Tnpsc Current Affairs in Tamil – 26th October 2023

1. இந்தியாவின் முதல் பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பின் பெயர் என்ன?

அ. சாதாரண் பாரத்

ஆ. நமோ பாரத் 🗹

இ. அந்தியோதய பாரத்

ஈ. கங்கை பாரத்

2. 2023-24 நிதியாண்டில் ஏப்ரல்-செப்டம்பர் காலகட்டத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளராக இருந்த நாடு எது?

அ. சீனா

ஆ. இஸ்ரேல்

இ. அமெரிக்கா 🗹

ஈ. ஐக்கிய அரபு அமீரகம்

3. “ஹரிமௌ சக்தி – 2023” என்ற பயிற்சியானது கீழ்காணும் எவ்விருநாடுகளுக்கு இடையே நடைபெற்றது?

அ. இந்தியா மற்றும் மலேசியா 🗹

ஆ. இந்தியா மற்றும் இலங்கை

இ. இந்தியா மற்றும் மியான்மர்

ஈ. இந்தியா மற்றும் பிரான்ஸ்

4. பாரத் தேசிய இணையவழி பாதுகாப்புப் பயிற்சி – 2023ஐ நடத்திய நிறுவனம் எது?

அ. NASSCOM

ஆ. தேசிய பாதுகாப்புக் குழுமச் செயலகம் 🗹

இ. NITI ஆயோக்

ஈ. தேசிய தகவலியல் மையம்

5. 2023இல் எதிர்கால முதலீட்டு முன்முயற்சியின் 7ஆவது பதிப்பை நடத்திய நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. ஐக்கிய இராஜ்ஜியம்

இ. சவூதி அரேபியா 🗹

ஈ. இந்தியா

6. இந்திய நாட்டின் அந்நிய செலாவணி நிர்வாகத்துடன் தொடர்புடைய நிறுவனம் எது?

அ. SEBI

ஆ. இந்திய ரிசர்வ் வங்கி 🗹

இ. நிதி அமைச்சகம்

ஈ. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்

7. ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிவேகமாக 2000 இரன்களை எட்டிய இந்திய கிரிக்கெட் வீரர் யார்?

அ. K L இராகுல்

ஆ. சுப்மன் கில் 🗹

இ. இரவீந்திர ஜடேஜா

ஈ. ருதுராஜ் கெய்க்வாட்

8. உலகக்கோப்பை வரலாற்றில் இரண்டு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?

அ. ஜஸ்பிரித் பும்ரா

. முகமது ஷமி 🗹

இ. R அஸ்வின்

ஈ. ஹர்திக் பாண்டியா

9. NCEL என்பது கீழ்காணும் எந்த மத்திய அமைச்சகத்தின்கீழ் புதிதாக நிறுவப்பட்ட ஓர் ஏற்றுமதி அமைப்பாகும்?

அ. வணிக அமைச்சகம்

ஆ. MSME அமைச்சகம்

இ. கூட்டுறவு அமைச்சகம் 🗹

ஈ. நிதி அமைச்சகம்

10. Chroococcidiopsis cubana’ பாக்டீரியாவின் சிறப்புப் பண்பு யாது?

அ. மாசுகளை சுத்தம் செய்வது

ஆ. உயிர்வளியை (O2) உற்பத்தி செய்வது 🗹

இ. மரத்தின் வளர்ச்சியை அதிகரிப்பது

ஈ. சூரியவொளித் தகடுகளில் பயன்படுத்தப்படுவது

11. ஓர் அண்மைய ஆய்வின்படி, எந்த வான்பொருளின் வயது குறைந்தது 4.46 பில்லியன் ஆண்டுகள் இருக்கும் என மறுகணக்கீடு செய்யப்பட்டுள்ளது?

அ. ஞாயிறு

ஆ. திங்கள் 🗹

இ. புவி

ஈ. செவ்வாய்

12. அரபிக்கடலில் உருவான ‘தேஜ்’ சூறாவளிக்கு பெயரிட்ட நாடு எது?

அ. பாகிஸ்தான்

ஆ. இந்தியா 🗹

இ. நேபாளம்

ஈ. வங்காளதேசம்

13. இராம்பூர் வேட்டைநாய், ஹிமாச்சல மேய்ப்பன் நாய், காடி நாய், பாக்கர்வால் மற்றும் திபெத்திய மஸ்தீப் மலை நாய் ஆகியவை கீழ்க்காணும் எந்த விலங்கினத்தின் வகைகளாகும்?

அ. ஆடு

ஆ. நாய் 🗹

இ. குதிரை

ஈ. கால்நடை

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஆரோக்கிய நடைப்பயணம் திட்டம்: நவ.4இல் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் ‘Health Walk’ எனப்படும் ஆரோக்கிய நடைப்பயணத் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் நவ.4ஆம் தேதி தொடங்கிவைக்கவுள்ளார். தமிழ்நாட்டில் ‘மக்களைத்தேடி மருத்துவம்’, ‘இன்னுயிர் காப்போம்’, ‘நம்மை காக்கும் 48’, ‘இதயம் காப்போம்’, ‘சிறுநீரக பாதுகாப்புத் திட்டம்’, ‘கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்’ உள்ளிட்டவை சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

2. CBSE பாடநூல்களில் ‘இந்தியா’வுக்குப் பதில் ‘பாரத்’: NCERT குழு பரிந்துரை.

CBSE (மத்திய இடைநிலைக்கல்வி வாரியம்) உள்ளிட்ட கல்வி வாரியங்கள் பின்பற்றி வரும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (NCERT) பாடநூல்களில் இந்தியாவின் பெயர் ‘பாரத்’ என மாற்றம் செய்யப்படவுள்ளது. இதற்கான பரிந்துரையை NCERT சார்பில் அமைக்கப்பட்ட சமூக அறிவியல் பாடத்துக்கான உயர்நிலைக்குழு அளித்துள்ளது.

3. அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு.

தற்போது 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை ஜூலை.1-ஆம் தேதி முதல் 46 சதவீதமாக உயர்த்தி, அதாவது 4 சதவீதமாக அதிகரித்து வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் 16 இலட்சம் பேர் பயனடைவர்.

4. சுதந்திர பாலஸ்தீனத்துக்கு எப்போதும் ஆதரவு: ஐ.நா. கூட்டத்தில் இந்தியா.

இறையாண்மைகொண்ட சுதந்திரமான பாலஸ்தீனத்துக்கு எப்போதும் ஆதரவளிப்பதாக ஐநா பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தெரிவித்தது. நியூயார்க் நகரத்தில் ஐநா பாதுகாப்பு அவையின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐநா-வுக்கான இந்திய துணைதூதர் இரவீந்திரா பங்கேற்றார்.

5. இந்தியா உள்பட 6 நாடுகளுக்கு கட்டணமிலா விசா: இலங்கை அமைச்சரவை ஒப்புதல்.

இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணியர்க்கு கட்டணமிலா சுற்றுலா விசா வழங்க இலங்கை அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது. முன்னோட்ட நடைமுறையில் இந்தத் திட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச்.31ஆம் தேதி வரை இந்த முன்னோட்டத்திட்டம் நடைமுறையில் இருக்கும். இலங்கைக்குச் சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

6. ஆசிய துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மூன்று பதக்கம்.

தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்கள் கிடைத்தன. இதில், ஸ்கீட் ஆடவர் அணிகள் பிரிவில் அனந்த்ஜீத் சிங் நருகா, குர்ஜோத் காங்குரா, அங்கத்வீர் சிங் பாஜ்வா ஆகியோர் கூட்டணி, இறுதிச்சுற்றில் 358 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. தென் கொரியா, கஜகஸ்தான் அணிகள் முறையே வெள்ளி, வெண்கலம் பெற்றன.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Exit mobile version