Tnpsc Current Affairs in Tamil – 21st & 22nd October 2023

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘APAR’ கணக்குப் பதிவுடன் தொடர்புடையது எது?

அ. மூலதன சந்தை

ஆ. ஆட்டோமொபைல்

இ. கிரிப்டோகரன்சி

ஈ. கல்வி 🗹

2. ‘High Cost of Cheap Water’ என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. WWF 🗹

ஆ. UNEP

இ. NITI ஆயோக்

ஈ. WAPCOS

3. அண்மையில் வெளியிடப்பட்ட, ‘அமிர்த காலப் பார்வை – 2047’ உடன் தொடர்புடைய துறை எது?

அ. நிலக்கரி தொழில்

ஆ. கடல்சார் தொழில் 🗹

இ. மின்னணுப் பொருட்கள் உற்பத்தி

ஈ. செயற்கை நுண்ணறிவு

4. 2023 – ஆயுர்வேத நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Ayurveda for One Health 🗹

ஆ. Integrated Medicine

இ. Vasudaiva Kutumbakam

ஈ. Ayurveda Amrit Kaal

5. 2023இல், ‘மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை முறைமையை (ATMS)’ அறிமுகப்படுத்திய அமைப்பு எது?

அ. NHAI 🗹

ஆ. NASSCOM

இ. AAI

ஈ. இந்திய ரெயில்வே

6. சர்வதேச வறுமை ஒழிப்பு நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. அக்டோபர் 10

ஆ. அக்டோபர் 15

இ. அக்டோபர் 17 🗹

ஈ. அக்டோபர் 19

7. ‘அப்னா சந்திரயான்’ வலைத்தளத்தைத் தொடங்கிய மத்திய அமைச்சகம் எது?

அ. பாதுகாப்பு அமைச்சகம்

ஆ. கல்வி அமைச்சகம் 🗹

இ. வெளியுறவு அமைச்சகம்

ஈ. இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

8. WorldSkills திட்டத்திற்கு முன்னோடியாக திறன் மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட திட்டத்தின் பெயர் என்ன?

அ. இந்திய திறன்கள் 2023-24 🗹

ஆ. பாரத் உதயம் 2023-24

இ. திறன் மேம்பாடு 2023-24

ஈ. திறன் உயர்வு 2023-24

9. கதி பிகு விழா கொண்டாடப்படுகிற மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. அருணாச்சல பிரதேசம்

ஆ. அஸ்ஸாம் 🗹

இ. கேரளா

ஈ. கோவா

10. 13 கிகாவாட் (GW) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்கான பசுமை எரிசக்தி வழித்தடமானது கீழ்காணும் எந்த மாநிலம்/யூனியன் பிரதேசத்திற்கென ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது?

அ. தமிழ்நாடு

ஆ. லடாக் 🗹

இ. குஜராத்

ஈ. பாண்டிச்சேரி

11. 2023இல் 53ஆவது தாதா சாகேப் பால்கே விருது பெற்ற இந்திய திரைக்கலைஞர் யார்?

அ. கமல்ஹாசன்

ஆ. மோகன் லால்

இ. வஹீதா ரஹ்மான் 🗹

ஈ. மனோரமா

12. அண்மையில் நிணநீர் யானைக்கால் நோயை ஒழித்ததாக WHOஆல் அறிவிக்கப்பட்ட நாடு எது?

அ. இந்தியா

ஆ. நேபாளம்

இ. லாவோஸ் 🗹

ஈ. இந்தோனேசியா

13. நீரிழிவு நோயாளிகளுக்கு இலவசமாக இன்சுலின் சிகிச்சையளிக்கும், ‘மிட்டாயி’ என்ற திட்டத்தைத் தொடங்கிய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா 🗹

இ. தெலுங்கானா

ஈ. ஒடிசா

14. ‘உலக உணவு இந்தியா-2023’ என்ற நிகழ்வை இந்தியாவுடன் இணைந்து நடத்தும் நாடு எது?

அ. இலங்கை

ஆ. பிரான்ஸ்

இ. நெதர்லாந்து 🗹

ஈ. ஆஸ்திரியா

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஆதித்யா-L1 விண்கலம் ஜனவரி முதல் செயல்படத் தொடங்கும்.

ஆதித்யா-L1 விண்கலம் ஜன. முதல் வாரத்தில் செயல்படத்தொடங்கும் என அதன் திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி தெரிவித்தார். ஆதித்யா-L1 விண்கலம் 12,00,000 கி.மீட்டரைத் தாண்டி வெற்றிகரமாகச் சென்று கொண்டிருக்கிறது. ஜனவரி முதல் வாரத்தில் இந்த விண்கலம் சூரியனின் சுற்றுவட்டப் பாதைக்குச் சென்று, வெற்றிகரமாக செயல்படத் தொடங்கும். சூரியனில் நிலவும் காற்று, இரும்புத்துகள்கள் வெளியேறல், வெப்பம் வெளியேற்றுதல் போன்றவற்றை ஆதித்யா-L1 விண்கலம் தொடர்ச்சியாக ஆராயும்.

2. இந்திய இராணுவம் மற்றும் இந்திய யுஎஸ்ஐ ஆகியவற்றின் கூட்டு முயற்சியான ‘உத்பவ்’ திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் தொடக்கிவைத்தார்.

பண்டையகால இந்தியாவில் பல்வேறு அரசுகள் பின்பற்றிய பராம்பரிய இராணுவ கலைகள், போர்க்கலைகள், ராஜதந்திரங்கள், அரசியல் உத்திகள் உள்ளிட்டவற்றை மீண்டும் கண்டறிந்து தற்கால இராணுவ செயல்பாடுகளில் பயன்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் வருகின்ற சவால்களை சமாளிக்கும் நோக்கிலான ‘உத்பவ்’ திட்டத்தையும், முதலாவது ‘இந்திய இராணுவ பாரம்பரிய திருவிழாவையும்’ தில்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் தொடக்கி வைத்தார். இந்திய இராணுவம், இந்திய ஐக்கிய சேவை நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்ததை தொடங்கியுள்ளது.

3. தேசிய காவலர் வீரவணக்க நாள்.

இந்திய எல்லையான லடாக்கில் கடந்த 1959ஆம் ஆண்டு அக்.21ஆம் தேதி இந்தியா-சீனா இடையே நிகழ்ந்த மோதலில் நாட்டின் எல்லையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலர்களில் 10 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் அக்.21 தேசிய காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

4. அரபிக்கடலில் உருவானது ‘தேஜ்’ புயல்.

தென்மேற்கு அரபிக்கடலில் புயல் உருவானதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தப் புயல் சின்னத்திற்கு இந்தியா வழங்கிய ‘தேஜ்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

5. ‘ஹாமூன்’ புயல் வங்கதேசம் அருகே கரையைக் கடந்தது!

மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவான தீவிர புயலான, ‘ஹாமூன்’ புயலாக வலுவிழந்து வங்கதேசம் அருகே கரையைக் கடந்தது. இந்தத் தீவிரப் புயலுக்கு ஈரான் ‘ஹாமூன்’ எனப் பெயரிட்டது. ‘ஹாமூன்’ என்பது பாரசீகச் சொல்லாகும்; இது உள்நாட்டு பாலைவன ஏரிகள் / சதுப்புநிலங்களைக் குறிக்கிறது. ஹெல்மண்ட் படுகையை ஒட்டிய பகுதிகளில் இயற்கையான பருவகால நீர்த்தேக்கங்களாக அவை உருவாகின்றன.

6. நாட்டின் முதல் ‘நமோ பாரத்’ இரயில் சேவை.

காஜியாபாத் – மீரட்டுக்கு இடையேயான நாட்டின் முதல் ‘நமோ பாரத்’ இரயில் சேவையை பிரதமர் மோடி உத்தர பிரதேசத்தில் கொடியசைத்து தொடக்கிவைத்தார். இந்த இரயில்களுக்கு முன்னர் ‘ரேபிட்எக்ஸ்’ எனப் பெயர் வழங்கப்பட்டு வந்தது.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Exit mobile version