Tnpsc Current Affairs in Tamil – 13th & 14th November 2023

1. கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட, ‘அபண்டன்ஸ் இன் மில்லட்ஸ்’ என்ற பாடலைப் பாடியவர் யார்?

அ. ஃபல்குனி ஷா 🗹

ஆ. உதித் நாராயண்

இ. ஏ. ஆர். ரஹ்மான்

ஈ. சங்கர் மகாதேவன்

2. ‘டிஜிட்டல் விளம்பரக் கொள்கை, 2023’ஐ வெளியிட்ட மத்திய அமைச்சகம் எது?

அ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் 🗹

இ. உள்துறை அமைச்சகம்

ஈ. வெளியுறவு அமைச்சகம்

3. மாநிலத்தின் மொத்த இடஒதுக்கீட்டை 75%ஆக உயர்த்தும் மசோதாவை நிறைவேற்றிய மாநிலம் எது?

அ. கேரளா

ஆ. பீகார் 🗹

இ. ஜார்கண்ட்

ஈ. ஆந்திர பிரதேசம்

4. இந்தியாவில் தொழிற்துறை உற்பத்திக் குறியீட்டு வளர்ச்சித் தரவை வெளியிடுகிற நிறுவனம் எது?

அ. NSO 🗹

ஆ. DPIIT

இ. SIDBI

ஈ. RBI

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ‘கட்டுபொறி-Baler’ என்பது எந்தத் துறையுடன் தொடர்புடைய சாதனமாகும்?

அ. வானிலையியல்

ஆ. வேளாண்மை 🗹

இ. தானியங்கியியல்

ஈ. குறைகடத்திகள் உற்பத்தி

6. ஓர் அண்மைய ஆய்வின்படி, 2025இல் எந்தக் கோள் பூமியிலிருந்து தற்காலிகமாக புலப்படாமல் இருக்கும்?

அ. நெப்டியூன்

ஆ. வியாழன்

இ. சனி 🗹

ஈ. யுரேனஸ்

7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அமைந்துள்ள மாவட்டம் எது?

அ. சென்னை

ஆ. செங்கல்பட்டு 🗹

இ. காஞ்சிபுரம்

ஈ. விழுப்புரம்

8. ‘நயி சேத்னா-2.0’ உடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் 🗹

ஆ. MSME அமைச்சகம்

இ. வணிகம் & தொழிற்துறை அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

9. அந்நிய செலாவணி கையிருப்பு மேலாண்மை குறித்த அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. RBI 🗹

ஆ. SEBI

இ. NHB

ஈ. NPCI

10. அறிவியலாளர்கள், ‘சிமெரிக்’ எனப் பெயரிடப்பட்ட எந்த உயிரினத்தின் குட்டியை உருவாக்கியுள்ளனர்?

அ. குரங்கு 🗹

ஆ. வெள்ளாடு

இ. முயல்

ஈ. நாய்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மத்திய நிதி ஆணையம்மூலம் தமிழ்நாட்டுக்கு `836.97 கோடி நிதி: ஊரகப்பகுதிகளின் மேம்பாட்டுக்கு ஒதுக்கீடு.

மத்திய நிதி ஆணையம்மூலம், தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளுக்கு `836.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 15ஆவது மத்திய நிதி ஆணையம்மூலமாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியங்களை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு அனுமதிகளை வழங்கியுள்ளது. இந்த நிதிகளை சம்பந்தப்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 10 வேலை நாள்களுக்குள் தாமதிக்காமல் வழங்கவேண்டும். 10 நாள்களுக்குப் பிறகு நிதிகளை அளிக்கும்பட்சத்தில் அதற்கான வட்டித்தொகையையும் சேர்த்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கவேண்டும் என மத்திய அரசின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. சரக்குகளை எடுத்துச் செல்ல உதவும் கைப்பேசி செயலி.

நகரங்களுக்கிடையே சரக்குகளை எளிதாகவும், திறமையாகவும் கொண்டுசெல்வதற்கு உதவும் கைப்பேசி செயலியை சென்னை ஐஐடி-யின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் இணைந்து வடிவமைத்துள்ளனர். ‘ஆப்ட்ரூட்’ (OptRoute) என்றழைக்கப்படும் இந்தக் கைப்பேசி செயலியானது, இடைத்தரகரோ, கட்டணமோ இல்லாமல் ஓட்டுநரையும் நுகர்வோரையும் ஒன்றிணைக்கிறது. இடைத்தரகர்கள் யாருமின்றி நுகர்வோரிடமிருந்து பணம் நேரடியாக ஓட்டுநருக்குக் கிடைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

3. உயர்தர நகர்ப்புற உள்கட்டமைப்புக்கு `3,300 கோடி கடன்: இந்தியா, ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்பந்தம்.

உயர்தர நகர்ப்புற உள்கட்டமைப்பை உருவாக்க 400 மில்லியன் டாலர் (சுமார் `3,300 கோடி) கடன்பெற ஆசிய வளர்ச்சி வங்கியுடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: கடந்த 2021ஆம் ஆண்டு மத்திய அரசின் நிலையான நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சேவை விநியோகத் திட்டத்தின் முதல் துணை திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அந்தத் திட்டத்துக்கு 350 மில்லியன் டாலர் (சுமார் `2,900 கோடி) நிதியுதவிபெற ஆசிய வளர்ச்சி வங்கியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அந்தத் திட்டத்தின் 2ஆவது துணைத் திட்டம் முதலீட்டுத் திட்டமிடல், மாநில மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தம் மேற்கொள்வதை ஆதரிக்கிறது. நகர்ப்புறங்களில் குடிநீர் பாதுகாப்பு, நீர்நிலைகளைப் புனரமைத்தல், நிலத்தடி நீர் அளவை நிலையாக பராமரித்தல் உள்ளிட்டவற்றையும் அந்தத் துணைத் திட்டம் ஊக்குவிக்கிறது. இந்நிலையில், இரண்டாவது துணைத் திட்டத்தின் கீழ், உயர்தர நகர்ப்புற உள்கட்டமைப்பை உருவாக்கவும், சேவை விநியோகத்தை மேம்படுத்தவும், திறன்வாய்ந்த நிர்வாக முறைகளை ஆதரிக்கவும் 400 மில்லியன் டாலர் கடன்பெற ஆசிய வளர்ச்சி வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

Tnpsc Current Affairs 2024 in Tamil & English Monthly Pdf files Download Quiz Online Test

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Exit mobile version