Tnpsc Current Affairs in Tamil – 3rd November 2023

1. இந்தியாவானது கீழ்கண்ட எந்த நாட்டிலிருந்து ‘S-400 இரக வான்பாதுகாப்பு ஏவுகணையை வாங்கியுள்ளது?

அ. அமெரிக்கா

ஆ. இஸ்ரேல்

இ. ரஷ்யா 🗹

ஈ. பிரான்ஸ்

2. கலதன் பன்மாதிரி போக்குவரவுத் திட்டமானது கொல்கத்தா துறைமுகத்தை கீழ்காணும் எந்த நாட்டுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது?

அ. தாய்லாந்து

ஆ. மியான்மர் 🗹

இ. வங்காளதேசம்

ஈ. கம்போடியா

3. இந்தியாவில் கூட்டுறவு வங்கிகளை ஒழுங்குபடுத்தும் நிறுவனம் எது?

அ. இந்திய ரிசர்வ் வங்கி 🗹

ஆ. NABARD

இ. கூட்டுறவு அமைச்சகம்

ஈ. NITI ஆயோக்

4. ‘முழு புல புற ஊதா நிறமாலை பரிசோதனை (Integral Field Ultraviolet Spectroscope Experiment – INFUSE)’ உடன் தொடர்புடைய நாடு எது?

அ. அமெரிக்கா 🗹

ஆ. இங்கிலாந்து

இ. சீனா

ஈ. ஜெர்மனி

5. இந்திய இராணுவத்தைக் கருத்தில்கொண்டால், ‘பிரசாந்த்’ என்பது என்ன?

அ. ஆளில்லா விமானங்கள்

ஆ. இலகுரக போர் ஹெலிகாப்டர் 🗹

இ. கப்பல் எதிர்ப்பு ஏவுகணை

ஈ. நீர்மூழ்கிக் கப்பல்

6. அண்மையில் திறக்கப்பட்ட, ‘புதிய பாண்டு-புதிய சனந்த் பிரிவானது’ கீழ்காணும் எந்தச் சரக்குப் போக்குவரத்து வழித்தடத்தின் ஒருபகுதியாகும்?

அ. மத்திய பிரத்யேக சரக்கு வழித்தடம்

ஆ. மேற்கத்திய பிரத்யேக சரக்கு வழித்தடம் 🗹

இ. தெற்கத்திய பிரத்யேக சரக்கு வழித்தடம்

ஈ. கிழக்கத்திய பிரத்யேக சரக்கு வழித்தடம்

7. இந்திய அரசிடமிருந்து 5G ஆய்வகத்தைப் பெற்ற வடகிழக்கு நிறுவனம் எது?

அ. NIT மிசோரம் 🗹

ஆ. வடகிழக்குப் பிராந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்

இ. வடகிழக்கு மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்

ஈ. NIT சிக்கிம்

8. ‘அகர்தலா-அகௌரா எல்லை தாண்டிய ரெயில்வழி இணைப்புத் திட்டமானது’ இந்தியாவை கீழ்க்காணும் எந்த நாட்டோடு இணைக்கிறது?

அ. நேபாளம்

. வங்காளதேசம் 🗹

இ. மியான்மர்

ஈ. தாய்லாந்து

9. ‘இந்தியாவில் சாலை விபத்துக்கள்-2022’ ஆண்டறிக்கையின்படி, சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்புகளை பதிவு செய்துள்ள மாநிலம் எது?

அ. கர்நாடகா

ஆ. மகாராஷ்டிரா

இ. உத்தர பிரதேசம் 🗹

ஈ. கேரளா

10. ‘Block Proving by Axle Counter (BPAC)’ என்பதுடன் தொடர்புடைய நிறுவனம் எது?

அ. இந்திய இராணுவம்

ஆ. இந்திய ரெயில்வே 🗹

இ. இந்திய தேர்தல் ஆணையம்

ஈ. இந்திய வான்படை

11. அண்டார்டிகாவில் தனது ஐந்தாவது ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்குவதற்காக புதிய அறிவியல் பயணக் குழுவை அனுப்பியுள்ள நாடு எது?

அ. இந்தியா

ஆ. அமெரிக்கா

இ. சீனா 🗹

ஈ. ரஷ்யா

12. அலுவல்பூர்வ தரவுகளின்படி, இந்தியாவில் எத்தனை சதவீத கிராமப்புற வீடுகளுக்கு ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் குடிநீர்க் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன?

அ. 60%

ஆ. 70% 🗹

இ. 85%

ஈ. 95%

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. `50,000 கோடி அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்த உணவு பதப்படுத்துதல் துறை.

இந்தியாவின் வளர்ந்து வரும் உணவு பதப்படுத்துதல் துறை கடந்த ஒன்பது ஆண்டுகளில் `50,000 கோடி அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது. மேலும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதியின் வளர்ச்சி 150%ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஒன்பதாண்டுகளில் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 13%இலிருந்து 23 சதவீதமாக அதிகரித்துள்ளது. உணவு பதப்படுத்துதல் துறையின் திறனும் 12 இலட்சம் டன் என்ற அளவிலிருந்து 200 இலட்சம் டன் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.

தில்லியில், ‘உலக உணவு இந்தியா-2023’இன் இரண்டாம் பதிப்பு (3 நாள் மாபெரும் இந்திய வகை உணவுக் கண்காட்சி) நிகழ்வு தொடங்கியது. இந்தியாவை ‘உலகின் உணவுக் கூடை’ என்று எடுத்துக்காட்டும் வகையிலும், 2023ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

2. தபால் வழியாக `2,000 நோட்டுகளை மாற்றலாம்: ரிசர்வ் வங்கி.

தபால் வழியாக `2,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்பி நேரடியாக வங்கிக்கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் கைவசமுள்ள `2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளவும் தங்களது வங்கிக்கணக்கில் பற்று வைத்துக்கொள்ளவும் அக்.7 வரை மத்திய அரசு அவகாசம் அளித்தது. அதன்பின்னர் ரிசர்வ் வங்கியின் 19 கிளை அலுவலகங்களில் `2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளவோ அல்லது தங்களுடைய வங்கி சேமிப்புக்கணக்கில் வரவு வைத்துக்கொள்ளவோ ரிசர்வ் வங்கி அனுமதியளித்தது. இதற்கு எவ்வித கால அவகாசமும் தற்போது வரை விதிக்கப்படவில்லை.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி கிளை அலுவலகங்களில் `2,000 நோட்டுகளை மாற்ற மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு, தபால் வழியாக ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்பி, தொகையை தங்களின் வங்கி சேமிப்புக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என RBI அறிவித்துள்ளது.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

Tnpsc Current Affairs 2024 in Tamil & English Monthly Pdf files Download Quiz Online Test

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Exit mobile version