Tnpsc Current Affairs in Tamil – 11th March 2024

1. UDGAM இணையதளத்தை உருவாக்கிய நிறுவனம் எது?

அ. RBI

ஆ. NABARD

இ. SIDBI

ஈ. SBI

2. அண்மையில், இந்தியாவின் முதல் அரசாங்க ஆதரவுபெற்ற OTT தளத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. பஞ்சாப்

ஈ. மத்திய பிரதேசம்

3. முதல் 2024 – பாரத் கொதிநீராவிக்கலன் கண்காட்சி நடைபெற்ற இடம் எது?

அ. கௌகாத்தி, அஸ்ஸாம்

ஆ. வாரணாசி, உத்தர பிரதேசம்

இ. புனே, மகாராஷ்டிரா

ஈ. இந்தூர், மத்திய பிரதேசம்

4. ‘உலக வறுமைக் கடிகாரத்தின்’படி, இந்திய மக்கள்தொகையில் எத்தனை சதவீதத்தினர் தீவிர வறுமையில் உள்ளனர்?

அ. 3%

ஆ. 4%

இ. 5%

ஈ. 6%

5. 2024 – தேசிய இளையோர் நாடாளுமன்ற விழாவில் முதல் பரிசை வென்றவர் யார்?

அ. வைஷ்ணா பிச்சை

ஆ. யத்தின் பாஸ்கர் துக்கல்

இ. கனிஷ்கா சர்மா

ஈ. ஆஸ்தா சர்மா

6. சமீபத்தில், அணைகளுக்கான சர்வதேச சிறப்பு மையத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் ஜல் சக்தி அமைச்சகம் கீழ்காணும் எந்த நிறுவனத்துடன் கையெழுத்திட்டது?

அ. ஐஐடி கான்பூர்

ஆ. ஐஐஎம் அகமதாபாத்

இ. ஐஐஎஸ்சி பெங்களூரு

ஈ. ஐஐடி பம்பாய்

7. 2024 – உலக பெண்கள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Invest in Women: Accelerate Progress

ஆ. Gender equality today for a sustainable tomorrow

இ. DigitALL: Innovation and technology for gender equality

ஈ. Think equal, build smart, innovate for change

8. அண்மையில், உலக பொருளாதார மன்றத்துடன் இணைந்து AI மையத்தை நிறுவிய மாநில அரசு எது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ. கேரளா

ஈ. மகாராஷ்டிரா

9. தபால் வாக்குமூலம் வாக்களிக்க தகுதியுள்ள மூத்த குடிமக்களுக்கான புதிய குறைந்தபட்ச வயது என்ன?

அ. 83

ஆ. 85

இ. 87

ஈ. 90

10. CSIR-இந்திய பெட்ரோலிய நிறுவனமானது முதிர்ந்த பைன் இலைகளிலிருந்து எரிபொருளை உருவாக்கும் தொழினுட்பத்தை பயன்படுத்துவதற்காக எம்மாநிலத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?

அ. தமிழ்நாடு

ஆ. உத்தரகாண்ட்

இ. இராஜஸ்தான்

ஈ. குஜராத்

11. அண்மையில், 17ஆவது வருடாந்திர சர்வதேச உயிரியல் மாநாட்டை நடத்திய நாடு எது?

அ. மியான்மர்

ஆ. நேபாளம்

இ. இந்தியா

ஈ. வங்காளதேசம்

12. ஒவ்வோர் ஆண்டும், ‘ஜன ஔஷாதி’ நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. மார்ச்.06

ஆ. மார்ச்.07

இ. மார்ச்.08

ஈ. மார்ச்.09

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தனியார் வடிவமைத்த ஏவுகணை: இம்மாத இறுதியில் ஏவத்திட்டம்.

தனியார் புத்தாக்க நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட அக்னிபான் ஏவுகணை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இந்த மாத இறுதிக்குள் ஏவப்படவுள்ளது. புவியின் துணைவட்டப் பாதையில் செலுத்தப்படவுள்ள இந்த ஏவுகணை, தனியார்மூலம் அனுப்பப்படும் நாட்டின் இரண்டாவது ஏவுகணை திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏவுகணை, செயற்கைக்கோள் மட்டுமல்லாது விண்வெளி ஆய்வுத்திட்டங்களுக்கான கட்டமைப்பு வசதிகளையும் தனியார் நிறுவனங்கள் மேற்கொள்வதற்கான சிறப்புத்திட்டமான, ‘INSPACE’ 2020இல் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version