Book Back QuestionsTnpsc

இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் Book Back Questions 9th Social Science Lesson 7

9th Social Science Lesson 7

7] இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

அரசு: ஒரு அரசரால் அல்லது அரசியால் ஆளப்படும் ஒரு நாடு. பேரரசு: ஒரு அரசரால் அல்லது அரசியால் ஆளப்படும் பல நாடுகளை கொண்ட பெரும் நிலப்பரப்பு,

இதே காலத்தில் ஐரேப்பாவில்: புனித ரோமானியப் பேரரசும் பேரரசர் சார்லெமக்னே: ஐரோப்பிய கண்டத்தில் கி. பி. (பொ. ஆ) 9வது நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் புனித ரோமானியப் பேரரசு தோன்றியது. கி. பி. (பொ. ஆ) 476ஆம் ஆண்டுக்கு பிறகு பழைய ரோமானியப் பேரரசு புதிய ரோமானியப் பேரரசுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்ததால் முடிவுக்கு வந்தது. புதிதாக தோன்றிய ரோமானியப் பேரரசு கிறித்துவத்தையும், கிறித்துவ உலகத்தையும் பிரதிநிதித்துவம் செய்ததால் புனித என்ற அடைமொழி பெற்றது. இப்பேரரசர் போப்பாண்டவரைப் போலவே பூமியில் வாழும் கடவுளின் பிரதிநிதியாகக் கருதப்பட்டார். இப்பேரரசர் அரசியல் நடைமுறையிலும், போப்பாண்டவர் என்பவர் சமயம் சார்ந்த பொறுப்பாளராகவும் விளங்க எல்லை வகுக்கப்பட்டிருந்தது. பேரரசர் உலகில் மிக உயர்ந்தவராக கருதப்பட்டாலும் போப்பாண்டவருக்கு அடுத்த நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தார். பிராங்க் நாட்டின் சார்லெமக்னே அரசர், புனித ரோமானிய பேரரசர் என்ற பட்டத்தை (கி. பி. பொ. ஆ. 800) பெற்ற முதல் பேரரசர் ஆவார். இப்பேரரசர் சார்லெமக்னேனும் பல்லவ அரசர் இரண்டாம் நந்திவர்மன் மற்றும் பிரதிகாரா அரசர் முதலாம் நாகபட்டரும் சமக்காலத்தவர் ஆவர்.

அரசர் ஜான் மற்றும் மகாசாசனமும்: கி. பி. (பொ. ஆ) 1215ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சார்ந்த பிரபுக்கள் அரசர் இரண்டாம் ஜான் என்பவரை “சுதந்திர தனியுரிமை பட்டயத்தில்” கையெழுத்திடக் கட்டாயப்படுத்தினார். இங்கிலாந்தின் பிரபுக்கள் மற்றும் மக்களின் சில சுதந்திரங்களை மதிக்க வேண்டும் என்ற கருத்தை அப்பட்டயம் உறுதிபடுத்தியிருந்தது. புனித ரோமானியப் பேரரசில் நிலவிய ஆட்சியாளரின் மேலாதிக்கக் கோட்பாட்டை இங்கிலாந்து ஏற்றுக்கொள்ளவில்லை. இங்கிலாந்து அரசர் ஜான் மற்றும் இந்தியாவை ஆண்ட சுல்தான் இல்டுமிஷ், இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள். எனவேதான் ஆரம்பக்காலத்திலேயே மன்னரின் அதிகாரம் சோதிக்கப்பட்டதாக அறிகிறோம்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. விரிவடைந்துவரும் அலாவுதின் கில்ஜியின் இரண்டாவது வலிமை வாய்ந்த இடம் —————

(அ) தௌலதாபாத்

(ஆ) டெல்லி

(இ) மதுரை

(ஈ) பிடார்

2. தக்காண சுல்தானியங்கள் —————ஆல் கைப்பற்றப்பட்டன.

(அ) அலாவுதீன் கில்ஜி

(ஆ) அலாவுதீன் பாமன் ஷா

(இ) ஒளரங்கசீப்

(ஈ) மாலிக்காபூர்

3. ————— பேரரசு நிறுவப்பட்டது தென்னிந்தியாவின் நிர்வாக நிறுவனக் கட்டமைப்புகளை மாற்றியது.

(அ) பாமினி

(ஆ) விஜயநகர்

(இ) மொகலாயர்

(ஈ) நாயக்கர்

4. கிருஷ்ணதேவராயர் ————–ன் சமகாலத்தவர்.

(அ) பாபர்

(ஆ) ஹீமாயுன்

(இ) அக்பர்

(இ) ஷெர்ஷா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. இந்தியாவின் மேற்குக் கடற்கரைக்கு வந்த ஐரோப்பியர் ————–

2. கி. பி. (பொ. ஆ) 1565ஆம் ஆண்டு தக்காண சுல்தான்களின் கூட்டுப்படைகள் விஜயநகரை ————- போரில் தோற்கடித்தது.

3. விஜயநகரம் ஓர் —————- அரசாக உருவானது.

4. நகரமயமாதலின் போக்கு ————- காலத்தில் அதிகரித்தது.

5. ————– காலம் தமிழக வரலாற்றின் உன்னத ஒளி பொருந்தியக் காலம்.

III. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. அ) விஜயநகர அரசு நிறுவப்பட்டது, தென்னிந்திய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும்.

ஆ) சாளுவ அரச வம்சம் நீண்டகாலம் ஆட்சி செய்தது.

இ) விஜயநகர அரசர்கள் பாமினி சுல்தானியத்துடன் சுமுகமான உறவுகளைக் கொண்டிருந்தனர்.

ஈ) ரஜபுத்திர அரசுகள் பாரசீகத்திலிருந்தும் அராபியாவிலிருந்தும் குடிபெயர்பவர்களை ஈர்த்தன.

2. அ) செஞ்சியில் நாயக்க அரசு உருவானது.

ஆ) தெலுங்கு நாயக்கர்கள் பணியமர்த்தப்பட்டதன் விளைவாக தெலுங்கு பேசும் மக்கள் மதுரையிலிருந்து குடிபெயர்ந்தனர்.

இ) ஜஹாங்கீரின் காலத்திலிருந்தே மொகலாயப் பேரரசு சரியத் துவங்கியது.

ஈ) ஐரோப்பியர்கள் அடிமைகளைத் தேடி இந்தியாவிற்கு வந்தனர்.

3. அ) புராணக்கதைகளைக் கொண்ட கற்பனையான வம்சாவளிகள் மெக்கன்சியால் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன.

ஆ) அவுரி என்பது இந்தியாவில் மிக முக்கியமான பானப்பயிராகும்.

இ) மகமுத் கவான் அலாவுதின் கில்ஜியின் அமைச்சர் ஆவார்.

ஈ) போர்ச்சுகீசியர்கள் தங்கள் முதல் கோட்டையை கோவாவில் கட்டினர்.

4. கூற்று (கூ): கிழக்கே சீனா முதல் மேற்கே ஆப்பிரிக்கா வரை நீண்டிருந்த கடல் வணிகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்தியா இருந்தது.

காரணம் (கா): இந்தியாவின் நிலவியல் அமைப்பு இந்தியப் பெருங்கடலின் மையத்தில் அமைந்துள்ளது.

(அ) கூற்று சரி; காரணம் கூற்றை விளக்குகிறது.

(ஆ) கூற்று தவறு; காரணம் சரி

(இ) கூற்றும் காரணமும் தவறானவை.

(ஈ) கூற்று சரி; காரணம் கூற்றை விளக்கவில்லை.

5. (i) பேரழகும் கலைத்திறனும் மிக்க தங்கச் சிலைகளைச் சோழர்கள் வடித்தனர்.

(ii) சோழர்களின் கட்டடக் கலைக்கு சிறந்து எடுத்துக்காட்டு. சிவனின் மறுவடிவான நடராஜரின் பிரபஞ்ச நடனம்.

(அ) i சரி ii தவறு

(ஆ) i, ii ஆகிய இரண்டும் சரி

(இ) i, ii ஆகிய இரண்டும் தவறு

(ஈ) i தவறு ii சரி

IV. பொருத்துக:

1. போர்ச்சுகீசியர்கள் – அ] வங்காளம்

2. தான்சேன் – ஆ] கோட்டம்

3. பட்டு வளர்ப்பு – இ] அக்பரின் அரச சபை

4. அங்கோர்வாட் – ஈ] கோவா

5. மாவட்டம் – உ] கம்போடியா

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. தௌலதாபாத், 2. ஒளரங்கசீப், 3. விஜயநகர், 4. பாபர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. போச்சுக்கீசியர்கள், 2. தலைக்கோட்டை, 3. ராணுவ தன்மை கொண்ட, 4. விஜயநகர அரசு, 5. சோழர்

III. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. விஜயநகர அரசு நிறுவப்பட்டது, தென்னிந்திய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும், 2. செஞ்சியில் நாயக்க அரசு உருவானது, தெலுங்கு நாயக்கர்கள் பணியமர்த்தப்பட்டதன் விளைவாக தெலுங்கு பேசும் மக்கள் மதுரையிலிருந்து குடிபெயர்ந்தனர், 3. புராணக்கதைகளைக் கொண்ட கற்பனையான வம்சாவளிகள் மெக்கன்சியால் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன, 4. கூற்று சரி; காரணம் கூற்றை விளக்குகிறது, 5. i தவறு ii சரி

IV. பொருத்துக:

1. ஈ, 2. இ, 3. அ, 4. உ, 5. ஆ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!