மக்களின் புரட்சி Notes 8th Social Science Lesson 4 Notes in Tamil
8th Social Science Lesson 4 Notes in Tamil
4. மக்களின் புரட்சி
அறிமுகம்
- 1857ஆம் ஆண்டு பிளாசிப் போருக்குப் பின் நாட்டின் அரசியல், சமூக-பொருளாதார நிலையைப் பாதிக்கும் வகையில் ஆங்கிலேயரால் நாட்டின் பல பகுதிகளில் அரசியல் மற்றும் பொருளாதார ஆதிக்கம் ஏற்படுத்தப்பட்டது. இது பல திறன்மிக்க நிலக்கிழார்கள் மற்றும் தலைவர்களிடையே அதிகார வேறுபாட்டிற்கு வழிகோலியது.
- இயற்கையாகவே அவர்களுள் பலர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டனர். ஆங்கிலேயர்கள் பாளையக்காரர்களிடமிருந்து வருடாந்திர கப்பம் வசூலிக்கும் உரிமை பெற்றிருந்ததாகக் கருதப்படுகிறது.
- ஆங்கிலேயர்களுக்கு முதல் எதிர்ப்பு புலித்தேவரால் ஏற்பட்டது. அவருக்குப்பின் மற்ற பாளையக்காரர்களான வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள் மற்றும் தீரன் சின்னமலை ஆகியோரும் ஆங்கிலேயருக்கெதிரான எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.
பாளையங்களின் தோற்றம்
- விஜய நகர ஆட்சியாளர்கள் தங்கள் மாகாணங்களில் நாயக்கர்களை நியமித்தனர். இதையொட்டி மதுரை நாயக்கர் பாளையக்காரரை நியமித்தார்.
- 1529ல் விஸ்வநாதர் மதுரை நாயக்கரானார். இவரால் தனது மாகாணங்களில் அதிகாரங்களைப் பெற விரும்பிய சிறுகுடித் தலைவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
- அதனால் அவரது அமைச்சர் அரியநாதருடன் கலந்தாலோசித்து 1529ல் பாளையக்காரர் முறையை ஏற்படுத்தினார். அதன்மூலம் நாடு 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாளையமும் ஒரு பாளையக்காரரின் கீழ் கொண்டுவரப்பட்டது.
- ஒவ்வொரு பாளையக்காரரும் ஒரு பிரதேசத்தின் அல்லது பாளையத்தின் உரிமையாளராக கருதப்பட்டார். இந்த பாளையக்காரர்கள், நாயக்கர்களுக்கு தேவை ஏற்படும் போது இராணுவம் மற்றும் இதர உதவிகளை முழு மனதுடன் செய்தனர்.
- பாளையக்காரர்கள் வரிகளை வசூலித்து, தாங்கள் வசூலித்த வரிப்பணத்தில் மூன்றில் ஒரு பங்கினை மதுரை நாயக்கர்களுக்கும், அடுத்த மூன்றில் ஒரு பங்கினை இராணுவ செலவிற்கும் கொடுத்துவிட்டு மீதியை அவர்கள் சொந்த செலவிற்கு வைத்துக்கொண்டனர்.
தென்னிந்தியாவில் தொடக்ககால புரட்சிகள்
பாளையக்காரர்களின் புரட்சி
- 17 மற்றும் 18ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் அரசியலில் பாளையக்காரர்கள் முக்கிய பங்கு வகித்தனர். அவர்கள் தங்களை சுதந்திரமானவர்களாகக் கருதிக்கொண்டனர்.
- பாளையக்காரர்களிடையே இரண்டு பாளையங்கள் (முகாம்கள்) இருந்தன. அவை கிழக்குப் பாளையம் (முகாம்), மேற்குப் பாளையம் (முகாம்) என்பன ஆகும்.
- கிழக்குப் பாளையங்களில் இருந்த நாயக்கர்கள் கட்டபொம்மனின் கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி செய்தனர். மேற்குப் பாளையங்களில் இருந்த மறவர்கள் பூலித்தேவரின் கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி செய்தனர். இந்த இரண்டு பாளையக்காரர்களும் ஆங்கிலேயருக்கு கப்பம் (Kist) கட்ட மறுத்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
- பாளையக்காரர்களுக்கும், கிழக்கிந்திய கம்பெனிக்குமிடையே ஆரம்ப கால போராட்டங்கள் அரசியலில் ஒரு வலிமையான பரிணாமத்தை பெற்றன.
- 1792ஆம் ஆண்டு கர்நாடக உடன்படிக்கையால் ஒருங்கிணைக்கப்பட்ட ஆங்கிலேய அதிகாரம் பாளையக்காரர்களின் மீது செலுத்தப்பட்டது.
- இந்த உடன்படிக்கையின்படி, ஆங்கிலேயர்கள் வரிவசூல் செய்யும் உரிமையையும் பெற்றனர். அதன் விளைவாக பாளையக்காரர்களின் புரட்சி வெடித்தது.
பூலித்தேவர்
- இந்தியாவில் ஆங்கில ஆட்சியை எதிர்ப்பதில் தமிழ்நாட்டில் முன்னோடியாக இருந்தவர் பூலித்தேவர் ஆவார்.
- அவர் திருநெல்வேலியின் அருகிலிருந்த நெற்கட்டும் செவல் என்ற பாளையத்தின் பாளையக்காரர் ஆவார். அவரது ஆட்சிக் காலத்தில் ஆற்காட்டு நவாபான முகமது அலிக்கும் ஆங்கிலேயருக்கும் கப்பம் கட்ட மறுத்து அவர்களை எதிர்க்கத் தொடகினார்.
- எனவே ஆற்காட்டு நவாப் மற்றும் ஆங்கிலேயரின் கூட்டுப்படைகள் பூலித்தேவரைத் தாக்கின. ஆனால் அக்கூட்டுப் படைகள், திருநெல்வேலியில் பூலித்தேவரால் தோற்கடிக்கப்பட்டன.
- இந்தியாவில், ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களைத் தோற்கடித்த முதல் இந்திய மன்னர் பூலித்தேவரே ஆவார். இந்த வெற்றிக்குப் பிறகு பூலித்தேவர் நவாம் மற்றும் ஆங்கிலேயரை எதிர்க்க பாளையக்காரர்களின் கூட்டமைப்பை உருவாக்க முயன்றார்.
- 1759ல் யூசுப்கான் தலைமையிலான ஆற்காடு நவாப்பின் படைகள் நெற்கட்டும் செவலைத் தாக்கின. அந்தநல்லூரில் பூலித்தேவர் தோற்கடிக்கப்பட்டார்.
- 1761ல் ஆற்காடு நவாப்பின் படைகள் நெற்கட்டும் செவ்வலைக் கைப்பற்றியது. பூலித்தேவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து 1764ல் நெற்கட்டும் செவ்வலைக் மீண்டும் கைப்பறினார்.
- பிறகு அவர் 1767ல் கேப்டன் கேம்பெல் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார். பின்னாளில் பூலித்தேவர் தப்பித்து தலைமறைவாக வாழ்ந்து, தனது நோக்கம் நிறைவேறாமலேயே இறந்து போனார். இருந்தாலும் விடுதலைக்கான அவரது துணிச்சலான போராட்டம் தென்னிந்திய வரலாற்றில் நிலைத்து நிற்கிறது.
வீரபாண்டிய கட்டபொம்மன்
- கட்டபொம்மனின் முன்னோர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். 11ஆம் நூற்றாண்டில் அவர்கள் தமிழ்நாட்டிற்கு இடம்பெயர்ந்தனர்.
- பாண்டியர்களின் கீழ் நிலமானிய அடிப்படையில் பாஞ்சாலங்குறிச்சியைத் தலைநகராகக் கொண்டு ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன், வீரபாண்டியபுரத்தை ஆட்சி செய்தார்.
- பின்னர் நாயக்கர்களின் ஆட்சியில் பாளையக்காரரானார், ஜெகவீரபாண்டியனுக்குப்பின் அவரதுமகன் வீரபாண்டிய கட்டபொம்மன் பாளையக்காரரானார். அவரது மனைவி ஜக்கம்மாள், சகோதரர்கள் ஊமைத்துரை மற்றும் செவத்தையா ஆவர்.
ஆற்காடு நவாப்
- விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் முகலாயர்கள் தெற்கில் தங்கள் மேலாண்மையை நிறுவினர்.
- கர்நாடகாவில் நவாப் முகலாயர்களின் பிரதிநிதியாக செயல்பட்டார்.
- பஞ்சாலங்குறிச்சி பாளையமும் நவாப்பின் ஆளுகையின் கீழ் கொண்டுவரப்பட்டது. எனவே அது, நவாப்பிற்கு கப்பம் (வரி) கட்ட பணிக்கப்பட்டது. ஆனால் 1792 ல் ஏற்பட்ட கர்நாடக உடன்படிக்கை அரசியல் நிலைமைகளை முற்றிலும் மாற்றியது.
- கம்பெனி, பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து வரி வசூல் செய்யும் உரிமையையும் பெற்றது. கப்பம் வசூலித்ததே கட்டபொம்மனுக்கும், ஆங்கிலேயருக்குமிடையேயான மோதலுக்கான முதன்மை காரணமானது.
கட்டப்பொம்மன் – ஜாக்சன் சந்திப்பு
- இராமநாதபுர கலெக்டர் காலின் ஜாக்சன் 1798ல் நிலுவைத் தொகையை செலுத்தச் சொல்லி கட்டபொம்மனுக்கு கடிதங்கள் எழுதினார்.
- கட்டப்பொம்மனும் நாட்டின் பஞ்சத்தின் காரணமாக நிலுவையைச் செலுத்தும் சூழ்நிலையில் தான் இல்லை என்று பதில் எழுதினார்.
- எனவே கோபமடைந்த ஜாக்சன் கட்டபொம்மனைத் தண்டிக்க ஒரு படையை அனுப்ப முடிவு செய்தார்.
- இருப்பினும் சென்னை அரசாங்கம், கட்டபொம்மனுக்கு அழைப்பு அனுப்பி இராமநாதபுரத்தில் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யும் படி கலெக்டருக்கு வழிகாட்டியது.
- 1798ல் கட்டபொம்மன் தனது அமைச்சர் சிவசுப்பிரமணியத்துடன் இராமநாதபுரத்தில் கலெக்டரை சந்தித்தார். 1080 பகோடா பாக்கியை தவிர பெரும்பாலான வரியை கட்டபொம்மன் செலுத்திவிட்டதை கணக்குகள் சரிபார்த்தலுக்குப் பின் அறிந்த ஜாக்சன் சமாதானமடைந்தார்.
- இந்த சந்திப்பின் பொழுது கட்டபொம்மனும் அவரது அமைச்சர் சிவசுப்பிரமணியமும் மூன்று மணி நேரம் நிற்கவைக்கப்பட்டனர்.
- கலெக்டர் கட்டபொம்மனையும், அவரது அமைச்சரையும் அவமானப்படுத்தி கைது செய்ய முயற்சி செய்தார். கட்டபொம்மன் தனது அமைச்சருடன் தப்பிக்க முயன்றார்.
- உடனே ஊமைத்துரை, தனது வீரர்களுடன் கோட்டைக்குள் நுழைந்து கட்டபொம்மன் தப்பிக்க உதவிசெய்தார். ஆனால் துரதிஷ்டவசமாக சிவசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார்.
எட்வர்டு கிளைவ் மற்றும் கட்டபொம்மன்
- பாஞ்சாலங்குறிச்சி திரும்பிய பின் கட்டபொம்மன் கலெக்டர் காலின் ஜாக்சன் அவரிடம் நடந்து கொண்டதை விவரித்து சென்னைக் கவுன்சிலுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
- கடிதத்தைக் கண்ட சென்னை கவுன்சிலின் கவர்னர் எட்வர்டு கிளைவ் கட்டபொம்மனை ஒரு குழுவின் முன்னிலையில் வர கோரியது.
- இதற்கிடையில் சிவசுப்பிரமணியம் விடுதலை செய்யப்பட்டதுடன், கலெக்டர் ஜாக்சன் அவருடைய தவறான அணுகுமுறைக்காக பதவி நீக்கமும் செய்யப்பட்டார். அவருக்குப்பின் கலெக்டராக S.R.லூஷிங்டன் நியமிக்கப்பட்டார்.
பாளையக்காரர்களின் கூட்டமைப்பு
- இச்சூழ்நிலையில் சிவகங்கையின் மருது பாண்டியர், அருகில் இருந்த பாளையக்காரர்களை ஒன்றிணைத்து ஆங்கிலேயருக்கு எதிராக ‘தென்னிந்திய கிளர்ச்சியாளர்களின் கூட்டமைப்பு’ ஒன்றை உருவாக்கினார். இந்த கூட்டமைப்பு ஓர் பிரகடனத்தை வெளியிட்டது.
- கட்டபொம்மன் இந்த கூட்டமைப்பின் மீது ஆர்வத்துடன் இருந்தார். இந்த கிளர்ச்சி கூட்டமைப்பில் இணைய மறுத்த சிவகிரி பாளையத்தின் மீது கட்டபொம்மன் தனது செல்வாக்கை செலுத்த முயன்றார்.
- கட்டபொம்மன் சிவகிரியை நோக்கி முன்னேறினார். சிவகிரி பாளையக்காரர், கம்பெனிக்கு கப்பம் கட்டுபவராக இருந்ததால் கம்பெனி, கட்டபொம்மனின் சிவகிரி மீதான படையெடுப்பு தங்கள் அதிகாரத்திற்கு விடப்பட்ட சவாலாகக் கருதினர். எனவே கம்பெனியின் படைகள் பாஞ்சாலங்குறிச்சி நோக்கி செல்ல ஆணையிடப்பட்டது.
பாஞ்சாலங்குறிச்சி வீழ்தல்
- 1799 செப்டம்பர் ஐந்தாம் நாள் மேஜர் பானர்மேன் தன்னுடைய படையை பாஞ்சாலங்குறிச்சியை நோக்கி நகர்த்தினார்.
- ஆங்கிலேயப்படை பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் அனைத்து செய்தித்தொடர்புகளையும் துண்டித்தது.
- கள்ளர்பட்டியில் நடந்த சண்டையில் சிவசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார். கட்டபொம்மன் புதுக்கோட்டைக்கு தப்பிச்சென்றார்.
- களப்பூர் காடுகளில் மறைந்திருந்த கட்டபொம்மனை புதுக்கோட்டை ராஜா விஜயரகுநாத தொண்டைமான் கைது செய்து கம்பெனியிடம் ஒப்படைத்தார்.
- பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வீழ்ந்தபிறகு, பானர்மேன் கைதிகளை பாளையக்காரர்களின் அவைக்கு அழைத்து சென்று ஒரு விசாரணைக்குப் பிறகு அவர்களுக்கு மரணதண்டனை விதித்தார்.
- நாகலாபுரத்தில் சிவசுப்பிரமணியம் சிரத்சேதம் செய்யப்பட்டார். அக்டோபர் 16ஆம் நாள் பாளையக்காரர் அவையின் முன் கட்டபொம்மன் விசாரிக்கப்பட்டார்.
- அடுத்த நாள் அக்டோபர் 17, 1799 அன்று கட்டபொம்மன் கயத்தாறு கோட்டையில் தூக்கிலிடப்பட்டார். இவ்வாறான கட்டபொம்மனின் வீரம் பற்றி பல நாட்டுப்புற கதைப்பாடல்கள் இன்றும் பெருமையாக் கூறுகின்றன. அவை அவருடைய நினைவை மக்களிடையே நீங்காமல் வைத்திருக்கின்றன.
வேலுநாச்சியார்
- சிவகங்கையின் இராணி வேலுநாச்சியார் ஆவார். இவர் 16ஆம் வயதில் சிவகங்கையின் இராஜா முத்து வடுகநாதருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்.
- 1772ல் ஆற்காடு நவாப் மற்றும் பிரிட்டிஷ் படைகள் சிவகங்கையின்மீது போர் தொடுத்தன. அப்படை, முத்துவடுக நாதரை காளையார்கோயில் போரில் கொன்றது.
- வேலுநாச்சியார் தனது மகள் வெள்ளச்சி நாச்சியாருடன் தப்பித்து, திருண்டுக்கள் அருகில் உள்ள விருப்பாச்சியில் கோபால நாயக்கர் பாதுகாப்பில் வாழ்ந்தார். இந்த காலகட்டத்தில் அவர் ஒரு படையை அமைத்து, ஆங்கிலேயர்கள் தங்கள் ஆயுதங்களை எங்கு சேமித்து வைத்திருக்கிறார்கள் என்பதை தனது நுண்ணறிவு படைப்பிரிவின் உதவியுடன் கண்டறிந்தார்.
- பின்னர், தனது நம்பிக்கைக்குரிய படைத்தளபது மற்றும் தொண்டர், குயிலி என்பவரால் ஒரு தற்கொலை தாக்குதலுக்கு ஏற்பாடு செய்தார்.
- மருது சகோதரர்களின் உதவியுடன் சிவகங்கையைக் கைப்பற்றி மீண்டும் இராணியாக முடிசூட்டிக்கொண்டார்.
- இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட முதல் (இந்தியப்) பெண்ணரசி ஆவார். இவர் தமிழர்களால் ‘வீரமங்கை’ எனவும், ‘தென்னிந்தியாவின் ஜான்சி ராணி’ எனவும் அறியப்படுகிறார்.
மருது சகோதரர்கள்
- மருது சகோதரர்கள் பொன்னாத்தாள் மற்றும் மூக்கைய்யா பழனியப்பன் ஆகியோரின் மகன்கள் ஆவர்.
- மூத்த சகோதரர் பெரிய மருது (வெள்ளை மருது) எனவும், இளைய சகோதரர் சின்ன மருது எனவும் அழைக்கப்பட்டனர்.
- இவற்றில் மருது பாண்டியன் என்றழைக்கப்பட்ட சின்ன மருது பிரபலமானவர். சின்ன மருது சிவகங்கையின் மன்னர் முத்துவடுக நாத பெரிய உடையதேவரிடம் (1750 – 1772) பணிபுரிந்தார்.
- 1772ல் ஆற்காடு நவாப்பின் படைகள் சிவகங்கையை முற்றுகையிட்டு அதனைக் கைப்பற்றியது. இப்போரின் போது முத்து வடுகநாத பெரிய உடையதேவர் போரில் இறந்தார்.
- இருப்பினும் சில மாதங்களுக்குப் பிறகு, சிவகங்கை மருது சகோதரர்களால் மீண்டும் கைப்பற்றப்பட்டு பெரிய மருது, அரசராக பொறுப்பேற்றார். சின்னமருது அவரது ஆலோசகராக செயல்பட்டார்.
- ஆங்கிலேயர்களுக்கெதிரான தீவிர நடவடிக்கைகளின் காரணமாக அவர் “சிவகங்கை சிங்கம்” என அழைக்கப்பட்டார்.
- பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தென்னிந்தியாவில் மருதுசகோதரர்களால் ஆங்கிலேயர்களுக்கெதிரான கிளர்ச்சி நடைபெற்றது.
மோதலுக்கான காரணங்கள்
- கட்டபொம்மனின் இறப்பிற்குப் பின், அவரிடைய சகோதரர் ஊமைத்துரையும் தப்பினர். அங்கு அவர்களுக்கு மருது சகோதரர்கள் பாதுகாப்பளித்தனர்.
- மேலும் சிவகங்கை வியாபாரிகள், தங்களது உள்நாட்டு கொள்கையில் கம்பெனியின் தலையீட்டை விரும்பவில்லை. இந்த இரண்டு காரணங்களுக்காகவே, கம்பெனி சிவகங்கைக்கு எதிராக போர் புரிந்தது.
தென்னிந்திய கிளர்ச்சி (1800-1801)
- பிப்ரவரி 1801ல் கட்டபொம்மனின் சகோதரர்களான ஊமைத்துரையும் செவத்தையாவும் பாளையங்கோட்டை சிறையிலிருந்து தப்பித்து கமுதியை வந்தடைந்தனர். அங்கிருந்து தனது தலைநகர் சிறுவயலுக்கு அவர்களை சின்னமருது அழைத்து சென்றார்.
- கட்டபொம்மனின் சகோதரர்கள் , மீண்டும் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை புனரமைத்தனர்.
- ஏப்ரலில் காலின் மெக்காலே தலைமையில் ஆங்கிலப் படைகள் மீண்டும் கோட்டையை தன் வசப்படுத்தியது. அத்துடன் பாளையக்காரச் சகோதரர்கள் சிவகங்கையில் தான் தஞ்சமடைந்திருக்க வேண்டும் என்று கருதியது. எனவே ஆங்கிலேயர்கள் மருது சகோதரர்களிடம் தப்பித்தவர்களை தங்களிடம் ஒப்படைக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.
- ஆனால் இக்கோரிக்கை மருது சகோதரர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆகையால் கர்னல் அக்னியூ மற்றும் கர்னல் இன்ஸ் ஆகியோர் மருது சகோதரர்களுக்கெதிராக படை நடத்திச் சென்றனர்.
- இப்பாளையக்காரர் போர், அதற்கு முன் நடந்த போர்களை விடவும் மிகவும் பெரிய அளவில் நடைபெற்றது.
- சிவகங்கையின் மருது சகோதரர்கள், திண்டுக்கல்லின் கோபால நாயக்கர், மலபாரின் கேரளவர்மன், மைசூரின் கிருஷ்ணப்பநாயக்கர் மற்றும் துண்டாஜி உள்ளிட்டோர் அடங்கிய கூட்டமைப்பால் போர் தொடங்கப்பட்டது. இக்கூட்டமைப்பிற்கு எதிராக ஆங்கிலேயர் போரை அறிவித்தனர்.
திருச்சிராப்பள்ளி பிரகடனம் (1801)
- ஜூன் 1801ல் மருது சகோதரர்கள் ‘திருச்சிராப்பள்ளி பிரகடனம்’ என்றழைக்கப்பட்ட ‘சுதந்திரப் பிரகடனம்’ ஒன்றை வெளியிட்டனர்.
- 1801 பிரகடனமே ஆங்கிலேயருக்கு எதிராக இந்தியர்களை ஒன்று சேர்க்கும் முதல் அழைப்பாக இருந்தது. இந்த அறிவிப்பின் ஒரு நகல் ஆற்காடு நவாபின் அரண்மனையான, திருச்சி கோட்டை சுவரிலும், மற்றொரு நகல் ஸ்ரீரங்கம் வைஷ்ணவ கோயில் சுவரிலும் ஒட்டப்பட்டது. இவ்வாறு மருது சகோதரர்கள், ஆங்கிலேயருக்கெதிரான எதிர்ப்புணர்ச்சியை நாடெங்கும் பரப்பினர்.
- இதன் விளைவாக தமிழ்நாட்டின் பல பாளையக்காரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட ஓர் அணியாக சேர்ந்தனர். சின்னமருது, ஆங்கில படைக்கு சவாலாக கிட்டத்தட்ட 20,000 வீரர்களை திரட்டினார்.
- ஆனால் ஆங்கிலேய படைகளுக்கு மேலும் வலுவூட்ட, வங்காளம், இலங்கை, மலாயா போன்ற இடங்களிலிருந்து பழைகள் வரவழைக்கப்பட்டன.
- புதுக்கோட்டை, எட்டயபுரம் மற்றும் தஞ்சாவூர் மன்னர்களும் ஆங்கிலேயருக்கு ஆதரவளித்தனர்.
- ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கை பாளையக்காரர்களின் படைகளில் பிளவை ஏற்படுத்தியது.
ஆங்கிலேயர் சிவகங்கையை இணைத்தல்
- மே 1801ல் தஞ்சாவூர் மற்றும் திருச்சி பகுதிகளில் கிளர்ச்சியாளர்களை ஆங்கிலேயர் தாக்கினர். எனவே கிளர்ச்சியாளர்கள் பிரான்மலை மற்றும் காளையார் கோயில் பகுதிகளுக்குச் சென்றனர்.
- அவர்கள் மீண்டும் ஆங்கிலேயப் படைகளால் தோற்கடிக்கப்பட்டனர். இறுதியில் சிறந்த இராணுவ வலிமை மற்றும் சிறந்த ஆங்கில இராணுவத் தளபதிகளால் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர். கிளர்ச்சி தோல்வியுற்றதால், 1801ல் சிவகங்கையை ஆங்கிலேயர் இணைத்துக் கொண்டனர்.
- 1801 அக்டோபர் 24ஆம் நாள் மருது சகோதரர்கள், இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிலிடப்பட்டனர்.
- 1801 நவம்பர் 16 ஆம் நாள் ஊமைத்துரை மற்றும் செவத்தையா கைதுசெய்யப்பட்டு பாஞ்சாலங்குறிச்சியில் தூக்கிலிடப்பட்டனர்.
- மேலும் 73 கிளர்ச்சியாளர்கள் மலாயாவின் பினாங்கிற்கு (பின்னர் வேல்ஸ் இளவரசர் தீவு என அழைக்கப்பட்டது) நாடு கடத்தப்பட்டனர்.
- கிளர்ச்சியாளர்கள் ஆங்கிலேயரிடம் தோல்வியுற்றாலும் தமிழ் மண்ணில் தேசியம் என்ற விதையை விதைத்த முன்னோடிகளாவர்.
- 1800-1801ஆம் ஆண்டு கிளர்ச்சி ஆங்கில ஆவணங்களில் இரண்டாவது ஆங்கில ஆவணங்களில் இரண்டாவது பாளையக்காரர் போர் என்று கூறப்பட்டாலும், இத்தென்னிந்திய புரட்சி தமிழக வரலாற்றில் ஓர் அடையாளமாகவே இருக்கிறது.
- 1801 ஜூலை 31ல் செய்துகொள்ளப்பட்ட கர்நாடக உடன்படிக்கைப்படி, தமிழ்நாட்டின் மீது ஆங்கிலேயர் நேரடி கட்டுப்பாட்டைப் பெற்றனர். இதனால் பாளையக்காரர் முறை நீக்கப்பட்டது.
தீரன் சின்னமலை
- தீரன் சின்னமலை ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகிலுள்ள மேலப்பாளையத்தில் பிறந்தார். அவரது இயற்பெயர் தீர்த்தகிரி.
- அவர், ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்த கொங்கு நாட்டு பாளையக்காரர் ஆவார்.
- கொங்கு நாடு என்பது சேலம், கோயம்புத்தூர், கரூர் மற்றும் திண்டுக்கல் பகுதிகளை உள்ளடக்கிய மதுரை நாயக்க அரசின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டிருந்தது.
- ஆனால் இப்பகுதி மைசூர் உடையார்களால் இணைக்கப்பட்டது.
- மைசூர் உடையார்கள் வீழ்ந்தபிறகு, இந்தப் பகுதிகள் மைசூர் சுல்தான்களால் கட்டுப்படுத்தப்பட்டது. மூன்று மற்றும் நான்காம் மைசூர் போர்களுக்குப் பிறகு கொங்குநாடு முழுவதும் ஆங்கிலேயரின் வசமானது.
- தீரன் சின்னமலை, பிரெஞ்சு இராணுவத்தின் நவீன போர்முறை பயிற்சிப் பெற்றிருந்தார். இவர் திப்புசுல்தான் பக்கம் இருந்து ஆங்கிலேயருக்கெதிராக போராடி வெற்றிபெற்றார்.
- திப்புசுல்தான் இறந்த பிறகு, இவர் ஓடாநிலையில் தங்கி ஆங்கிலேயரைத் தொடர்ந்து எதிர்த்துப் போராட, அங்கு ஒரு கோட்டையைக் கட்டினார்.
- 1800ல் கோயம்புத்தூரில் ஆங்கிலேயரைத் தாக்க , அவர் மராத்தியர் மற்றும் மருதுசகோதரர்களின் உதவியைப் பெற முயன்றனர்.
- ஆனால் ஆங்கிலப்படைகள் அக்கூட்டுப்படைகளைத் தடுத்து நிறுத்தியதால், தீரன் சின்னமலை மட்டும் கோயம்புத்தூரை தாக்கும் நிலைமைக்கு உள்ளானார். அதனால் அவரது படை தோற்கடிக்கப்பட்டது.
- அவர் ஆங்கில படைகளிடமிருந்து தப்பித்து சின்னமலை காவேடி, ஓடாநிலை மற்றும் அரச்சலூர் போன்ற இடங்களில் நடைபெற்ற போர்களில் கொரில்லா போர் முறையில் ஆங்கிலப் படைகளைத் தோற்கடித்தார்.
- இறுதி போரின் போது சின்னமலை தனது சமையற்காரர் நல்லப்பன் என்பவரால் காட்டிக்கொடுக்கப்பட்டதால் 1805ல் சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.
வேலூர் கலகம் (1806)
- நான்காம் மைசூர் போருக்குப் பிறகு திப்புவின் குடும்பத்தினர் வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டனர்.
- மைசூரின் ஹைதர் அலி , திப்புசுல்தான் ஆகியோரின் பணியாளர்கள் மற்றும் வீரர்கள் 3000 பேரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் அவர்கள் வேலூருக்கு அருகில் இடம் பெயர்ந்தனர். இதனால் அனைவரும் துயரமடைந்து ஆங்கிலேயரை வெறுக்கவும் செய்தனர்.
- வேலூர் கோட்டையானது பெரும்பாலான இந்திய வீரர்களைக் கொண்டிருந்தது. அதன் ஒரு பகுதியினர் அப்பொழுதான் 1800ல் நடைபெற்ற திருநெல்வேலி பாளையக்காரர் கிளர்ச்சியில் பங்கு பெற்றவர்களாகவும் இருந்தனர்.
- மேலும் பல்வேறு பாளையங்களைச் சேர்ந்த பயிற்சிபெற்ற வீரர்கள் ஆங்கிலப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். எனவே வேலூர் கோட்டை தென்னிந்திய கிளர்ச்சியாளர்களின் சந்திப்பு மையமாக திகழ்ந்தது.
- 1803ல் வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங் என்பவர் சென்னை மாகாண கவர்னரானார்.
- அவரது காலத்தி (1805 – 1806) ல் சில கட்டுப்பாடுகள் இராணுவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, அதனை பின்பற்ற வேண்டுமென இராணுவ வீரர்கள் சென்னை மாகாண படைத்தளபதி சர் ஜான் கிரடாக் என்பவரால் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
- சிப்பாய்கள் அதனை தங்களை அவமானப்படுத்த ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டது எனக்கருதினர்.
கலகத்திற்கான காரணங்கள்
- கடுமையான கட்டுப்பாடுகள், புதிய ஆயுதங்கள், புதிய முறைகள் மற்றும் சீருடைகள் என அனைத்தும் சிப்பாய்களுக்கு புதிதாக இருந்தன.
- தாடி மற்றும் மீசையை மழித்து நேர்த்தியாக வைத்துக்கொள்ள சிப்பாய்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
- சமய அடையாளத்தை நெற்றியில் அணிதல், காதுகளில் வளையம் (கடுக்கண்) அணிதல் ஆகியன தடைசெய்யப்பட்டன.
- ஆங்கிலேயர்கள், இந்திய சிப்பாய்களை தாழ்வாக நடத்தியதோடு மட்டுமல்லாமல் சிப்பாய்களிடையே இனபாராபட்சமும் காட்டினர்.
உடனடிக் காரணம்
- ஜூன் 1806ல் இராணுவத் தளபதி அக்னியூ, ஐரோப்பிய தொப்பியை ஒத்திருந்த சிலுவை சின்னத்துடன் கூடிய ஒரு புதிய தலைப்பாகையை அறிமுகப்படுத்தினார். அது பிரபலமாக ‘அக்னியூ தலைப்பாகை’ என அழைக்கப்பட்டது.
- இந்து மற்றும் முஸ்லீம் வீரர்கள் ஒன்றாக இதனை எதிர்த்தனர். இதனால் வீரர்கள் ஆங்கிலேயர்களால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.
கலகத்தின் போக்கு
- இந்திய வீரர்கள் ஆங்கில அலுவலர்களைத் தாக்குவதற்கு ஒரு வாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருந்தனர். திப்பு குடும்பத்தினரும் இதில் பங்கெடுத்துக் கொண்டனர்.
- திப்புவின் மூத்த மகன் பதே ஹைதர் ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்த முயன்றார்.
- இதற்கிடையில் ஜூலை 10 ஆம் நாள் விடியற்காலை, முதலாவது மற்றும் 23வது படைப்பிரிவுகளைச் சார்ந்த இந்திய சிப்பாய்கள் கலகத்தை தொடங்கினர்.
- படையை வழிநடத்திய கர்னல் பான்கோர்ட் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு முதல் பலியானார்.
- கோட்டையின் நுழைவாயில்கள் மூடப்பட்டன. அப்பொழுது கிளர்ச்சியாளர்கள் பதே ஹைதரை தங்களின் புதிய ஆட்சியாளராக அறிவித்தனர்.
- வேலூர் கோட்டையில் ஆங்கிலக் கொடி இறக்கப்பட்டு புலி உருவம் பொறித்த திப்புவின் கொடி ஏற்றப்பட்டது.
கலகம் அடக்கப்படுதல்
- கோட்டையின் வெளியே இருந்த மேஜர் கூட்ஸ் இராணிப்பேட்டைக்கு விரைந்து கர்னல் கில்லெஸ்பிக்கு தகவல் கொடுத்தார். கர்னல் கில்லெஸ்பி உடனடியாக வேலூர் கோட்டையை அடைந்தார்.
- அவர் கிளர்ச்சி படைகளின் மீது தாக்குதல் நடத்தி கலகத்தை முழுமையாக அடக்கினார்.
- வேலூரில் அமைதி ஏற்படுத்தப்பட்டது. கலகத்தில் மொத்தம்113 ஐரோப்பியர்கள் மற்றும் சுமார் 350 சிப்பாய்கள் கொல்லப்பட்டனர்.
- குறுகிய காலத்திற்குள் கலகம் அடக்கப்பட்டது. எனினும் தமிழக வரலாற்றின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளுள் இதுவுன் ஒன்றாக திகழ்ந்தது.
வேலூர் கலகத்தின் விளைவுகள்
- புதிய முறைகள் மற்றும் சீருடை ஒழுங்கு முறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திப்புவின் குடும்பத்தினர் வேலூரிலிருந்து கல்கத்தாவிற்கு அனுப்பப்பட்டனர்.
- வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
கலகத்தின் தோல்விக்கான காரணங்கள்
- இந்தியப் படை வீரர்களை வழிநடத்த சரியான தலைமையில்லை.
- கலகம் மிகச் சரியாக வடிவமைக்கப்படவில்லை.
- ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கை இந்தியர்களின் ஒற்றுமையில் பிளவை ஏற்படுத்தியது.
1806ல் நடந்த வேலூர் கலகத்தை, 1857ல் நடைபெற்ற ‘முதல் இந்திய சுதந்திரப் போரின் முன்னோடி’ என வி.டி.சவார்க்கர் குறிப்பிடுகிறார்.
பெரும்புரட்சி (1857)
- இந்தியாவில் ஆங்கிலேயர்களை அச்சுறுத்தும் வகையில் நடைபெற்ற ஆரம்பகால கலகங்கள் வெற்றிபெறவில்லை. எனவே அது 1857 புரட்சிக்கு வழிகோலியது.
- அதன்மூலம் கம்பெனி அதன் நாட்டிற்கு திரும்பிச் செல்லவும், ஆங்கிலேயர்களின் ஆட்சியை மக்களில் பெரும்பாலானோர் ஏற்கவில்லை என ஆங்கிலேயர்களை எண்ணவும் செய்தது.
- 1857 புரட்சியானது காலனி ஆட்சியினுடைய பண்பு மற்றும் கொள்கையின் விளைவாக உருவானதாகும்.
- ஆங்கிலேயரின் விரிவுபடுத்தப்பட்ட கொள்கைகள் , பொருளாதார சுரண்டல் மற்றும் நிர்வாக புதுமைகள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த விளைவே இந்தியாவின் அனைத்து அரசர்களின் நிலைமையிலும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தின.
புரட்சிக்கான காரணங்கள்
- ஆங்கிலேயரின் பொருளாதார ரீதியான சுரண்டல் கொள்கையே, 1857 புரட்சிக்கு முக்கிய காரணமாக இருந்தத. இது சமுதாயத்தின் அனைத்து பிரிவினரையும் காயப்படுத்தியது. அதிகப்படியான வரிவிதிப்பு மற்றும் கடுமையான வரிவிதிப்பு மற்றும் கடுமையான வரிவசூல் முறைகளால் விவசாயிகள் துன்புற்றனர்.
- வாரிசு இழப்புக் கொள்கை, துணைப்படைத் திட்டம் மற்றும் பல கட்டுப்பாடுகள் ஆகியன மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் முறையற்ற வகையில் அயோத்தியை இணைத்தும் கூட ஆங்கிலேயரின் பிரதேச விரிவாக்கக் கொள்கை திருப்தி அடையவில்லை.
- கிறித்துவ சமய பரப்பு குழுவினரின் மதமாற்ற நடவடிக்கைகள் மக்களால் அச்சத்துடனும் சந்தேகத்துடனும் பார்க்கப்பட்டது. மேலும் சமய தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய சமய அறிஞர்கள் (Maulavis) ஆங்கில ஆட்சிக்கெதிராக அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
- சதி ஒழிப்பு, பெண்சிசுக் கொலை ஒழிப்பு, விதவை மறுமணம் மற்றும் பெண் கல்விக்கான அதரவு போன்ற ஆங்கிலேயரின் நடவடிக்கைகள் இந்தியர்களின் கலாச்சாரத்தில் ஐரோப்பியர்கள் தலையிடுவதாக கருதப்பட்டது.
- இந்திய சிப்பாய்கள், ஆங்கில அதிகாரிகளால் தாழ்வாகவும் அவமரியாதையாகவும் நடத்தப்பட்டனர். ஆங்கில வீரர்களைக் காட்டிலும் இந்திய வீரர்களுக்கு மறுக்கப்பட்டு ஆங்கில வீரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டன.
உடனடிக் காரணம்
- இராணுவத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட என்பீல்டுரக துப்பாக்கியே உடனடிக் காரணமாக இருந்தது. இந்த வகைத் துப்பாக்கியில் குண்டுகளை நிரப்புவதற்கு முன் அதன் மேலுறையில் பசுவின் கொழுப்பு மற்றும் பன்றியின் கொழுப்பு தடவப்பட்டிருந்தது.
- எனவே இதனை இந்திய சிப்பாய்கள் (இந்து, முஸ்லீம்) தங்கள் மத உணர்வை புண்படுத்துவதாக கருதினர்.
- ஏனெனில் இந்துக்கள் பசுவை புனிதமாகக் கருதுபவர்களாகவும் முஸ்லீம்கள் பன்றியை வெறுப்பவர்களாகவும் இருந்தனர்.
- ஆகையால் இந்து முஸ்லீம் வீரர்கள் என்பீல்டு துப்பாக்கியைப் பயன்படுத்த மறுத்து புரட்சியில் ஈடுபட்டனர். இவ்வாறு கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் புரட்சிக்கு அடிப்படை மற்றும் உடனடிக் காரணமாயிற்று.
கலகத்தின் தோற்றம்
- 1857 மார்ச் 29ஆம் நாள் பாரக்பூரில் (கொல்கத்தா அருகில்) உள்ள வங்காள படைப்பிரிவைச் சேர்ந்த மங்கள் பாண்டே என்ற இளம் சிப்பாய் கொழுப்பு தடவப்பட்ட துப்பாக்கியைப் பயன்படுத்த மறுத்து தனது உயரதிகாரியைச் சுட்டுக் கொன்றார். அதனால் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குப் பின் தூக்கிலிடப்பட்டார். இச்செய்து பரவியதால், பல சிப்பாய்கள் புரட்சியில் ஈடுபட்டனர்.
புரட்சியின் போக்கு
- 1857 மே 10ஆம் நாள் மீரட்டில் மூன்றாம் குதிரைப் படையைச் சேர்ந்த சிப்பாய்கள் சிறைச்சாலையை உடைத்து, தங்களது சக படைவீரர்களை விடுவித்ததன் மூலம் வெளிப்படையாக புரட்சியில் ஈடுபட்டனர்.
- அவர்கள் உடனே 11ஆவது மற்றும் 20 ஆவது உள்ளூர் காலாட்படையினருடன் இணைந்தனர் , மேலும் , சிலர் ஆங்கில அலுவலர்களைக் கொலை செய்ததுடன், டெல்லிக்கும் விரைந்தனர்.
- டெல்லிக்கு வந்த மீரட் சிப்பாய்கள் மே 11 ஆம் நாள் இரண்டாம் பகதூர்ஷாவை இந்தியாவின் பேரரசராக அறிவித்தனர். அதன் மூலம் டெல்லி பெரும் புரட்சியின் மையமாகவும் பகதூர்ஷா அதன் அடையாளமாகவும் விளங்கினார்.
- புரட்சி மிக வேகமாக பரவியது. லக்னோ, கான்பூர், ஜான்சி, பரெய்லி, பீகார், பைசாபாத் மற்றும் வட இந்தியாவின் பல பகுதிகளில் கலகங்கள் ஏற்பட்டன.
- புரட்சியாளர்களுள் பலர், நிழக்கிழார்களிடம் தாங்கள் கொடுத்த பத்திரங்களை எரிக்க, இதனை ஒரு நல்வாய்ப்பாகக் க்அருதினர்.
- ஆங்கில அர்சு பலருடைய பட்டங்கள், ஓய்வூதியகளை நீக்கியதால் ஆங்கில அரசை பழிவாங்குவதற்காக புரட்சியில் பலர் கலந்துகொண்டனர்.
- ஆங்கிலேயர்கள் தங்களது நாட்டிற்குச் சென்ற பிறகு இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியை நிறுவ வேண்டுமென எண்ணி முஸ்லீம் தலைவர்கள் மற்றும் முஸ்லீம் சமய அறிஞர்கள் புரட்சியில் கலந்துகொண்டனர்.
- மத்திய இந்தியாவில் புரட்சி ஜன்சியின் இராணி இலட்சுமிபாய் அவர்களால் நடத்தப்பட்டது. இந்தியாவின் மாபெரும் தேசப்பக்தர்களுள் அவரும் ஒருவர்.
- சர் ஹக்ரோஸ் ஜான்சியை ஆக்கிரமித்தார். ஜானிசியிலிருந்து தப்பிய இராணி லட்சுமிபாஉ, குவாலியரில் படையை தலைமையேற்று வழிநடத்திய தாந்தியா தோபேவுடன் இணைந்தார். ஆனால் ஆங்கிலப் படை ஜூன் 1858ல் குவாலியரைக் கைப்பற்றியது.
- போரில் ராணி இலட்சுமிபாய் கொல்லப்பட்டார். தப்பிய தாந்தியாதோபே கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
- ஆங்கில வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, 1857 புரட்சியில் கலந்து கொண்ட தலைவர்களில் மிகவும் துணிச்சலானவர் இராணி லட்சுமிபாய் ஆவார்.
கலகம் அடக்கப்படுதல்
- கவர்னர் ஜெனரல் கானிங் பிரபு புரட்சியை அடக்க உடனடியாக நடவடிக்கை எடுத்தார். அவர் சென்னை, பம்பாய், இலங்கை மற்றும் பர்மாவிலிருந்து படைகளை வரவழைத்தார்.
- மேலும் அவரது சொந்த முயற்சியால் சீனாவிலிருந்த ஆங்கிலப் படைகளை கல்கத்தாவிற்கு வரவழைத்தார்.
- விசுவாசமான சீக்கிய படைகளை உடனடியாக டெல்லிக்கு விரைந்து செல்லுமாறு ஆணையிட்டார். இதன்மூலம் ஆங்கிலேயர் தாங்கள் இழந்த பகுதிகளை உடனே மீட்டனர்.
- 1857 செப்டம்பர் 20ல் படைத்தளபதி நிக்கல்சனால் டெல்லி மீண்டும் கைப்பற்றப்பட்டது. எனவே, இரண்டாம் பகதூர்ஷா ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு அவர் 1862ல் இறந்தார்.
- கான்பூர் மீட்பு இராணுவ நடவடிக்கைகள், லக்னோ மீட்பு நடவடிக்கைகளுடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்தது.
- சர் காலின் கேம்பெல் கான்பூரைக் கைப்பற்றினார், கான்பூரில் புரட்சியை வழிநடத்திச் சென்ற நானா சாகிப் தோற்கடிக்கப்பட்டார்.
- தோற்ற நானா சாகிப் நேப்பாளத்திற்கு தப்பியோடினார். அவரது நெருங்கிய நண்பர் தாந்தியா தோபே மத்திய இந்தியாவுக்கு தப்பிச் சென்றார்.
- தப்பிய அவர் தூங்கும் பொழுது கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். இராணி லட்சுமிபாய் போர்க்களத்தில் கொல்லப்பட்டார்.
- கன்வர்சிங் மற்றும் கான் பகதூர் கான் ஆகிய இருவரும் போரில் இறந்தனர்.
- அயோத்தியின் பேகம் ஹஸ்ரத் மகால் நேப்பாளத்தில் மறைந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
- இவ்வாறாக புரட்சி முழுவதும் அடக்கப்பட்டது. 1859ஆம் ஆண்டின் இறுதியில் பிரிட்டிஷ் அதிகாரம் மீண்டும் இந்தியா முழுவதும் நிறுவப்பட்டது.
கலகத்தின் தோல்விக்கான காரணங்கள்
கலத்தின் தோல்விக்கு பல நிகழ்வுகள் காரணமாக அமைந்தன.
- சரியான ஒருங்கிணைப்பு, ஒழுக்கம், கட்டுப்பாடி, பொதுவானதிட்டம், மையப்படுத்தப்பட்ட தலைமை, நவீன ஆயுதங்கல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை புரட்சியாளர்களிடையே இல்லை.
- கலகத்தில் ஈடுபட்டவர்கள், ஆங்கில படைத்தளபதிகளுக்கு இணையானவர்களாக இல்லை. மேலும் இராணி லட்சுமிபாய், நானாசாகிப் மற்றும் தாந்தியா தோபே ஆகியோர் தைரியமானவர்கள், ஆனால் சிறந்த தளபதிகளாக இல்லை.
- வங்காளம், பம்பாய், சென்னை, மேற்கு பஞ்சாப் மற்றும் இராஜபுதனம் ஆகிய பகுதிகள் புரட்சியில் கலந்து கொள்ளவில்லை.
- நவீனக் கல்வி கற்ற இந்தியர்கள் ஆங்கில ஆட்சி மட்டுமே இந்திய சமுதாயத்தை சீர்திருத்தி நவீனப்படுத்தமுடியும் என நம்பினர். எனவே அவர்கள் புரட்சியை ஆதரிக்கவில்லை.
- சீக்கியர்கள், ஆப்கானியர்கள் மற்றும் கூர்க்கா படைப்பிரிவினர் ஆகியோர்களின் விசுவாசத்தை ஆங்கிலேயர் பெற்றனர். புரட்சியை அடக்குவதில் கூர்க்காப் படையினர் ஆங்கிலேயருக்கு உதவினர்.
- ஆங்கிலேயர்கள் சிறந்த ஆயுதங்கள், சிறந்த தளபதிகள் மற்றும் சிறந்த ஒருங்கிணைப்பைக் கொண்டிருந்தனர்.
கலகம் நடைபெற்ற இடங்கள் | இந்திய தலைவர்கள் | கலகத்தை அடக்கிய ஆங்கிலேய அதிகாரிகள் |
டெல்லி | இரண்டாம் பகதூர்ஷா | ஜான் நிக்கல்சன் |
லக்னோ | பேகம் ஹஸ்ரத் மகால் | ஹென்றி லாரன்ஸ் |
கான்பூர் | நானா சாகிப் | சர் காலின் கேம்பெல் |
ஜான்சி & குவாலியர் | ராணிலட்சுமிபாய், தாந்தியா தோபே | ஜெனரல் ஹக்ரோஸ் |
பரெய்லி | கான் பகதூர் கான் | சர் காலின் கேம்பெல் |
பீகார் | கன்வர் சிங் | வில்லியம் டைலர் |
கலகத்தின் விளைவுகள்
- 1857ஆம் ஆண்டு கலகம் இந்திய வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. அது நிர்வாக முறை மற்றும் அரசின் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்பட வழிகோலியது.
- 1858ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விக்டோரியா மகாராணியின் பேரறிக்கையின் மூலம் இந்தியாவின் நிர்வாகம் கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து ஆங்கில (பாராளுமன்றத்திற்கு) அரசுக்கு மாற்றப்பட்டது.
- கவர்னர் ஜெனரல், அதன் பிறகு வைசிராய் என அழைக்கப்பட்டார்.
- இயக்குநர் குழு மற்றும் கட்டுப்பாட்டு வாரியம் நீக்கப்பட்டு இந்திய விவகாரங்களை மேற்பார்வையிட செயலரின் தலைமையில் 15 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சபை (கவுன்சில்) ஏற்படுத்தப்பட்டது.
- இந்திய இராணுவம் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டது. அதிகப்படியான ஆங்கிலேயர்கள், இராணுவத்தில் பணியமர்த்தப்பட்டனர்.
- ‘பிரித்தல் மற்றும் எதிர் தாக்குதல்’ என்ற கொள்கை ஆங்கில இராணுவக் கொள்கையில் ஆதிக்கம் செலுத்தியது.
- உண்மையில் 1857 புரட்சி இந்திய மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து இந்தியா ஒரே நாடு என்ற உணர்வைக் கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தது.
- பெரும்புரட்சி நவீன தேசிய இயக்கம் தோன்ற வழிவகுத்தது.
- 1857ஆம் ஆண்ட் பெரும் புரட்சி 20ஆம் நூற்றாண்டின் தொடக்கமாக இருந்தது.
- வி.டி,சவார்க்கர் ‘முதல் இந்திய சுதந்திர பொர்’ என்ற தனது நூலில் 1857ஆம் ஆண்டு பெரும் புரட்சியை ‘ஒரு திட்டமிடப்பட்ட தேசிய சுதந்திரப் போர்’ என விவரிக்கிறார்.