நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் Book Back Questions 6th Science Lesson 10
6th Science Lesson 10
10] நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்
Book Back Questions with Answer and Do You Know Box Content
உங்களுக்குத் தெரியுமா?
நீர் ஒரு பொதுக் கரைப்பான். அது பெரும்பாலான பொருள்களை கரைக்கிறது.
ஒரு திடப்பொருளை வெப்பப்படுத்தும் பொழுது திரவமாகாமல் நேரடியாக வாயு நிலைக்கு மாறுவது பதங்கமாதல் எனப்படும். உதாரணம்: கற்பூரம்.
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
1. பனிக்கட்டி நீராக உருகும்போது ஏற்படும் மாற்றம் ____________ ஆகும்.
(அ) இட மாற்றம்
(ஆ) நிற மாற்றம்
(இ) நிலை மாற்றம்
(ஈ) இயைபு மாற்றம்
2. ஈரத்துணி காற்றில் உலரும் போது ஏற்படும் மாற்றம் _________ ஆகும்.
(அ) வேதியியல் மாற்றம்
(ஆ) விரும்பத்தகாத மாற்றம்
(இ) மீளா மாற்றம்
(ஈ) இயற்பியல் மாற்றம்
3. பால் தயிராக மாறுவது ஒரு _________ ஆகும்.
(அ) மீள் மாற்றம்
(ஆ) வேகமான மாற்றம்
(இ) மீளா மாற்றம்
(ஈ) விரும்பத்தகாத மாற்றம்
4. கீழுள்ளவற்றில் விரும்பத்தக்க மாற்றம் எது?
(அ) துருப்பிடித்தல்
(ஆ) பருவநிலை மாற்றம்
(இ) நில அதிர்வு
(ஈ) வெள்ளப்பெருக்கு
5. காற்று மாசுபாடு, அமில மழைக்கு வழிவகுக்கும், இது ஒரு _________ ஆகும்.
(அ) மீள் மாற்றம்
(ஆ) வேகமான மாற்றம்
(இ) இயற்கையான மாற்றம்
(ஈ) மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. காந்தம் இரும்பு ஊசியைக் கவர்ந்திழுக்கும். இது ஒரு _________ மாற்றம். (மீள்/மீளா)
2. முட்டையை வேகவைக்கும் போது _________ மாற்றம் நிகழ்கிறது. (மீள்/மீளா)
3. நமக்கு ஆபத்தை விளைவிப்பவை ___________ மாற்றங்கள். (விரும்பத்தக்க/விரும்பத்தகாத)
4. தாவரங்கள் கரியமில வாயு மற்றும் நீரைச் சேர்த்து ஸ்டார்ச்சை உருவாக்குவது ______________ (இயற்கையான/மனிதனால் நிகழ்த்தப்பட்ட மாற்றம்) ஆகும்.
5. பட்டாசு வெடித்தல் என்பது ஒரு ________ மாற்றம்; விதை முளைத்தல் ஒரு _________ மாற்றம். (மெதுவான/வேகமான)
III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:
1. குழந்தைகளுக்குப் பற்கள் முளைப்பது மெதுவான மாற்றம்.
2. தீக்குச்சி எரிவது ஒரு மீள் மாற்றம்.
3. அமாவாசை பௌர்ணமியாக மாறும் நிகழ்வு மனிதனால் ஏற்படுத்தப்பட்ட கூடிய மாற்றம்.
4. உணவு செரித்தல் என்பது ஓர் இயற்பியல் மாற்றம்.
5. உப்பை நீரில் கரைத்து உருவாக்கும் கரைசலில், நீர் ஒரு கரைபொருள் ஆகும்.
IV. ஒப்புமை தருக:
1. பால் தயிராதல்: மீளா மாற்றம்: :மேகம் உருவாதல்: ___________ மாற்றம்.
2. ஒளிச்சேர்க்கை: _________ மாற்றம்: : நிலக்கரி எரிதல்: மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்.
3. குளுக்கோஸ் கரைதல்: மீள் மாற்றம்: : உணவு செரித்தல்: _________ மாற்றம்.
4. உணவு சமைத்தல்: விரும்பத்தக்க மாற்றம்: : உணவு கெட்டுப்போதல்: _________ மாற்றம்.
5. தீக்குச்சி எரிதல்: _________ மாற்றம்: : பூமி சுற்றுதல்: மெதுவான மாற்றம்.
V. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதற்கான காரணத்தைக் கூறுக:
1. குழந்தை வளருதல், கண் சிமிட்டுதல், துருப்பிடித்தல், விதைமுளைத்தல்.
2. மின் விளக்கு ஒளிர்தல், மெழுகுவர்த்தி எரிதல், காபிக் குவளை உடைதல், பால் தயிராதல்.
3. முட்டை அழுகுதல், நீராவி குளிர்தல், முடிவெட்டுதல், காய் கனியாதல்.
4. பலூன் ஊதுதல், பலூன் வெடித்தல், சுவற்றின் வண்ணம் மங்குதல், மண்ணெண்ணெய் எரிதல்.
விடைகள்:
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
1. நிலை மாற்றம், 2. இயற்பியல் மாற்றம், 3. மீளா மாற்றம், 4. பருவநிலை மாற்றம், 5. மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. மீள், 2. மீளா, 3. விரும்பத்தகாத, 4. இயற்கையான, 5. வேகமான, மெதுவான
III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:
1. சரி, 2. மீளா, 3. இயற்கையான, 4. வேதியியல் நீர், 5. ஒரு கரைப்பான்
IV. ஒப்புமை தருக:
1. மீள் மாற்றம், 2. இயற்கையான மாற்றம், 3. மீளா மாற்றம், 4. விரும்பத்தகாத மாற்றம், 5. வேகமான மாற்றம்
V. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதற்கான காரணத்தைக் கூறுக:
1. கண் சிமிட்டுதல், 2. காபிக் குவளை உடைதல், 3. முடிவெட்டுதல், 4. பலூன் ஊதுதல்