விசையும் அழுத்தமும் Book Back Questions 8th Science Lesson 2
8th Science Lesson 2
2] விசையும் அழுத்தமும்
Book Back Questions with Answer and Do You Know Box Content
I. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக
1. ஒரு பொருள் இயங்கும் திசைக்கு எதிரான திசையில் விசையைச் செலுத்தினால் அப்பொருளின் இயக்கமானது
அ) நின்று விடும்
ஆ) அதிக வேகத்தில் இயங்கும்
இ) குறைந்த வேகத்தில் இயங்கும்
ஈ) வேறு திசையில் இயங்கும்.
2. திரவத்தினால் பெறப்படும் அழுத்தம் எதனால் அதிகரிக்கிறது?
அ) திரவத்தின் அடர்த்தி
ஆ) திரவத்தம்ப உயரம்
இ) அ மற்றும் ஆ
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை.
3. அழுத்தத்தின் அலகு
அ) பாஸ்கல்
ஆ) Nm-2
இ) பாய்ஸ்
ஈ) அ மற்றும் ஆ
4. கடல் மட்டத்தில் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு
அ) 76 செ.மீ பாதரசத் தம்பம்
ஆ) 760 செ.மீ பாதரசத் தம்பம்
இ) 176 செ.மீ பாதரசத் தம்பம்
ஈ) 7.6 செ.மீ பாதரசத் தம்பம்
5. பாஸ்கல் விதி இதில் பயன்படுகிறது.
அ) நீரியல் உயர்த்தி
ஆ) தடை செலுத்தி (பிரேக்)
இ) அழுத்தப்பட்ட பொதி
ஈ) மேற்கண்ட அனைத்தும்
6. கீழ்க்காணும் திரவங்களுள் எது அதிக பாகுநிலை உடையது?
அ) கிரீஸ்
ஆ) நீர்
இ) தேங்காய் எண்ணெய்
ஈ) நெய்
7. பாகுநிலையின் அலகு
அ) Nm2
ஆ) பாய்ஸ்
இ) kgms-1
ஈ) அலகு இல்லை
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. ஆழம் அதிகரிக்கும்போது திரவ அழுத்தம் ________
2. நீரியல் உயர்த்தி ____________ விதியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.
3. தாவரங்களில் நீர் மேலே ஏறுவதற்குக் காரணம் ________ என்ற திரவப் பண்பே ஆகும்.
4. எளிய பாதரசமானி முதன்முதலில் ________ என்பவரால் உருவாக்கப்பட்டது.
III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:
1. கொடுக்கப்பட்ட பரப்பின் மீது செயல்படும் விசை அழுத்தம் எனப்படும்.
2. இயங்கும் பொருள் உராய்வின் காரணமாக ஓய்வு நிலைக்கு வருகிறது.
3. ஒரு பொருளின் எடை மிதப்பு விசையை விட அதிகமாக இருந்தால் அப்பொருள் மூழ்கும்.
4. ஒரு வளிமண்டல அழுத்தம் என்பது ஒரு சதுர மீட்டர் பரப்பின் மீது செயல்படும் 100000 நியூட்டன் விசைக்குச் சமம்.
5. உருளும் உராய்வு நழுவு உராய்வை விட சற்று அதிகமாக இருக்கும்.
6. ஆற்றல் இழப்பிற்கு உராய்வு மட்டுமே காரணம்.
7. ஆழம் குறையும்போது திரவ அழுத்தம் குறையும்.
8. பாகுநிலை திரவத்தின் அழுத்தத்தைச் சார்ந்தது.
IV. பொருத்துக:
அ.
1. நிலை உராய்வு – பாகுநிலை
2. இயக்க உராய்வு – குறைந்த உராய்வு
3. உருளும் உராய்வு – பொருள்கள் இயக்கத்தில் உள்ளன
4. திரவ அடுக்குகளுக்கு இடையேயான உராய்வு – பொருள்கள் நழுவுகின்றன
5. நழுவு உராய்வு – பொருள்கள் ஓய்வு நிலையில் உள்ளன
ஆ.
1. பாதரசமானி – உராய்வை நீக்கும்
2. தொடு பரப்பை அதிகரித்தல் – வளிமண்டல அழுத்தம்
3. தொடு பரப்பைக் குறைத்தல் – உராய்விற்கான காரணம்
4. உயவுப் பொருள்கள் – உராய்வை அதிகரிக்கும்
5. ஒழுங்கற்ற பரப்பு – உராய்வைக் குறைக்கும்
V. ஓப்பிட்டு விடை தருக:
1. நூலில் போடப்பட்டுள்ள முடிச்சு : நிலை உராய்வு :: பந்து தாங்கிகள் : _____________ உராய்வு.
2. கீழ்நோக்கிய விசை : எடை :: திரவங்களால் தரப்படும் மேல்நோக்கிய விசை : _________
VI. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:
1. கூற்று : கூர்மையான கத்தி காய்கறிகளை வெட்டப் பயன்படுகிறது.
காரணம் : கூர்மையான முனைகள் அதிக அழுத்தத்தைத் தருகின்றன.
அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
இ. கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
2. கூற்று : தோள் பைகளில் அகலமான பட்டைகள் அமைக்கப்படுகின்றன.
காரணம் : அகலான பட்டைகள் நீண்ட நாள் உழைக்கும்.
அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
இ. கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
3. கூற்று : நீர்ச் சிலந்தி தண்ணீரின் மேற்பரப்பில் எளிதாக நகர்ந்து செல்கிறது.
காரணம் : நீர்ச் சிலந்தி குறைவான மிதப்பு விசையை உணர்கிறது.
அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
இ. கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடைகள்:
I. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக
1. நின்று விடும், 2. அ மற்றும் ஆ, 3. அ மற்றும் ஆ, 4. 76 செ.மீ பாதரசத் தம்பம்
5. மேற்கண்ட அனைத்தும், 6. கிரீஸ், 7. பாய்ஸ்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. அதிகரிக்கும், 2. பாஸ்கல், 3. பரப்பு இழுவிசை, 4. டாரிசெல்லி
III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:
1. சரி, 2. சரி, 3. சரி, 4. சரி, 5. குறைவாக, 6. சரி, 7. சரி, 8. வெப்பநிலையை
IV. பொருத்துக:
1. உ, 2. இ, 3. ஆ, 4. அ, 5. ஈ
1. ஆ, 2. ஈ, 3. உ, 4. அ, 5. இ
V. ஓப்பிட்டு விடை தருக:
1. உருளும், 2. மிதப்பு விசை
VI. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:
1. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
2. கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
3. கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.