Tnpsc Current Affairs in Tamil – 28th October 2023

1. ‘குறிப்பு – Reference’ பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தியைத் தொடங்கியுள்ள நிறுவனம் எது?

அ. BPCL

ஆ. HPCL

இ. IOC 🗹

ஈ. REC

2. இந்திய போட்டி ஆணையம் என்பது எந்த மத்திய அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்?

அ. வெளியுறவு அமைச்சகம்

ஆ. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் 🗹

இ. நிதி அமைச்சகம்

ஈ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

3. இந்திய இராணுவத்தின் முதல் செங்குத்து காற்றுப்புழை கட்டப்பட்டுள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. சிக்கிம்

ஆ. பஞ்சாப்

இ. ஹிமாச்சல பிரதேசம் 🗹

ஈ. ஜம்மு காஷ்மீர்

4. பாப்லோ பிக்காசோ என்பவர் கீழ்காணும் எந்த நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கலைஞராவார்?

அ. அமெரிக்கா

ஆ. ஸ்பெயின் 🗹

இ. இத்தாலி

ஈ. ஆஸ்திரேலியா

5. BISஆல் அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட ‘ISI7017 (பாகம் 2/ பிரிவு 7): 2023’உடன் தொடர்புடைய தயாரிப்பு எது?

அ. சூரியவொளித்தகடு

ஆ. மின்சார வாகன மின்னேற்றிகள் 🗹

இ. தூக்கி எறியக்கூடிய நெகிழிகள்

ஈ. நுண்ணுயிர் நீக்கிகள்

6. வங்கிகளில் நிர்வாக இயக்குநருடன் சேர்த்து எத்தனை முழு நேர இயக்குநர்களை நியமிக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது?

அ. ஒன்று 🗹

ஆ. இரண்டு

இ. மூன்று

ஈ. நான்கு

7. இந்தியாவில் ஏற்படும் மொத்த இறப்புகளில் 66 சதவீதம் கீழ்க்காணும் எந்த வகை நோய்களால் ஏற்படுகிறது?

அ. தொற்று நோய்கள்

ஆ. தொற்றா நோய்கள் 🗹

இ. புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள்

ஈ. பரம்பரை நோய்கள்

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஃபிளமிங்கோ திட்டத்துடன் தொடர்புடைய துறை எது?

அ. சுற்றுச்சூழல்

. பிரபஞ்சத்தின் பரிணாமம் 🗹

இ. இணையவெளிப் பாதுகாப்பு

ஈ. கணிதம்

9. ‘நான்ஸி கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கி’யுடன் தொடர்புடைய விண்வெளி அமைப்பு எது?

அ. NASA 🗹

ஆ. ISRO

இ. ESA

ஈ. JAXA

10. 2023ஆம் ஆண்டில் 37ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. கோவா 🗹

ஆ. மகாராஷ்டிரா

இ. கேரளா

ஈ. குஜராத்

11. குறைகடத்திகள் விநியோகச் சங்கிலி கூட்டாண்மையில், இந்தியா, எந்த நாட்டுடன் கூட்டிணைந்துள்ளது?

அ. ஆஸ்திரேலியா

ஆ. ஸ்வீடன்

இ. ஜப்பான் 🗹

ஈ. இஸ்ரேல்

12. சர்வதேச கிரிக்கெட்டில் 10000-க்கும் அதிகமான இரன்களை எடுத்தவர்களில் சராசரி 50ஐக் கொண்டுள்ள கிரிக்கெட் வீரர் யார்?

அ. ரோஹித் சர்மா

ஆ. விராட் கோலி 🗹

இ. கிளென் மேக்ஸ்வெல்

ஈ. டேவிட் வார்னர்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழ்நாட்டில் வாக்காளர்கள் எண்ணிக்கை: தேர்தல்துறை தகவல்.

தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 11 இலட்சத்து 31 ஆயிரத்து 197ஆக உள்ளது. ஆண்களைவிட 9 இலட்சத்து 85 ஆயிரத்து 961 பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர்.

அதிகம்-குறைவு:

மாநிலத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தொகுதியாக சோழிங்கநல்லூர் உள்ளது. குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் உள்ளது.

படிவங்களும், ஆதாரச் சான்றுகளும்…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் போன்ற பணிகளுக்காக படிவங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்தப் படிவங்களைத் தேர்தல் துறையின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அதன் விவரம்:

படிவம் 6: புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான படிவம்.

படிவம் 6A: வெளிநாடுவாழ் வாக்காளர் ஒருவர் பெயரை பட்டியலில் சேர்ப்பதற்கு பயன்படுத்தலாம்.

படிவம் 6B: வாக்காளர் பட்டியல் அங்கீகாரத்துக்காக ஆதார் எண் உண்மையென சான்றளிப்பது.

படிவம் 7: வாக்காளர் பட்டியலில் ஏற்கெனவே உள்ள பெயரை நீக்கக்கோருவதற்கு.

படிவம் 8: வீட்டை ஒரு தொகுதியிலிருந்து வேறுதொகுதிக்கு மாற்றினாலோ அல்லது இப்போது வசிக்கும் தொகுதிக்கு உள்ளேயே மாற்றினாலோ இந்தப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும். வாக்காளர் பட்டியலிலுள்ள பதிவுகளைத் திருத்தம் செய்யவும், மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறவும் படிவத்தை உபயோகிக்கலாம்.

என்னென்ன சான்றுகள் தேவை?

பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன் வசிப்பிட முகவரி, வயது ஆகியவற்றுக்கான சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும். முகவரிச் சான்றாக முக்கிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலை அளிக்கலாம். அதன்படி, முகவரிக்காக குடிநீர், மின்சாரம், எரிவாயு இணைப்பு இரசீதில் ஏதேனும் ஒன்று (குறைந்தது ஓராண்டுக்காவது), ஆதார் அட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கி, அஞ்சல் அலுவலகத்தின் இப்போதைய கணக்குப்புத்தகம், கடவுச்சீட்டு, வருவாய்த்துறைகளின் நில உரிமைப்பதிவுகள், பதிவுசெய்யப்பட்ட வாடகை குத்தகை பத்திரம், பதிவுசெய்யப்பட்ட விற்பனைப் பத்திரம்.

வயதுச்சான்றாக பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 வகுப்புச்சான்றிதழ், இந்திய கடவுச்சீட்டு ஆகியவற்றை அளிக்கலாம். 25 வயதுக்குக் கீழுள்ள மனுதாரர்கள் வயதுச் சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

2. ஜம்முவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை இராணுவம் முறியடித்த ‘வீரதீர தின’ கொண்டாட்டம்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புகளை இந்திய இராணுவத்தின் காலாட்படை முறியடித்ததை நினைவுகூரும் 76ஆவது ‘ஷௌரிய திவாஸ்’ (வீரதீர நாள்) கொண்டாடப்பட்டது. காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் மகாராஜா ஹரிசிங், இந்திய குடியரசு இடையே 1947 அக்.26-இல் கையொப்பமிடப்பட்டது. அதற்கடுத்த நாளான அக்.27இல் ஜம்மு காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் படைகளை வெளியேற்ற புத்காம் விமான நிலையத்தில் இந்திய விமானப்படைமூலம் இந்திய இராணுவம் தரையிறக்கப்பட்டது. இதுவே சுதந்திர இந்தியாவில் இராணுவம் பெற்ற முதல் வெற்றியாகும்.

இந்நாளை ஒவ்வோர் ஆண்டும் காஷ்மீரில் இந்திய இராணுவம் ‘வீரதீர தினமாகக்’ கொண்டாடுகிறது. அதேநாளை இந்திய இராணுவம் ‘காலாட்படை தினமாகவும்’ கொண்டாடி வருகிறது. இந்நாளில் பாகிஸ்தான் பிடியிலிருந்து ஸ்ரீநகர் விமானதளத்தை பாதுகாத்த, மேஜர் சோம்நாத் சர்மாவுக்கு இராணுவத்தின் உயரிய விருதான ‘பரம்வீர் சக்ரா’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Exit mobile version