12th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English
12th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English
Hello aspirants, you can read 12th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.
April Daily Current Affairs Pdf
1. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘மெஸ் ஐனாக் தளம்’ மற்றும் ‘பாமியானின் புத்தர்கள்’ ஆகியவை அமைந்துள்ள நாடு எது?
அ) நேபாளம்
ஆ) சீனா
இ) ஆப்கானிஸ்தான்
ஈ) இந்தியா
- ‘மெஸ ஐனாக் தளம்’ மற்றும் ‘பாமியானின் புத்தர்கள்’ ஆகியன ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ளன.
- ஆப்கானிஸ்தானின் மெஸ் ஐனாக்கில் உள்ள புராதன பௌத்த சிலைகளை பாதுகாப்பதாக தலிபான் அரசு அறிவித்துள்ளது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்தபோது, பீரங்கி, வெடிபொருட்கள் மற்றும் ஏவுகணை -களைப் பயன்படுத்தி பல நூற்றாண்டுகள் பழமையான பௌத்த சிலைகளை பாமியானில் தகர்த்தனர். UNESCO, 2003-இல் உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் பாமியன் பௌத்த சிலைகளின் எச்சங்களைச் சேர்த்தது.
2. ‘அம்பேத்கர் இளம் தொழில்முனைவோர் – வழிகாட்டி திட்டம்’ என்பது கீழ்காணும் எந்த மத்திய அமைச்சகத்தின் புதிய திட்டமாகும்?
அ) சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம்
ஆ) நிதி அமைச்சகம்
இ) பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
ஈ) கல்வி அமைச்சகம்
- கூட்டு மூலதன நிதிய (VCF) திட்டமான அம்பேத்கர் இளம் தொழில்முனைவோர் திட்டமானது சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் திட்டமாகும். இது SC மற்றும் OBC-களைச்சேர்ந்த ஆர்வமுள்ள தொழில்முனை -வோருக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டது.
- இத்திட்டத்தின் செயல்திறன் திருப்திகரமாக இல்லாததால், அமைச்சகம் ‘வழிகாட்டி’ திட்டத்தைத் தொடங்கவுள்ளது.
3. கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை அமைக்க, இந்தியா, எந்த நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
அ) ஜப்பான்
ஆ) நேபாளம்
இ) இலங்கை
ஈ) வங்காளதேசம்
- கொழும்புவில் நவீன கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை அமைப்பதற்காக இந்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் மின்னணு லிட் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் சாகர் முயற்சியின் ஒருபகுதியாக உள்ளது.
4. 2022 – தேசிய நீர் விருதுகளில், ‘சிறந்த மாநிலம்’ விருதை வென்ற மாநிலம் எது?
அ) உத்தர பிரதேசம்
ஆ) அஸ்ஸாம்
இ) குஜராத்
ஈ) ஒடிஸா
- குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் 2022 – தேசிய நீர் விருதுகளை வழங்கினார். ‘சிறந்த மாநிலம்’ விருது உத்தர பிரதேச மாநிலத்துக்கு வழங்கப்பட்டது.
- நீர்சேமிப்பில் அனைத்து இந்திய மாநிலங்களிலும் உத்தர பிரதேசம் முதலிடத்திலும், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும் உள்ளன. வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், கிழக்கு மண்டலம் மற்றும் மேற்கு மண்டலத்திற்கான சிறந்த மாவட்டப் பிரிவில் உத்தர பிரதேச மாநிலத்தின் முசாபர் நகர், கேரளத்தின் திருவனந்தபுரம், பீகாரின் கிழக்கு சாம்ப்ரான் மாவட்டம் மற்றும் மத்திய பிரதேசத்தின் இந்தூர் ஆகியவை முறையே முதலிடம் பிடித்துள்ளன.
5. ‘வருணா’ என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான இருதரப்பு கடற்படை பயிற்சியாகும்?
அ) பிரான்ஸ்
ஆ) ஜப்பான்
இ) ஓமான்
ஈ) ஐக்கிய அரபு அமீரகம்
- இந்தியாவும் பிரான்சும் அரபிக்கடலில், ‘வருணா’ என்ற இருதரப்பு கடற்படை பயிற்சியின் 20ஆவது பதிப்பை சமீபத்தில் தொடங்கின. இரு கடற்படைகளின் கடற்படை கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், கடற்புற ரோந்து வானூர்திகள், போர் வானூர்திகள் மற்றும் உலங்கு வானூர்திகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்கின்றன.
- இரண்டு கடற்படைகளுக்கும் இடையிலான இருதரப்பு கடற்படைப்பயிற்சிகள் கடந்த 1993இல் தொடங்கப்பட்டன. இந்தப் பயிற்சிக்கு 2001ஆம் ஆண்டு, ‘வருணா’ என்று பெயர்சூட்டப்பட்டது.
6. ‘பிராகிருதி’ என்பது எந்தத் துறையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அண்மையில் வெளியிடப்பட்டது?
அ) நெகிழி மாசுபாடு
ஆ) ஆண், பெண் சமத்துவம்
இ) LGBTQ உரிமைகள்
ஈ) திறன் மேம்பாடு
- மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் ‘பிராகிருதி’ என்ற சின்னத்தை அறிமுகப்படுத்தினார். இது, நெகிழி மாசைக்கட்டுப்படுத்தக்கூடிய சிறிய மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புகிறது. நாட்டில் பயனுள்ள நெகிழிக் கழிவு மேலாண்மையை உறுதிசெய்வதற்காக சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) அமைச்சகம் எடுத்த பல்வேறு பசுமை முயற்சிகளையும் இது எடுத்துக் காட்டுகிறது.
7. உலக நலவாழ்வு அமைப்பின் வளி தர தரவுத்தளத்தின் புதுப்பிப்பின்படி, உலகில் எத்தனை சதவீதத்தினர் நலம் அற்ற காற்றைச் சுவாசிக்கின்றனர்?
அ) 25
ஆ) 49
இ) 75
ஈ) 99
- உலக நலவாழ்வு அமைப்பின் வளி தர தரவுத்தளத்தின் 2022 புதுப்பிப்பின்படி, உலக மக்கள்தொகையில் 99% பேர் WHOஇன் காற்றின் தர வரம்புகளை மீறும் காற்றைச் சுவாசிக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
- தற்போதைய நிலவரப்படி, 117 நாடுகளில் உள்ள 6,000 நகரங்களில் காற்றின் தரம் கண்காணிக்கப்படுகிறது.
8. ஹைட்ரஜனை எரித்து ‘பசுமை’ எஃகு தயாரிக்கும் முன்னோடித் திட்டத்தைத் தொடங்கியுள்ள நாடு எது?
அ) ஆஸ்திரேலியா
ஆ) சுவீடன்
இ) போலந்து
ஈ) இத்தாலி
- கற்கரியாக்க நிலக்கரியை எரிப்பதற்குப்பதிலாக ஹைட்ரஜனை எரித்து அதன்மூலம் எஃகு உற்பத்தியில் ஏற்படும் கார்பன் உமிழ்வைக் குறைக்க சுவீடன் ஒரு சோதனைத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
- HYBRIT அல்லது Hydrogen Breakthrough Iron-making Technology – இது எஃகு நிறுவனமான SSAB, சுரங்க நிறுவனமான LKAB மற்றும் சுவீட அரசுக்குச் சொந்தமான மின் நிறுவனமான Vattenfall ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். உலக எஃகு சங்கத்தின் கூற்றுப்படி, உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு மெட்ரிக் டன் எஃகும் இரண்டு மடங்கு கரியமில வாயுவை வெளியிடுகிறது.
9. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற நீல நைல் நதி உருவாகின்ற நாடு எது?
அ) எத்தியோப்பியா
ஆ) சிலி
இ) மெக்சிகோ
ஈ) தென்னாப்பிரிக்கா
- நைல் நதியின் துணையாறான நீல நைல் நதி எத்தியோப்பியாவில் உள்ள டானா ஏரியில் உருவாகி எத்தியோப்பியா மற்றும் சூடான் வழியாக பயணிக்கிறது.
- சூடானின் சென்னார் மாகாணத்தில், நீல நைல் நதியில் கப்பல் விபத்துக்குள்ளானதில் 23 பேர் இறந்தனர். அவர்கள் அனைவரும் பெண்களாவர். நீல நைல் என்பது ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் மக்களுக்கும் அவர்தம் சரக்குகளுக்குமான ஒரு முதன்மையான போக்குவரத்து பாதையாக திகழ்கிறது.
10. ‘வாக்னர் குரூப்’ என்பது எந்த நாட்டின் தனியார் இராணுவ நிறுவனமாகும்?
அ) அமெரிக்கா
ஆ) ரஷ்யா
இ) ஜெர்மனி
ஈ) சீனா
- ‘வாக்னர் குரூப்’ என்பது ரஷ்யாவின் தனியார் இராணுவ நிறுவனமாகும். பிரிட்டிஷ் இராணுவ உளவுத்துறையின் கூற்றுப்படி, ‘வாக்னர் குழு’வைச் சேர்ந்த 1,000 கூலிப் படையினர் கிழக்கு உக்ரைனுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
- இக்குழு உக்ரைன், சிரியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த எட்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன் மேல் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் எனப் பலமுறை குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 2014இல் கிரிமியாவை ரஷ்யா இணைத்தபோது வாக்னர் குழுமம் முதன்முதலில் செயல்பாட்டிற்கு வந்தது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. எரிசக்தி, பருவநிலை தரவரிசையில் குஜராத், கேரளம், தில்லி முன்னிலை: எரிசக்தி சேமிப்பில் தமிழகம் முதலிடம்
எரிசக்தி, பருவநிலை குறியீடுகளில் மாநிலங்களின் செயல்பாடுகளில் ஒட்டுமொத்த தரவரிசையில் குஜராத், கேரளம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளதாக NITI ஆயோக் அறிவித்துள்ளது. இதில் எரிசக்தி சேமிப்பு பிரிவில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.
NITI ஆயோக்கின் மாநில எரிசக்தி ஆற்றல் மற்றும் பருவநிலை குறியீடு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதை இந்த அமைப்பின் துணைத் தலைவர் Dr. இராஜீவ் குமார் வெளியிட்டார். இந்தத் தரவரிசைப் பட்டியல் குறித்து NITI ஆயோக்கின் கூடுதல் செயலாளர் டாக்டர் இராகேஷ் சர்வால் விளக்கினார். அது வருமாறு: இது, மாநில எரிசக்தி மற்றும் பருவநிலை குறியீடுகளின் முதல் சுற்று. இதில் மாநிலங்களின் செயல்பாடுகள் ஆறு அளவுகோல்கள், குறிகாட்டிகளைக் கொண்டு தரவரிசை செய்யப்பட்டுள்ளது.
இவை பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என மூன்றாக பிரிக்கப்பட்டு தரவரிசை வழங்கப்பட்டுள்ளது.
1. மின்பகிர்மான நிறுவன செயல்பாடு (டிஸ்காம்). 2. மக்களுக்கு எரிசக்தி எளிதில் கிடைத்தல், குறைந்த செலவில் நம்பகத்தன்மையோடு கிடைப்பது. 3. தூய்மை எரிசக்திக்கான நடவடிக்கைகள். 4. எரிசக்தி சேமிப்பு. 5. மின்னுற்பத்தியில் நீடித்த சுற்றுச்சூழல். 6. மின் அளவீடு, மாற்று எரிசக்தி, மின்சார சார்ஜிங் ஆகியவற்றில் புதிய முன்முயற்சிகள் போன்றவை இந்த அளவுகோல்களாகும்.
இதில் இந்த ஆறு அளவுகோல்களிலும் ஒட்டு மொத்தமாக அதிகப் புள்ளிகள் பெற்று தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பெரிய மாநிலங்களில் குஜராத் (50.1 புள்ளிகள்) முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் கேரளம் (49.1 புள்ளிகள்), மூன்றாவதாக பஞ்சாப் (48.6 புள்ளிகள்) இடம் பெற்றுள்ளன. சிறிய மாநிலங்கள் வரிசையில் கோவா (51.4 புள்ளிகள்), திரிபுரா (45 புள்ளிகள்) ஆகிய மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களில் சண்டீகர் (55.7 புள்ளிகள்), தில்லி (55.6 புள்ளிகள்), டாமன் – டையூ (53.2 புள்ளிகள்), புதுச்சேரி (48.5 புள்ளிகள்) ஆகியவையும் முன்னிலையில் உள்ளன. இந்த ஒட்டுமொத்த தரவரிசையில் தமிழ்நாடு 43.4 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. அதே சமயத்தில் எரிசக்தி ஆற்றல் சேமிப்புப் பிரிவில் தமிழகம் 85.4 புள்ளிகள் பெற்று முதல் இடம்பெற்றுள்ளது என்றார் அவர்.
2. 6,029 அரசுப்பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகங்கள், 7,500 ஸ்மார்ட் வகுப்பறைகள் – பள்ளிக் கல்வித் துறையின் 34 அறிவிப்புகள்
ரூ.150 கோடியில் 7,500 திறன் வகுப்பறைகள் (Smart Class Room), உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள், ஆங்கில மொழி ஆய்வகங்கள், செம்மைப் பள்ளிகள் உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பாரம்பரிய கட்டடங்களைப் புதுப்பித்தல், நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள், பள்ளிகளில் காய்கறித் தோட்டம், பள்ளி சதுரங்க ஒலிம்பியாட், கணினித் தேர்வு மையங்கள், நூலகங்களில் Wi-fi வசதி, வயது வந்தோருக்கான புதிய எழுத்தறிவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தார். அதில் இடம்பெற்ற 34 முக்கிய அறிவிப்புகள்:
> திறன் வகுப்பறைகள்: 2022-23ஆம் கல்வியாண்டு தொடங்கி நான்கு ஆண்டுகளில் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் திறன் வகுப்பறைகள் (Smart Class Room) ஏற்படுத்தும் முயற்சியின் முதற்கட்டமாக நடப்பாண்டில் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் 7,500 திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும்.
> உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைத்தல்: 2713 நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள் ரூ.210 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதனால் 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களும் ஆசிரியர்களும் பயன்பெறுவர்.
> பள்ளிப் பராமரிப்புக்கென தனி நிதி: பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள், கழிவறைகளைத் தூய்மை செய்தல், இரவுக்காவல் பணியினை மேற்கொள்ளல் போன்ற சேவைகள் வெளிப்பணியமர்த்துதல் (Outsourcing) வாயிலாக செயல்படுத்தப்படும். அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக இத்திட்டம் 2022-23ஆம் கல்வியாண்டு முதல் ரூ.100 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
> ஆங்கில மொழி ஆய்வகங்கள்: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச, படிக்க, எழுத மற்றும் புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்த 6,029 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் ரூ.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
> விரிவான பள்ளிக் கட்டமைப்புத் திட்டம்: 1000 மாணவர்களுக்கு மேல் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் அனைத்துத் தேவைகளையும் வசதிகளையும் உள்ளடக்கிய முழுமையான கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். முதல் கட்டமாக நடப்பாண்டில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் நிறைவேற்றப்படும்.
> செம்மைப் பள்ளி (School of Excellence): அரசுப் பள்ளி மாணவர்களிலிருந்து அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு கல்வி, கவின்கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு என கல்வி மற்றும் இணைச் செயல்பாடுகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உலகத் தரத்திலான பள்ளி சென்னையில் அமைக்கப்படும். சுமார் ரூ.7 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
> பாரம்பரிய பள்ளிக் கட்டடங்கள் புதுப்பித்தல்: தமிழ் அறிஞர்கள், தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பல்துறை சாதனையாளர்கள், அறிவியல் அறிஞர்கள் படித்த பள்ளிகளும், 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய பள்ளிக் கட்டடங்களும் அவற்றின் தனிச்சிறப்பு மாறாமல் புதுப்பிக்கப்படும்.
நூற்றாண்டு காணும் பள்ளிகளைச் சிறப்பிக்கும் வகையில் நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப்படும். இப்பள்ளி நூலகங்களிலுள்ள அரிய நூல்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் குறித்த ஆவணங்கள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படும். இத்திட்டம் ரூ.25 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்
> பள்ளிக் கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்தல்
> சிறந்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது
> ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி: தமிழர் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம், தொன்மையின் சிறப்பு, குடியேற்றப் பகுதிகளின் காலக்கண்ணாடியென கீழடி, சிவகளை உள்ளிட்ட தமிழகமெங்கும் விரவியிருக்கும் தொல்லியல் தலங்கள் குறித்த தகவல்களை அடுத்த தலைமுறைக்கு சிறப்பாகக் கொண்டு சேர்க்கும் வண்ணம் தொல்லியல் துறை வாயிலாக ஆர்வமுடைய 1000 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் பயிற்சி அளிக்கப்படும்.
> நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள்: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள் மூலம் மாதந்தோறும் அறிவியல் பரிசோதனைகள் உரிய வழிகாட்டுதலுடன் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுவதுடன் மாணவர்களே உருவாக்கிய அறிவியல் கருவிகளும் காட்சிப்படுத்தப்படும். 25 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் ரூ.25 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
> மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா
> கோடைக் கொண்டாட்டம் – சிறப்புப் பயிற்சி முகாம்
> சாரண சாரணியர் முகாம்களுக்கு (Jamboree) நிதி ஒதுக்கீடு
> மாணவர் மன்றங்களைப் புதுப்பித்தல்
> கலைத் திருவிழா
> கணினி நிரல், எந்திரனியல் மன்றங்கள் மற்றும் ஹேக்கத்தான்: மாறிவரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தொழில் நுட்ப அறிவு மற்றும் கணினி மொழி மீதான ஆர்வத்தை ஏற்படுத்த கணினி நிரல் மன்றங்கள் (Computer Coding Club) மற்றும் எதிர்காலத் தொழில்நுட்பமான எந்திரனியலைக் (Robotics) கற்றுக்கொள்ள எந்திரனியல் மன்றங்கள் (Robotics Club) பள்ளிகளில் ஏற்படுத்தப்படும். மேலும் இணையப் பாதுகாப்பு மற்றும் Ethical Hacking தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டு ஆண்டுதோறும் மாநில அளவிலான ஹேக்கத்தான் போட்டிகள் நடத்தப்படும்.
> பள்ளிகளில் விழிப்புணர்வு வாரம்
> மாணவர்களின் உடல்நலன் காக்க சிறப்புப் பயிற்சிகள்
> பள்ளிகளில் காய்கறித் தோட்டம்: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு செயல்வழிக் கற்றலை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காய்கறித் தோட்டம் மாணவர்களால் ஏற்படுத்தப்படும். அவற்றில் விளையும் காய்கறிகள், பழங்கள், கீரைகள் அப்பள்ளிகளின் சத்துணவில் பயன்படுத்தப்படும். இத்திட்டம் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்
> பள்ளி சதுரங்க ஒலிம்பியாட்: ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சென்னையில் நடைபெறும் சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே சதுரங்கம் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் வண்ணம் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெறும் மாணவர்கள் சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும். இத்திட்டம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
> சிறார் பருவ இதழ் மற்றும் ஆசிரியர் மாத இதழ்: மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கவும் அவர்களின் உள்ளார்ந்த படைப்புத் திறன்களை வெளிப்படுத்தும் வகையிலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு ஊஞ்சல் இதழும், உயர்வகுப்பு மாணவர்களுக்கு தேன்சிட்டு இதழும் மாதமிருமுறை வெளியிடப்படும். மேலும், ஆசிரியர்களுக்கான படைப்புத் தளத்தை உருவாக்கவும் சிறந்த கற்றல் கற்பித்தல் முறைகளைப் பரிமாறிக் கொள்ளவும் கனவு ஆசிரியர் என்ற மாத இதழ் வெளியிடப்படும். சுமார் ரூ.7 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
> மேல்நிலை கணினிப் பிரிவு மாணவர்களுக்கு கட்டண விலக்கு: அரசு மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக பயிலும் மாணவர்களிடம் 2022-23ஆம் கல்வி ஆண்டிலிருந்து, ரூ.200 தனிக் கட்டணமாக வசூலிக்கப்படுவது முழுமையாக ரத்து செய்யப்படும். இதனால் ஆண்டுதோறும் 3 லட்சம் மாணவர்கள் பயனடைவர். இதற்கென ஆகும் செலவினம் ரூ.6 கோடியை அரசே ஏற்கும்.
> மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இருப்பிடத்திலேயே கல்வி: பல்வகைக் குறைபாடுகள் காரணமாக (Children with multiple disabilities voitorflebo) வர இயலாத 10,146 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி மற்றும் இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கி அவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்த ரூ.8.11 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்
> அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாதாந்திர பெற்றோர் கூட்டம்
> கணினித் தேர்வு மையங்கள் அமைத்தல்: ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வுகளைத் திட்டமிட்ட கால அட்டவணைப்படி விரைந்து நடத்திடவும், போட்டித்தேர்வு நடைபெறாத காலங்களில் அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் வகையிலும் அரசுப் பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் ரூ.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
> நூலக நண்பர்கள் திட்டம்
தமிழகத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் நூலக சேவை கிடைக்கப்பெறாத இடங்களில் நூலக நண்பர்கள் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தன்னார்வலர்கள் வாயிலாக நூலக சேவை வழங்கப்படும். இத்திட்டம் 15 லட்சம் வாசகர்கள் பயன்பெறும் வகையில் ரூ.56.25 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
> மெய்நிகர் நூலகம் (Virtual Reality Library): நூலகங்களைப் பயன்படுத்தும் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய மெய்நிகர் தொழில்நுட்ப நூலகம் (Virtual Reality Library) 76 நூலகங்க ளில் ஏற்படுத்தப்படும். இத்திட்டம் ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.57.20 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
> நூலகங்களில் wi-fi வசதி: தமிழக அரசு பொது நூலகங்களை நாடிவரும் வாசகர்கள் மற்றும் போட்டித் தேர்வு மாணவர்கள் பயன்பெறும் வகையில் 352 நூலகங்களில் இலவச wi-fi இணைய வசதி ஏற்படுத்தப்படும். இத்திட்டம் 75,000 வாசகர்கள் பயன்பெறும் வகையில் ரூ.23.40 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
> TN talk: அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஒருங்கிணைப்பில் சர்வதேச அளவில் பல்துறை நிபுணர்கள், அறிவியல் ஆய்வாளர்கள் மற்றும் புகழ்பெற்ற அறிஞர்களின் உரைகள் மிகச்சிறந்த தொழில்நுட்பம் மற்றும் அரங்க அமைப்புடன் TN talk என்ற பெயரில் நிகழ்த்தப்படும். இணையம் வாயிலாக உலகெங்கும் உள்ள தமிழர்களைச் சென்றடையும் வகையில் இத்திட்டம் ரூ.37.50 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
> நாளைய தலைமுறைக்கு நாட்டுடைமை நூல்கள்: பள்ளி, கல்லூரி மாணவர்கள், கல்வியாளர்கள், இதழாளர்கள் மற்றும் பொது வாசகர்களிடையே தமிழ், கலை மற்றும் பண்பாட்டு ஆர்வத்தை வளர்க்கும் வகையில், தமிழக அரசால் நாட்டுடையாக்கப்பட்ட பல்வேறு அறிஞர்களின் படைப்புகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 20 நூல்கள் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும்.
> கலைக்களஞ்சியங்கள் ஆவணப்பதிப்பு: வரலாறு மற்றும் பண்பாட்டு ஆர்வலர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அறிவியல் தமிழ் ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில், அறிஞர் பெரியசாமி தூரன் அவர்கள் தொகுத்த கலைக்களஞ்சியங்கள் 10 தொகுதிகளும் சிறார் களஞ்சியங்கள் 10 தொகுதிகளும் ஆவணப்பதிப்பாக ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும்.
> நூற்றாண்டு காணும் படைப்பாளிகளின் நூல் வெளியீடு: நூற்றாண்டு காணும் படைப்பாளிகளின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளைப் போற்றும் வகையில் அவர்தம் எழுத்துத்திறன் மற்றும் சமூகப் பங்களிப்பு போன்றவற்றை இளைய தலைமுறையினர் உணர்ந்துகொள்ளும் வகையில் அவர்களது தலைசிறந்த படைப்புகள் தெரிவுசெய்யப்பட்டு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும். இத்திட்டத்தின் வாயிலாக குழந்தைகள், இலக்கிய மற்றும் நாடக ஆர்வலர்கள் பயன்பெறுவர்.
> வயது வந்தோருக்கான புதிய எழுத்தறிவுத் திட்டம்: தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத 4.80 லட்சம் நபர்களுக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிடும் வகையில் ரூ.9.83 கோடி மதிப்பீட்டில் புதிய எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
3. தமிழ்நாடு மாநில காட்டுயிர் வாரியத்துக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்
தமிழ்நாடு மாநில காட்டுயிர் வாரியத்துக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் தலைமையிலான காட்டுயிர் வாரிய உறுப்பினர்களாக, சமஉ கம்பம் இராமகிருஷ்ணன், உதய சூரியன், ஐ பி செந்தில்குமார் ஆகிய மூவர் நியமிக்கப்பட்ட -னர். அரசுசாரா உறுப்பினர்களாக சுற்றுச்சூழல் ஆர்வலர் -கள் பிரதிம் ராய், ஓசை காளிதாசன், இராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1. ‘Mes Aynak site’ and ‘Buddhas of Bamiyan’, which were seen in the news, are located in which country?
A) Nepal
B) China
C) Afghanistan
D) India
- ‘Mes Aynak site’ and ‘Buddhas of Bamiyan’ are located in Afghanistan. The Taliban regime in Afghanistan has announced that it would protect the ancient Buddha statues in Mes Aynak.
- When Talibans ruled Afghanistan, they destructed the centuries-old Buddha statues in Bamiyan using artillery, explosives, and rockets. UNESCO included the remains of the Bamiyan Buddhas in its list of world heritage sites in 2003.
2. ‘Ambedkar Young Entrepreneur (AYE)-Mentor program’ is a new scheme of which Union Ministry?
A) Ministry of Social Justice and Empowerment
B) Ministry of Finance
C) Ministry of Women and Child Development
D) Ministry of Education
- The venture capital fund (VCF) scheme was implemented by the Ministry of Social Justice and Empowerment to help aspiring entrepreneurs belonging to SCs and OBCs new businesses. As the performance of the scheme is not satisfactory, the Ministry is set to launch a “mentorship” programme.
3. India signed a MoU with which country to set up Maritime Rescue Co-ordination Centre (MRCC)?
A) Japan
B) Nepal
C) Sri Lanka
D) Bangladesh
- India and Sri Lanka have signed a Memorandum of Understanding for the Indian public sector Bharat Electronics Ltd (BEL) to set up a state-of-the-art Maritime Rescue Co-ordination Centre (MRCC) in Colombo.
- The agreement is a part of India’s SAGAR (Security and Growth for all in the Region) initiative in the Indian Ocean.
4. Which state won the ‘best state’ award at the National Water Awards 2022?
A) Uttar Pradesh 🗹
B) Assam
C) Gujarat
D) Kerala
- President Ram Nath Kovind recently awarded the ‘best state’ award at the National Water Awards 2022.
- Uttar Pradesh topped among all Indian states in terms of water conservation while Rajasthan and Tamil Nadu secured the second and third place, respectively.
- Muzaffarnagar in Uttar Pradesh, Thiruvanathapuram in Kerala, East Champaran district of Bihar and Indore in Madhya Pradesh topped in the Best District Category for the north zone, south zone, east zone and west zone respectively.
5. ‘Varuna’ is the bilateral naval exercise between India and which country?
A) France
B) Japan
C) Oman
D) UAE
- India and France recently commenced their 20th edition of the bilateral naval exercise named ‘Varuna’ in the Arabian Sea.
- Naval ships, submarines, maritime patrol aircraft, fighter aircraft and helicopters of the two navies are participating in the exercise. The bilateral naval exercises between the two Navies were initiated in the year 1993. The exercise was christened as ‘Varuna’ in 2001.
6. ‘Prakriti’, which was recently launched, is mascot to create awareness on which field?
A) Plastic pollution
B) Gender Equality
C) LGBTQ Rights
D) Skill Development
- Union Environment Minister Bhupender Yadav launched “Prakriti”, mascot that spreads awareness about small changes in life that can curb plastic pollution.
- It also highlights various green initiatives taken by Ministry of Environment, Forest & Climate Change and Central Pollution Control Board (CPCB) to ensure effective Plastic Waste Management (PWM) in the country.
7. As per the update of World Health Organization’s air quality database, what percentage of the world breathes unhealthy air?
A) 25
B) 49
C) 75
D) 99
- The 2022 update of the World Health Organization’s air quality database highlights that 99 per cent of the world population breathes air that exceeds WHO air quality limits. As of now, over 6,000 cities in 117 countries are monitoring air quality.
8. Which country has started a pilot project to produce ‘Green’ Steel by burning hydrogen?
A) Australia
B) Sweden
C) Poland
D) Italy
- Sweden has launched a pilot project to reduce the carbon emissions involved in steel production by switching some of that process from burning coking coal to burning hydrogen.
- HYBRIT or Hydrogen Breakthrough Iron-making Technology – is a joint venture between steel giant SSAB, mining company LKAB and Swedish state-owned power firm Vattenfall. As per World Steel Association, every metric ton of steel produced emitted twice that much carbon dioxide.
9. The Blue Nile River, which was seen in the news, originates in which country?
A) Ethiopia
B) Chile
C) Mexico
D) South Africa
- The Blue Nile, a subsidiary of the Nile River originates at Lake Tana in Ethiopia and travels through Ethiopia and Sudan.
- A shipwreck on the Blue Nile River happened in Sudan’s Sennar province has killed 23 people, all of them female. The Blue Nile is an important transport route for people and goods in the African nations.
10. ‘Wagner Group’, is a private military company of which country?
A) USA
B) Russia
C) Germany
D) China
- ‘Wagner Group’, is a private military company of Russia. As per British military intelligence, 1,000 mercenaries from the ‘Wagner Group’ are being deployed to eastern Ukraine.
- The group has been active over the past eight years in Ukraine, Syria and African countries. It has repeatedly been accused of war crimes and human rights abuses. The Wagner Group first went into operation during Russia’s annexation of Crimea in 2014.