Tnpsc Current Affairs in Tamil – 18th November 2023

1. ‘9ஆவது இந்திய சர்வதேச அறிவியல் விழா – 2023’ஐ நடத்துகிற மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஹரியானா 🗹

இ. கோவா

ஈ. மேற்கு வங்காளம்

2. அண்மையில் காலமான N சங்கரய்யாவுடன் சார்ந்தது எது?

அ. நிர்வாகம்

ஆ. அரசியல் 🗹

இ. விளையாட்டு

ஈ. அறிவியல்

3. வருடாந்திர பைங்குடில் வாயு குறித்த தகவலேட்டை வெளியிடுகிற நிறுவனம் எது?

அ. UNEP

ஆ. FAO

இ. WMO 🗹

ஈ. CPCB

4. தேசிய உறுப்பு மற்றும் திசுமாற்று அமைப்பு (NOTTO) சேகரித்த தரவுகளின்படி, 1995 முதல் 2021 வரை நடந்த மொத்த உறுப்புமாற்று அறுவை சிகிச்சைகளில் 81% கீழ்காணும் எந்தப் பாலினத்திற்கு செய்யப்பட்டுள்ளது?

அ. ஆண்கள் 🗹

ஆ. பெண்கள்

இ. மூன்றாம் பாலினம்

ஈ. போதுமான தகவல் இல்லை

5. 15ஆவது நிதி ஆணையத்தின் உறுப்பினரான அனூப் சிங், கீழ்காணும் எந்த நிறுவனத்தின் சிறப்புமிக்க உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்?

அ. RBI

ஆ. NITI ஆயோக் 🗹

இ. NABARD

ஈ. இந்திய தேர்தல் ஆணையம்

6. ‘NISAR’ என்பது கீழ்காணும் எவ்விரு விண்வெளி முகமைகளுக்கு இடையேயான பூமியைக் கண்காணிக்கும் ரேடார் செயற்கைக்கோள் திட்டமாகும்?

அ. ESA மற்றும் NASA

ஆ. JAXA மற்றும் NASA

இ. ISRO மற்றும் NASA 🗹

ஈ. ESA மற்றும் ISRO

7. “புதுமை கைகுலுக்கல்” நிகழ்ச்சி நிரலுடன் தொடர்புடைய இரண்டு நாடுகள் எவை?

அ. சீனா மற்றும் அமெரிக்கா

ஆ. அமெரிக்கா மற்றும் இந்தியா 🗹

இ. இந்தியா மற்றும் சீனா

ஈ. இந்தியா மற்றும் பாகிஸ்தான்

8. குழந்தைகளிடையே காசநோயை ஒழிப்பதற்கான செயல்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள அமைப்பு எது?

அ. UNICEF

. WHO 🗹

இ. NITI ஆயோக்

ஈ. UNEP

9. ஒருநாள் போட்டிகளில் 50 சதங்கள் அடித்த உலகின் முதல் கிரிக்கெட் வீரர் யார்?

அ. சச்சின் டெண்டுல்கர்

ஆ. விராட் கோலி 🗹

இ. டேவிட் வார்னர்

ஈ. மேத்யூ ஹைடன்

10. எந்த மாநிலத்தில், பிரதமர் நரேந்திர மோடி, ஜனஜாதிய ஆதிவாசி நியாய மகாபியானை தொடங்கினார்?

அ. மத்திய பிரதேசம்

ஆ. சத்தீஸ்கர்

இ. பீகார்

ஈ. ஜார்கண்ட் 🗹

11. காஷ்மீரின் குங்குமப்பூ முதன்முறையாக 2023இல் கீழ்காணும் எந்த மாநிலம்/யூனியன் பிரதேசத்தில் பூத்தது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா 🗹

இ. ஹிமாச்சல பிரதேசம்

ஈ. கோவா

12. முதன்முதலாக, ‘வாழ்நாள் அமைதியை சீர்குலைக்கும்’ விருதைப் பெற்றுள்ளவர் யார்?

அ. சல்மான் ருஷ்டி 🗹

ஆ. அருந்ததி ராய்

இ. ஜோ பிடன்

ஈ. விளாடிமிர் புடின்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. விரைவில் பல்வேறு சலுகைகள் அடங்கிய புதிய ஜவுளிக்கொள்கை.

தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் அடங்கிய புதிய ஜவுளிக்கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்தார். சேலத்தில் 119 ஏக்கரில் `881 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா தொடங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2. பாம்பனில் புதிய இரயில் பாலம்: பிப்.24இல் பயன்பாட்டுக்கு வரும்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-இராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் கடந்த 1914ஆம் ஆண்டு கப்பல்கள் வந்துசெல்லும் வகையில் இரயில்வே தூக்குப்பாலம் அமைக்கப்பட்டது. இந்தப் பாலம் பழுதடைந்ததால், இரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து, பாம்பன் பழைய இரயில் பாலம் அருகே `525 கோடியில் புதிய இரயில் பாலத்துக்கான கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பாம்பன் புதிய இரயில் பாலத்துக்கான கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. அடுத்தாண்டு (2024) பிப்ரவரி.24ஆம் தேதி பணிகள் முழுமையாக நிறைவடைந்து, இந்தப் பாலம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

3. சென்னையில் பன்னாட்டு மருத்துவ சர்வதேச மாநாடு.

மருத்துவத்துறையின் எதிர்கால மேம்பாடுகுறித்த சர்வதேச மாநாடு முதன்முறையாக சென்னையில் நடக்கவுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி.19 முதல் 21ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு நடைபெறவுள்ளது. சமூகத்தில் எதிர்காலத்தில் அச்சுறுத்தலாக விளங்கும் நோய்த்தொற்றுகள் குறித்தும், அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.

4. புதிதாக 3,000 இரயில்கள்: 2027-க்குள் காத்திருப்போர் பட்டியல் இல்லாத நிலை உருவாகும்.

இந்திய இரயில்வேயில் 2027ஆம் ஆண்டுக்குள் காத்திருப்போர் பட்டியல் இல்லாத நிலையை உருவாக்க 3,000 புதிய இரயில்கள் இயக்கப்படும் என இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாட்டில் இரயில் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 800 கோடியிலிருந்து 1,000 கோடியாக அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போது புறநகர் இரயில்கள் உள்பட மொத்தம் 10,748 இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Exit mobile version