Tnpsc Current Affairs in Tamil – 18th January 2024

1. இந்தியாவில், ‘தேசிய துளிர்நிறுவல்கள் (start-ups) நாள்’ அனுசரிக்கப்பட்ட தேதி எது?

அ. 11 ஜனவரி

ஆ. 17 ஜனவரி

இ. 16 ஜனவரி

ஈ. 18 ஜனவரி

2. அண்மையில் இந்தியாவின் எந்தப் பகுதியில் திபெத்திய பழுப்புக் கரடி காணப்பட்டது?

அ. சிக்கிம்

ஆ. மிசோரம்

இ. அஸ்ஸாம்

ஈ. அருணாச்சல பிரதேசம்

3. உழவர்களுக்கு பன்மொழிகளில் வானிலை சேவைகளை வழங்குகிற IMDஇன் இணையதளம் எது?

அ. மான்சூன் மிஷன் போர்டல்

ஆ. பஞ்சாயத்து மௌசம் சேவா போர்டல்

இ. மான்சூன் ரிசர்ச் அஜெண்டா போர்டல்

ஈ. மௌசம் சேவா போர்டல்

4. ‘ஆயூத்தியா’ என்பது கீழ்காணும் எந்த இருநாடுகளால் நடத்தப்படும் கடல்சார் பயிற்சியாகும்?

அ. இந்தியா & சீனா

ஆ. இந்தியா & தாய்லாந்து

இ. இந்தியா & ரஷ்யா

ஈ. இந்தியா & ஜப்பான்

5. லித்தியம் ஆய்வு மற்றும் சுரங்கப்பணிக்காக கீழ்காணும் எந்த நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது?

அ. ஆஸ்திரேலியா

ஆ. ரஷ்யா

இ. ஈரான்

ஈ. அர்ஜென்டினா

6. அண்மையில், FIFAஇன் சிறந்த வீரர் விருதைப் பெற்றவர் யார்?

அ. கிறிஸ்டியானோ ரொனால்டோ

ஆ. லியோனல் மெஸ்ஸி

இ. நெய்மர்

ஈ. ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி

7. இந்திய இராணுவத்தின் டாப்சி (Topchi) பயிற்சி நடைபெறும் இடம் எது?

அ. நாசிக், மகாராஷ்டிரா

ஆ. கட்ச், குஜராத்

இ. ஜெய்சல்மர், இராஜஸ்தான்

ஈ. இந்தூர், மத்திய பிரதேசம்

8. வானிலை தொடர்பான அனைத்து தகவல்களுக்கும் ஓர் ஒருங்கிணைந்த GIS அடிப்படையிலான சேவைகளை வழங்குகிற IMDஇன் திறன்பேசி செயலி எது?

அ. மான்சூன்

ஆ. மௌசம்

இ. அக்யூரேட் வெதர்

ஈ. ரேடார்ஸ்கோப்

9. ஏழைப்பழங்குடியினருக்கு நிரந்தர வீடுகள் கட்டுவதற்கான எந்தத் திட்டத்தின் முதல் தவணையை அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்?

அ. PM-JANMAN திட்டம்

ஆ. அந்தியோதயா திட்டம்

இ. பிரதம மந்திரி ஆதர்ஷ் கிராம யோஜனா

ஈ. NTR வீட்டுவசதித் திட்டம்

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பனாமா கால்வாய், கீழ்காணும் எந்த 2 பெருங்கடல்களை இணைக்கிறது?

அ. அட்லாண்டிக் பெருங்கடல் & பசிபிக் பெருங்கடல்

ஆ. அட்லாண்டிக் பெருங்கடல் & இந்தியப் பெருங்கடல்

இ. இந்தியப் பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்

ஈ. பசிபிக் பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்

11. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘Paramyrothecium indicum’ என்றால் என்ன?

அ. பூக்கும் செடி

ஆ. புதலிடைநோயுருவாக்குகின்ற பூஞ்சை

இ. களைக்கொல்லி எதிர்ப்புத் திறனுடைய பயிர்

ஈ. கடல்வாழ் உயிரினங்கள்

12. அண்மையில், 2022ஆம் ஆண்டிற்கான இந்திய துளிர் நிறுவல்கள் சூழல் தரவரிசையில், ‘சிறந்த செயல்திறன் மிக்கதாக’ தரப்படுத்தப்பட்ட மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. பீகார்

இ. மணிப்பூர்

ஈ. இராஜஸ்தான்

13. இந்திய கடற்படையில், ‘கப்பற்படை நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநராக’ நியமிக்கப்பட்டவர் யார்?

அ. துணை அட்மிரல் AN பிரமோத்

ஆ. துணை அட்மிரல் MA ஹம்பிஹோலி

இ. துணை அட்மிரல் R. ஹரி குமார்

ஈ. துணை அட்மிரல் தினேஷ் K திரிபாதி

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஒன்பது ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு: NITI ஆயோக்.

இந்தியாவில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் 24.8 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக NITI ஆயோக் கூறியுள்ளது. கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத்தரம் என பல்வேறு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு வறுமையிலிருந்து மீண்டவர்கள் கணக்கிடப்பட்டுள்ளனர். இதன்படி 2013-14 முதல் 2022-23 ஆண்டு வரை 24.8 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். 2013-14 ஆண்டு காலகட்டத்தில் 29.17 சதவீதம் பேர் வறுமையில் இருந்தனர். 2022-23 காலகட்டத்தில் இது 11.28 சதவீதமாக குறைந்துள்ளது.

2. இணைய வசதியின்றி ஒளிபரப்பு: ‘D2M’ தொழில்நுட்பம் 19 நகரங்களில் விரைவில் சோதனை.

SIM அட்டை மற்றும் இணையவசதி இல்லாமல் வீடியோக்களை பார்க்க வழிவகை செய்யும் நேரடி கைப்பேசி ஒளி பரப்பு (D2M) தொழில்நுட்பம் நாட்டின் 19 நகரங்களில் விரைவில் சோதனை செய்யப்படவுள்ளது. சாங்க்யா லேப்ஸ் மற்றும் ஐஐடி கான்பூரால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நேரடி கைப்பேசி ஒலிபரப்பு (டைரக்ட்-டு-மொபைல் – டி2எம்) தொழில்நுட்பமானது தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு மற்றும் பொது ஒலிபரப்பாளருக்கு ஒதுக்கப்பட்ட அலைக்கற்றை ஆகியவற்றைப் பயன்படுத்தி, நேரடியாக கைப்பேசிகளுக்கு வீடியோ, ஆடியோ மற்றும் தரவு சமிக்ஞைகளை அனுப்பும். நாடுதழுவிய அவசரகால எச்சரிக்கை அமைப்பை நிறுவுவதற்கு இது வழிவகுக்கும். இதற்காக 470-582 MHz அலைக்கற்றையை ஒதுக்குவதற்கான வலுவான தளம் உருவாக்கப்படவுள்ளது.

3. அலங்காநல்லூரில் ஏறுதழுவுதல் அரங்கம்: ஜன.24இல் திறந்து வைக்கிறார் முதலமைச்சர்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கீழக்கரையில் முன்னாள் முதலமைச்சர் ‘கலைஞர்’ மு கருணாநிதி பெயரிலான பிரமாண்ட ஏறுதழுவுதல் அரங்கம் வரும் ஜனவரி.24ஆம் தேதி திறக்கப்படுகிறது. இந்த அரங்கத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்துவைக்கவுள்ளார். இந்த அரங்கத்துக்கு, ‘கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

4. தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம்.

ஜன.15 முதல் பிப்.14 வரை தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்படுகிறது. சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு, தேசிய சாலைப்பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்படுகிறது. சாலையைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் விபத்தில்லாப் பயணத்தை உறுதிசெய்வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவின் முக்கிய நோக்கமாகும்.

Exit mobile version