Discussion on Tnpsc group 4 exam – Part 2
Discussion on Tnpsc group 4 exam – Part 2
Finally, the group 4 notification has been released for 5451 vacancies. Only 3 months are there for tnpsc group 4 exam. Exam date is November 6. So we must speed up our studies. Here we have planned to upload lot of shortcuts in tamil and english. Please make use of it.
குரூப் 4 தேர்விற்கு தயாராகும் நண்பர்களுக்கு வணக்கம். ஆவலுடன் எதிர்பார்த்த குரூப் 4 தேர்வு அறிவிக்கை வெளியாகி விட்ட நிலையில், அதற்கு நம்மை எப்படி தயார் படுத்திக்கொள்வது என்பது பற்றி இங்கு காணவிருக்கிறோம்.மொத்தம் 5451 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வு அறிவிக்கை
காலியிடங்கள் – 5451
இளநிலை உதவியாளர் ( பிணையமற்றது) – 2345
இளநிலை உதவியாளர் ( பிணையமுள்ளது ) – 121
வரி தண்டலர் – 8
நில அளவர் – 532
வரைவாளர் – 327
தட்டச்சர் – 1714
சுருக்கெழுத்து தட்டச்சர் – 404
விண்ணப்பிக்க கடைசி தேதி – செப்டம்பர் 8
தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி – செப்டம்பர் 11
Exam date 06.11.16
இன்னும் தேர்விற்கு மூன்றே மாதங்கள் இருப்பதால், திட்டமிட்டு படிப்பது அவசியமாகும். போன தேர்வில் என்னென்ன தவறுகள் செய்தோம், இந்தமுறை கேள்விகள் எப்படி வரும் , கணித கேள்விகளுக்கு எப்படி தயார் ஆவது , அறிவியல் பாடத்திற்கு எப்படி படிப்பது , ஆக மொத்தம் இந்த குரூப் 4 தேர்வில் எப்படி வென்று பணியில் அமர்வது குறித்த அனைத்து கேள்விகளுக்கும் பதிலை இங்கு நாம் பார்க்கவிருக்கிறோம். எனவே நமது விண்மீன் இணையதளத்திற்கு வருகை தந்து பயன் பெறுங்கள்.
முதலில் நாம் இங்கு கணித பாடத்தில் இருந்து படிக்க துவங்குவோம்.
பகடை ஒரு கனசதுரம் ஆகும். அதற்கு ஆறு பக்கங்கள் உள்ளன என்பதை நாம் அறிவோம்.
இங்கு ABCG க்கு எதிர்ப்பக்கம் DEFH ஆகும்.
1. இரண்டு எதிர் எதிர்ப் பக்கங்கள் அடுத்தடுத்த பக்கங்களாக அமையாது.
ஒரு பகடையின் இரண்டு நிலைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. எண் 4 க்கு எதிராக உள்ள எண் எது?
எண் 4 க்கு 6,2,5 மற்றும் 3 அடுத்துள்ள பக்கங்களாக உள்ளதால், நான்கிற்கு எதிராக அமைய வாய்ப்பில்லை.
எனவே மீதம் உள்ள 1 தான் நான்கிற்கு எதிராக உள்ள எண் ஆகும்.
2. ஒரு பகடையின் இரண்டு வெவ்வேறு நிலைகள் கொடுக்கப்பட்டு, அதில் இரண்டு எண்கள் இரண்டு நிலைகளிலும் அமைந்திருந்தால்,
மீதமுள்ள இரு எண்கள் எதிர் எதிர் பக்கங்களாக அமையும்.
(If two different positions of a dice are shown and one of the two common faces is in the same position then of the remaining faces will be opposite to each other)
3. ஒரு பகடையின் இரண்டு வெவ்வேறு நிலைகள் கொடுக்கப்பட்டு, அதில் ஒரு எண் இரண்டுநிலைகளிலும் ஒரே முகப்பக்கத்தில் அமைந்திருந்தால், மற்ற முக பக்கத்திலுள்ள எண்கள் அடுத்த நிலையில் அதே இடத்தில் உள்ள எண்ணுக்கு எதிர் பக்கங்களாக அமையும்.
(If in two different positions of dice, the position of a common face be the same, then each of the opposite faces of the remaining faces will be in the same position)
4. ஒரு பகடையின் இரண்டு வெவ்வேறு நிலைகள் கொடுக்கப்பட்டு,பொதுவான பக்கத்தின் நிலைமாறியிருந்தால்,
மேலும் ஒரே ஒரு எண் மட்டும் விடுபட்டிருந்தால் அந்த விடுபட்ட எண்ணேபொதுவான பக்கத்திலுள்ள எண்ணின் எதிர்ப்பக்கம்.
(If in two different positions of a dice, the position of the common face be not the same, then opposite face of the common face will be that which is not shown on any face in these two positions. Besides, the opposite faces of the remaining faces will not be the same)
Discussion on Tnpsc group 4 exam – Part 3 – Updated Soon. Please leave your valuable comments…உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யவும். உங்களுக்கு பிடித்திருந்தால் பேஸ் புக்கில் ஷேர் செய்யவும்…
Very Super
I have visited lot of web sites. They did not know the logic behind the TNPSC exam pattern. This site is unique and interesting. Good work. Keep it up. I am sure people will top in the race if the follow this site. ( Provided this administrator maintains the same consistency.
VERY NICE
Update in English