Tnpsc Current Affairs in Tamil – 20th March 2024

1. ‘சாகர் பரிக்கிரமா’வின் முதன்மை நோக்கம் என்ன?

அ. கடல் பல்லுயிரியலை ஆராய

. மீனவர்களின் தேவைகளையும் சவால்களையும் புரிந்துகொள்ளுதல்

இ. கடலோரப் பகுதிகளில் சுற்றுலாவை ஊக்குவித்தல்

ஈ. கடல்சார்பாதுகாப்பை மேம்படுத்துதல்

2. 2024 – உலக நுகர்வோர் உரிமைகள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Fair digital finance

ஆ. Fair and responsible AI for consumers

இ. The Sustainable consumer

ஈ. Empowering consumers through clean energy transitions

3. கழுவேலி நீர்பிடிப்புப் பகுதி அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. கர்நாடகா

ஈ. ஆந்திர பிரதேசம்

4. சங்கலன் செயலியுடன் தொடர்புடையது எது?

அ. சுரங்கம் தொடர்பான சட்டங்கள்

ஆ. புதிய குற்றவியல் சட்டங்கள்

இ. புதிய சுற்றுச்சூழல் சட்டங்கள்

ஈ. சுகாதார விழிப்புணர்வு சட்டங்கள்

5. பின்வருவனவற்றில் எது, ‘மியாசைட் (Rh17S15)’ பற்றி சிறப்பாக விவரிக்கிறது?

அ. உலகின் மிகப்பெரிய சூரிய மின்னுற்பத்தி நிலையம்

ஆ. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கடல்சார் உயிரினங்கள்

இ உலகின் முதல் வழக்கத்திற்கு மாறான மீ கடத்தி

ஈ. பண்டையகால நீர்ப்பாசன நுட்பம்

6. அண்மையில், 42ஆவது ரஞ்சிக்கோப்பையை வென்ற அணி எது?

அ. தமிழ்நாடு

ஆ. மும்பை

இ. விதர்பா

ஈ. மத்திய பிரதேசம்

7. சுற்றுலாவுக்காக காஷ்மீரில் நிலம் வாங்கிய முதல் இந்திய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. மகாராஷ்டிரா

ஈ. மேகாலயா

8. DHL 2024 – உலகளாவிய தொடர்புடைமை அறிக்கையின்படி, DHL தொடர்புடைமை குறியீட்டில் இந்தியாவின் தரநிலை என்ன?

அ. 61ஆவது

ஆ. 62ஆவது

இ. 63ஆவது

ஈ. 64ஆவது

9. அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய எரிமலையான நோக்டிஸ் எரிமலை, கீழ்காணும் எந்தக் கோளில் கண்டுபிடிக்கப்பட்டதாகும்?

அ. செவ்வாய்

ஆ. வியாழன்

இ. நெப்டியூன்

ஈ. சனி

10. TRAFFIC மற்றும் WWF-இந்தியாவின் அறிக்கையின்படி, சுறா உடல் உறுப்புகளை சட்டவிரோதமாக வர்த்தகம் செய்வதில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஒடிசா

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. மகாராஷ்டிரா

11. இந்திய கடற்படை தனது முதல் தன்னிச்சையான தலைமையகத்தை, ‘நௌசேனா பவன்’ என்ற பெயரில் கீழ்காணும் எந்த இடத்தில் நிறுவியுள்ளது?

அ. தில்லி

ஆ. மும்பை

இ. சென்னை

ஈ. ஜெய்ப்பூர்

12. 2024 – தேசிய தடுப்பூசி நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Vaccine Prevents the Unwanted

ஆ. Protected Together: Vaccines Work

இ. Vaccines Work for All

ஈ. Close the immunization gap

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கேரள கவிஞர் பிரபா வர்மாவுக்கு, ‘சரஸ்வதி சம்மான்’ விருது அறிவிப்பு.

கேரளத்தைச் சேர்ந்த கவிஞரும் எழுத்தாளருமான பிரபா வர்மாவுக்கு 2023ஆம் ஆண்டுக்கான சரஸ்வதி சம்மான் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இயற்றிய, ‘ரௌத்ர சாத்வீகம்’ என்ற கவிதை நூலுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக விருதை வழங்கும் KK பிர்லா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இந்த விருது பெறுவோருக்கு `15 இலட்சம் பரிசுத்தொகையுடன் பாராட்டுச்சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசும் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுக்கான (2022) ‘சரஸ்வதி சம்மான்’ விருது தமிழ் எழுத்தாளர் சிவசங்கரிக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2. விசாகப்பட்டினத்தில் இந்தியா-அமெரிக்கா முப்படை பயிற்சி.

‘டைகர் டிரையம்ப்-24’ என்னும் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணத்துக்கானப் பயிற்சியில் இந்திய-அமெரிக்க கடற்படை வீரர்கள் பங்கேற்றனர். இந்தப் பயிற்சி இருநாடுகளுக்கிடையேயான பேரிடர்கால வழிகாட்டு நெறிமுறைகளை பகிர்ந்துகொள்ள உதவுகிறது.

3. முத்துலட்சுமி ரெட்டி திட்டம்: கர்ப்பிணிகளுக்கு இனி மூன்று தவணைகளில் நிதி.

முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் கர்ப்பிணிகளுக்கு 5 தவணைகளாக வழங்கப்பட்டுவரும் நிதியுதவி, இனி மூன்று தவணைகளாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்.01 முதல் இந்தப்புதிய நடைமுறை அமலுக்கு வரவுள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கர்ப்பிணிகள் கருத்தரித்த 12 வாரத்துக்குள் ஆரம்ப சுகாதார செவிலியர்களிடம் ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு எண் விவரங்களைத் தெரிவித்து, பெயரை பதிவுசெய்து, ‘பிக்மி’ எண் பெறவேண்டும்.

பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் நிதிப்பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் அத்திட்டத்தில் தற்போது சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, இதற்கு முன்பு வரை ஐந்து தவணைகளாக வழங்கப்பட்டு வந்த `14,000 நிதியுதவி இனி 3 தவணைகளில் வழங்கப்படவுள்ளது. கர்ப்பகாலத்தின் நான்காவது மாதத்தில் `6,000, குழந்தைபிறந்த நான்காவது மாதத்தில் `6,000, குழந்தை பிறந்த 9ஆவது மாதத்தில் `2,000 வழங்கப்படவுள்ளது. அதேபோன்று பேறுகாலத்தில் மூன்றாவது மற்றும் ஆறாவது மாதங்களில் இருமுறை ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version