அரசியல் கொள்கைகள் – பகுதி I Notes 11th Political Science
11th Political Science Lesson 8 Notes in Tamil
8. அரசியல் கொள்கைகள் – பகுதி I
அறிமுகம்
அரசியல், பொருளாதாரம், சமூகம் குறித்த ஒருங்கிணைந்த எண்ணங்களின் தொகுப்பை கொள்கை என்று அழைக்கிறோம். கொள்கைகள் அரசியல் அறிவியல் பாடத்தின் இதயம் மற்றும் ஆத்மாவாக கருதப்படுகின்றன. அரசின் தன்மை , தோற்றம் , அரசிற்கும், சமுதாயத்திற்கும் உள்ள தொடர்பு, அர்சாங்கத்தின் வகைகள், அதிகாரத்தின் அடித்தளம், அரசு அதிகாரத்தின் வரம்பு போன்றவற்றை அரசியல் கொள்கைகள் விவாதிக்கின்றன.
தாராளவாதம்
நவீன அரசியல் கோட்பாட்டில் மிக முக்கிய கொள்கையாக உள்ளது. இது 17-ஆம் நூற்றாண்டில் தோன்றியது. சம கால உலகில் பெருமளவில் உலக நாடுகளால் தாராளவாதம் பின்பற்றப்படுகிறது. இலத்தீன் மொழியில் “Liber” என்றால் விடுதலை என்று பொருளாகும். தாராளவாதத்தின் ஆங்கிலச் சொல்லான “Liberlism” இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து தோன்றியது. 19-ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டில் அரசியல் அமைப்பை ஆதரித்தவர்கள் இச்சொல்லைப் பயன்படுத்தினார்கள். மேற்கத்திய நாடுகளாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தாராளவாதத்தை அரசியலிலும், பொருளாதாரத்திலும் பின்பற்றுகின்றன.
தாராளவாதம் வரலாற்றில் மூன்று வகைகளாகக் காணப்படுகின்றது. முதலாவதாக 1930-ஆம் வரையில் இது எதிர்மறைத் தாராளவாதம் என அழைக்கப்பட்டது. இரண்டாவதாக, உலகப் பொருளாதார மந்த நிலைக்குப் பின் நேர்மறைத் தாராளவாதம் என அழைக்கப்பட்டது. மூன்றாவதாக, 1970-களுக்குப் பின்னர் இது சமகாலத் தாராளக் கொள்கை என அழைக்கப்படுகிறது.
அ) எதிர்மறைத் தாராளவாதம்
எதிர்மறைத் தாராளவாதம் பாரம்பரிய தாராளவாதம், Laissez Faire (பிரெஞ்சு மொழியில்) என்றும் அழைக்கப்படுகிறது. ஜான் லாக் என்ற அரசியல் சிந்தனையாளார் ‘சிவில் அரசாங்கத்தின் இரண்டு ஒப்பந்தங்கள்’’ (Two Treaties of Civil Government) என்ற தனது நூலில் எதிர்மறைத் தாராளவாதத்தை எடுத்துரைத்தார்.
தாமஸ் பெயின், மாண்டெஸ்கோ, பெந்த, ஆகியோரும் எதிர்மறைத் தாராளவாதத்தை ஆதரித்தனர். பொருளாதாரப் பாடத்தில் ஆதம் ஸ்மித் ‘தேசங்களின் செல்வங்களை பற்றிய ஓர் ஆய்வு’ (An Inquiry Into the Nature and Causes of Wealth of Nations) என்ற தனது நூலில் எதிர்மறைத் தாராளவாதத்தை ஆதரித்தார்.
ஜான் லாக், பாரம்பரியத் தாராளவாதத்தின் தந்தை. உயிர், விடுதலை, தனிச் சொத்துகள் சமஉரிமை.
எதிர்மறைத் தாராளவாதத்தின் சாரம்
எதிர்மறைத் தாராளவாதம் மனிதனைப் பகுத்தறிவு உள்ள , திறமையான, சுதந்திரமான தன்மைகளை உடையவன் என்று கூறுகிறது. எல்லா மனிதர்களும் சமமானவர்கள். ஒவ்வொரு மனிதனும் தனது தேவையை அறிந்து இருக்கிறான். சமூகம் என்பது தனிமனிதர்களின் கூட்டமைப்பு ஆகும். மனிதனின் வாழ்க்கையில் தலையிடுவதற்கு அரசிற்கோ, சமூகத்திற்கோ அதிகாரம் இல்லை.
அரசு ஒரு அவசியமான தீமை ஆகும். சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்கு அரசு தேவைப்படுகிறது. இருந்தபோதிலும், அரசு ஒரு தீமையாகும். ஏனென்றால் அது மனிதனின் சுதந்திரத்தைப் பறிக்கக் கூடும்.
அரசு எதிர்மறை அரசு ஆகும். ஏனென்றால் முன்னேற்றத் திட்டங்களை அது கொண்டு வரக் கூடாது. அரசை Laissez Faire அரசு என்று அழைக்கிறோம். பிரெஞ்சு மொழியில் இதனுடைய பொருள், தனியே விடு என்பதாகும், அதாவது அரசு மனிதனை சுதந்திரமாக விட்டு விட வேண்டும். அவனது நடவடிக்கைகளை கட்டுப்படுத்தக் கூடாது. சட்ட ஒழுங்கைப் பராமரிப்பது , சட்டப்பூர்வமாக உருவான ஒப்பந்தங்களை அமல்படுத்துவது அரசின் பணிகள் ஆகும்.
பொருளாதாரத்தில் எதிர்மறைத் தாராளவாதம் தேவை மற்றும் வழங்கலின் அடிப்படையில் இயங்கும். சந்தை பொருளாதார நடவடிக்கைகளை அரசு கட்டுப்படுத்தக் கூடாது. அரசானது கிரிக்கெட் விளையாட்டில் நடுவர் பங்கேற்கமாட்டார். வீரர்கள் விதிகளுக்குட்பட்டு விளையாடுகிறார்களா என்று கண்காணிப்பார். அதைப்போல அரசு சந்தையை கண்காணிக்க வேண்டும். சந்தையின் நடவடிக்கைகளில் தலையிடக்கூடாது.
எதிர்மறைத் தாராளவாதம் இயற்கை உரிமைகள் கோட்பாட்டை ஆதரிக்கின்றது. இயற்கை அன்னை மனிதனை படைத்து அவனது முன்னேற்றத்திற்காக உரிமைகளை வழங்கியுள்ளது. இந்த இயற்கை உரிமைகளை பறிக்கும் அதிகாரம் அரசுக்கும் இல்லை.
மூன்று இயற்கை உரிமைகள் மனிதனுக்கு இன்றியமையாதவை ஆகும்.
- வாழ்க்கை உரிமை
- சுதந்திர உரிமை
- சொத்துரிமை
இவைகள் மனிதனுக்கு அவசியமானவைகள் ஆகும். சொத்துரிமை எதிர்மறை தாராளவாதத்த்தின் மிக முக்கிய உரிமை ஆகும். சொத்துக்களை வாங்கவும் , விற்கவும் , அனுபவிக்கவும் மனிதனுக்கு உள்ள உரிமையை அரசு கட்டுப்படுத்தக் கூடாது.
‘தேசங்களின் செல்வங்கள் பற்றிய ஓர் ஆய்வு’ – ஆதம் ஸ்மித்
ஆ) நேர்மறைத் தாராளவாதம்
20-ஆம் நூற்றாண்டில் எதிர்மறைத் தாராளவாதம் நேர்மறைத் தாராளவாதமாக மாற்றப்பட்டது. எதிர்மறைத் தாராளவாதம் மேற்கத்திய நாடுகளின் வளத்தைப் பெருக்கியது. ஆனால் சாதாரண மக்களுக்கு கடுமையான துன்பங்களை அளித்தது. மக்களிடையே விரும்பத்தகாத ஏற்றத் தாழ்வுகள், நகரங்களில் பெருகி வந்த ஆரோக்கியமற்ற குடிசைப் பகுதிகள், தொழிலாளர்களை சுரண்டுவது போன்ற துன்பங்கள் மக்களை வாட்டியது. ஜான் ரஸ்கின் போன்ற மனித நேய சிந்தமையாளர்கள் எதிர்மறைத் தாராளவாதத்தை விமர்சித்தனர்.
இரண்டு காரணிகளால் தாராளவாதம் , நேர்மறைத் தாராளவாதமாக மாறியது. அவைகள் 1. மக்களாட்சி, 2. மார்க்சியம் ஆகும். 19-ஆம் நூற்றாண்டில் மக்களாட்சி மேற்கத்திய நாடுகளில் பரவியது. மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. மக்கள் எதிர்மறைத் தாராளவாத கொள்கையை மாற்ற வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார்கள். மேலும் புரட்சிகர சிந்தனையாளர் காரல் மார்க்ஸ் தனது பொதுவுடைமைவாதம் சிந்தனையை எடுத்துரைத்தார், மார்க்சியமும் மக்களாட்சியும் கொடுத்த அழுத்தத்தால் எதிர்மறைத் தாராளவாத கொள்கையாக மாறியது.
உலக பொருளாதார மந்த நிலை மேற்கத்திய நாடுகளை 1928-முதல் பாதித்தது. அமெரிக்காவின் அதிபரான பிராங்கிளின் ரூஸ்வெல்ட் பொருளாதார மந்த நிலையில் இருந்து அமெரிக்காசை மீட்டெடுப்பதற்காக “New Deal” என்று அழைக்கப்படும் புதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தினார். அவருடைய பொருளாதார ஆலோசகரான ஜே.எம்.கீன் நேர்மறைத் தாராளவாதத்தை அமல்படுத்த ஆலோசனை வழங்கினார். டி.எச்.கிரின், ஹரால்சு லஸ்கி, எல்.டி.ஹார்டு ஹவுஸ் ஆகியோரும் நேர்மறைத் தாராளவாத கொள்கையை ஆதரித்தனர்.
“நான் உங்களுக்கு உறுதி மொழியளிக்கிறேன், எனக்கும் உறுதி மொழியளிக்கிறேன், அமெரிக்க மக்களின் புதிய ஒப்பந்தத்தின் பேரில்”.
- பிராங்கிளின் ரூஸ்வெல்ட்
நேர்மறைத் தாராளவாத கொள்கை சமூக நலஅரசு என்ற புதிய சிந்தனையை உருவாக்கியது. அரசானது மக்களின் நலனுக்கான ஒரு கருவி ஆகும். மக்களுக்கு சேவை ஆற்றுவதே அரசின் முக்கிய பணி ஆகும். கல்விக் கூடங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் அடிப்படை கூட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை உருவாக்குவது அரசின் முக்கிய கடமையாகும். அரசும் என்பது சமூக மக்களாட்சி அரசு ஆகும். நேர்மறை தாராளவாதம், சமூக நலனுக்கும் மக்களாட்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது.
பிராங்கிளின் ரூஸ்வெல்ட் மிக நீண்ட காலங்கள் அமெரிக்காவின் அதிபராக இருந்தவர். அமெரிக்காவின் முன்னேற்றத்திற்கு அருமையாக பணியாற்றினார். பொருளாதார மந்த நிலையில் இருந்து தனது புதிய ஒப்பந்த திட்டத்தின் மூலம் அமெரிக்காவை மீட்டெடுத்தார். கோடிக்கணக்கான மக்கள் இன்றைக்கும் அவரால் ஊக்குவிக்கப்படுகின்றனர். அவர் போலியோ நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டவர் ஆவார். அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் 1932 –ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். மக்களிடையே வாக்குகளை சேகரிப்பதற்காக அவர் உணர்ச்சிகரமாக பேசினார். சக்கர நாற்காலியில் வரும் நான் மீண்டும் அமெரிக்காவை முன்னேற்றம் என்னும் சக்கரத்தில் அமர்த்துவேன் என்று கூறீனார். வாழ்க்கையில் இன்னல்களை சமாளித்து வெற்றிச் சிகரங்களை தொடுவது எப்படி என்பதற்கு இலக்கணமாக ரூஸ்வெல்ட் இன்றைக்கும் விளங்குகிறார்.
மக்களின் உரிமைகளை சமூக நலத்திற்காக அரசு கட்டுப்படுத்தலாம். மக்கள் நலஉரிமை கோட்பாட்டை நேர்மறைத் தாராளவாதம் ஆதரிக்கின்றது. உரிமைகள் இருந்தால் கடமைகளுக்கும் இருக்கும். விடுதலை என்பது நேர்மறையானது ஆகும். எதிர்மறைத் தாராளவாதம் அரசிடம் இருந்து மனிதனுக்கு விடுதலை கோரியது. நேர்மறைத் தாராளவாதம் அரசின் மூலமாக மனிதனுக்கு விடுதலை கோருகிறது. அரசின் மக்கள் நல நடவடிக்கை தான் மனிதனுக்கு விடுதலையைக் கொடுக்கும்.
அரசு பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். மக்களிஅ எதிர்பாராத பொருளாதார ஏற்றம் மற்றும் மந்த நிலைகளில் இருந்து அரசு காப்பாற்ற வேண்டும். மக்கள் நல திட்டங்களுக்காக முற்போக்கான வரி விதிப்பை மேற்கொள்ளலாம். வங்கிகளை தேசியமயமாக்குதல், தொழில்களை பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒதுக்குதல் மற்றும் குறைந்தபட்ச ஊதியம் ஆகிய நடவடிக்கைகள் மூலம் மக்கள் நலஅரசு கொண்டு வரலாம்.
நேர்மறைத் தாராளவாதம் 1930-களில் இருந்து மேற்கத்திய மக்களாட்சி நாடுகளில் பின்பற்றப்பட்டது. ஆனால் மெல்ல மெல்ல தத்துவ ஞானிகளும், அரசியல் தலைவர்களும் நேர்மறைத் தாராளவாதத்தை விமர்சிக்க ஆரம்பித்தனர். பொருளாதாரத்தில் அரசு தலையிடுவதால் பல பிரச்சினைகள் தோன்றுகின்றன என குற்றம் சாட்டப்பட்டது. பொருளாதார திறமையின்மை, குறைந்துபோன உற்பத்தி திறன், ஊழல், பொருளாதார மந்த நிலை , பறிபோன மக்கள் உரிமைகள் போன்ற தீமைகளுக்காக நேர்மறைத் தாராளவாதம் விமர்சிக்கப்பட்டது.
இ) சமகாலத் தாராளவாதம் (புதியத் தாராளவாதம்)
தற்போதைய தாராளவாதம் சமகாலத்திய தாராளவாதம் என்று அழைக்கப்படுகிறது மேற்கத்திய நாடுகளில் 1970-இல் தொடங்கி உலகம் முழுவதும் தற்போது பரவி வருகிறது. அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருந்த ரொனால்டு ரீகன் அந்நாட்டில் சமகாலத்திய தாராளவாதத்தை கொண்டு வந்தார்.
பல அரசியல் அறிஞர்கள் சமகாலத் தாராளவாதத்தை ஆதரித்துள்ளனர். பிரெட்ரிக் ஹேயக். ஆல்பெர்ட் ஜே.நாக். மில்டன் ஃபிரிட்மென், எம்.ஓம்ஸாட், காரல் பாப்பர், நாஸிக் போன்றவர்கள் முக்கியமான ஆதரவாளர்கள் ஆவர்.
சம காலத்திய தாராளவாத கொள்கை, பழைய எதிர்மறைத் தாராளவாத கொள்கையை 20-ஆம் மற்றும் 21-ஆம் நூற்றாண்டுகளில் மீண்டும் அமல்படுத்துகிறது. தனிமனிதனின் முக்கியத்துவத்தையும் மதிப்பையும் இது ஆதரிக்கின்றது. தனிப்பட்ட சுயாட்சி கருத்து சமகாலத் தாராளவாதத்தின் முக்கிய சிந்தனை ஆகும். இதன்படி, ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் விரும்பியதை செய்யும் விடுதலை உரிமையை பெற்றிருக்க வேண்டும். அரசானது சட்ட ஒழுங்கை மட்டுமே பராமரிக்க வேண்டும். நாசிக் என்ற சிந்தனையாளர் “குறைந்த அதிகார அரசு எழுச்சியுட்டுகிறது, சரியானதும் ஆகும்” என்று முழங்கினார். மற்றொரு சிந்தனையாளர் எம். ஓக்ஸாட் “அரசாங்கம் அமைதியை மட்டுமே கண்காணிக்கிறது” என்று கூறினார்.
இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமரான மார்க்ரெட் தாட்சர், சமகால தாராளவாதத்தை ஆதரித்தார். சோவியத் ரஷ்யாவின் கடைசி அதிபரான மைக்கேல் கோர்பசேவ் மறுசீரமைப்பு மற்றும் (கிளாஸ்நாஸ்ட்) வெளிப்படைத்தன்மை ஆகியவைகள் மூலம் சோவியத் ரஷ்யாவில் சமகாலதாராளவாதத்தை அமல்படுத்தினார்.
மற்றொரு சிந்தனையாளர் எம்.ஒக்.ஸாட் “அரசாங்கம் அமைதியை மட்டுமே கவனிக்கிறது” என்று கூறினார்.
முன்னேற்றம், சமூக நலன் என்ற பெயரில் அரசின் அதிகாரங்கள் அதிகரித்தால் மனிதனின் தனி நபர் உரிமைகள் பறிபோகிவிடும் என்று சமகால தாராளவாதம் வாதிடுகின்றது.
சமூகம் என்று ஒன்று கிடையாது. தனி ஆண்கள், பெண்கள் மற்றும் குடும்பங்கள் மட்டுமே உள்ளன. – மார்கரெட் தாட்சர்
இந்த உலகில் மக்களை சமமாக பார்ப்பதற்கும், மக்களை சமமாக ஆக்குவதற்கும் மிக பெரிய வித்தியாசம் உள்ளது. – பிரெட்ரிக் ஹேயக்
சமூகம் விடுதலையை விட சமத்துவத்தை ஆதரித்தால் இரண்டையுமே அதனால் பெற முடியாது. மாறாக சமத்துவத்தைவிட விடுதலையை நாடினால் இரண்டையுமே அது பெரும் அளவில் பெறும். – மில்டன் ஃபிரிட்மென்
ஆல்பெர்ட் ஜேநாக் தனது புத்தகத்திற்கு “அரசு, நமது எதிரி” என்று பெயர் சூட்டினார்.
காரல் பாப்பர், பிளாட்டோவை வெளிப்படையான சமூகத்தின் முதல் எதிரி என்று ‘Open Society and its Enemies’ என்ற தனது நூலில் விமர்சித்தார்.
கொள்கையின் முடிவு
சில அரசியல் சிந்தனையாளர்களும், அரசியல் சமூகவியலாளர்களும் 1950-களில் கொள்கையின் முடிவு என்ற கருத்தை கொண்டு வந்தனர்.
டேனியல் பெல் “கொள்கையின் முடிவு” , என்ற நூலை எழுதினார். அவரும், அரசியல் சமூகவியலாளரான மார்டின் லிப்செட்டும் இக்கருத்தை ஆதரித்தனர்.
கொள்கையின் முடிவு – டேனியல் பெல்
சமூக நல அரசு அல்லது தாராள மக்களாட்சி அரசு தோன்றியதால் மனிதனின் அரசியல் பொருளாதார தேடுதல் முடிவுக்கு வந்துள்ளது. மனித வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்றால் மக்கள் நலஅரசு, அதிகார பரவல், கலப்பு பொருளாதாரம் மற்றும் போட்டி அரசியல் கட்சிகள் அமைப்பு ஆகியவைகள் பின்பற்றப்பட வேண்டும். மேற்கத்திய நாடுகள் இந்த அருமையான சமூக அரசியல் தன்மைகளைப் பெற்றுள்ளன. ஆகவே, தாராளவாதத்திற்கும், பொதுவுடைமைக்குமான போட்டி முடிவு பெற்றது. மக்களாட்சி தான் உன்னதமான ஆட்சி முறை ஆகும். மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் நல்ல ஆட்சியை வழங்குவதற்கும் மக்களாட்சி பொருத்தமானது என்று பாராட்டுகிறார்கள்.
ஆனால் ‘புதிய இடது சாரிகள்” என்ற சிந்தனையாளர்கள் கொள்கை முடிவு கருத்தை நிராகரிக்கின்றனர். இவர்கள் பொதுவுடைமையில் நில மாற்றங்கள் செய்து அதனை அமல்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். சீரமைக்கப்பட்ட பொதுவுடைமைவாதம் தாராள மக்களாட்சியை விட சிறப்பானது என்று இவர்கள் கூறுகிறார்கள்.
மேலும் சில சிந்தனையாளர்கள், கொள்கையின் முடிவை விட தாராளவாதத்தின் பொருள் வேட்கையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறுகிறார்கள்.
வரலாற்றின் முடிவு
அமெரிக்கா அரசியல் சிந்தனையாளர் பிரான்சிஸ் புக்கியோமோ “வரலாற்றின் முடிவும் கடைசி மனிதனும்” என்ற நூலை எழுதினார். பனிப்போர் முடிவடைந்ததால் வரலாறே முடிவடைந்தது என்று அவர் கூறினார். மனிதனின் வரலாறே சரியான அரசியல் சமூக பொருளாதார முறையை பெறுவதற்கான மனிதனின் தேடுதல் ஆகும். பனிப்போருக்கு பின் தாராளவாதம் பொதுவுடைமையை வெற்றி கண்டுள்ளது. தாராள அரசும், பொருளாதாரமும் உருவான பின் மனிதனின் வரலாற்றுத் தேடுதல் முடிவுக்கு வருகின்றது என்று புக்கியோமா கூறினார்.
வரலாற்றின் முடிவு என்ற கருத்தை பல அறிஞர்கள் ஏற்கவில்லை. ஜாக் டெரிடா என்ற அறிஞர் தாராள மக்களாட்சி உன்னதமானது என்ற கருத்தை மறுக்கிறார். வன்முறை, ஏற்றத்தாழ்வு, ஒதுக்குதல், பஞ்சம் மற்றும் பொருளாதார ஒடுக்குமுறை தாராள மக்களாட்சி விட வேற எந்த அமைப்பிலும் மனித இனம் காணவில்லை என்று கூறினார்.
“வரலாற்றின் முடிவும் கடைசி மனிதனும்” – பிரான்சிஸ் புக்கியோமா
நாகரிகங்களின் மோதல்
அமெரிக்கா அரசியல் அறிஞரான சாமுவேல் ஹண்டிங்டன் நாகரிகங்களின் மோதல் என்ற கோட்பாட்டை வரலாற்றின் முடிவு என்ற கருத்துக்கு எதிராக கொண்டு வந்தார். பனிப்போர் முடிவடைந்ததால் எல்லா போர்களும் முடிவடைந்தன என்று கூற முடியாது. தற்போது உலகத்தில் ஒரு புதிய போர் அல்லது மோதல் தோன்றியுள்ளது. உலகின் மிக பெரிய நாகரிகங்களான மேற்கத்திய நாகரிகமும், இஸ்லாமிய நாகரிகமும் தற்பொழுது மோதுகின்றன. இந்த நாகரிகப் போரில் இதர உலக நாகரிகங்களும் வருங்காலத்தி பங்கேற்கும். நாகரிகப் போர் வருங்கால வரலாற்றை தீர்மானிக்கும் என்று அவர் கூறினார்.
இந்தியாவும் புதியத் தாராளவாதமும்
நமது நாட்டில் 1991-ஆம் ஆண்டு புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. தனியார்மயமாதல், தாராளமயமாதல் மற்றும் உலகமயமாதல் முக்கியத்துவம் பெற்றுள்ளன. பொருளாதார சமூகநடவடிக்கைகளில் இருந்து அரசு தற்போது பின்வாங்கியுள்ளது. “குறைவான அரசாங்கம் சிறந்த ஆட்சி” என்ற முழக்கம் இந்திய அரசை வழிநடத்தி வருகிறது. புதிய தாராளவாதத்தால் ஐந்தாண்டு திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் திட்டக் கொள்கைக்கு பதிலாக குறியீட்டு திட்டமிடல் கொண்டு வரப்பட்டது. தற்பொழுது திட்டக்குழு கலைக்கப்பட்டு ந்தி ஆயோக் (National Institution for Transforming India, NITI Aayog) உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுவுடைமைவாதம் (Communism)
விளாடிமர் லெனின்
புரட்சிகர சிந்தனையாளராகிய லெனின், 1917ஆம் ஆண்டு ரஷ்யாவில் அக்டோபர் புரட்சியை நடத்தினார். இது பொதுவுடைமைவாத புரட்சி ஆகும். லெனின் USSR என்ற சோவியத் சோசியலிஸ்ட் குடியரசுகள் யூனியன் (“Union of Soviet Socialist Republics”) என்ற நாட்டையும் உருவாக்கினார்.
- விளாடிமர் லெனின் 1924-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவருடைய உடன் இரஷ்யாவின் தலைநகராக மாஸ்கோவில் இன்றுவரை பதனுடப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அவருடைய பூத உடல் இரசாயன பொருள்கள் மூலமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில், உடல் பாதுகாப்புக்கான செலவை அரசே ஏற்றுக்கொண்டது. 1991-ஆம் ஆண்டு லெனின் உருவக்கிய நாடான USSR உடைந்த பிறகு பொதுமக்களின் நன்கொடையால் உடல் பாதுகாக்கப்படுகிறது. அவருடைய பூத உடலை, அவருடைய அன்னையின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யவேண்டும் என்று சிலர் கோருகின்றனர்.
பொதுவுடைமைவாத கட்சி
பொதுவுடைமைவாத கட்சி கோட்பாட்டை லெனின் உருவாக்கினார். “செய்ய வேண்டியது என்ன?” (What is to be done?) என்ற தனது நூலில் பொதுவுடைமைவாத கட்சியைப் பற்றி விள்க்கினார். பொதுவுடைமைவாத கட்சி பாட்டாளி வர்க்கப் புரட்சியின் கருவியாக செயல்படும்.
கட்சியின் கிளைகள் ஒவ்வொரு தொழிற்சாலையிலும் உருவாக வேண்டும் கட்சியின் உறுப்பினகள் புரட்சிகர மார்க்சியத்தை புரிந்திருக்க வேண்டும். உறுப்பினர்கள் கடமை, தியாகம், கட்டுப்பாடு, கடின உழைப்பு ஆகிய குணங்களைப் பெற்றிருக்க வேண்டும். பொதுவுடைமைவாதப் புரட்சிக்காக மக்களைத் தயார்ப்படுத்த வேண்டும். பாட்டாளி வர்க்கப் புரட்சியின் முன்னணியில் பொதுவுடைமைவாதம் கட்சி செயல்படும்.
அமைப்பு ரீதியாக ஒரு புதிய கோட்பாட்டை பொதுவுடைமைவாத கட்சிக்கு லெனின் வழங்குகிறார். இதற்கு மக்களாட்சி மத்தியத்துவம் என்பது பெயராகும். பொதுவுடைமைவாத கட்சிக்கு இரண்டு அமைப்பு கோட்பாடுகள் உள்ளன. ஒன்று, மக்களாட்சி, இரண்டாவது மத்தியில் அதிகார குவிப்பு. பொதுவுடைமைவாத லட்சியின் கீழ்நிலையில் உள்ள கிளைகள் தங்களுக்கு மேல் நிலையில் உள்ள கட்சி கிளைகளை மக்களாட்சி அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும். மாவட்ட கிளைகள் பொதுவுடைமைவாத கட்சியின் மாவட்ட கிளையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மாவட்ட கிளைகள் மாநில கிளையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பொதுவுடைமைவாத கட்சியின் மாநில கிளைகள் மத்திய கிளையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மத்திய கிளை பாலிய்பிரோ பொது செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். இதுவே மக்களாட்சி கோட்பாடாகும்.
அதிகார குவியல் அதாவது அதிகார மத்தியத்துவம் பொதுவுடைமைவாத கட்சியில் காணப்படுகிறது. மேல்நிலையில் உள்ள கட்சி கிளைகள் சொல்வதை கீழ்நிலையில் உள்ள கட்சி கிளைகள் கண்டிப்பாக கேட்க வேண்டும். கட்சியின் மத்திய கிளையின் முடிவுகளை மாநிலக் கிளைகள் கேட்க வேண்டும். மாநிலக் கிளையின் முடிவுகளை மாவட்டக் கிளைகள் கேட்க வேண்டும். மாவட்ட கிளையின் முடிவுகளை கிராமக் கிளைகள் கேட்க வேண்டும். இதுதான் மத்தியத்துவம் அல்லது அதிகாரக் குவியல் கோட்பாடு ஆகும். லெனின், மக்களாட்சி மத்தியத்துவக் கோட்பாட்டின்படி, பொதுவுடைமைவாத கட்சியில் கீழ் கிளைகளில் இருந்து மேல் கிளைகளுக்கு மக்களாட்சியும், மேல் கிளைகளில் இருந்து கீழ் கிளைகளுக்கு அதிகாரக் குவியலும் அமைப்பு ரீதியாக காணப்படுகிறது.
ஏகாதிபத்தியம்
ஐரோப்பிய நாடுகள், ஆசிய , ஆப்பிரிக்க நாடுகளை இராணுவ பலம் மூலம் அடிமையாக்கி சுரண்டிய முறையே ஏகாதிபத்தியம் ஆகும். லெனின், “ஏகாதிபத்தியம்/; “முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்” (Imperialism: The Highest Stage of Captalism) என்ற தனது நூலில் ஏகாதிபத்தியத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் உள்ள தொடர்பை விவரிக்கின்றார். முதலாளித்துவம் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் என்று காரல் மார்க்ஸ் கூறியுள்ளார். ஆனால் அது நடக்கவில்லை. அதற்கு காரணம் ஆகாதிபத்தியம் ஆகும்.
ஏகாதிபத்தியத்தின் மூலமாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை அடிமைப்படுத்தி அவைகளின் செல்வங்களை கொள்ளை அடித்து தங்கள் நாடுகளுக்கு முதலாளித்துவம் எடுத்துச் சென்றது. கொள்ளையடித்ததில் ஒரு பகுதியை தங்கள் நாட்டின் தொழிலாளிகளுக்கு முதலாளித்துவம் வழங்கியது. இவ்வாறு தான் முதலாளித்துவம் தன்னைக் காப்பாற்றிக் கொண்டது. உலகில் இரண்டு வகை புரட்சிகள் நடைபெற வேண்டும். முதலாவதாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் ஏகாதிபத்திய மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புரட்சி செய்ய வேண்டும். இரண்டாவதாக மேற்கத்திய நாடுகளில் உள்ள தொழிலாளிகள் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக புரட்சி செய்ய வேடும். இந்த இரண்டு புரட்சிகள் மூலமாக ஏகாதிபத்தியமும், முதலாளித்துவமும் அழிக்கப்படும். சமத்துவம், சகோதரத்துவம் அடிப்படையில் சர்வதேச அளவிலும் மேலை நாடுகளிலும் பொதுவுடைமைவாத சமுதாயம் மலரும் என்று லெனின் கூறினார்.
ஜோசப் ஸ்டாலின்
“ உருவத்தின் தேசியவாதம் அமைப்பில் சமதர்மவாதம்” – ஜோசப் ஸ்டாலின்
லெனினுடைய காலத்திற்கு பின் சோவியத் ரஷ்யாவின் தலைவராகவும் பொதுவுடைமைவாத கட்சியின் பொது செயலாளராகவும் ஜோசப் ஸ்டாலின் இருந்தாட். “ஒருநாட்டில் சமதர்மவாதம்” என்ற புதிய கருத்தை மார்க்சியத்தில் உருவாக்கினார். பொதுவுடைமைவாத கோட்பாட்டாளரான நிகோலை புக்காரின் இக்கருத்தை முதலில் தோற்றுவித்தார்.
மார்க்சியம் தேசியவாதத்தை நிராகரித்தது, சர்வதேசவாதத்தை ஆதரித்தது. காரல் மார்க்ஸ் தேசியவாதத்தை முதலாளிகளின் கருத்து என்று விவரித்தார். பாட்டாளி வர்க்க புரட்சி மூலமாக உலக சமுதாயத்தை உருவக்குவது காரல் மார்க்சின் அடிப்படை நோக்கமாகும். “தொழிலாளிகளுக்கு சொந்த நாடு இல்லை” என்று கூறினார். லெனின் அவர்களும் இக்கருத்தை ஆதரித்தார். ரஷ்யாவின் 1917-ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சி உலகப் புரட்சிக்கு வழிவகுக்கும் என்று லெனின் கூறினார்.
ஆனால் ஒரு நாட்டில் சமதர்மவாதம் என்ற கருத்தின் மூலம் ஸ்டாலின் பெரிய மாற்றுக் கருத்தை முன் வைக்கின்றார். “ஐரோப்பிய ஐக்கிய நாடுகளுக்கான முழக்கம்” என்ற உரையின் மூலம் லெனினே இக்கருத்தை வலியுறுத்தினார் என்று ஸ்டாலின் கூறினார். ரஷ்யாவில் மட்டுமே சமதர்மவாதம் இருந்தால் தற்பொழுது போதும், உலக நாடுகளுக்கு சமதர்ம புரட்சியை ஏற்றுமதி செய்யத் தேவையில்லை என்பது தான் இக்கோட்பாட்டின் அடிப்படைக் கருத்தாகும், சோவியத் ரஷ்யாவின் பொதுவுடைமைவாத முதலாளித்துவ எதிரிகளால் சூழப்பட்டு இருக்கிறது. சோவியத் ரஷ்யாவின் பொதுவுடைமைவாத தற்பொழுது காப்பாற்றுவது தான் முக்கிய கடமையாகும் என்று ஸ்டாலின் கூறினார். சோவியத் ரஷ்யாவும் சர்வதேச பொதுவுடைமைவாத நிறுவனமும் ஸ்டாலினின் கொள்கையை ஏற்றுக்கொண்டன.
லியோன் ட்ராட்ஸ்கி ஸ்டானின் சமதர்மத்தை நிராகரித்தார். நிரந்தர உலகப் புரட்சி , கார்ல் மார்க்ஸ் கூறியதைப் போல வேடும் என்றார். சோவியத் ரஷ்யா தனது பொதுவுடைமைவாத உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அந்த நாட்டிலேயே பொதுவுடைமைவாத மறைந்து விடும் என்று ட்ராட்ஸ்கி எச்சரித்தார்.
மாவோ
பொதுவுடைமைவாதத்தின் மிகப்பெரிய கொள்கைவாதிகளில் ஒருவராக் மாவோ உள்ளார். அவர் சீன பொதுவுடைமைவாத கட்சியைத் தோற்றுவித்து 1949-ஆம் ஆண்டு பொதுவுடைமைவாத புரட்சியை நிகழ்த்தினார்.
எல்லா அரசியல் அதிகாரமும் துப்பாக்கியின் பீப்பாயில் இருந்து பீப்பாயில் இருந்து வருகிறது. – மாவோ
பொதுவுடைமைவாதம் சீனமயமாதல்
பொதுவுடைமைவாத கொள்கையில் சீனாவின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நில மாறுதல்களை மாவோ கொண்டு வந்தார். இதற்கு பொதுவுடைமைவாத சீனமயமாதல் என்பது பெயராகும்.
விவசாயிகள் தலைமையில் புரட்சி
காரல் மார்க்ஸ் தொழிற்சாலைகள் நிரைந்த, தொழிலாளர்கள் நிறைந்த, மேற்கு ஐரோப்பிய நாடுகளில்தான் பொதுவுடைமைப் புரட்சிக்கு சாத்தியம் இருந்ததாகக் கூறினார். புரட்சியை தொழிலாளர்கள்தான் நடத்துவார்கள் என நம்பினார். ஆனால் 1940- களீல் சீன ஒரு பின்தங்கிய விவசாய நாடு ஆகும். தொழிற்சாலைகளோ, தொழிலாளிகளோ அதிகம் இல்லை. மாவோ விவசாயிகளை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக பொதுவுடைமைவாத புரட்சியை நடத்தினார். சீனாவில் மாவோவின் வெற்றி விவசாய நாடுகளான ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளுக்கு ஊக்கத்தை வழங்கியது.
மக்கள் முன்னணி
லெனின், பொதுவுடைமைவாத கட்சியின் முன்னணியில் தொழிலாளர்கள் இருக்க வேண்டும் என்றார். மாவோ புரட்சியின் முன்னணியில் மக்கள் இருக்க வேண்டும் என்று கூறினார். பொதுவுடைமைவாத கட்சியின் கொள்கையிலும், போரட்டத்திலும் மக்கள் முக்கிய அங்கமாக இருப்பார்கள். “மக்களிடம் இருந்து மக்களுக்காக” என்பது மாவோவின் பொதுவுடைமைவாத கட்சியின் வழிகாட்டுக் கோட்பாடாக இருந்தது.
மக்கள் போர், கொரில்லா போர்
சுரண்டலுக்கு எதிரான பொதுவுடைமைப் புரட்சியில், மக்களுக்கு முக்கியத்துவத்தை மாவோ வலியுறுத்துகிறார். பல கோடிகணக்கான மக்களை நேரடியாக போரில் ஈடுபடுத்த மாவோ வாதிட்டார். எகாதிபத்தியமும், நிலப்பிரபுக்கள் முறையும் மக்களின் எதிரிகள் என்று கூறினார். கிராமப்புற விவசாயிகளை ஒருங்கிணைத்து நகரங்களைக் கைப்பற்ற வேண்டும் என்பது மாவோவின் உத்தி ஆகும்.
மாவோ கொரில்லா போர் முறையை பின்பற்றினார் . இந்த உத்தியில் மூன்று கட்டங்கள் உள்ளன. முதல் நிலையில், பொதுவுடைமைவாத தொண்டர்கள் பிரச்சாரம் மூலம் மக்களை கவர்வார்கள். இரண்டாம் நிலையில் , பொதுவுடைமைவாத தொண்டர்கள் பிரச்சாரம் மூலம் மக்களை கவர்வார்கள். இரண்டாம் நிலையில், பொதுவுடைமைவாத கட்சியினர் இராணுவ மற்றும் அரசாங்க நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள். மூன்றாம் கட்டத்தில், ஒரு வழக்கமான இராணுவமாக மாறி பொதுவுடைமைவாத கட்சி கிராமங்களையும் , நகரங்களையும் வெற்றிகொள்ளும். தேவைக்குத் தகுந்தவாறு இந்த மூன்று நிலைகளை பொதுவுடைமைவாத கட்சி பின்பற்றலாம்.
நூறு மலர்கள் மலரட்டும்
1950-களில் நூறு மலர்கள் மலரட்டும் இயக்க சீனாவில் நடைபெற்றது. “நூறு மலர்கள் மலரட்டும், நூறு வகையான சிந்தனைகள் போட்டியிடட்டும்” என்று மாவோ கூறினார்.
கருத்துச்சுதந்திரம் மக்களுக்கு வழங்கப்பட்டது. நல்ல புதிய கருத்துகள், பழைய, தேவையற்ற கருத்துக்களைத் தோற்கடிக்கும் என மாவோ கூறினார். தொடக்கத்தில் பொதுவுடைமைவாத அரசாங்கம் இந்த இயக்கத்தை நடத்தியது. பின்னர், பொதுவுடைமைவாத கட்சிக்கு எதிராக கருத்துக்கள் தோன்றியதால் இந்த இயக்கம் கைவிடப்பட்டது.
கலாச்சாரப் புரட்சி
மாவோ பாட்டாளி வர்க்க கலாச்சார புரட்சியை 1965 – 66ஆம் ஆண்டு அமல்படுத்தினார். பழைய கருத்துக்கள், பழைய பழக்கங்கள், பழைய கலாச்சாரம் ,பழைய வழக்கங்கள் ஆகிய “நான்கு ‘பழையவைகள்’ நீக்கத்திற்காக இப்புரட்சியைக் கொண்டுவந்தார். பொதுவுடைமைவாத கட்சி அரசாங்கம், இராணுவம், கலாச்சாரத்தில் தேவையில்லா கருத்துகள் புகுந்துவிட்டன. அவைகளை அகற்றி பொதுவுடைமையைக் காக்க வேண்டும் என்பதுதான் நோக்கமாகும். தொழில்மயம் ஆக்குவதையும், நிலம் மற்றும் தொழில் கூட்டுவாதத்தையும் அமல்படுத்தி விரைவாக சீனாவை சமதர்ம அமைப்பாக மாற்றமாவோ முயற்சித்தார். ஆனால் துரதிஷ்டவசமாக அவரது நடவடிக்கைகள் கொடிய பஞ்சத்தைக் கொண்டுவந்தது. பொதுவுடைமைவடஹ அரசை காப்பாற்ற, பொதுவுடைமை அரசை காப்பாற்ற, பொதுவுடைமையின் எதிரிகளை வீழ்த்துவதற்கு சிவப்பு காவலர்கள் உருவக்கப்பட்டனர்.
கலாச்சாரப் புரட்சி
1960களில்
மாவோ தனது அதிகாரத்தை பலப்படுத்துவதற்காக புதிய புரட்சிகர இயக்கத்தைத் தொடங்கினார். மாணவர்கள், விவசாயிகள், இராணுவ வீரர்கள் ஆகியோரைக் கொண்டு சிவப்பு காவலர்களை உருவாக்கினார்.
புதிய மக்கள் ஆட்சி
மாவோ புதிய மக்களாட்சி என்ற கொள்கையைக் கொண்டு வந்தார். அரசு ஏழைகளை சுரண்டும் பணக்காரர்களின் ஆயுதம் என்ற மார்க்ஸிய கருத்தை மாவோ சிறிது மாற்றியமைத்தார். விவசாயிகள், தொழிலாளிகள், சிறிய முதலாளிகள், தேசிய முதலாளிகள் என்ற நான்கு வர்க்கங்களுக்காக புதிய மக்களாட்சியை உருவக்கினார். புதிய மக்களாட்சிக்கு மக்கள் மக்களாட்சி சர்வாதிகாரம் என்ற பெயரையும் அவர் சூட்டினார், இம்முறையில் தொழிலாளிகளுக்கும், விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. சிறிய முதலாளிகளும், பெரிய முதலாளிகளும் அரசின் இளைய பங்குதாரர்களாக கருதப்பட்டனர். இந்த நான்கு வகை வர்க்கங்களுக்கும் அரசு மக்களாட்சியாக செயல்பட்டது. மற்ற வர்க்கங்கள் அரசின் எதிரிகளாக கருதப்பட்டனர். அவர்களை ‘ஏகாதிபத்தியத்தை இயக்கும் நாய்கள்’ என்று மாவோ கடுமையாக வர்ணித்தார்.
இருபத்தியோராவது நூற்றாண்டில் கூட மாவோயிசம் பல மாற்றங்களுடன் சீனாவில் பின்பற்றப்படுகிறது. சீனாவின் தேசிய தலைவரான டெங் ஜியாபெங் 1978 ஆம் ஆண்டிற்கு பிறகு சீனப் பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தார். தாராளமயமாதல் சீனப்பொருளாதாரத்தில் முன்னுக்கு கொண்டுவரப்பட்டது. இருந்தபோதிலும் அரசியலில் சீன பொதுவுடைமைவாத கட்சி எல்லையற்ற ஆதிக்கத்தை தொடர்ந்து பெற்றிருக்கிறது.
‘பூனை கருப்பா, சிவப்பா என்பது முக்கியமல்ல, அது எலியை பிடித்தால் போதும்’. – டெங் ஜியாபெங்
ஆண்டனியோ கிராம்சி
இத்தாலிய மார்க்சியவாதியான கிராம்சி மேலாதிக்கம் என்ற புதுக்கருத்து மூலம் முதலாளித்துவ அரசின் செயல்பாடுகளை விவரித்தார். மேலாதிக்கம் என்றால் அறிவுசார், தார்மீக தலைமை என்பது பொருளாகும். அரசு மக்களுடைய ஆதரவை தனக்கு சாதகமாக அறிவுசார் தார்மீக தலைமையின் மூலம் உருவாக்குகின்றது. பிரச்சாரத்தின் மூலம் தனக்கு ஆதரவாகப் பொய் எழுச்சி மற்றும் விழிப்புணர்வை உருவாக்குகிறது.
அரசின் எண்ணங்கள், நோக்கங்கள் மக்களின் மனதில் திரும்பத்திரும்ப பதியப்படுகின்றன. மக்களின் மனதை மயக்க முடியாத போதுதான் வன்முறையை அரசு பயன்படுத்துகிறது. முதலாளித்துவ அரசை வீழ்த்துவதற்கு உயிரோட்டமான அறிவு ஜீவிகளும் பொதுவுடைமைவாத கட்சியும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். அறிவு ஜீவிகள் அரசைப்பற்றி யோசித்து எவ்வாறு அதை தோற்கடிப்பது என்று கூறுவார்கள். பொதுவுடைமைவாத கட்சி அதன் பின் புரட்சியை நடத்தி பொதுவுடைமையை நிறுவும் என்று கிராம்ஸி கூறினார்.
எல்லா மனிதர்களும் அறிவு ஜீவிகளே ஆனால் சமூகத்தில் அறிவு ஜீவிகளின் பணியை எல்லோரும் செய்வது இல்லை. – ஆண்டனியோ கிராம்ஸி
புது மார்க்சியம்
ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் சமூக ஆய்வு நிறுவனத்தின் தத்துவஞானிகள் புது மார்க்டியம் அல்லது விமர்சன கோட்பாடு என்பதை உருவாக்கினர்.
இவர்கள் அனைவரும் ஆதிக்கத்தையும் சுரண்டலையும் எதிர்த்தவர்கள் ஆவார்கள். ஆதிக்கத்தின் வேர்களை புரிந்துகொள்ள முயற்சித்தவர்கள் ஆவார்கள். புரட்சிகர மாற்றத்திற்காக மக்களின் உண்மை விழிப்புணர்வைத் தட்டியெழுப்பினார்கள். ஆதிக்கம் சார்ந்த சமூக கலாச்சார தன்மைகளை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் என்று கூறினார்கள். இவர்களுடைய கருத்துகள் மக்களின் விடுதலைக்கான கருத்துகளாகவும், ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு கலாச்சாரமாகவும் இருந்தன.
U.S.S.R.
U.S.S.R. என்றால் யூனியன் ஆஃப் சோவியத் சோசலிஸ்ட் ரிபப்லிக்ஸ் என்பது இதனுடைய விரிவாக்கம் ஆகும். இது உலகிலேயே மிகப் பெரிய அரசாக இருந்தது. பொதுவுடைமை தத்துவத்தை பிரதிபலித்தது.
அந்த நாட்டிற்கு என்ன ஏற்பட்டது? தற்போது அதனைப் பற்றி ஏன் நாம் ந்தையும் கேள்விப்படுவது இல்லை?
அந்நாடு தற்போது உலகில் இல்லை. 1991-ஆம் ஆண்டு அது உடைந்து போனது. உலகத்தில் இருந்து மறைந்து போனது.
எவ்வாறு அந்நாடு உடைந்து போனது?
அந்த பொதுவுடைமைநாடு உடைந்து போனதிற்கு பல காரணங்கள் உள்ளன, தீர்க்க முடியாத பொருளாதார பிரச்சனை அந்நாட்டை பாதித்தது. அரசியலில் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படவில்லை. அந்நாட்டின் இராணுவ செலவுகள் எல்லை மீறி போயின. அமெரிக்காவிற்கும் அந்நாட்டிற்கும் இடையிலான பனிப்போர் அதனுடைய பொருளாதார சக்தியை சிதைத்தது.
அந்த பெரிய நாடு உடைந்து போனால் உலகமே அதிர்ந்து இருக்கும். அந்த நாட்டின் சரிவும், மறைவும் எவ்வாறு உலகத்தை பாதித்தது?
அந்நாட்டின் மறைவு குறுகிய மற்றும் நீண்டகால தாக்கத்தை உருவாக்கியது. ரஷ்யாவில் மக்களாட்சியை கொண்டு வந்தது உலகப் பனிப்போருக்கு முடிவு கட்டியது. அணுஆயுதப் போர் ஆபத்தை அகற்றியது. அந்நாட்டின் மறைவால் 15 புதிய குடியரசு நாடுகள் தோன்றின. இது போன்ற நல்ல மாற்றங்கள் அந்நாட்டின் மறைவால் கிட்டின.
அந்நாட்டின் மறைவால் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டனவா?
பல எதிர்மறை விளைவுகள் உருவாயின. (எ.கா) பொதுவுடைமைவாதம், மனித குலத்திற்கான நம்பிக்கை கொள்கை என்ற முயற்சியில் வீழ்ச்சி அடைந்தது. அந்த நாட்டின் மறைவால் தோன்றிய புதிய நாடுகளுக்கிடையில் பிரச்சனைகள் எழுந்தன. உலகம் ஒரு நட்டின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. (அமெரிக்காவின் ஆதிக்கம்) தேசங்களிடையே ரஷ்யா தனது உயர்ந்த இடத்தை இழந்தது. இந்தியா தனது பாரம்பரிய நட்பு நாடான சோவியத் யூனியனை இழந்தது.
கருவி மார்க்சிசம்
ரால்ஃப் மிலிபன்ட், கருவி மாக்ஸிசம் எனும் கருத்தை வலியுறுத்தினார். அரசை இவர் கருவியாக பார்க்கிறார். பணக்காரர்களும் அரசாங்கத்தின் அதிகாரிகளும் ஒரே சமூக வர்க்கத்தில் இருந்து தோன்றுகிறார்கள். அரசு அதிகாரிகள் பணக்காரர்களின் சொந்தக்காரர்களாக உள்ளனர். இந்த தனிப்பட்ட உறவினால் அரசு பணக்காரர்களுக்கு சாதகமாக செயல்படுகிறது. பணக்காரர்கள் ஏழைகளை சுரண்டுவதற்கும் மேலாதிக்கம் செய்வதற்கும் அரசானது துணை போகிறது என்று ரால்ஃப் மிலிபன்ட் கூறினார்.
கிராம்சி நவீன அரசியல் சிந்தனையாளர்களில் மிகுந்த சிந்திக்கும் திறன் கொண்ட ஒருவராவார். இத்தாலியின் பாசிச அரசாங்கம் அவரைச் சிறையில் அடைத்தது. 20 ஆண்டுகளுக்கு இவரது மூளையின் செயல்பாட்டை நிறுத்தி வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டது. சிறையில் கையில் கிடைத்த காகிதத்தில் தனது கருத்துக்களை கிராம்சி எழுதினார். பின்னர் சிறையில் இருந்து அந்த குறிப்புகள் வெளி உலகத்திற்கு கடத்தி வரப்பட்டன. ஆகவே அவரது புத்தகத்திற்கு ‘சிறைச்சாலை குறிப்பேடுகள்’ (Prision Notebooks) எனப் பெயரிடப்பட்டது.
கட்டுமான மார்க்சிசம்
பிரான்சு நாட்டின் தத்துவ ஞானியான அல்துசர், போலன்ட்ஸ்சாஸ் கட்டுமான மார்க்சியம் என்ற கருத்தை 1970களில் வலியுறுத்தினர். இவர்கள் கருவி மார்க்சிய கருத்தை நிராகரித்தனர். அல்துசருக்கும். மிலிபேண்ட் அவருக்கும் இடையே நீண்ட விவாதம் நடந்தது. அதிகாரிகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையிலான தனிப்பட்ட உறவு முக்கியம் இல்லை. அதிகாரிகளின் தனிப்பட்ட சமூக உறவுகள் அரசின் தன்மையை பாதிப்பது இல்லை. அரசு எப்பொழுதுமே பணக்காரர்களால், ஏழைகளை சுரண்டும் கருவியாக செயல்படும் என்று கட்டுமான மார்க்சிசம் கூறுகிறது.
லூயி அல்துசர்
மார்க்சியத்தின் அரசு கோட்பாட்டில் புதிய கருத்துகளை இவர் கொண்டு வந்தார். முதலாளித்துவ அரசு ஏழைகளை அடக்குவதற்கு 2 வகையான கருவிகளை பயன்படுத்துகிறது.
- கொள்கை அரசு கருவிகள்
- அடக்குமுறை அரசு கருவிகள்
கொள்கை அரசு கருவிகளில் குடும்பம், பள்ளிகள், கல்லூரிகள், ஊடகங்கள் போன்றவைகள் அடங்கும். அரசானது, கொள்கை கருவிகள் மூலமாக பிரச்சாரங்களைச் செய்து , மக்களின் மனதை மயக்கி தனது நலனுக்கு தகுந்தவாறு மாற்றுகிறது.
அடக்குமுறை அரசு கருவிகளில் காவல்துறை, இராணுவம் போன்றவைகள் அடங்கும். அரசானது, கொள்கை அரசு கருவிகளால் செயல்பட முடியாவிட்டால், அடக்குமுறை அரசு கருவிகளை பயன்படுத்தும். வன்முறை, மிரட்டல் போன்ற நடவடிக்கைகளை பயன்படுத்தி மக்களை அடக்கும் என்று அல்துசர் கூறினார்.
“வாழ்க்கை முறையை மாற்றுவதற்கு மனிதர்களை உருவாக்கி மாற்றி, தயார்படுத்துவதற்கு கொள்கை இண்றியமையாதது” – லூயி அல்துஸர்
சமதர்மவாதம்
சமதர்மவாதம் செல்வங்கள் அனைத்தும் பொதுச் சொத்துக்களாக இருக்க வேண்டும். தனிச் சொத்து உரிமைக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று கூறுகின்றது. தாராளவாதத்திற்கு எதிரான கோட்பாடு சமதர்ம கொள்கை ஆகும். பல வகையான சமதர்ம வாதங்கள் உள்ளன. மக்களாட்சி சமதர்மவாதம், ஃபேபியன் சமதர்மவாதம், பரிணாம சமதர்மவாதம், கில்டு சமதர்மவாதம் என்பவைகள் முக்கியமானவைகள் ஆகும். ஒஅல நேரங்களில் சமதர்மவாதமும் பொதுவுடைமைவாதத்தையும் ஒரே பொருள் கொண்டவைகள் போல அழைக்கப்படுகின்றன. ஆனால் காரல் மார்க்ஸ் இரண்டையும் வேறுபடுத்தினார். தனது பொதுவுடைமையை அறிவியல் சமதர்மவாதம் என்றும் இதர சமதர்மவாதங்களை கற்பனை சமதர்மவாதம் என்றும் வர்ணித்தார்.
- கற்பனை சமதர்மவாதம்
பல அரசியல் அறிஞர்கள் 19ஆம் நூற்றாண்டில் தாராளவாதத்தின் எதிர்மறை விளைவுகளை தக்கி பேசினார். உழைக்கும் வர்க்கத்தின் நலன்களை காப்பாற்ற வேண்டும் என்றனர். இராபர்ட் ஓவன் என்பவர் மனிதநேயம் உள்ள தொழில் அதிபர் ஆவார். அவர் கூட்டுறவு முறையில் தனது தொழிற்சாலைகளை நடத்தினார். தொழிலாளிகளை நன்கு கவனித்துக் கொண்டார். தொழிற்சாலைகளின் மேலாண்மையில் தொழிலாளிகளையும் சேர்த்துக் கொண்டார். தொழிலில் வரும் இலாபத்தில் தொழிலாளிகளுக்கும் பங்கு வழங்கினார். தூய சைமன் என்பவர் பிரான்சு நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் மற்றும் அறிஞர் ஆவார். திறமையான பொருளாதாரத்திற்கு திரமையான பொருளாதாரத்திற்கு தொழிலாளிகளின் நலன்களை முதலாளிகள் பாதுகாக்க வேண்டும் என்றார்.
சார்லஸ் ஃபுரியர் என்ற அறிஞர் தொழிலாளர்களின் அமைப்புகள் உருவாக வேண்டும் என்றார். அந்த அமைப்புகளுக்கு ஃபலாஜீஸ் (Phalanges) என்று பெயரிட்டார். இவர் முதலாளிகள் மனசாட்சியுடன் , தொழிலாளர்களுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
மேற்கண்ட மூன்று அறிஞர்களும் சமதர்மவாதத்தை ஆதரித்தனர். காரல் மார்க்ஸ் இவர்களின் தொழிலாளர்களுக்கான கரிசனத்தை பாராட்டினார். ஆனால் இவர்களின் கருத்துக்கள் ஆழமற்றவை, அறிவியல் பூர்வமாக இல்லை என்று விமர்சித்தார். ஆகவே இவர்களின் சமதர்மவாதக் கருத்துக்களை கற்பனை சமதர்மவாதம் என்று பெயரிட்டார்.
2. மக்களாட்சி சமதர்மவாதம்
விடுதலையும், சமத்துவத்தையும் அடைவதற்கு மக்களாட்சியும் சமதர்மவாதமும் தேவை என்று மக்களாட்சி சமதர்மவாதம் வாதிடுகின்றது. இது தனது அரசு கோட்பாட்டில் பொதுவுடைமையில் இருந்து வேறுபடுகின்றது. அரசு மக்களின் நலன் காக்கும் கருவியாகும். அரசு முதலாளிகள் கைப்பாவை இல்லை. சமூக நலனை காக்கும் தன்மை அரசிடம் உள்ளது.அரசு மக்களாட்சி அடிப்படையில் இருக்க வேண்டும்.சமூகத்தில் உள்ள எல்லா வர்க்கங்களுக்கும் பொதுவானது அரசு ஆகும்.
சமூக மாற்றங்கள் அமைதியான முறையில் மெல்ல மெல்ல வரவேண்டும்.மக்களாட்சி சமதர்மவாதம் வாக்குப் பெட்டி சமதர்மவாதம் என்றும் அழைக்கப்படுகிறது.மக்கள் தங்களின் ஓட்டுகள் மூலம், தேர்தல் பாதை மூலம் மாற்றங்களை கொண்டுவர முடியும்.புரட்சியும் வன்முறையும் தேவையில்லை என்று மக்களாட்சி சமதர்மவாதம் கூறுகின்றது.தனி சொத்துக்களை முற்றிலும் அகற்ற வேண்டாம்.சமூக நலனுக்காக தனி சொத்துரிமை மீது கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.தனி சொத்துரிமையை அழிக்க வேண்டியது இல்லை என்று மக்களாட்சி சமதர்மவாதம் கூறுகின்றது.
3. ஃபேபியன் சமதர்மவாதம்
இது இங்கிலாந்து நாட்டின் சமதர்மவாதம் ஆகும்.ஃபேபியன் குழுவால் 1884 முதல் இவ்வகை சமதர்மவாதம் ஆதரிக்கப்பட்டு வந்தது.பண்டைய ரோமானிய ஜெனரல்”ஃபேபியஸ்” பெயரால் இது அழைக்கப்படுகிறது.”காத்திரு சரியான நேரத்தில் தீவிரமாக தாக்கு” என்பது ஃபேபியஸ் அவர்களின் இராணுவ உத்தியாகும்.
ஃபேபியன் சமதர்மவாதம் முதலாளித்துவத்தை கடுமையாக எதிர்த்தது.எதிர்மறைத் தாராளவாதத்தை விமர்சித்தது.அரசியலையும் பொருளாதாரத்தையும் மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறியது.மக்களாட்சி அரசை ஃபேபியன் சமதர்மவாதம் ஆதரித்தது.அரசிற்கு இரண்டு தன்மைகள் உள்ளன.ஒன்று அதனுடைய அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு இருக்க வேண்டும்.இரண்டாவதாக நிபுணர்களிடம் அதிகாரம் இருக்க வேண்டும். அரசை நாம் அகற்ற வேண்டாம்.அதனை இந்த இரண்டு தன்மைகள் அடிப்படையில் மாற்றினால் போதும் என்று ஃபேபியன் சமதர்மவாதம் கூறியது.
ஃபேபியன் சமதர்மத்தின் பொன்மொழி “தாக்கும் பொழுது நான் கடுமையாக தாக்குவேன்” என்பதாகும்.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஃபேபியன் சமதர்மவாதத்தின் ஆதரவாளர் ஆவார். ஃபேபியன் சமதர்மவாதம் மக்களாட்சியும் சமதர்மமும் மிகவும் நெருங்கிய கோட்பாடுகள் ஆகும்.இரண்டு கொள்கைகளும் நீதியையும் சமத்துவத்தையும் மிகவும் ஆதரித்தன. ஃபேபியன் சமதர்மவாதம் தனி சொத்துரிமையை அழிக்க வேண்டும் எனக் கூறவில்லை.சமூக நலனுக்காக தனி சொத்துரிமை மீது கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று கூறியது. ஃபேபியன் சமதர்மவாதம் பொதுவுடைமைவாத கொள்கையின் புரட்சியை எதிர்த்தது.வன்முறை மாற்றம் தராது.அமைதியான முறையில் பேச்சு வார்த்தைகள் மூலம் மாற்றம் வர வேண்டும் என்று கூறியது.
4. பரிணாம சமதர்மவாதம்
ஜெர்மன் சமதர்ம மக்களாட்சி கட்சியின் தலைவரான இலசல்(Lassalle) பரிணாம சமதர்மவாதத்தை ஆதரித்தார்.ஜெர்மனியில் 1875-ஆம் ஆண்டு வந்த கோட்டா திட்டம்(Gothe programme) பரிணாம சமதர்மவாதத்தை வளர்த்தது எட்வர்ட் பெர்ன்ஸ்டன் “பரிணாம சமதர்மவாதம்”(Evolutionary socialism) என்ற நூலை எழுதினார்.இத்தாலியின் அன்சில்,பிரான்சின் ஜாரஸ் என்று பல அறிஞர்கள் பரிணாம சமதர்மவாதத்தை ஆதரித்தனர்.
மாற்றங்கள் பரிணாமத்தின் மூலம் மெல்ல மெல்ல வரவேண்டும்.வன்முறை மூலம் வரக்கூடாது.புரட்சி மூலம் மாற்றங்கள் வரவேண்டிய அவசியம் இல்லை என்று பரிணாம சமதர்மவாதம் கூறுகின்றது.மேலும் மனித வாழ்க்கையை பொருளாதார காரணிகள் மட்டும் தீர்மானிப்பது கிடையாது.இதர காரணிகளும் மனித வாழ்வை நிர்ணயிக்கின்றன.பரிணாம சமதர்மவாதமும் மக்களாட்சி சமதர்மவாதமும் நெருங்கிய தொடர்பு உடையவைகள் ஆகும்.மார்க்சியம் பரிணாம சமதர்மவாதத்தை தரகர் கண்ணோட்ட சமதர்மவாதம் என்று விமர்சித்தது.
கில்டு சமதர்மவாதம்
20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இங்கிலாந்தில் கில்டு சமதர்மவாதம் தோன்றியது.தேசிய கில்டுகள் அமைப்பின் தலைவரான G.D.H. கோல் கில்டு சமதர்மவாதத்தை ஆதரித்தார்.அவர் கில்டு சமதர்மவாதம் :பொருளாதார மீட்புக்கான திட்டம்(Guild socialism;A Plan for Economic Recovery) என்ற நூலை எழுதினார்.தொழிலாளர்களை சுரண்டுவதால் முதலாளித்துவத்தை விமர்சித்து கில்டு சமதர்மவாதம் தோன்றியது.
இடைக்கால வரலாற்றில் ஐரோப்பாவில் ஒரு குறிப்பிட்ட தொழிலில் உள்ள நிபுணர்கள் சேர்ந்து உருவாக்கிய சங்கம் தான் கில்டு ஆகும். அத்தொழிலில் உள்ளவர்கள் பரஸ்பர ஒத்துழைப்புடன் வாழ்வதற்கு கில்டுகள் உதவின.கில்டு சமதர்மவாதம் ஐரோப்பாவின் இடைக்கால கில்டுகளையும் நவீன தொழிற்சங்கங்களையும் இணைக்கிறது. கில்டுகள் தான் ஆட்சி செய்ய வேண்டும்.தொழிலில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் தான் அதன் பிரதிநிதியாக செயல்பட வேண்டும்.கில்டுகள் இணைந்து தல,மாவட்ட,மாநில, மத்திய ஆட்சி குழுக்களை உருவாக்கி நாட்டை நிர்வகிக்க வேண்டும். முக்கியமான அதிகாரங்கள் கில்டுகளிடமே இருக்க வேண்டும்.
கில்டு சமதர்மவாதம் அரசை ஒழிக்க வேண்டும் என்று கூறவில்லை.ஒரு சில பணிகளை மட்டுமே அரசு செய்ய வேண்டும். கல்வி மற்றும் சுகாதாரப் பணிகளை மட்டுமே அரசு செய்ய வேண்டும்.மாற்றங்கள், புரட்சி மற்றும் வன்முறை மூலமாக வரக்கூடாது.அமைதியான மக்களாட்சி முறையில் மட்டுமே மாற்றம் வர வேண்டும் என்பது கில்டு சமதர்மவாதத்தின் முக்கிய கொள்கையாகும்.
ஆனால் விமர்சகர்கள் கில்டு சமதர்மவாதத்தை நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது என்று விமர்சிக்கின்றனர்.அரசை ஒரு சாதாரண கில்டு என கருதுவது அரசின் சிறப்பு தன்மையை சிதைத்து விடும்.அரசின் சக்தியை,அதிகாரத்தை கில்டு சமதர்மவாதம் குறைத்து மதிப்பிட்டுள்ளது.கில்டு சமதர்மவாதத்தின் அதிகாரம் இல்லாத அரசினால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாது.போர்கள் மற்றும் கிளர்ச்சிகளில் இருந்து மக்களை காப்பாற்ற முடியாது என்று எதிர்ப்பாளர்கள் விமர்சிக்கின்றனர்.
வேறுபாடுகள்
பொதுவுடைமைவாதம் | சமதர்மவாதம் |
புரட்சி மாற்றத்தின் மருத்துவச்சி ஆகும்.பேரு காலத்தில் அன்னையரிடம் இருந்து மருத்துவச்சி குழந்தையை உலகிற்கு எடுத்து வருகிறாள். புரட்சி மாற்றத்தின் மூலம் புதிய சமூகத்தை உலகிற்கு கொண்டு வருகிறது. | பரிணாம மாற்றங்களே நன்மையை தருகின்றன. நீடித்தது நிற்கின்றன.புரட்சி தேவையில்லை. |
பணக்கார வர்க்கம் ஏழை வர்க்கத்தை சுரண்டுவதற்கான கருவி தான் அரசாகும்.ஆகவே நாம் அரசை அழிக்க வேண்டும். | அரசை நாம் அழிக்கக் கூடாது.அரசை மக்களாட்சி மற்றும் மக்கள் நலன் அடிப்படையில் மாற்றி அமைக்க வேண்டும். |
வர்க்கம் போராட்டம் மனித வரலாற்றில் மாற்றத்தின் அடிப்படை சக்தி. | வன்முறையான வர்க்கப் போராட்டம் தேவையில்லை. |
தனி சொத்துரிமை அழிக்கப்பட வேண்டும். | தனி சொத்துரிமை மாற்றப்பட வேண்டும்.சமூக நலனுக்காக் சொத்துரிமை மீது கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். |
வரலாற்று பொருள் முதல் வாதம் வரலாற்றை விளக்கும்.பொருளாதாரம் தான் மனிதனை இயக்குகிறது. | வரலாற்று பொருள் முதல் வாதம் மட்டுமே மனித வரலாற்றை விளக்காது.கலாச்சாரம்,மதம்,அரசியல் போன்ற காரணிகளும் மனித வரலாற்றை தீர்மானிக்கின்றன. |
இந்தியாவின் சமதர்மவாதம்
“சமதர்மவாத வகையான சமுதாயம்” என்பது தான் இந்தியாவின் சமதர்மவாதம் ஆகும்.1990- களில் இந்திய அரசு இதனை கொண்டு வந்து.மத, இன,மொழி,ஜாதி வேறுபாடின்றி அனைவருக்கும் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்வதும் ஏழ்மை,கல்லாமை ஆகியவற்றை அகற்றுவதும் இந்தியாவின் சமதர்மவாதம் ஆகும்.1950 ஆம் ஆண்டு பாராளுமன்றம் தனது தீர்மானத்தின் மூலம் திட்டக் குழுவை அமைத்தது.1951 ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டு திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டன.னாம் பொதுத் துறையும் தனியார் துறையும் செயல்படும் கலப்பு பொருளாதாரத்தைப் பின்பற்றினோம்.பொருளாதாரத்தில் பொதுத் துறை நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் இந்தியா தந்தது.
மேலும் 42-வது அரசமைப்பு திருத்தச் சட்டம் சமதர்மவாதத்தை அரசமைப்பின் முகவுரையில் சேர்த்தது.44-வது அரசமைப்பு திருத்தச் சட்டம் சொத்துரிமையை அடிப்படை உரிமைகள் பகுதியில் இருந்து நீக்கி சாதாரண சட்ட உரிமையாக அரசமைப்பின் 12-ஆம் பகுதியில் வைத்தது. அரசமைப்பின் நான்காவது பகுதியில் வேலை,உரிமை,சிலர் இடத்தில் செல்வங்கள் குவியாமை,போன்ற சமதர்மவாத கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.சுதந்திரம் முதல் 1991 –ஆம் ஆண்டு வரை இந்தியா சமதர்மவாத கருத்துக்களை பின்பற்றியது.
தேசியவாதம்
பொருள், தோற்றம் மற்றும் பரவல்
ஒரு நாட்டின் மேல் மக்களுக்கு உள்ள பாசம்,அன்பு,விசுவாசம் போன்ற உணர்வுகளை தேசியவாதம் என்று கூறுகிறோம். மக்களிடையே குறிப்பிட்ட நிலப்பரப்பிற்கும்,மொழிக்கும் அல்லது மொழிகளுக்கும், விழுமியங்களுக்கும், பாரம்பரியத்திற்கும் பாசம் காட்டுவதே தேசியவாதம் ஆகும்.மக்களின் விசுவாசம் எல்லா குழுக்களை விடவும் தேசத்திற்கு முதன்மையாக இருக்க வேண்டும்,ஏர்னஸ்ட் கெல்னெர் ”தேசமும் தேசியவாதமும்” (Nations and Nationalism) என்ற நூலை எழுதினார். ”தேசியவாதம் என்பது அரசியல் தளமும் .தேசத் தளமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று முதன்மையாக வலியுறுத்தும் அரசியல் கொள்கை” என்று அவர் கூறினார்.
தேசியவாதம் ஒரு நவீன கருத்தாகும்.நவீன காலத்தில் ஐரோப்பாவில் தோன்றியது. இங்கிலாந்தில் முத்ன் முதலில் தோன்றியது..பிரான்சு,ஜெர்மனி போன்ற நாடுகளில் பிரெஞ்சு புரட்சிக்கு பின்னர் பரவியது.வடஅமெரிக்க காலனிகள் ஐரோப்பாவிற்கு எதிராக தங்களது தேசியவாதத்தை உருவாக்கின.ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் பின் காலனி ஆதிக்கத் தேசியவாதம் என்ற புதுவகை தேசியவாதத்தை உருவாக்கின.பல காரனிகள் தேசியவாதம் உலகம் முழுவதும் பரவுவதற்கு வழிவகுத்தன.முதலாளித்துவம்,பிரெஞ்சுப் புரட்சி,தொழில் புரட்சி,உலகப் போர்கள் மற்றும் காலனி ஆதிக்கம் போன்றவைகள் தேசியவாதத்தை வளர்த்தன.
தேசியவாதம் கோட்பாடுகள்
தேசியவாதத்தைப் பற்றி பல கோட்பாடுகள் உள்ளன.
அ) ஆதிகால தேசியவாத கோட்பாடு
ஆ) சமூக உயிரியல் தேசியவாத கோட்பாடு
இ) சமூகத் தொடர்பு தேசியவாத கோட்பாடு
ஈ) மார்க்சிய தேசியவாத கோட்பாடு
உ) பின் கொ/ல்கை தேசியவாத கோட்பாடு
மேற்கண்ட கோட்பாடுகளை நிரந்தரக் கோட்பாடுகள் மற்றும் நவீன கோட்பாடுகள் எனப் பிரிக்கலாம்.முதல் இரண்டுக் கோட்பாடுகள் நிரந்தரக் கோட்பாடுகளாகும்.கடைசி மூன்று கோட்பாடுகள் நவீன கோட்பாடுகளாகவும் கருதப்படுகின்றன.
அ) ஆதிகால தேசியவாத கோட்பாடு
ஆதிகாலத்தில் இருந்து ஓர் இடத்தில் வாழ்ந்து வரும் மக்கள் தங்களுக்குள்ளே உருவாக்கிக்கொள்ளும் பாச உணர்வே தேசியவாதம் ஆகும். மொழி, மதம்,பகுதி, இனம் போன்ற காரணிகளின் அடிப்படையில் ஆதிகாலம் முதல் இணைந்து வசிப்பதால் தேசிய உணர்வு இங்கு வளர்கிறது.அவர்கள் இன உணர்வையும், விசுவாசத்தையும் பெற்று இருக்கிறார்கள்.தங்களது சமூக நடவடிக்கைகளில் தினந்தோரும் தனிப்பட்ட முறையில் போட்டிகள் இருந்தாலும்,பொது வாழ்வில் இன உணர்வுகள் அடிப்படையில் செயல்படுகின்றனர்.இன தேசியவாதம் என்ற கொள்கையை இக்கோட்பாடு ஆதரிக்கின்றது.
ஆ) சமூக உயிரியல் தேசியவாத கோட்பாடு
ஒரு தாய் வழியில் வந்தவர்கள் இடையே காணப்படும் பாச உணர்வே தேசியவாதம் என்று இக்கோட்பாடு குறிப்பிடுகின்றது.மக்கள் அனைவரும் ஒரு வம்சத்தை சேர்ந்தவர்கள்.தேசமே ஒரு விரிவான குடும்பம் ஆகும்.தேசியவாதம் என்பது பகுத்தறிவையும் பெற்று இருக்கின்றது.உணர்வுப் பூர்வமாகவும் உள்ளது.இது “பழங்கால மனதையும் நவீன தொழில் நுட்பத்தையும்” கொண்டுள்ளது.தங்கள் சமூகத்தின் வேர்களைக் கண்டறிய வரலாற்றில் தேசியவாதம் பயணிக்கின்றது.ஆனால் அருகில் வசிக்கும் இனக் குழுக்களிடம் பழகும் பொழுது தற்காலத்தில் செயல்படுகின்றது.தம் மக்களிடையே இனப் பாசத்தை காட்டுகின்றது.இதர மக்களிடையே இன வெறுப்பை தேசியவாதம் விதைக்கின்றது.
இ) பின் கொள்கை தேசியவாத கோட்பாடு
இக்கோட்பாட்டை பல்வேறு அறிஞர்கள் ஆதரித்து உள்ளனர்.அந்தோனி கிடன்ஸ்,மைக்கல் மான்,பால் பிராஸ் ஆகியோர் முக்கிய ஆதரவாளர்கள் ஆவர்.அரசு தான் தேசியவாதத்தை கொண்டு வந்து என்று இக்கோட்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.தேசங்களும், தேசிய உணர்வுகளும் இடைக்கால வரலாற்றில் இருந்த போதிலும், நவீன அரசு வந்த பிறகு தான் தேசியவாதம் முழுமையாக வளர்ந்தது என்று இவர்கள் கூறுகின்றனர். அந்தோனி கிடன்ஸ் பிரெஞ்சு புரட்சியால் தான் ஐரோப்பிய நாடுகளில் தேசியவாதம் உருவானது என கூறுகிறார்.
மைக்கல் மான் சமூக சக்திக்கு நான்கு ஆதாரங்கள் உள்ளன என கூறினார். அவைகள் 1) கொள்கை சக்தி. 2) பொருளாதார சக்தி. 3) இராணுவ சக்தி,4) அரசியல் சக்தி. இந்த நான்கு சக்திகளும் வரலாற்றில் ஒன்று சேர்ந்து தேசியவாதத்தை உருவாக்கின என்று கூறினார்.கொள்கை சக்தி காரணி 16- வது நூற்றாண்டில் இங்கிலாந்தில் தேசியவாதத்தை உருவாக்கியது.பொருளாதார சக்தி பின்னர் மேற்கு ஐரோப்பா முழுவதும் தேசங்களையும் தேசியவாதங்களையும் உருபவாக்கியது.பின்னர்,இராணுவ சக்தியும் அரசியல் சக்தியும் தேசியவாதத்தையும் வளர்ச்சிப் பெற வைத்தன.
பின் கொள்கை தேசியக் கோட்பாட்டார்களிடையே பல வேறுபாடுகள் உள்ளன. ஆனால் எல்லோரும் நவீன அரசும்,வர்த்தக முதலாளித்துவமும் தேசியவாதத்தை வளர்த்தன என்று கூறுவதில் ஒற்றுமையுடன் உள்ளனர்.
ஈ) சமூகத் தொடர்ப்ய் தேசியவாத கோட்பாடு
காரல் டியூட்ச்,பெனிடிக்ட் ஆண்டர்சன் தகவல் தொடர்பு தேசியவாத கோட்பாட்டை பிரபலப்படுத்தினார்கள். டியூட்ச தேசத்தை இவ்வாறு விளக்கினார். “மற்றவர்களை விட தங்களுடைய குழு உறுப்பினர்களுடன் திறமையாகவும், உணர்வுப் பூர்வமாகும் தகவலை பகிர்ந்து கொள்ளும் மக்கள் குழுவே தேசம்”.அவர் பொருளாதாரம், வரலாறு,மக்கள் தொகையியல் ஆகிய பாடங்களைப் படித்து ஒரு முடிவிற்கு வருகிறார்.தேசம் மற்றும் தேசியவாதம் தோற்றத்தில் தகவல் தொடர்பு தான் பெற்றோராக பங்காற்றியுள்ளது.மக்களிடையே உள்நாட்டு தகவல் தொடர்பு தார்மீக மற்றும் அரசியல் அடையாளத்தை உருவாக்கி தேசியவாதத்தை வளர்த்தது.
பெனிடிக்ட் ஆண்டர்சன் தேசத்தை கற்பனை சமுதாயம் என்றும், தேசியவாதத்தை கற்பனை சமுதாயத்தின் உயிர் சக்தி என்றும் கூரினார்.அவர்’கற்பனை சமூகங்கள்” என்ற நூலை எழுதினார்.தேசம் என்பது மனிதனின் எண்ணத்தில், கற்பனையில் இருக்கின்றது.ஒரு தேசத்தின் உறுப்பினர்கள், எல்லா உறுப்பினர்களுடன் பேசுவதில்லை, பார்ப்பதில்லை.இருந்தபோதிலும் எல்லோரையும் தம்முடைய மக்களாக பார்க்கிறார்கள்.கிரிக்கெட் விளையாடும் போது மைதானத்திலும், தொலைக்காட்சி முன்பும் அமர்ந்திருக்கும் கோடிகணக்கான மக்கள் தங்கள் தேசிய அணி வெற்றி பெற்றால் ஆனந்தம் கொள்கிறார்கள்.தங்கள் தேசிய அணி தோல்வியுற்றால் தாங்களே தோற்றதாக வருத்தப்படுகிறார்கள்.பல நாடுகளில், மறைந்த பெயர் தெரியாத ராணுவ வீரரின் கல்லறைஉள்ளது.இங்கு புதைக்கப்பட்ட வீரரின் பெயர் தெரியாவிட்டாலும் அந்த கல்லறை மீது மக்கள் மரியாதை செலுத்துகிறார்கள்.
கிரிக்கெட் விளையாட்டு பார்வையாளர்கள்
ஆண்டர்சன் முதலாளித்துவமும், அச்சகமும்,தேசியவாதம் தோன்றுவதற்கு முக்கிய பங்கை ஆற்றின என்று கூறினார். அச்சகம் கண்டுபிடிக்கபட்டவுடன் பல ஆயிரக்கணக்கான நூல்கள் ஆங்கிலம்,பிரெஞ்சு,ஜெர்மன் மொழிகளில் அச்சு அடிக்கப்பட்டு விற்கப்பட்டன. இப்புத்தகங்களை மக்கள் திரும்ப திரும்ப படிப்பதால் ஒரே மாதிரியான எண்ணங்கள் மக்கள் மனதில் விதைக்கப்பட்டன.நாம் எல்லாம் ஒரே சமூகம் என்ற உணர்வு பிறந்தது. முதலாளித்துவமும் கற்பனை சமூகத்தை ஊக்கப்படுத்தியது. முதலாளிகள் இலாபத்தை மனதில் வைத்து, நூல்களை அச்சிட்டு அதிகம் விற்பனை செய்தார்கள். ஆகவே அச்சக முதலாளித்துவம் (அச்சகமும் முதலாளித்துவமும்) இணைந்து கற்பனை சமூகத்தை உருவாக்கி தேசியவாதத்தை வளர்த்தன.
“மிகச்சிறிய நாட்டில் கூட ஒருவரைஒருவர் மக்கள் தெரிந்து இருப்பதில்லை, சந்திப்பதில்லை,கேள்விப்படுவதில்லை. இருந்தபொழுதிலும் ஒவ்வொருவருடைய எண்ணத்திலும் சமூகத்தின் நினைவுகள் இருக்கின்றன.சமூகங்களை உண்மை-பொய் என்று வேறுபடுத்த வேண்டியதில்லை.எவ்வாறு மக்கள் எண்ணத்தில்,மனதில் நினைக்கப்பட்டு இருக்கின்றன. என்பதுதான் முக்கியம்.” – பெனடிக்ட் ஆண்டர்சன்
உ) மார்க்சிய தேசியவாத கோட்பாடு
மார்க்சியம் தேசியவாதத்தை முதலாளித்துவத்தின் குழந்தையாக கருதுகின்றது. ஏழைகளை சுரண்டுவதற்காக பணக்காரர்கள் தேசியவாதத்தை உருவாக்கியுள்ளார்கள் என்று இக்கோட்பாடு கூறுகின்றது. முதலாளித்துவ வர்க்கம் தனியார் சொத்துக்களைக் கொண்டுள்ளதோடு ஏழைகளின் உழைப்பை சுரண்டுகிறது. முதலாளித்துவ வர்க்கம் தேசியவாதத்தை தொழிலாளி வர்க்கத்தின் உணர்ச்சிகளை ஊக்கப்படுத்தி தனது சொந்த நலனுக்காக பயன்படுத்தியது. “தேசியவாத உணர்வு சுரண்டலை சட்டப்பூர்வமாக ஆக்குவதற்கும் நீடிக்க வைப்பதற்கும் பணக்காரர்களால் உருவாக்கப்பட்ட உணர்வாகும்”. காரல் மார்க்ஸ் “பட்டாளிகளுக்கு தந்தைநாடு இல்லை” என்று கூறினார். ஆகவே தான் கம்யூனிஸ்ட் மெனிபெஸ்டோ என்ற தனது நூலில் ‘உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள், புரட்சி செய்து புதியதோர் உலகத்தை உருவாக்குங்கள்’ என்று கூறினார். காரல் மார்க்ஸ் தேசியவாதத்தை நிராகரித்தார். சர்வதேசியவாதத்தை ஆதரித்தார்.
மைக்கல் எக்டர், டாம் நரின் ஆகியோரும் தேசியவாதத்தை மார்க்சிய வழியில் ஆய்வு செய்தனர்.
“பாட்டாளிகளுக்கு தந்தைநாடு இல்லை” – கார்ல் மார்க்ஸ்
இந்திய தேசியவாதம்
இந்திய தேசியவாதம் 19-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் பகுதியில் தோன்றியது. மதம், மொழி, பகுதி, இன வேறுபாடுகளை கடந்து இந்தியர்கள் தேசிய உணர்வைப் பெற்றனர். இரண்டு வகையான காரணிகள் இந்திய தேசியவாதத்தை வளர்த்தன. அவைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் காரணிகள் ஆகும்.
உள்நாட்டுக் காரணிகளை பொருத்தமட்டில் பல நூற்றாண்டுகளாக நாம் இந்தியர் என்ற உணர்வு மக்கள் மனதில் மலர்ந்து வந்துள்ளது. அரசியல் பிளவுகளைத் தாண்டி கலாச்சார ரீதியாக மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்துள்ளனர். பண்டைக்காலம் முதலே ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற கருத்து இந்திய பாரம்பரியத்தில் தழைத்து வந்துள்ளது. நவீன இந்திய தேசியவாதம் விதைகள் பல நூற்றாண்டு கால கலாச்சார பூமியில் வளர்ந்து வந்துள்ளது.
வெளிக்காரணிகளைப் பொருத்தமட்டில் ஆங்கிலேய காலனி ஆதிக்கம் தேசியவாதத்தைத் தட்டி எழுப்பியது. முக்கிய காரணிகள் கீழ்க்கண்டவைகளாகும்.
- காலனி ஆதிக்கம், அரசியல், நிர்வாக, பொருளாதார, தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பை இந்தியாவில் உருவாக்கியது. அரசியலிலும், நிர்வாகத்திலும் ஏழுநூறுக்கும் மேற்பட்ட இந்திய அரசுகளை காலனியாதிக்க ஒருங்கிணைத்தது. முன்னர், இந்திய கிராமப் பொருளாதாரத்தைப் பின்பற்றியது. ஆங்கிலேயர் ஆட்சி நவீன பொருளாதாரத்தைப் பின்பற்றியது. ஆங்கிலேயர் ஆட்சி நவீன பொருளாதாரத்தைப் பின்பற்றியது. ஆங்கிலேயர் ஆட்சி நவீன பொருளாதாரத்தைக் கொண்டு வந்து பொருளாதார ரீதியாக இந்தியாவை ஒருங்கிணைத்தது. இரயில்கள், தந்தை, சீரான அஞ்சல் முறை ஆகியவைகளை அறிமுகப்படுத்தி தகவல் தொடர்புத் துறையில் இந்தியாவை ஒருங்கிணைத்தது. ஆகவே தேசியவாதம் வளர்வதற்கான சூழல் தோன்றியது.
- காலனியாதிக்கம் மேற்கத்திய கல்வியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. நாம் நவீன அரசியல் கருத்துக்களான விடுதலை, சமத்துவம், இறையாண்மை போன்ற கருத்துக்களை அறிந்து கொண்டோம். இந்திய தாய்திருநாடு இக்கருத்துக்களை பெறவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
- ஆங்கில மொழி இந்தியாவின் தொடர்பு மொழியாக காலனி ஆதிக்கத்தால் பயன்படுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான மொழிகளை நாம் பேசுவதால் தொடர்பு கொள்வதில் சிரமம் இருந்தது. ஆங்கிலப் பயன்பாட்டால் தேசியவாதிகள் இந்தியா முழுவதையும் ஒருங்கிணைத்து தேசியவாதத்தை வளர்த்தனர்.
- 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் பல்வேறு சமய சமூக சீர்திருத்த இயக்கங்கள் தோன்றின. இராஜா ராம் மோகன்ராயின் ‘பிரம்ம சமாஜமும்’ மகாராஷ்ட்ராவின் “பிரார்த்தனசமாஜமும்” முக்கியமானவைகள் ஆகும். இந்தியாவில் மறுமலர்ச்சி மற்றும் மாற்றங்களை இவைகள் கொண்டுவந்தன. இந்திய சமுகத்தின் தீமைகளான சதி, சாதி முறை மற்றும் தீண்டாமையை இவை எதிர்த்தன. பழங்கால இந்தியாவின் நல்ல தன்மைகளை மீண்டும் தழைக்க இவை வழிவகுத்தன.
- ஆங்கிலேய ஆட்சியாளர்களின் இனவெறியும் இந்திய தேசியவாதத்தை வளர்த்தது. ஆங்கிலேயர்களின் வெள்ளை மனிதனின் கடமை/ சுமை என்ற கருத்து நிறவெறியைக் காட்டியது. வெள்ளையர்கள்தான் இந்த உலகில் வளர்ச்சியிலும் நாகரிகத்திலும் முன்னணியில் உள்ளவர்கள். இந்தியர்களுக்கு நாகரிகத்தை வழங்கவே வெள்ளையர்கள் ஆட்சி நடைபெறுகிறது என்று வெள்ளை மனிதனின் கடமை அல்லது சுமைக் கருத்துக் கூறியது. இதன் மூலம் வெள்ளையர்களின் நிறவெறி இந்தியர்களுக்குப் புரிந்தது. இதை எதிர்த்து இந்திய தேசியவாதம் வளர்ந்தது.
- ஆங்கிலேய கவர்னர் ஜெனரலான லிட்டன் பிரபுவின் தலைக்கன ஆட்சியும் இந்திய தேசியவாதத்தை வளர்த்தது. இவர், இந்திய பத்திரிக்கைகள் மீது தேவையற்ற தடைகளை விதித்தார். இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்குப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஆர்வம் காட்டினார். இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஆர்வம் காட்டினார். இந்தியப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு முட்டுக்கட்டைப் போட்டார் இலட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்தால் வாடியபோதிலும் நிவாரண முயற்சிகளை அவர் மேற்கொள்ளவில்லை. ஆப்கானிஸ்தானுடன் தேவையில்லாமல் போர் தொடுத்ததால், பல ஆயிரக்கணக்கான இந்திய ராணூவ வீரர்கள் மாண்டு போயினர். இக்காரணிகளால் இந்திய தேசியவாதம் வளர்ந்தது.
- ரிப்பன் பிரபு ஒரு தலை சிறந்த ஆங்கிலேய கவர்னர் ஜெனரக் ஆவார். அவரது ஆட்சியில் இல்பர்ட் என்ற ஆட்சிக் குழுவின் சட்ட உறுப்பினர் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தினர். ஐரோப்பியர்கள் சமப்ந்தப்பட்ட வழக்குகளை இந்திய நீதிபதிகள் விசாரிக்கலாம் என்று இம்மசோதா கூறியது. இனவெறி பிடித்த ஐரோப்பியர்கள் இந்திய நீதிபதிகளுக்கு இந்த அதிகாரம் வழங்கப்படக்கூடாது என்று அழுத்தம் கொடுத்தனர். இவர்களின் எதிர்ப்பால் ரிப்பன் பிரபுவும் இந்த மசோதாவை கைவிட்டார். இந்தியத் தலைவர்கள் இப்பிரச்சனையின் மூலம் ஐரோப்பிய இனவெறியை உணர்ந்தனர். மேலும் மக்கள் விரும்பாத அரசாங்கத் திட்டங்களை எதிர்ப்பதன் மூலமும், போராட்டங்கள் மூலமும் திரும்பப் பெற வைக்கலாம் என்ற அரசியல் வித்தையை இந்திய தலைவர்கள் உணர்ந்து கொண்டனர்.
மேற்கண்ட காரணிகலால் 19-ஆம் நூற்றாண்டில் இந்திய தேசியவாதம் வளர்ந்தது.
தேசியத்திற்கு எதிரான சவால்கள்
சமகாலத்தில் தேசியவாதம் பல்வேறு சவால்களை சந்திகின்றது. சில சவால்கள் தேசத்திற்கு உள்ளேயும், சில சவால்கள் தேசத்திற்கு வெளியேயும் தோன்றுகின்றன, செயல்படுகின்றன. இவைகளில் பிரிவினை வாதமும், உலகமயமாதலும் முக்கியமானவைகளாகும்.
‘போக்கிரிகளின் கடைசி புகலிடமே தேசியவாதம்’. –வின்ஸ்டன் சர்ச்சில்
உள்நாட்டுக் காரணிகள்
பிரிவினைவாதம்
தேசியவாதம் மிக முக்கிய எதிரி பிரிவினைவாதம் ஆகும். உள்தேசிய வாதம் என்றும் இது அழைக்கப்படுகிறது. கனடா நாட்டில் குயூபக் போராட்டம், பாகிஸ்தானில் பலுசிஸ்தான் இயக்கம், சீனாவில் உய்கர் இயக்கம் , ஸ்பெயினின் கடலன் இயக்கம் ஆகிய முக்கிய பிரிவின வாத இயக்கங்கள் உலகில் காணப்படுகின்றன.
உய்கர் பிரிவினைவாதம்
சின்ஜியாங் சீனாவின் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் ஆகும். சீன மொழியில் சின்ஜியாங் என்றால் புது எல்லை என்பது பொருளாகும். இங்கு வசிக்கும் பூர்வகுடி மக்கள் உய்கர் மூஸ்லிம்கள் ஆவர். சீன அரசாங்கம் தங்களுக்கு எதிரான அரசியல் பொருளாதார பாகுபாட்டை பின்பற்றுவதாக இம்மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சீன பெரும்பான்மை மக்களான் ஹன்ஸ் இன மக்கள் உய்கர் மாநிலத்தில் குடியேறிவருகின்றனர். பூர்வகுடிகளின் அளவு கூறைந்து வருகின்றது. இம்மாநிலத்தில் மொத்த மக்கள் தொகையில் 6 சதவீதமாக இருந்த ஹன்ஸ் மக்கள் தற்பொழுது 40 சதவீதமாக அதிகரித்துவிட்டனர். மேலும் மத ரீதியாகவும் சீன அரசாங்கம் தங்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று பூர்வகுடி மக்கள் கூறுகின்றனர். தாடி வளர்க்கக்கூடாது. வாகனங்களில் பயணம் செய்யும் [எண்கள் பர்தா அணியக்கூடாது என்று அரசாங்கம் மதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை திணிப்பதாக மக்கள் கூறுகின்றனர். இந்த பிரிவினைவாதத்திற்கு எதிராக சீன அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
வெளிநாட்டுக் காரணிகள்
பல வெளிநாட்டுக் காரணிகளும் தேசியத்திற்கு எதிராக உள்ளன. உலகமயமாக்குதல் ஒரு முக்கிய காரணியாகும். பொருளாதாரம், வர்த்தகம், தொழில் நுட்பம், கலாச்சாரம் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றில் அதிகரித்து வரும் ஒருங்கிணைப்புகளுக்கு உலகமயமாகுதல் என்பது பொருளாகும். உலகமயமாகுதல் நாடுகளுக்கு இடையிலான தடைகளை உடைத்து வருகின்றது. பொருளாதார ரீதியாக, பெரிய தொழில் நிறுவனங்கள் நாடுகளை கடந்து செயல்படுகின்றன, செல்வாக்கைப் பெற்றுள்ளன.
உலகமயமாதல்
உலக வர்த்தக நிறுவனம் உலகமயமாதலை வளர்க்கிறது. ‘தடைகள் இல்லா வர்த்தகம்’ என்பது இதன் இலட்சியமாகும். இது பல்வேறு ஒப்பந்தங்களை 1995 முதல் உருவாக்கி சர்வதேச வர்த்தகத்தில் இருந்த தடைகளை நீக்கியுள்ளது. வர்த்தகத் தடைகள்தான் முன்பு தேசியவாதம் வேர்களாக இருந்தன.
உலகம் முழுவதும் படித்த திறமையான மக்கள் நாடு விட்டு நாடு குடிபெயர்ந்துள்ளனர். முக்கியமாக ஆசிய, ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இந்தியா மற்றும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு பல்லாயிரக்கணக்கான படித்த இளைஞர்கள் குடிபெயர்ந்துள்ளனர்.
சர்வதேச மண்டல அமைப்புகளும் தேசியவாதத்தை பாதித்துள்ளன. ஐரோப்பிய யூனியன் 27 ஐரோப்பிய நாடுகளை ஒன்றிணைத்துள்ளது. இந்த நாடுகளின் தேசியவாத,ம் வலுவிழந்துள்ளது. ஐரோப்பிய கண்டனம் தேசியவாதம் தொட்டில் என்ற நிலையில் இருந்து உலகளாவியத்தின் ஒளிவிளக்கு என்று மாறியுள்லது.
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சியும் தேசியவாதம் பிடிப்பைத் தளர்த்தியுள்ளது. தேசியவாதம் மறைந்து உலக அரசாங்கம் தோன்றுவதற்கு தற்பொழுது வாய்ப்புகள் பெருகியுள்ளது.
தீவிரவாதக் கொள்கைகள் தேசியவாதத்தை பலவீனப்படுத்தியுள்ளன. எடுத்துக்காட்டாக தூய இஸ்லாம் என்ற முழக்கத்துடன் ஈஸ்லாமிய அரசு சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் கலீஃபா முறையை 2014-இல் கொண்டு வந்தது. தேசியவாதத்தை அது நிராகரித்தது. இஸ்லாமிய மக்கள் அனைவரும் கலீஃபா ஆட்சிமுறையில் இருக்க வேண்டும் என்று கூறியது.
சுற்றுச்சூழல் சீர்கேடுகள் தேசியவாதத்தை பாதிக்கின்றன. பருவநிலை மாற்றம், அமில மழை, ஓசோன் அழிதல் போன்ற சீர்கேடுகள் நாடுகளை கடந்து பாதிப்புகளை உருவாக்குகின்றன. உலக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது உலக மக்களின் கடமையாகும். எனவேதான் பல உலக மாநாடுகள் நடத்தப்பட்டன.
தகவல் தொடர்பும், தொழில்நுட்பமும் தேசியவாதத்தைப் பாதித்துள்ளன. வளைதளம், அலைபேசி, சமூக ஊடகங்கள் பல சமயங்களில் தேசியவாதத்தைப் பாதிக்கின்றன, உலகமயமாதலை ஊக்குவிக்கின்றன.
இருந்தபோதிலும் 21-ஆம் நூற்றாண்டிலும் தேசியவாதம் வலுவாக உள்ளது. தேசியவாதம் மறையும் காலம் கண்ணுக்கு எட்டியதூரம் வரையில் இல்லை. சர்வதேச நடவடிக்கைகளை இன்றைக்கும் தேசியமும், தேச நலன்களும் தீர்மானிக்கின்றன. ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறிவதும், பாரிஸ் பருவநிலை (United Nations Framework Conference on Climate Change) ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியதும் இதற்குச் சான்றுகளாகும்.
பாசிசம்
பெனிடோ முசோலினி பாசிசம் என்ற சர்வாதிகார கட்சி, இயக்கம் மற்றும் கொள்கையைத் தோற்றுவித்தார். பாசிசம் மூலம் இத்தாலியை 20 ஆண்டுகளுக்கு மேல் அவர் ஆட்சி செய்தார். இத்தாலி மொழியில் “பாசி” என்றால் தண்டுகளின் மூட்டை என்பது பொருளாகும். அந்நாட்டின் பண்டையகால வரலாற்றில் ரோமானிய ஆட்சியாளர்களின் சின்னமாக “பாசி” இருந்தது. “தண்டுகளின் மூட்டை” ஒற்றுமை மற்றும் வலிமையைக் குறிக்கிறது. முசோலினி தனது தொண்டர்களின் ஊணர்வுகளை தட்டி எழுப்புவதற்காக தனது கட்சிக்கு இந்த பெயரை வைத்தார்.
உலகப்போருக்கு பின் இத்தாலியில் நிலவிய சமூகபொருளாதார பிரச்சினைகள் தான் பாசிசம் தோன்றுவதற்கு முக்கிய காரணங்களாக இருந்தன. முதல் உலகப்போரின் முடிவில் வெற்றி பெற்ற கூட்டணியில் இத்தாலி இருந்தபோதிலும் எந்த வித பலனும் அதற்கு கிட்டவில்லை, ஏமாற்றமே எஞ்சியது. வேலை இல்லாமை, விலை உயர்வு, அரசியல் குழப்பங்கள் மற்றும் பொருளாதாரப் பின்னடைவு ஆகிய பிரச்சனைகளில் இத்தாலி சிக்கி இருந்தது.
இத்தாலியின் எல்லா வகை பிரிவினரும் போரினால் பாதிக்கப்பட்டிருந்தனர். பெனிடோ முசோலினி தனது பேச்சாற்றலால் பாதிக்கப்பட்ட மக்களை பாசிசக் கட்சிக்கு இழுத்தார். அவர் 1922-ஆம் ஆண்டு தலை நகரில் “ரோம் அணிவகுப்பு” என்பதை நடத்தினார். முசோலினியின் செல்வாக்கை கண்டு அஞ்சிய ஆட்சியாளர்கள் தேசிய பாசிச கட்சியிடம் ஆட்சியை ஒப்படைத்தனர்.
அடிப்படை கொள்கைத் தன்மைகள்
பாசிசம் தீவிர தேசியவாதத்தை வலியுறுத்தியது. இத்தாலி தான் உலகில் தலைசிறந்த நாடு என கூறியது. இதர நாடுகள் மற்றும் மக்களிடம் பாசிசம் வெறுப்பைக் காட்டியது. கொள்கையிலும் நடவடிக்கையிலும் பாசிசம் ஏகாதிபத்தியத்தை பின்பற்றியது. அது மேற்கொண்ட காலனியாதிக்க நடவடிக்கைகள் ஆப்பிரிக்காவை பாதித்தன. இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்தன. ஜேவானி ஜேண்டிலா என்ற பாசிச கொள்கைவாதி “பாசிச கொள்கை” (Doctrine of Fascism) என்ற நூலை எழுதினார், பாசிச அரசு என்றால் அதிகாரத்தையும் பேராசையும் விரும்பும் கொள்கை என்று கூறினார். பேரரசுன் என்றால் நிலம், இராணுவம் அல்லது வர்த்தகம் சம்பந்தப்பட்டது அல்ல. அது தார்மீகம் சம்மந்தப்பட்டது. பாசிச பேரரசு உலக நாடுகளை வெல்ல வேண்டும். பாசிச அரசு இத்தாலியின் வரலாற்றில் மூன்றாவது ரோமப் பேரரசு ஆகும். பண்டையகால ரோமானியப் பேரரசு, மறுமலர்ச்சி ரோமானிய ஆதிகம் ஆகியவைகளுக்கு அடுத்தபடியாக பாசிசம் உள்ளது.
பாசிசம் போரையும், போர் குணத்தையும் தீவிரமாக பாராட்டியது. “பெண்ணுக்குத் தாய்மை முக்கியம் ஆணுக்குப் போர் முக்கியம்” என்று முசோலினி கூறினார். பாசிசம் அமைதியை கோழைத்தனம் என்று வர்ணித்தது. பெண்களை ‘தேசத்தின் இனப்பெருக்காளர்கள்’ என்று பாராட்டியது.
பாசிசம் குறைவான அதிகார அரசை நிராகரித்தது. ஆர்வத்துடன் சர்வதிகாரத்தையும் கொடுங்கோல் ஆட்சியையும் ஆதரித்தது. “அரசுக்கு உள்ளே எல்லாம், அரசுக்கு வெளியே எதுவுமில்லை,. அரசுக்கு எதிராக எதுவும் இல்லை” என்பது முசோலினியின் முழக்கமாகும். புதிய சமூகத்தை படைப்பதற்கு அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. குடிமக்களின் சிந்தனை மற்றும் நடவடிக்கைகளை அரசு நிர்ணயித்தது. இத்தாலியை உலக வல்லரசாக மாற்றுவதற்கும் மக்களை தைரியமானவர்களாக ஆக்குவதற்கும் பாசிசம் முயன்றது.
பொதுவுடைமைவாதத்தை ஜென்ம விரோதியாக பாசிசம் ஒடுக்கியது. இத்தாலியின் பொதுவுடைமைவாதத்தின் சிந்தனையாளரான அண்டனியோ கிராம்சி பாசிசத்தால் சிறையில் அடைக்கப்பட்டார். பாசிசம் பொதுவுடைமைவாதத்தின் கட்சி, நூல்கள் ஆகியவற்றைத் தடை செய்தது. பொதுவுடைமைவாத அரசு, சமூக வர்க்கம், புரட்சி போன்ற கருத்துக்களை பாசிசம் நிராகரித்தது. சமூகம் வர்க்கங்களால் பொதுவுடைமைவாதம் கூறியது போல் பிளவுபடவில்லை. சமூகம் ஒற்றுமையாகத்தான் உள்ளது என பாசிசம் கூறியது.
பாசிசன் தொழில்சார் அரசு கோட்பாட்டை ஆதரித்தது. ஒவ்வொரு தொழிலும், வர்த்தகவும், வேலையும் தொழில் சார்ந்த அமைப்பை பெற்றிருக்க வேண்டும். அந்த தொழிலில் ஈடுபட்டுள்ள முதலாளிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சனைகளை அந்தந்ததொழில் அமைப்புகள் தீர்க்க வேண்டும், தேசத்தின் நலன்களுக்கும், நோக்கங்களுக்கும் எல்லோரும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். தொழிலாளர்கள் வேலை புறக்கணிப்பில் ஈடுபடக்கூடாது. பாசிச அரசு தொழிலாளர்களுக்கான ஊதியத்தை மிகவும் குறைவாக நிர்ணயித்தது. தொழில்சார் நிறுவனங்கள் ஊழல் மற்றும் திறமையின்மையால் பாதிக்கப்பட்டன. பாசிச பொருளாதாரத்தின் முதுகெலும்பான தொழில்சார் அரசு தொழிலாளர்களின் உரிமைகளை மிதித்தது.
விமர்சனம்
பாசிசம் மனித வரலாற்றில் வந்த மிக மோசமான சர்வாதிகாரம் ஆகும். அது சர்ந்தர்ப்பவாதத்தை பின்பற்றியது. அறிவு ரீதியாக நேர்மை இல்லாமல் இருந்தது. பாசிசமும், நாசிசமும் மனித குலத்தின் மீது அளவற்ற அழிவை இரண்டாம் உலகப் போரில் திணித்தன. நாசிசத்தை விட பாசிசம் கொள்கை ரீதியாக வலுவாக இருந்ததால் 21-ஆம் நூற்றாண்டிலும் கொடுங்கோல் ஆட்சியாளர்களையும் அரசுகளையும் விமர்சிப்பதற்கு பாசிசம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
- பாசிச கொள்கை, மக்களாட்சி, சமதர்மவாதம் மற்றும் பொதுவுடைமைவாதத்திற்கு எதிராக தோன்றியது. மக்களாட்சியும், சமதர்மவாதமும் நவீன காலத்தின் முற்போக்கு சிந்தனையை பிரதிபலித்தன. பாசிசம் இதற்கு எதிராக செயல்பட்டது.
- பாசிசம் தொழில்சார் அரசு கொள்கை என்று அழைக்கப்பட வேண்டும். தொழில் நிறுவனங்களும் அரசின் அதிகாரமும் பாசிசத்தில் இணைந்துள்ளன.
- பெனிடோ முசோலினி
நாசிசம்
அடால்ஃப் ஹிட்லர் நாசிசம் என்ற சர்வாதிகார கொள்கையைத் தோற்றுவித்தார். ஜெர்மனி நாட்டை இரண்டு உலகப் போர்களுக்கு இடையில் நாசிசம் மூலமாக ஹிட்லர் ஆட்சி செய்தார். நாசிக் கட்சியின் அதிகாரப் பூர்வ பெயர் ‘தேசிய சமதர்ம ஜெர்மானிய தொழிலாளர்கள் கட்சி” என்பதாகும். 1920ஆம் ஆண்டு தீவிர 25 அம்சத் திட்டத்தின் மூலமாக நாடி கட்சியை ஹிட்லர் தோற்றுவித்தார். பெரிய தொழிற்சாலைகளை தேசியமயமக்குதல், போர்க்கால இலாபங்களைப் பறித்தல், கந்துவட்டியிலிருந்து மக்களை விடுவித்தல் போன்ற திட்டங்களை நாசிசக்கட்சி ஆதரித்தது. தனது பேச்சாற்றல் மூலம் ஜெர்மனியின் அனைத்து வகுப்பினரையும் நாசிக்கொள்கைகளுக்கு ஹிட்லர் கவர்ந்திழுத்தார். ‘ஒவ்வொரு வயிறுக்கும் உணவு, ஒவ்வொரு உடலுக்கும் ஆடை, ஒவ்வொரு கைக்கும் வேலை, எல்லோருக்கும் எல்லாம்’ என்பது ஹிட்லரின் அணுகுமுறையாக இருந்தது. இரத்தம் சிந்தாமல் அரசியல் சாசன, நாடாளுமன்ற வழிமுறைகளைத் தந்திரமாகப் பயன்படுத்தி 1933-ஆம் ஆண்டு ஹிட்லர் பதவிக்கு வந்தார்.
தோற்றத்தின் காரணம்
ஜெர்மனியில் நாசிசத்தின் தோற்றத்திற்கு முக்கிய காரணமாக முதலாம் உலகப் போருக்குப் பின் பாரிஸ் நகரத்தில் கையெழுத்திடப்பட்ட ‘1919 வெர்செயில்ஸ் ஒப்பந்தம்’ இருந்தது. ஹிட்லர் ஜெர்மனிக்கு இழைக்கப்பட்ட அரசியல், பொருளாதார இராணுவ அவமானங்களை உணர்ச்சிப் பூர்வமாகப் பேசி மக்களைக் கவர்ந்தார். அவர் எழுதிய புத்தகத்தின் பெயர் ‘எனது போராட்டம்’ (மெயின் கேம்ப்) ஆகும்.
அடிப்படைத் தன்மைகள்
நாசிசம் கொடுங்கோல் ஆட்சியை ஆதரித்தது. ஜெர்மானிய சிந்தனையாளரான பிரெட்ரிக் ஹெகல் என்பவர் உருவாக்கிய முழக்கமான ‘அரசு பூமியில் கடவுளின் அணிவகுப்பு’ என்பது நாசிசத்தின் ஆணிவேராக இருந்தது. அரசிற்கு மக்கள் முழுமையாக அடிபணிய வேண்டும் என்றும் நாசிசம் வலியுறுத்தியது.
நாசிசம் போர்க்குணமுள்ள கொள்கையாகும். ஹிட்லர் ‘போர் நிரந்தரமானது, போர் உலகளாவியலானது, போர்தான் வாழ்க்கை, போர்தான் எல்லாவற்றின் தொடக்கம்’ என்று சூளுரைத்தார். நாசிசத்தின் இந்த போர்க்குணம் இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்தது.
நாசிசத்தின் மிக முக்கியமான பிரச்சனைக்குரிய நம்பிக்கை அதனுடைய இனவெறிக்கொள்கையாகும்,. அது ஆரிய இன மேன்மையையும் தூய்மையையும் வலியுறுத்தியது. ஆரிய இனத்தை உலகின் முதல் இனமாக, மனித குலத்தின் முதலாளியாக அது கருதியது. ஜெர்மனிக்கு அருகில் வசிக்கக்கூடிய ஸ்லாவ் மற்றும் யூத இனங்களை அது வெறுத்தது. ஆரிய இனத்தின் தூய்மையைக் காப்பாற்றுவதற்காக 1934-ஆம் ஆண்டு நுரம்பர்க் சட்டங்களை நாசிசம் தோற்றுவித்தது. ஆரிய மக்களுக்கும் இதர இன மக்களுக்கும் இடையிலான திருமணங்களை அது தடை செய்தது.
நாசிசம் யூதர்களுக்கு எதிரான வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. ஜெர்மானிய தேசத்தின் தோல்விக்கு யூதர்கள்தான் காரணம் என்று நாசிசம் கூறியது. ஜெர்மானிய மக்களின் குருதியை உறிஞ்சி யூதர்கள் வாழ்வதாக அவர்களை வெறுத்தது. சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட்டு இலட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டனர். இதனை யூதர்களின் பேரழிவு என்று யூதமக்கள் அனுசரிக்கிறார்கள்.
நாசிசம் ஜெர்மனியின் எல்லைகளை பரப்ப விரும்பியது. இதர நாடுகளை ஜெர்மனியின் காலனிகளாக அடிமையாக்க முயற்சித்தது. ஜெர்மனியின் மக்களை காலனி நாடுகளில் குடியேற்ற முயற்சித்தது. இங்கிலாந்தை விட மிகப்பெரிய காலனியாதிக்க சக்தியாக ஜெர்மனி வரவேண்டுமென்று நாசிசம் முயன்றது. நாசிசம் இதர கொள்கைகளான பொதுவுடைமைவாதம் , தாராளவாதம், மற்றும் சர்வதேசவாதம் ஆகியவற்றை வெறுத்தது. இவைகளைப் பின்பற்றும் சோவியத் யூனியன், அமெரிக்கா மற்றும் பிறதேசங்களையும் அது எதிர்த்தது.
நாசிசம் நாயகன் வழிபாட்டை ஆதரித்தது. ‘ஹிட்லர்தான் ஜெர்மனி, ஜெர்மனிதான் ஹிட்லர்’ என்ற கருத்தை மக்களிடையே திணித்தது. மக்கள் அனைவரும் சமம் என்ற கருத்தை அது நிராகரித்தது. ஹிட்லர் ஜெர்மானிய மொழியில் Fuegrer, அதாவது தலைவர் என அழைக்கப்பட்டார். ஜெர்மனி நாடே தலைவர் நாடு என்று அழைக்கப்பட்டது.
நாசிசம் பகுத்தறிவுவாதத்தை கடுமையாக எதிர்த்தது. மக்களுடைய உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தது. ஒரு கட்சி ஆட்சிமுறையை அது ஆதரித்தது. நாசி கட்சியைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் ஒடுக்கப்பட்டன. நாசிச கட்சியின் அமைப்பு படிநிலைக் கோட்பாட்டின் படி உருவாக்கப்பட்டது. கட்சியின் அதிகாரங்கள் அனைத்தும் ஹிட்லரிடமே குவிக்கப்பட்டன.
சுருக்கமாகக் கூறின், நாசிசம் சர்வாதிகார , இனவாத, பகுத்தறிவிற்கு எதிரான கொள்கையாகும். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்வியும் ஹிட்லரின் தற்கொலையும் , நாசிச கொள்கையையும் கட்சியையும் கலைத்தன. இரண்டாம் உலக போருக்குப் பின் மக்களாட்சியும் கட்சிப் போட்டிகள் முறையும் ஜெர்மனியில் வேரூன்றியதால் நாசிசம் மீண்டும் வளரவில்லை.