அரசாங்கங்களின் வகைகள் Notes 9th Social Science
9th Social Science Lesson 14 Notes in Tamil
14. அரசாங்கங்களின் வகைகள்
- ஒரு அரசாங்கத்தின் முக்கிய நிறுவனம் அரசு ஆகும். இது அரசியல் மற்றும் நிர்வாக குழுக்களைச் சார்ந்த பல உறுப்பினர்களை உள்ளடக்கியதாகும். மக்களுக்கான பொதுநலன் சார்ந்த அரசின் கொள்கைகளைப் பிரதிநிதித்துவப் படுத்துதற்கும் செயல்படுத்துவதற்குமான கருவியாக இது திகழ்கிறது.
- அரசு ஓர் மாநிலத்தின் விருப்பத்தை உணர்ந்து அதனை வெளிப்படுத்தும் விதமாக திட்டங்களை அமைக்கிறது.
- இந்திய அரசியலமைப்பு மற்றும் சட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்ற, நிர்வாக மற்றும் நீதித்துறை அதிகாரங்களை அரசு செயல்படுத்துகிறது.
- அரசாங்கத்தின் உற்புக்களாகச் சட்டமன்றம், நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறை அமைந்துள்ளன. இவ்விறுப்புகள் அரசின் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்துகின்றன.
- ஒற்றை ஆட்சிமுறை, கூட்டாட்சி ஆட்சிமுறை, நாடாளுமன்ற ஆட்சிமுறை மற்றும் ஜனாதிபதி ஆட்சிமுறை என வகைப்படுத்தப்படுகின்றன.
மிகவும் பழமையான அரசாங்கம் எது?
ஐக்கிய பேரரசு காணப்பட்ட முடியாட்சி அமைப்பே மிகவும் பழமையான அரசாங்கம் ஆகும். முடியாட்சியில் அரசரோ அல்லது மகாராணியோ அரசாங்கத்தின் தலைவராவார். ஆங்கில முடியாட்சி என்பது அரசியலமைப்புக்கு உட்பட்ட முடியாட்சி ஆகும். அதாவது அரசின் தலைமையாகவே இருந்தாலும் சட்டமியற்றும் வல்லமை தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்திடமே உள்ளது.
பொருள்
- ஒரு அரசின் நிர்வாக செயல்பாடுகளை அரசாங்கம் குறிக்கிறது. அரசு என்பது, பொதுமக்கள் சார்ந்த, பெரு நிறுவனங்கள் மதம் சார்ந்த கல்வி மற்றும் பிற குழுக்களுக்கு சட்டங்கள் இயற்றி அவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் படைத்த ஓர் அமைப்பாகும்.
ஒற்றை ஆட்சிமுறை
- ஒற்றை ஆட்சிமுறை என்பது இறையாண்மை மிக்க ஓர் அரசு ஒரே நிறுவனமாக இருந்து ஆட்சி செய்வதாகும்.
- மத்திய அரசு அதிகாரம் மிக்கதாகும். நிர்வாக அமைப்புகள் மத்திய அரசினால் ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்களை மட்டுமே செயல்படுத்தும்.
- இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் இலங்கை ஆகியவை ஒற்றை ஆட்சி முறைக்கான உதாரணங்களாகும்.
- அரசு என்னும் பதம், பழைய பிரெஞ்சு வார்த்தையான கவர்னர் (governer) என்பதிலிருந்து இயக்கு , ஆட்சிசெய், வழி நடத்து, ஆள் என்று பொருள் தரும் லத்தீன் வார்த்தையான குபர்னர் (gubernare) என்பதிலிருந்தும் பெறப்பட்டது.
- ஒற்றையாட்சி முறையில் அனைத்து அதிகாரங்களும் ஒரே இடத்தில் மையப்படுத்துகின்றன.
- ஆனால் கூட்டாட்சி அரசு முறையில் அதிகாரமானது, மத்திய அரசு மற்றும் அதன் அமைப்புப் பிரிவுகளுக்குள்ளும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
- ஒற்றையாட்சி முறை அரசியலமைப்பிலும் அதிகாரப் பரவலாக்கம் இருக்ககூடும். ஆனாலும் அதனைக் கூட்டாட்சி முறை எனக் கொள்ளலாகாது.
ஒற்றைஆட்சி முறையின் நிறைகள்
- சிறு நாடுகளுக்குப் பொருத்தமானது
- அதிகாரம் மற்றும் பொறுப்புகளுக்கு இடையில் மோதல்கள் இருப்பதில்லை.
- ஒற்றை ஆட்சி முறை உடனடியாக முடிவெடுத்துத் துரிதமாகச் செயல்படுகிறது.
- ஒற்றை ஆட்சி குறைந்த செலவுடையது
- அரசியலமைப்பு திருத்தங்களை எளிதில் மேற்கொள்ள இயலும்.
- ஒற்றுமை, சீரான சட்டம், கொள்கை மற்றும் நிர்வாகத்தினை உள்ளடக்கியது.
குறைகள்
- மிகப்பெரிய நாடுகளுக்குப் பொருத்தமற்றது.
- மத்திய அரசு பலதரப்பட்ட பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். அதனால் நிர்வாக தாமதங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
- மத்திய அரசு உள்ளூர் பிரச்சினைகள் சார்ந்தும் உள்ளூர் மக்கள் நலனிலும் உள்ளூர் முயற்சிகளிலும் அக்கறை காட்டாது.
- அதிகமான அதிகாரங்கள் குவிக்கப்படுவதால் மத்திய அரசின் சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கவும் கூடும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஒற்றை ஆட்சிமுறை அம்சங்கள்
- பலமான மத்திய அரசு
- மாநில அரசின் மீது மத்திய அரசின் ஆளுமை
- ஒற்றை அரசமைப்பு
- அரசியலமைப்பின் நெகிழ்வுத்தன்மை
- மாநிலங்களின் சமமற்ற பிரதிநிதித்துவம்
- அவசரகால ஏற்பாடுகள்
- ஒற்றைக் குடியுரிமை
- ஒருங்கிணைக்கப்பட்ட ஒற்றை நீதித்துறை
- அகில இந்தியச் சேவைகள்
- ஆளுநர்கள் மத்திய அரசினால் நியமிக்கப்படுதல்
கூட்டாட்சி முறை ஆட்சி
- தேசிய அரசுக்கும் பிராந்திய அரசுக்கும் இடையில் இருக்கும் உறவின் அடிப்படையிலேயே ஒற்றை ஆட்சி முறை என்றும் கூட்டாட்சி முறை என்றும் அரசு வகைப்படுத்தப்படுகிறது.
- அரசியலமைப்பு சட்டத்தின்படி தேசிய அரசும் பிராந்திய அரசுகளும் தங்களது அதிகாரங்களைப் பகிர்ந்து அவரவர் எல்லைக்கு உட்பட்டு சுதந்திரமாகச் செயல்படுவது கூட்டாட்சி முறை ஆட்சியாகும்.
- ஐக்கிய அமெரிக்க நாடுகள், சுவிட்சர்லாந்து , ஆஸ்திரேலியா, கனடா, நஷ்யா, பிரேசில், அர்ஜெண்டினா ஆகிய நாடுகள் கூட்டாசி முறையை கொண்டவை.
- கூட்டாட்சி முறையில் தேசிய அரசை மைய அரசு அல்லது மத்திய அரசு என்றும் பிராந்திய அரசை மாநில அரசு அல்லது மாகாண அரசு என்றும் அழைக்கின்றனர்.
கூட்டாட்சியின் நிறைகள்
- உள்ளூர் சுய ஆட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு இடையே சமரசம் ஏற்படுத்துதல்
- மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு, நிர்வாகத் திறன்கள் மேம்பட வழிவகுக்கிறது.
- மிகப் பெரிய நாடுகள் தோன்றுவதற்கு வழி செய்கிறது
- அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படுவதால் மத்திய அரசின் சர்வாதிவதிகாரப் போக்கைத் தடுக்கிறது.
- மிகப்பெரிய நாடுகளுக்குப் பொருத்தமானது
- பொருளாதார மற்றும் பண்பாட்டு முன்னேற்றங்களுக்கு நன்மை அளிக்கிறது.
ஒற்றையாட்சி முறை மற்றும் கூட்டாட்சி முறைகளுக்கு இடையேயான வேறுபாடுகள்
ஒற்றையாட்சி முறை | கூட்டாட்சி முறை |
ஒரேயொரு அரசு அல்லது துணைக் குழுக்கள் | இரண்டு நிலையில் அரசாங்கம் |
பெரும்பாலும் ஒரே குடியுரிமை | இரட்டைக் குடியுரிமை |
துணைக் குழுக்கள் தன்னிச்சையாகச் செயல்பட இயலாது | கூட்டாட்சியின் குழுக்கள் மத்திய அரசுக்கு உட்பட்டவை |
அதிகாரப் பகிர்வு இல்லை | அதிகாரப் பகிர்வு |
மையப்படுத்தப்பட்ட அதிகாரம் | அதிகாரப் பரவல் |
கூட்டாட்சியின் குறைகள்
- ஒற்றையாட்சி முறையோடு ஒப்பிடும்போது கூட்டாட்சி முறை பலவீனமானது.
- கூட்டாட்சி முறை அதிக செலவினம் கொண்டது
- பிராந்திய போக்குகள்தான் பொதுவாக காணப்படும்.
- நிர்வாகச் சமநிலையில் குறைபாடுகள்.
- தேசிய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல்
- அதிகாரப் பகிர்வில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே முரண்பாடு உருவாகிறது.
- இரட்டைக் குடியுரிமை.
- மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்க இயலாது திடமான அரசியலமைப்பு.
- வெளியுறவுக் கொள்கைகளில் சில நேரங்களில் மாநில அரசுகள் தடைகளை ஏற்படுத்துகின்றன.
இந்திய அரசியலமைப்பில் கூட்டாட்சி முறை அம்சங்கள்:
- இரட்டை அரசாங்கம்
- எழுதப்பட்ட அரசியலமைப்பு
- அதிகாரப் பகிர்வு
- அரசியல் அமைப்பின் உயர் அதிகாரம்
நாட்டின் உச்சபட்ச சட்டமாக அரசியலமைப்புச் சட்டம் விளங்குகிறது. மத்திய மாநில அரசுகளால் இயற்றப்படும் சட்டங்கள் அதன் விதிகளுக்கு உட்பட்டு அமைதல் வேண்டும்.
- நெகிழும் தன்மையற்ற அரசியல் அமைப்பு
- சுதந்திரமான நீதித்துறை
- இரண்டு அவை ஆட்சி
நாடாளுமன்ற ஆட்சிமுறை
- நவீன மக்களாட்சி முறைகளை நாடாளுமன்ற ஆட்சிமுறை அதிபர் மக்களாட்சி முறை என இருவகைகளாகப் பிரிக்கலாம்.
- நிர்வாக மற்றும் சட்டமன்ற அமைப்புகளுக்கு இடையே உள்ள தொடர்பின் தன்மையைப் பொறுத்து அரசுகள் இவ்விரு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
- நாடாளுமன்ற ஆட்சி முறையில் சட்டமன்றத்தில் கொள்கைகள் மற்றும் செயல்களுக்கு நிர்வாகத்துறை பொறுப்பேற்கிறது.
நாடுகள் | நாடாளுமன்றங்களின் பெயர்கள் |
இஸ்ரேல் | கெனெஸட் |
ஜெர்மனி | பந்தெஸ்டாக் |
டென்மார்க் | போக்டிங் |
நார்வே | ஸ்டார்டிங் |
ஐக்கிய அமெரிக்க நாடுகள் | காங்கிரஸ் |
- நாடாளுமன்ற ஆட்சிமுறை அமைச்சரவை அரசாங்கம் அல்லது பொறுப்பு அரசாங்கம் அல்லது வெஸ்ட் மினிஸ்டர் அரசாங்க மாதிரி எனக் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
- இவ்வகை ஆட்சிமுறை பிரிட்டன், ஜப்பான் , கனடா, இந்தியா போன்ற நாடுகளின் காணப்படுகிறது.
நாடாளுமன்ற ஆட்சிமுறையின் அம்சங்கள்
- பெயரளவில் மற்றும் உண்மையான நிர்வாகிகள்
- பெரும்பான்மை கட்சி ஆட்சி
- கூட்டுப் பொறுப்புணர்வு
- இரட்டை உறுப்பினர்
- பிரதம மந்திரியின் தலைமை
நாடாளுமன்ற ஆட்சிமுறை நிறைகள்
- சட்டமன்றம் மற்றும் நிர்வாகத் துறைக்கு இடையிலான இணக்கம்
- பொறுப்பான அரசாங்கம்
- சர்வாதிகாரத்தைத் தடுக்கிறது
- பரவலான பிரதிநிதித்துவம்
குறைகள்
- நிலையற்ற அரசாங்கம்
- தொடர்ச்சியற்ற கொள்கைகள்
- அமைச்சரவையின் சர்வாதிகாரம்
- அதிகாரங்களைப் பிரிப்பதில் உள்ள சிக்கல்கள்
பூடானில் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்
மூன்றாம் அரசர் – அடிமைத்தனத்தை ஒழித்தார்.
நான்காம் அரசர் – கம்பீரமான வட்டங்களைத் தூறந்தார்.
ஐந்தாம் அரசர் – குடியரசு தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள்
இந்த மாற்றமானது பரம்பரை மன்னராட்சி முறையிலிருந்து நாடாளுமன்ற மக்களாட்சி முறைக்கு மாறுவதாகும். இவர் தனது 34 ஆண்டுகால அரியணையை துறந்தார். அவரது மகன் பட்டத்து இளவரசர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக் (Jigme Khesar Nangyel Wanchuck) ஐந்தாவது மன்னர் இமயமலைப் பகுதியிலுள்ள இந்த சிறிய முடியரசின் தலைவரானார். இப்போது பூட்டான் ஒரு நாடாளுமன்ற மக்களாட்சி நாடாகும், அரசர் பூட்டானின் அரசமைப்பின்படி மன்னராக உள்ளார்.
அதிபர் மக்களாட்சி முறை
- அதிபர் மக்களாட்சி முறை என்பது சட்டமன்றத்திற்கு பொறுப்பில்லாததாகவும் நாடாளுமன்றம் அற்றதாகவும் நிலைத்த நிர்வாக அற்றதாகவும் நிலைத்த நிர்வாக அமைப்பு உடையதாகவும் இருக்கும்.
- அதிகாரப் பகிர்வு கொள்கையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இவ்வரசு முறை அமெரிக்கா, பிரேசில், இரஷ்யா, இலங்கை போன்ற நாடுகளில் உள்ளது.
ஏப்ரல் புரட்சி மற்றும் நேபாளத்தில் மக்களாட்சி
ஏப்ரல் 2006ல் நேபாளத்தின் துடிப்பான, ஜனநாயகம் சார்ந்த மக்கள் சமூக இயக்கத்தின், தலைவர்கள் ;ஏழு கட்டிகள் கூட்டமைப்பின்’ சார்பில் மக்களுக்கு அழைப்பு விடுத்தனர் (Seven Party Alliance). தலைநகர் காத்மண்டுவின் சுற்றுச் சாலையின் நெடுகிலும் ஏழு இடங்களில் 10 இலட்சம் மக்கள் பங்கு பெறுமாறு ஓர் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இந்த இமாலய அரசின் எதேச்சதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, மக்களாட்சிக்குப் புத்துயிர் அளிக்கப் பல்லாயிரக்கணக்கான குடிமக்கள் கோரினர். முன் எப்போதுமில்லாத இது போன்ற ஒரு நிகழ்வினால் அரசர் ஞானேந்திராவின் முடியாட்சி முடிவு பெற்று, மக்களாட்சிக்கு வழிவகுத்தது.
அதிபர் மக்களாட்சியின் அம்சங்கள்
- அமெரிக்க அதிபர் மாகாணம் மற்றும் அரசின் தலைவராகத் திகழ்கிறார். அரசின் தலைவர் என்பது ஒரு பெயரளவிற்கான பதவியாகும்.
- அரசாங்கத்தின் தலைவராக நிர்வாக அமைப்புகளுக்கு தலைமைதாங்கி வழிநடத்துகிரார்.
- அமெரிக்க அதிபர் வாக்காளர் மன்றத்தினால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒரு கடுமையான அரசியலமைப்புச் சட்டத்திற்கான குற்றச்சாட்டு இருந்தால் மட்டுமே நாடாளுமன்றத்தால் பதவி இறக்கம் செய்ய முடியும்.
- அதிபர் அமைச்சரவையின் உதவியோடு ஆட்சிபுரிகிறார் அல்லது அமைச்சரவையைக் “கிச்சன் கேபினேட்” என்று அழைக்கிறார்கள். இது தேர்ந்தெடுக்கப்படாத துறைசார்ந்த செயலர்களைக் கொண்ட சிறு ஆலோசனை அமைப்பு ஆகும்.
- அதிபரால் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்படும் இவர்கள் அதிபருக்கு மட்டுமே கடமைப்பட்டவர்களாகவும் எந்தநேரத்திலும் பதவியிறக்கம் செய்யப்படுவதற்கு உட்பட்டவர்களாகவும் இருப்பார்கள்.
- மகா சபையின் (காங்கிரஸ்) செயல்பாடுகளுக்கு அதிபரும் அவரது செயலாளர்களும் பொறுப்பேற்க மாட்டார்கள். மகா சபையில் இவர்கள் உறுப்பினராகவும் இருப்பதில்லை கூட்டங்களில் கலந்து கொள்வதும் இல்லை.
- மகா சபையின் கீழவையான பிரதிநிதிகளின் அவையை அதிபரால் கலைக்க இயலாது.
- அதிகாரங்களைப் பிரிக்கும் கோட்பாடு அடிப்படையிலேயே அமெரிக்க அதிபர் முறை விளங்குகிறது. அரசின் சட்டமன்ற, நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறை அதிகாரங்கள் மூன்றும் தனியாக பிரிக்கப்பட்டு சுதந்திரமாக இயங்கும் அமைப்புகளாகும்.
அதிபர் மக்களாட்சி ஆட்சிமுறை
நிறைகள்
- ஜனநாயகமானது
- அதிபரின் முறையான கட்டுப்பாடு
- முடிவெடுத்தலை மேம்படுத்துதல்
- மாகாண அரசாங்கம்
குறைகள்
- சர்வாதிகாரமாகச் சிதையும் வாய்ப்பு
- நிர்வாக மற்றும் சட்டமன்றத்திற்கு இடையிலான இணக்கமற்ற உறவு
- சட்டமன்றம் மற்றும் நிர்வாகக் குழுவுக்கு இடையிலான நல்லுறவின்மை
ஆட்சியின் கருத்தமைவு
அரசாங்கத்திலிருந்து ஆட்சிக்கு
- நல்ல அரசு என்பது பொது விவகாரங்களையும் பொது வளங்களையும் பொது நிறுவனங்கள் பயன்படுத்தும் விதத்தைக் குறிப்பாக சர்வதேச வளர்ச்சி இலக்கியத்தில் தனித்துவமிக்க ஒரு சொல்லாகப் பயன்படுகிறது.
- ஆட்சி என்பது முடிவுகள் எடுக்கும் செயல்முறை மற்றும் முடிவுகளைச் செயல்படுத்தும் முறைகளைக் குறிப்பதாகும்.
- அரசு மற்றும் ஆட்சி என்பது ஒரு நிறுவனம், அமைப்பு அல்லது ஒரு மாநிலத்தின் மீது அதிகாரத்தைப் பயன்படுத்தும் இணைச்சொற்கள் ஆகும்.
நல் ஆட்சியின் பண்புகள்
- பங்கேற்பு
- சட்டத்தின் ஆட்சி
- வெளிப்படைத்தன்மை
- விரைவான நேர்மறையான வினையாற்றல்
- கருத்தொற்றுமை
- சமத்துவம்
- திறமை மற்றும் செயல்திறன்
- பொறுப்புடைமை
நாடாளுமன்ற மற்றும் அதிபர் மக்களாட்சி இடையிலான வேறுபாடுகள்
அதிபர் மக்களாட்சி முறை | நாடாளுமன்ற ஆட்சிமுறை |
குடியரசுத்தலைவர் மக்களால் நேரசியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் | பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் பிரதம மந்திரியாவார் |
அதிபரே அதிகாரம் படைத்தவர் | மத்திய சட்டமன்றம் அதிகாரம் படைத்தது |
அதிகாரப் பிரிவினை | அதிகாரப் பிரிவினை மையப்படுத்தப்படாமல் இருப்பது |
சுதந்திரமாகச் செயல்படும் பிரிவுகள் | தனித்தனியான சார்புடைய செயல்பாடுகளைக் கொண்ட பிரிவுகள் |
மாகாணத்தின் தலைவர் அதிபர் ஆவார் | அரசின் தலைவர் – குடியரசுத் தலைவர் |
அரசாங்கத்தின் தலைவரும் அதிபரே | அரசாங்கத்தின் தலைவர் – பிரதம அமைச்சர் |
தனிநபர் தலைமை | கூட்டுத் தலைமை |
மகா சபையின் செயல்களுக்கு அதிபர் பொருப்பை ஏற்க மாட்டார் | கூட்டு மற்றும் தனித்தனியான பொறுப்புகள். |
இந்திய மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே உள்ள உறவு
இந்திய நாடு, இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வழி முறைகளுக்கு உட்பட்டு மத்திய, மாநில அரசுகளுக்கிடையே அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களின் கூட்டமைப்பு ஆகும். மத்திய மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரங்க பகிர்ந்து கொள்ளப்பட்டாலும் அனைத்து விவகாரங்களிலும் முடிவெடுப்பது மத்திய அரசே ஆகும். மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு என்பது;
- சட்ட மன்ற உறவுகள் (பிரிவுகள் 245 முதல் 255 வரை)
- நிர்வாக உறவுகள் (பிரிவுகள் 256 முதல் 263 வரை)
- நிதி உறவுகள் (பிரிவுகள் 268 முதல் 294 வரை)
மத்திய மாநில அரசுகள் சட்டங்கள் இயற்றும் அதிகாரம் படைத்தவை. ஆனாலும் அதிகாரங்கள் வேறுபடுகின்றன. சில குறிப்பிட்ட துறைகளுக்கு சட்டமியற்றும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடம் உள்ளது. இத்துறைகள் மத்தியப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. சில துறைகளுக்கு சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசாங்கத்திற்கு உள்ளது. அத்துறைகளுக்கான சட்டங்களை அந்தந்த மாநில அரசுகளே இயற்றிக் கொள்ளும். இவை மாநிலப்பட்டியல் எனப்படுகிறது. சில துறைகளுக்கு மத்திய அரசும் மாநில அரசும் சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றுள்ளன. இவை பொதுப்பட்டியல் எனப்படுகிறது.
மத்திய பட்டியல்
மத்தியப் பட்டியலில் 100 துறைகள் உள்ளடங்கியுள்ளது. வெளியுறவுத் துறைகள், பாதுகாப்பு ஆயுதப்படைகள், தொலைதொடர்பு, தபால் மற்றும் தந்தி, மாநிலங்களுக்கிடையிலான வியாபாரம் மற்றும் வணிகம்.
மாநிலப் பட்டியல்
மாநிலப் பட்டியல் 61 துறைகளைக் கொண்டுள்ளது. மாநிலத்தின் பொது ஒழுங்கு, காவல் துறை, நீதித்துறை நிர்வாகம், சிறைத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் , விவசாயம் போன்றவை.
பொதுப் பட்டியல்
பொதுப்பட்டியல் 52 துறைகளாக உள்ளன. குற்றவியல் மற்றும் சிவில் நடைமுறைகள், திருமணம் மற்றும் விவாகரத்து, பொருளாதாரம் மற்றும் சிறப்புத் திட்டமிடல் , செய்தித்தாள், புத்தகங்கள் மற்றும் அச்சகங்கள், மக்கள் தொகை கட்டுப்பாடு ஆகியன.
மொத்த தேசிய மகிழ்ச்சி (Gross National Happiness GNH)
- மொத்த தேசிய மகிழ்ச்சி என்பது தற்போது வளர்ந்து வரும் ஓர் தத்துவமாகும். இது ஒரு குறுப்பிட்ட நாட்டில் உள்ள மொத்த மகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு குறியீடு ஆகும்.
- பூட்டான் அரசின் அரசமைப்பில் இடம் பெற்றுள்ள இக்கருத்து ஜூலை 18, 2008ல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
- மொத்த தேசிய மகிழ்ச்சி என்னும் பதத்தைப் பூட்டானின் நான்காம் அரசரான ஜிக்மே சிங்கியே வான்சுக் அவர்களால் 1970இல் உருவாக்கப்பட்டது.
- மொத்த தேசிய மகிழ்ச்சி நிலையான மற்றும் சமமான சமூக பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பு, பண்பாடு மற்றும் நல்ல ஆட்சி ஆகியவற்றை மையக் கருத்தாகக் கொண்டுள்ளது.
- இயற்கை மற்றும் பாரம்பரிய மதிப்புகளுக்கிடையே இசைவை வலியுறுத்தும் வகையில் மக்களிடையே கூட்டு மகிழ்ச்சியை ஏற்படுத்துவது அரசின் இலக்காக இருக்க வேண்டும்.