Tnpsc Current Affairs in Tamil – 28th & 29th January 2024

1. பண்டைய காலத்தில் சமற்கிருதத்தை எழுதப் பயன்படுத்தப்பட்ட கிரந்த எழுத்துகள் சார்ந்த மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. கர்நாடகா

2. தேசிய வாக்காளர் நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. 24 ஜனவரி

ஆ. 25 ஜனவரி

இ. 26 ஜனவரி

ஈ. 15 ஜனவரி

3. ‘நோய் X’ உடன் தொடர்புடையது?

அ. எதிர்கால தொற்றுநோய்க்குக் காரணமாக அமையவுள்ள நோய்க்கிருமி

ஆ. பூஞ்சை நோய்

இ. தாவர நோய்

ஈ. மரபணு நோய்

4. இந்தியக்கடற்படையால் நிறுவப்பட்ட VLF (மிகத்தாழ் அலைவெண்) தகவல் தொடர்பு நிலையத்தின் முதன்மை நோக்கம் என்ன?

அ. அரபிக்கடலில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல்

ஆ. கடற்படை நடவடிக்கைகளுக்கான தகவல் தொடர்பு திறன்களை வலுப்படுத்துதல்

இ. வங்காள விரிகுடாவில் நில அதிர்வு நடவடிக்கைகளை கண்காணித்தல்

ஈ. இந்தியக் கடற்கரையிலிருந்து விண்வெளி ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளல்

5. 2024 – WTT ஃபீடர் கார்பஸ் கிறிஸ்டியில், முதன்முறையாக உலகளாவிய டேபிள் டென்னிஸ் பட்டத்தை வென்ற வீரர் / வீராங்கனை யார்?

அ. ஸ்ரீஜா அகுலா

ஆ. லில்லி ஜாங்

இ. மனிகா பத்ரா

ஈ. தியா சித்தலே

6. ’ஒரே பாரதம் ஒப்பிலா பாரதம்’ என்ற திட்டத்தின்கீழ், ‘யுவ சங்கம்’ நிகழ்ச்சியின் 3ஆம் கட்டத்தை நடத்திய ஐஐடி எது?

அ. ஐஐடி கௌகாத்தி

ஆ. ஐஐடி கான்பூர்

இ. ஐஐடி பம்பாய்

ஈ. ஐஐடி காரக்பூர்

7. உத்தர பிரதேச மாநிலத்தின் எந்த நகரத்தில், அகில இந்திய பேச்சு & கேட்டல் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது?

அ. கான்பூர்

ஆ. லக்னோ

இ. பிரயாக்ராஜ்

ஈ. வாரணாசி

8. LSAM-19ஐ (யார்டு 129) ஏவிய ஆயுதப்படை எது?

அ. இந்திய இராணுவம்

ஆ. இந்திய வான்படை

இ. இந்தியக் கடற்படை

ஈ. இந்தியக் கடலோரக் காவற்படை

9. ‘அல்வா வைபவத்துடன்’ தொடர்புடையது?

அ. பட்ஜெட்

ஆ. பொருளியல் ஆய்வு

இ. குடியரசு நாள்

ஈ. கட்டுடல் இந்தியா திட்டம்

10. கௌசல் பவனுடன் தொடர்புடைய அமைச்சகம் எது?

அ. ஜவுளி அமைச்சகம்

ஆ. திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம்

இ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

ஈ. வேளாண் அமைச்சகம்

11. தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பு நல்குவதற்காக கீழ்க்காணும் எந்த நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?

அ. ஓமன்

ஆ எகிப்து

இ. சிங்கப்பூர்

ஈ. தான்சானியா

12. இந்திய தண்டனைச்சட்டத்தின் (IPC) பிரிவு 420 உடன் தொடர்புடையது எது?

அ. தாக்குதல் மற்றும் கொலை

ஆ. தனியார் துறையில் ஊழல்

இ. பொதுத்துறையில் ஊழல்

ஈ. ஒருவரை ஏமாற்றுதல் மற்றும் அவரை நேர்மையற்ற செயலுக்குத் தூண்டுதல்

13. தொழுநோய் என்பது பின்வருவனவற்றில் எதனால் ஏற்படும் ஒரு தொற்றுநோயாகும்?

அ. பாக்டீரியா

ஆ. வைரஸ்

இ. பூஞ்சை

ஈ. புரோட்டோசோவா

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சாம்பியன் சபலென்கா போபண்ணா-எப்டெனுக்கு இரட்டையர் பட்டம்.

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸின் அர்யனா சபலென்கா சாம்பியன் பட்டம் பெற்றார். ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – ஆஸி. மேத்யூ எப்டென் பட்டத்தை கைப்பற்றினர்.

2. சென்னையில் 12ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு: அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறுகிறது.

12ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 2025ஆம் ஆண்டு மே மாதம் சென்னையில் நடைபெறும் என உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 11ஆவது மாநாடு மலேசியாவில் நடைபெற்றது. “உலக மொழிகளில் தமிழின் ஆளுமையும் தாக்கமும்” என்னும் தலைப்பில் 12ஆவது மாநாடு நடைபெறவுள்ளது.

3. காஞ்சிபுரத்தில் நாட்டிலேயே மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம்.

நாட்டிலேயே மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தை காஞ்சிபுரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணாவின் பெயரால் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியால் கடந்த 1969ஆம் ஆண்டில் அரசு புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவமனை தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே மும்பையில் TATA புற்றுநோய் ஆராய்ச்சி மையம் மிகப்பெரிய ஆராய்ச்சி மையமாக செயல்பட்டு வருகிறது.

4. UPIமூலம் பயணச்சீட்டு பெறும் வசதி: மாநகரப்பேருந்துகளில் சோதனை முறையில் அமல்.

UPI முறையை பயன்படுத்தி சென்னை மாநகரப்பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய கையடக்க கருவிகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. முதற்கட்டமாக சென்னை மாநகரப்போக்குவரத்துக் கழகத்தின் பல்லவபுரம் (பல்லாவரம்) பேருந்து பணிமனையின்கீழ் இயங்கும் பேருந்துகளின் நடத்துநர்களுக்கு UPI மற்றும் அட்டைகள்மூலம் பணம் செலுத்தி பயணச்சீட்டு வழங்கும் வகையிலான புதிய கையடக்கக்கருவிகளை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வழங்கியுள்ளது.

5. சொற்குவையில் 15 இலட்சம் சொற்கள் பதிவேற்றம்: அகரமுதலித் திட்ட இயக்ககம் தகவல்.

தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் உருவாக்கிய, ‘சொற்குவை’ தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட கலைச்சொற்களின் எண்ணிக்கை தற்போது 15 இலட்சம் என்ற இலக்கை எட்டியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு, ‘சொற்குவை’க்கென்று தனியாக வலைதளம் தொடங்கப்பெற்றது.

6. சாமானியர்களுக்கு கெளரவம்! பத்ம விருதுகள்.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 70 வயதான பார்வதி பரூவா எனும் பெண்மணி, கௌரிபூர் ராஜாக்கள் வம்சத்தைச் சேர்ந்தவர். செல்வாக்கான குடும்பப் பின்னணியைக் கொண்டிருந்தாலும் யானைகளின் பராமரிப்புக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். ‘யானைகளின் இராணி’ எனப்படும் இவர்தான் யானை பராமரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முதல் பெண். யானைகள் – மனிதர்களின் மோதலுக்கு தீர்வுகண்டவர். இவரது அறிவியல்பூர்வமான உத்திகள், தொல்லைதரும் காட்டு யானைகளைப் பிடிப்பதற்கு அரசுக்கு உதவுகின்றன.

வேலூரைச் சொந்த ஊராகக்கொண்ட டாக்டர் பிரேமா தன்ராஜ். 72 வயதாகும் இவர் சிறுவயதில் தீவிபத்தில் ஐம்பது சதவீத தீக்காயம் அடைந்தவர். அதன்பிறகு நன்றாகப் படித்து நாட்டின் சிறந்த பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நிபுணர் -களுள் ஒருவராக உயர்ந்தவர். தற்போது பெங்களூரில் வசித்துவரும் இவர், தீவிபத்தில் காயமடைந்தவர்களின் மறுவாழ்வுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்.

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம் தாசம்பாளையத்தைச் சேர்ந்தவர் பத்ரப்பன். 87 வயதாகும் இவர், ‘வள்ளி கும்மி’ எனப்படும் கலையின் ஆசிரியர். ஆடவர் மட்டுமே பங்கேற்று வந்த வள்ளி கும்மி ஆட்டத்தில், பெண்களுக்கும் பயிற்சியளித்தவர் பத்ரப்பன்.

கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்யநாராயணன் பெலேரி. நெல் விவசாயியான இவர் 650 பாரம்பரிய நெல் இரகங்களைத் தனது பண்ணையில் பாதுகாத்து வருகிறார். மேற்கூறிய அனைவரும் 2024ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள்.

Exit mobile version