வானிலை மற்றும் காலநிலை Book Back Questions 8th Social Science Lesson 10
8th Social Science Lesson 10
10] வானிலை மற்றும் காலநிலை
Book Back Questions with Answer and Do You Know Box Content
உங்களுக்குத் தெரியுமா?
புவியின் வளி மண்டலமானது வாயுக்களால் ஆன பல அடுக்குகளைக் கொண்டதாகும். இது புவியைச் சூழ்ந்துள்ளது. புவியின் ஈர்ப்பு விசையினால் வாயுக்களைப் புவியில் தக்க வைத்துக் கொள்கிறது. இதில் 78% நைட்ரஜனும், 21% ஆக்ஸிஜனும், 0. 97% ஆர்கானும், 0. 03% கார்பன் டை ஆக்ஸைடும் 0. 04% மற்ற வாயுக்களும் மற்றும் நீராவியும் உள்ளன.
“Climate” என்ற சொல் கிளைமா என்ற பண்டைய கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டதாகும். கிளைமோ “Klimo” என்றால் தமிழில் சாய்வு கோணம் (Inclination) என்று பொருள்.
வளியியல் என்பது வானிலையின் அறிவியல் பிரிவாகும். கால நிலையியல் என்பது காலநிலையின் அறிவியல் பிரிவாகும்.
வெப்பநிலை செங்குத்தாகவும் கிடைமட்டமாகவும் வேறுபடுகிறது. வெப்பம் மாறும் மண்டலத்தில், வெப்ப நிலையானது 1000 மீட்டர் உயரத்திற்கு 6. 5oC என்ற அளவில் வெப்பநிலை குறைந்து கொண்டே செல்கிறது. இதனை வெப்ப குறைவு வீதம் என்று அழைப்பர்.
நிலவரைபடங்களில் வானிலைக் கூறுகளின் பரவலைச் சம அளவுக் கோட்டு வரைபடம் மூலம் காண்பிக்கப்படுகிறது. சம அளவுக் கோடு என்பது சம அளவுள்ள இடங்களை இணைப்பதாகும். இக்கோடுகள் வானிலைக் கூறுகளின் அடிப்படையைக் கொண்டு அளவுக்கோடுகள் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
ஐசோதெர்ம் (Isotherm) | சமவெப்பக் கோடு |
ஐசோக்ரைம் (Isocryme) | சராசரி சமவெப்பநிலைக்கோடு |
ஐசோகெல் (Isohel) | சம சூரிய வெளிச்சக் கோடு |
ஐசெல்லோபார் (Isollobar) | சம காற்றழுத்த மாறுபாட்டுக் கோடு |
ஐசோபார் (Isobar) | சம காற்றழுத்தக் கோடு |
ஐசோஹைட்ஸ் (Isohytes) | சம மழையளவுக் கோடு |
அதிக பட்ச வெப்ப நிலை/குறைவான வெப்ப நிலை: புவியில் இதுவரை பதிவான மிக அதிக பட்ச வெப்ப நிலை 56. 7oC (134oF). இது 1913ஆம் ஆண்டு ஜீலை 10ஆம் நாள் அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியாவிலுள்ள கிரீன்லாந்து மலைத்தொடர் (மரணப் பள்ளத்தாக்கு) என்ற இடத்தில் பதிவாகியுள்ளது. இதுவரை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை (-89. 2oC) (-128. 6oF 184. 0K). இது 1983ஆம் ஆண்டு ஜீலை 21ஆம் நாள் அண்டார்டிக்காவில் உள்ள சோவியத் வோஸ்டக் நிலையத்தில் பதிவாகியுள்ளது.
உலகில் இதுவரை பதிவான மிக அதிக பட்ச அழுத்தம் 1083 mb, 1968ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி ரஷ்யாவில் உள்ள “அகாட்” என்ற இடத்தில் கடல் மட்டத்தில் பதிவானது. உலகில் இதுவரை பதிவான மிகக் குறைந்த அழுத்தம் 870 mb 1929 டிசம்பர் 12ஆம் தேதி பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா தீவிற்கு அருகில் உள்ள “குவாம்” என்ற கடல் பகுதியில் உருவான டைபூனின் கண் பகுதியில் பதிவானதாகும்.
நமது காதுகள் ஏன் உயரே செல்லும் போது அடைத்துக் கொள்கின்றன? நாம் விமானத்தில் மேலே செல்லும் பொழுது வளிமண்டல அழுத்தமானது நம்முடைய காதுகளில் உள்ள காற்றின் அழுத்தத்தை விட குறைவாக உள்ளது. ஆதலால் காதுகள் இவ்விரண்டையும் சமப்படுத்தும் பொழுது அடைத்துக் கொள்கின்றன. இந்நிகழ்வு விமானத்தில் இருந்து கீழே இறங்கும் பொழுதும் நிகழ்கின்றன.
உலகிலேயே முதன் முதலாக காலநிலை வரைபடங்களின் தொகுப்பைத் அல்-பலாஹி, என்ற அரேபிய நாட்டு புவியியல் வல்லுநர் அரேபியா நாட்டு பயணிகளிடமிருந்து காலநிலைப் பற்றிய விவரங்களைச் சேகரித்து வெளியிட்டார்.
காற்றின் அழுத்தம் குறைவதனால் காற்றில் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜனின் அளவும் குறைகிறது. மிக உயரமான இடங்களில் காற்றில் ஆக்ஸிஜனின் அளவும் காற்றின் அழுத்தமும் மிகவும் குறைவாக உள்ளது (அதனால் மனிதர்கள் அங்கு இறக்கக் கூடும்). மலையேறுபவர்கள் உயர்ந்த சிகரங்களில் ஏறும்பொழுது ஆக்ஸிஜனை உருளையில் அடைத்து எடுத்துச் செல்கின்றனர். அவர்கள் சிறிது கால அவகாசம் எடுத்துக் கொண்டு அதிக உயரங்களுக்குத் தம்மை பழக்கப் படுத்திக் கொள்கின்றனர். ஏனெனில் அழுத்தம் அதிகமான இடங்களிலிருந்து செல்லும் பொழுது மூச்சுத் திணறல் ஏற்படும். விமானங்களில் செயற்கை அழுத்தத்தை உருவாக்கி பயணிகளை வசதியாக சுவாசிக்கும் படி அமைத்துள்ளனர்.
பிரேசிலின் பெரும் பகுதியில் காற்றின் வேகம் குறைவாக உள்ளது. ஆப்பிரிக்காவின் காபான், காங்கோ மற்றும் DR காங்கோ, சுமத்ரா, இந்தோனேசியா மலேசியா ஆகியவை பூமியில் குறைந்த காற்று வீசும் பகுதியாகும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
1. புவியின் வளிமண்டலம் ___________ நைட்ரஜன் மற்றும் ___________ ஆக்சிஜன் அளவைக் கொண்டுள்ளது.
(அ) 78% மற்றும் 21%
(ஆ) 22% மற்றும் 1%
(இ) 21% மற்றும் 0. 97%
(ஈ) 10% மற்றும் 20%`
2. __________ ஒரு பகுதியின் சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.
(அ) புவி
(ஆ) வளிமண்டலம்
(இ) காலநிலை
(ஈ) சூரியன்
3. புவி பெறும் ஆற்றல் ___________
(அ) நீரோட்டம்
(ஆ) மின்காந்த அலைகள்
(இ) அலைகள்
(ஈ) வெப்பம்
4. கீழ்க்கண்டவற்றில் எவை சம அளவு மழை உள்ள இடங்களை இணைக்கும் கோடு ஆகும்.
(அ) சமவெப்பக் கோடு
(ஆ) சம சூரிய வெளிச்சக் கோடு
(இ) சம காற்றழுத்தக் கோடு
(ஈ) சம மழையளவுக்கோடு
5. __________ என்ற கருவி ஈரப்பதத்தை அளக்கப் பயன்படுகிறது.
(அ) காற்றுமானி
(ஆ) அழுத்த மானி
(இ) ஈரநிலை மானி
(ஈ) வெப்ப மானி
கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. ____________ என்பது குறுகிய காலத்தில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கூறுவது ஆகும்.
2. வானிலையைப் பற்றிய அறிவியல் ஆய்வு ____________
3. புவியில் அதிக பட்ச வெப்பம் பதிவான இடம் ____________
4. காற்றில் உள்ள அதிக பட்ச நீராவிக் கொள்ளளவுக்கும் உண்மையான நீராவி அளவிற்கும் உள்ள விகிதாச்சாரம் _____________
5. அனிமா மீட்டர் மற்றும் காற்றுமானி மூலம் ___________ மற்றும் ____________ ஆகியவை அளக்கப்படுகின்றன.
6. சம அளவுள்ள வெப்ப நிலையை இணைக்கும் கற்பனைக் கோடு ___________
பொருத்துக:
1. காலநிலை – புயலின் அமைவிடத்தையும் அது நகரும் திசையையும் அறிந்து கொள்வது
2. ஐசோநிப் – சூறாவளி
3. ஈரநிலைமானி – சம அளவுள்ள பனிபொழிவு
4. ரேடார் – நீண்ட நாளைய மாற்றங்கள்
5. குறைந்த அழுத்தம் (தாழ்வு அழுத்த மண்டலம்) – ஈரப்பதம்
சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:
1. புவியைச் சுற்றியுள்ள வளிமண்டலம் பல்வேறு வாயுக்களால் ஆன கலவையாகும்.
2. வானிலை பற்றிய அறிவியல் பிரிவிற்கு காலநிலை என்று பெயர்.
3. சமமான சூரிய வெளிச்சம் உள்ள பகுதிகளை இணைக்கும் கோட்டிற்கு சம சூரிய வெளிச்சம் கோடு என்று பெயர்.
4. ஈரப்பதத்தை கணக்கிடும் கருவி அரனிராய்டு அழுத்த மானி.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)
1. (21% மற்றும் 78%) 2. காலநிலை 3. வெப்பம் 4. சம மழையளவுக் கோடு 5. ஈரநிலை மானி
கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)
1. வானிலை 2. வானியியல் 3. கிரீன்லாந்து 4. ஒப்பு ஈரப்பதம்
5. காற்றின் வேகம், காற்றின் திசை 6. சமவெப்பக்கோடு
பொருத்துக: (விடைகள்)
1. காலநிலை – நீண்ட நாளைய மாற்றங்கள்
2. ஐசோநிப் – சம அளவுள்ள பனிபொழிவு
3. ஈரநிலைமானி – ஈரப்பதம்
4. ரேடார் – புயலின் அமைவிடத்தையும் அது நகரும் திசையையும் அறிந்து கொள்வது
5. குறைந்த அழுத்தம்- சூறாவளி
சரியா தவறா எனக் குறிப்பிடுக: (விடைகள்)
1. சரி
2. தவறு
சரியான விடை: வானிலை பற்றிய அறிவியல் பிரிவிற்கு வானியியல் என்று பெயர்.
3. சரி
4. தவறு
சரியான விடை: ஈரப்பதத்தை கணக்கிடும் கருவி ஹைக்ரோமீட்டர் ஆகும்