தியப் பெயர்களைச் சூட்டுக் கொண்டனர். இந்திய மத நம்பிக்கைகளையும் ஏற்கத் தொடங்கினர்.

80. பழங்காலத்தில் சீனாவின் வடமேற்குப் பகுதிகளில் வாழ்ந்துவந்த யூச் – சி பழங்குடி இனத்தின் ஒரு பிரிவு ____________

A) சாதவாகனர்கள்

B) குஷாணர்கள்

C) சாகர்கள்

D) குப்தர்கள்

விளக்கம்: குஷாணர்கள் பழங்காலத்தில் சீனாவின் வடமேற்குப் பகுதிகளில் வாழ்ந்துவந்த யூச் – சி பழங்குடி இனத்தின் ஒரு பிரிவினராவர்.

81. கி.மு. முதலாம் நூற்றாண்டில் யூச் – சி – பழங்குடியினர்____________ பிரதானப் பிரிவினராக இருந்தனர்.

A) நான்கு

B) மூன்று

C) ஐந்து

D) இரண்டு

விளக்கம்: கி.மு. முதலாம் நூற்றாண்டில் யூச் – சி – பழங்குடியினர் ஐந்து பிரதானப் பிரிவினராக இருந்தனர்.

82. கூற்று(A): கிறித்தவ சகாப்தத்தின் தொடக்கத்தில் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த யூச் – சி – பழங்குடியினரும், குஷாணர்களுடைய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர்.

காரணம்(R): தங்களுடைய நாடோடிப் பழக்கவழக்கங்களைக் கைவிட்ட அவர்கள் இந்தியாவின் வட கிழக்கு எல்லைப்புறத்தை ஒட்டியிருந்த பாக்டீரியர், பார்த்தியர் ஆகியோரின் பகுதிகளில் குடியேறினர்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: கிறித்தவ சகாப்தத்தின் தொடக்கத்தில் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த யூச் – சி – பழங்குடியினரும், குஷாணர்களுடைய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர். தங்களுடைய நாடோடிப் பழக்கவழக்கங்களைக் கைவிட்ட அவர்கள் இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புறத்தை ஒட்டியிருந்த பாக்டீரியர், பார்த்தியர் ஆகியோரின் பகுதிகளில் குடியேறினர்.

83. கூற்று(A): பஞ்சாப், ராஜஸ்தான், கத்தியவார் ஆகிய பகுதிகளில் அதிகம் பரவியிருந்த குஷாணர்கள் பௌத்த மதத்தைப் பின்பற்றினர்.

காரணம்(R): இதன் விளைவாக தட்சசீலமும் மதுராவும் மிகச் சிறந்த கல்விமையங்களாகச் செயல்பட்டன.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: பஞ்சாப், ராஜஸ்தான், கத்தியவார் ஆகிய பகுதிகளில் அதிகம் பரவியிருந்த குஷாணர்கள் பௌத்த மதத்தைப் பின்பற்றினர். இதன் விளைவாக தட்சசீலமும் மதுராவும் மிகச் சிறந்த கல்விமையங்களாகச் செயல்பட்டன.

84. குஷாணப் பேரரசர்களில் மாபெரும் பேரரசர்___________

A) கிருஷ்ணா

B) ஆனந்தவர்மன்

C) ருத்ரதாமன்

D) கனிஷ்கர்

விளக்கம்: குஷாணப் பேரரசர்களில் மாபெரும் பேரரசர் கனிஷ்கர் ஆவார்.

85. கனிஷ்கர் அரச பதவி ஏற்றது___________

A) கி.பி. 79

B) கி.பி.80

C) கி.பி. 78

D) கி.பி. 77

விளக்கம்: கி.பி. (பொ.ஆ) 78 இல் கனிஷ்கர் அரச பதவி ஏற்றார். ஒரு புதிய சகாப்தத்தை நிறுவியதன் மூலம் தனது ஆட்சியைப் பிரகடனப்படுத்தினார். பின்னர் இது சாகர் சகாப்தமானது.

86. தொடக்கத்தில் குஷாணர்களின் தலைநகர்___________

A) காபூல்

B) காந்தாரா

C) கத்தியவார்

D) சிர்காப்

விளக்கம்: தொடக்கத்தில் காபூல், குஷாணர்களின் தலைநகராக இருந்ததது.

87. குஷாணர்களின் தலைநகர் பின்னர் அது___________ க்கு மாற்றப்பட்டது

A) பெஷாவர்

B) காந்தாரா

C) கத்தியவார்

D) சிர்காப்

விளக்கம்: குஷாணர்களின் தலைநகர் பின்னர் அது பெஷாவர் அல்லது புருஷபுரத்துக்கு மாற்றப்பட்டது.

88. குஷாணர்களில் மிகவும் புகழ்பெற்ற முதல் அரசியல் மற்றும் இராணுவத் தளபதி___________

A) இரண்டாம் கட்பிசஸ்

B) முதலாம் கட்பிசஸ்

C) கனிஷ்கர்

D) இரண்டாம் கனிஷ்கர்

விளக்கம்: முதலாம் கட்பிசஸ்: குஷாணர்களில் மிகவும் புகழ்பெற்ற முதல் அரசியல் மற்றும் இராணுவத் தளபதி இவரேயாவார்.

89. கனிஷ்கர் சீனத் தளபதி___________ என்பவரைத் தோற்கடித்தார்.

A) கன் – சியாங்

B) லி – சியாங்

C) ஜின் – சியாங்

D) பன் – சியாங்

விளக்கம்: கனிஷ்கர் சீனத் தளபதி பன் – சியாங் என்பவரைத் தோற்கடித்து, இந்தியாவின் வட எல்லைகளைச் சீனர்களின் ஊடுருவல்களிலிருந்து பாதுகாத்தார்.

90. கனிஷ்கர் ஒரு தீவிர___________

A) சமணர்

B) வைணவர்

C) சைவர்

D) பௌத்தர்

விளக்கம்: கனிஷ்கர் ஒரு தீவிர பௌத்தராவார். கனிஷ்கரின் பேரரசு ஒரு பௌத்தப் பேரரசு.

91. கனிஷ்கர்___________ என்பவரின் போதனைகளால் அவர் பௌத்தத்தைத் தழுவினார்.

A) அஸ்வத்தாமன்

B) அஸ்வபீஷர்

C) அஸ்வகோமர்

D) அஸ்வகோஷர்

விளக்கம்: பாடலிபுத்திரத்தைச் சேர்ந்த பௌத்தத் துறவியான அஸ்வகோஷர் என்பவரின் போதனைகளால் அவர் பௌத்தத்தைத் தழுவினார்.

92. கூற்று(A): கனிஷ்கர் பௌத்தத்தை அரசமதமாக்கினார்.

காரணம்(R): பல ஸ்தூபிகளையும் மடாலயங்களையும் மதுரா, தட்ச சீலம் மற்றும் பேரரசின் இதரபகுதிகளிலும் கட்டினார்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: கனிஷ்கர் பௌத்தத்தை அரசமதமாக்கினார். மேலும் பல ஸ்தூபிகளையும் மடாலயங்களையும் மதுரா, தட்ச சீலம் மற்றும் பேரரசின் இதரபகுதிகளிலும் கட்டினார்.

93. நான்காவது பௌத்தப் பேரவை நடைபெற்ற இடம் ___________

A) ராஜகிருகம்

B) பாடலிபுத்திரம்

C) உஜ்ஜயினி

D) குந்தல வனம்

விளக்கம்: பௌத்தமதப் பிரிவுகளிடையே நிலவிய கருத்துவேறுபாடுகளைக் களைவதற்காக நான்காவது பௌத்தப் பேரவையை ஸ்ரீநகருக்கு அருகேயுள்ள குந்தல வனத்தில் கூட்டினார்.

94. பௌத்தம் மகாயானம், ஹீனயானம் எனப் பிளவுற்ற பேரவை___________

A) இரண்டாம்

B) முதல்

C) மூன்றாம்

D) நான்காம்

விளக்கம்: நான்காவது பௌத்தப் பேரவையில்தான் மகாயானம், ஹீனயானம் எனப் பௌத்தம் பிளவுற்றது.

95. கனிஷ்கர்___________ பௌத்தத்தை ஆதரிப்பவராகவும் அதைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்பவருமாக விளங்கினார்.

A) ஹீனயானம்

B) மகாயானம்

C) விகாயானம்

D) மிகாயானம்

விளக்கம்: கனிஷ்கர் மாபெரும் வீரராகவும் பேரரசை உருவாக்கியவராகவும் இருந்தபோதிலும் அதே அளவிற்கு மகாயான பௌத்தத்தை ஆதரிப்பவராகவும் அதைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்பவருமாக விளங்கினார்.

96. கனிஷ்கரின் பேரரசு எல்லைகள் அல்லாதவை எவை?

A) காஸ்கர்

B) யார்க்கண்ட்

C) பாரசீகம்

D) காந்தாரம்

விளக்கம்: கனிஷ்கரின் பேரரசு, கீழே வாரணாசி வரையிலும் வடக்கே காஸ்கர், யார்க்கண்ட், தெற்கே விந்திய மலைகள், மேற்கே பாரசீகம், பார்த்தியா ஆகியவற்றின் எல்லைகள் வரை பரவியிருந்தது.

97. கனிஷ்கர்___________ கைப்பற்றி தம் நாட்டுடன் இணைத்துக்கொண்டார்.

A) காஸ்கர்

B) யார்க்கண்ட்

C) பாரசீகம்

D) காஷ்மீர்

விளக்கம்: கனிஷ்கர் காஷ்மீரைக் கைப்பற்றி தம் நாட்டுடன் இணைத்துக்கொண்டார். மேலும், மகதத்திற்கு எதிராக போரிட்டு வெற்றி பெற்றார்.

98. மேற்கு, தென்மேற்கு எல்லைகளில்___________ அரசருக்கு எதிராகப் கனிஷ்கர் போர் தொடுத்தார்.

A) சாதவாகனர்கள்

B) குஷாணர்கள்

C) சாகர்கள்

D) பார்த்திய

விளக்கம்: விரிந்து பரந்த தனது பேரரசின் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் உறுதி செய்வதற்காக மேற்கு, தென்மேற்கு எல்லைகளில் பார்த்திய அரசருக்கு எதிராகப் கனிஷ்கர் போர் தொடுத்தார்.

99. புத்தரின் நற்செய்திகளைப் பரப்புவதற்காகப் பௌத்தச் சமயப் பரப்பாளர்களைத் ஆசியாவின் எந்தெந்த நாடுகளுக்கு கனிஷ்கர் அனுப்பிவைத்தார்?

A) திபெத்

B) சீனா

C) மத்திய ஆசியா

D) இவை அனைத்தும்

விளக்கம்: புத்தரின் நற்செய்திகளைப் பரப்புவதற்காகப் பௌத்தச் சமயப் பரப்பாளர்களைத் திபெத், சீனா மற்றும் மத்திய ஆசியாவின் பல நாடுகளுக்கும் கனிஷ்கர் அனுப்பிவைத்தார்.

100. கனிஷ்கர் அவையை அலங்கரித்த அறிஞர்கள் அல்லாதவர்கள் யாவர்?

A) அஸ்வகோஷர்

B) வசுமித்ரா

C) நாகார்ஜுனா

D) பதஞ்சலி

விளக்கம்: கனிஷ்கர் கலை, இலக்கியங்களின் மிகப்பெரும் ஆதரவாளர் ஆவார். அஸ்வகோஷர், வசுமித்ரா, நாகார்ஜுனா போன்ற எண்ணற்ற பௌத்தத் துறவிகளாலும் அறிஞர்களாலும் அவருடைய அவை அலங்கரிக்கப்பட்டது.

101. ‘புத்தசரிதம்’ ன்னும் முதல் சமஸ்கிருத நாடகத்தின் போற்றப்படும் ஆசிரியர்___________

A) அஸ்வகோஷர்

B) வசுமித்ரா

C) நாகார்ஜுனா

D) பதஞ்சலி

விளக்கம்: அஸ்வகோஷர் ‘புத்தசரிதம்’ என்னும் முதல் சமஸ்கிருத நாடகத்தின் போற்றப்படும் ஆசிரியர் ஆவார்.

102. ___________ ல் கனிஷ்கபுரா எனும் புதிய நகரை கனிஷ்கர் உருவாக்கினார்.

A) ராஜகிருகம்

B) பாடலிபுத்திரம்

C) உஜ்ஜயினி

D) காஷ்மீர்

விளக்கம்: காஷ்மீரில் கனிஷ்கபுரா எனும் புதிய நகரை கனிஷ்கர் உருவாக்கினார்.

103. தலைநகர்___________ கனிஷ்கர் அற்புதமான கட்டடங்களால் அழகுபடுத்தினார்

A) ராஜகிருகம்

B) பாடலிபுத்திரம்

C) புருஷ்புரா

D) காஷ்மீர்

விளக்கம்: கனிஷ்கர் தலைநகர் புருஷ்புராவை அற்புதமான கட்டடங்களால் அழகுபடுத்தினார்.

104. கூற்று(A): கனிஷ்கர் காலத்தில் காந்தாரக் கலைப்பள்ளி செழித்தோங்கியது.

காரணம்(R): புத்தரின் சிலைகளைத் செதுக்குவது காந்தாரக் கலைஞர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: கனிஷ்கர் காலத்தில் காந்தாரக் கலைப்பள்ளி செழித்தோங்கியது. புத்தரின் சிலைகளைத் செதுக்குவது காந்தாரக் கலைஞர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது.

105. கூற்று(A): பௌத்தக் கல்வியும் பண்பாடும் தட்சீலத்திலிருந்து சீனாவுக்கும் மங்கோலியாவுக்கும் சென்றன.

காரணம்(R): குஷாணர் காலத்தில் மாபெரும் ஆசியப் பண்பாடானது இந்திய பௌத்தப் பண்பாட்டோடு கலந்தது.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: பௌத்தக் கல்வியும் பண்பாடும் தட்சீலத்திலிருந்து சீனாவுக்கும் மங்கோலியாவுக்கும் சென்றன. குஷாணர் காலத்தில் மாபெரும் ஆசியப் பண்பாடானது இந்திய பௌத்தப் பண்பாட்டோடு கலந்தது.

106. கூற்று(A): கனிஷ்கரின் பின்வந்தோர் திறமையற்றவர்களாகவும் வலிமை குன்றியவர்களாகவும் இருந்தனர்.

காரணம்(R): இதன் விளைவாகக் குஷாணப் பேரரசு வேகமாகச் சிதைவுற்று பல சிற்றரசுகளானது.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: கனிஷ்கரின் பின்வந்தோர் திறமையற்றவர்களாகவும் வலிமை குன்றியவர்களாகவும் இருந்தனர். இதன் விளைவாகக் குஷாணப் பேரரசு வேகமாகச் சிதைவுற்று பல சிற்றரசுகளானது.

107. குஷாணப் பேரரசு___________ வாழ்ந்த ரோமனியக் குடியரசின் இறுதி நாட்களின் சமகாலத்தியதாகும்.

A) அகஸ்டஸ் சீசர்

B) ஜுலியஸ் சீசர்

C) மார்கஸ் சீசர்

D) லிவியா சீசர்

விளக்கம்: குஷாணப் பேரரசு ஜுலியஸ் சீசர் வாழ்ந்த ரோமனியக் குடியரசின் இறுதி நாட்களின் சமகாலத்தியதாகும்.

108. குஷாணப் பேரரசர்___________ன் அவைக்கு ஒரு பெரும் தூதுக் குழுவை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

A) அகஸ்டஸ் சீசர்

B) ஜுலியஸ் சீசர்

C) மார்கஸ் சீசர்

D) லிவியா சீசர்

விளக்கம்: குஷாணப் பேரரசர் அகஸ்டஸ் சீசரின் அவைக்கு ஒரு பெரும் தூதுக் குழுவை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

109. கிரேக்கோ – பாக்டீரிய அரசர் யுதி டெமஸ் என்பவரின் மகன்___________

A) இரண்டாம் யுதி டெமஸ்

B) முதலாம் டெமிட்ரியஸ்

C) முதலாம் மினான்டார்

D) இரண்டாம் டெமிட்ரியஸ்

விளக்கம்: முதலாம் டெமிட்ரியஸ்: இவர் கிரேக்கோ – பாக்டீரிய அரசர் யுதி டெமஸ் என்பவரின் மகனாவார்.

110. முதலாம் டெமிட்ரியஸ் கி.மு (பொ.ஆ.மு) 294 முதல்___________ வரை மாசிடோனியாவின் மன்னராக இருந்தார்.

A) 284

B) 288

C) 290

D) 294

விளக்கம்: முதலாம் டெமிட்ரியஸ் கி.மு (பொ.ஆ.மு) 294 முதல் 288 வரை மாசிடோனியாவின் மன்னராக இருந்தார்.

111. ___________என்பவர் இருமொழி வாசகங்களை கொண்ட நாணயங்களை வெளியிட்டார்.

A) இரண்டாம் யுதி டெமஸ்

B) முதலாம் டெமிட்ரியஸ்

C) முதலாம் மினான்டார்

D) இரண்டாம் டெமிட்ரியஸ்

விளக்கம்: டெமிட்ரியஸ் சதுர வடிவிலான இருமொழி வாசகங்களை கொண்ட நாணயங்களை வெளியிட்டார் என்பதை நாணய சான்றுகள் உறுதிசெய்கின்றன.

112. டெமிட்ரியஸ் வெளியிட்ட நாணயத்தின் தலைப்பகுதியில் கிரேக்க மொழியும் பூப்பகுதியில்___________ மொழியும் இடம்பெற்றுள்ளன.

A) ரோமானிய

B) லத்தீன்

C) பாரசீகம்

D) கரோஷ்தி

விளக்கம்: டெமிட்ரியஸ் வெளியிட்ட நாணயத்தின் தலைப்பகுதியில் கிரேக்க மொழியும் பூப்பகுதியில் கரோஷ்தி மொழியும் இடம்பெற்றுள்ளன.

113. கூற்று(A): டெமிட்ரியஸ் என்னும் பெயரில் மூவர் இருந்தனர்.

காரணம்(R): எனவே, இம்மூவருள் யார் கி.மு (பொ.ஆ.மு) இரண்டாம் நூற்றாண்டில் தொடங்கும் யவன சகாப்தத்தை தொடக்கி வைத்தவர் வரலாற்று அறிஞர்களால் முடிவு செய்ய முடியவில்லை.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: டெமிட்ரியஸ் என்னும் பெயரில் மூவர் இருந்தனர். எனவே, இம்மூவருள் யார் கி.மு (பொ.ஆ.மு) இரண்டாம் நூற்றாண்டில் தொடங்கும் யவன சகாப்தத்தை தொடக்கி வைத்தவர் வரலாற்று அறிஞர்களால் முடிவு செய்ய முடியவில்லை.

114. பாக்ட்ரிய அரசர் மிலிந்தா என்பவருக்கும் பௌத்த அறிஞர் நாகசேனாவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலை பற்றிய நூல் ___________

A) மினான்டர் பன்கா

B) பௌத்த பன்கா

C) நாகசேனா பன்கா

D) மிலிந்த பன்கா

விளக்கம்: மிலிந்த பன்கா எனும் நூல் உள்ளது. பாக்ட்ரிய அரசர் மிலிந்தா என்பவருக்கும் பௌத்த அறிஞர் நாகசேனாவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலே அந்நூலாகும். இந்த மிலிந்தாவே மினான்டர் என அடையாளப்படுத்தப்படுகிறது. மினான்டர் பௌத்தராக மாறி பௌத்தத்தின் வளர்ச்சிக்கு பணியாற்றியதாக கருதப்படுகிறது.

115. ___________ வெளியிட்ட நாணயங்கள் பரந்து விரிந்த பகுதியில் கிடைக்கின்றன.காபூல் பள்ளத்தாக்கில் தொடக்கி சிந்து நதி கடந்து மேற்கு உத்திரபிரதேசம் கடந்து வரையிலான பகுதியில் கிடைத்தன.

A) இரண்டாம் யுதி டெமஸ்

B) முதலாம் டெமிட்ரியஸ்

C) மினான்டர்

D) இரண்டாம் டெமிட்ரியஸ்

விளக்கம்: மினான்டர்: இவர் நன்கு அறியப்பட்ட இந்தோ – கிரேக்க அரசர்களில் ஒருவர். வடமேற்குப் பகுதியில் பெரியதொரு அரசை இவர் ஆண்டதாக கூறப்படுகிறது. இவர் வெளியிட்ட நாணயங்கள் பரந்து விரிந்த பகுதியில் கிடைக்கின்றன. காபூல் பள்ளத்தாக்கில் தொடக்கி சிந்து நதி கடந்து மேற்கு உத்திரபிரதேசம் கடந்து வரையிலான பகுதியில் கிடைத்தன.

116. ___________ நாணயங்கள் சிலவற்றில் சிவபெருமானின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

A) மினான்டர்

B) கனிஷ்கர்

C) முதலாம் கட்பிசஸ்

D) இரண்டாம் கட்பிசஸ்

விளக்கம்: இரண்டாம் கட்பிசஸ் நாணயங்கள் சிலவற்றில் சிவபெருமானின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

117. இரண்டாம் கட்பிசஸ் காலத்தில் அரசருடைய பட்டப்பெயர்கள்___________ மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன.

A) ரோமானிய

B) லத்தீன்

C) பாரசீகம்

D) கரோஷ்தி

விளக்கம்: இரண்டாம் கட்பிசஸ் காலத்தில் அரசருடைய பட்டப்பெயர்கள் கரோஷ்தி மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன.

118. இந்தோ – கிரேக்க, இந்தோ – பார்த்திய அரசர்களை வெற்றிகொண்டு பாக்டீரியாவில் இறையாண்மையுடன் கூடிய அரசராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர்___________

A) மினான்டர்

B) கனிஷ்கர்

C) முதலாம் கட்பிசஸ்

D) இரண்டாம் கட்பிசஸ்

விளக்கம்: முதலாம் கட்பிசஸ்: இந்தோ – கிரேக்க, இந்தோ – பார்த்திய அரசர்களை வெற்றிகொண்டு பாக்டீரியாவில் இறையாண்மையுடன் கூடிய அரசராக தன்னை நிலைநிறுத்தினார்.

119. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] இரண்டாம் கட்பிசஸ் சீன, ரோமானிய அரசர்களுடன் நட்புறவை மேற்கொண்டார். அயல்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவித்தார்.

2] முதலாம் கட்பிசஸ் முதலாம் தன்னுடைய ஆதிக்கத்தை முதலில் காபூல், காந்தார தேசம் தொடங்கி, பின்னர் சிந்து வரையிலும் பரப்பினார்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: இரண்டாம் கட்பிசஸ் சீன, ரோமானிய அரசர்களுடன் நட்புறவை மேற்கொண்டார். அயல்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவித்தார். முதலாம் கட்பிசஸ் முதலாம் தன்னுடைய ஆதிக்கத்தை முதலில் காபூல், காந்தார தேசம் தொடங்கி, பின்னர் சிந்து வரையிலும் பரப்பினார்.

120. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் _____ பகுதியில் கண்டரா சமஸ்கிருதப்பள்ளி தழைத்தோங்கியது.

A) தக்காணம்

B) வடமேற்கு இந்தியா

C) பஞ்சாப்

D) கங்கைப் பள்ளத்தாக்கு சமவெளி

விளக்கம்: தக்காணம் பகுதியில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் கண்டரா சமஸ்கிருதப்பள்ளி தழைத்தோங்கியது.

121. கூற்று(A): இந்தோ – கிரேக்க ஆட்சியாளர்கள் அச்சு முறையை அறிமுகம் செய்து சின்னங்களும், உருவங்களும், பெயர்களும் பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டனர்.

காரணம்(R): இந்தோ – கிரேக்கர்களின் ஆட்சியைக் குஷாணர் முடித்துவைத்தனர்

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்:

122. இந்தோ – பார்த்திய அரசை நிறுவியவர் ________

A) மினான்டர்

B) கனிஷ்கர்

C) முதலாம் கட்பிசஸ்

D) கோண்டோ பெர்ன்ஸ்

விளக்கம்: இந்தோ – பார்த்திய அரசை நிறுவியவர்: கோண்டோ பெர்ன்ஸ்.

123. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும் மகதம் தொடர்ந்து ஒரு பௌத்த பண்பாட்டு மையமாகத் திகழ்ந்தது.

2] குந்தல சதகர்ணி, சாதவாகன வம்சத்தின், பத்தாவது அரசராவார்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும் மகதம் தொடர்ந்து ஒரு பௌத்த பண்பாட்டு மையமாகத் திகழ்ந்தது.

124. பொருத்துக

a) பதஞ்சலி – 1] கலிங்கம்

b) அக்னிமித்ரர் – 2] இந்தோ – கிரேக்கர்

c) அரசர் காரவேலர் – 3] இந்தோ – பார்த்தியர்

d) டெமிட்ரியஸ் – 4] இரண்டாம் சமஸ்கிருத இலக்கண ஆசிரியர்

e) கோண்டோ பெர்னெஸ் – 5] மாளவிகாக்னிமித்ரம்

a b c d e

A) 3 1 2 4 5

B) 4 5 1 2 3

C) 2 4 3 1 5

D) 3 1 4 2 5

125. பொருத்துக

a) புத்தரின் ஆளுயரச் சிற்பங்கள் – 1] இந்தோ – கிரேக்க அரசர்

b) மினான்டர் – 2] சம்ஸ்கிருத மொழி

c) காந்தாரக் கலைப்பள்ளி – 3] பாமியான் பள்ளத்தாக்கு

d) ஜூனாகாத் கல்வெட்டு – 4] கிரேக்கர்கள்

e) குஷானர்களின் தலைநகரம் – 5] பெஷாவர்

a b c d e

A) 3 1 2 4 5

B) 4 5 1 2 3

C) 2 4 3 1 5

D) 3 1 4 2 5

126. பொருத்துக

a) தனதேவன் – 1] மகாபாஷ்யா

b) பெர்சிபோலிஸ் – 2] பிரிகஸ்தகதா

c) பதஞ்சலி – 3] மத்யமிக சூத்ரா

d) குணாதியா – 4] அயோத்தி கல்வெட்டு

e) நாகார்ஜுனா – 5] நஸ்கி ரஸ்தம் கல்வெட்டு

a b c d e

A) 3 1 2 4 5

B) 4 5 1 2 3

C) 2 4 3 1 5

D) 3 1 4 2 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!