Tnpsc Current Affairs in Tamil – 10th January 2024

1. நடப்பு 2024ஆம் ஆண்டில் கடைப்பிடிக்கப்படும் புவி சுழற்சி நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Celebrating Earth’s Natural Beauty

ஆ. Recognizing Human Achievements in Space Exploration

இ. Honoring the Discovery of Our Planet’s Movement

ஈ. Promoting Environmental Conservation

2. அண்மையில், “யோக்கியஸ்ரீ” என்ற விரிவான சமூக நலத்திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?

அ. மேற்கு வங்காளம்

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. ஜார்கண்ட்

ஈ. பீகார்

3. அண்மையில் அறிவியலாளர்களால் வடக்குக் கிரீன்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டு, “கோர விலங்கு” என்று பெயரிடப்பட்ட, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட, ‘மாமிச உண்ணும் புழுவின்’ பெயர் என்ன?

அ. Arcticus wormensis

ஆ. Polarterroris predatoriens

இ. Greenlandicus carnivorous

ஈ. Timorebestia koprii

4. கேலுசரண் மொகபத்ராவின் 98ஆவது பிறந்தநாள் அண்மையில் அனுசரிக்கப்பட்டது. கீழ்காணும் எந்த நடன வடிவத்தை புதுப்பிக்கவும் பிரபலப்படுத்தவும் அவர் உதவினார்?

அ. பரதநாட்டியம்

ஆ. கதக்

இ. ஒடிஸி

ஈ. மணிப்பூரி

5. ‘அல்வாரோ’ என்ற வெப்பமண்டல சூறாவளியுடன் தொடர்புடைய பகுதி எது?

அ. தென்கிழக்காசியா

ஆ. மடகாஸ்கர்

இ. தென்னமெரிக்கா

ஈ. ஆஸ்திரேலியா

6. அழிந்துவரும், ‘பன்றி மான்’ அண்மையில் முதன்முறையாக எந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதியில் தென்பட்டது?

அ. இராஜாஜி புலிகள் காப்பகம்

ஆ. சுந்தரவன வனவிலங்கு சரணாலயம்

இ. பந்திப்பூர் தேசியப்பூங்கா

ஈ. காசிரங்கா தேசியப்பூங்கா

7. உள்நாட்டு நீர்வழிகள் மேம்பாட்டு கவுன்சிலின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம் எது?

அ. சென்னை

ஆ. மதுரை

இ. கொல்கத்தா

ஈ. கன்னியாகுமரி

8. iDEX-DIO என்பது கீழ்காணும் எந்த அமைச்சகத்தின் முதன்மைத் திட்டமாகும்?

அ. சுற்றுலா அமைச்சகம்

ஆ. பாதுகாப்பு அமைச்சகம்

இ. MSME அமைச்சகம்

ஈ. பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

9. வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பின் (BIMSTEC) 4ஆவது பொதுச்செயலாளர் யார்?

அ. இந்திர மணி பாண்டே

ஆ. டென்சின் லெக்பெல்

இ. அப்துல் மொதலேப் சர்க்கர்

ஈ. ஷபானா ஃபயாஸ்

10. புற்றுநோய் எதிர்ப்பு மருந்தான கேம்ப்டோதெசினின் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக நோத்தபோடைட்ஸ் நிம்மோனியானா தாவர உயிரணுக்களின் வளர்சிதை மாற்றப்பொறியியலில் கூட்டிணைந்துள்ள நிறுவனங்கள் எவை?

அ. இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், பம்பாய் மற்றும் டெல்லி

ஆ. இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், மெட்ராஸ் மற்றும் மண்டி

இ. இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், கொல்கத்தா மற்றும் புனே

ஈ. இந்திய அறிவியல் கழகம், பெங்களூர் மற்றும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம், கான்பூர்

11. 1850-1900 சராசரியுடன் ஒப்பிடுகையில், 2023இல் உலகளாவிய மேற்பரப்பு காற்றின் வெப்பநிலை எவ்வளவு உயர்ந்துள்ளது?

அ. 1.48°C

ஆ. 1.53°C

இ. 1.69°C

ஈ. 1.82°C

12. ICD-11 TM தொகுதி-2இன் முதன்மை நோக்கம் என்ன?

அ. நவீன உயிரி மருத்துவத்தை வகைப்படுத்துதல்

ஆ. WHO வகைப்படுத்தலில் ஆயுர்வேதம், சித்தா, யுனானி உட்பட

இ. தொற்றுநோய்களைக் கண்காணித்தல்

ஈ. ஆயுஷ் காப்பீட்டுத் திட்டத்தை உருவாக்குதல்

13. “மாயத்தீவுகள்” என்ற பதம், கீழ்காணும் எந்த வான்பொருளில் காணப்படும் அம்சங்களைக் குறிக்கிறது?

அ. சனி

ஆ. செவ்வாய்

இ. டைட்டன்

ஈ. புதன்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழ்நாட்டில் 40,000 பேருக்கு தொலைநிலை மனநல ஆலோசனை: மக்கள் நல்வாழ்வுத் துறை.

“நட்புடன் உங்களோடு” தொலைபேசிவழி மனநல சேவை திட்டமானது 2022 அக்.27 அன்று தொடக்கப்பட்டது. இதன்மூலம் இதுவரை 40,000-க்கும் மேற்பட்டோருக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த அக் 10 அன்று தில்லியில் நடைபெற்ற உலக மனநல நாள் விழாவில், ‘நட்புடன் உங்களோடு’ சேவைமூலம் ஓராண்டில் அதிக எண்ணிக்கையிலான அழைப்புகளை கையாண்டதற்காக மத்திய அரசின் விருதை தமிழ்நாடு பெற்றது. தற்போது அந்தத் திட்டத்தின் இரண்டாவது பிரிவு கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு முன், ‘104’ என்ற உதவி எண்மூலம் NEET தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

2. விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குவோருக்கான தேசிய விருதுகள் – 2023.

மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருது

சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி பாட்மின்டன்
சிராக் ஷெட்டி பாட்மின்டன்

துரோணாச்சார்யா விருது

லலித்குமார் மல்யுத்தம்
ஆர். பி. இரமேஷ் செஸ்
மஹாவீர் பிரசாத் சைனி பாரா தடகளம்
ஷிவேந்திர சிங் ஹாக்கி
கணேஷ் பிரபாகர் மல்லர்கம்பம்

துரோணாச்சார்யா விருது – (வாழ்நாள் சாதனையாளர்)

ஜஸ்கிரத்சிங் கிரெவால் கோல்ஃப்
இ. பாஸ்கரன் கபடி
ஜெயந்தகுமார் புஷிலால் டேபிள் டென்னிஸ்

தியான்சந்த் விருது – (வாழ்நாள் சாதனையாளர்)

மஞ்ஜுஷா கன்வர் பாட்மின்டன்
வினீத்குமார் சர்மா ஹாக்கி
கவிதா செல்வராஜ் கபடி

மெளலானா அபுல்கலாம் ஆஸாத் கோப்பை

குருநானக் தேவ் பல்கலைக்கழகம் (அமிருதசரஸ்) முதலிடம்
லவ்லி தொழில்முறை பல்கலைக்கழகம் (பஞ்சாப்) இரண்டாமிடம்
குருக்ஷேத்ரா பல்கலைக்கழகம் (குருஷேத்ரம்) மூன்றாமிடம்

அர்ஜுனா விருது

ஓஜாஸ் பிரவீண் தியோடேல் வில்வித்தை
அதிதி சுவாமி வில்வித்தை
முரளி ஸ்ரீசங்கர் தடகளம்
பாருல் செளதரி தடகளம்
முகமது ஹசாமுதின் குத்துச்சண்டை
வைஷாலி செஸ்
முகமது ஷமி கிரிக்கெட்
அனுஷ் அகர்வல்லா குதிரையேற்றம்
திவ்யகிருதி சிங் குதிரையேற்றம்
தீக்ஷா தாகர் கோல்ஃப்
கிருஷண் பகதூர் பாதக் ஹாக்கி
சுஷீலா சானு ஹாக்கி
பவன்குமார் கபடி
ரிது நெகி கபடி
நஸ்ரீன் கோ-கோ
பிங்கி லான் பெளல்ஸ்
ஐஸ்வரி பிரதாப்சிங் தோமர் துப்பாக்கி சுடுதல்
ஈஷா சிங் துப்பாக்கி சுடுதல்
ஹரிந்தர்பால் சிங் சந்து ஸ்குவாஷ்
அஹிகா முகர்ஜி டேபிள் டென்னிஸ்
சுனில்குமார் மல்யுத்தம்
அன்டிம் மல்யுத்தம்
ரோஷிபினா தேவி வுஷு
ஷீத்தல் தேவி பாரா வில்வித்தை
அஜய்குமார் ரெட்டி பார்வையற்றோர் கிரிக்கெட்
பிராச்சி யாதவ் பாரா கேனோயிங்

தமிழர்கள்: அர்ஜுனா விருதுபெற்ற வைஷாலி, துரோணாச்சார்யா விருது பெற்ற ஆர். பி. ரமேஷ் (செஸ்), கணேஷ் பிரபாகர் (மல்லர்கம்பம்), தியான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்ற கவிதா செல்வராஜ் (கபடி) ஆகியோர் தமிழர்களாவர்.

Exit mobile version