Book Back QuestionsTnpsc

அணு அமைப்பு Book Back Questions 8th Science Lesson 12

8th Science Lesson 12

12] அணு அமைப்பு

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

ஜான் டால்டன் ஒரு ஏழ்மையான நெசவுக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் தனது 12ஆவது வயதில் ஒரு கிராமத்துப் பள்ளியில் ஆசிரியராகப் பணியேற்றார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரானார். பின் 1973ல் அவர் மான்செஸ்டரில் உள்ள ஒரு கல்லூரியில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களைக் கற்பிக்கும் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அவரது இறுதிக்காலம் வரை வளிமண்டல அழுத்தம் மற்றும் மழையளவினைப் பதிவு செய்வதைத் தனது வழக்கமாகக் பொண்டிருந்தார். அவர் ஒரு சிறந்த வானியல் ஆராய்ச்சியாளராக இருந்தார்.

காற்று மின்கடத்தாப் பொருளாக இருப்பது இயற்கையின் வரமாகும். ஒரு வேளை காற்று ஒரு சிறந்த மின் கடத்தியாக இருக்குமானால், எதிர்பாராத விபத்தினால் உருவாகும் சிறு மின்பொறி கூட மிகப்பெரிய ஆபத்தினை விளைவிக்கக்கூடும்

மின்சாரம் காற்றின் வழியே பாயும் போது வாயு மூலக்கூறுகளிலிருந்து எலக்ட்ரான்கள் வெளியேறுவதால் அயனிகள் உருவாகின்றன. இதுவே மின்னிறக்கம் எனப்படும்

தொலைக்காட்சிப் பெட்டியில் கேதோடு கதிர்கள் மின்காந்த சுருள்களால் உருவாக்கப்படும் காந்தப்புலத்தால் விலகலடைந்து அதன் முகப்புத் திரையில் வீழ்த்தப்படுகின்றன. இவை ஒளிப்படத்தை உருவாக்குகின்றன.

ஹைட்ரஜன் வாயுவை மின்னிறக்கக் குழாயினுள் எழுத்துக் கொள்ளும் போது பெறப்படும் நேர் மின் துகள்கள் புரோட்டான்கள் எனப்படுகின்றன. ஒரு ஹைட்ரஜன் அணுவிலிருந்து ஒரு எலக்ட்ரானை நீக்கும் போது ஒரு புரோட்டான் கிடைக்கிறது. எனவே புரோட்டான் என்பதை ஹைட்ரஜன் அயனி (H+) எனவும் அழைக்கலாம். H 🡪 H+ + e

கண்ணிற்குப் புலப்படாத கதிர்கள் துத்தநாக சல்பைடு பூசப்பட்ட திரையில் விழும் போது கண்ணிற்குப் புலப்படும் ஒளியை உமிழ்கின்றன. இப்பொருள்கள் ஒளிரும் பொருள்கள் எனப்படுகின்றன.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. கேதோடு கதிர்கள் ____________ஆல் உருவாக்கப்பட்டவை

அ) மின்சுமையற்ற துகள்கள்

ஆ) நேர்மின்சுமை பெற்ற துகள்கள்

இ) எதிர்மின் சுமை பெற்ற துகள்கள்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

2. கார்பன் டை ஆக்சைடு எம்முறையில் தயாரிக்கப்பட்டாலும் அதில் கார்பன் மற்றும் ஆக்சிஜனின் நிறைவிகிதம் மாறாதிருப்பது _________ விதியை நிரூபிக்கிறது.

அ) தலைகீழ் விகித விதி

ஆ) மாறா விகித விதி

இ) பெருக்கல் விதி

ஈ) பொருண்மை அழியா விதி

3. நீரில், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை _______ நிறை விகிதத்தில் இணைந்துள்ளன.

அ) 1 : 8

ஆ) 8 : 1

இ) 2 : 3

ஈ) 1 : 3

4. டால்டனின் கூற்றுக்களுள் எந்தக் கூற்று மாற்றம் அடையாமல் உள்ளது?

அ) அணுவைப் பிளக்க முடியாது

ஆ) அணுக்கள் முழு எண்களின் விகிதத்தில் ஒன்று கூடி சேர்மங்கள் உருவாகின்றன.

இ) தனிமங்கள் அணுக்களால் ஆனவை.

ஈ) ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும் ஒரே மாதிரியானவை

5. ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும்

அ) ஒரே அணு எண்ணையும், நிறை எண்ணையும் பெற்றுள்ளன.

ஆ) ஒரே நிறை எண்ணையும் வேறுபட்ட அணு எண்ணையும் கொண்டுள்ளன

இ) ஒரே அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்டுள்ளன.

ஈ) அணு எண் மற்றும் நிறை எண் ஆகிய இரண்டும் வேறுபடுகின்றன.

II.கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ____________ என்பது ஒரு தனிமத்தின் மிகச்சிறிய துகள்.

2. ஒரு தனிமமானது ____________ மாதிரியான அணுக்களால் உருவாக்கப்பட்டது

3. ஒரு அணுவானது ___________, ________ மற்றும் ___________ ஆகிய துகள்களால் ஆனது

4. எதிர் மின் சுமை கொண்ட அயனி ___________ எனப்படும், நேர் மின்சுமை கொண்ட அயனி ________ எனப்படும்.

5. _____________ (எலக்ட்ரான்/புரோட்டான்) ஒரு எதிர் மின்சுமை கொண்ட துகள்.

6. புரோட்டான்கள் ________ (நேர்/எதிர்) மின்சுமை கொண்ட தகட்டை நோக்கி விலக்கமடைகின்றன.

III.பொருத்துக:

1. பொருண்மை அழியாவிதி – அ. சர் வில்லியம் குரூக்ஸ்

2. மாறா விகித விதி – ஆ. ஜேம்ஸ் சாட்விக்

3. கேதோடு கதிர்கள் – இ. ஜோசப் ப்ரௌஸ்ட்

4. ஆனோடு கதிர்கள் – ஈ. லவாய்சியர்

5. நியூட்ரான் – உ. கோல்ட்ஸ்டீன்

விடைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. எதிர்மின்சுமை பெற்ற துகள்கள், 2. மாறா விகித விதி, 3. 1 : 8, 4. ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும் ஒரே மாதிரியானவை, 5. ஒரே அணு எண்ணையும், நிறை எண்ணையும் பெற்றுள்ளன.

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. அணு, 2. ஒரே மாதிரியான, 3. எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான், 4. எதிர் அயனி, நேர் அயனி, 5. எலக்ட்ரான், 6. நேர்

III. பொருத்துக:

1. ஈ, 2. இ, 3. அ, 4. உ, 5. ஆ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!