Tnpsc Current Affairs in Tamil – 5th & 6th December 2023

1. அண்மையில், $500000 டாலர்கள் மதிப்புமிக்க WISE பரிசைப் பெற்ற இந்திய ஆர்வலர் சஃபீனா ஹுசைனுடன் தொடர்புடையது எது?

அ. பெண் கல்வி 🗹

ஆ. சுற்றுச்சூழல்

இ. வறுமை

ஈ. பெண்கள் அதிகாரமளித்தல்

2. இந்தியக் கடற்படையின், ‘மிலன்-2024’ என்ற மிகப்பெரிய பலதரப்புப் பயிற்சி நடைபெறும் இடம் எது?

அ. கோவா

ஆ. மும்பை

இ. விசாகப்பட்டினம் 🗹

ஈ. கொச்சின்

3. அதிகமறியப்படாத பழங்குடியின உரிமைக் கட்சியான, ‘பாரத ஆதிவாசி கட்சி’ அண்மையில் எந்த மாநிலத்தில் நடந்த தேர்தலில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது?

அ. சத்தீஸ்கர்

ஆ. மத்திய பிரதேசம் 🗹

இ. மிசோரம்

ஈ. தெலுங்கானா

4. கவாச் தொழில்நுட்பத்துடன் தொடர்புடையது எது?

அ. இரயில்வே 🗹

ஆ. கிரிப்டோகரன்சி

இ. சுரங்கம்

ஈ. ஆட்டோமொபைல்

5. அண்மையில் அறிவிக்கப்பட்ட செயல்திட்ட வரைபடத்தின்படி, நகர எரிவாயு விநியோகத்தில், எந்த ஆண்டளவில் 5% அழுத்தப்பட்ட உயிரிவாயுவை கட்டாயமாக கலப்பது செயல்படுத்தப்படும்?

அ. 2024

ஆ. 2025

இ. 2027

ஈ. 2029 🗹

6. அண்மையில் சர்வதேச கடல்சார் அமைப்புக் குழுமத்திற்கு அதிக எண்ணிக்கையிலான வாக்குடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு எது?

அ. இந்தியா 🗹

ஆ. ரஷ்யா

இ. அமெரிக்கா

ஈ. ஜப்பான்

7. சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் UNDP அறிக்கையின்படி, இந்தியா, ஓசோனை சிதைக்கும் எந்த இரசாயனத்தை படிப்படியாக ஒழித்துள்ளது?

அ. HCFC 141b 🗹

ஆ. CCL3F

இ. ஹாலோன் 1211

ஈ. CFC-112

8. தனது முதல் எக்ஸ்ரே போலரிமீட்டர் செயற்கைக்கோளை (XPoSat) ஏவுவதற்கான திட்டத்தை அறிவித்துள்ள விண்வெளி அமைப்பு எது?

அ. ISRO 🗹

ஆ. NASA

இ. JAXA

ஈ. ESA

9. 5ஆவது உலகளாவிய ஆயுர்வேத விழா நடைபெற்ற நகரம் எது?

அ. சென்னை

ஆ. மதுரா

இ. திருவனந்தபுரம் 🗹

ஈ. வாரணாசி

10. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அதிகாரப்பூர்வ காலாண்டு மற்றும் வருடாந்திர மதிப்பீடுகளை வெளியிடும் நிறுவனம் எது?

அ. NSO 🗹

ஆ. NITI ஆயோக்

இ. NASSCOM

ஈ. DPIIT

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சியாச்சினில் முதல் முறையாக இராணுவ பெண் மருத்துவர்!

சியாச்சின் இராணுவத்தின் மருத்துவப் பிரிவில் மருத்துவராக தேர்வானவர் கேப்டன் கீதிகா கௌல். இவர் உலகின் மிகவுயரமான போர்க்களமான சியாச்சின் பனிமலைப்பகுதியில் பணியாற்றும் முதல் பெண் மருத்துவராவார். இவர் இராணுவத்தின் பனிச்சிறுத்தை படைப்பிரிவில் சேர்ந்து சியாச்சினில் பணியாற்றுவதற்கான பிரத்யேக பயிற்சியை சியாச்சின் போர்க்கள பள்ளியில் பெற்றார்.

2. கென்யாவுக்கு இந்தியா `2,084 கோடி கடனுதவி.

கென்யாவில் வேளாண் துறை நவீனமயமாக்கலுக்காக அந்நாட்டுக்கு இந்தியா சார்பில் `2,084 கோடி கடனுதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

ஐந்து ஒப்பந்தங்கள் கையொப்பம்: இந்தியா-கென்யா இடையே பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி, எண்ம பொது உட்கட்டமைப்பு, சுகாதாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஐந்து ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

3. தெலங்கானா புதிய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி.

தெலங்கானா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஏ. ரேவந்த் ரெட்டியை அக்கட்சி மேலிடம் தேர்வுசெய்தது.

3. ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை.

ஜூனியருக்கான 13ஆவது ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பைப் போட்டி கோலாலம்பூரில் தொடங்கியது. 2001 மற்றும் 2016 ஆகிய சீசன்களில் இந்தியா பட்டம் வென்றுள்ளது. இந்திய ஹாக்கி அணியின் அணித் தலைவர் உத்தம் சிங் ஆவார்.

4. ‘சத்ரபதி’ சிவாஜி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்திய கடற்படை தினத்தையொட்டி (டிசம்பர்.04) மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் மராத்திய அரசர், ‘சத்ரபதி’ சிவாஜியின் உருவச்சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

5. உணவு உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெறக் காரணமான எம். எஸ். சுவாமிநாதனுக்கு மாநிலங்களவையில் புகழாரம்

கடந்த செப்.28ஆம் தேதி மறைந்த M S சுவாமிநாதன் மாநிலங்களவையில் நியமன உறுப்பினராக ஆறு ஆண்டுகள் (2007-2013) பதவி வகித்தார். 1960களில் நாட்டின் விவசாய மறுமலர்ச்சிக்கு உறுதியான அடித்தளத்தை அமைத்து ‘பசுமைப்புரட்சியின் தந்தை’ என போற்றப்பட்டவர் பேராசிரியர் MS சுவாமிநாதன். உணவு உற்பத்தி அதிகரித்து இந்தியாவை தன்னிறைவு பெற்றதாக 1971இல் அறிவிக்கப்பட்டது.

‘உலக உணவுப்பரிசு’ முதன் முறையாக 1987ஆம் ஆண்டு பேராசிரியர் எம். எஸ். சுவாமிநாதனுக்கு வழங்கப்பட்டது. MS சுவாமிநாதனுக்கு 1966இல் பத்மஸ்ரீ, 1971-இல் ரமோன் மகசேசே விருது, 1972இல் பத்ம பூஷண், 1989இல் பத்ம விபூஷண் போன்ற விருதுகள் வழங்கப்பட்டிருந்ததும் மாநிலங்களவையில் குறிப்பிடப்பட்டது.

Exit mobile version