Tnpsc Current Affairs in Tamil – 8th January 2024

1. சன்சத் இரத்னா விருது பெற்றவர்களுள் ஒருவரான சுகந்தா மஜும்தார் சார்ந்த அரசியல் கட்சி எது?

அ. பாரதிய ஜனதா கட்சி (BJP)

ஆ. சிவசேனை

இ. தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP)

ஈ. இந்திய தேசிய காங்கிரஸ்

2. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற உதந்தி சீதாநதி புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. மத்திய பிரதேசம்

ஆ. கர்நாடகா

இ. மேற்கு வங்காளம்

ஈ. சத்தீஸ்கர்

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற கியாக்ஃபியூ SEZ மற்றும் ஆழ்கடல் துறைமுகம் அமைந்துள்ள நாடு எது?

அ. மலேசியா

ஆ. இந்தோனேசியா

இ. மியான்மர்

ஈ. தாய்லாந்து

4. அண்மையில் நான்காவது முறையாக வங்கதேசத்தின் பிரதமராக பதவியேற்ற ஷேக் ஹசீனா சார்ந்த அரசியல் கட்சி எது?

அ. வங்காளதேச தேசியவாத கட்சி

ஆ. ஜதியா கட்சி

இ. அவாமி லீக்

ஈ. வங்காளதேச ஜமாத்-இ-இஸ்லாமி

5. சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அண்மையில் தொடங்கப்பட்ட இந்திய வனம் மற்றும் மரக்கட்டைகளுக்கானச் சான்றளிப்புத் திட்டத்தின்கீழ் அளிக்கப்படும் சுற்றுச்சூழல் சான்றின் பெயர் என்ன?

அ. விருக்ஷா

ஆ. ஹரித்

இ. பிரமான்

ஈ. வனிகரண்

6. இருநாடுகளுக்கும் இடையே அண்மையில் ஒப்பமான ஒப்பந்தங்களின்படி, நேபாளத்திடம் இருந்து இந்தியா எவ்வளவு அலகு நீர்மின்சாரத்தினை கொள்முதல் செய்யும்?

அ. 5,000 மெகாவாட்

ஆ. 10,000 மெகாவாட்

இ. 15,000 மெகாவாட்

ஈ. 20,000 மெகாவாட்

7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஸ்ம்ருதி மந்திர் மற்றும் தீக்ஷாபூமி அமைந்துள்ள நகரம் எது?

அ. மும்பை

ஆ. புனே

இ. நாக்பூர்

ஈ தில்லி

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற NAMASTE இணையதாளத்துடன் தொடர்புடைய துறை எது?

அ. பாரம்பரிய மருத்துவம்

ஆ. விண்வெளி ஆராய்ச்சி

இ. சுற்றுச்சூழல் பாதுகாப்பு

ஈ. டிஜிட்டல் கல்வி தொழில்நுட்பம்

9. இந்தியாவின் PSLVமூலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ள ஐரோப்பிய விண்வெளி முகமையின் Proba-3 திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?

அ. பூமியின் வளிமண்டலத்தை ஆய்வுசெய்ய

ஆ. தொலைதூர விண்மீன் திரள்களை ஆராய

இ. சூரிய கண்காணிப்புக்காக

ஈ. செவ்வாய் கோளின் மேற்பரப்பை வரைபடமாக்க

10. சமீபத்தில், ‘பாயு’ என்ற செயலி அடிப்படையிலான இ-பைக் டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?

அ. ஜார்கண்ட்

ஆ. அஸ்ஸாம்

இ. மேற்கு வங்காளம்

ஈ. ஒடிஸா

11. நடப்பு 2024ஆம் ஆண்டில், கீழ்காணும் எந்த நகரத்தில் காவல்துறை தலைமை இயக்குநர்கள் / காவல்துறை தலைவர்கள் மாநாடு நடைபெற்றது?

அ. மும்பை

ஆ. ஜெய்ப்பூர்

இ. புது தில்லி

ஈ. கொல்கத்தா

12. அண்மையில் வெளியிடப்பட்ட, “ஹரித் நௌகா – உள்நாட்டுக் கப்பல்களின் பசுமை அடிப்படையிலான உருமாற்றத்திற்கான வழிகாட்டுதல்கள்” முன்னெடுப்பின் முதன்மை நோக்கம் என்ன?

அ. நீர் விளையாட்டுகளை ஊக்குவித்தல்

ஆ. உள்நாட்டுக் கப்பல்களுக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த

நடைமுறைகளை ஏற்றுக்கொள்வது

இ. மீன்பிடி நுட்பங்களை மேம்படுத்துதல்

ஈ. நீர்வழி உட்கட்டமைப்பின் வளர்ச்சி

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 108 ஆம்புலன்ஸ் சேவை: கடந்த ஆண்டில் 19 இலட்சம் பேர் பயன்.

அவசரகால 108 அவசர சிகிச்சை ஊர்தி சேவைமூலமாக கடந்த ஆண்டில் மட்டும் 19 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். தமிழ்நாட்டின் EMRI கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் வாயிலாக மொத்தம் 1353 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

2. கார்கில் ஓடுதளத்தில் முதன்முறையாக இரவில் தரையிறங்கிய விமானம்!

பாகிஸ்தானுடான, ‘எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு’ அருகே, உயரமான மலைப்பகுதியில் அமைந்துள்ள கார்கில் ஓடுதளத்தில் இந்திய வான்படையின் ‘C-130J’ போக்குவரத்து விமானம் முதன்முறையாக இரவில் தரையிறக்கப்பட் -டது. உலகிலேயே உயரமான ஓடுதளமான, ‘தௌலத் பெக் ஓல்டி’ மேம்பட்ட தரையிறங்கும் மைதானம், கடல் மட்டத்திலிருந்து 16,700 அடி உயரத்தில் இருக்கிறது. குளிர்காலங்களில் இங்கு தட்பவெப்பநிலையானது மைனஸ் 40 டிகிரி செல்சியஸாக குறையும். அதேபோல், கடல் மட்டத்திலிருந்து 13,000 அடி உயரத்தில் இருக்கும் நியாமா ஓடுதளமும் இந்தப்பகுதியில் உள்ளது.

3. நீரில் மிதக்கும் சூரிய மின்தகடுகள்! மத்திய பிரதேசத்தில் விரைவில் 278 MW உற்பத்தி.

மத்திய பிரதேச மாநிலம், நர்மதை ஆற்றில் ஓம்கரேஷ்வர் பகுதியில் 278 மெகாவாட் திறன்கொண்ட நீரில் மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையம் வரும் மார்ச் மாதம் உற்பத்தியைத் தொடங்க உள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய சூரிய மின் திட்டம்: ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நீரில் மிதக்கும் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளன; எனினும், மத்திய பிரதேசம் நர்மதை ஆற்றின் நீர்த்தேக்கத்தில் ஓம்கரேஷ்வர் பகுதியில் தண்ணீர்மீது மொத்தம் 600 மெகாவாட் (MW) சூரிய ஒளி மின்னுற்பத்தி செய்யும் உலகிலேயே மிகப்பெரிய நிலையம் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நீரில் மிதக்கும் சூரிய ஒளி மின் ஆற்றலின் சாதக அம்சங்கள் என்ன?: நிலக்கரிமூலம் உற்பத்தியாகும் அனல்மின் உற்பத்தி நிலையங்களில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கார்பன் வெளியேற்றம் பிரச்னையாக நீடித்துவருகிறது; சுமார் 12 இலட்சம் மெட்ரிக் டன் கார்பன் (சுமார் 2 கோடி மரங்கள் கிரகிக்கும் கார்பன் அளவு) வெளியேற்றத்துக்கு வாய்ப்பே இல்லாத தன்மை, இந்த 600 மெகாவாட் மிதக்கும் சூரிய ஒளி மின் திட்டத்தின் சாதக அம்சமாகும். மேலும், தரைப்பரப்பில் சூரிய ஒளி மின்திட்டத்தை அமைத்தால் ஆண்டுக்கு தேவைப்படும் 36,000 கிலோ லிட்டர் தண்ணீர், இந்த மிதக்கும் சூரிய ஒளி மின் திட்டத்துக்கு தேவைப்படாது; சூரிய தகடுகள் மிதப்பதால், நர்மதை அணையின் நீர்த்தேக்கத்திலிருந்து 60 முதல் 70 சதவீதம் வரை நீர் ஆவியாவது தடுக்கப்படுகிறது.

4. தில்லி குடியரசு நாள் அணிவகுப்பில் உத்திரமேரூர் கல்வெட்டு:

தில்லியில் நடைபெறவுள்ள குடியரசு நாள் அணிவகுப்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகளை மாநிலம் வாரியாக மத்திய உள்துறை அமைச்சகம் தேர்வுசெய்யும். இதில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அந்த அலங்கார ஊர்தியில் பிரசித்திபெற்ற உத்திரமேரூர் கல்வெட்டு இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

5. தமிழ்நாட்டில் `6.64 இலட்சம் கோடி முதலீடுகள்: 27 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

“முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” என்ற பெயரில் சென்னையில் இரண்டு நாள்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்மூலம் `6.64 இலட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார். இதன்மூலம் மொத்தமாக 26 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு பணிவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலக்கை விஞ்சிய முதலீடு: உலக முதலீட்டாளர்கள் மாநாடுமூலம் `5.5 இலட்சம் கோடி மதிப்புள்ள முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதைவிட `1.14 இலட்சம் கோடி கூடுதல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்த முதலீடுகள்மூலம் சுமார் 27 இலட்சம் (26.90 இலட்சம்) பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்த (MoU) செயலாக்கக்குழு: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நடைமுறைக்குக் கொண்டுவர தொழிற்துறை அமைச்சர் TRB இராஜா தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்தார்.

எந்தெந்த துறைகளில்?

குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை – `63,573 கோடி

எரிசக்தித்துறை – `1 லட்சத்து 35 ஆயிரத்து 157 கோடி

வீட்டுவசதி – நகர்ப்புற வளர்ச்சித் துறை – `62,939 கோடி

கைத்தறி – ஜவுளித்துறை – `572 கோடி

தகவல் தொழில்நுட்பவியல் துறை – `22,130 கோடி

தொழிற்துறை – `3 லட்சத்து 79 ஆயிரத்து 809 கோடி

மொத்தம்: `6 லட்சத்து 64 ஆயிரத்து 177 கோடி.

6. தீவிரவாத தடுப்புப்பிரிவுக்குக் காவல்துறை கண்காணிப்பாளர்கள் நியமனம்.

புக்யா சினேகா பிரியா இ கா ப சென்னை தீவிரவாத தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் தீவிரவாத தடுப்புப்பிரிவு கண்காணிப்பாளராக சசிமோகன் இ கா ப நியமிக்கப்பட்டுள்ளார்.

7. LGBTQ சமூகத்தினருக்குப் பணிகளில் முன்னுரிமை: தமிழ்நாடு அரசு நிபந்தனை.

கோத்ரெஜ் நிறுவனம் தொடங்கவுள்ள, ‘Light House’ திட்டத்தின் மொத்த பணியாளர்களில் 50 சதவீதம் மகளிர், 5% LGBTQ சமூகம் மற்றும் மாற்றுத்திறனாளிகளாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு நிபந்தனை விதித்துள்ளது. அதனை அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

Exit mobile version