Tnpsc General Tamil Previous Question Paper 18

Tnpsc General Tamil Previous Question Paper 18

Tnpsc General Tamil Previous Question Paper 18: Tnpsc Aspirants can use this opportunity to check Tnpsc General Tamil Previous Question Papers For Tnpsc Exam Preparation. General Tamil Previous Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Previous Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. “தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே வளரவேண்டும்” என இளைஞர்களுக்கு உரைத்தவர் யார்?

(அ) தமிழ்த் தென்றல் திரு.வி.க

(ஆ) பெரியார்

(இ) பாவேந்தர் பாரதிதாசன்

(ஈ) தாராபாரதி

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) தாராபாரதி

2. குமரகுருபரரின் “நீதி நெறி விளக்கம்” என்னும் நூலில் எத்தனை பாடல்களுக்கு பரிதிமாற்கலைஞர் உரையெழுதி உரையாசிரியராகவும் விளங்கினார்?

(அ) முப்பத்து மூன்று

(ஆ) ஐம்பது

(இ) ஐம்பத்தொன்று

(ஈ) ஐம்பத்து மூன்று

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) ஐம்பத்தொன்று

பரிதிமாற் கலைஞர் ரூபாவதி, கலாவதி போன்ற நாடகங்களை எழுதியுள்ளார். “மானவிஜயம்” என்ற இவரது நாடகம் “களவழிநாற்பது” என்ற இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது. “சித்திரகவி” என்ற நூலை எழுதியுள்ளார். குமரகுருபரரின் “நீதிநெறி விளக்கம்” என்ற நூலில் 51 பாடல்களுக்கு உரை எழுதியுள்ளார்.

3. தமிழகத்தில் இன்று காணப்பெறும் குடைவரைக் கோயில்களுள் பழமையானது எங்குள்ளது?

(அ) பிள்ளையார்பட்டி

(ஆ) கழுகு மலை

(இ) திருப்பரங்குன்றம்

(ஈ) ஆனைமலை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) பிள்ளையார்பட்டி

பாண்டியன் செழியன் சேந்தன் கட்டிய பிள்ளையார்பட்டி குடைவரையும் மலையடிக் குறிச்சி குடைவரை கோயில்களே தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயில்கள் எனக் கூறப்படுகின்றன.

4. “தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம் கூடில்லாத பறவை” – என்று பாடியவர் யார்?

(அ) பாவேந்தர் பாரதிதாசன்

(ஆ) உமர் கய்யாம்

(இ) இரசூல் கம்ச தேவ்

(ஈ) க.வைரமுத்து

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) இரசூல் கம்ச தேவ்

நாளை என் தாய்மொழி சாகுமானால், இன்றே நான் இறந்துவிடுவேன். தன் இனத்தையும் மொழியையும்பாடாத கவிதை வேரில்லாத மரம் கூடில்லாத பறவை – இரசூல் கம்சதேவ். “தமிழ்நாட்டு இரசூல் கம்சதேவ்” எனப் பாராட்டப் பெற்றவர் பாரதிதாசன் ஆவார்.

General Tamil Study Materials

General Tamil Previous Questions Pdf

5. “நோய்க்கு மருந்து இலக்கியம்” என்று கூறியவரை தேர்வு செய்க:

(அ) உ.வே.சாமிநாதர்

(ஆ) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

(இ) பரிதிமாற்கலைஞர்

(ஈ) மறைமலை அடிகளார்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

“நோய்க்கு மருந்து இலக்கியம்” என்பது மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனாரின் கூற்றாகும்.

6. “கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

(அ) திருவாசகம்

(ஆ) மதுரைக்காஞ்சி

(இ) பட்டினப்பாலை

(ஈ) தமிழ்விடுதூது

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) திருவாசகம்

மதுரையில் தமிழ்ச்சங்கம் இருந்தது என்பதனை “தமிழ்கெழுகூடல்” என்று புறநானூறும், “தமிழ்வேலி” என்ற பரிபாடலும் “கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்” என்று திருவாசகமும் (மணிவாசகம்) குறிப்பிடுகின்றன.

7. தமிழ், வடமொழி அல்லாது மற்றொரு மொழியிலும் குமரகுருபரர் புலமை மிக்கவராகத் திகழ்ந்தார். அம்மொழி எதுவெனத் தேர்ந்தெடு.

(அ) பாலி

(ஆ) இந்துஸ்தானி

(இ) கன்னடம்

(ஈ) உருது

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) இந்துஸ்தானி

குமரகுருபரர் தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவராகத் திகழ்ந்தார்.

8. “பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய” – இத்தொடரில் உள்ள “துகிர்” என்பதன் பொருளைத் தேர்ந்தெடுக்க.

(அ) மாணிக்கம்

(ஆ) மரகதம்

(இ) இரத்தினம்

(ஈ) பவளம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) பவளம்

“பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய மாமலை பயந்த காமரு மணியும்” – கண்ணகனார். பொருள்: பொன்னும் பவளமும் முத்தும், பெருமலையில் பிறக்கும் மாணிக்கமும் என்பது பொருளாகும்.

9. “தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” இந்த வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

(அ) பெருங்கதை

(ஆ) சீவகசிந்தாமணி

(இ) பதிற்றுப்பத்து

(ஈ) பரிபாடல்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) பதிற்றுப்பத்து

பண்டைத் தமிழகத்தில் கரும்பைப் பிழிவதற்கான எந்திரங்கள் இருந்ததை “தீம்பிழி எந்திரம் பந்தல் வருத்த” என்ற பதிற்றுப்பத்து வரிகள் மூலமாக அறிய முடிகிறது.

10. “உத்தம சோழப் பல்லவர்” என்னும் பட்டம் பெற்றவர்

(அ) கம்பர்

(ஆ) சேக்கிழார்

(இ) புகழேந்தி

(ஈ) ஒட்டக்கூத்தர்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) சேக்கிழார்

“உத்தமச்சோழப் பல்லவர்” என்னும் பட்டம் பெற்றவர் பெரியபுராணத்தை இயற்றிய சேக்கிழார் ஆவார்.

11. “புள்ளுறு புன்கண் தீர்த்தோன்” இவ்வடிகளில் இடம்பெறும் பறவையினைத் தேர்ந்தெடுக்க

(அ) காகம்

(ஆ) கிளி

(இ) புறா

(ஈ) ஆந்தை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) புறா

சிலப்பதிகாரம்

“எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்ளுறு புன்கண் தீர்த்தோன்” பொருள்: தேவர்களும் வியக்கும் வண்ணம் புறாவின் துன்பத்தை போக்கியவன் சிபி சக்கரவர்த்தி. “புள்” என்றால் பறவை என்பதே பொருளாகும். இங்கு “புள்” என்பது புறாவைக் குறிக்கிறது

12. “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்” – என்னும் புணர்ச்சி விதிப்படி புணர்ந்துள்ள சொல் எது?

(அ) கற்றா

(ஆ) கன்றா

(இ) கறா

(ஈ) கன்ற

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) கன்றா

குற்றியலுகரப்புணர்ச்சி: கன்று ஆ – கன்றா. “உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி “கன்ற்ஆ” என்றானது. “உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற வதிப்படி “கன்றா” என்றானது.

13. “விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி” – இக்குறட்பாவில் காணலாகும் மோனை எது?

(அ) மேற்கதுவாய் மோனை

(ஆ) கீழ்க்கதுவாய் மோனை

(இ) கூழை மோனை

(ஈ) ஒரூஉ மோனை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) மேற்கதுவாய் மோனை

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி. 1,3,4-ஆம் சீர்கள் ஒன்றி வருவது மேற்கதுவாய் மோனையாகும்.

14. கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?

(அ) சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது

(ஆ) வினைத்தொகையில்வல்லினம் மிகாது

(இ) வன்றொடர்க் குற்றியலுகத்தின் பின் வல்லினம் மிகாது.

(ஈ) உவமைத் தொகையில் வல்லினம் மிகாது

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) வினைத்தொகையில்வல்லினம் மிகாது

சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும். சாலபேசினான்-சாலப்பேசினான். தவசிறிது-தவச்சிறிது. வினைத்தொகையில் வல்லினம் மிகாது. சுடுகாடு-சுடுகாடு. விரிகதிர்-விரிகதிர். வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும். படித்துபார்-படித்துப்பார். தச்சுதொழில்-தச்சுத்தொழில். உவமைத்தொகையில் வல்லினம் மிகும். பவளம்செவ்வாய்-பவளச்செவ்வாய். மலர்கண்-மலர்க்கண்.

15. தொகை நிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது எது எனத் தேர்ந்தெடு.

(அ) பண்புத்தொகை

(ஆ) அன்மொழித்தொகை

(இ) வினைத்தொகை

(ஈ) உவமைத்தொகை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) அன்மொழித்தொகை

வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, (தொகைநிலைத் தொடர்கள்) ஆகியவற்றை அடுத்து ஒரு சொல் தொடர்ந்து (அ) தொக்கி நின்று பொருள் தருவது அன்மொழித்தொகை ஆகும். எ.கா: பொற்கொடி நடந்தாள்-பொன்னால் ஆகிய கொடியின் தன்மை கொண்ட பெண் நடந்தாள்.

16. கீழ்க்கண்டவற்றுள் தேவநேயப் பாவாணரின் சிறப்புகளில் பொருந்தாததைத் தேர்ந்தெடு

(அ) செந்தமிழ் ஞாயிறு

(ஆ) செந்தமிழ்ச்செல்வர்

(இ) இலக்கியச் செம்மல்

(ஈ) தமிழ்பொருங்காவலர்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) இலக்கியச் செம்மல்

தேவநேயப் பாவாணரின் சிறப்புப் பெயர்கள்: செந்தமிழ்ச் செல்வர், செந்தமிழ் ஞாயிறு, தமிழ்ப் பெருங்காவலர், மொழிஞாயிறு, இலக்கியப் பெட்டகம், இலக்கணச் செம்மல் உட்பட 174 சிறப்புப் பட்டங்களைப் பெற்றுள்ளார். “இலக்கியச் செம்மல்” என்று சிறப்பிக்கப்பட்டவர் அயோத்திதாசப் பண்டிதர் ஆவார்.

17. “உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு” என்னும் நூலை எழுதியவர் யார்?

(அ) இபான்

(ஆ) எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை

(இ) தால்சுதாய்

(ஈ) முனைவர் எமினோ

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) தால்சுதாய்

தால்சுதாய் இரஷ்ய அறிஞர். இவர் தமது நூலில் “இன்னா செய்தார்க்கும்” என்ற திருக்குறளை மொழிபெயர்த்து எழுதியுள்ளார். அதைப் படித்த காந்தியடிகள் திருக்குறள் மீதும், தமிழ் மீதும் பற்றுக் கொண்டு, தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கினார்.

18. பொருத்துக:

அ. பெருஞ்சித்திரனார் – 1.காவியப்பாவை

ஆ. சுரதா – 2. குறிஞ்சித்திட்டு

இ. முடியரசன் – 3. கனிச்சாறு

ஈ. பாரதிதாசன் – 4. தேன்மழை

அ ஆ இ ஈ

அ. 2 3 4 1

ஆ. 3 4 1 2

இ. 2 4 1 3

ஈ. 4 3 2 1

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 3 4 1 2

19. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகளுள் இல்லாத ஒன்று எது?

(அ) கொய்யாக்கனி

(ஆ) கனிச்சாறு

(இ) கல்லக்குடி மகாவியம்

(ஈ) நூறாசிரியம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) கல்லக்குடி மகாவியம்

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகள். கனிச்சாறு, ஐயை, கொய்யாக்கனி, பவாவியக் கொத்து, பள்ளிப் பறவைகள், நூறாசிரியம். “கல்லக்குடி மகாகாவியம்” கவிஞர் கண்ணதாசனால் இயற்றப்பட்டது.

20. திருவள்ளுவமாலையில் திருக்குறளைப் புகழ்ந்து பாடியுள்ள புலவர்கள் எத்தனைப் பேர்?

(அ) ஐம்பத்து மூவர்

(ஆ) எழுபத்தைவர்

(இ) அறுபதின்மர்

(ஈ) நூற்றுவர்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) ஐம்பத்து மூவர்

திருக்குறளின் சிறப்பினை உணர்த்த இயற்றப்பட்டது. “திருவள்ளுமாலை” என்னும் “நூலாகும். இந்நூலில் 55 பாடல்களை 53 புலவர்கள் இயற்றியுள்ளனர்.

21. “———-“ எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடிப் பாம்பின் விடத்தை அப்பர் போக்கியருளினார்.

(அ) உலகெலாம்

(ஆ) ஒன்றுகொலாம்

(இ) உலகம் யாவையும்

(ஈ) திருமறையோர்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) ஒன்றுகொலாம்

திங்களுர் அப்பூதியடிகளின் மகனை அரவந்தீண்டிய போது நஞ்சு நீங்க “ஒன்றுகொலாம்” என்ற பதிகத்தைப்பாடி அப்பர் அவனை உயிர்ப்பித்தார்.

22. பொருத்துக:

நூல் நூலாசிரியர்

அ. களவழி நாற்பது – 1. முன்றுறையரையனார்

ஆ. கைந்நிலை – 2. பொய்கையார்

இ. கார்நாற்பது – 3. புல்லங்காடனார்

ஈ. பழமொழி – 4. பண்ணங்கூத்தனார்

அ ஆ இ ஈ

அ. 2 3 4 1

ஆ. 1 2 3 4

இ. 4 3 1 2

ஈ. 3 1 2 4

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. 2 3 4 1

23. “அறுமோ, நரி நக்கிற்று என்று கடல்?” இது பயின்று வந்த நூல் எது?

(அ) பழமொழி

(ஆ) நாலடியார்

(இ) திருக்குறள்

(ஈ) ஆசாரக்கோவை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) பழமொழி

பழமொழி நானூறு களமர் பலரானும் கள்ளம் படினும் வளமிக்கார் செல்வம் வருந்தா – விளைநெல் அரிநீர்; அணைதிறக்கும் ஊர! அறுமோ நரிநக்கிற்று என்று கடல்? – முன்றுறையரையனார். பொருள்: விளைந்த நிலத்தை அறுக்கும் பொருட்டு உழவர்கள், நீர்; வடிய வடிகாலைத் திறக்கும் மருதநிலத் தலைவனே! நரி நக்கியது என்ற காரணத்தால் கடலின் நீருhனது வற்றியதுண்டோ? இல்லை. அதுபோன்று, களவு செய்பவர் மற்றும் ஏவல் செய்பவர், பலராலும் களவு செய்யப்பட்டாலும் பொருள் வருவாய் மிகுதியும் உடையவரின் செல்வம் குறைந்து வருந்துவதில்லை.

24. “அண்ணம் நுனிநா வருட” எவ்வெழுத்துகள் தோன்றும்?

(அ) ரழ வரும்

(ஆ) தந வரும்

(இ) றன வரும்

(ஈ) யத் தோன்றும்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) ரழ வரும்

“அண்ணம் நுனி நா வருட ரழவரும்” – நன்னூல் 83. மேல்வாயை நாக்கின் நுனி தடவுதனால் “ரழ” எழுத்துகள் பிறக்கும்.

25. னல முன்னும் ணள முன்னும் தநக்கள் புணரும் விதிப்படி பின்வருவனவற்றுள் எது சரி?

(அ) னல முன் டணவும் ணள முன் றனவும்

(ஆ) னல முன் றடவும் ணள முன் னணவும்

(இ) னல முன் றனவும் ணள முன் டணவும்

(ஈ) னல முன் றணவும் ணளமுன் டனவும்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) னல முன் டணவும் ணள முன் றனவும்

தனிக்குறில் முன் ஒற்று புணர்ச்சி. நிலைமொழியின் ஈற்றில் “ன” கர “ல” கர ஒற்றெழத்துகள் வந்து வருமொழியின் முதலில் வல்லினம் வந்தால் அந்த ஒற்றெழுத்துகள் “ற”கரமாக மாறும். எ.கா: பொன்குடம்-பொற்குடம். கல்சிலை-கற்சிலை. நிலைமொழியின் ஈற்றில் “ண”கர, “ள”கர ஒற்றெழுத்துகள் வந்து வருமொழியின் முதலில் வல்லினம் வந்தால், அந்த ஒற்றெழுத்துகள் “ட”கரமாக மாறும். எ.கா: மண்குடம்-மட்குடம், வாள்போர்-வாட்போர்.

26. “வித்தொடு சென்ற வட்டி” – என்னும் நற்றிணை வரியில் குறிப்பிடப்படும் வட்டி என்பதன் பொருள் என்ன?

(அ) பனையோலைப்பொட்டி

(ஆ) வயல்

(இ) வட்ட வடிவு

(ஈ) எல்லை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) பனையோலைப்பொட்டி

நற்றிணை.வித்தொடு சென்ற வட்டி பற்பல மீனொடு பெயரும் யாணர் ஊர பொருள்: பனையோலைப் பெட்டியில் விதை கொண்டு சென்று ஈரமுள்ள நிலத்தில் விதை;த உழவர்கள் அப்பெட்டியில் பல்வகை மீன்களைப் பிடித்துக் கொண்டு வந்தனர். வட்டி-பனையோலைப்பெட்டி.

27. “எந்த நாட்டில் அணு துளைக்காத சுரங்கப் பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறள் உள்ளது?

(அ) இங்கிலாந்து

(ஆ) சிங்கப்பூர்

(இ) உருசியா

(ஈ) இந்தியா

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) உருசியா

உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் உள்ள சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் திருக்குறளும் இம் பெற்றுள்ளது.

28. மறைமலையடிகள் எழுதிய நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்.

(அ) மதங்க சூளாமணி

(ஆ) மத்தவிலாசம்

(இ) சாகுந்தலம்

(ஈ) மனோன்மணீயம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) சாகுந்தலம்

மறைமலையடிகள் 1907-ல் சமஸ்கிருதத்தில் இருந்து மொழிபெயர்த்து “சாகுந்தல நாடகம்” என்ற நூலை எழுதியுள்ளார். 1934-ல் சாகுந்தல நாடக ஆராய்ச்சி நூல் ஒன்றை எழுதியுள்ளார்.

29. “உழவர் ஏரடிக்கும் சிறு கோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல்” எனக் கூறியவர்.

(அ) பாரதியார்

(ஆ) பாரதிதாசன்

(இ) வில்லிப்புத்தூரார்

(ஈ) கம்பர்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) கம்பர்

“உழர் ஏரடிக்கும் சிறுகோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல்” – கம்பர்.

30. “சூலியஸ் வின்சோன்” பாராட்டிய தமிழறிஞர்

(அ) திரு.வி.க

(ஆ) மறைமலையடிகள்

(இ) உ.வே.சா

(ஈ) கவிமணி

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) உ.வே.சா

உ.வே.சாமிநாதய்யரின் தமிழ்ப்பணிகளைப் பாராட்டிய அயல் நாட்டவர்கள் ஜி.யூ.போப் மற்றும் சூலியஸ் வின்சோன்.

31. “அறவுரைக் கோவை” என அழைக்கப்பெறும் நூல்

(அ) முதுமொழிக் காஞ்சி

(ஆ) ஆசாரக்கோவை

(இ) ஏலாதி

(ஈ) சிறுபஞ்சமூலம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) முதுமொழிக் காஞ்சி

“அறவுரைக்கோவை” என்று அழைக்கப்படும் முதுமொழக் காஞ்சியாகும். இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூலை இயற்றியவர் மதுரைக் கூடலூர்க்கிழார் ஆவார். நீதி நூல்களுள் மிகச்சிறிய நூல் இதுவே.

32. இங்கிலாந்து மகாராணி விக்டோரியா காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நூல்

(அ) திருவருட்பா

(ஆ) திருக்குறள்

(இ) மகாபாரதம்

(ஈ) இராமாயணம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) திருக்குறள்

இங்கிலாந்து மகாராணி விக்டோரியா காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நூல் திருக்குறளாகும்.

33. குடிமக்கள் வரலாறே ஆதி காப்பியமாகத் தமிழ்நாட்டில் அமைந்து விளங்குகிறது. அப்படி அமைவது எந்த நூல்?

(அ) சீவகசிந்தாமணி

(ஆ) சிலப்பதிகாரம்

(இ) மணிமேகலை

(ஈ) கம்பராமாயணம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) சிலப்பதிகாரம்

“தமிழ் இலக்கியத்தின் ஆதி காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். இந்நூல் குடிமக்கள் காப்பியம்” என்று அழைக்கப்படுகிறது. சிலப்பதிகாரத் தலைவனும் தலைவியும் சாதாரண குடிமக்கள் என்பதால் இப்பெயர் பெற்றது” – தெ.பொ.மீ.

34. எட்டுத்தொகை நூல்களில் “நாடகப் பாங்கில்” அமைந்துள்ள நூலினைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

(அ) குறுந்தொகை

(ஆ) அகநானூறு

(இ) கலித்தொகை

(ஈ) ஐங்குறுநூறு

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) கலித்தொகை

எட்டுத்தொகை நூல்களில் “நாடகப் பாங்கில்” அமைந்துள்ள நூல் கலித்தொகை. இந்நூல் கலிப்பாக்களால் அமைந்துள்ளது. இசையோடு பாடுவதற்கேற்றது.

35. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரே ஒரு நூலாசிரியர் மட்டும் இரு நூல்களைப் படைத்துள்ளார். அவர் யார்?

(அ) கபிலர்

(ஆ) மூவாதியார்

(இ) நல்லாதனார்

(ஈ) கணிமேதாவியார்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) கணிமேதாவியார்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் கணிமேதாவியர் இயற்றியுள்ள இரண்டு நூல்கள் ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது.

36. “என்காற் சிலம்பு மணியுடை அரியே” – இவ்வடிகளில்”மணி” என்பது எதனைக் குறிக்கும் என்பதைத் தெரிவு செய்க

(அ) பவளம்

(ஆ) முத்து

(இ) மாணிக்கம்

(ஈ) மரகதம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) மாணிக்கம்

சிலப்பதிகாரம் – வழக்குரை காரைத கண்ணகி கூற்று: “என்காற் சிலம்பு மணியுடை அரியே எனத் தேமொழியுரைத்தது செவ்வை நன்மொழி”. பொருள்: தன் காற் சிலம்பு மாணிக்கப் பரல்களை உடையது எனக் கண்ணகி கூறினாள்.

37. உம்மைத்தொகையில் “உம்” என்னும் இடைச்சொல் எவ்வாறு மறைந்து வரும் என்பதைத் தேர்ந்தெடு

(அ) முதலில் வரும்

(ஆ) இடையில் வரும்

(இ) இடையிலும் இறுதியிலும் வரும்

(ஈ) இறுதியில் வரும்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) இடையிலும் இறுதியிலும் வரும்

உம்மைத்தொகை விரிவான சொல்

இயல்இசை இயலும் இசையும்

எண் எழுத்து எண்ணும் எழுத்தும்

இரவு பகல் இரவும் பகலும்

38. ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படுபொருளாக வேறுபடுத்துவது எவ்வகை வேற்றுமை எனத் தேர்ந்தெடு

(அ) மூன்றாம் வேற்றுமை

(ஆ) ஐந்தாம் வேற்றுமை

(இ) ஆறாம் வேற்றுமை

(ஈ) இரண்டாம் வேற்றுமை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) இரண்டாம் வேற்றுமை

இராமாயணம்-பெயர்ச்சொல். இதனுடன் இரண்டாம் வேற்றுமை உருபான “ஐ” சேரும்போது “இராமாயணத்தை” என்று செயப்படுபொருளாக மாறுகின்றது.

39. பின்வருவனவற்றுள் எது உருவகமன்று?

(அ) மொழியமுது

(ஆ) அடிமலர்

(இ) தமிழ்த்தேன்

(ஈ) கயற்கண்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) தமிழ்த்தேன்

உவமை உருவகம்

அமுதமொழி மொழியமுது

மலரடி அடிமலர்

தேன் தமிழ் தமிழ்த்தேன்

கயற்கண் கண்கயல்

40. தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்” இக்குறள்பாவில் இடம்பெற்றுள்ள சீர்மோனை பெயரினைத் தேர்ந்தெடு

(அ) கீழ்க்கதுவாய் மோனை

(ஆ) கூழை மோனை

(இ) ஒரூஉ மோனை

(ஈ) மேற்கதுவாய் மோனை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) கூழை மோனை

செய்யுளில் முதற்சீரில் வந்த முதல் எழுத்தே அடுத்து வரும் சீர்;களில் வந்தால் அது மோனைத் தொடையாகும். 1,2,3 சீர்களில் முதல் எழுத்து ஒன்றி வந்தால் அது கூழை மோனை ஆகும். 1,2,4-ம் சீர்;கள் கீழு;க்கதுவாய் மோனை 1,4-ம் சீர்;கள் ஒரூஉ மோனை, 1,3,4-ம் சீர்கள் மேற்கதுவாய் மோனை.

41. ஜவஹர்லால் நேரு சிறை வைக்கப்பட்டிருந்த அல்மோரா சிறைச்சாலை எந்த மாநிலத்தில் உள்ளது என்பதைத் தெரிவு செய்க:

(அ) மேற்கு வங்காளம்

(ஆ) குஜராத்

(இ) உத்தராஞ்சல்

(ஈ) உத்திரப்பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) உத்தராஞ்சல்

அல்மோரா சிறை உத்தராஞ்சல் மாவட்டத்தில் உள்ளது,

42. கண்ணதாசன் படைத்த நாடகம்

(அ) மாங்கனி

(ஆ) ஆட்டனத்தி ஆதிமந்தி

(இ) கல்லக்குடி மகாகாவியம்

(ஈ) இராசதண்டனை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) இராசதண்டனை

கொடுக்கப்பட்டுள்ள நான்குமே கவிஞர் கண்ணதாசனின் படைப்புகள் ஆகும். அவற்றுள் “இராசதண்டனை” மட்டுமே நாடக நூலாகும்.

43. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு. அயற்கூற்றில் வருவன.

(அ) மேற்கோள்குறிகள்

(ஆ) தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயர்களாக மாறாது

(இ) அது, அவை – அங்கே என மாறும்

(ஈ) காலப்பெயர்கள் அந்நாள், மறுநாள் என மாறும்.

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயர்களாக மாறாது

அயற்கூற்றில் தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயர்களாக மாறும்.

44. “புத்தகம் வாசிப்பதனை கடமையாக ஆக்குதல் கூடாது கட்டாயப்படுத்தவும் கூடாது. அப்படி செய்தால், புத்தகம் வாசிப்பு மகிழ்ச்சியைத் தராது” என்று கூறியவரைத் தேர்ந்தெடு

(அ) டாக்டர்.மு.வ

ரதராசனார்

(ஆ) பேரறிஞர் அண்ணா

(இ) நேரு

(ஈ) காந்தி

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) நேரு

45. “உண்பது நாழி உடுப்பவை இரண்டே” – என்ற பாடலடி இடம்பெற்றுள்ள நூல்

(அ) ஆத்திச்சூடி

(ஆ) நாலடியார்

(இ) புறநானூறு

(ஈ) பழமொழி நானூறு

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) புறநானூறு

புறநானூறு “தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும் நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும் உண்பது நாழி உடுப்பவை இரண்டே” – மதுரை கண்க்காயனார் மகனார் நக்கீரனார். பொருள்: தெளிந்த கடல் நீரால் சூழப்பட்ட இவ்வுலகம் முழுவதனையும் பெதுவின்றித் தனதாக்கி ஒரு குடையின் கீழு; ஆட்சி செய்பவன் மன்னன். அவனுக்கும், நள்ளிரவிலும் பகலிலும் உறங்காது விரைந்தோடும் விலங்குகளை வேட்டையாடி வீழ்த்த எண்ணுகின்ற கல்வியறிவற்ற ஒருவனுக்கும் உண்ணத் தேவைப்படும் பொருள் நாழியளவே, உடுத்தும் உடை மேலாடையும் இடுப்பாடையும் ஆகிய இரண்டே.

46. “போரை ஒழிமின்” என்ற கோவூர் கிழாரின் அறிவுரையைக் கேட்டு போரை நிறுத்திய மன்னன் யார்?

(அ) நெடுங்கிள்ளி

(ஆ) நலங்கிள்ளி

(இ) அதியமான்

(ஈ) சேரமான் நெடுமான் அஞ்சி

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) நெடுங்கிள்ளி

கோவூர் கிழாரின் அறிவுரையைக் கேட்டு நெடுங்கிள்ளி போரை நிறுத்திவிட்டு உறையூர்க் கோட்டையை நலங்கிள்ளியிடம் ஒப்படைத்தான்.

47. பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதைக் கூறும் பாடல் இடம்பெறும் நூல்

(அ) தேவாரம்

(ஆ) திருவாசகம்

(இ) புறநானூறு

(ஈ) பதிற்றுப்பத்து

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) திருவாசகம்

பழந்தமிழரின் விண்ணியல் அறிவு: திருவாசகம் அண்டப் பகுதியின் உண்டப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன. – மாணிக்கவாசகர். பொருள்: 1.பெருவெடிப்பு கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்தது. 2.உலகம் உருண்டையானது.

48. “தேம்பாவணி” என்பது

(அ) கிறத்தவக் காப்பியம்

(ஆ) இசுலாமியக் காப்பியம்

(இ) வைணவக் காப்பியம்

(ஈ) சைவக் காப்பியம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) கிறத்தவக் காப்பியம்

தேம்பாவணியின் ஆசிரியர் வீரமாமுனிவர். இது கிறத்தவக் காப்பியமாகும். இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தையான சூசை மாமுனிவர் இந்நூலின் பாட்டுடைத் தலைவர் ஆவார்.

49. “தண்டமிழ் ஆசான்” என்று பாராட்டப் பெற்றவர்

(அ) இளங்கோவடிகள்

(ஆ) கம்பர்

(இ) திருவள்ளுவர்

(ஈ) சீத்தலைச்சாத்தனார்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) சீத்தலைச்சாத்தனார்

மணிமேகலை காப்பியத்தின் ஆசிரியரான சீத்தலைச் சாத்தனாரை “தண்டமிழ் ஆசான்”. “சாத்தன் நன்னூற்புலவன்” என இளங்கோவடிகள் பாராட்டினார்

50. நாட்டைக் காக்க ஐவர் போர்க்களம் சென்றனர் என்னும் தொடரில் “ஐவர்” என்பதன் இலக்கணம் யாது?

(அ) ஒன்றொழி பொதுச் சொல்

(ஆ) இனங்குறித்தல்

(இ) தொடர்மொழி

(ஈ) பொதுமொழி

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) ஒன்றொழி பொதுச் சொல்

“நாட்டைக் காக்க ஐவர் போர்க்களம் சென்றனர்” – “ஐவர்” என்பது இங்கு ஆண்களைக் குறிக்கின்றது. “வீட்டின் முன் ஐயர் கோலமிட்டனர்” “ஐவர்” என்பது இங்கு பெண்களைக் குறிக்கின்றது. எனவே “ஐவர்” என்பது ஒன்றொழி பொதுச் சொல் ஆகும்.

51. “தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு” இக்குறட்பாவில் பயின்று வரும் அணி யாது?

(அ) வேற்றுமையணி

(ஆ) இல்பொருள் உவமையணி

(இ) ஏகதேச உருவக அணி

(ஈ) எடுத்துக்காட்டு உவமையணி

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) வேற்றுமையணி

வேற்றுமை அணி. ஏதேனும் ஓர் ஒற்றுமையுடைய இரு பொருள்களுக்கிடையே வேற்றுமை கற்பித்துக் கூறுவது வேற்றுமை அணியாகும். ஒற்றுமை-புண்(வடு). வேற்றுமை-தீயினால் சுட்ட புண் ஆறிவிடும். நாவினால் கூறப்பட்ட தீய சொல்லால் ஏற்பட்ட வடு ஆறாது.

52. “இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல்” – இக்குறட்பாவில் உள்ள உவமையின் பொருளைத் தேர்ந்தெடு.

(அ) நிலம்-வாழ்க்கை

(ஆ) ஊன்றுகோல்-பெரியோர் சொல்

(இ) ஊன்றுகோல்-நிலம்

(ஈ) ஒழுக்கம்-வாய்ச்சொல்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) ஊன்றுகோல்-பெரியோர் சொல்

வினாவில் கொடுக்கப்பட்டுள்ள குறளின் பொருள் நல்லொழுக்கம் உடைய சான்றோரின் வாய்ச்சொற்கள், வழுக்கும் சேற்றில் உதவும் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் எப்போதும் உதவியாக இருக்கும். ஊன்றுகோல் – பெரியோர் சொல்.

53. “பட்டியுள காளை படிபால் கறக்குமே நல்ல பசு வேளை தவிரா துழும்” இப்பாடல் அடிகளில் இடம்பெற்றுள்ள பொருள்கோள் வகையினைத் தேர்ந்தெடு.

(அ) அடிமறிமாற்றுப் பொருள்கோள்

(ஆ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்

(இ) மொழிமாற்றுப் பொருள்கோள்

(ஈ) விற்பூட்டுப் பொருள்கோள்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்

கொண்டு கூட்டுப்பொருள்கோள் செய்யுளின் பல அடிகளிலும் நிறுத்தப்பட்டுள்ள சொற்களைப் பொருள் ஏற்குமிடத்து எடுத்துக்கொண்டு பொருளுக்கு ஏற்ற இடங்களில் கூட்டியுரைப்பது கொண்டு கூட்டுப் பொருள்கோளாகும். “காளை படிபால் கறக்குமே நல்லபசு வேளை தவிரா துழும்” “பட்டியுள காளை வேளை தவறாது உழும். நல்ல பசு படிபால் கறக்கும்” என்று பொருள் கொள்ள வேண்டும்.

54. “தொண்டு செய்து பழுத்தபழம்” என்று பாரதிதாசன் போற்றுவது

(அ) பாரதியார்

(ஆ) தந்தை பெரியார்

(இ) காந்தியார்

(ஈ) அண்ணாதுரையார்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) தந்தை பெரியார்

பாரதிதாசன் தந்தை பெரியாரைப் பற்றி எழுதிய கவிதை, “தொண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும் மண்டைச் சுரப்பை உலகு தொழும் மனக் குகையில் சிறுத்தை எழும்”

55. பாரதியார் யாருடைய சாயலில் வசனகவிதை எழுதத் தொடங்கினார்?

(அ) ஜார்ஜ் எல்.ஹார்ட்

(ஆ) வால்ட்விட்மன்

(இ) லிண்ட் ஹோம்

(ஈ) ஹால் சிப்மோன்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) வால்ட்விட்மன்

“அவனுக்கு (பாரதி) நந்தனார் சரித்திரக் கீர்த்தனை மெட்டும் தெரியும் ஜப்பானிய ஹைக்கூ லாவகமும் புரியும் தாகூரையும் அறிவான் வாலட் விட்மனின் புதுக்கவிதை ஒளியையும் உணர்வான் காளிதாசனான அவன் ஷெல்லிதாசனாகவும் தன்னை அறிவித்துக் கொண்டவன் நவநவமான மொழிகளில் பேசியவன் – சிற்பி. பாலசுப்பிரமணியன்.

56. நாமக்கல் கவிஞரின் படைப்புகளின் எண்ணிக்கையைப் பொருத்துக:

அ. இசை நாவல்கள் – 1.நான்கு

ஆ. புதினங்கள் – 2. பத்து

இ. கவிதைத் தொகுப்புகள் – 3. மூன்று

ஈ. மொழி பெயர்ப்புகள் – 4. ஐந்து

அ ஆ இ ஈ

அ. 4 3 1 2

ஆ. 3 4 2 1

இ. 2 4 1 3

ஈ. 3 1 4 2

விடை மற்றும் விளக்கம்

விடை:

ஆ. 3 4 2 1

நாமக்கல் கவிஞரின் படைப்புகள்: இசைநாவல்கள்-3, கட்டுரைகள்-12, தன் வரலாறு-3, புதினங்கள்-5, இலக்கியத் திறனாய்வுகள்-7, கவிதைத்தொகுப்புகள்-10, சிறுகாப்பியங்கள்-5, மொழிபெயர்ப்பு நூல்கள்-4, மேலும் நாமக்கல் கவிஞர் பற்றிய குறிப்புகள், படைப்புகளின் பெயர்கள், பாராட்டுரைகள், மேற்கோள்கள் பக்க எண். 398-ல் கொடுக்கப்பட்டுள்ளன.

57. திருப்பனந்தாளிலும், காசியிலும் தம் பெயரால் மடம் நிறுவி உள்ளவர்

(அ) இராமலிங்க அடிகளார்

(ஆ) தாயுமானவர்

(இ) குமரகுருபரர்

(ஈ) வில்லிபுத்தூரார்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) குமரகுருபரர்

திருபனந்தாளிலும் காசியிலும் தம் பெயரால் மடம் நிறுவியவர் குமரகுருபரர் ஆவார். தனது இறுதிக் காலத்தில் காசிக்குச் சென்று மடம் அமைத்து சைவத்தையும் தமிழையும் வளர்த்தார்.

58. மயிலேறும் பெருமாளிடம் கல்வி கற்றவர்

(அ) சுவாமிநாத தேசிகர்

(ஆ) வீரமாமுனிவர்

(இ) சி.இலக்குவனார்

(ஈ) மீனாட்சி சுந்தரனார்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) சுவாமிநாத தேசிகர்

“திருச்செந்திற் கலம்பகம்” என்ற நூலை இயற்றியவர் சுவாமிநாத தேசிகர் ஆவார். இவரின் ஆசிரியர் மயிலேறும் பெருமாள் ஆவார். இவருடைய ஆன்மிகக் குரு திருவாவடு ஞான தேசிகராகிய அம்பலவாண தேசிக மூர்த்தி ஆவார்.

59. “உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்;” இத்தருமந்திரப்பாடல் இடம்பெற்ற தந்திரம் எது?

(அ) ஆறாம் தந்திரம்

(ஆ) இரண்டாம் தந்திரம்

(இ) மூன்றாம் தந்திரம்

(ஈ) எட்டாம் தந்திரம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) மூன்றாம் தந்திரம்

திருமந்திரம் – மூன்றாம் தந்திரம் 724-வது பாடல். “உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் செரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” – திருமூலர். பொருள்: நோய் முதலான காரணங்களால் உடம்பு அழியுமாயின் உயிரும் அழியும். அவ்வாறு அழிந்தால், உறுதி தரும் மெய்யறிவை அடைய இயலாது. ஆகவே உடம்பை வளர்க்கும் வழிமுறைகளை அறிந்து உடம்பை வளர்த்தேன். அதனால் உயிரை அழிவிலிருந்து காத்தேன்.

60. “அங்கவியல்” திருக்குறளில் எந்தப் பகுப்பில் இடம் பெற்றுள்ளது?

(ஆ) அறத்துப்பால்

(ஆ) பொருட்பால்

(இ) காமத்துப்பால்

(ஈ) எதுவுமில்லை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) பொருட்பால்

அறத்துப்பால்: பாயிரம், இல்லறவியல், துறவறவியல். பொருட்பால்: அரசியல், அங்கவியல், ஒழிபு. காமத்துப்பால்: களவியல், கற்பியல்.

61. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து இக்குறளில் ஏமாப்பு என்பதன் பொருள் யாது?

(அ) பெருமை

(ஆ) ஏமாற்றம்

(இ) பாதுகாப்பு

(ஈ) பொறுமை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) பாதுகாப்பு

ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வி அப்பிறப்பிற்கு மட்டுமல்லாமல் ஒருவனுக்கு ஏழு பிறப்பிலும் அவனுக்கு உதவி செய்யும் தன்மையுடையது ஆகும். ஏமாப்பு-பாதுகாப்பு.

62. பிழையற்ற வாக்கியம் எது?

(அ) ஓர் மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்.

(ஆ) ஒரு மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்.

(இ) ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்.

(ஈ) ஓர் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்.

தவறு சரி

ஓர் மாவட்டம் ஒரு மாவட்டம்

ஒரு அமைச்சர் ஓர் அமைச்சர்

மேற்க்கொண்டார் மேற்கொண்டார்

12 உயிரெழுத்துகளுக்கு முன்னால் மட்டுமே “ஓர்” என்ற சொல் வர வேண்டும். “ற்” என்ற எழுத்திற்கு அடுத்து ஒற்றெழுத்து வரக்கூடாது.

63. “எழுவாய் செய்யும் வினையைக் கொண்டு முடியும் தொடர்” எவ்வகைத் தொடர் என்று தேர்ந்தெடு

(அ)செயப்பாட்டு வினைத்தொடர்

(ஆ) கட்டளைத்தொடர்

(இ) அயற்கூற்றுத் தொடர்

(ஈ) செய்வினைத்தொடர்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) செய்வினைத்தொடர்

எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமைந்திருந்தால் அது செய்வினைத் தொடராகும். செயப்படுபொருளோடு இரண்டாம் வேற்றுமை வெளிப்பட்டு வரும். எ.கா:கம்பர் இராமாயணத்தை இயற்றினார். செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமைந்திருத்தால் அது செயப்பாட்டு வினைத் தொடராகும். எழுவாயோடு “ஆல்” என்ற மூன்றாம் வேற்றுமை உருபையும் பயனிலையோடு “பட்டது” என்ற சொல்லும் சேரும் எ.கா: கம்பரால் இராமாயணம் இயற்றப்பட்டது.

64. பொருத்துக:

அ. என்றால் – 1. முற்றும்மை

ஆ. நுந்தை – 2. குறிப்பு வினைமுற்று

இ. யாவையும் – 3. மரூஉ

ஈ. நன்று – 4. தொழிற்பெயர்

அ ஆ இ ஈ

அ. 4 3 1 2

ஆ. 3 4 2 1

இ. 2 4 1 3

ஈ. 4 3 2 1

விடை மற்றும் விளக்கம்

விடை:

அ. 4 3 1 2

கொடுக்கப்பட்டுள்ள நான்கு சொற்களும் அதற்கான இலக்கணக் குறிப்புகளும் பகுதி-அ பிரிவு-15 (இலக்கணக் குறிப்பறிதல்) பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.

65. “உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும், மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம்” என்று கூறியவர் யார்?

(அ) ஜி.யூ.போபா

(ஆ) கால்டுவெல்

(இ) பாரதிதாசன்

(ஈ) பாரதியார்

விடை மற்றும் விளக்கம்

விடை:(ஆ) கால்டுவெல்

66. நாடகம் படைத்தல், நடித்தல், நாடக இலக்கணம் இயற்றல் ஆகிய முக்கோணங்களிலும் நாடகத் தொண்டாற்றியவர் யார்?

(அ) தவத்திரு.சங்கரதாஸ்

(ஆ) பதிரிமாற் கலைஞர்

(இ) பம்மல் சம்பந்தனார்

(ஈ) திண்டிவனம் ராமசாமிராஜா

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) பதிரிமாற் கலைஞர்

பரிதிமாற் கலைஞர். “ரூபாவதி” “கலாவதி” போன்ற நாடகங்களை இயற்றியதோடு, பெண் வேடம் புனைந்து நடிக்கவும் செய்தார். மேலும் “நாடகவியல்” என்ற நாடக இலக்கண நூலை செய்யுள் வடிவில் இயற்றியுள்ளார்

67. கீழ்க்கண்டவற்றுள் பறவைகள் சரணாலயம் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடு

(அ) கரைவெட்டி

(ஆ) கோவன்புத்தூர்

(இ) வெள்ளோடு

(ஈ) சித்திரங்குடி

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) கோவன்புத்தூர்

68. தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் எந்த காண்டத்தில் அமைந்துள்ளது?

(அ) மதுரைக்காண்டம்

(ஆ) சுந்தர காண்டம்

(இ) திருவாலவாய்க்கண்டம்

(ஈ) கூடற்காண்டம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) திருவாலவாய்க்கண்டம்

தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் திருவிளையாடற் புராணத்தில் திருவாலவாய்க் காண்டத்தில் அமைந்துள்ளது

69. “அஷ்டப்பிரபந்தம்” கீழ்க்கண்டவற்றுள் எதனைக் குறிக்கும்?

(அ) எட்டு சிற்றிலக்கியங்கள்

(ஆ) எட்டு பெருங்காப்பியம்

(இ) ஆறு நூல்கள்

(ஈ) ஒன்பது உரைகள்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) எட்டு சிற்றிலக்கியங்கள்

“அஷ்டப்பிரபந்தம்” என்பது எட்டு சிற்றிலக்கியங்களைக் குறிக்கும். அஷ்டப்பிரபந்தம் என்ற நூலை எழுதியவர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார். அஷ்டப்பிரபந்தம்: 1.திருவேங்கடந்தந்தாதி. 2.திருவரங்கத்து அந்தாதி, 3.திருவரங்கத்து மாலை, 4.திருவரங்கக் கலம்பகம், 5.திருவேங்கட மாலை, 6.அழகர் அந்தாதி, 7.அரங்கநாதர் ஊசல், 8.நூற்றெட்டு திருப்பதி அந்தாதி.

70. காந்தி புராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

(அ) ஓராயிரத்து முப்பத்து நான்கு

(ஆ) ஈராயிரத்து முப்பத்து நான்கு

(இ) மூவாயிரத்து முப்பத்து நான்கு

(ஈ) நான்காயிரத்து முப்பத்து நான்கு

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) ஈராயிரத்து முப்பத்து நான்கு

காந்திபுராணம் என்ற நூலை எழுதியவர் அசலாம்பிகை அம்மையார். இந்நூல் காந்தியடிகளைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பெற்றது. இந்நூல் ஈராயிரத்து முப்பத்து நான்கு (2034) பாடல்களைக் கொண்டது

71. “நல்லது செய்த லாற்றீ ராயினும் அல்லது செய்த லோம்பு மினது தான்” – என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?

(அ) அகநானூறு

(ஆ) புறநானூறு

(இ) திருக்குறள்

(ஈ) ஐங்குநுறூறு

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) புறநானூறு

பல்சான் றீரே பல்சான் றீரே —– —– —- —- —- —- —– —- நல்லது செய்த லாற்றீ ராயினும் அல்லது செய்த லோம்புமி னதுதான் – நரிவெரூ உத் தலையார். பொருள்: உயிருடன் வாழும்போதே நல்லவற்றை செய்ய வேண்டும். அஃது இயலாதபோது தீயதைச் செய்தலையாவது கைவிட வேண்டும்

72. மறைமலையடிகளாரின் மகள்

(அ) கமலாம்பிகை அம்மையார்

(ஆ) கெசவல்லி அம்மையார்

(இ) நீலாம்பிகை அம்மையார்

(ஈ) ஞானாம்பிகை அம்மையார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) நீலாம்பிகை அம்மையார்

73. நான்காம் வேற்றுமை சொல்லுருபுகள் எவை?

(அ) கொண்டு, உடன்

(ஆ) பொருட்டு, நிமித்தம்

(இ) இருந்து, நின்று

(ஈ) உடைய

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) பொருட்டு, நிமித்தம்

நான்காம் வேற்றுமை உருபு “கு”. இவ்வேற்றுமை ஏழு பொருள்களில் அமையும். அவையாவன: கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, இதன் சொல்லுருபுகள் பொருட்டு, நிமித்தம். எ.கா: பணத்தின் பொருட்டு பயணம் மேற்கொண்டான். தேர்வின் நிமித்தம் கண்விழித்துப் படித்தான்.

74. பாஞ்சாலி சபதம் இலக்கியத்தில் உள்ள “குளிர்காவுஞ்” என்ற சொல்லில் “கா” என்பதன் பொருளைத் தேர்ந்தெடுக்க:

(அ) சோலை

(ஆ) பாலைவனம்

(இ) வயல்

(ஈ) காடு

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) காடு

பாஞ்சாலி சபதம் – பாண்டவரின் நாட்டு வளம் “கோலமுறு பயன் மரங்கள் செறிந்து வாழும் குளிர்காவும்” பொருள்: “அழகு மிக்க பயன் தரு மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ள குளிர்ச்சியான காடும்”.

75. “நேர நிகர அன்ன இன்ன என்பவும் பிறவும் உவமத்துருபே” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

(அ) தொல்காப்பியம்

(ஆ) நன்னூல்

(இ) யாப்பருங்கலக்காரிகை

(ஈ) அகத்தியம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) நன்னூல்

உவம உருபுகள் “போல புரைய ஒப்ப உறழ மான கடுப்ப இயைய ஏய்ப்ப நேர நிகர அன்ன இன்ன என்பவும் பிறவும் உவமத் துருபே. – நன்னூல்.

76. ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் எந்த காலகட்டத்தைச் சாhந்தவை?

(அ) கி.மு.200 முதல் கி.பி.200 வரை

(ஆ) கி.மு.300 முதல் கி.பி.300 வரை

(இ) கி.மு.400 முதல் கி.பி.400 வரை

(ஈ) கி.மு.200 முதல் கி.பி. 300வரை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) கி.மு.300 முதல் கி.பி.300 வரை

தூத்துக்குடி மாவட்டம் ஆசதிச்ச நல்லூரில் கி.பி.1876 மற்றும் கி.பி. 2003 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட அகழர்ய்வுகளில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவைகளில் இருந்து கி.மு.300 முல் கி.பி.300 வரையிலான காலக்கட்டத்தைச் சார்ந்த மக்கள் இறந்தோரின் உடலுடன் தங்கத்தினால் ஆன ஆபரணங்கள், செம்பினாலான ஆண், பெண் தெய்வ உருவங்கள், இரும்பினாலான கத்திகள், விளக்குத் தாங்கிகள் போன்றவற்றையும் சேர்ந்து புதைத்தது தெரியவந்தது.

77. கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் பொருத்தமான இணையைத் தேர்வு செய்க:

(அ) தினங்களைக் கொண்டாடுவதை விடுங்கள்-கவிக்கோ

(ஆ) மண்புழுவல்ல மானிடனே-பாரதி

(இ) கன்று குரல் கேட்ட பசு-தாராபாரதி

(ஈ) தண்ணீர்போல் பணத்தை செலவு செய்தல்-ஆலந்தூரார்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) தினங்களைக் கொண்டாடுவதை விடுங்கள்-கவிக்கோ

சுட்டு விரல் வருடம் தவறாமல் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுகிறவர்களே! தினங்களைக் கொண்டாடுவதை விட்டுவிட்டுக் குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகிறீர்கள் – கவிக்கோ அப்துல் ரகுமான். மேற்கண்ட பாடல் தீப்பெட்டித் தொழிற்சாலைகளிலும், பட்டாசுத் தொழிற்சாலைகளிலும் வேலை செய்யும் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி எழுதப்பட்ட கவிதையாகும்.

78. புதிய பட வீழத்திகள் உருவாக இவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன

(அ) எட்வர்டு மைபிரிட்சு

(ஆ) ஈஸ்ட்மன்

(இ) தாமஸ் ஆல்வா எடிசன்

(ஈ) பிரான்சிஸ் சென்கின்சு

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) தாமஸ் ஆல்வா எடிசன்

1894-ல் அமெரிக்கக் குமாஸ்தா பிரான்சிஸ் ஜென்க்கின்ஸ் என்பவர் ரிச்மண்ட் எனுமிடத்தில் இயக்கபடத்தை பலரும் பார்க்கும் வகையில் வடிவமைத்தார். நவீன புரெஜெக்டர்கள் (புதிய பட வீழத்திகள்) உருவாக இவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன.

79. “அளவின்சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார் உளமனைய தண்ணளித்தாய் உறுவேளில் பரிவகற்றி” இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் யாது?

(அ) பெரியபுராணம்

(ஆ) திருவிளையாடற்புராணம்

(இ) சிலப்பதிகாரம்

(ஈ) சீறாப்புராணம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) பெரியபுராணம்

பெரியபுராணம் அளவில்சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார் உளமனைய தண்ணளித்தாய் உறுவேனில் பரிவகற்றிக் குளம் நிறைந்த நீர்த்தடம்போல் குளிர்தூங்கும் பரப்பினதாம் வளம்மருவும் நிழல்தருதண் ணீர்பந்தர் வந்தணைந்தார் – சேக்கிழார். பொருள்: அளவற்ற மக்கள் கடந்து செல்லும் வழியில் மிகுந்த கோடையின் வெப்பத்தினைப் போக்கியருளும் கருணைமிக்க பெரியோர் உள்ளம் போன்றும் நீர்த்தடாகம் போன்றும் அமைக்கப்பெற்ற குளிர்ச்சி நிறைந்த தண்ணீர்ப்பந்தல் திருநாவுக்கரசர் வந்து சேர்ந்தார்.

80. “அரிசி” என்னும் தமிழ்ச்சொல் “ஓரைஸா” என எம்மொழிக்குச் சென்றது?

(அ) கிரேக்கம்

(ஆ) இலத்தீன்

(இ) போர்ச்சுகீசியம்

(ஈ) வடமொழி

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) கிரேக்கம்

கடல்கடந்த தமிழ்

தமிழ் கிரேக்கம்

அரிசி ஒரைஸா

கருவூர் கரோரா

காவிரி கபிரில்

குமரி கொமாரி

தொண்டி திண்டிஸ்

மதுரை மதோரா

81. பேரறிஞர் அண்ணாவிற்கு விருப்பமான இலக்கியம்

(அ) கலிங்கதுப்பரணி

(ஆ) திருக்குறள்

(இ) கம்பராமாயணம்

(ஈ) பரிபாடல்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) கலிங்கதுப்பரணி

“எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே” – அறிஞர் அண்ணா.

82. “தமிழ் மொழி அழகான சித்திரவேலைப்பாடமைந்த வெள்ளித் தட்டு” என்று கூறியவர்

(அ) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

(ஆ) ஜி.யூ.போப்

(இ) டாக்டர்.கிரௌல்

(ஈ) கால்டுவெல்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) டாக்டர்.கிரௌல்

“தமிழ்மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள். தமிழ் என்னை ஈர்த்தது. குறளோ என்னை இழுத்தது” – டாக்டர்.கிரௌல் கூற்று

83. மன்னிப்பு – எம்மொழிச் சொல்?

(அ) தமிழ்

(ஆ) தெலுங்கு

(இ) மலையாளம்

(ஈ) உருது

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) உருது

ஒருமுறை மிதிவண்டிகாரர் தன் செய்கைக்காக பாவாணரிடம் “மன்னிக்கவும்” என்று கூறினார். அதற்கு பாவாணர் ”மன்னிப்பு” என்பது உருதுமொழிச் சொல். “பொறுத்துக் கொள்க” என்பதே சரியான தமிழ்ச் சொல் என்று கூறினார்.

84. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன அடிசேரா தார் – இக்குறளில் பயின்று வரும் அணியை எழுதுக

(அ) உவமையணி

(ஆ) நிரல்நிறைஅணி

(இ) வேற்றுப் பொருள் வைப்பு அணி

(ஈ) ஏகதேச உருவக அணி

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) ஏகதேச உருவக அணி

ஏகதேச உருவக அணி: செய்யுளில் ஒரு பொருளை உருவகம் செய்துவிட்டு, அதற்குத் தொடர்புடைய மற்றப் பொருட்களை அதற்கேற்ப, உருவகம் செய்யாமல் விட்டு விடுவதற்கு ஏகதேச உருவக அணி என்று பெயர். எ.கா: பிறவிப் பெருங்கடல நிந்துவர் நீந்தார் இறைவ னடி சேரா தார். இக்குறளில் பிறவியைக் கடலாக உருவகப்படுத்தி, அதைக் கடக்க உதவும் இறைவனடியைத் தெப்பமாக உருவகப்டுத்தாமையால், இஃது ஏகதேச உருவக அணியாகும்.

85. “முட்டையிட்டது சேவலா, பெட்டையா”?

(அ) திணைவழு

(ஆ) விடைவழு

(இ) மரபுவழு

(ஈ) வினாவழு

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) வினாவழு

சேவல் ஆணினம், முட்டையிடாது. “முட்டையிட்டது சேவலா பெட்டையா? என்பது வினா வழுவாகும்.

86. பொருந்தாத சொல்லைக் கண்டறிதல்: மாணிக்கம், முத்து, பவளம், கிளிஞ்சல்

(அ) மாணிக்கம்

(ஆ) முத்து

(இ) பவளம்

(ஈ) கிளிஞ்சல்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) கிளிஞ்சல்

ஏனைய மூன்றும் நவரத்தினங்களில் அடங்குபவை. நவரத்தினங்கள்: கோமேதகம், நீலம், பவளம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைரம், வைடூரியம்.

87. சொல்லைப் பொருளோடு பொருத்துக:

சொல் பொருள்

அ. வனப்பு – 1.காடு

ஆ. அடவி – 2. பக்கம்

இ. மருங்கு – 3. இனிமை

ஈ. மதுர ம்- 4. அழகு

அ ஆ இ ஈ

அ. 2 1 4 3

ஆ, 3 2 1 4

இ. 4 1 2 3

ஈ. 1 2 3 4

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. 4 1 2 3

88. பரிதிமாற்கலைஞருக்கு “திராவிட சாஸ்திரி” என்னும் பட்டத்தை வழங்கியவர்

(அ) மு.சி.பூர்ணலிங்கம்

(ஆ) சி.வை.தாமோதரனார்

(இ) மறைமலையடிகள்

(ஈ) திரு.வி.கல்யாணசுந்தரனார்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) சி.வை.தாமோதரனார்

பரிதிமாற் கலைஞரின் தமிழ்ப்புலமையையும் கவிபாடும் திறமையையும் கண்டு யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரனார் “திராவிட சாஸ்திரி” என்ற பட்டத்தை அவருக்கு வழங்கினார்

89. “எவ்வகை செய்தியும் உவமங்காட்டி” என ஓவியச் சிறப்பைப் பழந்தமிழர் அறிந்திருந்ததைக் காட்டும் இவ்வடி இடம்பெற்ற நூல்

(அ) குற்றாலக் குறவஞ்சி

(ஆ) முல்லைப்பாட்டு

(இ) மதுரைக்காஞ்சி

(ஈ) திருமுருகாற்றுப்படை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) மதுரைக்காஞ்சி

மதுரைக்காஞ்சி

“எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கிற் கண்ணுள் வினைஞரும் பிறருங்கடி” – மாங்குடி மருதனார்

90. “தென்னிந்தியாவின் ஏதென்ஸ்” என அழைக்கப்படும் நகரம்

(அ) திருநெல்வேலி

(ஆ) தஞ்சை

(இ) திருச்சி

(ஈ) மதுரை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) மதுரை

பழம்பெரும் தமிழர்தம் நாகரிகத் தொட்டிலாகத் திகழ்ந்ததால் “தென்னிந்தியாவின் ஏதென்ஸ்” என மதுரை மாநகரம் அழைக்கப்பட்டது

91.பெரியாரின் வாழ்க்கை நிகழ்வுகளில் சரியானவற்றைப் பொருத்துக்

அ. யுனெஸ்கோ விருது – 1. 21,400

ஆ. அஞ்சல்தலை – 2. 10,700

இ. பங்கேற்ற கூட்டங்கள் – 3. 1970

ஈ. உரையாற்றிய மணிநேரம் – 4. 1978

அ ஆ இ ஈ

அ. 4 3 1 2

ஆ. 3 4 2 1

இ. 2 3 4 1

ஈ. 1 3 4 2

விடை மற்றும் விளக்கம்

விடை:

ஆ. 3 4 2 1

ஈ.வெ.ரா.பெரியார்: 1970ஆம் ஆண்டு சமுதாயச் சீர்திருத்தச் செயல்பாடுகளுக்காக ஐக்கிய நாடுகள் அவையின்யுனெஸ்கோ விருது” பெரியாருக்கு வழங்கப்பட்டது. நடுவன் அரசு 1797-ல் பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல்தலையை வெளியிட்டு சிறப்பித்துள்ளது. அவர் பங்கேற்ற கூட்டங்களின் எண்ணிக்கை 10,700. அவர் உரையாற்றிய நேரம் 21400 மணி நேரம்.

92. திருவிளையாடற்புராணத்தில் உள்ள காண்டங்களில் பொருந்தாத காண்டத்தின் பெயரினைத் தேர்ந்தெடு

(அ) மதுரைக்காண்டம்

(ஆ) கூடற்காண்டம்

(இ) வஞ்சிக் காண்டம்

(ஈ) திருவாலவாயக் காண்டம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) வஞ்சிக் காண்டம்

வஞ்சிக்காண்டம் – சிலப்பதிகாரத்தின் பிரிவு

93. “நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான்” இத்தொடரில் குறிப்பிடப்படுகின்ற அரசன் யார் என்று தேர்ந்தெடு

(அ) முதலாம் குலோத்துங்கன்

(ஆ) இராசராசன்

(இ) கரிகாலன்

(ஈ) பராந்தகன்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) கரிகாலன்

“நரைமுடித்துச் சொல்லால் முறை செய்த அரசன்” கரிகாலன்

94. “மணிமேகலை” அமுதசுரபியைப் பெற்றிட உதவியவர்

(அ) மணிமேகலா தெய்வம்

(ஆ) கதமதி

(இ) தீவதிலகை

(ஈ) அறவண அடிகள்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) தீவதிலகை

மணிபல்லவத் தீவில், தீவதிலகையின் உதவியால்p மணிமேகலை அமுதசுரபியைப் பெறுகிறாள்.

95. “சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வமென் பதுவே” – இப்பாடல் வரிகளைப் பாடியவர் யார்?

(அ) முன்றுறை அரையனார்

(ஆ) காரியாசான்

(இ) மிளைகிழான் நல்வேட்டனார்

(ஈ) கணிமேதாவியார்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) மிளைகிழான் நல்வேட்டனார்

நற்றிணை அரிகால் மாறிய அங்கண் வயல் ———– ———— ———– ——— ————— ——– ———— ————- நெடிய மாழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வமென் பதுவே. – மிளைகிழான் நல்வேட்டனார். பொருள்: அரசால் சிறப்பு செய்யப் பெறுதலும், யானை, தேர், குதிரை முதுலிய ஊர்திகளில் அவ்வரசர் முன்னிலையில் விரைந்து செல்லுதலும் செல்வச் சிறப்பன்று. அஃது, அவரவர்தம் முன்வினைப் பயனே. தன்பால் புகலிடம் தேடி வந்த எளியோரைக் கைவிடாமல் காக்கும் மென்மையான பண்பே செல்வமெனச் சான்றோர் கூறுவர்

96. தமிழெண்களைக் கூட்டுக ருஅ சா.அ – ?

(அ) சாகஉ

(ஆ) கசாஉ

(இ) கருக

(ஈ) கஉசா

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) கஉசா

ரு 5. அ-3-58இ சா-6. அ-8-68. 58 68 – 126. 1 – க. 2-உ. சா-6

97. ஆற்றீர் – பகுபத உறுப்பிலக்கணத்தின்படி எவ்வாறு பிரியும்?

(அ) ஆற்று ஈர்

(ஆ) ஆறு ஈர்

(இ) ஆ இற்று ஈர்

(ஈ) ஆற்று ஆ ஈர்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) ஆற்று ஆ ஈர்

ஆற்று ஆ ஈர் – ஆற் -பகுதி, ஆ-எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டது, ஈர் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி.

98. தமிழ் – ஓசை மொழி

(அ) செப்பல்

(ஆ) தூங்கல்

(இ) மெல்

(ஈ) துள்ளல்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) மெல்

99. “சான்றாண்மை” அசை பிரித்துக் காட்டுதலில் சரியான விடையைத் தேர்ந்தெடு:

(அ) நேர் நிறை நேர்

(ஆ) நேர் நேர் நேர்

(இ) நிறை நிறை நிறை

(ஈ) நிறை நேர் நேர்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) நேர் நேர் நேர் 

சான்றான்மை-நேர் நேர் நேர்- தேமாங்காய். ஒற்றெழுத்து வரும் போது பிரிக்க வேண்டும். நெடில் எழுத்து வரும்போது பிரிக்க வேண்டும்

100. புறத்தினைகள் ———- வகைப்படும்

(அ) பன்னிரெண்டு

(ஆ) ஏழு

(இ) ஐந்து

(ஈ) ஒன்பது

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) பன்னிரெண்டு

புறத்திணைகள்: வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை.

Exit mobile version