வரலாறு என்றால் என்ன? Book Back Questions 6th Social Science Lesson 1
6th Social Science Lesson 1
1] வரலாறு என்றால் என்ன?
Book Back Questions with Answer and Do You Know Box Content
உங்களுக்குத் தெரியுமா?
வரலாறு என்பது கடந்த கால நிகழ்வுகளின் காலவரிசைப் பதிவு.
வரலாறு என்ற சொல் கிரேக்கச் சொல்லான “இஸ்டோரியா” (Istoria) என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் “விசாரிப்பதன் மூலம் கற்றல்” என்பதாகும்.
நாணயவியல் – நாணயங்கள் பற்றிய படிப்பு, கல்வெட்டியல் – எழுத்துப்பொறிப்புகள் பற்றிய படிப்பு
வலிமைமிக்க பேரரசர் அசோகர்: பண்டைய இந்திய அரசர்களில் பேரும் புகழும் பெற்ற அரசர் அசோகர் ஆவார். இவரது ஆட்சியில் தான் புத்த மதம் ஆசியாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பரவியது. கலிங்கப் போருக்குப் பின் பல உயிர்கள் மடிவதைக் கண்டு வருந்தி, போர் தொடுப்பதைக் கைவிட்டார். அதற்குப் பிறகு புத்த சமயத்தைத் தழுவி, அமைதியையும் அறத்தையும் பரப்புவதற்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்தார். பொதுமக்களுக்கு அவர் ஆற்றிய சேவை முன் மாதிரியாக விளங்கியது.
வெற்றிக்குப் பின் போரைத் துறந்த முதல் அரசர் அசோகர்தான். உலகிலேயே முதன்முதலாக விலங்குகளுக்கும் தனியே மருத்துவமனை அமைத்துத் தந்தவரும் அசோகரே ஆவார். இன்றும் அவர் உருவாக்கிய சாலைகளை நாம் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம். நமது தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள 24 ஆரக்கால் சக்கரம் அசோகர் நிறுவிய சாரநாத் கற்றூணில் உள்ள முத்திரையிலிருந்தே பெறப்பட்டது. இதிலிருந்து அசோகரது முக்கியத்துவத்தை நாம் அறியலாம். ஆனால், இத்தகைய சிறப்புகளைக் கொண்ட அசோகர் குறித்த தகவல்கள், வரலாற்றின் பக்கங்களில் 19ஆம் நூற்றாண்டு வரை இடம்பெறவே இல்லை.
ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர்களான வில்லியம் ஜோன்ஸ், ஜேம்ஸ் பிரின்செப், அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் போன்றவர்கள் வரலாற்று ஆய்வுகள் மூலம் கண்டுபிடித்த வரலாற்றுச் சான்றுகள்தான் மாமன்னர் அசோகரின் சிறப்புகளை வெளி உலகிற்குக் கொண்டு வந்தன. இதன் அடிப்படையில் சார்லஸ் ஆலன் எனும் ஆங்கிலேய எழுத்தாளர் அசோகர் குறித்த அனைத்து வரலாற்று ஆவணங்களையும் சேகரித்துத் தொகுத்து நூலாக வெளியிட்டார். அந்த நூலின் பெயர் ‘The Search for the India’s Lost Emperor’ அதற்குப் பிறகு பல ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகள் மூலம் அசோகரின் பொற்கால ஆட்சி குறித்த செய்திகளை வெளிக்கொணர்ந்தனர். இதற்கான சான்றுகள் சாஞ்சி ஸ்தூபியிலும், சாரநாத் கற்றூணிலும் காணப்படுகின்றன. இவை அசோகரின் பெருமையை நமக்கு எடுத்துச் சொல்லுகின்றன.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. பழங்கால மனிதன் தனது உணவைச் சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை
(அ) வணிகம்
(ஆ) வேட்டையாடுதல்
(இ) ஓவியம் வரைதல்
(ஈ) விலங்குகளை வளர்த்தல்
கூற்றையும் காரணத்தையும் பொருத்துக. சரியான விடையைக் குறியிட்டுக் காட்டுக:
1. கூற்று: பழைய கற்கால மனிதர்கள் வேட்டையாடச் செல்லும்போது நாய்களை உடன் அழைத்துச் சென்றனர்.
காரணம்: குகைகளில் பழைய கற்கால மனிதன் தங்கியிருந்த போது, விலங்குகள் வருவதை நாய்கள் தமது மோப்ப சக்தியினால் அறிந்து அவனுக்கு உணர்த்தின.
(அ) கூற்று சரி, காரணம் தவறு.
(ஆ) கூற்று சரி, கூற்றுக்கான காரணமும் சரி
(இ) கூற்று தவறு, காரணம் கரி
(ஈ) கூற்று தவறு, காரணமும் தவறு
2. பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய பொருள்கள் அகழாய்வுகள் மூலமாகத் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. அப்பொருள்கள் அக்கால மக்களின் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொள்ளப்ப பாதுகாக்கப்படுகின்றன. இக்கூற்றுடன் தொடர்புடையது எது?
(அ) அருங்காட்சியகங்கள்
(ஆ) புதைபொருள்படிமங்கள்
(இ) கற்கருவிகள்
(ஈ) எலும்புகள்
தவறான இணையைக் கண்டறி:
1. பழைய கற்காலம் – அ. கற்கருவிகள்
2. பாறை ஓவியங்கள் – ஆ. குகைச் சுவர்கள்
3. செப்புத் தகடுகள் – இ. ஒரு வரலாற்று ஆதாரம்
4. பூனைகள் – ஈ. முதலில் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு
மற்ற தொடர்களிலிருந்து வேறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி:
(அ) பாறைகள் மற்றும் குகைகளில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.
(ஆ) வேட்டையாடுதலை குறிப்பதாக ஓவியங்கள் இருந்தன.
(இ) பழங்கால மனிதன் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு வேட்டையாடுதலை எடுத்துரைப்பதற்காக வரைந்திருக்கலாம்.
(ஈ) பல வண்ணங்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.
கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. பழைய கற்கால மனிதன் பெரும்பாலும் வாழ்ந்த இடங்கள் __________
2. வரலாற்றின் தந்தை ___________
3. பழைய கற்கால மனிதன் பழக்கிய முதல் விலங்கு __________
4. கல்வெட்டுகள் __________ ஆதாரங்கள் ஆகும்.
5. அசோகச் சக்கரத்தில் ___________ ஆரக்கால்கள் உள்ளன.
சரியா, தவறா எனக் கூறுக:
1. பழைய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் சென்னைக்கு அருகில் உள்ள அத்திரம்பாக்கத்தில் கிடைத்துள்ளன.
2. பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருள்கள் தொல்லியல் துறையினரால் அருங்காட்சியத்தில் பாதுகாக்கப்படுகின்றன.
3. அசோகரது காலத்தில் புத்த சமயம் நாடு முழுவதும் பரவியது.
பொருத்துக:
1. பாறை ஓவியங்கள் – அ. செப்பேடுகள்
2. எழுதப்பட்டப் பதிவுகள் – ஆ. மிகவும் புகழ்பெற்ற அரசர்
3. அசோகர் – இ. தேவாரம்
4. மதச் சார்புள்ள இலக்கியம் – ஈ. வாழ்க்கை முறையைப் புரிந்து கொள்வதற்கு உதவுகிறது.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: (விடைகள்)
1. வேட்டையாடுதல்
கூற்றையும் காரணத்தையும் பொருத்துக. சரியான விடையைக் குறியிட்டுக் காட்டுக:
1. கூற்று சரி, கூற்றுக்கான காரணமும் சரி
2. அருங்காட்சியகங்கள்
தவறான இணையைக் கண்டுபிடி:
ஈ) பூனைகள் – iv) முதலில் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு
மற்ற தொடர்களிலிருந்து வேறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி:
இ) பழங்கால மனிதன் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு வேட்டையாடுதலை எடுத்துரைப்பதற்காக வரைந்திருக்கலாம்.
கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)
1. குகைகள் 2. ஹெரோடோடஸ் 3. நாய் 4. தொல்பொருள் 5. (24)
சரியா? தவறா? (விடைகள்)
1. சரி
2. சரி
3. சரி
பொருத்துக: (விடைகள்)
1. பாறை ஓவியங்கள் – வாழ்க்கை முறையைப் புரிந்து கொள்வதற்கு உதவுகிறது
2. எழுதப்பட்டப் பதிவுகள் – செப்பேடுகள்
3. அசோகர் – மிகவும் புகழ்பெற்ற அரசர்
4. மதச் சார்புள்ள இலக்கியம் – தேவாரம்