Tnpsc Current Affairs in Tamil – 9th December 2023

1. எந்த மாநிலம்/யூனியன் பிரதேசத்திற்கான முதல் நகர்ப்புற வெள்ளத்தணிப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது?

அ. தமிழ்நாடு 🗹

ஆ. ஒடிசா

இ. மேற்கு வங்காளம்

ஈ. ஆந்திர பிரதேசம்

2. Aerial Delivery Research and Development Establishment (ADRDE) என்பது எதன் கீழ் இயங்கும் ஒரு பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வகமாகும்?

அ. ISRO

ஆ. DRDO 🗹

இ. IISc பெங்களூரு

ஈ. IIT மெட்ராஸ்

3. ஆஸ்பிரேஷனல் பிளாக்ஸ் திட்டத்தின் முதல் டெல்டா தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த திரியாணி பிளாக் அமைந்துள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. தெலுங்கானா 🗹

இ. ஒடிசா

ஈ. ஜார்கண்ட்

4. அண்மையில், இந்தியாவால் ஏவப்பட்ட குறுகிய தூரம் செல்லும் ஏவுகணையின் பெயர் என்ன?

அ. அக்னி-1 🗹

ஆ. அஸ்ட்ரா-1

இ. அவனி-1

ஈ. அஜ்வா-1

5. IFCON-2023 என்ற சர்வதேச உணவு மாநாட்டை நடத்தும் நகரம் எது?

அ. சென்னை

ஆ. மைசூரு 🗹

இ. கொல்கத்தா

ஈ. வாரணாசி

6. ஐநா பாதுகாப்பு அவையில் எத்தனை நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன?

அ. 3

ஆ. 5 🗹

இ. 7

ஈ. 10

7. ‘இரப்பர் (ஊக்குவிப்பு மற்றும் மேம்பாடு) மசோதா, 2023’ உடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ. MSME அமைச்சகம்

ஆ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் 🗹

இ. பணியாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

ஈ. எரிசக்தி அமைச்சகம்

8. ‘சாந்திநிகேதன்’ என்பது எந்த மாநிலம்/யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழக நகரமாகும்?

அ. புதுச்சேரி

ஆ. மேற்கு வங்காளம் 🗹

இ. கோவா

ஈ. ஒடிசா

9. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘சுசித்வா தீரம்’ என்ற திட்டம் தொடங்கப்பட்ட மாநிலம் எது?

அ. ஜார்கண்ட்

ஆ. குஜராத்

இ. ஒடிசா

ஈ. கேரளா 🗹

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘Impatiens Karuppusamyi’ என்பது சார்ந்த இனம் எது?

அ. மீன்

ஆ. தாவரம் 🗹

இ. பறவை

ஈ. சிலந்தி

11. ‘QS உலக பல்கலைக்கழகத் தரவரிசை: நிலைத்தன்மை 2024’இன்படி, உலகின் மிகவும் நிலையான பல்கலைக்கழகம் எது?

அ. டொராண்டோ பல்கலைக்கழகம் 🗹

ஆ. IISc பெங்களூரு

இ. ஐஐடி மெட்ராஸ்

ஈ. தில்லி பல்கலைக்கழகம்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சூரியனைப் படம்பிடித்த ஆதித்யா L1 விண்கலம்!

ஆதித்யா L1 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள, ‘சூட்’ என்ற ஆய்வுக்கருவிமூலம் சூரியனின் வெளியடுக்குகளை ஆதித்யா L1 விண்கலம் நிழற்படம் எடுத்துள்ளது. மொத்தம் பதினொரு வடிகட்டிகளை பயன்படுத்தி எடுக்கப்பட்ட 12 நிழற்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ‘சோலார் அலட்ரா வைலட் இமேஜிங் டெலஸ்கோப்’ எனப்படும் ‘சூட்’ கருவி, சூரியனின் முதல் இரு அடுக்குகளான போட்டோஸ்பியர் மற்றும் குரோமோஸ்பியரில் இருந்து வெளிவரும் புற-ஊதா கதிர்கள் குறித்தும், அவற்றின் அருகே ஏற்படும் கதிர்வீச்சு மாறுபாடுகள் குறித்தும் ஆய்வுகளை மேற்கொள்ள அனுப்பப்பட்டுள்ளது.

சூரியனை நிழற்படம் எடுத்த ‘சூட்’ கருவியை புனேவில் உள்ள விண்வெளி ஆய்வு, விண்வெளி இயற்பியலுக்கான மையமானது பிற அமைப்புகளுடன் இணைந்து வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது.

2. செயற்கை நுண்ணறிவு கூட்டாண்மை மாநாடு.

தில்லியில் வரும் 12ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை உலகளாவிய செயற்கை நுண்ணறிவு கூட்டாண்மை மாநாடு நடைபெறவுள்ளது. 2020இல் தொடங்கப்பட்ட உலகளாவிய செயற்கை நுண்ணறிவு கூட்டாண்மை அமைப்பில் 28 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அந்த அமைப்பின் தற்போதைய தலைமைப்பொறுப்பை இந்தியா வகிப்பது குறிப்பிடத்தக்கது.

3. சென்னை பெருவெள்ளம்: திருப்புகழ் அறிக்கை.

சென்னையில் பெரு வெள்ளத்தைத் தடுப்பதற்காக ஓய்வுபெற்ற இஆப அதிகாரி திருப்புகழ் வழங்கிய பரிந்துரைகளால் சென்னையின் சில பகுதிகள் பலனடைந்துள்ளதாக தலைமைச்செயலகம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஏற்பட்டு வரும் பெருவெள்ளத்தைச் சமாளிக்கவும், திறம்பட எதிர்கொள்ளவும், ஓய்வுபெற்ற இஆப அதிகாரி வெ. திருப்புகழ் தலைமையில் ஆலோசனைக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. இந்தக் குழு தனது அறிக்கையை கடந்த ஆண்டு மே மாதம் அரசுக்கு வழங்கியது. மழைநீர் கால்வாய்களைத் தூர்வாரும் பணியானது ஜெர்மனி நாட்டின் வங்கி நிதியுதவியுடன் நடந்து வருகிறது.

Exit mobile version