Tnpsc Current Affairs in Tamil – 13th October 2023

1. ஐரோப்பாவின் முதல் முழுமையான தனியார் ஏவுகலமான ‘மியுரா-1’ஐ ஏவிய நாடு எது?

அ. இத்தாலி

ஆ. ஸ்பெயின் 🗹

இ. ஜெர்மனி

ஈ. நார்வே

2. உலோகம் நிறைந்த சிறுகோள் ‘16 சைக்’ பற்றி ஆய்வுசெய்ய விண்கலத்தை அனுப்பவுள்ள நாடு எது?

அ. இந்தியா

ஆ. அமெரிக்கா 🗹

இ. ரஷ்யா

ஈ. சீனா

3. 2023 – ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப்பட்டியலில் இந்தியா பிடித்துள்ள இடம் என்ன?

அ. முதலாவது

ஆ. மூன்றாவது

இ. நான்காவது 🗹

ஈ. ஆறாவது

4. அக்.08 அன்று தனது 91ஆம் ஆண்டு விழாவில் தனது புதிய கொடியை வெளியிட்ட இந்திய ஆயுதப்படை எது?

அ. இந்திய இராணுவம்

ஆ. இந்திய கடற்படை

இ. இந்திய வான்படை 🗹

ஈ. இந்திய கடலோர காவல்படை

5. ‘ஜீவிதபுத்ரிகா விழா’ கொண்டாடப்படுகிற மாநிலம் எது?

அ. உத்தரப்பிரதேசம்

ஆ. இராஜஸ்தான்

இ. பீகார் 🗹

ஈ. ஜார்கண்ட்

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘Watermeal’ என்பது என்ன?

அ. மிகச்சிறிய பூக்கும் தாவரம் 🗹

ஆ. மிகப்பெரிய பூக்கும் தாவரம்

இ. மிகச்சிறிய பழம்

ஈ. மிகப்பெரிய பழம்

7. இந்தியா, கீழ்காணும் எந்த நாட்டுடன் இணைந்து 10ஆவது புத்தாக்க நாளைக் கொண்டாடியது?

அ. சுவிட்சர்லாந்து

ஆ. பின்லாந்து

இ. ஸ்வீடன் 🗹

ஈ. இங்கிலாந்து

8. ‘தேசிய தற்போதைய நல்லுற்பத்தி நடைமுறை நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. 10 அக்டோபர் 🗹

ஆ. 12 அக்டோபர்

இ. 14 அக்டோபர்

ஈ. 15 அக்டோபர்

9. சமீப செய்திகளில் இடம்பெற்ற மான்ட் பிளாங்க் என்பது கீழ்காணும் எந்த நாட்டின் மிகவுயரமான மலையாகும்?

அ. இங்கிலாந்து

ஆ. பிரான்ஸ் 🗹

இ. இத்தாலி

ஈ. அர்ஜென்டினா

10. “Together for Trust: Collaborating for a safe and connected future” என்பது அக்.9 அன்று கொண்டாடப்பட்ட எந்த நாளின் கருப்பொருள் ஆகும்?

அ. உலக தொலைத்தொடர்பு தினம்

ஆ. உலக அஞ்சல் தினம் 🗹

இ. உலக இணைய தினம்

ஈ. உலக தொலைபேசி தினம்

11. சக்ரவத்-2023 பயிற்சியானது கீழ்காணும் எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் இந்திய கடற்படையால் நடத்தப்படுகிறது?

அ. தமிழ்நாடு

ஆ. ஆந்திரப் பிரதேசம்

இ. கோவா 🗹

ஈ. கேரளா

12. காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பின் ஆண்டறிக்கையை வெளியிடுகிற நிறுவனம் எது?

அ. பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு

ஆ. NITI ஆயோக்

இ. தேசிய புள்ளியியல் அலுவலகம் 🗹

ஈ. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு

13. சமீப செய்திகளில் இடம்பெற்ற நௌகா, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள எந்நாட்டின் ஆய்வகமாகும்?

அ. ரஷ்யா 🗹

ஆ. அமெரிக்கா

இ. இஸ்ரேல்

ஈ. சீனா

14. பேராசிரியர் கிளாடியா கோல்டின் 2023ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை எது குறித்த ஆராய்ச்சிக்காக பெற்றார்?

அ. தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்களிப்பு 🗹

ஆ. நடத்தை பொருளாதாரம்

இ. வறுமை

ஈ. பெண்கள் மத்தியில் வேலையின்மை

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ககன்யான் திட்டம்: அக்.21-இல் முதல்கட்ட சோதனை.

மனிதர்களை விண்கலம்மூலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையின் 400 கிலோ மீ தொலைவுக்குக் கொண்டுசென்று, பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு கொண்டுவரும் ககன்யான் திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான பல்வேறுகட்ட சோதனைகளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) மேற்கொண்டு வருகிறது.

ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ககன்யான் திட்ட விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் முதல்கட்ட சோதனை அக்.21இல் நடைபெறுகிறது. ககன்யான் விண்கலம் ஏவுகலம்மூலம் விண்வெளிக்குக் கொண்டுசெல்லப்பட்டு, மீண்டும் பூமிக்கு கொண்டுவரப்படும். வங்கக்கடல் பகுதியில் விழும் இந்த விண்கலம், இந்திய கடற்படையினர்மூலம் மீட்கப்படும்.

‘ககன்யான் திட்டம்’மூலம் வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவதற்கு முன்பாக, ‘வாயுமித்ரா’ என்ற ரோபோவை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விண்கலம்மூலம் விண்ணுக்கு அனுப்பி சோதனை செய்யப்படவுள்ளது.

2. தஞ்சை வேளாண் கல்லூரிக்கு எம் எஸ் சுவாமிநாதன் பெயர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையிலுள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் பெயர்சூட்டப்படும் என்று சட்டப்பேரவையில் விதி-110இன்கீழ் மாண்புமிகு தமிழ்நாட்டு முதலைமைச்சர் அறிவித்துள்ளார்.

‘பசுமைப்புரட்சியின் தந்தை’ எனப்போற்றப்படும் M S சுவாமிநாதன், பத்ம விபூஷண், ரமோன் மகசேசே உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளம் வேளாண் அறிவியலில் பயிர்ப்பெருக்கம், மரபியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று முன்னிலையில் வரும் மாணவருக்கு, டாக்டர் M S சுவாமிநாதன் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

3. இஸ்ரேலிலிருந்து இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் அஜய்’.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே மோதல் தீவிரமாகி உள்ள நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களைத் தாயகம் அழைத்துவர ‘ஆபரேஷன் அஜய்’ தொடங்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

4. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: மயிலாடுதுறை மாவட்டம் சேர்ப்பு.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதியில் மயிலாடுதுறை மாவட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. வேளாண் மண்டலச் சட்டத்துக்குள் வேளாணுடன் கால்நடை பராமரிப்பு மற்றும் உள்நாட்டு மீன்வளமும் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. இதற்கு சட்ட மசோதா வழிவகை செய்கிறது எனக்கூறப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவிக்கப்பட்ட இடத்தில் உள்ள வேளாண் நிலங்களை வேறு எந்தப் பயன்பாட்டுக்கும் மாற்ற இயலாத அளவுக்கு வகைப்பாடு செய்யப்படும். வேளாண் சாராத வேறு எந்தத்திட்டத்தையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் செயல்படுத்த முடியாது. இந்தியாவின் முதல் வேளாண் மண்டலம் 2011ஆம் ஆண்டில் உத்தரகண்டில் அமைக்கப்பட்டது.

5. 2022ஆம் ஆண்டுக்கான, ‘சரஸ்வதி சம்மான்’ விருது எழுத்தாளர் சிவசங்கரிக்கு வழங்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான ‘சரஸ்வதி சம்மான்’ இலக்கிய விருதை எழுத்தாளர் சிவசங்கரி பெற்றுக் கொண்டார். கடந்த 2019ஆம் ஆண்டு எழுதிய ‘சூரிய வம்சம்-நினைவலைகள்’ என்ற நூலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றில் சிறந்த இலக்கிய படைப்பாளிக்கு ‘சரஸ்வதி சம்மான்’ இலக்கிய விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் வழங்கப்படும் மிகவுயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விருதை கே கே பிர்லா அறக்கட்டளை கடந்த 1991ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. இந்த விருது `15 லட்சம் பரிசுத்தொகை, பாராட்டுப் பத்திரம், பாராட்டுச்சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது.

6. வரையாடுகளைப் பாதுகாக்கும் முன்னோடித் திட்டம்.

தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாட்டைக் காப்பதற்கான முன்னோடித் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் தொடக்கிவைத்தார்.

‘வரையாடு’ என்று மக்களால் பரவலாக அழைக்கப்படும் ‘நீலகிரி வரையாடு’ என்பது மேற்குத்தொடர்ச்சி மலையில் காணப்படும் அழிந்துவரும் இனமாகும். புவிஈர்ப்பு விசைக்கெதிராக கடினமான குன்றின்மீது ஏறும் திறன்களுக்காக புகழ்பெற்ற வரையாடு தமிழ்நாட்டின் மாநில விலங்காகவும் திகழ்கிறது. இது ‘மௌன்டைன் மோனார்க்’ என்று அழைக்கப்படுகிறது. வரையாடு நாள்: நீலகிரி வரையாடு இனங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் அக்.7ஆம் தேதி வரையாடு நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வரையாடுகள் குறித்த ஆய்வுகளில் முன்னோடியாக விளங்கும் டாக்டர் ஈ ஆர் சி டேவிதாரின் பிறந்தநாள் அக்டோபர்.07 ஆகும். இதையொட்டியே வரையாடு விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Exit mobile version