Tnpsc Current Affairs in Tamil – 11th & 12th November 2023

1. “Building trust in science” என்பது நவம்பர்.10 அன்று கொண்டாடப்பட்ட எந்தச் சிறப்பு நாளின் கருப்பொருளாகும்?

அ. உலக கல்வி நாள்

ஆ. அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் நாள் 🗹

இ. உலக இளைஞர் மேம்பாட்டு நாள்

ஈ. உலக மாணவர் நாள்

2. இந்தியா, கீழ்காணும் எந்த நாட்டின் கடற்படையுடன் இணைந்து BONGOSAGAR-23 மற்றும் CORPAT ஆகிய பயிற்சிகளை மேற்கொண்டது?

அ. இலங்கை

ஆ. வங்காளதேசம் 🗹

இ. பிரான்ஸ்

ஈ. ஈரான்

3. உலகின் முதல் ரோபோ தலைமைச் செயல் அதிகாரியின் பெயர் என்ன?

அ. டினா

ஆ. மிகா 🗹

இ. யோ-யோ

ஈ. ஹாரி

4. இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, கொடுப்பனவு திரட்டிமூலம் (Payment Aggregator), அதிகபட்ச எவ்வளவு மதிப்புக்கு பொருட்கள் மற்றும் சேவைகளில் வர்த்தகம் செய்யலாம்?

அ. ரூ.10 இலட்சம்

ஆ. ரூ.25 இலட்சம் 🗹

இ. ரூ.50 இலட்சம்

ஈ. ரூ.1 கோடி

5. நடப்பு நிதியாண்டில் பசுமைப் பத்திரங்கள்மூலம் எவ்வளவு மதிப்புக்குக் கடன் வாங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது?

அ. ரூ.10000 கோடி

ஆ. ரூ.20000 கோடி 🗹

இ. ரூ.50000 கோடி

ஈ. ரூ.75000 கோடி

6. இந்தியாவில், ஆண்டுதோறும், ‘தேசிய கல்வி நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. நவம்பர் 9

ஆ. நவம்பர் 11 🗹

இ. நவம்பர் 13

ஈ. நவம்பர் 15

7. SC/ST/EBC மற்றும் OBCக்கான இடஒதுக்கீட்டை 50%லிருந்து 65 சதவீதமாக உயர்த்தும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள மாநில சட்டமன்றம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. பீகார் 🗹

ஈ. மேற்கு வங்காளம்

8. ‘தினைகுறித்த சர்வதேச மாநாட்டை’ நடத்தும் நகரம் எது?

அ. புவனேசுவரம் 🗹

ஆ. கொல்கத்தா

இ. சென்னை

ஈ. பெங்களூரு

9. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அங்கீகரித்துள்ள வடகிழக்கு மாநிலம் எது?

அ. அஸ்ஸாம்

ஆ. நாகாலாந்து 🗹

இ. சிக்கிம்

ஈ. மேற்கு வங்காளம்

10. அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட, ‘Ixchiq’ என்பது கீழ்காணும் எந்த நோய்க்கான தடுப்பூசியாகும்?

அ. COVID-19

ஆ. டெங்கு

இ. சிக்குன்குனியா 🗹

ஈ. மலேரியா

11. பெண் தொழில்முனைவோரின் திறனை மேம்படுத்துவதற்காக DAY-NRLM திட்டமானது கீழ்காணும் எந்த நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

அ. RBI

ஆ. NABARD

இ. SIDBI 🗹

ஈ. NHB

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. நிலக்கரி இல்லாத சுரங்கங்களில் நீரை சேமித்து மின்சாரம் தயாரிக்க திட்டம்.

நிலக்கரி இல்லாத நிலக்கரி சுரங்கங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரைப் பயன்படுத்தி புனல்மின்சாரம் உற்பத்தி செய்ய மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மாற்று எரிசக்தி ஆதாரத்தை பன்முகப்படுத்துவது இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

2. கூர்நோக்கு இல்லங்கள்: முதலமைச்சரிடம் பரிந்துரைகளை வழங்கினார் நீதிபதி சந்துரு!

தமிழ்நாட்டில் உள்ள கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பில்லங்கள், பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டது. அதன்படி இதுகுறித்து ஆய்வுசெய்த நீதிபதி சந்துரு தலைமையிலான குழு, அதற்கான அறிக்கையை மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.

3. ஓங்கில்கள் வளங்காப்பு திட்டம்.

இந்திய அரசின் ஒருங்கிணைந்த வனவிலங்கு வாழ்விடங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஓங்கில்கள் வளங்காப்பு திட்டத்தினை செயல்படுத்தச் செய்வதற்கு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இராமேசுவரம் முதல் கன்னியா குமரி வரை நீண்டுள்ள மன்னார் வளைகுடா பகுதியானது, 140 கிமீ நீளமுள்ள அதன் கடற்கரையில் மனித காலடித் தடம்படாத 21 தொடர் தீவுகளைக் கொண்டுள்ளது. இந்தப் பகுதியில் ஸ்டெனோ பிரெடானென்சிஸ், ஸ்டெனெல்லா அட்டனுவாட்டா, ஸ்டெனெல்லா லாங்கிரோஸ்ட்ரிஸ் மற்றும் டெல்பினஸ் டெல்பிஸ் உள்ளிட்ட நான்கிற்கும் மேற்பட்ட ஓங்கில் இனங்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

4. பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்!

ஈரோட்டிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் 0.77 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு, இந்தப் பறவைகள் சரணாலயம் பாதுகாக்கப்பட்ட ராம்சர் தளமாக அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து, இந்தப் பகுதியில் வசிப்பவர்கள் இந்தப் பறவைகள் சரணாலயத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அந்தக் கிராமத்தினரும் அதைச்சுற்றியுள்ள அண்டை கிராமத்தினரும் பட்டாசு வெடிக்காமல் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

Tnpsc Current Affairs 2024 in Tamil & English Monthly Pdf files Download Quiz Online Test

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Exit mobile version