Tnpsc Current Affairs in Tamil – 10th October 2023

1. புள்ளிவிவர செயல்திறன் குறிகாட்டிகளின் தொகுப்பை வெளியிடுகிற நிறுவனம் எது?

அ. IMF

ஆ. உலக வங்கி 🗹

இ. WEF

ஈ. ADB

2. 2023ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கேட்டலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோருக்கு அவர்களின் எந்தப் பணிக்காக வழங்கப்பட்டுள்ளது?

அ. ஹெபடைடிஸ் சி வைரஸ்

ஆ. mRNA தடுப்பூசிகள் 🗹

இ. மனித பரிணாமம்

ஈ. வெப்பநிலை ஏற்பிகள்

3. அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட R21/Matrix-M என்பது கீழ்காணும் எந்த நோய்க்கு எதிரான தடுப்பூசியாகும்?

அ. COVID-19

ஆ. மலேரியா 🗹

இ. காசநோய்

ஈ. குளிர் காய்ச்சல்

4. இந்தியாவிற்கு வெளியே B R அம்பேத்கரின் மிகப்பெரிய சிலையான, ‘சமத்துவ சிலை’ கீழ்காணும் எந்த நாட்டில் திறக்கப்படவுள்ளது?

அ. இங்கிலாந்து

ஆ. அமெரிக்கா 🗹

இ. ஜெர்மனி

ஈ. பிரான்ஸ்

5. ‘SAMPRITI-XI’ என்பது இந்தியாவும் கீழ்காணும் எந்த நாடும் இணைந்து நடத்தும் கூட்டு இராணுவப் பயிற்சி ஆகும்?

அ. வங்காளதேசம் 🗹

ஆ. இலங்கை

இ. இந்தோனேசியா

ஈ. ஈரான்

6. 2023ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு, கீழ்காணும் எத்துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டமைக்காக மூன்று அறிவியலாளர்களுக்கு வழங்கப்பட்டது?

அ. மிகக்குறுகிய நேரத்து ஒளியில் எலக்ட்ரான்களின் செயல்பாடு 🗹

ஆ. மிகக்குறுகிய நேரத்து ஒளியில் ஃபோட்டான்களின் செயல்பாடு

இ. மிகக்குறுகிய நேரத்து ஒளியில் நியூட்ரான்களின் செயல்பாடு

ஈ. மிகக்குறுகிய நேரத்து ஒளியில் ஃபைட்டான்களின் செயல்பாடு

7. இந்திய வான்படையானது MiG-21 விமானங்களுக்கு மாற்றாக கீழ்காணும் எந்த விமானத்தை பயன்படுத்த உள்ளது?

அ. LCA Mark 1A 🗹

ஆ. LCA Mark-2

இ. SU-30 MKI

ஈ. HTT-40

8. பழங்குடி இசுலாமிய சமூகங்களின் சமூகப் பொருளாதார மதிப்பீட்டை மேற்கொள்ளவுள்ள மாநிலம் எது?

அ. மேற்கு வங்காளம்

. அஸ்ஸாம் 🗹

இ. குஜராத்

ஈ. பீகார்

9. 2023இல், ‘IEA முக்கியமான கனிமங்கள் மற்றும் தூய ஆற்றல் உச்சிமாநாடு’ நடைபெறும் நகரம் எது?

அ. லண்டன்

ஆ. பாரிஸ் 🗹

இ. ரோம்

ஈ. வியன்னா

10. காற்று மாசுபாட்டை நிவர்த்தி செய்ய சமீபத்தில் ‘பசுமை கட்டளை மையத்தை’ திறந்துள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. மகாராஷ்டிரா

ஆ. புது தில்லி 🗹

இ. குஜராத்

ஈ. பீகார்

11. ‘குவாண்டம் புள்ளிகளை’ உருவாக்கியதற்காக 2023ஆம் ஆண்டில் எந்தத் துறை அறிவியலாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது?

அ. இயற்பியல்

ஆ. வேதியியல் 🗹

இ. உடலியல்

ஈ. மேற்கூறிய எதுவும் இல்லை

12. ‘வேலி குயின்’ என்பது எந்த மாநிலத்தின் முதல் பாரம்பரிய இரயிலாகும்?

அ. தமிழ்நாடு

ஆ. கோவா

இ. இராஜஸ்தான் 🗹

ஈ. பீகார்

13. ‘UMMEED’ வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அமைச்சகம் எது?

அ. MSME அமைச்சகம்

ஆ. நிதி அமைச்சகம்

இ. கல்வி அமைச்சகம் 🗹

ஈ. சிறுபான்மை விவகார அமைச்சகம்

14. JuMBOs (Jupiter Mass Binary Objects) ஐ கண்டுபிடித்த நாடு எது?

அ. இந்தியா

ஆ. எகிப்து

இ. அமெரிக்கா 🗹

ஈ. ஆஸ்திரேலியா

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தன்னம்பிக்கைக்கான விருது.

மருத்துவத்துறைக்கான நோபல் விருது, COVID-19 கொள்ளை நோய்த்தொற்றுக்கான, ‘mRNA’ தடுப்பூசியை உருவாக்கிய பேராசிரியர் கேத்தலின் கரிக்கோவுக்கும், அவருடன் இணைந்து ஆராய்ச்சி மேற்கொண்ட ட்ரூ வைஸ்மனுக்கும் இந்த ஆண்டு வழங்கப்பட்டிருக்கிறது.

இதுவரை நோபல் விருதுபெற்ற ஆண்கள் 894 பேர் என்றால், அவர்களில் பெண்கள் 62 பேர் மட்டுமே. மருத்துவத்துக்கான நோபல் விருது என்று எடுத்துக்கொண்டாலும், 225 பேரின் தேர்வில் கரிக்கோவையும் சேர்த்து 13 பேர்தான்.

மெசஞ்சர் ரிபோநியூக்ளிக் ஆசிட் எனப்படும் ‘mRNA’ மனித உடலில் புரத உருவாக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. அந்த ‘mRNA’ஐ எப்படி பயன்படுத்த முடியும்? என்பதுதான் கரிக்கோவின் ஆராய்ச்சி. 1980ஆம் ஆண்டில் ‘mRNA’ அடிப்படையில் தடுப்பூசி தயாரித்து, எதிர்வினைகள் ஏற்பட்டதால் கைவிடப்பட்டது. அப்படி இருந்தும் தளர்ந்துவிடாமல் தனது ஆய்வைத் தொடர்ந்தார் கரிக்கோ. இறுதியில் தடுப்பூசியை உருவாக்கினார்.

2. இந்தியா – தான்ஸானியா பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு

இரு நாடுகளிடையே எண்மமயமாக்கல், கலாசாரம், விளையாட்டு, கடல்சார் தொழில்கள், வர்த்தக கப்பல் பயண தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பிரிவுகளில் ஆறு ஒப்பந்தங்களும் கையொப்பமாகின. கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்ஸானியாவின் முதல் பெண் அதிபரான சாமியா சுலுஹு ஹசன், நான்கு நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்திருந்தபோது இந்த ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

3. தென்பெண்ணை ஆற்றுப்படுக்கையில் பழங்கால நாணயங்கள் கண்டெடுப்பு!

கடலூர் மாவட்டம், உளுந்தாம்பட்டு பகுதி தென்பெண்ணை ஆற்றுப்படுகையில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் 3 பழங்கால செப்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.

2 நாணயங்கள் இராஜராஜன் பெயர் பொறித்த சோழர் காலத்தைச் சேர்ந்தவை. மற்றொன்று விஜயநகர பேரரசு கால நாணயம். சோழர்கால நாணயங்களில் தேவநாகரி எழுத்துகளில் ‘ஸ்ரீராஜராஜ’ எனப் பொறிக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் மற்றொருபுறம் கையில் மலர் ஏந்தியவாறு ஒருவர் நிற்க, அவரது இடப்பக்கம் 4 வட்டங்கள் உள்ளன. அவற்றின் மேலே பிறையும் கீழே மலரும் உள்ளன. விஜயநகர பேரரசு கால நாணயத்தின் ஒருபுறம் தேவநாகரி எழுத்தில் ‘ஸ்ரீநீலகண்டா’ என்று பொறிக்கப்பட்டுள்ளது. மற்றொருபுறம் காளை உருவமும், பிறையும் உள்ளன.

4. சூரை மீன்பிடித் துறைமுகம் டிசம்பரில் திறக்கப்படும்.

திருவொற்றியூரில் கட்டமைக்கப்பட்டு வரும் சூரை ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகம் வரும் டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இதன் மொத்த மதிப்பீடு `210 கோடியாகும்.

தற்போது விவசாயிகளைப் போலவே மீனவர்களுக்கும் கிசான் கடன் அட்டை வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு மீனவர்கள் வாங்கும் கடனுக்கு 7.5 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும். கடனை குறித்த காலத்தில் திருப்பிச்செலுத்தும் நபர்களுக்கு 3 சதவீதம் ஊக்கத்தொகையாகத் திருப்பியளிக்கப்படும்.

5. சூரிய தகடுகள் பொருத்திய மரம்.

சென்னை பெரம்பூரில் செயல்பட்டுவரும் ஒருங்கிணைந்த இரயில்பெட்டித் தொழிற்சாலை (ICF) சுற்றுச்சூழலை மேம்பாடுத்தும் நோக்கத்தில் இயற்கை வளங்களை பயன்படுத்தி பசுமை மின்சக்தியை தயாரித்து வருகிறது. இந்திய இரயில்வேயின் முதல் ‘கார்பன் நெகடிவ்’ தகுதி பெற்ற தொழிற்சாலை என்ற சான்றிதழை பெற்றதுடன் சமீபத்தில் மத்திய மின்சக்தி மேம்பாட்டு அமைப்பின்சிறந்த மின்சக்தி சேமிப்புக்கு ‘சூண்யா பிளஸ்’ சான்றிதழையும் பெற்றுள்ளது. ICF காற்றாலைகள், சூரிய தகடுகள்மூலம் ஓராண்டிற்கு 2.22 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரித்த போதிலும் அதில் 1.89 மில்லியன் யூனிட் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் பெரம்பூரில் உள்ள ICF இந்திய இரயில்வேயின் முதல் நேர்மறை மின்சக்தி பயன்பாட்டு தொழிற்சாலையாக மாறியுள்ளது.

இதனை நினைவுகூரும் வகையில் ICF அலுவலக வளாகத்தில் ‘IICF’ என்ற வாசகங்கள் போன்று வடிவமைக்கப்பட்ட சூரிய தகடுகள் பொருத்திய சூரிய மரம் வைக்கப்பட்டுள்ளது.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Exit mobile version