Tnpsc General Tamil Previous Question Paper 15

Tnpsc General Tamil Previous Question Paper 15

Tnpsc General Tamil Previous Question Paper 15: Tnpsc Aspirants can use this opportunity to check Tnpsc General Tamil Previous Question Papers For Tnpsc Exam Preparation. General Tamil Previous Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Previous Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. தமிழகத்தின் மிகப் பழமையான குடைவரைக் கோயில் எங்குள்ளது?

(அ) பிள்ளையார்ப்பட்டி

(ஆ) பெருமாள் பட்டி

(இ) கங்குவார்ப் பட்டி

(ஈ) செல்லப்பிராட்டி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) பிள்ளையார்ப்பட்டி

பிள்ளையார்பட்டி என்னும் ஊரின் குடைவரைக் கோயிலே தமிழகத்தில் இன்று காணப்பெறும் குடைவரைக் கோயில்களும் மிகப் பழைமையானதாகும். இக்கோயில் பாண்டியர்களின் படைப்பாகும். கி.மு.6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தாகும். இதனை அடுத்துதான் தமிழகத்தின் பல பகுதிகளில் பல்லவர்கள். பிற்கால பாண்டியர்கள், அதியர், முத்தரையர் ஆகியோரால் குடைவரைக் கோயில்கள் அமைக்கப்பட்டன. கி.பி-9-ஆம் நூற்றாண்டோடு குடைவரைக் கோயில்கள் அமைக்கும் பணி நின்று விட்டது.

2. ஆனந்த விகடன் இதழில் தம் வாழ்க்கை வரலாற்றைத் தொடராக எழுதியவர்.

(அ) உ.வே.சாமிநாதன்

(ஆ) ம.பொ.சிவஞானம்

(இ) திரு.வி.கல்யாண சுந்தரனார்

(ஈ) தாரா பாரதி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) உ.வே.சாமிநாதன்

உ.வே.சாமிநாதர் தம் வாழ்க்கை வரலாற்றை “என் சரிதம்” என்ற பெயரில் ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதினார்.

3. நல்ல பாம்பின் நஞ்சு மூலம் தயாரிக்கப்படும் வலி நீக்கி மருந்து எது?

(அ) ஆஸ்பிரின்

(ஆ) கோப்ராக்சின்

(இ) குளோரோபார்ம்

(ஈ) தைராக்சின்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) கோப்ராக்சின்

நல்ல பாம்பின் நஞ்சு, கோப்ராக்சின் (Cobroxin) என்னும் வலிநீக்கி மருந்து செய்யப்பயன்படுகிறது.

4. “சண்பக பாண்டியன்” என்னும் பெயர் பெற்ற பாண்டிய மன்னன்

(அ) வங்கிய சேகர பாண்டியன்

(ஆ) கூன் பாண்டியன்

(இ) சூடாமணி பாண்டியன்

(ஈ) பொற்கை பாண்டியன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) சூடாமணி பாண்டியன்

வங்கிய சூடாமணி பாண்டியன் மதுரையின் அரசாட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், இறைவனுக்கு சண்பகமாலை சூட்டி வழிபடக் கருதி சண்பக நந்தவனத்தை ஏற்படுத்தினான். இதனால் இவனுக்கு “சண்பக பாண்டியன்” என்னும் பெயர் வழங்கலாயிற்று. இம்மன்னன் குறித்த விவரங்கள் திருவிளையாடற்புராணம். திருவாலவாய்க் காண்டத்தில் “தருமிக்குப் பொற்கிழி அளித்த படலத்தில்” கூறப்பட்டுள்ளன. நக்கீரர் இம்மன்னனின் அவையில் தலைமை அமைச்சராக இருந்தார். இம்மன்னன் முன்னிலையில்தான் நக்கீரர் இறைவனுடன் வாதம் செய்து, “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று கூறினார்.

5. “மேவும் மென்மை மூக்கு உரம் பெறும் வன்மை”

– இத்தொடரின் உரம் என்பதன் பொருள்

(அ) உயிர்

(ஆ) கழுத்து

(இ) வாய்

(ஈ) மார்பு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) மார்பு

ஆவி இடைமை இடமிடறு ஆகும்

மேவும் மென்மை மூக்கு உரம் பெறும் வன்மை

– நன்னூல் 75.

12 உயிர் எழுத்துகளும், இடையின எழுத்துகள் ஆறும் கழுத்திலிருந்து பிறக்கின்றன. மெல்லின எழுத்துகள் ஆறும் மூக்கிலிருந்து பிறக்கின்றன. வல்லின எழுத்துகள் ஆறும் மார்பிலிருந்து பிறக்கின்றன.

உரம்-மார்பு.

6. தழையா வெப்பம் தழைக்கவும் எனும் தொடரில் தழை என்பது

(அ) பெயர்ச்சொல்

(ஆ) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

(இ) வினைச்சொல்

(ஈ) உரிச்சொல்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) வினைச்சொல்

7. தமிழகத்தின் “வேர்ட்ஸ் வொர்த்” எனப் புகழப்படுபவர்

(அ) பாரதிதாசன்

(ஆ) கம்பதாசன்

(இ) பூங்குன்றனார்

(ஈ) வாணிதாசன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) வாணிதாசன்

8. சம்புவின் கனி எனக்குறிக்கப்படுவது

(அ) மாம்பழம்

(ஆ) நாவல் பழம்

(இ) கொய்யாப்பழம்

(ஈ) பலாப்பழம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) நாவல் பழம்

விவேகசிந்தாமணி

தேன்நுகர் வண்டு மதுதனை உண்டு

தியங்கியே கிடந்ததைக் கண்டு

தான்அதைச் சம்பு வின்கனி என்று

தடங்கையில் எடுத்துமுன் பார்த்தான்.

– ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.

பொருள்: தேனை உண்டுவிட்டு வண்டு மயங்கிக் கிடக்கிறது. மயங்கிக் கிடந்த வண்டை நாவற்பழமென நினைத்து மங்கை ஒருத்தி தன் கையில் எடுத்துப் பார்த்தாள்.

9. “சந்திரன் சுவர்க்கி” என்ற வள்ளலால் ஆதரிக்கப்பட்ட புலவர்

(அ) புகழேந்திப் புலவர்

(ஆ) உமறுப்புலவர்

(இ) காளமேகப் புலவர்

(ஈ) அழகிய சொக்கநாதப்புலவர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) புகழேந்திப் புலவர்

நளவெண்பாவை இயற்றியவர் புகழேந்திப்புலவர் ஆவார். இவரை ஆதரித்த வள்ளல் சந்திரன் சுவர்க்கி. உமறுப்புலவரை ஆதரித்த மன்னன் சீதக்காதி ஆவார். காளமேகப்புலவரை ஆதரித்த கல்யாணிச் சாளுவ திருமலைராயன். அழகிய சொக்கநாதப் புலவரை ஆதரித்த வள்ளல் முத்துசுவாமி துரை ராசேந்திரன்.

10. திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்த வெளியிட்டவர் யார்?

(அ) உ.வே.சா

(ஆ) பாவாணர்

(இ) ஞானப்பிரகாசம்

(ஈ) ஞானக்கூத்தன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) ஞானப்பிரகாசம்

திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்து வெளியிட்டவர் தஞ்சாவூர் மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் ஆவார். அச்சிடப்பட்ட ஆண்டு கி.பி.1812

General Tamil Study Materials

General Tamil Previous Questions Pdf

11. “கடம்” என்ற சொல்லின் பொருள்

(அ) முகம்

(ஆ) கைகள்

(இ) உடம்பு

(ஈ) இடுப்பு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) உடம்பு

கள்ளவேடம் புனையாதே – பல

கங்கையிலே உன் கடம் நனையாதே

– கடுவெளிச் சித்தர்.

பொருள்: போலியான வேடங்களைப் போடாதே!

புண்ணிய நதிகளைத் தேடிச் சென்று முழுகாதே!

கடம் – உடம்பு.

12. அகத்துறுப்பு என்பது

(அ) பல்

(ஆ) மனத்தின் உறுப்பு அன்பு

(இ) இதயம்

(ஈ) வயிறு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) மனத்தின் உறுப்பு அன்பு

திருக்குறள்-அன்புடைமை

புறத்துறுப் பெல்லாம் எவன் செய்யும் யாக்கை

அகத்துறுப்பு அன்பி லவர்க்கு

– குறள்-79.

பொருள்: உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு அதன் புறத்து உறுப்புகளால் யாதொரும் பயனும் இராது.

13. “தமிழ் பிறமொழி துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றி தழைத்தோங்கவும் செய்யும்”

– என்று கூறிய அறிஞர்

(அ) தேவநேயப் பாவாணர்

(ஆ) பாரதிதாசன்

(இ) கால்டுவெல்

(ஈ) ஜி.யூ.போப்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) கால்டுவெல்

தமிழின் தூய்மை: “தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றித் தழைத்தோங்கவும் செய்யும்”

– கால்டுவெல் கூற்று.

14. தமிழக அரசின் பரிசு பெற்ற முடியரசனின் காவியம் எது?

(அ) சகலகலாவல்லி மாலை

(ஆ) பூங்கொடி

(இ) மணிக்கொடி

(ஈ) உரிமை வேட்கை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) பூங்கொடி

கவிஞர் முடியரசன் ‘பூங்கொடி’ என்னும் காவியத்திற்காக 1966-இல் தமிழக அரசின் பரிசினைப் பெற்றார்.

15. “நற்கலை” என்று அழைக்கப்படும் கலை

(அ) நாடகக்கலை

(ஆ) சிற்பக்கலை

(இ) ஓவியக்கலை

(ஈ) அழுகுக்கலை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) நாடகக்கலை

நாடகக் கலையை ‘நற்கலை’ என்று கவிமணி தேசிய விநாயகம் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாடக சாலையை நற்கலாசாலை என்றும் குறிப்பிட்டுள்ளார்.. நாடகச் சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ?

– கவிமணி

கொடுக்கப்பட்டுள்ள 4 கொள்குறிகளும் தவறானவை.

16. “கால்டுவெல்” தமிழகத்தில் வாழ்ந்த இடம்

(அ) புளியங்குடி

(ஆ) சிறுகூடல் பட்டி

(இ) மாங்குளம்

(ஈ) இடையன்குடி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) இடையன்குடி

இராபர்ட் கால்டுவெல்

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கால்டுவெல் 1841-இல் தமிழகம் வந்து, திருநெல்வேலியில் உள்ள இடையன்குடி என்ற ஊரில் தனது சமயப் பணியையும் தமிழ்ப்பணியையும் தொடங்கினார். இடையன்குடி என்ற ஊரில் 50 ஆண்டுகள் வாழ்ந்தார். 1891-இல் தனது சமயப் பணியிலிருந்து ஓய்வு பெற்று கொடைக்கானல் சென்று தங்கியிருந்த போது இயற்கை எய்தினார். அவர்தம் உடல் இடையன்குடிக்கு கொண்டுவரப்பட்டு, அவர் எடுப்பித்த கோயிலில் அடக்கம் செய்யப்பட்டது,

17. பொருத்துக:

திணை பொழுது

அ. குறிஞ்சி – 1. எற்பாடு

ஆ. முல்லை – 2. நண்பகல்

இ. மருதம் – 3. மாலை

ஈ. நெய்தல் – 4. யாமம்

உ. பாலை – 5. வைகறை

அ ஆ இ ஈ உ

அ. 4 3 5 1 2

ஆ. 2 1 4 5 3

இ. 5 4 1 2 3

ஈ. 3 1 2 4 5

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

அ. 4 3 5 1 2

அகப்பொருள் திணைகள் ஐந்து அவற்றிற்கான பெரும்பொழுதுகள், சிறுபொழுதுகள் தனித்தனியே வகைப்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பொழுது என்பது ஓர் ஆண்டின் கூறுபாடுகள் ஆகும். அவை, சிறுபொழுது என்பது ஒரு நாளின் கூறுபாடுகள் ஆகும்.

1.காலை – காலை 6 மணி முதல் 10 மணி வரை

2. நண்பகல் – காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

3. எற்பாடு – பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை

4. மாலை – மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை

5. யாமம் – இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை

6. வைகறை – இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை

ஐந்திணைகளுக்கும் உரிய முதற்பொருள்:

திணை நிலம் பெரும் பொழுது சிறுபொழுது
குறிஞ்சி மலையும் மலை சார்ந்த இடமும் குளிர்காலம், முன்பனிக் காலம் யாமம்
முல்லை காடும் காடு சார்ந்த இடமும் கார்காலம் மாலை
மருதம் வயலும் வயல் சார்ந்த இடமும் ஆறுபெரும் பொழுதுகள் வைகறை
நெய்தல் கடலும் கடல் சார்ந்த இடமும் ஆறுபெரும் பொழுதுகள் எற்பாடு
பாலை மணலும் கடல் சார்ந்த இடமும் இளவேனில், முதுவேனில், பின்பணி நண்பகல்

18. “எற்பாடு” என்னும் சொல்லில் “பாடு” என்பதன் பொருள்

(அ) தயார் செய்தல்

(ஆ) பாட்டு பாடுதல்

(இ) மறையும் நேரம்

(ஈ) துன்பப்படுதல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) மறையும் நேரம்

எற்பாடு – எல்+பாடு

எல்-ஞாயிறு

பாடு-மறையும் நேரம்

19. “வயிரமுடைய நெஞ்சு வேணும்” – எனக்கூறிய கவிஞர்

(அ) பாரதிதாசன்

(ஆ) கவிமணி

(இ) பாரதியார்

(ஈ) அழ.வள்ளியப்பா

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பாரதியார்

பாப்பா பாட்டு

உயிர்களிடத்து அன்பு வேணும் – தெய்வம்

உண்மை என்று தானறிதல் வேண்டும்

வயிரமுடைய நெஞ்சு வேணும் – இது

வாழும் முறைமை யடிபாப்பா!

– பாரதியார்.

20. “ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிரோன்றேனையது” – என்ற பாடல் இடம் பெறும் நூல்.

(அ) மாறனலங்காரம்

(ஆ) காரிகை

(இ) தண்டியலங்காரம்

(ஈ) நன்னூல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) தண்டியலங்காரம்

“ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்

மின்னோர் தனியாழி வெங்கதிரோன் றேனையது

தன்னே ரிலாத் தமிழ்”

– தண்டியலங்காரம்

21. “முயற்சி திருவினை ஆக்கும்” எனக்கூறியவர்

(அ) பாரதியார்

(ஆ) திருவள்ளுவர்

(இ) ஒளவையார்

(ஈ) திருமூலர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) திருவள்ளுவர்

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

– திருக்குறள் 616.

அதிகாரம்-ஆள்வினை உடைமை.

இயல்-அரசியல்.

22. தமிழ்-பிரெஞ்சு கையகர முதலி எனும் நூலை வெளியிட்ட கவிஞர்

(அ) கண்ணதாசன்

(ஆ) வாணிதாசன்

(இ) வண்ணதாசன்

(ஈ) பாரதியார்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) வாணிதாசன்

“தமிழ்-பிரெஞ்சு கையகரமுதலி” என்னும் நூலை வெளியிட்டவர் கவிஞர் வாணிதாசன் ஆவார். அவர் தமிழகத்தின் “வேர்ட்ஸ்வொர்த்” என்று அழைக்கப்பட்டார். ரஷ்யா, ஆங்கில மொழிகளில் இவரது பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பிரெஞ்சுக் குடியரசு இவருக்கு “செவாலியர் விருது” வழங்கியுள்ளது. “ரமி” என்ற புனைப்பெயரில் பல கவிதைகளை இயற்றியுள்ளார்.

23. அறவுரைக்கோவை எனும் நூலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை

(அ) 1330

(ஆ) 30

(இ) 10

(ஈ) 133

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) 10

“அறவுரைக் கோவை” எனப்படும் நூல் முதுமொழிக் காஞ்சியாகும். இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் பத்து அதிகாரங்களை உடையது.

1. சிறந்த பத்து.

2. அறிவுப்பத்து.

3. பழியாப்பத்து.

4. துவ்வாப்பத்து.

5. அல்ல பத்து.

6. இல்லை பத்து.

7. பொய்ப்பத்து.

8. எளிய பத்து.

9. நல்கூர்ந்து பத்து.

10. தண்டாப்பத்து.

ஒவ்வொரு பத்தின் முதலடியும், “ஆர்கலியுலகத்து மக்கட்கெல்லாம்” எனத் தொடங்கும். ஒவ்வொரு பத்திலும் 10 அடிகள் வீதம் 100 அடிகள் கொண்ட இந்நூல் நீதிநூல்களில் மிகச் சிறியதாகும்.

24. பாம்பினைப் பற்றி ஆட்டாதே – உன்றன் பத்தினமார்களைப் பழித்துக் காட்டாதே எனப் பாடிய சித்தர்

(அ) தேரையர்

(ஆ) பாம்பாட்டிச் சித்தர்

(இ) போகர்

(ஈ) கடுவெளிச்சித்தர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) கடுவெளிச்சித்தர்

பாம்பினைப் பற்றி ஆட்டாதே – உன்றன்

பத்தினிமார்களைப் பழித்துக் காட்டாதே!

வேம்பினை உலகில் ஊட்டாதே – உன்றன்

வீறாப்பு தன்னை விளங்க நாட்டாதே!

– கடுவெளிச் சித்தர்.

25. அம்மானை என்பது ———– விளையாடும் விளையாட்டு

(அ) ஆண்கள்

(ஆ) குழந்தைகள்

(இ) பெண்கள்

(ஈ) இளைஞர்கள்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பெண்கள்

“அம்மானை” என்பது பெண்கள் விளையாடும் ஒருவகை விளையாட்டு. மூவர் வட்டமாக அமர்ந்து கல்லை மேலேறிந்து பிடித்தாடுவது வழக்கம். விளையாடும் போது முதலாமவர் ஒரு கருத்தைக் கூறித் தொடங்க, இரண்டாமவர் அது பற்றி வினவ, மூன்றாமவர் அதற்கு விடை கூறுவதாய் முடியும். இவ்வகையில் இயற்றப்படும் சிற்றிலக்கியம் “அம்மானை” எனப்படும். ‘அம்மானை’ என்பது ‘கலம்பகம்’ என்ற சிற்றிலக்கிய வகையிலுள்ள இரண்டாவது உறுப்பாகும்.

26. தமிழக மக்களால் காந்தியக்கவிஞர் என வழங்கப்படுபவர்

(அ) திரு.வி.க

(ஆ) வெ.இராமலிங்கனார்

(இ) பாரதிதாசன்

(ஈ) வே.இராமசாமி

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) வெ.இராமலிங்கனார்

27. “களி இன்ப நல்வாழ்வு கொண்டு” – கன்னித் தமிழுக்கு ஆற்றுக தொண்டு” என்று பாடியவர்

(அ) பாரதியார்

(ஆ) கோ.அ.அப்துல் லத்தீப்

(இ) முடியரசன்

(ஈ) பாரதிதாசன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) கோ.அ.அப்துல் லத்தீப்

28. “காந்தியடிகளை அரை நிர்வாணப் பக்கிரி” என்று ஏளனம் செய்தவர்

(அ) சர்ச்சில்

(ஆ) புனித ஜார்ஜ்

(இ) வாரன் ஹேஸ்டிங்ஸ்

(ஈ) இராபர்ட் கிளைவ்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) சர்ச்சில்

29. கீழ்ச்சாதி, மேல் சாதி வேற்றுமை, தீண்டாமைக் கொடுமைகள் அகல எல்லோருக்கும் கல்வி தேவை என்று கூறியவர்

(அ) அம்பேத்கர்

(ஆ) அயோத்திதாசப் பண்டிதர்

(இ) பெரியார்

(ஆ) காந்தியடிகள்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) பெரியார்

30. அவல் – எதிர்ச்சொல்

(அ) பள்ளம்

(ஆ) மேடு

(இ) அவன்

(ஈ) உணவு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) மேடு

புறநானூறு

நாடகு ஒன்றோ; காடாகு ஒன்றோ;

அவலாகு ஒன்றோ; மிசையாகு ஒன்றோ;

– ஒளவையார்.

பொருள்: நிலமே நீ நாடாக இருந்தால் என்ன? காடாக இருந்தால் என்ன? பள்ளமாக இருந்தால் என்ன? மேடாக இருந்தால் என்ன?

அவல்-பள்ளம்

அவல்xமேடு

31. பொருத்துக:

அ. ஒப்புரவு – 1.சான்றாண்மை

ஆ. சால்பு – 2. உதவுதல்

இ. மாற்றார் – 3. உரைகல்

ஈ. கட்டளை – 4. பகைவர்

அ ஆ இ ஈ

அ. 2 4 1 3

ஆ. 4 3 2 1

இ. 3 1 4 2

ஈ. 2 1 4 3

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. 2 1 4 3

32. “சரசுவதி பண்டாரம்” என அழைக்கப்படுவது

(அ) தமிழ் நூல்

(ஆ) பிற நூல்

(இ) புத்தகசாலை

(ஈ) பாடல் வகை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) புத்தகசாலை

“புத்தகசாலை” என்னும் பொருளைத் தரும் சொற்கள்:

பண்டாரம், சரசுவதி பண்டாரம், புத்தக பண்டாரம், ஏடகம், கவடிச்சாலை, கவடியகம், நூலகம், நூல் நிலையம்.

33. “நோய்க்கு மருந்து இலக்கியம்” என்று கூறியவர்

(அ) உ.வே. சாமிநாதர்

(ஆ) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

(இ) மறைமலையடிகள்

(ஈ) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்

விடை: (ஆ) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

34. “தென்னாட்டின் ஜான்சிராணி” என்று காந்தியடிகள் அழைத்தது யாரை?

(அ) வேலுநாச்சியார்

(ஆ) அஞ்சலையம்மாள்

(இ) அப்புஜத்தம்மாள்

(ஈ) ருக்மணி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) அஞ்சலையம்மாள்

அஞ்சலையம்மாள் இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனைகளுள் ஒருவராவார். இவர் கடலூரில் 1890-இல் பிறந்தவர். நீலன் சிலையை அகற்றும் போராட்டம், உப்பு காய்ச்சும் போராட்டம், தனியாள் போராட்டம், வெள்ளையனே வெளியேறு போராட்டம் முதலியவற்றில் கலந்து கொண்டு சிறை சென்றார். விடுதலைப் போராட்டத்திற்காக தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று செலவு செய்தார். நீலன் சிலையை அகற்றும் போராட்டத்தில் கலந்து கொண்டதால் ஆங்கிலேய அரசு இவரையும் இவரது ஒன்பது வயது மகள் அம்மா கண்ணுவையும் கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையிலிருந்த அம்மாகண்ணுவை காந்தியடிகள் வெளியே கொண்டு வந்து, தன்னுடைய வார்தா ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று “லீலாவதி” எனப் பெயரிட்டு படிக்க வைத்தார். காந்தியடிகள் ஒருமுறை கடலூருக்கு வந்த பொழுது, அவரைச் சந்திப்பதற்கு ஆங்கிலேய அரசு அஞ்சலையம்மாளுக்குத் தடை விதித்தது. அதனால், அவர் பர்தா வேடமணிந்து குதிரை வண்டியில் காந்தியடிகளை ஏற்றிச் சென்றார். எனவே காந்தியடிகள் அஞ்சலையம்மாளைத் “தென்னாட்டின் ஜான்ஸிராணி” என்றழைத்தார்.

35. ஆற்றுணா வேண்டுவது இல் – இவ்வடியின் பொருள்

(அ) கற்றவனுக்குச் சோறு வேண்டா

(ஆ) கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா

(இ) கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டும்

(ஈ) கல்லாதவனுக்குக் கட்டுச்சோறு வேண்டாம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா

பழமொழி நானூறு

ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃதுடையார்

நாற்றிசையும் செல்லாத நாடில்லை; அந்நாடு

வேற்றுநாடு ஆகா; தமவேயாம்; ஆயினால்

ஆற்றுணா வேண்டுவது இல்.

– முன்றுறை அரையனார்.

பொருள்: கற்க வேண்டிய நூல்களை நிறைவாகக் கற்றவர் அறிவுடையவர் ஆவார். அவருடைய புகழ் நான்கு திசைகளிலும் பரவும். அவருடைய புகழ் பரவாத நாடு இல்லை. அந்த நாடுகள் எல்லாம் வேற்று நாடுகள் இல்லை. தம்முடைய நாடுகளே. எனவே, அந்நாடுகளுக்குச் செல்லும் போது வழி நடை உணவை, அவர் எடுத்துச் செல்ல வேண்டிய தேவையில்லை.

36. “வருகை” என்பது ——— பருவத்தைக் குறிக்கும்

(அ) மூன்றாவது

(ஆ) ஆறாவது

(இ) ஐந்தாவது

(ஈ) ஏழாவது

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) ஆறாவது

இருபாலாருக்கு பொதுவான பருவங்கள் (7):

காப்பு, செங்கீரை

, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி,

ஆண்பால் பிள்ளைத் தமிழுக்குரிய இறுதி மூன்று பருவங்கள்:

சிற்றில், சிறுபாறை, சிறுதேர்.

பெண்பால் பிள்ளைத் தமிழுக்குரிய இறுதி மூன்று பருவங்கள்:

அம்மானை, கழங்கு (நீராடல்), ஊசல்.

37. முதன்முதலாக மக்களுக்காக (பொது) நூலகத்தை அமைத்த நாடு

(அ) கிரீஸ்

(ஆ) ரோம்

(இ) இத்தாலி

(ஈ) ஏதென்ஸ்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) கிரீஸ்

கிரீஸ் நகர அரசுகளே முதன்முதலாக மக்களுக்கான நூல்நிலையங்களை அமைந்தன.

38. “விசும்பு” என்னும் சொல்லின் பொருள்

(அ) ஆகாயம்

(ஆ) துளி

(இ) மழைத்துளி

(ஈ) மேகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) ஆகாயம்

39. “பெண்களெல்லாம் அரம்பையர் போல் ஒளிரு நாடு” எனற் வரிகள் இடம் பெற்ற நூல்

(அ) பாஞ்சாலி சபதம்

(ஆ) மகாபாரதம்

(இ) இராமாயணம்

(ஈ) பகவத் கீதை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) பாஞ்சாலி சபதம்

பாஞ்சாலி சபதம் – சூழ்ச்சிச் சருக்கம்

பேரறமும் பெருந்தொழிலும் பிறங்கு நாடு

பெண்களெல்லாம் அரம்பையர்போல் ஒளிரு நாடு

வீரமொடு மெய்ஞ்ஞானந் தவங்கள் கல்வி

வேள்வியெனு மிவையெல்லாம் விளங்கு நாடு

– பாரதியார்.

பொருள்: பாண்டவர்கள் ஆட்சி செய்யும் இந்திர மாநகர், சிறப்புமிக்க அறச்செயல்களாலும் பெருமைமிகு தொழில் வளத்தாலும் சிறப்புற்ற நாடு; பெண்கள், தேவமகளிர் போல் ஒளிர்கினற் நாடு; வீரம், மெய்யறிவு, தவம், கல்வி, வேள்வி ஆகிய இவையனைத்தும் நிறைந்த நாடு.

40. “உரைநடைக் காலம்” என அழைக்கப்படும் நூற்றாண்டு

(அ) பதினேழாம்

(ஆ) பதினெட்டாம்

(இ) பத்தொன்பதாம்

(ஈ) இருபதாம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) இருபதாம்

41. இவற்றுள் எத்தொடர் வள்ளலார் கூறாதத் தொடராகும்?

(அ) குருவை வணங்க கூசி நிற்காதே

(ஆ) நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே

(இ) கோனோக்கி வாழும் குடிபோல் நிற்காதே

(ஈ) பசித்தோர் முகத்தைப் பாராதிராதே

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) கோனோக்கி வாழும் குடிபோல் நிற்காதே

42. “உலாமடல்” என்னும் நூலின் ஆசிரியர்

(அ) ஒட்டக்கூத்தர்

(ஆ) ஜெயங்கொண்டார்

(இ) கம்பர்

(ஈ) பெருஞ்சித்திரனார்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) ஜெயங்கொண்டார்

கலிங்கத்துப்பரணி என்ற காப்பியத்தை இயற்றியவர் ஜெயங்கொண்டார். இவர் முதன்முதலில் “பரணி” பாடிய பெருமைக்குரியவர். இவர் இயற்றிய பிற நூல்கள் இசையாயிரம், உலாமடல் ஆகியவையாகும்.

43. உதடுகள் இரண்டும் பொருந்துவதனால் பிறக்கும் எழுத்துகள்

(அ) க் ங்

(ஆ) ஞ்ட்

(இ) ய் ர்

(ஈ) ப் ம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) ப் ம்

ப், ம் – மேல் உதடும் கீழ் உதடும் பொருந்த இவை தோன்றும்.

க், ங் – இவ்விரு மெய்களும் நாவினது முதற்பகுதி அண்ணத்தைத் தொடுவதால் தோன்றுகின்றன.

ச், ஞ் – இவ்விரு மெய்களும் இடைநா, நடு அண்ணத்தைத் தொடுவதனால் பிறக்கின்றன.

ட், ண் – இவை நாவினது நுனி, அண்ணத்தின் நுனியைத் தொடுவதனால் பிறக்கின்றன.

ய் – இது நாக்கின் அடிப்பகுதி, மேல்வாயின் அடிப்பகுதியைப் பொருந்துவதனால் தோன்றுகிறது.

ர், ழ் – இவை மேல் வாயை நாக்கின் நுனி தடவுவதனால் பிறக்கின்றன.

44. உ.வே.சா. அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள்

(அ) கால்டுவெல் – கெல்லட்

(ஆ) கமில் கவலபில் – மாக்கமுல்லர்

(இ) ஜி.யூ.போப் – சூலியஸ் வின்சோன்

(ஈ) ஹிப்பாலஸ் – பிளைநி

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) ஜி.யூ.போப் – சூலியஸ் வின்சோன்

45. கண்ணன் என்பது ———– பகுபதம் ஆகும்.

(அ) பொருட்பெயர்

(ஆ) சினைப்பெயர்

(இ) பண்புப்பெயர்

(ஈ) வினைப்பெயர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) சினைப்பெயர்

பொன்னன் – பொருட்பெயர்.

குற்றாலத்தான் – இடப்பெயர்.

அமாவாசையான் – காலப்பெயர்.

கண்ணன் – சினைப்பெயர்.

நல்லன் – பண்புப்பெயர்.

இன்சொல்லன் – தொழிற்பெயர்.

46. நான், யான் என்பன

(அ) தன்மை ஒருமைப் பெயர்கள்

(ஆ) தன்மைப் பன்மைப் பெயர்கள்

(இ) படர்க்கைப் பெயர்கள்

(ஈ) முன்னிலைப் பெயர்கள்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) தன்மை ஒருமைப் பெயர்கள்

நான், யான் – தன்மை ஒருமைப் பெயர்கள்.

நாங்கள், யாங்கள் – தன்மைப் பன்மைப் பெயர்கள்.

அவன், அவள், அவர்கள் – படர்க்கைப் பெயர்கள்.

நீ, நீங்கள் – முன்னிலைப் பெயர்கள்.

47. “உயிர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி கூறும நூல்”

(அ) திருக்குறள்

(ஆ) பதிற்றுப்பத்து

(இ) புறநானூறு

(ஈ) திருவாசகம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) திருவாசகம்

திருவாசகம்.

புல்லாகிப் பூடாய்ப் புழவாய்மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப்பாம்பாகி

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்

எம்பெருமான் மெய்யே உன் பொன்னடிகள்

கண்டு இன்று வீடு உற்றேன்.

– மாணிக்கவாசகர்.

மேற்கண்ட பாடலில் ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள பரிணாம வளர்ச்சி பற்றிக் கூறப்பட்டுள்ளது.

48. மேரி கியூரி – பியரி கியூரி இணையர் இணைந்து நோபல் பரிசு பெற்ற ஆண்டு எது?

(அ) 1911

(ஆ) 1934

(இ) 1903

(ஈ) 1905

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) 1903

அறிவியல் மேதை ஏ.எச்.பெக்காரல் என்பருடன், மேரி கியூரியும் அவரது கணவர் பியரி கியூரியும் இயற்பியலில் ஆராய்ச்சியை மேற்கொண்டனர். முதலில் கணவன்-மனைவி இருவரும் பொலோனியம் என்னும் தனிமப் பொருளைக் கண்டுபிடித்தனர். அதன் பிறகு 2 ஆண்டுகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து, ரேடியம் என்னும் தனிமப் பொருளைக் கண்டுபிடித்தனர். இவ்விரண்டு அரிய கண்டுபிடிப்புகளுக்காக ஏ.எச்.பெக்காரலுக்கும் பியரி கியூரி-மேரி கியூரி இணையருக்கும் 1903-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பிரித்து வழங்கப்பட்டது. நோபல் பரிசு வரலாற்றில் பரிசு பெற்ற முதற்பெண்மணி மேரி கியூரி ஆவார். கணவர் இறந்த பின்பு வேதியியலில் ஆராய்ச்சிகள் பல செய்து ரேடியத்தின் அணு எடையைக் கண்டுபிடித்தார். அதற்காக அவருக்கு 1911-ஆம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

49. தமிழக அரசின் முல் அரசவைக் கவிஞர்யார்?

(அ) கவிஞர் முத்துலிங்கம்

(ஆ) கவியரசர் கண்ணதாசன்

(இ) கவிஞர் வெ.இராமலிங்கனார்

(ஈ) கவிஞர் பாரதிதாசன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) கவிஞர் வெ.இராமலிங்கனார்

தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் நாமக்கல் இராமலிங்கனார் ஆவார். இவரை அரசவைக் கவிஞராக நியமித்தவர் அன்றைய தமிழக முதலமைச்சர் இராஜாஜி ஆவார். இவர் அரசவைக் கவிஞராக நியமனம் பெற்றபோது, “இந்த சமயத்தில் பாரதி இல்லையே என்று ஏங்கினேன். அந்தக்குறையை நீங்கள் நீக்கிவிட்டீர்கள்” என்று இராஜாஜி கூறினார்

50. அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கிய ஆண்டு எது?

(அ) 1956

(ஆ) 1986

(இ) 1990

(ஈ) 1927

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) 1990

51. “வங்க சிங்கம்” என அழைக்கப்படுபவர்

(அ) காந்தியடிகள்

(ஆ) ஜவஹர்லால் நேரு

(இ) வல்லபாய் பட்டேல்

(ஈ) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) வல்லபாய் பட்டேல்

52. பதிணெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று

(அ) அகநானூறு

(ஆ) புறநானூறு

(இ) திருக்குறள்

(ஈ) பதிற்றுப்பத்து

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) திருக்குறள்

கொடுக்கப்பட்டுள்ள கொள்குறிகளில் அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய மூன்றுமே எட்டுத்தொகை நூலுகளாகும். திருக்குறள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.

53. நேரு மகளுக்கு எழுதிய கடிதத்தில் எதனைப் பற்றி அதிகம் கூறுகிறார்?

(அ) உணவு

(ஆ) உடல்நலம்

(இ) நூல்கள்

(ஈ) உடற்பயிற்சி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) நூல்கள்

நேரு தன் மகளுக்கு எழுதிய கடிதத்தில் நூல்கள் பற்றியே அதிகமாகக் குறிப்பிட்டுள்ளார். ஷேக்ஸ்பியர், மில்டன், பெர்னாட்ஷா, பிளேட்டோ, காளிதாசர், டால்ஸ்டாப், பெட்ரண்ட் ரஸ்ஸல் ஆகியோரின் நூல்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

54. பட்டினம், பாக்கம்

(அ) மலையை அடுத்து இருக்கும் ஊர்கள்

(ஆ) வயலை அடுத்து இருக்கும் ஊர்கள்

(இ) காடுகளை அடுத்து இருக்கும் ஊர்கள்

(ஈ) கடலை அடுத்து இருக்கும் ஊர்கள்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) கடலை அடுத்து இருக்கும் ஊர்கள்

மலையை அடுத்து உள்ள ஊர்கள் – சிறுகுடி.

வயலை அடுத்து உள்ள ஊர்கள் – பேரூர், மூதூர்.

காடுகளை உள்ள ஊர்கள் – பாடி, சேரி.

கடலை அடுத்து உள்ள ஊர்கள் – பட்டினம், பாக்கம்

55. தவறான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

(அ) 1949-ல் குமாரசாமி முதலமைச்சராக இருந்தார்

(ஆ) 1954-ல் காமராசர் முதலமைச்சராக இருந்தார்

(இ) 1944-ல் பிரகாசம் முதலமைச்சராக இருந்தார்

(ஈ) 1947-ல் ஓமந்தூர் இராமசாமி முதலமைச்சராக இருந்தார்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) 1944-ல் பிரகாசம் முதலமைச்சராக இருந்தார்

1955-இல் பிரகாசம் முலமைச்சராக இருந்தார்.

1949-ல். குமாரசாமி முதலமைச்சராக இருந்தார்.

1947-ல் ஓமந்தூர் இராமசாமி முதலமைச்சராக இருந்தார்.

1954-முதல் 1963-காமராசர் முதலமைச்சராக இருந்தார்.

56. யாருடைய முன்னோர் காலத்தில் கரும்பு சீனாவில் இருந்து கொண்டு வந்து பயிரிடப்பட்டது?

(அ) பாரி

(ஆ) பேகன்

(இ) அதியமான்

(ஈ) ஓரி

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) அதியமான்

57 “உள்ளது சிதைப்போ ருளரெனப் படாஅர்” – இவ்வடிகள் இம் பெற்ற நூல்

(அ) சிலப்பதிகாரம்

(ஆ) அகநானூறு

(இ) குறுந்தொகை

(ஈ) புறநானூறு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) குறுந்தொகை

குறுந்தொகை (283-ஆவது பாடல்).

உள்ளது சிதைப்போ ருளரெனப் படாஅர்

இல்லோர் வாழ்க்கை யிரவினு மிளிவெனச்

சொல்லிய வன்மை தெளியக் காட்டிச்

சென்றனர் வாழி தோழி யென்றும்

கூற்றத் தன்ன கொலைவேல் மறவர்

ஆற்றிருந் தல்கி வழங்குநர்ச் செகுத்த

படுமுடை பருந்துபார்த் திருக்கும்

நெடுமூ திடைய நீரி லாறே

– பாலைபாடிய பெருங்கடுங்கோ.

பொருள்: “தோழி! தம்முடைய முன்னோரால் தேடி வைக்கப் பெற்றுத் தம்பால் உளதாகிய செல்வத்தைச் செலவழிப்போர் செல்வர் என்று உலகத்தாரால் சொல்லப்படார். “தாமாக ஈட்டிய பொருள் இல்லாதார், முந்தையோர் பொருளின் பயனைத் துய்த்து வாழ்தல் இரத்தலைக் காட்டிலும் இழிவு உடையது”. என்று கூறிஆண்மைத் தன்மையை யாம் தெளியும்படி எடுத்துக் கூறி பொருள் ஈட்டச் சென்றுள்ளார் தலைவர். எப்பொழுதும் கூற்றுவனைப் போன்ற கொலைத் தொழிலைச் செய்யும் வேலினை உடைய மறவர் வழியின் இடத்தே தங்கி வழிப் போவாரைக் கொன்றதனால் உண்டான புலாலை பருந்துகள் எதிர்நோக்கித் தங்கியிருக்கின்ற, நீர் இல்லாத பாலை நிலத்து வழிகளிலே தலைவர் சென்றார்! அவர் வாழ்வாராக!

58. கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கையும் ஒருங்கே இவரின் படைப்பில் காணலாம்

(அ) பசுவய்யா

(ஆ) க.சச்சிதானந்தன்

(இ) சி.சு.செல்லப்பா

(ஈ) ந.பிச்சமூர்த்தி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) க.சச்சிதானந்தன்

க.சச்சிதானந்தன்.

ஊர்: யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பருத்தித்துறை.

பணி: ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

காலம்: 10.10.1921 முதல் 21.03.2008 வரை.

சிறப்பு: தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றிருந்தார்.

படைப்புகள்: ஆனந்தத்தேன் (கவிதைத் தொகுதி), அன்னபூரணி (புதினம்) யாழ்ப்பாணக் காவியம்.

இவரின் ஆசிரியர்: மகாவித்துவான் நவநீதக் கிருட்டிண பாரதியார்.

இவரது பாடல்களின் சிறப்பு: கம்பனின் மிடுக்கு, பாரதியாரின் சினம் ஆகியவற்றை இவர் பாடல்களில் காணலாம்

59. “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” இத்தொடரைப் பாடிய கவிஞர் யார்?

(அ) பாரதி

(ஆ) தாரா பாரதி

(இ) சுத்தானந்த பாரதி

(ஈ) பாரதிதாசன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) பாரதிதாசன்

வெல்லாத தில்லை திருவள்ளு வன்வாய்

விளைத்த வற்றுள்

பொல்லாத தில்லை புரைதீர்ந்த வாழ்வினிலே அழைத்துச்

சொல்லாத தில்லை பொதுமறை யான திருக்குறளில்

இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக்கிந் நிலத்தே

– பாரதிதாசன்

60. “அயலார் தமக்கும் அன்பே செய்யும் நாணம் கெடாமல் நட்பு கொண்டாடும்” – பெண்மையை இப்படிப் புகழ்ந்தவர்

(அ) நாமக்கல் கவிஞர்

(ஆ) கவிமணி

(இ) பாரதிதாசன்

(ஈ) வைரமுத்து

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) நாமக்கல் கவிஞர்

பெண்மை

அன்பும் ஆர்வமும் அடக்கமும் சேர்ந்தும்

உண்மைத் தன்மையும் உறுதியும் மிகுந்தும்

தன்னல மறுப்பும் சகிப்புத் தன்மையும்

இயல்பாய் அமைந்தும் இன்ப சொரூபமாய்த்

தாயாய் நின்று தரணியைத் தாங்கும்;

தாரமாய் வந்து தளர்வைப் போக்கும்;

உடன்பிறப் பாகி உறுதுணை புரியும்;

மகளாய்ப் பிறந்து சேவையில் மகிழும்;

அயலார் தமக்கும் அன்பே செய்யும்;

நாணம் கெடாமல் நட்பு கொண்டாடும்

– நாமக்கல் கவிஞர்.

பொருள்: அன்பு, ஆர்வம், அடக்கம் முதலியன பெண்மையின் பண்புகளாகும். உண்மைத் தன்மையும் மன உறுதியும் தன்னலமில்லாது குடும்ப நலம் பேணுதலும், யார் எது செய்யினும் பொறுத்துக் கொள்ளும் தன்மையும் அமைந்து, தாய் என்னும் அன்பு வடிவில் இவ்வுலகத்தைத் தாங்குபவள் பெண்ணே. கணவன் மனம் தளரும்போதெல்லாம் அவனது கவலைக்கு மருந்தாக இருப்பவள் மனைவி. தமக்கையோ தங்கையோ உடன் பிறந்தானுக்கு உறுதுணையாகத் திகழ்கிறாள். மகளாகப் பிறந்து தந்தைக்குப் பணிவிடை செய்து மகிழ்பவளும் பெண்ணே. அயலாரிடத்து அன்பு காட்டியும் தனக்கே உரிய நாணம் கெடாது, நட்புக் கொள்வதும் பெண்மையின் சிறந்த பண்புகளாகும்.

61. நடுவண் அரசு ———-ஆம் ஆண்டு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டது.

(அ) 1950

(ஆ) 1975

(இ) 1978

(ஈ) 1980

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) 1978

நடுவண் அரசு 1978-ல் பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல்தலையை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

62. நான்காம் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தவர்

(அ) பாண்டித்துரையார்

(ஆ) மருது பாண்டியர்

(இ) முத்துராமலிங்களார்

(ஈ) திருமலை நாயக்கர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) பாண்டித்துரையார்

பாஸ்கர சேதுபதி தலைமையில், பாண்டித்துரைத் தேவர் மேற்பார்வையில் பரிதிமாற் கலைஞர், உ.வோ.சா., இராகவனார் இணைந்து நான்காம் தமிழ்ச்சங்கத்தை உருவாக்கினர்

63. பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களுள் ஒன்று ————– இல்லாமை

(அ) வாக்குரிமை

(ஆ) பேச்சுரிமை

(இ) சொத்துரிமை

(ஈ) எழுத்துரிமை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) சொத்துரிமை

“பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட வேண்டும். பெண்ணடிமைக்கு முக்கியக் காரணம் சொத்து மறுப்பேயாகும். அதற்காக அவர்கள் கிளர்ச்சி செய்ய வேண்டும்” – ஈ.வெ.ரா. பெரியார்

64. “Instinct” என்னும் ஆங்கிலச் சொல்லின் சரியான தமிழ்ச்சொல்

(அ) இயற்கை ஒழுங்கு

(ஆ) இயற்கை வனப்பு

(இ) இயற்கை அறிவு

(ஈ) இயற்கை கொடை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) இயற்கை அறிவு

Instinct-இயற்கை அறிவு.

Order of Nature-இயற்கை ஒழுங்கு.

Aesthetic-இயற்கை வனப்பு

65. பொருத்துக:

தாவர உறுப்புப் பெயர்கள்

அ. மூங்கில் – 1. தாள்

ஆ. வேப்பம் – 2. கூந்தல்

இ. கமுகம் – 3. தழை

ஈ. நெல் – 4. இலை

அ அ இ ஈ

அ. 4 2 3 1

ஆ. 2 1 4 3

இ. 3 2 1 4

ஈ. 4 3 2 1

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ). 4 3 2 1

66. பொருத்துக:

அ. எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் – 1.கண்ணதாசன்

ஆ. பாட்டாளி மக்களது பசி தீர வேண்டும் – 2.கவிமணி

இ. எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் – 3. நாமக்கல் கவிஞர்

ஈ. சபைகளிலே தமிழெழுந்து முழங்க வேண்டும் – 4. பாரதிதாசன்

அ ஆ இ ஈ

அ. 4 2 3 1

ஆ. 4 3 1 2

இ. 2 1 4 3

ஈ. 3 1 2 4

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

ஆ. 4 3 1 2

“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே”

– பாரதிதாசன்.

“பாட்டாளி மக்களின் பசி தீர வேண்டும்

பணமென்ற மோகத்தின் விசை தீர வேண்டும்”

– நாமக்கல் கவிஞர்.

“எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் – இங்கு

இல்லாமை இல்லாத நிலை வேண்டும்”

– கவிஞர் கண்ணதாசன்.

“சாலைகளில் பல தொழில்கள் பெருக வேண்டும்

சபைகளிலே தமிழெழுந்து முழங்க வேண்டும்”

– கவிமணி

67. பண்டைத் தமிழர் எருதுவிடும் திருவிழாவை எவ்விதம் அழைத்தனர்

(அ) மஞ்சு விரட்டு

(ஆ) ஜல்லிக்கட்டு

(இ) ஏறு தழுவுதல்

(ஈ) எருதுகட்டு

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) ஏறு தழுவுதல்

68. “வினையே ஆடவர்க்குயிர்” எனக் கூறும் நூல்

(இ) புறநானூறு

(ஆ) குறுந்தொகை

(இ) அகநானூறு

(ஈ) நற்றிணை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) குறுந்தொகை

69. உமர்கய்யாம் 11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ———— கவிஞர்

(அ) வங்கத்துக்

(ஆ) சீனத்துக்

(இ) பாரசீகக்

(ஈ) ருஷியக்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பாரசீகக்

உமர்கய்யாம் 11-ஆம் நூற்றாண்டில் வாழந்த பாரசீகக் கவிஞர். இவர் எழுதிய பாடல்களை, தமிழில் “ரூபாயத்” என்ற தலைப்பில் கவிமணி மொழிபெயர்த்துள்ளார். உமர்கய்யாமின் இயற்பெயர் கியாதுதீன் அபுல்பாத் உமர்கய்யாம் என்பதாகும். இவர் கணிதம், வானவியல் ஆகியவற்றில் புலமைமிக்கவர். இவரின் கவிதைகள் மக்கள் அடையும் இன்ப துன்பங்களையும், இறைவனது படைப்பையும் பாடுபொருளாகக் கொண்டவை.

70. “அறிவுண்டாகுக” என வாழ்த்தியவர் யார்?

(அ) மணிமேகலா தெய்வம்

(ஆ) ஆபுத்திரன்

(இ) ஆதிரை

(ஈ) அறவண அடிகள்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) அறவண அடிகள்

மணிமேகலை

ஆபுத்திரன் நாடு அடைந்த காதை

தேவியும் ஆயமும் சித்திரா பதியும்

மாதவி மகளும் மாதவர்க் காண்டலும்

எழுந்தெதிர் சென்றாங்கு இணைவளைக் கையால்

தொழுந்தகை மாதவன் துணையடி வணங்க

அறிவுண் டாகவென் றாங்கவன் கூறலும்

– சீத்தலைச் சாத்தனார்.

பொருள்: அறவண அடிகளைக் கண்ட அளவில் அரசமாதேவியும் தோழியர் கூட்டமும் சித்திராபதியும் மணிமேகலையும் எழுந்து, அவர் எதிரே சென்றனர். வணங்கும் தகுதியுடைய அறவணரின் இருபாதங்களையும் தம் இரு கைகளாலும் தொட்டு வணங்கினர். அடிகள், “அறிவுண்டாகுக” என அவர்களை வாழ்த்தினார்.

71. உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழாகத் தான் இருத்தல் வேண்டும் என்ற மொழியியல் அறிஞர்

(அ) கால்டுவெல்

(ஆ) நோம் சாம்சுகி

(இ) கபில் சுவலபில்

(ஈ) மாக்சு முல்லர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) நோம் சாம்சுகி

72. “தமிழரசி குறவஞ்சியை” இயற்றியவர்

(அ) நாமக்கல் கவிஞர்

(ஆ) ஞானியரடிகள்

(இ) பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்

(ஈ) வரத நஞ்சையப்பிள்ளை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) வரத நஞ்சையப்பிள்ளை

“தமிழரசி குறவஞ்சி’ என்ற நூலை இயற்றியவர் அ.வரதநஞ்சையப்பிள்ளை ஆவார். இவரது காலம் 01.09.1877 முதல் 11.07.1956 வரையாகும். இவரது சிறப்புப் பெயர்கள் ஞானதீபக் கவிராயர், அண்ணாவியார் என்பனவாகும். வடமொழி, தெலுங்கு ஆகிய மொழிகளில் புலமைபெற்றிருந்தார். சுரந்தைத் தழிழ்ச் சங்கத்தில் “ஆசிரியர்” பட்டம் பெற்றவர். சுரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் நமச்சிவாய முதலியார் தலைமையில் “தங்கத்தோடா” பரிசளிக்கப் பெற்றார். தமிழவேள் உமாமகேசுவரனார் இவரிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இவர் தமிழரசி குறவஞ்சியை இயற்றினார். அந்நூலைக் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் வெள்ளி விழாவின் போது ஞானியாரடிகள் தலைமையில் அரங்கேற்றினார். தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன் சுவாமிமலையில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் ஆவார்.

73. “தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” இவ்வரிகள் இடம் பெற்றுள் பாடல்

(அ) அகநானூறு

(ஆ) புறநானூறு

(இ) பதிற்றுப்பத்து

(ஈ) சிலப்பதிகாரம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பதிற்றுப்பத்து

“தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் பதிற்றுப்பத்து ஆகும். இவ்வரிகள் பண்டைத் தமிழரின் பொறியியல் அறிவினை எடுத்துக் காட்டுகின்றன. பழந்தமிழகத்தில் கரும்பைப் பிழிவதற்கு எந்திரங்கள் இருந்தன என்பதை அவ்வரிகள் கூறுகின்றன.

74. “நீ மீண்டும் தோன்றிய பாரதியடா” என்று கல்யாண சுந்தரத்தை பாராட்டியவர்

(அ) மருதகாசி

(ஆ) சுரதா

(இ) உடுமலை நாராயண கவி

(ஈ) தோழர் ஜீவானந்தம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) தோழர் ஜீவானந்தம்

தேனாறு பாயுது செங்கதிரும் சாயுது. ஆனாலும் மக்கள் வயிறு காயுது” என்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடலைக் கேட்ட ஜீவானந்தம் அவர்கள் “நீ மீண்டும் தோன்றிய பாரதியடா” என்று கல்யாண சுந்தரத்தைப் பாராட்டினார்

75. “தேசியம் காத்த செம்மல்” என்று பாராட்டப் பெற்றவர் யார்?

(அ) திரு.வி.க

(ஆ) மறைமலையடிகள்

(இ) பெருஞ்சித்திரனார்

(ஈ) முத்துராமலிங்கர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) முத்துராமலிங்கர்

“தேசியம் காத்த செம்மல்” என்று பாராட்டப்பெறுபவர் முத்துராமலிங்த் தேவர் ஆவார். இவருக்கு இப்பட்டத்தை வழங்கியவர் திரு.வி.கல்யாண சுந்தரனார் ஆவார்.

76. “தன்னே ரிலாத தமிழ்” – இத்தொடர் இடம்பெற்ற நூல்

(அ) திருக்குறள்

(ஆ) தொல்காப்பியம்

(இ) தண்டியலங்காரம்

(ஈ) நன்னூல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) தண்டியலங்காரம்

“ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி”

ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிரோன் றேனையது

தன்னே ரிலாத் தமிழ்”

– தண்டியலங்காரம்.

77. “உலகின் முதல் இரு முறைமைகளைப் பற்றிய உரையாடல்” என்னும் நூல் வெளிவந்த ஆண்டு

(அ) 1638

(ஆ) 1642

(இ) 1632

(ஈ) 1616

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) 1632

78. நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற – இதில் பயின்று வரும் அணி

(அ) இரட்டுறமொழிதல் அணி

(ஆ) சொற்பொருட் பின்வரு நிலையணி

(இ) தற்குறிப்பேற்ற அணி

(ஈ) பிறிதுமொழிதல் அணி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) பிறிதுமொழிதல் அணி

பிறிதுமொழிதல் அணி

புலவன் தான் கருதிய பொருளை அப்படியே கூறாமல் மறைத்து, அதனை விளக்குவதற்கு அதனைப் போன்ற பிறிதொன்றினைக் கூறி விளக்குவதற்கு பிறிதுமொழிதல் அணி என்று பெயராகும்.

எ.கா: நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற

– திருக்குறள் 495.

அதிகாரம் – இடனறிதல்.

கூறப்பட்ட கருத்து: ஆழமான நீரினுள் முதலை மற்ற உயிர்களை வெல்லும். ஆனால் நீரிலிருந்து நீங்கி வெளியே வந்தால் அந்த முதலையை பிற உயிர்கள் கொன்று விடும்.

விளக்க வந்த கருத்து: நாம் நம் பலமறிந்து அதற்கேற்ற களமறிந்து எதிரிகளை எதிர்கொள்ள வேண்டும். களமறியாமல் நமது பலத்தை வெளிக்காட்ட முடியாத இடத்தைத் தேர்வு செய்தால் அது பகைவருக்கு சாதகமாகி விடும்.

79. “பகுததறிவுக் கவிராயர்” எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர்

(அ) பெரியார்

(ஆ) அண்ணா

(இ) பாரதியார்

(ஈ) உடுமலை நாராயண கவி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) உடுமலை நாராயண கவி

“பகுத்தறிவுக் கவிராயர்” எனத் தமிழக மக்களால் அழைக்கப்பட்டவர் உடுமலை நாராயண கவி ஆவார். பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் சமுதாயப் பாடல்களை எழுதி சீர்திருத்தக் கருத்துகளை பரப்பியதால் இவரை தமிழக மக்களால் பகுத்தறிவுக் கவிராயர் என அழைக்கப்பட்டார்.

80. “ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்

ஓதலில் சிறந்தன்(று) ஒழுக்கம் உடைமை” – இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்

(அ) அறவுரைக்கோவை

(ஆ) புறநானூறு

(இ) நன்னெறி

(ஈ) நற்றிணை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) அறவுரைக்கோவை

“அறவுரைக்கோவை” எனப்படுவது முதுமொழிக்காஞ்சி என்ற நூலாகும். இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். நீதி நூல்களில் மிகச் சிறிய நூல் இதுவாகும். பத்து பத்துப் பாக்களாக அமைந்துள்ள 10 அதிகாரங்கள் உடைய நூலாகும். ஒவ்வொரு பத்தின் முதலடியும் “ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்” எனத் தொடங்குகிறது. இந்நூலை இயற்றியவர் கூடலூர்க்கிழார் ஆவார்.

81. “ஐவர் கடமை” யை உணர்த்தும் நூல்

(அ) புறநானூறு

(ஆ) இனியவை நாற்பது

(இ) ஏலாதி

(ஈ) கார்நாற்பது

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) புறநானூறு

புறநானூறு

“ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;

ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்

களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே”

– பொன்முடியார்.

ஐவரின் கடமைகள்:

1.பெற்ற மகனைப் பேணிக்காத்தல் தாயின் கடமை.

2.மகனைப் படிக்க வைத்து சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடமை.

3. போர்புரி வேலை வடித்துக் கொடுத்தல் ஊர்க் கொல்லனின் கடமை.

4. நன்னடத்தை உள்ளவனாக விளங்கச் செய்தல் வேந்தனின் கடமை.

5. வாளைச் சுழற்றிப் போர்க்களத்தில், பகைவேந்தனின் யானையை வீழ்த்திவிட்டு வெற்றியுடன் வருதல் மகனாகிய காளையின் கடமை.

82. தாயுமானவரின் மனைவி பெயர்

(அ) மட்டுவார்குழலி

(ஆ) கெஜவல்லி

(இ) கமலாம்பிகை

(ஈ) செல்லம்மாள்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) மட்டுவார்குழலி

தாயுமானவரின் மனைவி பெயர் மட்டுவார்குழலி; தந்தை பெயர் கேடிலியப்பர்; தாயார் பெயர் கெஜவல்லி அம்மையார். இவரது காலம் கி.பி.18-ஆம் நூற்றாண்டு ஆகும்.

83. “பிரபந்தம்” என்பதன் பொருள்

(அ) நன்கு கட்டப்பட்டது

(ஆ) நன்கு எழுதப்பட்டது

(இ) நன்கு பின்னப்பட்டது

(ஈ) நன்கு செதுக்கப்பட்டது

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) நன்கு கட்டப்பட்டது

“சிற்றிலக்கியம்” என்ற சொல்லாட்சி வருவதற்கு முன் “பிரபந்தம்” என்ற சொல்லே வழக்கிலிருந்தது. “பிரபந்தம்” என்ற வடசொல்லுக்கு “நன்கு கட்டப்பட்டது” என்பது பொருளாகும்.

84. 17-சரியான தமிழ் எண்ணை எழுதுக:

(அ) க0

(ஆ) கரு

(இ) கக

(ஈ) கஎ

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) கஎ

க-1 0-பூஜ்ஜயம் — க0 – 10.

க-1 ரு-5 — கரு-15.

க-1 க-1—கக-11.

க-1 எ-7 — கஎ-17

85. நாலடியார் – நூலின் ஆசிரியர்

(அ) வள்ளுவர்

(ஆ) சுந்தரர்

(இ) விளம்பிநாகனார்

(ஈ) சமண முனிவர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) சமண முனிவர்

பதிணெண்கிழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான “நாலடியார்” என்ற நூலை இயற்றியவர்கள் சமண முனிவர்கள் ஆவர்.

விளம்பிநாகனார் இயற்றிய நூல் “நான்மணிக்கடிகை” ஆகும்.

சுந்தரர் இயற்றிய நூல் “திருத்தொண்டத்தொகை” ஆகும்.

வள்ளுவர் இயற்றிய நூல் “திருக்குறள்” ஆகும்.

86. “சாலைகளில் பல தொழில்கள் பெருக வேண்டும்

சபைகளிலே தமிழெழுத்து முழங்க வேண்டும்”

– என்ற பாடல் வரிகளை இயற்றிய கவிஞர்

(அ) கவிமணி

(ஆ) நாமக்கல் கவிஞர்

(இ) பாரதியார்

(ஈ) பாரதிதாசன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) கவிமணி

87. பழங்காலப் பண்பாட்டின் எச்சம் எனக் கருதப்படுபவை

(அ) திரைஇசைப் பாடல்கள்

(ஆ) புதுக்கவிதைகள்

(இ) மரபுசார்ந்த பாடல்கள்

(ஈ) நாட்டுப்புறப் பாடல்கள்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) நாட்டுப்புறப் பாடல்கள்

88. “கலிப்பா” ———– ஓசையைக் கொண்டது

(அ) செப்பல்

(ஆ) அகவல்

(இ) தூங்கல்

(ஈ) துள்ளல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) துள்ளல்

பாவகை ஓசை

வெண்பா செப்பலோசை

ஆசிரியப்பா அகவலோசை

கலிப்பா துள்ளலோசை

வஞ்சிப்பா தூங்கலோசை

89. பொருத்துக:

பட்டியல் I – பட்டியல் II

அ. ஈரீவளை – 1.பண்புத்தொகை

ஆ. மாமலை – 2. ஏழாம் வேற்றுமைத்தொகை

இ. தண்குடை – 3. உரிச்சொல் தொடர்

ஈ. கையேந்தி – 4. வினைத்தொகை

அ ஆ இ ஈ

அ. 1 3 4 2

ஆ. 3 1 2 4

இ. 2 4 3 1

ஈ. 4 3 1 2

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. 4 3 1 2

90. இன்புற்றார் எய்தும் சிறப்பு – என்ற வரி இடம் பெற்ற நூல்

(அ) சிறுபஞ்சமூலம்

(ஆ) திருக்குறள்

(இ) ஏலாதி

(ஈ) நாலடியார்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) திருக்குறள்

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து

இன்புற்றார் எய்துஞ் சிறப்பு.

நூல்: திருக்குறள்.

அதிகார எண்:8.

அதிகாரம்:அன்புடைமை.

பிரிவு: அறத்துப்பால்.

இயல்: இல்லறவியல்.

பொருள்: உலகில் இன்புற்று வாழ்கின்றவர் எய்தும் சிறப்பு, அன்புடையவராய் பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயனே என்று கூறுவர்.

91. குழவி என்பதன் பொருள்

(அ) ஒருவகைத் தேனீ

(ஆ) ஒருவகைத் குருவி

(இ) குழந்தை

(ஈ) ஒருவகைத் தாவரம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) குழந்தை

92. “பிரணவ கேசரி” என அன்போடு அழைக்கப்பட்ட தேசியத் தலைவர்

(அ) முத்துராமலிங்கர்

(ஆ) இராஜாஜி

(இ) காமராசர்

(ஈ) விவேகானந்தர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) முத்துராமலிங்கர்

வேதாந்த பாஸ்கர், பிரணவ கேசரி, சன்மார்க்க சண்டமாருதம், இந்து புத்த சமய மேதை என்றெல்லாம் பாராட்டப்பெற்றவர் முத்துராமலிங்கத் தேவர் ஆவார்.

93. உயிர் வளிப்படலத்தை சிதைப்பதில் பெரும்பங்கு வகிப்பது

(அ) கார்பன் மோனாக்சைடு

(ஆ) கார்பன்-டை-சல்பைடு

(இ) குளோரோ ஃபுளுரோ கார்பன்

(ஈ) குளோரோ டெட்ரா கார்பன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) குளோரோ ஃபுளுரோ கார்பன்

94. வசன நடை கைவந்த வல்லாளர் என ஆறுமுக நாவலரைப் பாராட்டியவர்

(அ) ஜி.யூ.போப்

(ஆ) பரிதிமாற் கலைஞர்

(இ) வீரமாமுனிவர்

(ஈ) ரா.பி.சேதுப்பிள்ளை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) பரிதிமாற் கலைஞர்

தமிழ் உரைநடை வளர்ச்சிப் பெருந்தொண்டாற்றிய ஆறுமுக நாவலரை, பரிதிமாற்கலைஞர் “வசனநடை கைவந்த வல்லாளர்” எனப் பாராட்டியுள்ளார்.

95. பொருத்துக:

அ. டால்ஸ்டாய் – 1. விசுவ பாரதியில் பணி புரிந்த பேராசிரியர்

ஆ. பெட்ரண்ட் ரஸ்ஸல் – 2. கிரேக்க சிந்தனையாளர்

இ. கிருபளானி – 3. இரஷ்ய நாட்டு எழுத்தாளர்

ஈ. பிளேட்டோ – 4. சிந்தனையாளர் கல்வியாளர்

அ ஆ இ ஈ

அ. 2 3 4 1

ஆ. 3 4 1 2

இ. 4 2 3 1

ஈ. 1 2 3 4

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 3 4 1 2

96. நடுத்திராவிட மொழிகளில் ஒன்று

(அ) நண்பர்

(ஆ) உறவினர்

(இ) தாய்மார்

(ஈ) பெற்றோர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) உறவினர்

டாக்டர்.எஸ்.தருமாம்பாள் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மகளிர் கூட்டத்தில் ஈ.வெ.ரா.அவர்களுக்கு “பெரியார்” என்ற பட்டம் வழங்கப்பட்டது.

97. இராமசாமிக்குப் “பெரியார்” என்று பட்டம் வழங்கியவர்.

(அ) நண்பர்

(ஆ) உறவினர்

(இ) தாய்மார்

(ஈ) பெற்றோர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) தாய்மார்

டாக்டர் எஸ்.தருமாம்பாள் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மகளிர் கூட்டத்தில் ஈ.வெ.ரா. அவர்களுக்கு “பெரியார்” எ ன்ற பட்டம் வழங்கப்பட்டது

98. பெரியார், பெண்களுக்கு மிக முக்கியம் என்றவை

1.அறிவு. 2.நகை. 3.அழகு. 4.சுயமரியாதை.

(அ) 1, 2 சரி

(ஆ) 1,3 சரி

(இ) 2, 3 சரி

(ஈ) 1, 4 சரி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) 1, 4 சரி

“பெண்களுக்கு நகையோ, அழகான உடையோ முக்கியமில்லை; அறிவும் சுயமரியாதையும் மிக முக்கியம்” என்று ஈ.வெ.ரா பெரியார் கூறினார்.

99. கோடிட்ட இடங்களை நிரப்புக:

பெரியார் தம் வாழ்நாளில் —— கிலோமீட்டர் தொலைவு பயணம் செய்து சமுதாயத் தொண்டாற்றினார்.

(அ) 8600

(ஆ) 21,400

(இ) 10,700

(ஈ) 13,12,000

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) 13,12,000

பெரியாரின் நடைப்பயணம் பற்றிய குறிப்புகள்:

நாட்கள்-8600,

தொலைவு-13,12,000 கி.மீட்டர்.

பங்கேற்ற கூட்டங்களின் எண்ணிக்கை-10,700.

உரையாற்றிய நேரம்-21,400 மணிநேரம்.

100. தவறான தொடரைக் கண்டறிக:

(அ) தமிழகப் பொருள்கள் சீனாவில் விற்கப்பட்டன.

(ஆ) சீனத்துப் பட்டும் சர்க்கரையும் தமிழகத்துக்கு இறக்குமதி ஆயின.

(இ) பழந்தமிழகத்தின் வாணிகப் பொருள்கள் பற்றிய குறிப்புகள் உள்ள நூல் புறநானூறு

(ஈ) கரும்பு சீனாவிலிருந்து கொண்டு வந்து பயிரிடப்பட்டது

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பழந்தமிழகத்தின் வாணிகப் பொருள்கள் பற்றிய குறிப்புகள் உள்ள நூல் புறநானூறு

பழந்தமிழகத்தின் வணிகப் பொருள்கள் குறித்து கூறும் நூல்கள் பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி மற்றும் சிறுபாணாற்றுப்படை ஆகியனவாகும்.

Exit mobile version