15th & 16th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English
15th & 16th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English
Hello aspirants, you can read 15th & 16th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.
August Daily Current Affairs Pdf
15th & 16th August 2022 Tnpsc Current Affairs in Tamil
1. ‘SMILE–75’ என்ற முனைவை அறிமுகப்படுத்திய நடுவண் அமைச்சகம் எது?
அ. பணியாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
ஆ. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இ. உள்துறை அமைச்சகம்
ஈ. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்
- இந்திய அரசாங்கத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது, “SMILE: Support for Marginalised Individuals for Livelihood and Enterprise” என்பதன்கீழ், ‘SMILE–75’ என்ற முனைவைத் தொடங்கியுள்ளது. இரக்கும் செயலில் ஈடுபடும் நபர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நோக்கில் 75 மாநகராட்சிகளை நடுவண் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது. 2025–26 வரையிலான ‘SMILE’ திட்டத்திற்காக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மொத்தம் `100 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
2. ‘உதராசக்தி’ என்ற இருதரப்பு விமானப்பயிற்சியை நடத்திய நாடு எது?
அ. ஜப்பான்
ஆ. வங்காளதேசம்
இ. மலேசியா
ஈ. ஐக்கிய அரபு அமீரகம்
- ‘உதராசக்தி’ என்று பெயரிடப்பட்ட இருதரப்பு விமானப்பயிற்சியை மலேசியா நடத்துகிறது. இந்தப் பயிற்சியில் இந்திய வான்படையின் (IAF) ஒரு குழு பங்கேற்கிறது. 4 நாள் நடக்கும் இப்பயிற்சியில் இரு வான்படைகளுக்கு இடையே பல்வேறு வான்வழிப் போர் பயிற்சிகள் அடங்கும். சுகோய்–30 போர் விமானங்களைக் கொண்டு நடத்தப்படும் இந்த இருதரப்பு வான்படை பயிற்சியானது முதன்முதலாக கடந்த 2018–இல் நடத்தப்பட்டது.
3. 2022 ஜூலையில் பதிவான நுகர்வோர் விலைக்குறியீடு அடிப்படையிலான பணவீக்க சதவீதம் என்ன?
அ. 4.71%
ஆ. 5.71%
இ. 6.71%
ஈ. 7.71%
- தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தரவுகளின்படி, நுகர்வோர் விலைக்குறியீடு (CPI) அடிப்படையிலான பணவீக்கம் ஜூலை மாதத்தில் 7.01 சதவீதத்திலிருந்து 6.71 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும், தொழிற்துறை உற்பத்திக்குறியீடு மே மாதத்தில் காணப்பட்ட 19.6 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் 12.3 சதவீதமாக வளர்ந்துள்ளது.
4. அண்மையில், ‘DST ஸ்டார்ட்அப் உற்சவத்தை’ ஏற்பாடு செய்த நடுவண் அமைச்சகம் எது?
அ. MSME அமைச்சகம்
ஆ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்
இ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
ஈ. பணியாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
- நடுவண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகமானது DST ஸ்டார்ட்அப் உற்சவத்தை ஏற்பாடு செய்தது. நடுவண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சரின் கூற்றுப்படி, தற்போது 105 ஸ்டார்ட்அப்கள் உள்ளன; அவற்றில் 49 சதவீத ஸ்டார்ட்–அப்கள் அடுக்கு–2 மற்றும் அடுக்கு–3 நகரங்களைச் சேர்ந்தவையாக உள்ளன. இந்த நிகழ்வில் 75 தாக்கம் நிறைந்த அடைவக ஸ்டார்ட்அப்கள், NIDHI–Seedஆல் ஆதரிக்கப்படும் 75 தாக்கம் நிறைந்த ஸ்டார்ட்அப்கள் மற்றும் NIDHI–EIRஆல் ஆதரிக்கப்படும் 75 தாக்கம் நிறைந்த ஸ்மார்ட் ஸ்டார்ட்அப்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் சிறப்புவாய்ந்த நூல்கள் வெளியிடப்பட்டன.
5. அண்மையில் அறிவிக்கப்பட்ட, ‘அகத்தியர் மலை யானைகள் காப்பகம்’ அமைந்துள்ள மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. கேரளா
இ. கர்நாடகா
ஈ. தெலுங்கானா
- அகத்தியர் மலையில் உள்ள 1,197.48 சதுர கிலோமீட்டர் நிலத்தை யானைகள் காப்பகமாக அறிவிக்கும் தமிழ்நாட்டு வனத்துறையின் பரிந்துரையை நடுவணரசு ஏற்றுக்கொண்டதாக நடுவண் சுற்றுச்சூழலமைச்சர் பூபேந்தர் யாதவ் அறிவித்துள்ளார். நீலகிரி–கிழக்குத்தொடர்ச்சிமலை, கோயம்புத்தூரில் அமைந்துள்ள நீலம்பூர் அமைதிப்பள்ளத்தாக்கு, திருவில்லிபுத்தூர் மற்றும் ஆனைமலை ஆகிய நான்கு யானைகள் காப்பகங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள நிலையில் தற்போது இது தமிழ்நாட்டின் ஐந்தாவது யானைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 31 யானைகள் காப்பகங்கள் உள்ளன.
6. ‘மெய்நிகரான இந்திய மூலிகைத் தோட்டத்திற்கான’ இணையதளத்தை உருவாக்கிய நிறுவனம் எது?
அ. இந்திய மானுடவியல் ஆய்வு நிறுவனம்
ஆ. இந்திய தாவரவியல் ஆய்வு நிறுவனம்
இ. இந்திய வன ஆய்வு நிறுவனம்
ஈ. இந்திரா காந்தி தேசிய வன அகாதெமி
- இந்தியாவின் மிகப்பெரிய இணையவழி மூலிகைத் தோட்ட தரவுத்தளமான, ‘Indian Virtual Herbarium’ இணைய தளத்தை நடுவண் சுற்றுச்சூழலமைச்சர் பூபேந்தர் யாதவ் தொடங்கி வைத்தார். இந்த இணையதளம், ‘விடுதலை அமுதப்பெருவிழா’ மற்றும் ‘டிஜிட்டல் இந்தியா’ கட்டமைப்பின்கீழ் இந்திய தாவரவியல் ஆய்வு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய தாவரவியல் ஆய்வு நிறுவனம் என்பது நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்கீழ் உள்ள ஒரு துணை அலுவலகமாகும்.
7. SEBI–இன் சந்தை தரவு ஆலோசனைக் குழுவின் தலைவர் யார்?
அ. அஜை தியாகி
ஆ. KV காமத்
இ. ஆஷிஷ்குமார் சௌகான்
ஈ. MS சாஹூ
- ஒரு உறுப்பினரைக் குறைத்து மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை இருபதாக மாற்றுவதன்மூலம் SEBI அதன் சந்தை தரவு ஆலோசனைக் குழுவை மறுசீரமைத்துள்ளது. NSE–இன் முன்னாள் மேலாண்மை இயக்குநர் (MD) மற்றும் தலைமைச் செயல் அதிகாரி (CEO) விக்ரம் லிமாயேவுக்குப் பதிலாக ஆஷிஷ்குமார் சௌகான் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். IBBI–இன் முன்னாள் தலைவர் MS சாஹூ ஆலோசனைக்குழுவின் தலைவராக உள்ளார்.
8. அண்மையில் சுவிஸ் ஓபனை வென்ற காஸ்பர் ரூட் சார்ந்த நாடு எது?
அ. சுவிச்சர்லாந்து
ஆ. நார்வே
இ. பிரான்ஸ்
ஈ. இத்தாலி
- ஸ்டாடில் நடந்த சுவிஸ் ஓபன் இறுதிப்போட்டியில் நார்வேயின் காஸ்பர் ரூட் இத்தாலியின் மேத்தியோ பெர்ரெத்தினி அவர்களை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினார். இது காஸ்பர் ரூட் பெறும் ஒன்பதாவது பட்டமாகும். சமீபத்தில் அவர் ஒற்றையர் தரவரிசையில் உலகின் நெ:5ஆவது வீரரானார். இதன்மூலம் வரலாற்றிலேயே இந்தத் தரவரிசையில் மிகவுயர்ந்த இடத்துக்குச் சென்ற முதல் நார்வே டென்னிஸ் வீரர் ஆனார் அவர்.
9. 2022–இல் காணப்படும் பருத்தி ரீதியான சவால்கள் குறித்த மாநாட்டை நடத்தும் நகரம் எது?
அ. திருப்பூர்
ஆ. கோயம்புத்தூர்
இ. கரூர்
ஈ. சேலம்
- இந்திய பருத்தி கூட்டமைப்பானது இந்திய பருத்தி சங்கத்துடன் இணைந்து ‘2022ஆம் ஆண்டில் காணப்படும் பருத்தி ரீதியான சவால்கள்’ குறித்த இரு நாள் மாநாட்டை நடத்துகிறது. இம்மாநாடு, தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் நகரத்தில் நடைபெறவுள்ளது. பருத்தித்துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அனைத்து பங்குதாரர்களுடனும் பல்வேறு குழு விவாதங்கள் நடைபெறும்.
10. இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்ற ஹர்மீத் தேசாய் மற்றும் சத்தியன் ஞானசேகரன் சார்ந்த விளையாட்டு எது?
அ. பளு தூக்குதல்
ஆ. டேபிள் டென்னிஸ்
இ. குத்துச்சண்டை
ஈ. பூப்பந்து
- 2022 காமன்வெல்த் விளையாட்டுகளின் இறுதிப்போட்டியில் சிங்கப்பூரை வீழ்த்தி இந்தியாவின் டேபிள் டென்னிஸ் அணி தனது ஆடவர் அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டது. அந்த அணியில் ஹர்மீத் தேசாய், சத்தியன் ஞானசேகரன் மற்றும் ஷரத் கமல் ஆகியோர் உள்ளனர். கலப்பு பாட்மிண்டன் போட்டியில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சாதனங்கள் மற்றும் கருவிகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் புது தில்லியில் இராணுவத்திடம் ஒப்படைத்தார்
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சாதனங்கள் மற்றும் கருவிகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங், புது தில்லியில் இந்திய இராணுவத்திடம் ஒப்படைத்தார்.
எதிர்கால காலாட்படை சிப்பாய்க்கான சாதனம் (F-INSAS), உள்ளிட்ட புதிய தலைமுறை கண்ணிவெடியான நிபுன், மேம்பட்ட திறன்கொண்ட தானியங்கி தகவல் தொடர்பு சாதனங்கள், பீரங்கிகளுக்கான மேம்படுத்தப்பட்ட குறி வைக்கும் சாதனம் மற்றும் அதிநவீன தெர்மல் இமேஜர்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
2. உலகளாவிய பொது சுகாதார மாநாடு: டிசம்பர்.6-இல் தொடக்கம்
உலகளாவிய பொது சுகாதார மாநாடு, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் டிச.6-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் தெரிவித்தது. உலகளாவிய பொது சுகாதார மாநாடு வரும் டிச.6 முதல் 8 வரை மாமல்லபுரத்தில் நடத்தப்படவுள்ளது. இந்த மாநாட்டின் கருப்பொருள், ‘பொது சுகாதாரத்தின் சிறப்புகள்’ என்பதாகும்.
3. Dr அப்துல் கலாம் விருது உள்பட பல்வேறு விருதுகள்: முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார்
அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறப்பான பங்களிப்பைச் செய்த முனைவர் ச இஞ்ஞாசிமுத்துவுக்கு, Dr ஆ ப ஜெ அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது. அவருக்கு, `5 இலட்சம் காசோலை, 8 கிராம் தங்கப்பதக்கம், சான்றிதழ் அடங்கிய Dr அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது.
துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருதினை, நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரைச் சேர்ந்த பா எழிலரசி பெற்றார். இந்த விருதானது `5 இலட்சம் காசோலை, தங்க முலாம் பூசப்பட்ட பதக்கம், சான்றிதழ் அடங்கியது.
முதலமைச்சரின் நல் ஆளுமை விருது: திருவள்ளூர் மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்டு மறு வாழ்வு அளித்த சிறப்பான செயலைப்பாராட்டி, அம்மாவட்ட ஆட்சியருக்கும், திருநங்கைகளின் வாழ்வில் நம்பிக்கை ஊட்டி அவர்களது அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்த பணிகளுக்காக செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலகத்துக்கும் முதலமைச்சரின் நல் ஆளுமை விருது அறிவிக்கப்பட்டது.
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக திண்டுக்கல் மாவட்டம், நீர்நிலைகளை மீட்டுருவாக்கி புனரமைப்பு செய்த பணிகளுக்காக சிவகங்கை மாவட்டம், கருவுற்ற தாய்மார்களின் உடல்நலனை தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிக்கும் ‘தாய்கேர் நெல்லை’ திட்டத்தை அறிமுகப்படுத்திய திருநெல்வேலி மாவட்டத்துக்கும் நல் ஆளுமை விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த விருது தலா `2 இலட்சமும், பாராட்டுச் சான்றும் கொண்டது.
வேளாண் இயந்திரங்களை இணையதளம், கைப்பேசி செயலி மூலமாக ஆன்-லைன் வழியே வாடகைக்கு விடும் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக வேளாண்மைத் துறை தலைமை பொறியியல் துறைக்கு நல் ஆளுமை விருது அறிவிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்ட முதியோர், பெண்கள் ஆகியோரை காப்பகங்களில் வைத்து பராமரித்தும், உரிமை கோரப்படாத இறந்தோரின் உடல்களை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யும் திட்டத்தையும் சென்னை பெருநகர காவல் துறை செய்து வருகிறது. இந்தப் பணியைப் பாராட்டி சென்னை பெருநகர காவல் ஆணையரகத்துக்கும் நல் ஆளுமை விருது அறிவிக்கப்பட்டது.
மகளிர் நலனுக்காக சிறந்த சேவைகளை ஆற்றியதாக நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த வானவில் அறக் கட்டளை, சிறந்த சமூக சேவகருக்கான விருது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜி பங்கஜம் ஆகியோருக்கு அளிக்கப்பட்டது. இந்த விருது 10 கிராம் தங்கப்பதக்கம், சான்றிதழ் அடங்கியது.
சிறந்த உள்ளாட்சி அமைப்புகள்: சிறந்த மாநகராட்சிக்கான விருதை சேலம் மாநகராட்சி பெற்றது. `25 லட்சத்துக்கான காசோலை அடங்கியது இந்த விருது.
சிறந்த நகராட்சிகளாக முதலிடத்தில் தேர்வான திருவில்லிபுத்தூருக்கு `15 இலட்சத்துக்கான காசோலையும், இரண்டாமிடம் பிடித்த குடியாத்தத்துக்கு `10 இலட்சத்துக்கான காசோலையும், மூன்றாம் இடம்பிடித்த தென்காசிக்கு `5 இலட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.
சிறந்த பேரூராட்சிகளின் வரிசையில், செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சி முதலிடத்தை பிடித்தது. இரண்டாமிடத்தை கன்னியாகுமரி பேரூராட்சி பிடித்தது. மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி மூண்றாமிடம் பிடித்தது.
4. சென்னை உயர்நீதிமன்றத்தின் 160-ஆவது ஆண்டு தினம்: அஞ்சல்தலை வெளியீடு
விடுதலை நாளையொட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக்கொடி ஏற்றிவைத்து தலைமை நீதிபதி முனீசுவர் நாத் பண்டாரி மரியாதை செலுத்தியதுடன், நீதிமன்றத்தின் 160-ஆவது ஆண்டு தினத்தையொட்டி, சிறப்பு தபால் தலையையும் வெளியிட்டார்.
1862-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் 160-ஆவது ஆண்டு நினைவைப் போற்றும் வகையில், சிறப்பு தபால் தலையை தலைமை நீதிபதி வெளியிட, உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி துரைசாமி பெற்றுக்கொண்டார்.
15th & 16th August 2022 Tnpsc Current Affairs in English
1. Which Union Ministry launched the ‘SMILE–75 Initiative’?
A. Ministry of Labour and Employment
B. Ministry of Social Justice and Empowerment
C. Ministry of Home Affairs
D. Ministry of Health and Family Welfare
- The Ministry of Social Justice and Empowerment, Government of India, launched “SMILE–75 Initiative”, under ‘SMILE: Support for Marginalised Individuals for Livelihood and Enterprise’. The Ministry has identified 75 Municipal Corporations to implement rehabilitation of persons engaged in the act of begging. The Ministry has allocated a total budget of Rs.100 crore for the SMILE project for up to 2025–26.
2. Which country hosted the bilateral air exercise named ‘Udarashakti’?
A. Japan
B. Bangladesh
C. Malaysia
D. UAE
- Malaysia is the host of the bilateral air exercise named ‘Udarashakti’. A contingent of the Indian Air Force (IAF) is participating in the exercise. The four–day exercise includes various aerial combat drills between the two Air Forces. The first such bilateral Air Force exercise displaying the frontline Sukhoi–30 combat aircraft was conducted in 2018.
3. What is the Consumer Price Index (CPI)–based inflation recorded in July 2022?
A. 4.71%
B. 5.71%
C. 6.71%
D. 7.71%
- As per the data released by the National Statistical Office, the Consumer Price Index (CPI)–based inflation eased marginally to 6.71 per cent in July from 7.01 per cent in the previous month. However, the Index of Industrial Production (IIP) grew 12.3 per cent in June compared to 19.6 per cent in May.
4. Which Union Ministry recently organised the ‘DST Startup Utsav’?
A. Ministry of MSME
B. Ministry of Commerce and Industry
C. Ministry of Science and Technology
D. Ministry of Labour and Employment
- Union Ministry of Science and Technology organised the DST StartUp Utsav. As per the Union Minister of State of Science and Technology, there are currently 105 unicorns, out of which 49 per cent of the start–ups are from tier–2 and tier–3 cities. The event included the release of exclusive books displaying 75 Impactful incubated StartUps, 75 Impactful StartUps supported by NIDHI–Seed and 75 Impactful Smart Startups supported by NIDHI–EIR.
5. Agasthyamalai elephant reserve, which was notified recently, is located in which state?
A. Tamil Nadu
B. Kerala
C. Karnataka
D. Telangana
- Union Environment Minister Bhupender Yadav announced the Central Government accepted the proposal of the Tamil Nadu Forest department to notify 1,197.48 sq km area of land in Agasthyamalai as an elephant reserve. It is the fifth elephant reserve of the state of Tamil Nadu as Nilgiris–Eastern Ghat, Nilambur Silent Valley in Coimbatore, Srivilliputhur and Anamalai are the four existing elephant reserves in the state. In total, India has 31 elephant reserves.
6. Which institution developed the ‘Indian Virtual Herbarium’ portal?
A. Anthropological Survey of India
B. Botanical Survey of India
C. Forest Survey of India
D. Indira Gandhi National Forest Academy
- Union Environment Minister Bhupender Yadav inaugurated India’s largest online herbarium database, the ‘Indian Virtual Herbarium’ web portal. The portal has been developed by the Botanical Survey of India under the framework of ‘Azadi Ka Amrit Mahotsav’ and ‘Digital India’. Botanical Survey of India is a subordinate office under the Environment Ministry.
7. Who is the head of SEBI’s Market data advisory committee?
A. Ajay Tyagi
B. KV Kamath
C. Ashishkumar Chauhan
D. MS Sahoo
- SEBI has restructured its market data advisory committee by reducing one member to 20. It recommends policy for access to securities market data. NSE’s former MD and CEO Vikram Limaye has been replaced by newly appointed Ashishkumar Chauhan. MS Sahoo former IBBI Chairperson chairs the advisory committee.
8. Casper Ruud, who recently won the Swiss Open, is from which country?
A. Switzerland
B. Norway
C. France
D. Italy
- Norway’s Casper Ruud defeated Italy’s Matteo Berrettini in the final of the Swiss Open in Gstaad and clinched the title. This is the ninth title of the 23–year–old player’s career. He recently became the highest–ranked Norwegian tennis player in history, after attaining his career–high singles ranking of world No. 5.
9. Which city is the host of Conference on Cotton Challenges Ahead 2022?
A. Tiruppur
B. Coimbatore
C. Karur
D. Salem
- The Indian Cotton Federation in association with the Indian Cotton Association is organising a two–day Conference on Cotton Challenges Ahead 2022. The conference will be held in city of Coimbatore in state of Tamil Nadu. There will be various panel discussions with all stakeholders from different segments of the cotton sector.
10. Harmeet Desai and Sathiyan Gnanasekaran, who won gold for India, play which sports?
A. Weightlifting
B. Table Tennis
C. Boxing
D. Badminton
- India’s table tennis team retained its men’s team championship title with a win over Singapore in the final match in the Commonwealth Games 2022. The team includes Harmeet Desai Sathiyan Gnanasekaran and Sharat Kamal. The Indian mixed badminton team won a Silver Medal in the Games.