Tnpsc Current Affairs in Tamil & English – 22nd July 2024

1. தெகிரி புனல்மின்னுற்பத்தி நிலையம் அமைந்துள்ள ஆற்றுப்படுகை எது?

அ. மந்தாகினி

. பாகீரதி

இ. இராமகங்கை

ஈ. டோன்ஸ் ஆறு

2. ஹரேலா திருவிழா கொண்டாடப்படுகிற மாநிலம் எது?

அ. ஆந்திர பிரதேசம்

ஆ. உத்தரகாண்ட்

இ. இராஜஸ்தான்

ஈ. கேரளா

3. அல்வா விழா என்பது எந்த ஆவணத்தை வெளியிடுவதுடன் தொடர்புடையதாகும்?

அ. ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை

ஆ. மத்திய பட்ஜெட்

இ. பொருளாதார ஆய்வறிக்கை

ஈ. NITI ஆயோக்கின் ஆண்டறிக்கை

4. அண்மையில் நடுவண் உள்துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட, நாட்டின் முதல் இலவச போதைப்பொருள் ஒழிப்பு உதவி மையத்தின் பெயர் என்ன?

அ. விக்ராந்த்

ஆ. நிஷ்சய்

இ. மனஸ்

ஈ. காவேரி

5. முதன்மை அறிவியல் ஆலோசகரால் அண்மையில் வெளியிடப்பட்ட, “இந்தியாவிற்கான மின்சார வாகனப்போக்கு வரவு R&D செயல் திட்டத்தின்” முதன்மை நோக்கம் என்ன?

அ. மின்சார வாகனங்களின் விலையை குறைப்பது

. மின்சார வாகனங்களில் (EVs) உலகளாவிய தலைமையை அடைவது

இ. மின்சார வாகன விற்பனையை ஊக்குவிப்பது

ஈ. மின்சார வாகனங்களுக்கான உற்பத்தி அலகுகளை நிறுவுவது

6. விண்வெளி ஆராய்ச்சிக் குழுவின் (COSPAR) 45ஆவது அறிவியல் பேரவையை முதன்முறையாக நடத்திய நாடு எது?

அ. நேபாளம்

ஆ. தென் கொரியா

இ. பூடான்

ஈ. மாலத்தீவுகள்

7. அண்மையில், இந்தியாவின் முதல் வெளிநாட்டில் இயங்கும் மக்கள் மருந்தகத்தை, நடுவண் வெளியுறவுத்துறை அமைச்சர் S ஜெய்சங்கர், கீழ்க்காணும் எந்த நாட்டில் திறந்து வைத்தார்?

அ. வியட்நாம்

ஆ. இந்தோனேசியா

இ. மொரிஷியஸ்

ஈ. மலேசியா

8. 2024 – உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீரர் யார்?

அ. சௌர்யா பாவா

ஆ. முகமது ஜகாரியா

இ. குஷ் குமார்

ஈ. அனாகத் சிங்

9. ‘ஆபரேஷன் நான்ஹே ஃபரிஷ்டே’ என்பதுடன் தொடர்புடைய அமைப்பு எது?

அ. DRDO

ஆ. ரெயில்வே பாதுகாப்புப் படை

இ. ISRO

ஈ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

10. அண்மையில், கல்வி அமைச்சகம் மற்றும் UGCஆல் தொடங்கப்பட்ட ASMITA திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?

அ. கல்வி முறையில் இந்திய மொழிகளை மேலும் ஆழமாக ஊக்குவிப்பது மற்றும் ஒருங்கிணைப்பது

ஆ. அனைத்து பாடங்களையும் ஆங்கிலத்திலிருந்து இந்திய மொழிகளுக்கு மாற்றுவது

இ. இந்தியாவில் அயல்நாட்டு மொழிகளை ஊக்குவிப்பது

ஈ. புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்வது

11. அண்மையில், நாடு முழுவதும் உருளைக்கிழங்குப் பயிரைப் பாதித்த பின்னழுகல் நோய் என்றால் என்ன?

அ. பாக்டீரியா தொற்று

ஆ. பூஞ்சை நோய்

இ. வைரஸ் தொற்று

ஈ. பூச்சித்தொல்லை

12. ஜெர்டன் கல்குருவி என்பது இந்தியாவின் எந்தப் பகுதியில் வாழும் ஓர் இரவுநேரப் பறவையாகும்?

அ. மேற்குத்தொடர்ச்சி மலைகள்

ஆ. கிழக்குத்தொடர்ச்சி மலைகள்

இ. வடகீழைப்பகுதி

ஈ. லடாக்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தொடர்ந்து 7ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல்: சாதனை படைக்கும் நிர்மலா சீதாராமன்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஏழாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து வரலாற்றுச் சாதனை படைக்கவுள்ளார். இதன்மூலம் தொடர்ச்சியாக ஐந்து முறை முழு பட்ஜெட்டும், ஒருமுறை இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை அவர் முறியடிக்கவுள்ளார். பிரதமர் நரேந்திர மோதியின் 2ஆவது பதவிக்காலத்தில் நாட்டின் முழுநேர நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் கடந்த 2019ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

முதல் பட்ஜெட்: நாடு விடுதலை அடைந்து பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவியேற்ற பின்பு முதல் பட்ஜெட்டை அப்போதைய நிதியமைச்சர் R K சண்முகம் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் தேதி மற்றும் நேரம்: கடந்த 2016ஆம் ஆண்டுவரை பிப்ரவரி மாதத்தின் இறுதிநாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நடைமுறை கடந்த 2017ஆம் ஆண்டு மாற்றப்பட்டு பிப்ரவரி மாதத்தின் முதல் நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் கடந்த 1999ஆம் ஆண்டுக்கு முன்னதாக மாலை 4 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இந்நடைமுறையை மாற்றி 1999ஆம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக பதவி வகித்த யஸ்வந்த் சின்ஹா காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார்.

அன்றிலிருந்து தற்போது வரை காலை 11 மணிக்கே நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

2. இந்தியாவில் முதியவர்கள் எண்ணிக்கை 2050க்குள் இரட்டிப்பாகும்.

இந்தியாவில் முதியவர்கள் எண்ணிக்கை 2050ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாகும் என ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை (UNFPA) அமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் மக்கள்தொகை 2050ஆம் ஆண்டுக்குள் 34.6 கோடி பேருடன் இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் 10 முதல் 19 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 25.2 கோடி பேர் உள்ளனர்.

2050இல் 50% நகரமயம்: வரும் 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியா 50 சதவீத அளவுக்கு நகரமயமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3. சென்னானூர் அகழாய்வில் தமிழி எழுத்துப்பொறிப்புக்கொண்ட பானை ஓடுகள் கண்டெடுப்பு.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழாய்வுத்தளத்தில் புதிய கற் காலப்பண்பாட்டைக் கண்டறிய அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இங்கு உடைந்த நிலையில் புதிய கற்காலக்கருவி கண்டெடுக்கப்பட்டது. மேலும், சுடுமண் முத்திரை, சங்கு வளையல் துண்டுகள், கண்ணாடி வளையல் துண்டுகள், வட்டச்சில்லுகள், தக்களி போன்ற சங்ககாலம் என்றழைக்கப்படும் தொடக்க வரலாற்றுக் காலத்தைச் சார்ந்த தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

தற்போது, சென்னானூர் அகழாய்வில் 90 செமீ – 108 செமீ வரையிலான ஆழத்தில் தமிழி எழுத்துப்பொறிக்கப்பட்ட 3 பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பானை ஓடுகளில் முறையே [ந்]தை பாகஅந், ஊகூர், [சா]த்தன் எனப் பொறிக்கப்பட்டுள்ளன. பாறைகளில் பொறிக்கப்பட்ட தமிழி எழுத்துக் கல்வெட்டுகளில் வேள்ஊர், மதிரை, இவகுன்றம், நெல்வெளிஇய், இலஞ்சி, கருஊர், முசிறி, வெள்அறைய், தேனூர், அகழ்ஊர், கோகூர் போன்ற ஊர்ப் பெயர்கள் காணப்படுகின்றன. ஆனால் பானை ஓடுகளில் பெரும்பாலும் ஆட்பெயர்கள் இடம்பெற்றுள்ளன. உறையூர் பானை ஓட்டில் மூலனபேடு என்ற ஊர்ப்பெயர் கிடைக்கப்பெற்றது. தற்பொழுது சென்னானூர் பானை ஓட்டில் ஊகூர் என்ற ஊர்ப்பெயர் கிடைக்கப்பெற்றுள்ளது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

1. Tehri Hydro Power Plant is located on which river basin?

A. Mandakini

B. Bhagirathi

C. Ramganga

D. Tons

2. Harela Festival is celebrated in which state?

A. Andhra Pradesh

B. Uttarakhand

C. Rajasthan

D. Kerala

3. Halwa ceremony is associated with releasing of which document?

A. RBI’s Annual Report

B. Union Budget

C. Economic Survey

D. NITI Aayog’s Annual Report

4. What is the name of nation’s first toll-free narcotics helpline, recently launched Ministry of Home Affairs?

A. Vikrant

B. Nischay

C. Manas

D. Kaveri

5. What is the primary aim of “e-mobility R&D Roadmap for India”, recently launched by the Principal Scientific Adviser?

A. To reduce the price of electric vehicles

B. Achieving global leadership in electric vehicles (EVs)

C. To promote electric vehicle sales

D. To establish manufacturing units for electric vehicles

6. Which country recently hosted the 45th Scientific Assembly of the Committee on Space Research (COSPAR) for the first time?

A. Nepal

B. South Korea

C. Bhutan

D. Maldives

7. Recently, External Affairs Minister S Jaishankar inaugurated India’s first overseas Jan Aushadi Kendra in which country?

A. Vietnam

B. Indonesia

C. Mauritius

D. Malaysia

8. Which Indian player won bronze medal at World Junior Squash Championship 2024?

A. Shaurya Bawa

B. Mohamad Zakaria

C. Kush Kumar

D. Anahat Singh

9. ‘Operation Nanhe Farishtey’ is related to which organization?

A. DRDO

B. Railway Protection Force

C. ISRO

D. Ministry of women and child development

10. What is the primary objective of ASMITA Project, recently launched by Ministry of Education and UGC?

A. To promote and integrate Indian languages more deeply into the education system

B. To replace English with Indian languages in all subjects

C. To promote foreign languages in India

D. To build new universities

11. What is late blight disease, which recently affected the potato crop across the country?

A. Bacterial infection

B. Fungal disease

C. Viral infection

D. Pest infestation

12. Jerdon’s Courser is a nocturnal bird endemic to which region of India?

A. Western Ghats

B. Eastern Ghats

C. North Eastern Region

D. Ladakh

Exit mobile version