Tnpsc Current Affairs in Tamil – 22nd November 2023

1. ‘உலகளாவிய மீன்வள மாநாடு இந்தியா – 2023’ நடத்தப்படுகிற மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. குஜராத் 🗹

இ. மகாராஷ்டிரா

ஈ. ஆந்திரப்பிரதேசம்

2. ‘LUPEx’ என்பது இந்திய விண்வெளி ஆய்வுமையத்துக்கும் (ISRO) கீழ்காணும் எந்த முகமைக்கும் இடையேயான கூட்டு முயற்சியாகும்?

அ. NASA

ஆ. ESA

இ. JAXA 🗹

ஈ. CNA

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற தில்லோ திருவிழா கொண்டாடப்படுகிற மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. ஒடிசா

ஆ. கோவா 🗹

இ. தெலுங்கானா

ஈ. சிக்கிம்

4. சமீப செய்திகளில் இடம்பெற்ற சரத்து 163 மற்றும் சரத்து 200 ஆகியவற்றுடன் தொடர்புடைய அரசியலமைப்பு ரீதியான பொறுப்பு எது?

அ. ஆளுநர் 🗹

ஆ. குடியரசுத்தலைவர்

இ. குடியரசுத்துணைத்தலைவர்

ஈ. தேர்தல் ஆணையர்

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘கங்காரு பராமரிப்பு’ என்பதுடன் தொடர்புடைய துறை எது?

அ. பாதுகாப்பு

ஆ. குழந்தை பராமரிப்பு 🗹

இ. அரசியல்

ஈ. விலங்கு நலம்

6. 2022ஆம் ஆண்டுக்கான ‘இந்திரா காந்தி அமைதிப் பரிசு’ பெற்றவர்கள் யார்?

அ. IMA மற்றும் பயிற்சிபெற்ற செவிலியர்கள் சங்கம் 🗹

ஆ. AIIMS மற்றும் IMA

இ. மருத்துவர் M ஸ்ரீனிவாஸ்

ஈ. மருத்துவர் V சாந்தா

7. எந்த மாநிலம் தனது பாம்புகள் பற்றிய பிரத்யேக நூலை வெளியிட்டுள்ளது?

அ. ஹிமாச்சல பிரதேசம் 🗹

ஆ. மத்திய பிரதேசம்

இ. அஸ்ஸாம்

ஈ. கேரளா

8. 11ஆவது சர்வதேச சுற்றுலா அங்காடியை நடத்துகிற மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. அஸ்ஸாம்

இ. மேற்கு வங்காளம்

ஈ. மேகாலயா 🗹

9. IFFI விழாவில், ‘பாரதிய சினிமாவின் பங்களிப்புக்கான சிறப்பு அங்கீகாரம்’ பெற்ற நடிகர் / நடிகை யார்?

அ. மாதுரி தீட்சித் 🗹

ஆ. கமல்ஹாசன்

இ. ரேகா

ஈ. ரஜினிகாந்த்

10. 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, கீழ்காணும் எந்த நாடு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை பட்டத்தை அதிக முறை வென்றுள்ளது?

அ. மேற்கிந்திய தீவுகள்

ஆ. ஆஸ்திரேலியா 🗹

இ. இந்தியா

ஈ. இங்கிலாந்து

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ATP இறுதிப்போட்டியில் 7ஆவது பட்டம்: பெடரர் சாதனையை முறியடித்தார் ஜோகோவிச்.

இத்தாலியில் நடைபெற்ற ATP பைனல்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில், நடப்பு சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 7ஆவது முறையாக சாம்பியன் பட்டம்வென்று சாதனைபடைத்தார். முன்னதாக இப்போட்டியில், சுவிட்ஸர்லாந்து டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் ஆறு முறை கோப்பையை கைப்பற்றியதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது ஜோகோவிச் அதை முறியடித்திருக்கிறார்.

2. 3 டிகிரியை நோக்கி உலக வெப்பமேற்றம்.

புவியின் வெப்பம் தொழிற்புரட்சிக்கு முந்தைய வெப்பத்தைவிட 2.9° செல்சியஸ் (5.2° பாரன்ஹீட்) அதிகரிக்கும் அபாயம் நிலவுவதாக ஐநா எச்சரித்துள்ளது. பருவநிலை மாற்றம் குறித்த ஐநாவின் மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த வாரம் தொடங்குகிறது.

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பிரான்ஸ் தலைநகரம் பாரீஸில் கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த வருடாந்திர ஐநா மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் தொழில்புரட்சிக்கு முன்பிருந்ததைவிட 1.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் உலகின் வெப்பநிலை உயராமல் கட்டுப்படுத்தவும், அதற்காக காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவை படிப்படியாகக் குறைக்கவும் இந்தியா உள்ளிட்ட 195 நாடுகள் ஒப்புக்கொண்டன. இருந்தாலும், அதற்கான நடவடிக்கைகள் மிகவும் மெத்தனமாக மேற்கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த நிலையில், புவியின் வெப்பமேற்றம் குறைக்கப்படுவதற்குப் பதிலாக, கரிமில வாயு வெளியேற்றம் அதிகரிப்பதால் மேலும் உயர்ந்து வருவதாகவும், 2030க்குள் அது 2.9 செல்சிஷயைத் தொடும் ஆபத்து உள்ளதாகவும் ஐநா தற்போது எச்சரித்துள்ளது.

3. மக்கள்தொகை கட்டுப்பாட்டில் தமிழ்நாடு முதலிடம்.

இந்தியாவிலேயே மக்கள்தொகையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

குடும்பநலத்துறை சார்பாக மாநில அளவில் மிகச்சிறப்பாக செயல்படும் மருத்துவர்களுக்கு சிறந்த விருது வழங்கும் திட்டம் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சராசரி கருவள விகிதம் (ஒரு பெண்ணுக்கு கரு உருவாகும் விகிதம்) என்பது 2.1 சதவீதமாக இருந்தது. தற்போது அது 1.4 என்கிற அளவில் கட்டுக்குள் இருக்கிறது. அதன்படி, இந்தியாவிலேயே மக்கள்தொகை கட்டுக்குள் இருக்கும் மாநிலத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

4. உணவுப் பதப்படுத்தும் திட்டம்: தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விருது.

பிரதமரின் உணவுப்பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தில் சிறந்த முறையில் செயல்பட்டு வருவதற்காக தமிழ்நாட்டுக்கு மத்திய அரசின் விருது கிடைத்துள்ளது. இதனை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.

5. ஆர்ஜென்டீனா அதிபராகிறார் ஜேவியர் மிலேய்.

ஆர்ஜென்டீனாவின் புதிய அதிபராக வலதுசாரி சிந்தனையாளரும், பொருளாதார நிபுணருமான ஜேவியர் மிலேய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Exit mobile version