Tnpsc General Tamil Previous Question Paper 10

Tnpsc General Tamil Previous Question Paper 10: Tnpsc Aspirants can use this opportunity to check Tnpsc General Tamil Previous Question Papers For Tnpsc Exam Preparation. General Tamil Previous Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Previous Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்:

தலை, தழை, தளை.

(அ) சிரசு, புல், கட்டுதல்

(ஆ) சிரசு, இலை, பறவை

(இ) தலைவன், கிளை, மீன்

(ஈ) அரசன், செடி, மரம்

விடை மற்றும் விளக்கம்

(அ) சிரசு, புல், கட்டுதல்

2. “அவன் ஊருக்குப் போகாமல் இரான்”

– எவ்வகைத் தொடர்?

(அ) எதிர்மறைத் தொடர்

(ஆ) உடன்பாட்டுத் தொடர்

(இ) பிறவினைத் தொடர்

(ஈ) பொருள்மாறா எதிர்மறைத் தொடர்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) பொருள்மாறா எதிர்மறைத் தொடர்

3. பள்ளிக்கூட மணி அடித்தவுடன் மாணவர்கள்

“மடைதிறந்த வெள்ளம் போலச் சென்றனர்”

இத்தொடரில் உவமை உணர்த்தும் பொருள்.

(அ) வரிசை வரிசையாகச் சென்றனர்

(ஆ) மிகவும் மெதுவாகச் சென்றனர்

(இ) மிகவும் அமைதியாகச் சென்றனர்

(ஈ) மிகவும் விரைவாகச் சென்றனர்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) மிகவும் விரைவாகச் சென்றனர்

4. இலக்கணக்குறிப்பு தருக:

“கொன்ற”

(அ) வினையெச்சம்

(ஆ) பெயரெச்சம்

(இ) எதிர்கால வினையெச்சம்

(ஈ) வினைமுற்று

விடை மற்றும் விளக்கம்

(ஆ) பெயரெச்சம்

விளக்கம்: கொல்-வேர்ச்சொல்.

கொன்ற-பெயரெச்சம்.

கொன்று-வினையெச்சம்.

கொன்றான்-வினைமுற்று.

கொன்றவன்-வினையாலணையும் பெயர்.

கொல்லுதல்-தொழிற்பெயர்.

5. ஓரெழுத்து ஒரு மொழி எத்தனை உள்ளன?

(அ) நாற்பத்திரண்டு

(ஆ) ஐம்பத்திரண்டு

(இ) முப்பத்திரண்டு

(ஈ) எழுபத்திரண்டு

விடை மற்றும் விளக்கம்

(அ) நாற்பத்திரண்டு

விளக்கம்:

ஓரெழுத்து ஒரு மொழி நெடில் எழுத்துகள்

உயிர் இனம் (6) ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ

“ம” இனம் (6) மா, மீ, மூ, மே, மை, மோ

“த” இனம் (5) தா, தீ, தூ, தே, தை

“ப” இனம் (5) பா, பூ, பே, பை, போ

“ந” இனம் (5) நா, நீ, நே, நை, நோ

“க” இனம் (4) கா, கூ, கை, கோ

“வ” இனம் (4) வா, வீ, வை, வெள

“ச” இனம் (4) சா, சீ, சே, சோ

“ய” இனம் (1) யா

குறில் எழுத்துகள் நொ, து-2

6. தமிழுக்குக் “கதி” எனும் நூல்கள் எவை?

(அ) களவழி நாற்பது, திருக்கை வழக்கம்

(ஆ) கலிங்கத்துப்பரணி, திராவிடத்துப்பரணி

(இ) கம்பராமாயணம், திருக்குறள்

(ஈ) கலித்தொகை, திருக்குறள்

விடை மற்றும் விளக்கம்

(இ) கம்பராமாயணம், திருக்குறள்

விளக்கம்:

தமிழுக்குக் “கதி” எனும் நூல்கள்: க- கம்பராமாயணம்

தி-திருக்குறள் இதனைக் கூறியவர் செல்வகேசவராய முதலியார்

7. நவில்தொறும் – பொருள் தேர்க.

(அ) கற்கக் கற்க

(ஆ) பழகப் பழக

(இ) பாடப் பாட

(ஈ) சொல்லச் சொல்ல

விடை மற்றும் விளக்கம்

(அ) கற்கக் கற்க

விளக்கம்:

”நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு”

– திருக்குறள் (783)

பொருள்:

நற்பண்பு உடையவரின் நட்பு பழகப்பழக இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மென்மேலும் இன்பம் தருதலைப் போன்றது. நவில்தொறும்-கற்கக் கற்க.

8. “தமிழ் மாதின் இனிய உயிர்நிலை”

என்று உலகோரால் பாராட்டப்பெறும் நூல் எது?

(அ) அகநானூறு

(அ) புறநானூறு

(இ) திருக்குறள்

(ஈ) பகவத்கீதை

விடை மற்றும் விளக்கம்

(இ) திருக்குறள்

9. “கற்றதுகைம் மண்ணளவு”

என்று கூறியவர்

(அ) கபிலர்

(ஆ) கம்பர்

(இ) பரணர்

(ஈ) ஒளவையார்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) ஒளவையார்

விளக்கம்:

“கற்றது கைம் மண்ணளவு கல்லா(து) உலகளவென்(று)

உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த

வெறும்பந் தயம்கூற வேண்டா; புலவீர்

எறும்புந்தன் கையாலஎண் சாண்

– ஒளவையார்.

பொருள்:

புலவர்களே! இதுவரை நாம் படித்தது கைம்மண்ணளவே. இன்னும் படிக்க வேண்டியவை உலகளவு என நினைத்து கலைமகளே இன்றளவும் படித்துக்கொண்டே இருக்கிறாள். ஆதலால், மிகுதியாகப் படித்துவிட்டோம் என்னும் செருக்குடன் வீண் வல்லமை பேசுதல் வேண்டா. சிறு எறும்பும் அதன் கையினால் எண் சாண் உடையதே.

10. ஆடு முதலான பன்னிரண்டு இராசிகளையும் விண்மீன்களையும் வரைந்த செய்தி கூறும் நூல்.

(அ) குறிஞ்சிப்பாட்டு

(ஆ) சிறுபாணாற்றுப்படை

(இ) நெடுநல்வாடை

(ஈ) மலைபடுகடாம்

விடை மற்றும் விளக்கம்

(இ) நெடுநல்வாடை

விளக்கம்:

பண்டைத் தமிழகத்தில் ஓவியர்கள் சோதிடக்கலை, வானநூல், கதைகள் முதலியவற்றைக் கற்றுணர்ந்து செவ்வனே சித்திரம் தீட்டினர். ஆடு முதலான பன்னிரெண்டு இராசிகளையும், விண்மீன்களையும் வரைந்த செய்தி நெடுநல்வாடை என்னும் சங்க நூல்தரும் அரிய செய்தியாகும்.

General Tamil Study Materials

General Tamil Previous Questions Pdf

11. திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால், இரண்டனையும் வீரமாமுனிவர் இந்த மொழியில் மொழிபெயர்த்தார்

(அ) இலத்தீன்

(ஆ) பிரெஞ்சு

(இ) ஜெர்மன்

(ஈ) ஸ்பானிஷ்

விடை மற்றும் விளக்கம்

(அ) இலத்தீன்

12. “முந்தையிலிருந்து நட்டோர் கொடுப்பின்

நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்”

– என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

(அ) நற்றிணை

(ஆ) ஐங்குறுநூனூறு

(இ) குறுந்தொகை

(ஈ) கலித்தொகை

விடை மற்றும் விளக்கம்

(அ) நற்றிணை

விளக்கம்:

“புதல்வன் ஈன்ற பூங் கண் மடந்தை

முலை வாய் உறுக்கும் கைபோல், காந்தட் குலைவாய் தோயும்

கொழு மடல் வாழை

அம் மடல் பட்ட அருவித் தீம் நீர்

செம் முக மந்தி ஆடும் நாட!

முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின், நஞ்சும் உண்பர் நனி

நாகரிகர்;”

நற்றிணை-355-ஆவது பாடல்.

திணை-குறிஞ்சி.

ஆசிரியர்-பெயர் அறியப்படவில்லை.

பொருள்: புதல்வனைப் பெற்றெடுத்த நீலமலர் போன்ற கண்ணையுடைய மடந்தை தன் கொங்கையைத் தன் கையால் பிடித்துப் புதல்வன் வாயில் வைத்துப் பால் ஊட்டுவாள். அப்போது அக்குழந்தை பாலைப் பருகுவது போலக் காந்தள் பூங்கொத்தொடு பொருந்திய கொழுவிய வாழை மடலின் இனிய நீரைச் சிவந்த முகமுள்ள பெண் குரங்கு பருகி நிற்கும். அத்தகு மலை நாடனே! நட்புடைய நல்ல கண்ணோட்முடையார் முன் நஞ்சைக் கலந்து கொடுத்து உண்ணச் சொன்னாலும் அவர்கள் அதனை உண்டு நல்ல கண்ணோட்டமுடையார் என்பதை மெய்ப்பிப்பர்.

13. இளங்கோவடிகளின் பெற்றோர் எக்குலத்தைச் சார்ந்தவர்கள்?

(அ) தாய் சேரர் குலம்-தந்தை பாண்டியர் குலம்

(ஆ) தாய் சோழர் குலம்-தந்தை சேரர் குலம்

(இ) தாய் பாண்டியர் குலம்-தந்தை சோழர் குலம்

(ஈ) தாய் பல்லவர் குலம்-தந்தை சாளுக்கியர் குலம்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) தாய் சோழர் குலம்-தந்தை சேரர் குலம்

விளக்கம்:

இளங்கோவடிகள். இயற்பெயர்-குடக்கோச் சேரல்.

தந்தை-இமயவரம்பன் நெடுஞ்சேரலாதான் (சேரமன்னன்).

தாய்-நற்சோணை (சோழநாட்டு இளவரசி).

தமையன்-சேரன் செங்குட்டுவன்

14. திருமந்திரம் நூலின் பாடல் எண்ணிக்கை

(அ) இரண்டாயிரம்

(ஆ) ஆறாயிரம்

(இ) ஏழாயிரம்

(ஈ) மூவாயிரம்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) மூவாயிரம்

விளக்கம்:

சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறை “திருமந்திரம்” ஆகும். இதன் வேறு பெயர் “தமிழ் மூவாயிரம்” ஆகும். ஏனெனில் இந்நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை மூவாயிரம் ஆகும்.

ஆசிரியர்-திருமூலர்.

இந்நூலின் புகழ்பெற்ற தொடர் – “ஒன்றே குலம் ஒருவனே தேவன்”

15. “ஐந்குறுநூறு” – செய்யுளின் அடிவரையறை:

(அ) 4-8 அடிகள்

(ஆ) 9-12 அடிகள்

(இ) 3-6 அடிகள்

(ஈ) 13-31 அடிகள்

விடை மற்றும் விளக்கம்

(இ) 3-6 அடிகள்

விளக்கம்:

ஐந்குறுநூறு. ஐந்து+குறுமை+நூறு-ஐங்குநுறூறு.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகைத் திணை குறித்த குறுகிய நூறு நூறு பாட்டுகளாகத் தொகுக்கப்பட்ட நூல் இது. ஆதலின் இந்நூல் ஐந்குறுநூறு எனப் பெயர் பெற்றது. இந்நூலின் மூன்றடிச் சிறுமையும் ஆறடிப் பேரெல்லையும் உடைய ஐந்நூறு ஆசிரியப்பாக்கள் உள்ளன. அதனால், அளவாலும் பொருளாலும் இந்நூல் இப்பெயர் பெற்றது.

16. தவறான ஒன்றைத் தேர்க:

(அ) சிறுமல்லி

(ஆ) சிறுவழுதுணை

(இ) பெருமல்லி

(ஈ) ஏலம்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) ஏலம்

விளக்கம்:

ஏலாதியில் கூறப்பட்டுள்ள மருந்துகள்:

ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு.

சிறுபஞ்சமூலத்தில் கூறப்பட்டுள்ள மருந்துகள்:

கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சில்,

ஏலம் என்பது சிறுபஞ்மூலத்தில் அமையவில்லை.

17. பொருத்துக:

அ. சிலப்பதிகாரம் – 1. திருத்தக்கதேவர்

ஆ. மணிமேகலை – 2. ஆசிரியர் பெயர் தெரியவில்லை

இ. சீவகசிந்தாமணி – 3. இளங்கோவடிகள்

ஈ. வளையாபதி – 4. சீத்தலை சாத்தனார்

அ ஆ இ ஈ

அ. 4 3 2 1

ஆ. 3 4 1 2

இ. 2 1 3 4

ஈ. 1 2 4 3

விடை மற்றும் விளக்கம்

ஆ. 3 4 1 2

18. “திவ்யகவி” – பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் இயற்பெயர்

(அ) மாதவன்

(ஆ) மணவாள மாமுனிகள்

(இ) அழகிய மணவாளதாசர்

(ஈ) மதுசூதனன்

விடை மற்றும் விளக்கம்

(இ) அழகிய மணவாளதாசர்

விளக்கம்:

பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் இயற்பெயர் அழகிய மணவாளதாசர். சோழ நாட்டிலுள்ள திருமங்கை என்பது இவருடைய ஊராகும். காலம் கி.பி.17-ஆம் நூற்றாண்டாகும். வடமொழியிலும் தென்மொழியிலும் வல்லவரான இவர் கிபி.1623 முதல் கி.பி1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரிடம் அரசு அலுவலராகப் பணிபுரிந்தார். பின்னர் திருவரங்கத்தில் தங்கியிருந்து இறைத்தொண்டில் ஈடுபட்டார். இவர் இயற்றிய எட்டு நூல்களின் தொகுதி “அஷ்டபிரபந்தம்” எனப்படுகிறது.

19. “பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய

மாமலை பயந்த காமரு மணியும்”

என்ற புறநானூற்றுப் பாடலைப் பாடியவர் யார்?

(அ) கணியன் பூங்குன்றனார்

(ஆ) ஒளவையார்

(இ) பிசிராந்தையார்

(ஈ) கண்ணகனார்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) கண்ணகனார்

விளக்கம்:

“பொன்னும், துகிரும் முத்தும், மன்னிய

மாமலை பயந்த காமரு மணியும்,

இடைபடச் சேய ஆயினும், தொடை புணர்ந்து,

அருவிலை நன்கலம் அமைக்கும் காலை

ஒருவழித் தோன்றியாங்கு – என்றும்

சான்றோர் சான்றோர் பாலர் ஆப;

சாலார் சாலார் பாலர் ஆகுபவே”

– புறநானூறு-218-ஆம் பாடல்

ஆசிரியர்-கண்ணகனார்.

பிசிராந்தையார் வடக்கிருந்தபோது இயற்றப்பட்ட பாடல்.

பொருள்: பொன்னும் பவளமும் முத்தும் நிலைபெற்ற மலை தந்த விருப்பத்திற்குரிய மணியும் ஒன்றற்கொன்று இடையே இடத்தால் தொலைவில் இருந்தாலும், இவற்றை ஒன்றுபடுத்தி, அரிய மதிப்புடைய நல்ல அணிகலன்களைச் செய்யுங்காலத்து ஓரிடத்து வந்து சேர்ந்தாற்போல, எந்நாளும் பெரியோர் பெரியோர் பக்கத்திலே இருப்பர். பெருமையில்லாதவர், பெருமைபியல்லாதவர் பக்கத்திலேயே இருப்பர்.

20. எட்டுத்தொகை நூல்களுள் அதிகமான அடிவரையறை கொண்ட நூல் எது?

(அ) நற்றிணை

(ஆ) அகநானூறு

(இ) புறநானூறு

(ஈ) குறுந்தொகை

விடை மற்றும் விளக்கம்

(ஆ) அகநானூறு

விளக்கம்:

எட்டுத்தொகை நூல்களுள் அதிகமான அடிவரையறை கொண்ட நூல் அகநானூறு ஆகும். 13 அடிகள் முதல் 31 அடிகள் வரை அமைந்துள்ளதால், இந்நூல் “நெடுந்தொகை” எனவும் வழங்கப்பெறும்.

21. கோலியாத்தை அழக்க் தாவீதன் பயன்படுத்தாதது

(அ) கவண்

(ஆ) வாள்

(இ) எறிஈட்டி

(ஈ) கல்

விடை மற்றும் விளக்கம்

(இ) எறிஈட்டி

விளக்கம்:

தேம்பாவணி-“வளன் செனித்த படலம்”

இப்பகுதியில் கோலியாத்தை தாவீது அழித்த நிகழ்வு கூறப்பட்டுள்ளது. தாவீது, ஒரு கவணும் ஐந்து கற்களும் கொண்டு போர் முனைக்குச் சென்றான். தாவீதன் கல்லையெடுத்ததும் கவணிடைப் பூட்டியதும் யாரும் காண்கிலர், கோலியாத்து கருமேகம் போல் வீழ்ந்ததனையே கண்டனர். பின்னர் தாவீது வாளையெடுத்து கோலியாத்தின் தலையைக் கொய்தான்.

22. ஐம்புலன் அடக்கத்திற்கு உவமையாகக் கூறப்படுவது எது?

(அ) யானை

(ஆ) ஆமை

(இ) நரி

(ஈ) பரி

விடை மற்றும் விளக்கம்

(ஆ) ஆமை

விளக்கம்:

“ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து”

– திருக்குறள் (126)

பொருள்: ஒரு பிறப்பில் ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனால், அஃது அவனுக்கு பல பிறப்புகளிலும் காப்பாக அமையும்.

23. “திருக்கை வழக்கம்” என்னும் நூலின் ஆசிரியர் யார்?

(அ) நக்கீரர்

(ஆ) ஒட்டக்கூத்தர்

(இ) இளங்கோவடிகள்

(ஈ) கம்பர்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) கம்பர்

விளக்கம்:

கம்பர் எழுதிய நூல்கள்:

கம்பராமாயணம், சடகோபரந்தாதி, ஏரெழுபது, சிலையெழுபது, திருக்கை வழக்கம், சரசுவதி அந்தாதி.

24. “நான்மணிக்கடிகை” என்னும் சொல்லில் கடிகை என்பதன் பொருள்

(அ) தோள் வளை

(ஆ) கை வளை

(இ) கால் வளை

(ஈ) கழுத்தணி

விடை மற்றும் விளக்கம்

(அ) தோள் வளை

விளக்கம்:

நான்மணிக்கடிகை-நான்கு+மணி+கடிகை.

கடிகை-தோள்வளை.

நான்கு மணிகள் பதிக்கப்பெற்ற தோள்வளை போல் நான்கு நீதி மணிகளால் நிலைநாட்டப்பட்ட பாடல்களைக் கொண்ட நூல். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூலின் ஆசிரியர் விளம்பி நாகனார்.

25. திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் பாடியவர்.

(அ) மாணிக்கவாசகர்

(ஆ) சுந்தரர்

(இ) சம்பந்தர்

(ஈ) அப்பர்

விடை மற்றும் விளக்கம்

(அ) மாணிக்கவாசகர்

விளக்கம்:

பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையில் திருவாசகமும், திருக்கோவையாரும் அமைந்துள்ளன. இந்நநூல்களை இயற்றியவர் மாணிக்கவாசகர். இவரின் சிறப்புப் பெயர் திருவாதவூரார். இவர் இயற்றிய மற்றொரு நூல் “திருவெம்பாவை” ஆகும். அரிமர்த்தன பாண்டிய மன்னனிடம் தலைமை அமைச்சராகப் பணியாற்றியவர் மாணிக்கவாசகர்.

26. ஐம்பெருங்காப்பியம் -இவற்றுள் பொருந்தா நூலைக் கண்டறிக:

(அ) சிலப்பதிகாரம்

(ஆ) கம்பராமாயணம்

(இ) மணிமேகலை

(ஈ) சீவகசிந்தாமணி

விடை மற்றும் விளக்கம்

(ஆ) கம்பராமாயணம்

விளக்கம்:

ஐம்பெருங்காப்பியங்கள்: சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, கம்பராமாயணம்-காப்பிய வகையாகும்.

27. முக்கூடற்பள்ளு எவ்விலக்கிய வகையைச் சார்ந்தது?

(அ) வனப்பு

(ஆ) சமயம்

(இ) நீதி

(ஈ) புலன்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) புலன்

விளக்கம்:

வனப்பியல்: அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு புலன், இழைபு.

புலன்: வழக்குச் சொற்களால், தளிவாகப் புரியும் வண்ணம், ஆராய்ந்து தெரிய வேண்டாத நிலையில் அமையும் செய்யுள் “புலன்” என்று கூறுவர். முக்கூடற்பள்ளு “புலன்” வகை இலக்கியம்.

28. தம் வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர்.

(அ) அப்பூதியடிகள்

(ஆ) மாறநாயனார்

(இ) திருநீலகண்டர்

(ஈ) சுந்தரர்

விடை மற்றும் விளக்கம்

(அ) அப்பூதியடிகள்

விளக்கம்:

63 நாயன்மார்களில் ஒருவர் அப்பூதியடிகள், திங்களுரில் தோன்றிய அப்பூதியடிகள், திருநாவுக்கரசரைப் பார்க்காமலேயே அவர் மீது பேரன்பு கொண்டிருந்தார். அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக தன் குழந்தை, இல்லம், தண்ணீர்ப்பந்தல், அன்னச்சத்திரம், கடைகள் என அனைத்திற்குமே “திருநாவுக்கரசு” என்னும் பெயரையே சூட்டி மகிழ்ந்தார்.

பெரியபுராணம்.

“களவு, பொய் காமம், கோபம் முதலிய குற்றம் காய்ந்தார்

வளமிகு மனையின் வாழ்க்கை நிலையினார் மனைப்பால் உள்ள

அளவைகள், நிறைகோல், மக்கள், ஆவொடு மேதி மற்றும்

உள எலாம் அரசின் நாமம் சாற்றும் அவ்வொழக லாற்றார்”

– சேக்கிழார்.

பொருள்: அப்பூதியடிகள் களவு, பொய், காமம், சினம் முதலிய குற்றங்கள் நீங்கியவர்; வளமிக்க இல்லற வாழ்க்கை வாழுபவர்; தம் வீட்டிலுள்ள அளவுக் கருவிகள், நிறுக்கும் கோல், குழந்தைகள், பசுக்கள், எருமைகள், மற்றைய பொருள்கள் எல்லாவற்றிற்கும் திருநாவுக்கரசு என்னும் திருப்பெயரையே வைத்து வழங்கி வருபவர்.

29. எட்டுத் தொகை யில் இடம் பெறாத நூல் எது?

(அ) நற்றிணை

(ஆ) மதுரைக்காஞ்சி

(இ) ஐங்குநுறூறு

(ஈ) பதிற்றுப்பத்து

விடை மற்றும் விளக்கம்

(ஆ) மதுரைக்காஞ்சி

விளக்கம்:

மதுரைக்காஞ்சி-பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும்.

30. “மறைவழி” – என்னும் ஆங்கிலக் கதையைத் தழுவிய நூல்

(அ) மனோன்மணீயம்

(ஆ) இரட்சணிய மனோகரம்

(இ) மானசல்லோசம்

(ஈ) தேம்பாவணி

விடை மற்றும் விளக்கம்

(அ) மனோன்மணீயம்

விளக்கம்:

மனோன்மணீயம்: இந்நூல் இராவ்பகதூர் பெ.சுந்தரம் பிள்ளை அவர்களால் இயற்றப்பெற்ற நூலாகும். பாண்டிய நாட்டு மன்னாகிய சீவகவழுதியின் மகள் மனோன்மணியின் வரலாற்றைக் கூறும் நாடக நூலாகும். இந்நாடக நூல் அங்கிலத்தில் லிட்டன் பிரபு என்பார் இயற்றிய இரகசிய வழி (மறைவழி) என்னும் நூலைத் தழுவி எழுதப் பெற்றதாகும்.

31. “கிறத்துவ சமயத்தின் கலைக் களஞ்சியம்” எனப்படும் நூல் எது?

(அ) விவிலியம்

(ஆ) இரட்சணிய யாத்திரிகம்

(இ) தேம்பாவணி

(ஈ) திருக்காவலூர்க் கலம்பகம்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) இரட்சணிய யாத்திரிகம்

விளக்கம்:

தேம்பாவணி: வீரமாமுனிவர் இயற்றிய பெருங்காப்பியமாகும்.

இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தையாராகிய சூசை மாமுனிவரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு தேம்பாவணி அமைந்துள்ளது. கத்தோலிக்கத் திருச்சபையின் கொள்கைகளும் அறிவுரைகளும் கதை வடிவாக இந்நூலில் இடம் பெற்றுள்ளன. எனவே இந்நூல் “கிறித்துவ சமயத்தின் கலைக்க களஞ்சியம்” எனப்படுகிறது.

32. பொருத்தமில்லாதவற்றைத் தேர்ந்தெடு:

(அ) பக்கம்

(ஆ) வாழ்க்கை

(இ) மொத்தம்

(ஈ) புத்தகம்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) வாழ்க்கை

விளக்கம்:

பக்கம், மொத்தம், புத்தகம் ஆகியவை எண்ணிக்கையில் அடங்குவன. பார்க்க, தொட முடிந்த பொருட்களாகும். வாழ்க்கை எண்ணிக்கையில் அடங்காது. உணர்வுடன் சம்மந்தப்பட்ட வினைச் செயலாகும்.

33. “எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே” எனக் கூறியவர்

(அ) தொ.பொ.மீனாட்சி சுந்தரனார்

(ஆ) டாக்டர் அப்பாதுரையார்

(இ) பேரறிஞர் அண்ணா

(ஈ) டாக்டர்.மு.வரதராசனார்

விடை மற்றும் விளக்கம்

(இ) பேரறிஞர் அண்ணா

34. ஒளவையாரின் “மீதூண் விரும்பேல்” என்ற தொடருக்கு இணையான பழமொழியைத் தேர்ந்தெடு:

(அ) ஆற்றில் போட்டாலும் அளந்து போடு

(ஆ) நிறை குடம் தளும்பாது

(இ) அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு

(ஈ) நொறுங்கத் தின்றால் நூறு வயது

விடை மற்றும் விளக்கம்

(இ) அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு

35. “சாதனைப் பூக்களை ஏந்து முன்னே” – இங்கு நல்ல செடி இளைப் பாறிடுமோ? – இது யாருடைய கூற்று?

(அ) சாலை. இளந்திரையன்

(ஆ) பாரதிதாசன்

(இ) தாரா பாரதி

(ஈ) கவிஞர் சுரதா

விடை மற்றும் விளக்கம்

(அ) சாலை. இளந்திரையன்

விளக்கம்:

“சாதனைப் பூக்களை ஏந்து முன்னே இங்கு நல்ல செடி இளைப்பாறிடுமோ? வேதனை யாவும் மறந்தது பார் செடி வெற்றி கொண்டேந்திய பூவினிலே – சாலை.இளந்திரையன். சாலை. இளந்திரையன் அவர்களின் “பூத்ததுமானுடம்” என்ற கவிதைத் தொகுப்பில் உள்ள “நிறக் நேரமில்லை” என்ற கவிதையில் மேற்கண்ட அடிகள் இடம் பெற்றுள்ளன.. பொருள்: செடிகள் பூப்பதற்கு முன் ஓய்வெடுப்பதில்லை. செடியின் வெற்றியானது பூவில் உள்ளதைப் போல, உன் வெற்றிகளால் துன்பங்கள் யாவும் ஓடிவிடும்.

36. கலித்தொகையில் கூறியுள்ளதைச் சரியாகக் கண்டறிந்து எழுதுக:

ஆற்றுதல் என்பது ——–

(அ) ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்

(ஆ) புணர்ந்தாரைப் பிரியாமை

(இ) பாடு அறிந்து ஒழுகுதல்

(ஈ) பேதையார் சொல் நோன்றல்

விடை மற்றும் விளக்கம்

(அ) ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்

விளக்கம்:

கலித்தொகை.

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

பண்பெனப் படுவது பாடுஅறிந்து

ஒழுகுதல் அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை

– நல்லந்துவனார்.

மேற்கண்ட பாடல் கலித்தொகையில் “நெய்தற்கலி” பிரிவில் அமைந்துள்ளது. இப்பாடலின் ஆசிரியர் நல்லந்துவனார். கலித்தொகையை தொகுத்தவரும் இவரேயாவார். கலித்தொகையில் 33 பாடல்களை இவர் பாடியுள்ளார்.

பொருள்:

இல்லறவாழ்க்கையில், வறுமை உற்றவர்க்கு உதவுதலே, “ஆற்றுதல்” ஆகும். நட்புடன்

கூடினாரைப் பிரியாதிருத்தலே “போற்றுதல்” ஆகும்.

உலக உழுக்கம் (சான்றோர் வழி) அறிந்து ஒழுகுதலே பண்பாகும்.

தன் சுற்றத்தாரிடம் சினம் கொள்ளாதிருத்தலே அன்பாகும்.

37. நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை

(அ) ஓவியக்கலை

(ஆ) இசைக்கலை

(இ) பேச்சுக்கலை

(ஈ) சிற்பக்கலை

விடை மற்றும் விளக்கம்

(இ) பேச்சுக்கலை

விளக்கம்:

ஆயகலைகள் அறுபத்து நான்கு என்பர். அத்தகைய கலைகளுள் பேச்சுக் கலையும் ஒன்று. இது நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமையத்தக்க அரியதொரு கலையாகும். இது மக்களுக்கு அறிவைப் புகட்டி அவர்களை உயர்ந்த இலட்சியப் பாதையில் அழைத்துச் செல்லும் வன்மையுடையதாகும்.

38. ஜி.யூ.போப் திருவாசகத்தை மொழிபெயர்த்த மொழி

(அ) ஆங்கிலம்

(ஆ) இலத்தீன்

(இ) ஈப்ரு

(ஈ) கிரேக்கம்

விடை மற்றும் விளக்கம்

(அ) ஆங்கிலம்

விளக்கம்:

ஜி.யூ.போப் அவர்களின் தமிழ்த்தொண்டு.

திருக்குறளையும் திருவாசகத்தையும், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.

புறப்பொருள் வெண்பாமாலை, புறநானூறு, திருவருட்பயன் முதலிய நூல்களைப் பதிப்பித்தார்.

உயர்ந்த பண்பாடுகளை விளக்கும் 600 செய்யுள்களைத் தொகுத்து விளக்கங்களுடன் “தமிழ் செய்யுட்கலம்பகம்” என்ற நூலை வெளியிட்டார்.

தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ் ஆகிய அகராதி நூல்களை எழுதியுள்ளார். வினா-விடை முறையில் இரண்டு இலக்கண (தமிழ்) நூல்களை எழுதியுள்ளார்.

39. சொல்லின் செல்வர் எனப் பாராட்டப் பெற்றவர்

(அ) ரா.பி.சேதுப்பிள்ளை

(ஆ) பம்மல் சம்பந்த முதலியர்

(இ) திரு.வி.கல்யாண சுந்தரனார்

(ஈ) பரிதிமாற் கலைஞர்

விடை மற்றும் விளக்கம்

(அ) ரா.பி.சேதுப்பிள்ளை

விளக்கம்:

ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் ஒரு தமிழறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர், எதுகை மோனையுடன் சுவைமிக்க இலக்கியச் சொற்பொழிவாற்றும் திறமையுடையவர். இதனால் “சொல்லின் செல்வர்” எனும் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.

40. அசுவினி முதலான இருபத்தேழு மீன்களுக்கு பண்டைத் தமிழர் ——- என்று பெயரிட்டனர்.

(அ) நாள்மீன்

(ஆ) கோள்மீன்

(இ) வெள்ளி

(ஈ) புதன்

விடை மற்றும் விளக்கம்

(அ) நாள்மீன்

விளக்கம்:

பண்டைத் தமிழர் வானியல் அறிவில் சிறந்து விளங்கினர்.

தானே ஒளிரக்கூடிய சூரியன் மற்றும் விண்மீன்கள் ஆகியவற்றிற்கு “நாள்மீன்” எனவும் சூரியனிடமிருந்து ஒளிபெற்று ஒளிரக்கூடியவற்றை “கோள்மீன்” என்றும் பண்டைத் தமிழர் பெயரிட்டனர்.

41. “குறும்பொறை நாட்டையே கூத்தருக்குக் கொடுத்தவன்”

இச்சிறப்பிற்குரியவன்

(அ) பாரி

(ஆ) ஆய்

(இ) நள்ளி

(ஈ) ஓரி

விடை மற்றும் விளக்கம்

(ஈ) ஓரி

விளக்கம்:

முல்லைக் கொடி படர தன்னுடைய பெரிய தேரினை ஈந்தவன் பாரி.

ஒளிமிக்க நீலமணியையும் நாகம் தந்த கலிங்கத்தையும் இரவலர்க்குக் கொடுத்தவன் ஆய்.

பசிப்பிணியோடு வாடி வந்த இரவலர்களுக்கு அதிகமாகப் பொருள் வழங்கி அவர்களின் மனநிறைவு கண்டு மகிழ்ந்தவன் நள்ளி.

கூத்தாடுவோருக்கு வளமான நாடுகளை வழங்கி மகிழ்ந்தவன் ஓரி.

42. பெருநாரை, பெருங்குருகு முதலியவை ———- ஆகும்.

(அ) அறநூல்கள்

(ஆ) சிறுகாப்பியங்கள்

(இ) நாடக நூல்கள்

(ஈ) இசை நூல்கள்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) இசை நூல்கள்

விளக்கம்:

இசை நூல்கள்.

முதுநாரை (பெருநாரை) முதுகுருகு (பெருங்குருகு) களரியாவிரை, சிற்றிசை, பேரிசை, பரிபாடல், பஞ்சமரபு, பஞ்சபாரதீயம், தாளசமுத்திரம், இசைத்தமிழ்ச் செய்யுள் துறைக்கோவை.

“இனி, இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை, பெருங்குருகும், பிறவும், தேவனிருடி நாரதன் செய்த பஞ்சபாரதீய முதலாவுள்ள தொன்னூல்களுமிருந்தன” என்று உரையாசிரியர் அடியார்க்கு நல்லார், சிலப்பதிகார பாயிரவுரையில் குறிப்பிடுகிறார்.

43. கண்ணதாசன் எழுதிய புதின நூல்களுள் “சாகித்ய அகாதெமி”

பரிசு பெற்ற நூல்.

(அ) ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி

(ஆ) வேலங்குடித் திருவிழா

(இ) சிவப்புக்கல் மூக்குத்தி

(ஈ) சேரமான் காதலி

விடை மற்றும் விளக்கம்

(ஈ) சேரமான் காதலி

விளக்கம்:

கண்ணதாசன் எழுதிய “சேரமான் காதலி” என்ற புதினத்திற்கு 1980-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது

44. “ஆயம்”

உரிய பொருளைத் தேர்ந்தெடுத்து எழுது

(அ) தோழியர் கூட்டம்

(ஆ) சிறுமியர் கூட்டம்

(இ) மங்கையர் கூட்டம்

(ஈ) மக்கள் கூட்டம்

விடை மற்றும் விளக்கம்

(அ) தோழியர் கூட்டம்

45. படச்சுருள் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்தவர்

(அ) ஈஸ்ட்மன்

(ஆ) எடிசன்

(இ) வாலட் டிஸ்னி

(ஈ) எட்வர்டு மைபிரிட்சு

விடை மற்றும் விளக்கம்

(அ) ஈஸ்ட்மன்

விளக்கம்:

ஈஸ்ட்மன்-படச்சுருள் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்தவர்.

எடிசன்-ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தவர்.

எட்வர்டு மைபிரிட்சு-இயக்கப் படத்தைக் கண்டுபிடித்தவர்.

வால்ட் டிஸ்னி-கருத்துப்படத்தைக் கண்டுபிடித்தவர்.

46. “இரகசிய வழி”

– என்ற நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல் எது?

(அ) குற்றாலக் குறவஞ்சி

(ஆ) சீறாப்புராணம்

(இ) மனோன்மணீயம்

(ஈ) சீவகசிந்தாமணி

விடை மற்றும் விளக்கம்

(இ) மனோன்மணீயம்

விளக்கம்:

மனோன்மணீயம்

ஆசிரியர்-இராவ்பகதூர் பெ.சுந்தரம் பிள்ளை.

இந்நூல் பாண்டிய நாட்டு மன்னன் சீவகவழுதியின் மகள் மனோன்மணியின் வரலாற்றைக் கூறும் நாடக நூலாகும். இந்நாடகம் ஆங்கிலத்தில் லிட்டன்பிரபு என்பார் இயற்றியுள்ள “இரகசிய வழி” என்னும் நூலைத் தழுவி எழுதப் பெற்ற “இன்பியல்” முடிவைக் கொண்டதாகும்.

47. “இயேசு காவியம்”

– என்னும் நூலின் ஆசிரியர் பெயர் யாது?

(அ) வாணிதாசன்

(ஆ) கண்ணதாசன்

(இ) ஈரோடு தமிழன்பன்

(ஈ) மு.மேத்தா

விடை மற்றும் விளக்கம்

(ஆ) கண்ணதாசன்

48. நெய்தல் நிலத்துக்குப் பொருத்தமான ஊர்ப் பெயர்களைத் தேர்ந்தெடுக்கவும்.

(அ) கோவில்பட்டி, காளிப்பட்டி

(ஆ) சிப்பிப்பாறை, மொடக்குறிச்சி

(இ) ஆத்தூர், தெங்கூர்

(ஈ) கீழக்கரை, பட்டினப்பாக்கம்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) கீழக்கரை, பட்டினப்பாக்கம்

விளக்கம்:

நெய்தல் நில ஊர்கள்.

கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் நிலப்பகுதியாகும்.

கடற்கரையில் உருவாகும் “நகரங்கள்” “பட்டினம்” எனப்பெயர் பெறும்.

எ.கா:காவிரிபூம்பட்டினம், நாகப்பட்டினம், காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம், சதுரங்கப்பட்டினம்.

கடற்கரைச் சிற்றூர்கள் “பாக்கம்” எனப்பெயர் பெறும்.

எ.கா: பட்டினப்பாக்கம், சேப்பாக்கம்.

பரதவர்கள் வாழ்ந்த ஊர்கள் “கரை” எனப்பெயர் பெறும்.

எ.கா:கீழக்கரை, கோடியக்கரை, நீலாங்கரை, இக்காலத்தில் மீனவர்கள் வாழ்கின்ற ஊர்கள் “குப்பம்” எனப் பெயர் பெறும்.

எ.கா: நொச்சிக் குப்பம், மஞ்சக் குப்பம், மந்தாரக் குப்பம்

49. சீரான அகர வரிசையிலமைந்த சொல் வரிசையைச் சுட்டுக:

(அ) நோன்பு, நிலம், நீட்டம், நெருநல், நலம்

(ஆ) நீட்டம், நலம், நெருதல், நிலம், நோன்பு

(இ) நலம், நிலம், நீட்டம், நெருதல், நோன்பு

(ஈ) நலம், நெருதல், நிலம், நீட்டம், நோன்பு

விடை மற்றும் விளக்கம்

(இ) நலம், நிலம், நீட்டம், நெருதல், நோன்பு

50. பொருத்துக:

வரிசை ஒன்று வரிசை இரண்டு

அ. பாலடையும், நறுநெய்யும், தேனும் – 1. வினையெச்சங்கள்

ஆ. நல்முடி, நன்செய், புன்செய் – 2. தொழிற்பெயர்கள்

இ. காத்தல், படைத்தல், அழித்தல் – 3. எண்ணும்மை

ஈ. பாய்ந்து, செறிந்து, நிறைந்து – 4. பண்புத்தொகைகள்

அ ஆ இ ஈ

அ. 4 1 3 2

ஆ. 3 1 2 4

இ. 1 4 3 2

ஈ. 3 4 2 1

விடை மற்றும் விளக்கம்

ஈ. 3 4 2 1

விளக்கம்:

பாலடையும், நறுநெய்யும், தேனும் – “உம்” விகுதி வெளிப்பட அமைந்ததால் இவை எண்ணும்மையாகும்.

நல்முடி, நன்செய், புன்செய் – “மை” விகுதி மறைந்து வந்ததால் இவை பண்புத் தொகைகளாகும்.

காத்தல், படைத்தல், அழித்தல் – “அல்” விகுதி பெற்று வந்ததால் இவை தொழிற்பெயர்களாகும்.

பாய்ந்து, செறிந்து, நிறைந்து – வினைமுற்றைத் தழுவி பொருள் கொடுப்பதால் இவை வினையெச்சங்களாகும்.

51. ஆங்கிலச் சொற்களுக்கு நேரான தமிழ்ச சொற்களை அறிக:

டயாபெட்டிக் பேஷண்ட் ஸ்வீட் சாப்பிடுவதை ஸ்டாப் செய்ய வேண்டும்.

(அ) சர்க்கரை நோயாளிகள் ஸ்வீட் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்

(ஆ) நீரிழிவு நேயாளிகள் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.

(இ) நீரிழிவு நோயாளிகள் ஸ்வீட் சாப்பிடுவதை தடுக்க வேண்டும்

(ஈ) சர்க்கரை வியாதிக்காரர்கள் இனிப்பு சாப்பிடக் கூடாது.

விடை மற்றும் விளக்கம்

(ஆ) நீரிழிவு நேயாளிகள் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.

52. கீழ்காணும் 4ற்றுகளில் இடம்பெறும் ஓரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளைக் கண்டறிக

(அ)”பூ” எனும் சொல் மலரையும், பெண்ணையும் குறிக்கும்

(ஆ) “பா” எனும் சொல் செய்யுளையும், எழுத்தையும் குறிக்கும்.

(இ) “வா” என்பது “வருதல்” எனும் வினையைக் குறிக்கும்.

(ஈ) “கோ” என்பது கோவிந்தனின் பெயர்

(அ) ஈ, இ மற்றும் ஆ சரியானவை

(ஆ) ஈ, ஆ மற்றும் அ சரியானவை

(இ) ஈ, அ மற்றும் இ சரியானவை

(ஈ) அ, ஆ மற்றும் இ சரியானவை

விடை மற்றும் விளக்கம்

(ஈ) அ, ஆ மற்றும் இ சரியானவை

விளக்கம்:

பூ-மலர், புவி

பா-பாட்டு, அழகு.

வா-வருதல்.

கோ-மன்னன், பசு.

53. பிழையான சொல்லை எடுத்தெழுதுக.

(அ) சுவற்றில்

(ஆ) அருகில்

(இ) செலவு

(ஈ) பதற்றம்

விடை மற்றும் விளக்கம்

(அ) சுவற்றில்

விளக்கம்:

பிழையான சொல்-சுவற்றில்.

பிழையற்ற சொல்-சுவரில்

54. தொண்ணுற்றாறு

– பிரிக்கும் முறை

(அ) தொண்ணுறு+ஆறு

(ஆ) தொள்ளாயிரம்+ஆறு

(இ) தொண்+ஆறு

(ஈ) தொண்+ணுறு

விடை மற்றும் விளக்கம்

(அ) தொண்ணுறு+ஆறு

விளக்கம்:

தொண்ணூற்றாறு-தொண்ணூறு+ஆறு.

“நெடிலோடு உயிர்த்தொடர்” எனும் விதிப்படி

“தொண்ணூற்று+ஆறு” என்றானது.

“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி “தொண்ணூற்ற்+ஆறு என்றானது.

“உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “தொண்ணூற்றாறு” என்று புணர்ந்தது.

55. கீழே தரப்பட்டுள்ளவற்றுள் பொருத்தமற்றதைத் தேர்வு செய்க

(அ) “உண்ணாது” என்பது எதிர்மறை வினையெச்சம்

(ஆ) “அகழ்வார்” என்பது வினையாலணையும் பெயர்

(இ) “நன்று” என்பது குறிப்பு வினைமுற்று

(ஈ) “ச” என்பது வேர்ச்சொல்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) “ச” என்பது வேர்ச்சொல்

56. கொடுக்கப்பட்டுள்ள ஆங்கிலச் சொல்லுக்குரிய தவறான விடை எதுவெனத் தேர்க

(அ) CARTOON–கருத்துப்படம்

(ஆ) NEGATIVE–எதிர்ச்சுருள்

(இ) GRRENROOM–பச்சை அறைகள்

(ஈ) INSTINCT-இயற்கை அறிவு

விடை மற்றும் விளக்கம்

(இ) GRRENROOM–பச்சை அறைகள்

விளக்கம்: GREENROOM-பாசறை

57. சந்திப் பிழையற்ற தொடரைக் குறிக்க.

(அ) சமூகச் சீர்திருத்த கருத்துகளை விதைத்துப் பயிராக்கி மகிழ்ந்தவர் பண்டிதர்

(ஆ) சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை விதைத்து பயிராக்கி மகிழ்ந்தவர் பண்டிதர்

(இ) சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை விதைத்துப் பயிராக்கி மகிழ்ந்தவர் பண்டிதர்

(ஈ) சமூக சீர்திருத்தக் கருத்துகளை விதைத்து பயிராக்கி மகிழ்ந்தவர் பண்டிதர்

விடை மற்றும் விளக்கம்

(இ) சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை விதைத்துப் பயிராக்கி மகிழ்ந்தவர் பண்டிதர்

58. உரவோர்

– இலக்கணக்குறிப்பு தருக.

(அ) வினைமுற்று

(ஆ) பெயர்ச்சொல்

(இ) வினையாலணையும் பெயர்

(ஈ) தொழிற்பெயர்

விடை மற்றும் விளக்கம்

(இ) வினையாலணையும் பெயர்

விளக்கம்:

உரவோர்-வினையாலணையும் பெயர்.

செய்கின்ற தொழிலைக் குறிக்காமல், தொழில் செய்யும் கருத்தாவைக் குறிப்பது வினையாலணையும் பெயராகும்.

59. “திருத்தொண்டர் புராணத்தை” ——– என அழைக்கிறோம்.

(அ) சிவபுராணம்

(ஆ) பெரியபுராணம்

(இ) கந்தரபுராணம்

(ஈ) தணிகைபுராணம்

விடை மற்றும் விளக்கம்

(அ) சிவபுராணம்

விளக்கம்:

பெரியபுராணம்

செயற்கரிய செயல்களைச் செய்து பெருமை பெற்ற சிவனடியார்கள் அறுபத்து மூவரின் வரலாற்றையும் தொகையடியார் ஒன்பது பேரின் வரலாற்றையும் இந்நூல் கூறுகிறது. பெருமையுடைய சிவனடியார்களின் வரலாற்றைக் கூறும் நூல் என்பதால் “பெரியபுராணம்” என்று அழைக்கப்படுகிறது. இந்நூலுக்கு சேக்கிழார் இட்ட பெயர் “திருத்தொண்டர் புராணம்” ஆகும்.

60. அகமும், புறமும் கலந்த பாடல் தொகுதி ———– ஆகும்

(அ) பதிற்றுப்பத்து

(ஆ) ஐங்குறுநூறு

(இ) பரிபாடல்

(ஈ) கலித்தொகை

விடை மற்றும் விளக்கம்

(இ) பரிபாடல்

விளக்கம்:

பரிபாடல்

திணை-அகமும் புறமும்.

பாவகை-பரிபாட்டு.

பாடல்கள்-70 (கிடைத்தவை 22).

புலவர்-13 பேர்.

அடி எல்லை- 25-400.

வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களுக்கும் பலவகையான அடிகளுக்கும் பரிந்து இடம் கொடுக்கும் தன்மை உடையது பரிபாட்டு ஆகும்.

61. “தொண்டர் சீர் பரவுவர்”

என அழைக்கப்படுபவர்

(அ) சேக்கிழார்

(ஆ) கம்பர்

(இ) சுந்தரர்

(ஈ) சம்பந்தர்

விடை மற்றும் விளக்கம்

(அ) சேக்கிழார்

விளக்கம்:

பெருமையுடைய சிவனடியார்களின் வரலாற்றை எழுதியதால், தொண்டர்களின் பெருமையை (சீர்) பரப்பியவர் என்ற பொருள் அமையுமாறு “தொண்டர் சீர்பரவுவார்” என்று சேக்கழார் அழைக்கப்பட்டார்

62. “திருமந்திரம்” சைவத்திருமுறைகளுள் ———– திருமுறை ஆகும்

(அ) பதினோராம்

(ஆ) பத்தாம்

(இ) பன்னிரண்டாம்

(ஈ) எட்டாம்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) பத்தாம்

விளக்கம்:

சைவத் திருமுறைகள்

1,2,3 – திருஞானசம்பந்தர் (தேவாரம்)

4,5,6 – திருநாவுக்கரசர் (தேவாரம்)

7 – சுந்தரர் (தேவாரம்)

8 – மாணிக்க வாசகர் (திருவாசகம், திருக்கோவையார்)

9 – ஒன்பதின்மர் (திருமாளிகைத் தேவர், சேந்தனார், கண்டராதித்தர்,

கருவூர்த்தேவர், வேணாட்டடிகள்) திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர், பூந்துருத்தி நம்பிகாடநம்பி-திருவிசைப்பா, திருப்பல்லாண்டு.

10 – திருமூலர் (திருமந்திரம்)

11 – பன்னிருவர் (ஆலவாய் உடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள்

காடவர்கோன், சேரமான் பெருமான், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமான், அதிராவடிகள், பட்டனத்தடிகள், நம்பியாண்டார் நம்பி-பிரபந்தமாலை (40 நூல்கள்)

12 – சேக்கிழார் (பெரியபுராணம்)

63. பொருத்தமான விடை:

“மேழி” – என்பதன் பொருள்

(அ) கலப்பை

(ஆ) மோதிரம்

(இ) உழவர்

(ஈ) மேகம்

விடை மற்றும் விளக்கம்

(அ) கலப்பை

விளக்கம்:

மேழி பிடிக்கும்கை வேல்வேந்தர் நோக்கும்கை

ஆழி தரித்தே அருளும்கை – சூழ்வினையை

நீக்கும்கை என்றும் நிலைக்கும்கை நீடுழி

காக்கும்கை காராளர் கை.

-கம்பர்

மேழி-கலப்பை, ஏர்.

உழவரின் கைகள் கலப்பை பிடித்து உழவு செய்கின்ற கைகளாகும்.

64. ஆண்டாளின் வளர்ப்புத் தந்தை யார்?

(அ) நம்மாழவார்

(ஆ) பெரியாழ்வார்

(இ) பூத்ததாழ்வார்

(ஈ) பேயாழ்வார்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) பெரியாழ்வார்

விளக்கம்:

பெரியாழ்வார் திருவில்லிபுத்தூரில் பிறந்தவர். நந்தவனம் அமைத்து நாள்தோறும் அரங்கனுக்கு தொண்டு செய்து வாழ்ந்தவர் பெரியாழ்வார். இவரின் இயற்பெயர் விஷ்ணுசித்தர். இவரின் வளர்ப்பு மகள் ஆண்டாள். ஆண்டாளின் இயற்பெயர் கோதையாகும்.

65. சீர் எதுகை அமைந்த தொடரைக் கண்டறிக:

(அ) வருக மற்றிவண் தருக ஈங்கென

(ஆ) கள்வனைக் கோறல் கடுங்கோலன்று

(இ) இந்துவின் நுதலாளோடு இளவலெ டினிதேறா

(ஈ) வேதனைக் வந்தாலும் விலகிப் போகும்

விடை மற்றும் விளக்கம்

(அ) வருக மற்றிவண் தருக ஈங்கென

விளக்கம்:

அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது அடி எதுகையாகும். ஒரே சீரில் இரண்டாமெழுத்து ஒன்றிவருவது சீர் எதுகையாகும்.

ருக மற்றிவண் தருகு ஈங்கென

66. பரணி இலக்கியத்திற்குரிய பாவகையைக் குறிப்பிடுக:

(அ) நேரிசை வெண்பா

(ஆ) ஆசிரிய விருத்தம்

(இ) கலித்தாழிசை

(ஈ) கலிவிருத்தம்

விடை மற்றும் விளக்கம்

(இ) கலித்தாழிசை

67. “அம்மானை” என்பது ——– விளையாடும் விளையாட்டு

(அ) பெண்கள்

(ஆ) ஆண்கள்

(இ) குழந்தைகள்

(ஈ) இளைஞர்கள்

விடை மற்றும் விளக்கம்

(அ) பெண்கள்

68. சந்திப்பிழையை நீக்குக:

(அ) தமிழக அரசின் அரசவை கவிஞராகத் திகழ்ந்தார்

(ஆ) தமிழக அரசின் அரசவைக் கவிஞராக திகழ்ந்தார்.

(இ) தமிழக அரசின் அரசவை கவிஞராக திகழ்ந்தார்

(ஈ) தமிழக அரசின் ரசவைக் கவிஞராகத் திகழ்ந்தார்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) தமிழக அரசின் ரசவைக் கவிஞராகத் திகழ்ந்தார்

69. மீனாட்சியம்மையே சிறுமியாக வந்து முத்துமாலையை யாருக்குப் பரிசாக அளித்தார்?

(அ) திருமலைநாயக்கர்

(ஆ) பரஞ்சோதி முனிவர்

(இ) குமரகுருபரர்

(ஈ) சீத்தலை சாத்தனார்

விடை மற்றும் விளக்கம்

(இ) குமரகுருபரர்

70. “சால்பு” என்பதன் பொருள் யாது?

(அ) பேராண்மை

(ஆ) மோலண்மை

(இ) சான்றாண்மை

(ஈ) வேளாண்மை

விடை மற்றும் விளக்கம்

(இ) சான்றாண்மை

71. “ஆடலரசி”

(அ) மணிமேகலை

(ஆ) மாதவி

(இ) மாதரி

(ஈ) சித்திராபதி

விடை மற்றும் விளக்கம்

(ஆ) மாதவி

72. நாலாயிர திவ்வியப்பிரபந்தத்தைத் தொகுத்தவர்

(அ) மாணிக்கவாசகர்

(ஆ) நாதமுனிகள்

(இ) பொய்கையார்

(ஈ) பூதத்தார்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) நாதமுனிகள்

73. வேளாண்வேதம் என்று அழைக்கப்படும் நூல்

(அ) நாலடியார்

(ஆ) நான்மணிக்கடிகை

(இ) சிறுபஞ்சமூலம்

(ஈ) பழமொழி

விடை மற்றும் விளக்கம்

(அ) நாலடியார்

74. பொருத்தாதவற்றைச் சுட்டுக:

(அ) நாடி இனிய சொலின்

(ஆ) இனிய உளவாக இன்னாத கூறல்

(இ) காயும் ஒருநாள் கனியாகும்

(ஈ) பண்பின் தலைபிரியாச் சொல்

விடை மற்றும் விளக்கம்

(இ) காயும் ஒருநாள் கனியாகும்

விளக்கம்:

ஏனைய மூன்றும் செய்யுள் அடிகளாகும். மேலும் மூன்றும் நற்பண்புகளைக் குறிக்கும் சொற்றொடர்களாகும். கொள்குறி (இ) சாதாரண சொற்றொடாகும்.

75. “யாருமில்லை தானே கள்வன்”

என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?

(அ) புறநானூறு

(ஆ) குறுந்தொகை

(இ) அகநானூறு

(ஈ) கலித்தொகை

விடை மற்றும் விளக்கம்

(ஆ) குறுந்தொகை

விளக்கம்:

குறுந்தொகை

“யாரு மில்லை தானே கள்வன்

தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ

தினைத்தா ளன்ன சிறுபசுங் கால

ஒழுகுநீ ராரல் பார்க்கும்

குருகு முண்டுதான் மணந்த ஞான்றே”

ஆசிரியர்-கபிலர்.

திணை-குறிஞ்சி.

பொருள்:

“தலைவர் என்னைக் களவில் மணந்த போது அவ்விடத்துச் சான்று கூறத் தக்கர் எவருமிலர். அக்கள்வரே அங்கு இருந்தவரும் ஆவார். அவரே தாம் கூறிய சூளுரையினைப் பொய்த்து விடும்படி செய்வராயின் நான் என்ன செய்ய இயலும்? ஓடும் நீரிலே ஆரல் மீனுக்காகக் காத்திருந்த, தினையின் தாள் போன்ற சிறிய பசுமையான கால்களையுடைய நாரைகளும் இருந்தன. அவ்வளவே” எனத் தலைவி தோழியிடம் கூறுகிறான்.

76. “வாகீசர்” என்று அழைக்கப்பெறுபவர்

(அ) சுந்தரர்

(ஆ) குலசேகர ஆழ்வார்

(இ) மாணிக்கவாசகர்

(ஈ) திருநாவுக்கரசர்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) திருநாவுக்கரசர்

விளக்கம்:

“வாகீசர்” என அழைக்கப்பெறுபவர் திருநாவுக்கரசர் ஆவார். இவரின் இயற்பெயர் “மருள்நீக்கியார்”. சிலகாலம் அவர் சமணசமயத்தில் இருந்தபோது “தருமசேனர்” என அழைக்கப்பெற்றார். மீண்டும் சைவ சமயத்திற்கு இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட போது, இறைவனால் “நாவுக்கரசு” எனப்பெயர் பெற்றார். இறைவன் சூலைநோயைத் தந்து இவரை ஆட்கொண்டமையால் “ஆளுடைய அரசு” எனப்பட்டார். திருஞான சம்பந்தர் இவரை “அப்பர்” என்றழைத்தார்.

77. மணிமேகலைக்கு அறவுரை வழங்கிய ஆசிரியர்

(அ) அதிரா அடிகள்

(ஆ) இளங்கோ அடிகள்

(இ) அறவண அடிகள்

(ஈ) கவுந்தி அடிகள்

விடை மற்றும் விளக்கம்

(இ) அறவண அடிகள்

விளக்கம்:

அதிரா அடிகள்-பதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களை அருளிச் செய்த ஆசிரியர்களுள் ஒருவர் அதிரா அடிகள்.

இளங்கோ அடிகள்- சிலப்பதிகாரத்தின் ஆசிரியர்.

அறவண அடிகள்-மணிமேகலை என்ற காப்பியத்தில் மணிமேகலைக்கு அறவுரை வழங்கிய ஆசிரியர்.

கவுந்தியடிகள்-சிலப்பதிகாரத்தில் கோவலனையும் கண்ணகியையும் வழிநடத்திச் சென்றவர்.

78. பிள்ளைத் தமிழின் இரண்டாம் பருவம்.

(அ) தாலப்பருவம்

(ஆ) செங்கீரைப்பருவம்

(இ) சப்பாணிப்பருவம்

(ஈ) முத்தப்பருவம்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) செங்கீரைப்பருவம்

விளக்கம்:

பிள்ளைத் தமிழின் 10 பருவங்கள்.

இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் (7): காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி.

ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய இறுதி மூன்று பருவங்கள்: சிற்றில், சிறுபறை, சிறுதேர்.

பெண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய இறுதி மூன்று பருவங்கள்: அம்மானை, கழங்கு (நீராடல்), ஊசல்.

79. ‘ஊரோடு தோற்றமும் உரித்தென வழக்கொடு சிவணிய வகைமையான’ என்ற தொல்காப்பிய வரி பிற்பாலத்தில் எந்த்ப பிரபந்தங்களுக்குத் தோற்றுவாயாக அமைந்தது?

(அ) பிள்ளைத் தமிழ்

(ஆ) உலா

(இ) தூது

(ஈ) அந்தாதி

விடை மற்றும் விளக்கம்

(ஆ) உலா

80. ஆண்பால் பிள்ளைத் தமிழில் இல்லாத பருவங்கள்

(அ) தால், சப்பாணி, முத்தம்

(ஆ) சிற்றில், சிறுபறை, சிறுதேர்

(இ) காப்பு, வருகை, அம்புலி

(ஈ) அம்மானை, நீராடல், ஊசல்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) அம்மானை, நீராடல், ஊசல்

81. தன் வாழ்க்கை வரலாற்றை “என்சரிதம்” என்னும் பெயரில் ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதியவர் யார்?

(அ) உ.வே.சாமிநாத ஐயர்

(ஆ) மறைமலை அடிகள்

(இ) காந்தியடிகள்

(ஈ) நேரு

விடை மற்றும் விளக்கம்

(அ) உ.வே.சாமிநாத ஐயர்

82. பழங்காலத்தில் கடற்கரையில் உருவான பேரூர்கள் ———- எனப்படும்.

(அ) நகரம்

(ஆ) பட்டினம்

(இ) பாக்கம்

(ஈ) பட்டி

விடை மற்றும் விளக்கம்

(ஆ) பட்டினம்

83. ஆட்டனத்தி ஆதிமந்தியின் ஆசிரியர்

(அ) வண்ணதாசன்

(ஆ) வாணிதாசன்

(இ) கண்ணதாசன்

(ஈ) சுப்பரத்தினதாசன்

விடை மற்றும் விளக்கம்

(இ) கண்ணதாசன்

84. “இந்தியாவின் தேசியப்பங்கு வீதம்” என்ற நூலை இயற்றியவர்

(அ) பெரியார்

(ஆ) அண்ணா

(இ) பாரதிதாசன்

(ஈ) டாக்டர். அம்பேத்கர்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) டாக்டர். அம்பேத்கர் 

85. “உவமைக்கவிஞர்” எனப் போற்றப்படுபவர் யார்?

(அ) பாரதியார்

(ஆ) பாரதிதாசன்

(இ) கவிமணி

(ஈ) சுரதா

விடை மற்றும் விளக்கம்

(ஈ) சுரதா

86. “ஒரு கிராமத்து நதி” – என்ற நூலின் ஆசிரியர்

(அ) சிற்பி பாலசுப்ரமணியம்

(ஆ) கவிஞர் தாராபாரதி

(இ) கவிஞர் கண்ணதாசன்

(ஈ) நா.காமராசன்

விடை மற்றும் விளக்கம்

(அ) சிற்பி பாலசுப்ரமணியம்

87. ‘தமிழ் நாடகத் தந்தை’ என்று போற்றப்பட்டவர் ————- ஆவர்

(அ) பம்மல் சம்பந்தனார்

(ஆ) பரிதிமாற் கலைஞர்

(இ) சங்கரதாசு சுவாமிகள்

(ஈ) தி.க.காமராசன்

விடை மற்றும் விளக்கம்

(அ) பம்மல் சம்பந்தனார்

விளக்கம்:

பம்மல் சம்பந்தனார்-தமிழ்நாடகத் தந்தை.

பரிதிமாற்கலைஞர்-திராவிட சாஸ்திரி.

சங்கராஸ்சுவாமிகள்-நாடக உலகின் இமயமலை, தமிழ் நாடகத் தலைமையாசிரியர்.

ஒளவை சண்முகனார்-திக.சண்முகனார்

88. “நீதித் திருக்குறளை நெஞ்சாரத்தம் வாழ்வில்

ஓதித் தொழுது எழுக ஓர்ந்து” என்று கூறியவர்

(அ) கபிலர்

(ஆ) பரணர்

(இ) கவிமணி

(ஈ) மாங்குடி மருதனார்

விடை மற்றும் விளக்கம்

(இ) கவிமணி

89. இந்திய அரசின் ஞானபீட பரிசு பெற்ற முதல் தமிழன்

(அ) அகிலன்

(ஆ) கு.ப.ராஜகோபாலன்

(இ) இராஜாஜி

(ஈ) மௌனி

விடை மற்றும் விளக்கம்

(அ) அகிலன்

விளக்கம்:

இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஓர் உயரிய விருது ஞானபீட விருதாகும். “பாரதிய ஞானபீடம்” என்ற பண்பாட்டு இலக்கிய கழகத்தால் இவ்விருது வழங்கப்படுகிறது. “டைம்ஸ் ஆஃ.ப் இந்தியா” நாளிதழை வெளியிடும் சாகு ஜெயின் குடும்பத்தினரால் 1965 முதல் இவ்வருது வழங்கப்பட்டு வருகிறது. 1975-ஆம் ஆண்டு “சித்திரப்பாவை” என்ற இலக்கியத்திற்காக தமிழ் எழுத்தாளர் அகிலனுக்கு வழங்கப்பட்டது. இந்திய அரசின் ஞானபீட பரிசினைப் பெற்ற முதல் தமிழன் இவரேயாவார்.

90. யார் என்று கண்டறிக:

எட்டயபுரம் கடிகை முத்துப்புலவரின் மாணவர்

(அ) சீத்தலைச் சாத்தனார்

(ஆ) உமறுப்புலவர்

(இ) பாரதியார்

(ஈ) திருத்தக்கதேவர்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) உமறுப்புலவர்

விளக்கம்:

சீறாப்புராணத்தை இயற்றிய உமறுப்புலவரின் ஆசிரியர் எட்டையபுர அரசவைப் புலவராக பணியாற்றிய கடிகை முத்துப்புலவராவார்.

91. வீரமாமுனிவர் தமது எத்தனையாவது வயதில் தமிழகம் வந்து தமிழ் படித்து காப்பியம் படைத்தார்?

(அ) நாற்பது

(ஆ) முப்பது

(இ) இருபது

(ஈ) அறுபது

விடை மற்றும் விளக்கம்

(ஆ) முப்பது

விளக்கம்:

இத்தாலியிலிருந்து சமயத்திருப்பணிக்காக வீரமாமுனிவர் தனது 30-ஆவது அகவையில் தமிழகம் வந்தார். இவருடைய காலம் 1680-1747 ஆகும்

92. “கருணாமிர்த சாகரம்” என்னும் இசையாராய்ச்சி நூலை எழுதியவர்

(அ) அண்ணாமலை செட்டியர்

(ஆ) ஆர்.கே.சண்முகம் செட்டியார்

(இ) தண்டபாணி தேசியர்

(ஈ) ஆபிரகாம் பண்டிதர்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) ஆபிரகாம் பண்டிதர்

விளக்கம்:

இசைத்தமிழ் ஆய்வினைத் தொடங்கி வைத்த தலைமகனாக தஞ்சை மு.ஆபிரகாம் பண்டிதர் விளங்கினார். இவர் எழுதி வெளியிட்ட “கருணாமிர்த சாகரம்” என்ற நூல் முன்னோடி ஆய்வு நூலாக விளங்குகிறது

93. “திராவிட சாஸ்திரி” என்று பட்டத்தைப் பெற்றவர் யார்?

(அ) பரிதிமாற் கலைஞர்

(ஆ) மறைமலையடிகள்

(இ) நீலாம்பிகை அம்மையார்

(ஈ) தாயுமானவர்

விடை மற்றும் விளக்கம்

(அ) பரிதிமாற் கலைஞர்

விளக்கம்:

பரிதிமாற் கலைஞரின் தமிழ்ப்புலமையையும் கவிபாடும் திறமையையும் கண்டு யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரனார் “திராவிட சாஸ்திரி” என்ற பட்டத்தை அவருக்கு வழங்கினார்.

94. இன்றைய கர்நாடக இசைக்கு தாய்

(அ) தமிழ்

(ஆ) தெலுங்கு

(இ) கன்னடம்

(ஈ) சமஸ்கிருதம்

விடை மற்றும் விளக்கம்

(அ) தமிழ்

95. உலகில் மொழி உருவம் பெறுவதற்கு முன் ———– பிறந்து விட்டது என்பர்.

(அ) நடனம்

(ஆ) இயல்

(இ) இசை

(ஈ) நாடகம்

விடை மற்றும் விளக்கம்

(இ) இசை

96. ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகங்களை மொழிப் பெயர்த்தவர்

(அ) தி.க.சண்முகனார்

(ஆ) பம்மல் சம்பந்தனார்

(இ) சங்கரதாஸ் சுவாமிகள்

(ஈ) காசி விசுவநாதர்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) பம்மல் சம்பந்தனார்

97. அகராதி முறையைத் தமிழுக்குத் தந்தவர்

(அ) எல்லீசு துரை

(ஆ) போப் ஐயர்

(இ) ரேனியஸ் ஐயர்

(ஈ) வீரமாமுனிவர்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) வீரமாமுனிவர்

விளக்கம்:

அகராதி முறையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் வீருமாமுனிவர். இவர் உருவாக்கிய சதுரகராதியே தமிழ் மொழியின் முதல் அகராதியாகும். மேலும் இவர், தமிழ்-இலத்தீன், இலத்தீன்-தமிழ், பிரெஞ்சு-தமிறை, தமிழ்-பிரெஞ்சு, போத்துகீசிய-இலத்தீன்- தமிழ் முதலிய அகராதிகளையும் உருவாக்கியுள்ளார்

98. மிக வேகமாகச் செய்யுள் எழுதுவதில் வல்ல இவர், தமிழில் மிகப்பல செய்யுள் நூல்களை எழுதியவர்

(அ) மீனாட்சி சுந்தரம் பிள்ளை

(ஆ) பலபட்டடைச் சொக்கநாதர்

(இ) தஞ்சை வேதநாயகம்

(ஈ) இராமலிங்கர்

விடை மற்றும் விளக்கம்

(அ) மீனாட்சி சுந்தரம் பிள்ளை

விளக்கம்:

மீனாட்சி சுந்தரம் பிள்ளை

உ.வே.சாமிநாதையரின் ஆசிரியர். திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவான தேசிகர் இவருக்கு “மகாவித்துவான்” என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார். 19-ஆம் நூற்றாண்டில் அதிக நூல்களை இயற்றியவர் இவர்தான். சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இவர் இயற்றியுள்ளார்.

99. “பேசுந் தாய்மொழியின் மாட்டு அன்பில்லா ஒருவன் தாயையும் நாட்டையும் பழித்தவனாவான்” – எனக் கூறியவர்

(அ) பாரதிதாசனார்

(ஆ) பாரதியார்

(இ) திரு.வி.கல்யாண சுந்தரனார்

(ஈ) தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

விடை மற்றும் விளக்கம்

(இ) திரு.வி.கல்யாண சுந்தரனார்

100. வால்ட் விட்மனின் சாயலில் வசன கவிதை பாடியவர் யார்?

(அ) கவிமணி

(ஆ) பாரதியார்

(இ) பாரதிதாசனார்

(ஈ) நாமக்கல் கவிஞர்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) பாரதியார்

Exit mobile version