மனிதர்களின் பரிணாம வளர்ச்சி Book Back Questions 6th Social Science Lesson 2
6th Social Science Lesson 2
2] மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
Book Back Questions with Answer and Do You Know Box Content
உங்களுக்குத் தெரியுமா?
மனிதர்கள் பரிணாம வளர்ச்சி அடைந்த கதையைத் தொல்லியல், மானுடவியல் ஆகியவற்றின் உதவியுடன் நாம் அறிவியல் நோக்கில் பயில முடியும்.
வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்களையும் அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும் பற்றிப் படிப்பது தொல்லியல் ஆகும். தொல்லியல் ஆய்விற்கு முக்கிய ஆதாரமாக அகழ்வாராய்ச்சிப் பொருள்கள் உதவுகின்றன.
குகையில் வாழ கற்றுக் கொண்ட குரோமேக்னான்ஸ் மனிதர்கள் பிரான்சில் உள்ள லாஸ்காஸ் என்னுமிடத்தில் உள்ள குகைகளில் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. இவர்களிடம் இறந்தவர்களை புதைக்கும் பழக்கம் இருந்தது.
மானுடவியல் (anthropology) மனிதர்கள் மற்றும் அவர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி படிப்பது மானுடவியல் ஆகும்.
மானுடவியல் என்னும் சொல் இரண்டு கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. Anthropology என்பதன் பொருள் மனிதன். Logos என்பதன் பொருள் எண்ணங்கள் அல்லது காரணம். மானுடவியல் ஆய்வாளர்கள், மனித குலத்தின் வளர்ச்சியையும், நடத்தையையும் ஆராய்ந்து மனிதனின் கலாச்சார மற்றும் சமூக நிகழ்வுகள் பற்றிய முழு விளக்கத்தையும் அடைவதற்கு முயல்கின்றனர்.
மனிதர்களும் அவர்களது வாழ்விடங்களும்:
1. ஆஸ்ட்ரலோபிதிகஸ் – கிழக்கு ஆப்பிரிக்கா
2. ஹோமோ ஹேபிலிஸ் – தென் ஆப்பிரிக்கா
3. ஹோமோ எரக்டஸ் – ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா
4. நியாண்டர்தால் – யூரேசியா (ஐரோப்பா மற்றும் ஆசியா)
5. குரோமேக்னான்ஸ் – பிரான்ஸ்
6. பீகிங் மனிதன் – சீனா
7. ஹோமோ சேப்பியன்ஸ் – ஆப்பிரிக்கா
8. ஹைடல்பர்க் மனிதன் – லண்டன்
செதுக்கும் கலை: ஒரு கல்லினை அடியில் வைத்துக் கூர்மையான மற்றொரு கல்லினால் அதனைத் தட்டிச் செதுக்குதல். ஒரு கற்கருவியை உருவாக்க இரு கற்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. ஒரு கல்லில் உள்ள சீரற்ற பகுதிகளை நீக்கவும் அதைக் கூர்மையான கருவியாக்கவும் இன்னொரு கல் சுத்தியல் போல பயன்படுத்தப்பட்டது. தீப்பெட்டியைப் பயன்படுத்தாமல் நெருப்பை உருவாக்கும் பழக்கம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் இன்றைக்கும் உள்ளது. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் மனிதர்கள் குகைகளில் வசித்தார்கள். அவர்கள் அன்றாட நிகழ்வுகளை ஓவியங்களில் சித்தரித்தார்கள். பெரும்பாலும் விலங்குகளின் ஓவியங்களே வரையப்பட்டன.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. பரிணாமத்தின் வழிமுறை __________
(அ) நேரடியானது
(ஆ) மறைமுகமானது
(இ) படிப்படியானது
(ஈ) விரைவானது
2. தான்சானியா ___________ கண்டத்தில் உள்ளது.
(அ) ஆசியா
(ஆ) ஆப்பிரிக்கா
(இ) அமெரிக்கா
(ஈ) ஐரோப்பா
கூற்றுக்கான காரணத்தைப் பொருத்துக. சரியான விடையைத் தேர்ந்தெடு:
1. கூற்று: உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்த மனிதர்களின் உடலமைப்பிலும் நிறத்திலும் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன.
காரணம்: தட்பவெப்ப நிலை மாற்றமே.
(அ) கூற்று சரி.
(ஆ) காரணம் தவறு
(இ) கூற்றும் காரணமும் சரி
(ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
சரியான இணையைக் கண்டறி:
அ. ஆஸ்ட்ரலோபிதிகஸ் – இரு கால்களால் நடப்பது
ஆ. ஹோமோ ஹேபிலிஸ் – நிமிர்ந்து நின்ற மனிதன்
இ. ஹோமோ எரக்டஸ் – சிந்திக்கும் மனிதன்
ஈ. ஹோமோ சேப்பியன்ஸ் – முகத்தின் முன்பக்க நீட்சி குறைந்து காணப்படுவது
கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. தான்சானியாவில் காணப்பட்ட தொடக்க கால மனிதர்களின் காலடித்தடங்களை _________ உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தார்கள்.
2. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், நம் முன்னோர்கள் __________ வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
3. பழங்கால மனிதர்களின் முதன்மையான தொழில்கள் ___________ மற்றும் ___________ ஆகும்.
4. ____________ கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு விவசாயத்தை எளிதாக்கியது.
5. பாறை ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ____________ என்னுமிடத்தில் காணப்படுகின்றன.
சரியா, தவறா எனக் கூறுக:
1. நாணயங்களை ஆராய்வதற்கான துறை மானுடவியல் ஆகும்.
2. ஹோமோ எரக்டஸ் மனிதர்களுக்கு நெருப்பு குறித்த அறிவு இருந்தது.
3. மனிதர்களின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு சக்கரம் ஆகும்.
4. மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட முதல் விலங்கு ஆடு.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: (விடைகள்)
1. படிப்படியானது 2. ஆப்பிரிக்கா
கூற்றுக்கான காரணத்தைப் பொருத்துக. சரியான விடையைத் தேர்ந்தெடு: (விடை)
1. கூற்றுக்குப் பொருத்தமான காரணம் தரப்பட்டுள்ளது.
சரியான இணையைக் கண்டுபிடி: (விடை)
அ) ஆஸ்ட்ரலோபிதிகஸ்
கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)
1. மானுடவியல் ஆய்வாளர்கள் 2. நாடோடி
3. வேட்டையாடுதல், உணவைச் சேகரித்தல்
4. கலப்பை 5. கரிக்கையூர்
சரியா? தவறா? (விடை)
1. தவறு
2. சரி
3. சரி
4. தவறு
சரியான விடை: மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட முதல் விலங்கு நாய்.