Tnpsc Current Affairs in Tamil – 4th March 2024

1. டிஜிட்டல் பொருளாதார நிதியத்தில் (WEIDE) பெண் ஏற்றுமதியாளர்களை அறிமுகப்படுத்துவதற்காக அண்மையில் கூட்டிணைந்த நிறுவனங்கள் எவை?

அ. பன்னாட்டு செலாவணி நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி

. பன்னாட்டு வர்த்தக மையம் (ITC) மற்றும் உலக வர்த்தக அமைப்பு (WTO)

இ. பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் உலக வங்கி

ஈ. உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் பன்னாட்டு செலாவணி நிதியம் (IMF)

2. பஞ்சேஷ்வர் பல்நோக்கு திட்டம் என்பது எந்த இருநாடுகளுக்கு இடையேயான இருநாட்டு நீர்மின் திட்டமாகும்?

அ. இந்தியா மற்றும் பூட்டான்

ஆ. இந்தியா மற்றும் நேபாளம்

இ. இந்தியா மற்றும் வங்கதேசம்

ஈ. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான்

3. எத்தனை ஆற்றுப்படுகைகளின் மேலாண்மைக்காக, பன்னிரண்டு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுடனான ஓர் ஒப்பந்தத்தில், மத்திய ஜல் சக்தி அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது?

அ. 5

ஆ. 6

இ. 7

ஈ. 8

4. சமீபத்தில், ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் மூன்றாம் சார்லஸிடமிருந்து கௌரவ வீரத்திருமகன் பட்டம் பெற்ற இந்தியர் யார்?

அ. ராஜன் பார்தி மிட்டல்

ஆ. சுனில் பார்தி மிட்டல்

இ. சுஷில் குமார் சாயல்

ஈ. அகில் குப்தா

5. ‘விக்ரமாதித்யா’ என்ற பெயருடைய வேத கடிகாரம் அமைந்துள்ள நகரம் எது?

அ. உஜ்ஜயினி

ஆ. இந்தூர்

இ. பிகானேர்

ஈ. லக்னோ

6. 2024 – உலகளாவிய கழிவு மேலாண்மை கண்ணோட்டத்தை வெளியிடுகிற நிறுவனம் எது?

அ. UNEP

ஆ. UNDP

இ. UNESCO

ஈ. IMF

7. மதிப்புமிக்க, ‘சரியான உணவு வசதிகொண்ட ரெயில் நிலையம்’ என்ற சான்றிதழைப் பெற்றுள்ள ரெயில் நிலையங்கள் எண்ணிக்கை என்ன?

அ. 157

ஆ. 154

இ. 152

ஈ. 150

8. ‘Melanochlamys Droupadi’ என்பது சார்ந்த இனம் எது?

அ. ஆக்டோபஸ்

ஆ. கடலட்டை

இ. நண்டு

ஈ. ஆமை

9. அண்மையில், தேசிய பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. அனுப் குமார் சிங்

ஆ. சுதிர் பிரதாப் சிங்

இ. தல்ஜித் சிங் சவுத்ரி

ஈ. சுபாஷ் ஜோஷி

10. அண்மையில், வளர்ச்சிக்கான முதலீட்டு வசதி உடன்படிக்கையை முறையாக எதிர்த்த நாடுகள்?

அ. இந்தியா மற்றும் சிங்கப்பூர்

ஆ. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா

இ. இந்தியா மற்றும் சீனா

ஈ. இந்தியா மற்றும் ரஷ்யா

11. உலக கடற்புல் நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. 01 மார்ச்

ஆ. 02 மார்ச்

இ. 03 மார்ச்

ஈ. 04 மார்ச்

12. 2024 – பாகுபாடுகள் ஒழிப்பு நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Remove laws that harm, create laws that empower

ஆ. Save lives: Decriminalise

இ. To protect everyone’s health, protect everyone’s rights

ஈ. Open Up, Reach Out

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வாக்குச்சீட்டு முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) வரை: இந்திய தேர்தல் ஆணையத்தின் பரிணாம வளர்ச்சி.

சுதந்திரத்துக்குப் பிறகு, 1951-52ஆம் ஆண்டு காலகட்டத்தில் நாட்டில் முதல் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் தோற்றம்: கடந்த 1950ஆம் ஆண்டு, ஜனவரி.25ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்டது. மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலராகப் பணியாற்றி வந்த ICS அதிகாரியான சுகுமார் சென், இந்தியாவின் முதல் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

இந்திய தேர்தல்களின் பரிணாம வளர்ச்சி: கடந்த 1951-52ஆம் ஆண்டில் 489 இடங்களுக்காக நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில், இரும்பு வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. இந்தியாவில் கடந்த 1998ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில்தான் முதன்முதலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) பயன்படுத்தப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிகள் (1961) கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திருத்தப்பட்டு அறிவிக்கப்பட்ட பின்னர், யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்சிப்படுத்தும் ‘VVPAT’ இயந்திர முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 2014 மக்களவைத் தேர்தல் முதல், யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள் தேர்வு செய்ய ‘NOTANone of the Above’ என்ற வாக்குமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் செயல்முறையை வெளிப்படையானதாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, ‘cVIGIL’ போன்ற பல்வேறு கைப்பேசி செயலிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

எண்ணும் எழுத்தும் திட்டத்தின்கீழ் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான சிறப்புப்பயிற்சி மார்ச்.05) தொடங்குகிறது.

2. நீங்கள் நலமா? திட்டம்.

தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பயன்கள் உரியமுறையில் மக்களைச் சென்றடைகிறதா என்பதை உறுதிசெய்வதற்காக, ‘நீங்கள் நலமா?’ திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், அனைத்து துறைச் செயலாளர்கள் மக்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு கருத்துகளைக் கேட்டறிவார்கள். மாண்புமிகு முதலமைச்சரும் நேரடியாக மக்களை தொடர்புகொண்டு பேசுவார்.

Exit mobile version