Tnpsc General Tamil Previous Question Paper 5

Tnpsc General Tamil Previous Question Paper 5

Tnpsc General Tamil Previous Question Paper 5: Tnpsc Aspirants can use this opportunity to check Tnpsc General Tamil Previous Question Papers For Tnpsc Exam Preparation. General Tamil Previous Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Previous Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்: தண்மை

(அ) குளிர்ச்சி

(ஆ) வெம்மை

(இ) கடுமை

(ஈ) மென்மை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) வெம்மை

தண்மை என்பதன் பொருள் குளிர்ச்சி. எனவே இதன் எதிர்ச்சொல் “வெம்மை” ஆகும்.

2. “வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” எனப் பாடியவர்

(அ) பாரதியார்

(ஆ) பாரதிதாசன்

(இ) கவிமணி

(ஈ) நாமக்கல் கவிஞர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) பாரதிதாசன்

“வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” பாரதிதாசன்.

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” – பாரதியார்

3. பொருத்துக:

நூல் நூலாசிரியர்

அ. சிலப்பதிகாரம் – 1. திருத்தக்கதேவர்

ஆ. மணிமேகலை – 2. நாதகுத்தனார்

இ. சீவகசிந்தாமணி – 3. இளங்கோவடிகள்

ஈ. குண்டலகேசி – 4. சீத்தலைச்சாத்தனார்

அ ஆ இ ஈ

(அ) 2 3 1 4

(ஆ) 3 4 1 2

(இ) 3 4 2 1

(ஈ) 4 1 3 2

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) 3 4 1 2

4. பொருளறிந்து பொருத்துக:

(அ) திங்கள் – 1.நட்சத்திரம்

(ஆ) வேந்தர்-  2.ஆகாயம்

(இ) வானம் – 3. மாதம்

(ஈ) விண்மீன்-  4. அரசர்

அ ஆ இ ஈ

(அ) 1 2 3 4

(ஆ) 2 3 4 1

(இ) 3 4 2 1

(ஈ) 4 1 2 3

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) 3 4 2 1

5. கீழ்வருவனவற்றுள் சரியான இணையைக் கண்டறிக:

(அ) துடிப்பு-கோமகன்

(ஆ) அனுமதி-ஜெயகாந்தன்

(இ) ஆளுகை-டாக்டர்.சி.என்.அண்ணாதுரை

(ஈ) சோணாசலம்-சுஜாதா

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) துடிப்பு-கோமகன்

6. இவற்றில் அறிஞர் அண்ணா கூற்று?

(அ) “பாட்டாளி ஓய்வு பெறுவது சமூக நீதியில் ஒன்று”

(ஆ) “மெய்வைத்த செல்வமெங்கே! மண்டலீகர் தம் மேடை எங்கே”

(இ) “உள்ளத்தே பொருள் இருக்க புறம்பே பொருள் தேடுதல்”

(ஈ) “மன்னருக்குத் தன் தேசமில்லாமல் இறப்பில்லை”

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) “பாட்டாளி ஓய்வு பெறுவது சமூக நீதியில் ஒன்று”

“ஓய்வு என்ற தலைப்பில் அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய கட்டுரையில் “பாட்டாளி ஓய்வு பெறுவது, சமூக நீதியில் ஒன்று, அடிப்படை நீதி! என்று குறிப்பிட்டுள்ளார்.

7. தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க:

(அ) இலக்கியம்-இலக்கு+இயம்

(ஆ) செம்மொழி-செம்மை+மொழி

(இ) தமிழ்மொழி- தமிழ்+மொழி

(ஈ) வேரூன்றிய-வேரூ+ஊன்றிய

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) வேரூன்றிய-வேரூ+ஊன்றிய

வேரூன்றிய- வேர்+ஊன்றிய. “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி புணர்ந்து (ர்+ஊ-ரூ) “வேரூன்றிய” என்றானது.

8. ஆங்கிலச் சொற்களுக்கு நேரான தமிழ்ச்சொற்களை அறிக:

இந்தச் செஞ்சுரி டென்ஷன் நிறைந்தது

(அ) இந்த நூற்றாண்டு பரப்பரப்பானது

(ஆ) இந்த ஆண்டு பதற்றம் நிறைந்தது

(இ) இந்த நூற்றாண்டு மனக்கவலை அளிப்பது

(ஈ) இந்த நூற்றாண்டு மன அழுத்தம் நிறைந்தது

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) இந்த நூற்றாண்டு மன அழுத்தம் நிறைந்தது

9. பொருந்தா இணையைக் கண்டறிக:

(அ) பாண்டியர்-கொற்கை

(ஆ) சோழர்-காவிரிப்பூம்பட்டினம்

(இ) பல்லவர்-விசாகப்பட்டினம்

(ஈ) சேரர்-முசிறி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பல்லவர்-விசாகப்பட்டினம்

தமிழகத்தை ஆண்ட மன்னர்களும் அவர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியிலிருந்த துறைமுகங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. பல்லவரின் துறைமுகம் மாமல்லபுரம் ஆகும்.

10. பிரித்தெழுதுக:

“கரியன்”

(அ) கரு+அன்

(ஆ) கருமை+அன்

(இ) கரிய+அன்

(ஈ) கரி+அன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) கருமை+அன்

கருமை+அன் – பண்புப்பெயர் புணர்ச்சி.

“ஈறுபோதல் விதிப்படி மை விகுதி கெட்டு “கரு+அன்” என்றானது.

“இடையுகரம் இய்யாதல்” என்ற விதிப்படி “கரி+அன்”என்றானது.

யகர உடம்படுமெய் பெற்று கரி+ய்+அன் என்றானது.

“உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “கரி+யன்” என்றாக “கரியன்” என்று புணர்ந்தது.

General Tamil Study Materials

General Tamil Previous Questions Pdf

11. பொருத்துக:

அ. திருக்கோவையார் – 1.சேக்கிழார்

ஆ. திருப்பாவை – 2.மாணிக்கவாசகர்

இ. கலிங்கத்துப்பரணி – 3. ஆண்டாள்

ஈ. பெரியபுராணம் – 4. செயங்கொண்டார்

அ ஆ இ ஈ

(அ) 1 2 3 4

(ஆ) 2 3 4 1

(இ) 4 2 1 3

(ஈ) 2 3 1 4

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) 2 3 4 1

12. “பேசுந் தாய்மொழியின் மாட்டு அன்பில்லா

ஒருவன் தாயையும், நாட்டையும்

பழித்தவனாவான்” – என்று கூறியவர் யார்?

(அ) திரு.விக.

(ஆ) மறைமலையடிகள்

(இ) பரிதிமாற் கலைஞர்

(ஈ)தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) திரு.விக.

13. “புதுநெறிக

ண்ட புலவர்” – என்று பாரதியாரால் போற்றப்பட்ட சிறப்புக்குரியவர் எவர்?

(அ) சேக்கிழார்

(ஆ) தாயுமானவர்

(இ) மாணிக்கவாசகர்

(ஈ) இராமலிங்க அடிகளார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) இராமலிங்க அடிகளார்

14. “இமயம் எங்கள் காலடியில்” என்ற கவிதைத் தொகுப்பு யாரால் எழுதப்பட்டது?

(அ) சிற்பி பாலசுப்பிரமணியம்

(ஆ) தாரா பாரதி

(இ) ஆலந்தூர் கோ.மோகனரங்கன்

(ஈ) சுரதா

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) ஆலந்தூர் கோ.மோகனரங்கன்

“இமயம் எங்கள் காலடியில்”என்ற கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் ஆவார். இந்நூல் தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளது. “நல்ல உலகம் நாளை மலரும்” என்ற நூல் இவருடைய மற்றொரு கவிதைத் தொகுப்பு நூலாகும்.

15. இரண்டு உதடுகள் பொருந்துவதனால் பிறக்கும் எழுத்துகள்

(அ) ய், ர்

(ஆ) க், ங்

(இ) ல், ள்

(ஈ) ப், ம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) ப், ம்

இரண்டு உதடுகள் பொருந்துவதனால் பிறக்கும் எழுத்துகள்-ப்,ம்.

க்,ங்-இவ்விரு மெய்களும் நாவினது முதற்பகுதி அண்ணத்தைத் தொடுவதனால் தோன்றுகின்றன.

ய்-இவ்வெழுத்து நாக்கின் அடிப்பகுதி, மேல்வாயின் அடிப்பகுதியைப் பொருந்துவதனால் தோன்றுகிறது.

ர்,ழ்- இவை மேல்வாயை நாக்கின் நுனி தடவுவதனால் பிறக்கின்றன.

ல்-இது மேல்வாய்ப் பல்லின் அடியை நாவின் ஓரங்கள் தடித்து நெருங்குதவதனால் பிறக்கிறது.

ள்-இது மேல்வாயை நாவின் ஓரங்கள் தடித்துத் தடவுவதனால் பிறக்கிறது.

16. எளிய மக்களை நோக்கிக் கவிதைக் கருவியைத் திருப்பி அமைத்த பெருமை, யாரைச் சாரும்?

(அ) பாரதிதாசன்

(ஆ) பாரதியார்

(இ) நாமக்கல் கவிஞர்

(ஈ) கவிமணி

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) பாரதியார்

17. கீழுள்ள பாரதிதாசன் நூல் பட்டியலில் பொருந்தாத நூல் எது?

(அ) குடும்ப விளக்கு

(ஆ) பாண்டியன் பரிசு

(இ) தேன் மழை

(ஈ) குறிஞ்சித்திட்டு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) தேன் மழை

“தேன்மழை” என்ற நூலின் ஆசிரியர் உவமைக் கவிஞர் சுரதா ஆவார். இந்நூல் தமிழக அரசின் “தமிழ் வளர்ச்சித் துறை” வழங்கும் சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றுள்ளது.

18. கீழ்க்காணும் தொடரில் வழூஉச் சொற்களற்ற தொடரைக் கண்டுபிடி

(அ) வலதுபக்கச் சுவறில் எழுதாதே

(ஆ) வலதுபக்கம் சுவரில் எழுதாதே

(இ) வலப்பக்கச் சுவற்றில் எழுதாதே

(ஈ) வலப்பக்கச் சுவரில் எழுதாதே

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) வலப்பக்கச் சுவரில் எழுதாதே

19. “உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்” என வழங்கப்பெறும் நூல் எது?

(அ) மணிமேகலை

(ஆ) சிலப்பதிகாரம்

(இ) வளையாபதி

(ஈ) குண்டலகேசி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பெயர்கள்: உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், ஒற்றுமைக்காப்பியம், மூவேந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், சிலம்பு, தமிழின் முதல் காப்பியம், சமுதாயக் காப்பியம், சிறப்பதிகாரம்.

20. திருக்குறள் பாயிர இயலில் அமைந்துள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

(அ) ஐந்து

(ஆ) நான்கு

(இ) இரண்டு

(ஈ) மூன்று

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) நான்கு

திருக்குறள்-பாயிரவியலில் நான்கு அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவையாவன: கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை மற்றும் அறன் வலியுறுத்தல்

21. சந்திப்பிழையில்லாத தொடரைக் கண்டறிக

(அ) கைதொழில், ஒன்றைக் கற்றுக்கொள்

(ஆ) கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்

(இ) கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்

(ஈ) கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்

22. இனத்தில் சேராத ஒன்றைச் சுட்டுக:

(அ) அம்பி

(ஆ) பஃறி

(இ) திமில்

(ஈ) புணரி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) புணரி

புணரி-கடல். அம்பி, பஃறி, திமில் – கலம்(கப்பல்).

23. எந்தெந்த நாடுகளில் தமிழர்கள் குடியரசுத் தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்?

(அ) சிங்கப்பூர், மொரிசியசு

(ஆ) இலங்கை, மலேசியா

(இ) அமெரிக்கா, கனடா

(ஈ) தென் அமெரிக்கா, வட அமெரிக்கா

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) சிங்கப்பூர், மொரிசியசு

தமிழர் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் உள்ளாட்சி மன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் உள்ளனர். சிங்கப்பூர், மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் குடியரசுத் தலைவர்களாகவும் தோந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

24. பொருத்தமில்லாத எதிர்ச்சொல்லைக் கண்டுபிடி:

(அ) தேய்ந்து x வளர்ந்து

(ஆ) குழப்பம் x தெளிவு

(இ) நண்பர் x செறுநர்

(ஈ) கரத்தல் x மறைத்தல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) கரத்தல் x மறைத்தல்

கரத்தல் என்றால் “மறைத்தல்” என்பது பொருளாகும். எனவே அது எதிர்ச்சொல் அல்ல.

25. “அகராதி” என்னும் சொல் முதன் முதலாக இடம் பெற்றுள்ள நூல் எது?

(அ) சதுரகராதி

(ஆ) திருமந்திரம்

(இ) திருவருட்பா

(ஈ) திருக்குறள்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) திருமந்திரம்

திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் “அகராதி” என்னும் சொல் முதன்முதலாக இடம் பெற்றுள்ளது. தமிழில் தோன்றிய முதல் அகராதி நூல் வீரமாமுனிவர் இயற்றிய “சதுரகராதி” ஆகும்.

26. கீழ்க்காணும் “வல்லினம் மிகா இடம்” குறித்த இலக்கணக் கூற்றில் பிழையான கூற்று எது?

(அ) வினைத்தொகையில் வல்லினம் மிகாது

(ஆ) உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது

(இ) இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது

(ஈ) நான்காம் வேற்றுமை விரியில் வரும் வல்லினம் மிகாது

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) நான்காம் வேற்றுமை விரியில் வரும் வல்லினம் மிகாது

நான்காம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.

(எ.கா): பள்ளிக்கு+சென்றான்-பள்ளிக்குச்சென்றான்.

கடைக்கு+போனாள்-கடைக்குப்போனாள்

27. கலித்தொகையில் நெய்தற்கலியின் ஆசிரியர் யார்?

(அ) பெருங்கடுங்கோ

(ஆ) கபிலர்

(இ) நல்லந்துவனார்

(ஈ) நல்லுருத்திரன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) நல்லந்துவனார்

கலித்தொகை

திணை பாடியவர்

குறிஞ்சி கபிலர்

முல்லை சோழன் நல்லுருத்திரன்

மருதம் மருதன் இளநாகனார்

நெய்தல் நல்லந்துவனார்

பாலை பெருங்கடுங்கோ

28. பொருத்துக:

ஊர் சிறப்புப்பெயர்

(அ) மதுரை – 1. திருவடிசூலம்

(ஆ) திருநெல்வேலி – 2. கடம்பவனம்

(இ) சிதம்பரம் – 3. வேணுவனம்

(ஈ) திருவிடைச்சுரம் – 4. தில்லைவனம்

அ ஆ இ ஈ

(அ) 1 3 2 4

(ஆ) 2 3 1 4

(இ) 2 3 4 1

(ஈ) 4 2 3 1

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) 2 3 4 1

29. “கா” எனும் சொல்லின் பொருள் பின்வருவனவற்றுள் எது?

(அ) சோலை

(ஆ) ஆறு

(இ) மலை

(ஈ) காடு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) சோலை

ஓரெழுத்து ஒரு மொழியில் “கா” என்றால் “சோலை” என்பது பொருளாகும்.

30. கம்பராமாயணத்தின் ஐந்தாவது காண்டம்

(அ) ஆரண்ய காண்டம்

(ஆ) சுந்தர காண்டம்

(இ) கிட்கிந்தா காண்டம்

(ஈ) யுத்த காண்டம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) சுந்தர காண்டம்

கம்பராமாயணம்:

1.பாலகாண்டம். 2.அயோத்தியா காண்டம். 3.ஆரண்ய காண்டம். 4.கிட்கிந்தா காண்டம். 5.சுந்தர காண்டம். 6.யுத்த காண்டம்

31. இலக்கணக் குறிப்பறிதல்

“நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே”

கூற்று (A): செய்யுளிசையளபெடை

காரணம் (R): ஒரு சீரில் இயல்பாக உள்ள நெட்டெழுத்து அளபெடுத்து, அளபெடைக் குறியை நீக்கினால் செய்யுளில் சீர், தளை கெடும்.

(அ) (A) சரி (R) ஆனால் தவறு

(ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்குச் சரியான விளக்கம்

(இ) (A) தவறு ஆனால் (R) சரி

(ஈ) (A) மற்றும் (R) இரண்டும் தவறு

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) (A) சரி (R) ஆனால் தவறு

32. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக:

“தமிழக அரசு சிறந்த கலைஞர்களைக் கௌரவிக்கிறது”

(அ) செயப்பாட்டு வாக்கியம்

(ஆ) தொடர் வாக்கியம்

(இ) கலவை வாக்கியம்

(ஈ) செய்வினை வாக்கியம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) செய்வினை வாக்கியம்

33. விகுதிப் பெற்றுள்ள தொழிற்பெயரைக் கண்டறிக:

(அ) தொண்டு

(ஆ) கூத்து

(இ) நசை

(ஈ) ஆட்டம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) ஆட்டம்

தொழிற்பெயர் விகுதிகள்: தல், அல், அம்,ஐ,கை,வை, கு,பு,உ,தி.சி,வி,உள்,காடு, பாடு, அரவு, ஆனை, மை, து என்ற 19 விகுதிகளும் பிறவுமாம்.

ஆட்டம்-ஆடு+அம்

34. கொடுக்கப்பட்டுள்ள செய்யுளில் அடிக்கோடிட்ட சொற்களுக்குப் பொருத்தமான இலக்கணக் குறிப்பைக கண்டறிதல்

“எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெருந் தமிழணங்கே”

(அ) உம்மைத் தொகை, வினைத்தொகை

(ஆ) முற்றும்மை, பண்புத்தொகை

(இ) இழிவு சிறப்பும்மை, உயர்வு சிறப்பும்மை

(ஈ) வினைத்தொகை, பண்புத்தொகை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) முற்றும்மை, பண்புத்தொகை

எத்திசையும்-முற்றும்மை.

பெருந்தமிழ்-பண்புத்தொகை (பெருமை+தமிழ்)

35.பொருந்தா இணையைக் கண்டறிக:

(அ) கலை-வித்தை

(ஆ) கழை-மூங்கில்

(இ) களை-முகத்தின் ஒளி

(ஈ) காளை-மேகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) காளை-மேகம்

36. கீழ்க்காணும் சொற்களும் “யானை” என்னும் பொருள் குறிக்காத சொல்:

(இ) கரி

(ஆ) களிறு

(இ) வேழம்

(ஈ) கேழல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) கேழல்

கேழல்-பன்றி

37. செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக்குறிப்பு காண்க:

(அ) முற்றும்மை

(ஆ) உயர்வு சிறப்பும்மை

(இ) எண்ணும்மை

(ஈ) இழிவு சிறப்பும்மை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) இழிவு சிறப்பும்மை

38. கீழ்க்காண்பனவற்றுள் எந்த நூல் முடியரசன் கவிதை நூலில் இல்லாதது?

(அ) பூங்கொடி

(ஆ) இயேசு காவியம்

(இ) காவியப்பாவை

(ஈ) வீரகாவியம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) இயேசு காவியம்

இயேசு காவியம்-கண்ணதாசன்

39. “தென்னிந்தியாவின் ஏதென்ஸ்” என்னும் புகழ்மிக்க நகரம் எது?

(அ) திருநள்ளாறு

(ஆ) திருநெல்வேலி

(இ) தஞ்சாவூர்

(ஈ) மதுரை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) மதுரை

40. ரூபாயத் – என்ற சொல்லின் பொருள்

(அ) பணம்

(ஆ) பாட்டு

(இ) மூன்றடிச்செய்யுள்

(ஈ) நான்கடிச் செய்யுள்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) நான்கடிச் செய்யுள்

“ரூபாயத்” என்றால் நான்கடிச் செய்யுள் என்பது பொருளாகும். இக்கவிதை நூலை எழுதியவர் பாரசீகத்தைச் சேர்ந்த உமர்கய்யாம் ஆவார். தமிழில் இக்கவிதை நூலை கவிமணி தேசிகவிநாயகனார் மொழிபெயர்த்துள்ளார்.

41. “கோதைவில் குரிசில் அன்னான்”

– இப்பாடலடி யாரைக் குறிக்கிறது?

(அ) சிவன்

(ஆ) இராமன்

(இ) அருச்சுனன்

(ஈ) இலக்குவன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) இராமன்

“கோதைவில் குரிசில் அன்னான்”

பொருள்:கோதண்டம் என்னும் வில்லேந்திய, ஆடவரில் நல்லவனாகிய இராமபிரான். கம்பராமாயணம்-அயோத்தியாக் காண்டம் (குகப்படலம்).

42. பொருந்தாத இணையினைக் காண்க:

(அ) யாதும் ஊரே யாவரும் கேளிர்-கணியன் பூங்குன்றனார்.

(ஆ) கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது – நாமக்கல் கவிஞர்

(இ) மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டும்-கவிமணி

(ஈ) தேனொக்கும் செந்தமிழே நீ கனி-பாரதியார்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) தேனொக்கும் செந்தமிழே நீ கனி-பாரதியார்

“தேனொக்கும் செந்தமிழே நீ கனி நான் கிளி,

வேறென்னவேண்டும் இனி!” – பாரதிதாசன்

43. “தமிழ் செய்யுள் கலம்பகம்” இது யார் தொகுப்பு?

(அ) மறைமலை அடிகளார்

(ஆ) திரு.வி.க

(இ) க.சு.பிள்ளை

(ஈ) ஜி.யூ.போப்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) ஜி.யூ.போப்

ஜி.யூ.போப் அவர்கள், உயர்ந்த பண்பாடுகளை விளக்கும் 600 செய்யுள்களை நீதி நூல்களில் இருந்து ஆய்ந்தெடுத்து “தமிழ்ச்செய்யுட்கலம்பகம்” என்னும் நூலாகத் தொகுத்ததுடன் அந்தப் பாக்களுக்கு விளக்கங்களும் கொடுத்துள்ளார்.

44. கீழ்க்காணும் நூல்களில் பாரதிதாசனால் எழுதப்படாதது எந்த நூல்?

(அ) இசையமுது

(ஆ) கண்ணகி புரட்சிக்காப்பியம்

(இ) தமிழியக்கம்

(ஈ) தமிழ்ப்பசி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) தமிழ்ப்பசி

“தமிழ்ப் பசி” என்ற கவிதை நூலின் ஆசிரியர் க.சச்சிதானந்தன் ஆவார். இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஆவார். இவருடைய பிற படைப்புகள் ஆனந்தத்தேன் (கவிதைத் தொகுதி) அன்னபூரணி (புதினம்). ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். இவர் மகாவித்துவான் நவநீதகிருட்டிண பாரதியாரின் மாணவர் ஆவார்.

45. திருநாவுக்கரசரைக் குறிப்பிடாத பெயர் எது?

(அ) தருமசேனர்

(ஆ) தாண்டகவேந்தர்

(இ) தம்பிரான் தோழர்

(ஈ) வாகீசர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) தம்பிரான் தோழர்

“தம்பிரான் தோழர்” என்பது சுந்தரமூர்த்தி நாயனாரைக் குறிக்கும் பெயராகும்.

46. “உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி

அடல்உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்” என்னும் ——- வாக்கும் அறுவை மருத்துவத்தை மெய்ப்பிக்கின்றன.

(அ) சீத்தலைச்சாத்தனார்

(ஆ) மாணிக்கவாசகர்

(இ) கம்பர்

(ஈ) திருமூலர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) கம்பர்

47. ஒரு பாடலில் சொல் பிரிவுறாது நின்று பலபொருள் தருவது

(அ) சிலேடை

(ஆ) செம்மொழிச் சிலேடை

(இ) பிரிமொழிச் சிலேடை

(ஈ) பிறிதுமொழிதல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) செம்மொழிச் சிலேடை

ஒரு சொல் அல்லது தொடர் பல பொருள்படும்படி அமைவது சிலேடை எனப்படும். இரு இரண்டு வகைப்படும்

1.செம்மொழிச்சிலேடை: தொடர்ச் சொற்கள் ஒரே விதமாக அமைந்து பல பொருள் தருவதாகும்.

2. பிரிமொழிச் சிலேடை: ஒரு வகையில் பொருள் தரும் தொடரை வேறு வகையில் பிரித்து எழுதும் போது வேறு கொருள் தருவதாகும்.

48. “தற்குற்றம் வருவது ஓரான் புனைமலர்ச் சார்பால் அன்றி

அற்குற்ற சூழற்கு நாற்றம் இல்லையே என்றான் ஐயன்”

– இதில் “அல்கு” என்பதன் பொருள்.

(அ) மருள்

(ஆ) இருள்

(இ) உருள்

(ஈ) திரள்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) இருள்

அல்கு-இருள்

49. வாக்கிங் போகும்போது மொபைல் யூஸ் பண்ண வேண்டாம் – சரியாக மொழிபெயர்க்கப்பட்ட வாக்கியத்தைக் கண்டறிக.

(அ) நடைபயிற்சி செய்யும் போது செல்பேசியைப் பயன்படுத்த வேண்டாம்.

(ஆ) நடைபயிற்சி போகும் போது அலைபேசியைப் பயன் படுத்த வேண்டாம்.

(இ) நடைபயிற்சி போகும் போது தொலைபேசியைப் பயன்படுத்த வேண்டாம்

(ஈ) நடைபயிற்சியின் போது இணையதளம் பயன்படுத்த வேண்டாம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) நடைபயிற்சி போகும் போது அலைபேசியைப் பயன் படுத்த வேண்டாம்.

50. பொருத்துக:

பொருத்தமான இடைநிலையைத் தேர்க:

அ. வருவான் – 1.இறந்தகால இடைநிலை

ஆ. காணான் – 2.நிகழ்கால இடைநிலை

இ. பார்த்தான் – 3.எதிர்கால இடைநிலை

ஈ. நடக்கிறான் – 4.எதிர்மறை இடைநிலை

அ ஆ இ ஈ

(அ) 3 4 2 1

(ஆ) 4 1 3 2

(இ) 3 4 1 2

(ஈ) 1 2 4 3

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) 3 4 1 2

வருவான்-இதில் அமைந்துள்ள இடைநிலை “வ்”.

ப்,வ் – எதிர்கால இடைநிலைகள்.

காணான்-இதில் அமைந்துள்ள இடைநிலை “ஆ”.

ஆ-எதிர்மறை இடைநிலை.

பார்த்தான்-இதில் அமைந்துள்ள இடைநிலை “த்”

த்.ட்,ற்,இன்-இறந்தகால இடைநிலைகள்.

நடக்கிறான்-இதில் அமைந்துள்ள இடைநிலை “கிறு”.

கிறு,கின்று,ஆ,நின்று-நிகழ்கால இடைநிலைகள்

51. பொருத்துக:

அ. கஃஃசு – 1.இன்னிசையளபெடை

ஆ. உழா அர் – 2.ஒற்றளபெடை

இ. உண்பதூஉம் – 3.சொல்லிசையளபெடை

ஈ. உரனசைஇ – 4.செய்யுளிசைளபெடை

அ ஆ இ ஈ

(அ) 2 1 3 4

(ஆ) 2 4 1 3

(இ) 3 1 4 2

(ஈ) 3 4 2 1

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) 2 4 1 3

கஃஃசு-ஒற்றளபெடை.

உழா அர்-செய்யுளிசை அளபெடை.

உண்பதூஉம்-இன்னிசையளபெடை.

உரனசைஇ-சொல்லிசை அளபெடை.

ஓற்றளபெடை-ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்,வ்,ய்,ல்,ள் மற்றும் ஃ ஆகிய 11 எழுத்துகளும் மிக்கு ஒலிப்பது ஆகும்.

செய்யுளிசை அளபெடை:ஈரசை சீர்களாக இருக்கும். உழா/அர்.

இன்னிசை அளபெடை:மூன்று அசைகளைக் கொண்ட காய்ச்சீராக இருக்கும். உண்/பதூ/ உம்.

சொல்லிசை அளபெடை:பெரும்பாலும் “இ” என்ற எழுத்தில் முடிந்திருக்கும். உரனசைஇ.

52. எதிர்ச்சொல்:

“இடும்பை” என்பதற்குப் பொருத்தமான எதிர்ச்சசொல்லைக் கண்டுபிடி.

(அ) துன்பம்

(ஆ) இன்பம்

(இ) கோபம்

(ஈ) பொறுமை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) இன்பம்

‘இடும்பை’ என்றால் துன்பம் என்பது பொருளாகும். எனவே “இன்பம்” என்பது அதன் எதிர்ச்சொல்லாகும்.

53. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்:

வாழை,வாளை,வாலை

(அ) மரம்,மீன்,இளம்பெண்

(ஆ) விலங்கு,மரம்,பூப்பருவம்

(இ) செடி,விலங்கு,மரம்

(ஈ) பூ,செடி,விலங்கு

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) மரம்,மீன்,இளம்பெண்

54. பிழையற்ற தொடர் எது?

(அ) கயிறுக் கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்

(ஆ) கயிற்றுக் கட்டிலில் தன்மை மறந்து உறங்கினான்

(இ) கயிறு கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்

(ஈ) கயிற்று கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) கயிற்றுக் கட்டிலில் தன்மை மறந்து உறங்கினான்

55. சரியானவற்றைத் தெரிந்து எழுதுக:

(அ) புதுமைப்பித்தன்-அக்கரை பச்சை

(ஆ) முல்லை சக்தி-வெள்ளிஇரவு

(இ) டாக்டர்.மு.வரதராசன்-கொலு பொம்மை

(ஈ) ஜீவா-பொன்னகரம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) முல்லை சக்தி-வெள்ளிஇரவு

56. முதுகுடிப் பிறந்த மகளிரும் நிகரற்ற வீர வாழ்க்கையினராவர்.

– இவ்வாக்கியம் எவ்வகை வாக்கியத்தைச் சார்ந்தது?

(அ) வியப்பு வாக்கியம்

(ஆ) வினா வாக்கியம

(இ) செய்தி வாக்கியம்

(ஈ) கட்டளை வாக்கியம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) செய்தி வாக்கியம்

57. கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியான வாக்கியத்தைத் தேர்ந்து எழுதுக:

(அ) தம் அன்பினில் கும்பிடுதல் கூடும் கடன்

(ஆ) அன்பினில் கும்பிடுதல் தம் கடன் கூடும்

(இ) கூடும் அன்பினில் கும்பிடுதல் தம் கடன்

(ஈ) கூடும் தம் கடன் கும்பிடுதல் அன்பினில்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) கூடும் அன்பினில் கும்பிடுதல் தம் கடன்

58. “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே”

– எனும் சொற்றொடர் இடம் பெறும் நூல்?

(அ) அகநானூறு

(ஆ) புறப்பொருள் வெண்பாமாலை

(இ) நாலடியார்

(ஈ) நற்றிணை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) புறப்பொருள் வெண்பாமாலை

“பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்

வையகம் போர்த்த வயங்கொலிநீர் – கையகலக்

கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு

முற்றோன்றி மூத்தகுடி” – புறப்பொருள் வெண்பாமாலை.

கரந்தைப்படலம் – 35-வது பாடல்

59. “தமிழ் மொழித் தூய்மை” இயக்கம் – தோன்றிய நூற்றாண்டு

(அ) 21-ஆம் நூற்றாண்டின் தொடக்கம்

(ஆ) 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கம்

(இ) 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம்

(ஈ) 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம்

60. கீழுள்ள நூல் பட்டியலில் பொருந்தா நூல் எது?

(அ) வேதியர் ஒழுக்கம்

(ஆ) சதுரகராதி

(இ) தொன்னூல் விளக்கம்

(ஈ) தமிழியக்கம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) தமிழியக்கம்

ஏனைய மூன்று நூல்களும் வீரமாமுனிவரால் இயற்றப்பட்டவை. “தமிழியக்கம்” என்ற நூல் பாவேந்தர் பாரதிதாசனால் எழுதப்பட்டது.

61. “He is a Prince among the Tamil Poets”

(தமிழ்க் கவிஞர்களின் இளவரசன்) என்று வீரமாமுனிவர் பாராட்டிய புலவர்

(அ) இளங்கோவடிகள்

(ஆ) கம்பர்

(இ) பாரதியார்

(ஈ) திருத்தக்கத்தேவர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) திருத்தக்கத்தேவர்

62. “திருவாசகம்” யாரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது?

(அ) ரேணியஸ்

(ஆ) ஜி.யூ.போப்

(இ) எல்லீசர்

(ஈ) லாசரஸ்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) ஜி.யூ.போப்

ஜி.யூ.போப் அவர்கள் தமது 80-வது வயதில் கி.பி.1900-ஆம் ஆண்டில் திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டார்.

63. இரகசிய வழி எனும் ஆங்கில நூலைத் தழுவி தமிழில் நாடக நூலினை இயற்றியவர் யார்?

(அ) பம்மல் சம்பந்த முதலியார்

(ஆ) சங்கரதாஸ் சுவாமிகள்

(இ) சுந்தரம் பிள்ளை

(ஈ) இலட்சுமண பிள்ளை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) சுந்தரம் பிள்ளை

ஆங்கிலத்தில் லிட்டன் பிரபு என்பவர் எழுதிய “இரகசிய வழி” என்னும் நூலைத் தழுவி பெ.சுந்தரம்பிள்ளை அவர்கள் “மனோன்மணீயம்” என்ற நாடக நூலை இயற்றினார்.

64. பொருத்துக:

நூல் ஆசிரியர் பெயர்

(அ) திரிகடுகம் – 1. விளம்பிநாகனார்

(ஆ) சிறுபஞ்சமூலம் – 2. கணிமேதாவியார்

(இ) ஏலாதி – 3. நல்லாதனார்

(ஈ) நான்மணிக்கடிகை – 4. காரியாசான்

அ ஆ இ ஈ

(அ) 1 4 2 3

(ஆ) 3 2 1 4

(இ) 3 4 2 1

(ஈ) 4 1 3 2

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) 3 4 2 1

65. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக:

“ஆடும் மயிலின் அழகுதான் என்னே!”

(அ) வினா வாக்கியம்

(ஆ) கட்டளை வாக்கியம்

(இ) உணர்ச்சி வாக்கியம்

(ஈ) செய்தி வாக்கியம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) உணர்ச்சி வாக்கியம்

66. இணையாக இல்லாததை எழுதுக:

(அ) பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சி-செய்திப்படம்

(ஆ) ஒரு நிகழ்வை மட்டும் விளக்குவது-விளக்கப்படம்

(இ) கருத்துக்கணிப்பு செய்யப்படுவது-கருத்துப்படம்

(ஈ) கல்வி கற்பிப்பதற்கென உருவானது-கல்விப்படம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) கருத்துக்கணிப்பு செய்யப்படுவது-கருத்துப்படம்

கருத்துப்படம்-கைகளால் வரையப்பட்ட படங்கள் அல்லது பொம்மைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் இயங்குரு படங்கள் “கருத்துப்படம்” என்றழைக்கப்படுகின்றன.

67. வாக்கிய வகையைக் கண்டெழுதுதல்:

குடும்பவிளக்கு பாரதிதாசனால் எழுதப்பட்டது

(அ) செய்வினை வாக்கியம்

(ஆ) கட்டளை வாக்கியம்

(இ) பிறவினை வாக்கியம்

(ஈ) செயப்பாட்டுவினை வாக்கியம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) செயப்பாட்டுவினை வாக்கியம்

68. “திராவிட மொழிகள் ஒட்டுநிலை மொழிகளாகும்” எவ்வகை வாக்கியம்?

(அ) செய்தி வாக்கியம்

(ஆ) கட்டளை வாக்கியம்

(இ) வினா வாக்கியம்

(ஈ) வியப்பு வாக்கியம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) செய்தி வாக்கியம்

69. “Pilgrims Progress” என்னும் நூலினைத் தழுவி எழுதிய தமிழ் நூல் எது?

(அ) மனோன்மணியம்

(ஆ) தேம்பாவணி

(இ) சீறாப்புராணம்

(ஈ) இரட்சணிய யாத்திரிகம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) இரட்சணிய யாத்திரிகம்

ஜான்பன்யன் என்னும் புகழ்பெற்ற ஆங்கில நூலாசிரியர் இயற்றிய “பில்கிரிம்ஸ் புரோகிரஸ்” என்னும் நூலைத் தழுவி, ஹென்றி ஆல்பர்ட் கிருட்டிணபிள்ளை “இரட்சணிய யாத்ரீகம்” என்ற நூலை எழுதினார்.

70. “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” இந்நூலுக்குச் சொந்தமானவர்

(அ) கா.சு.பிள்ளை

(ஆ) ரா.பி.சேதுப்பிள்ளை

(இ) தேவநேய பாவாணர்

(ஈ) கால்டுவெல்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) கால்டுவெல்

71. “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்

நற்றவ வானினும் நனி சிறந்தனவே”

– எனும் பாடலடிகள் யாருடையது?

(அ) புரட்சிக்கவிஞர்

(ஆ) தேசியக்கவி

(இ) காந்தியக் கவிஞர்

(ஈ) கவிமணி

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) தேசியக்கவி

72. “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” இக்கூற்றுக்குரியவர் யார்?

(அ) கம்பர்

(ஆ) கணியன் பூங்குன்றனார்

(இ) ஒளவையார்

(ஈ) இளங்கோவடிகள்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) ஒளவையார்

73. அகர வரிசைப்படி அமைந்துள்ளதைக் கண்டறிக:

(அ) எழிலி, எழில், எழால், எழல்

(ஆ) எழில், எழல், எழால், எழிலி

(இ) எழால், எழில், எழிலி, எழல்

(ஈ) எழல், எழால், எழிலி, எழில்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) எழல், எழால், எழிலி, எழில்

74. “TOLLY” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்தெடுக்க:

(அ) படப்பிடிப்பு

(ஆ) உருப்பெருக்கி

(இ) நகர்த்தும் வண்டி

(ஈ) எதிர்ச்சுருள்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) நகர்த்தும் வண்டி

75. பின்வருவனவற்றுள் வீரமாமுனிவர் எழுதாத நூல் எது?

(அ) தேம்பாவணி

(ஆ) கித்தேரி அம்மாள் அம்மாணை

(இ) செந்தமிழ் இலக்கணம்

(ஈ) ஆசாரக்கோவை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) ஆசாரக்கோவை

ஆசாரக்கோவை-பெருவாயின் முள்ளியார்

76. “துறவை மேல் நெறி” என்று உச்சத்தில் வைத்துப் படைக்கபட்டவை எவை?

(அ) சங்க இலக்கியங்கள்

(ஆ) அற இலக்கியங்கள்

(இ) பக்தி இலக்கியங்கள்

(ஈ) காப்பியங்கள்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) அற இலக்கியங்கள்

77. சங்கம் மருவிய கால நூல்களைக் கீழ்க்கணக்கு எனக்கூறும் பாட்டியல் நூல் எது?

(அ) சிதம்பரப் பாட்டியல்

(ஆ) நவநீதப் பாட்டியல்

(இ) பன்னிரு பாட்டியல்

(ஈ) சுவாமிநாநாதப் பாட்டியல்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) பன்னிரு பாட்டியல்

78. “ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந்தகைத்து”

– எனும் குறளில் வள்ளுவர் எழுத்தாளும் உவமை எது?

(அ) ஆட்டுக்கடா

(ஆ) வேங்கை

(இ) குதிரை

(ஈ) நாய்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) ஆட்டுக்கடா

ஊக்கமுடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேருந் தகைத்து – குறள்:486

பொருள்: ஊக்கம் மிகுந்தவன் போருக்குச் செல்லாமல் அடங்கியிருப்பது. போரிடும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்காகப் பின்வாங்கும் தன்மையாது.

பொருதகர்-ஆட்டுக்கடா

79. “உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்” என்றவர்

(அ) இராமலிங்க அடிகளார்

(ஆ) தாயுமானவர்

(இ) திருநாவுக்கரசர்

(ஈ) சுந்தரர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) இராமலிங்க அடிகளார்

80. பொருத்துதல்:

பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்:

(அ) இகல் – 1. செல்வம்

(ஆ) திரு – 2. ஆட்டுக்கடா

(இ) பொருதகர் – 3. துன்பம்

(ஈ) இடும்பை – 4. பகை

அ ஆ இ ஈ

(அ) 4 1 2 3

(ஆ) 2 4 3 1

(இ) 1 2 3 4

(ஈ) 4 2 1 3

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) 4 1 2 3

81. “பள்ளி வேலை நாட்களை நூற்றெண்பதிலிருந்து

இரு நூறாக உயர்தியவர்” யார்?

(அ) காமராசர்

(ஆ) அண்ணாதுரை

(இ) எம்.ஜி.இராமச்சந்திரன்

(ஈ) ராஜாஜி

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) காமராசர்

82. சந்திப்பிழை இல்லாத தொடரைக் கண்டறிக:

(அ) திரையரங்குகளில் திரைப்படம் காட்ட ஒளி ஒலிப் படக்கருவி பயன்படுகிறது

(ஆ) திரைபடம் மக்களை தன்பால் ஈர்க்கவல்லது.

(இ) கயிறு கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்

(ஈ) செய்திபடங்கள் வாயிலாக நிகழ்வுகளை நம் இருப்பிடத்திலேயே கண்டு களிக்கலாம்.

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) திரையரங்குகளில் திரைப்படம் காட்ட ஒளி ஒலிப் படக்கருவி பயன்படுகிறது

83. பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?

(அ) பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் மாணவர்கள் அங்கத்தினர்

(ஆ) தேர்வு நேரத்தில் அந்நியர் யாரும் நுழையக் கூடாது.

(இ) அலுவலகத்தில் உத்தரவு பெற்று உள்ளே வர வேண்டும்

(ஈ) அலுவலகத்தில் கையூட்டு வாங்கக் சுடாது

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) அலுவலகத்தில் கையூட்டு வாங்கக் சுடாது

84. மரபுப் பிழையற்ற வாக்கியம் எது?

(அ) மயில் கூவியது; குயில் குழறியது

(ஆ) குயில் கூவியது; மயில் முழங்கியது

(இ) குயில் கத்தியது; மயில் அலறியது

(ஈ) குயில் கூவியது மயில் அகவியது

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) குயில் கூவியது மயில் அகவியது

85. “அயர்ந்தவன்” இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க:

(அ) அயர்க

(ஆ) அயர்

(இ) அயர்ந்து

(ஈ) அயர்ந்த

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) அயர்

அயர்-வேர்ச்சொல்

அயர்க-வியங்கோள் வினைமுற்று

அயர்ந்து-வினையெச்சம்

அயர்ந்த-பெயரெச்சம்

86. பொருத்துக:

பட்டியல் I – பட்டியல் II

(அ) ஊண் – 1.மகிழ்வு

(ஆ) ஊன் – 2.சனி

(இ) கலி – 3. உணவு

(ஈ) களி – 4. இறைச்சி

அ ஆ இ ஈ

(அ) 4 3 1 2

(ஆ) 3 4 1 2

(இ) 3 4 2 1

(ஈ) 4 3 2 1

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) 3 4 2 1

87. மரபுப் பிழையற்ற தொடரைக் கண்டுபிடி

(அ) காட்டில் மயில் அகவும் குயில் பேசும்

(ஆ) காட்டில் புலி உறுமும் சிங்கம் முழங்கும்

(இ) காட்டில் யானை கத்தும் நரி ஊளையிடும்

(ஈ) காட்டில் கூகை கூவும் ஆந்தை அலறும்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) காட்டில் புலி உறுமும் சிங்கம் முழங்கும்

88. “DUBBING” என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?

(அ) ஒளிச்சேர்க்கை

(ஆ) ஒளி விலகல்

(இ) ஒலிச்சேர்க்கை

(ஈ) ஒலி மாற்றம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) ஒலிச்சேர்க்கை

89. “உரைநடை எழுதுவது தனது தொழில்” என்ற வகையில் உழைத்தவர்

(அ) மு.வரதராசனார்

(ஆ) ரா.பி.சேதுப்பிள்ளை

(இ) திரு.வி.கல்யாணசுந்தரனார்

(ஈ) கண்ணதாசன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) திரு.வி.கல்யாணசுந்தரனார்

90. இவற்றில் எது திருவள்ளுவருக்கு வழங்காத பெயர்?

(அ) மாதானுபங்கி

(ஆ) பெருநாவலர்

(இ) தேவர்

(ஈ) காளிங்கர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) காளிங்கர்

91. கீழ்வருவனவற்றுள் பண்புத்தொகை அல்லாதன

அ.நெடுநீர். ஆ.உகுநீர். இ.செந்நீர் ஈ.கண்ணீர்

(அ) அ மற்றும் ஆ சரி

(ஆ) ஆ மற்றும் ஈ சரி

(இ) அ,ஆ மற்றும் இ சரி

(ஈ) அ மற்றும் இ சரி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) ஆ மற்றும் ஈ சரி

பண்புத்தொகைகள்:

நெடுநீர்-நெடுமை+நீர்; செந்நீர்-செம்மை+நீர்;.

உகுநீர்-வினைத்தொகை

92. “மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற”

– மேற்கண்ட குறட்பாவில் இடம்பெறும் “ஆகுல” என்ற சொல்லிற்கான ஆங்கிலச் சொல்லைத் தேர்க:

(அ) OVER LOOK

(ஆ) OVER POWER

(இ) OVATION

(ஈ) OVIPARUS

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) OVATION

ஆகுல-ஆரவாரத்தன்மை, Ovation-ஆரவாரம்.

93. பொருத்துக:

சொல் – தளை

(அ) பாரி பாரி – 1. இயற்சீர் வெண்டளை

(ஆ) பலர்புகழ் கபிலர் – 2. நெரொன்றியத்தளை

(இ) தாமரைப்பூ குளத்தினிலே – 3. நிரையொன்றா சிரியத்தளை

(ஈ) அகர முதல – 4. கலித்தளை

அ ஆ இ ஈ

(அ) 3 4 1 2

(ஆ) 3 2 1 4

(இ) 2 3 4 1

(ஈ) 1 4 3 2

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) 2 3 4 1

(அ) பா / ரி / பா / ரி

நேர் நேர் நேர் நேர்

(தேமா)

மா முன் நேர் – நேரொன்றாசிரியத் தளை

(ஆ) பலர் / புகழ் / கபி / லர்

நிரை நிரை நிரை நேர்

(கருவிளம்)

விளமுன் நிரை-நிரையொன்றாசிரியத்தளை

(இ) தா / மரைப் / பூ குளத் / தினி / லே

நேர் நிரை நேர் நிரை நிரை நேர்

(கூவிளங்காய்)

காய்முன் நிரை – கலித்தளை

(ஈ) அக / ர / முத / ல

நிரை நேர் நிரை நேர்

(புளிமா)

மாமுன் நிரை – இயற்சீர் வெண்டளை

94. “ஈன்ற ஒருத்தியையும் பிறந்த நாட்டையும் பேசும் மொழியையும் ஒருவன் “தாய்”, “தாய்”, “தாய்” என்று போற்றுகிறான்” என்னும் கூற்று யாருடையது?

(அ) பாரதியார்

(ஆ) பாரதிதாசன்

(இ) திரு.வி.க.

(ஈ) கம்பன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) திரு.வி.க.

95. விடைத்தேர்க:

“சமூகத்தின் மாற்றத்திற்குச் சிந்தனை விதைகளைத் தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது” என்று கூறிய சமத்துவக் காவலர் யார்?

(அ) தந்தை பெரியார்

(ஆ) டாக்டர்.அம்பேத்கர்

(இ) பேரறிஞர் அண்ணா

(ஈ) காமராசர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) டாக்டர்.அம்பேத்கர்

96. தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் எது?

(அ) கூடங்குளம்

(ஆ) கூரங்குளம்

(இ) கூந்தன்குளம்

(ஈ) வேடந்தாங்கல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) கூந்தன்குளம்

கூந்தன்குளம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. அங்கு சரணாலயத்தில் வாழும் பறவைகளுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக அவ்வூரில் பட்டாசு வெடிப்பதில்லை. மேலும் அவ்வூரில் எந்த விழாக்களிலும் கொட்டு மேளம், பறை அடிப்பதில்லை.

97. இந்தியா மிகப்பெரிய நாடு – எவ்வகை வாக்கியம்?

(அ) தொடர்நிலை வாக்கியம்

(ஆ) தனிநிலை வாக்கியம்

(இ) கலவை வாக்கியம்

(ஈ) கட்டளை வாக்கியம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) தனிநிலை வாக்கியம்

98. பொருத்துக:

(அ) நடந்தான் – 1. தொழிற்பெயர்

(ஆ) நடந்த – 2. வினையெச்சம்

(இ) நடந்து – 3. பெயரெச்சம்

(ஈ) நடத்தல் – 4. வினைமுற்று

அ ஆ இ ஈ

(அ) 4 3 2 1

(ஆ) 2 3 1 4

(இ) 3 4 1 2

(ஈ) 4 2 3 1

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) 4 3 2 1

99. “சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து

தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்

புலனென மொழிப புலன் உணர்ந்தோரே” என்று கூறியவர் யார்?

(அ) நற்கவிராச நம்பி

(ஆ) பவணந்தி முனிவர்

(இ) ஐயனாரிதனார்

(ஈ) தொல்காப்பியர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) தொல்காப்பியர்

தொல்காப்பியர் குறிப்பிடும் “புலன்” என்னும் இலக்கியவகை “பள்ளு” என்ற இலக்கியவகைக்குப் பொருந்தும் என்பர்.

100. பிரித்தெழுதுக:

பரித்தியாகம்

(அ) பரிந்து + யாகம்

(ஆ) பரித்தி+யாகம்

(இ) பரி+தியாகம்

(ஈ) பரிதி+யாகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) பரி+தியாகம்

Exit mobile version