Tnpsc Current Affairs in Tamil & English – 19th July 2024

1. NASAஇன் CHAPEA திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?

அ. செவ்வாய்க்கான புதிய ஊர்தி வடிவமைப்புகளைச் சோதிப்பது

. செவ்வாய் கோளின் மேற்பரப்பில் ஆண்டு முழுவதும் தங்குவதை உருவகப்படுத்துவது

இ. புதிய விண்வெளி உடைகளை உருவாக்குவது

ஈ. செவ்வாய் கோளில் சூரியவொளித் தகடுகளின் செயல்திறனைச் சோதிப்பது

2. கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் கர்ச்சி பூஜை கொண்டாடப்படுகிறது?

அ. அஸ்ஸாம்

ஆ. நாகாலாந்து

இ. திரிபுரா

ஈ. சிக்கிம்

3. ஒவ்வோர் ஆண்டும், ‘உலக இளையோர் திறன்கள் நாளாக’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. ஜூலை.15

ஆ. ஜூலை.16

இ. ஆகஸ்ட்.15

ஈ. ஆகஸ்ட்.16

4. கீழ்க்காணும் எந்த அமைச்சகத்தின்கீழ், துடிப்பான கிராமங்கள் திட்டம் செயல்பட்டு வருகிறது?

அ. உள்துறை அமைச்சகம்

ஆ. வெளியுறவு அமைச்சகம்

இ. பாதுகாப்பு அமைச்சகம்

ஈ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

5. மஞ்சீரா வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. இராஜஸ்தான்

. தெலுங்கானா

இ. அஸ்ஸாம்

ஈ. இமாச்சல பிரதேசம்

6. அண்மையில், ஐநா காலநிலை நிதிய வாரியத்தை நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள நாடு எது?

அ. மலேசியா

ஆ. பிலிப்பைன்ஸ்

இ. இந்தோனேசியா

ஈ. இந்தியா

7. அண்மையில், கேப்டன் அபிலாஷ் ராவத் மற்றும் அவரது எண்ணெய்க் கப்பல் மார்லின் லுவாண்டா குழுவினரின், ‘செங்கடல் பணியில் விதிவிலக்கான துணிச்சலுக்காக’ விருது வழங்கிய அமைப்பு எது?

அ. உலக வானிலை அமைப்பு

ஆ. பன்னாட்டு கடல்சார் அமைப்பு

இ. உலக வங்கி

ஈ. UNEP

8. அண்மையில், எந்த நகரத்தில் இந்தியப்பிரதமரால் இந்திய செய்தித்தாள் சங்க கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது?

அ. மும்பை

ஆ. போபால்

இ. சண்டிகர்

ஈ. பாட்னா

9. அண்மையில், இந்தியா, எந்த நாட்டுடன் நான்கு சமூக மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

அ. மார்ஷல் தீவுகள்

ஆ. சாலமன் தீவுகள்

இ. பப்புவா நியூ கினி

ஈ. நியூசிலாந்து

10. 2024 – உலக பாரம்பரிய இளந்தொழில்நுட்பவியலாளர்கள் மன்றத்தை நடத்துகிற அமைச்சகம் எது?

அ. வெளியுறவு அமைச்சகம்

ஆ. உள்துறை அமைச்சகம்

இ. கலாச்சார அமைச்சகம்

ஈ. பாதுகாப்பு அமைச்சகம்

11. அண்மையில், ‘ஓர் அறிவியலாளர்-ஒரு தயாரிப்பு’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள ஆராய்ச்சி நிறுவனம் எது?

அ. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR)

ஆ. இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IISER)

இ. தேசிய உயிரி-மருத்துவ மரபணுத்தொகுதிக்கல்வி நிறுவனம் (NIBMG)

ஈ. பொருளாதார வளர்ச்சி நிறுவனம்

12. அண்மையில், ஒரே நாளில் 11 இலட்சம் மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்த இந்திய நகரம் எது?

அ. கோயம்புத்தூர், தமிழ்நாடு

ஆ. இந்தூர், மத்திய பிரதேசம்

இ. கோழிக்கோடு, கேரளா

ஈ. அமராவதி, ஆந்திர பிரதேசம்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. புதிய மாநகராட்சிகள் உருவாக்கத்துக்கான நிபந்தனைகள் தளர்வு: திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்.

புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய நான்கு நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரமுயர்த்துவதற்கு, ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த மக்கள்தொகை, வருமான அளவுகளை குறைத்து மாநகரா -ட்சிகளாக தரமுயர்த்துவதற்கான நகர்ப்புற உள்ளாட்சி சட்டத்திருத்த மசோதா பேரவையில் தாக்கல்செய்யப்பட்டது. அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி சட்டப்பிரிவில் மக்கள்தொகையாக இருந்த 3 இலட்சம் என்பது 2 இலட்சமாகவும், சம்பந்தப்பட்ட பகுதியின் ஆண்டு வருமானம் `30 கோடியிலிருந்து `20 கோடியாகவும் குறைக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டது.

2. தமிழ்நாடு நாள் விழா.

தமிழ்நாடு நாள் விழா கடந்த ஈராண்டுகளாக சென்னையில் கொண்டாடப்பட்டது. நடப்பாண்டு ‘பேரறிஞர்’ அண்ணா பிறந்த மண்ணில் நடத்த வேண்டும் என முடிவுசெய்யப்பட்டது. சென்னை மாகாணம் என்று இருந்த நமது மாநிலத்தின் பெயரை ‘தமிழ்நாடு’ என்று மாற்றவேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் ‘பேரறிஞர்’ C N அண்ணாதுரையால் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த நாள் 18.7.1967. இந்த நாள் வெளிப்படாமல் உள்ளது என்பதை அறிந்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் ‘தமிழ்நாடு நாள்’ விழாவாகக் கொண்டாட வேண்டும் என தமிழ்வளர்ச்சித்துறைக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தமிழ்வளர்ச்சித்துறையும், செய்தித்துறையும் இணைந்து தமிழ்நாடு நாள் விழாவாக நடப்பாண்டு 3ஆவது ஆண்டாக காஞ்சிபுரத்தில் ‘தமிழ்நாடு நாளைக்’ கொண்டாடின.

1. What is the primary objective of the NASA’s CHAPEA mission?

A. To test new Mars rover designs

B. To simulate year-long stays on the surface of Mars

C. To develop new space suits

D. To test solar panel efficiency on Mars

2. Kharchi Puja is celebrated in which state?

A. Assam

B. Nagaland

C. Tripura

D. Sikkim

3. Which day is observed as ‘World Youth Skills Day’ every year?

A. July.15

B. July.16

C. August.15

D. August.16

4. Vibrant Village Programme comes under which ministry?

A. Ministry of Home Affairs

B. Ministry of External Affairs

C. Ministry of Defence

D. Ministry of Rural Development

5. Manjeera Wildlife Sanctuary is located in which state?

A. Rajasthan

B. Telangana

C. Assam

D. Himachal Pradesh

6. Recently, which country has been chosen to host UN Climate Fund Board?

A. Malaysia

B. Philippines

C. Indonesia

D. India

7. Which organization recently awarded Captain Abhilash Rawat and his crew of oil tanker ‘Marlin Luanda for Exceptional Bravery in Red Sea Mission?

A. World Meteorological Organization

B. International Maritime Organisation

C. World Bank

D. UNEP

8. Recently, Prime Minister of India inaugurated Indian Newspaper Society (INS) Towers in which city?

A. Mumbai

B. Bhopal

C. Chandigarh

D. Patna

9. Recently, India signed an agreement with which country to implement four Community Development Projects?

A. Marshall Islands

B. Solomon Islands

C. Papua New Guinea

D. New Zealand

10. Which ministry is hosting the 2024 World Heritage Young Professionals Forum?

A. Ministry of External Affairs

B. Ministry of Home Affairs

C. Ministry of Culture

D. Ministry of Defence

11. Recently, which research institute has been launched the ‘One-Scientist-One Product’ program?

A. Indian Council of Agricultural Research (ICAR)

B. Indian Institute of Science Education and Research (IISER)

C. National Institute of Biomedical Genomics (NIBMG)

D. Institute of Economic Growth

12. Recently, which Indian city created a world record by planting 11 lakh saplings in a day?

A. Coimbatore, Tamil Nadu

B. Indore, Madhya Pradesh

C. Kozhikode, Kerala

D. Amaravati, Andhra Pradesh

Exit mobile version