Tnpsc Current Affairs in Tamil – 28th November 2023

1. உலகின் மிகப்பெரிய ஒற்றை-தள சூரிய மின்னுற்பத்தி ஆலையான, ‘அல் தஃப்ரா’ திட்டத்தைத் தொடங்கிய நாடு எது?

அ. இஸ்ரேல்

ஆ. ஐக்கிய அரபு அமீரகம் 🗹

இ. ஈரான்

ஈ. ஓமன்

2. முதலாவது கேலோ இந்தியா பாரா விளையாட்டுக்கள் – 2023இன் சின்னம் யாது?

அ. விகாஸ்

ஆ. உஜ்வாலா 🗹

இ. உதய்

ஈ. உடான்

3. ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ என்ற திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு 🗹

ஆ. கேரளா

இ. கர்நாடகா

ஈ. ஒடிசா

4. மண்ணீரல் வீக்க நோய் மற்றும் வில்சன் நோய் உள்ளிட்ட 4 அரிய நோய்களுக்கெனப் பொதுவான மருந்தை அறிவித்துள்ள நாடு எது?

அ. இலங்கை

ஆ. வங்காளதேசம்

இ. இந்தியா 🗹

ஈ. நேபாளம்

5. இந்தியாவில் உள்ள தனது தூதரகத்தை நிரந்தரமாக மூடுவதாக அண்மையில் அறிவித்த நாடு எது?

அ. ரஷ்யா

ஆ. ஆப்கானிஸ்தான் 🗹

இ. இஸ்ரேல்

ஈ. உக்ரைன்

6. ‘Malligyong-1’ என்ற உளவு செயற்கைக்கோளை ஏவிய நாடு எது?

அ. உக்ரைன்

ஆ. இஸ்ரேல்

இ. வட கொரியா 🗹

ஈ. மலேசியா

7. எந்த நாட்டில், ‘mpox’ அல்லது குரங்குக்காய்ச்சல் பாலியல் உறவின் மூலமாக பரவுவதை உலக சுகாதார அமைப்பு (WHO) உறுதிப்படுத்தியுள்ளது?

அ. கென்யா

ஆ. ரஷ்யா

இ. காங்கோ 🗹

ஈ. அர்ஜென்டினா

8. எந்த ஆசிய நாடு 6 நாடுகளின் குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவை வழங்குவதாக அறிவித்துள்ளது?

அ. வங்காளதேசம்

ஆ. சீனா 🗹

இ. சிங்கப்பூர்

ஈ. தாய்லாந்து

9. இந்திய நிறுவனமான மெர்லின்ஹாக் இத்தாலியின் வேகா காம்போசிட்ஸ் நிறுவனத்துடன் கீழ்காணும் எந்தப் பாதுகாப்பு வழித்தடத்தில் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு வசதியை அமைக்கும் நோக்கோடு கையெழுத்திட்டது?

அ. தமிழ்நாடு பாதுகாப்பு தொழிற்துறை வழித்தடம் 🗹

ஆ. உத்தரபிரதேச பாதுகாப்பு தொழிற்துறை வழித்தடம்

இ. மகாராஷ்டிரா பாதுகாப்பு தொழிற்துறை வழித்தடம்

ஈ. இராஜஸ்தான் பாதுகாப்பு தொழிற்துறை வழித்தடம்

10. உயிரிவாயு கலவையைப் படிப்படியாக அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ள நாடு எது?

அ. ரஷ்யா

ஆ. இந்தியா 🗹

இ. சீனா

ஈ. இலங்கை

11. தேசிய உலோகவியல் விருதுகளை வழங்குகின்ற அமைச்சகம் எது?

அ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

ஆ. MSME அமைச்சகம்

இ. எஃகு அமைச்சகம் 🗹

ஈ. எரிசக்தி அமைச்சகம்

12. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான உலக தினம் கடைப்பிடிக்கப்படுகிற மாதம் எது?

அ. நவம்பர் 🗹

ஆ. டிசம்பர்

இ. ஜனவரி

ஈ. மார்ச்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 2024 மார்ச்சுக்குள் 31 எம்க்யூ-9பி பிரிடேட்டர் டிரோன்கள் பெற அமெரிக்காவுடன் ஒப்பந்தம்.

அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் 31 எம்க்யூ-9பி பிரிடேட்டர் டிரோன்கள் (ஆளில்லா விமானம்) கொள்முதல் ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் மேற்கொள்ளவேண்டும் என்று இந்தியா திட்டமிட்டுள்ளது. நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிராக போர்புரிதல், கடற்பரப்பில் கண்காணிப்பு உள்பட பல்வேறு பணிகளை எம்க்யூ-9பி பிரிடேட்டர் மேற்கொள்ளும். இந்த டிரோன்களை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்ர் இராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்புத் தளவாட கொள்முதல் கவுன்சில் கடந்த ஜூனில் ஒப்புதல் அளித்தது.

2. மலேசியாவுக்கு டிச.01 முதல் நுழைவு இசைவு இல்லாமல் பயணிக்கலாம்!

டிச.01ஆம் தேதிமுதல் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் மலேசியாவுக்குப் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவிற்குச் செல்லும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக புதிய நடைமுறை அறிமுகம் செய்வதாக மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இந்தியர்களுக்கு விசா இல்லாத நுழைவு அனுமதியை தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் அண்மையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

3. ஐரிஷ் எழுத்தாளர் பால் லிஞ்சுக்கு புக்கர் பரிசு.

உலகப்புகழ்பெற்ற புனைவு இலக்கிய விருதான புக்கர் பரிசை ஐரிஷ் எழுத்தாளர் பால் லிஞ்ச் பெற்றார். பால் லிஞ்ச் எழுதிய ப்ராபெட் ஸாங் (Prophet Song – தீர்க்கதரிசியின் பாடல்) என்ற நாவலுக்காக இந்த விருது வழங்கப்பட்டது. புக்கர் விருதுடன் பரிசுத்தொகையாக £50,000 பவுண்டும் (இந்திய மதிப்பில் சுமார் `52 இலட்சம்) பால் லிஞ்சுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு புக்கர் பரிசுபெற்ற ஷேகன் கருணதிலகவிடமிருந்து கோப்பையை பால் லிஞ்ச் பெற்றுக்கொண்டார்.

4. பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய காலணி தொழிற்சாலை.

பெரம்பலூர் மாவட்டத்தின் எறையூர் SIPCOT தொழில் வளாகத்தில் அமைந்துள்ள பீனிக்ஸ் கோத்தாரி காலணிப் பூங்காவில் `400 கோடி முதலீட்டில் நிறுவப்பட்டுள்ள JR One காலணி உற்பத்தித் தொழிற்சாலையை காணொலிக் காட்சி வாயிலாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை, 2022 ஆனது அண்மையில் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டிருந்தது. இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில், `400 கோடி மதிப்பீட்டுச்செலவில் 250 ஏக்கர் பரப்பளவில் காலணி உற்பத்திப் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Exit mobile version