General Tamil Model Question Paper 8

General Tamil Model Question Paper 8

General Tamil Model Question Paper 8: Tnpsc Aspirants can use this opportunity to check General Tamil Model Question Papers For Tnpsc. General Tamil Model Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Model Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

41. சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடர் எழுதுக:

(அ)”கல்லார்க்கும் கற்றார்க்கும் களிப்பருளும் களிப்போ”

(ஆ) “கற்றார்க்கு கல்லார்க்கும் களிப்பருளும் களிப்பே”

(இ) “களிப்பே களிப்பருளும் கற்றார்க்கும் கல்லார்க்கும்”

(ஈ) களிப்பருளும் களிப்பே கற்றார்க்கும் கல்லார்க்கும்”

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ)”கல்லார்க்கும் கற்றார்க்கும் களிப்பருளும் களிப்போ”

42. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்

(அ) திறம்பட வுரைப்பது குறத்திப் பாட்டே இறப்பு நிகழ்வெதிர் வென்னும் முக்காலமும்

(ஆ) முக்காலமும் வுரைப்பது குறத்திப்பாட்டே இறப்பு நிகழ்வெதிர் திறப்பட வென்னும்

(இ) இறப்பு நிகழ்வெதிர் வென்னும் முக்காலமும் திறப்பட வுரைப்பது குறத்திப் பாட்டே

(ஈ) குறத்திப்பாட்டே முக்காலமும் வுரைப்பது இறப்பு நிகழ்வெதிர் வென்னும் திறப்பட

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) இறப்பு நிகழ்வெதிர் வென்னும் முக்காலமும் திறப்பட வுரைப்பது குறத்திப் பாட்டே

43. விடையைத்தேர்க: இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறைப்பொருளையும் முதன் முதலாகச் சேர்த்து விளக்கம் தந்த நூல் எது?

(அ) அபிதான கோசம்

(ஆ) அபிதான சிந்தாமணி

(இ) விவேக சிந்தாமணி

(ஈ) சீவக சிந்தாமணி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) விவேக சிந்தாமணி

1934-ஆம் ஆண்டு சிங்காரவேலனாரால் வெளியிடப்பட்ட “அபிதான சிந்தாமணி” இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறைப் பொருள்களுக்கும் விளக்கம் அளிக்கிறது

44. “திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது” – என்று கூறியவர் யார்?

(அ) காந்திஜி

(ஆ) நேருஜி

(இ) இராஜாஜி

(ஈ) நேதாஜி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) இராஜாஜி

இராஜாஜியின் கூற்று:“திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது. காந்தி தூவிய விதை நாமக்கல் கவிஞராகத் தோன்றியது”.

45. “ஆயுள் நாள் முழுவதும் தமிழ்மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்கக் கூடிய வாடாத கற்பகப் பூச்செண்டு” – என்று கவிமணியின் பாடலைப் பாராட்டியவர் யார்?

(அ) வ.உ.சிதம்பரம்

(ஆ) டி.கே.சிதம்பரம்

(இ) சிதம்பர சுவாமி

(ஈ) சிதம்பர நாதன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) டி.கே.சிதம்பரம்

General Tamil Study Materials

General Tamil Model Questions Pdf

46. திரு.வி.கல்யாண சுந்தரனாரின் பயண இலக்கிய நூல் எது?

(அ) யான் கண்ட இலங்கை

(ஆ) எனது இலங்கைச்செலவு

(இ) யான் கண்ட ஜப்பான்

(ஈ) உலகம் சுற்றிய தமிழன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) எனது இலங்கைச்செலவு

47. கீழ்க்காணும் சொற்களில் தொழிற்பெயர் அல்லாததை அறிக

(அ) அழுகை

(ஆ) தொல்லை

(இ) போக்கு

(ஈ) தொழுகை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) தொல்லை

தொல்லை-பண்புப்பெயர்.

48. செயப்பாட்டு வினைச்சொற்றொடரைக் கண்டறிக:

(அ) வ.உ.சி. தொல்காப்பியத்தைப் பதிப்பித்தார்

(ஆ) தொல்காப்பியம் வ.உ.சியால் பதிப்பிக்கப்பட்டது

(இ) பதிப்பித்தார் தொல்காப்பியத்தை வ.உ.சி

(ஈ) வ.உ.சி. பதிப்பித்தது தொல்காப்பியம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) தொல்காப்பியம் வ.உ.சியால் பதிப்பிக்கப்பட்டது

49. “குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது” – இக்குறளில் அடி எதுகையாவது

(அ) குணமென்னும் – குன்றேறி

(ஆ) குன்றேறி – நின்றார்

(இ) குணமென்னும் – கணமேயும்

(ஈ) கணமேயும்-காத்தல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) குணமென்னும் – கணமேயும்

இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது எதுகைத் தொடையாகும்

50. பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்-எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக:

(அ) தனிவாக்கியம்

(ஆ) கலவை வாக்கியம்

(இ) செயப்பாட்டுவினை வாக்கியம்

(ஈ) பிறவினை வாக்கியம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) தனிவாக்கியம்

ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரே பயனிலையைக் கொண்டு முடிவது தனி வாக்கியமாகும்.

51. பொருந்தா இணையைத் தேர்க:

சொல் பொருள்

1. மா அழுகு

2. மீ உயர்ச்சி

3. மூ மூப்பு

4. மை மேம்பாடு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

4. மை மேம்பாடு

ஓரெழுத்து ஒரு மொழி: மா-அழகு, மேன்மை, மீ-உயர்ச்சி, மூ-மூப்பு, மூன்று. மை-அஞ்சனம்,எழுதுமை. ஓரிஜினல் வினாவில் அழகு என்பது “அழுகு” என்று பிழையாக கொடுக்கப்பட்டுள்ளது

52. ஏழையின் குடிசையில்

அடுப்பும் விளக்கும் தவிர

எல்லாமே எரிகின்றன” – இக்கவிதை வரிகளைப் பாடியவர் யார்?

(அ) அறிஞர் அண்ணா

(ஆ) வல்லிக்கண்ணன்

(இ) பட்டுக்கோட்டையார்

(ஈ) மீரா

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) வல்லிக்கண்ணன்

53. “வெப்பத் தடுகளத்து வேழங்க ளாயிரமும்

கொப்பத் தொருகளிற்றால் கொண்டோன்” – இவ்வரிகள் யாரைக் குறிப்பிடுகிறது?

(அ) இராசேந்திரன்

(ஆ) முதல் இராசராசன்

(இ) இராசாதிராசன்

(ஈ) இராச மகேந்திரன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) இராசேந்திரன்

விக்கிரமச் சோழன், 2-ஆம் குலோத்துங்கள், 2-ஆம் இராசராசன் ஆகிய மன்னர்களின் சிறப்பினைக் குறித்து ஒட்டக்கூத்தர் பாடிய மூவருலா என்ற நூலில் மேற்கண்ட செய்யுள் வந்துள்ளது.

பொருள்:ஆண் யானைகள் ஆயிரத்தையும் ஒரு களிற்றைக் கொண்டு கொப்பத்துப் போரில் வென்றவன் இராசேந்திரன் என்பதாகும்.

54. “நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்

பகலும்பாற் பட்டன் றிருள்” – இக்குறள் இடம்பெற்றுள்ள இயல் எது?

(அ) இல்லறவியல்

(ஆ) துறவறவியல்

(இ) ஊழியல்

(ஈ) பாயிரவியல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

இப்பாடல் 999-ஆவது குறளாகும்.

பாயிரம்: 1 முதல் 40 வரை: இல்லறவியல்: 41 முதல் 240 வரை: துறவறவியல்: 241 முதல் 370 வரை: ஊழியல்: 371 முதல் 380 வரை

சரியான விடை: குடியியல்: 951 முதுல் 1080 வரை.

வினாவிற்கு கொடுக்கப்பட்ட 4 கொள்குறி விடைகளும் தவறு

55. பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு

பருமணி பகராநெற் – இத்தொடரில் “புயல்” – என்னும் சொல்லிற்கு பொருள்

(அ) வானம்

(ஆ) காற்று

(இ) மேகம்

(ஈ) நீர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) மேகம்

நந்திக் கலம்பகம்

பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு

பருமணி பகராநெற்

கதிர்தொகு வருபுனல் கரைபொரு திழிதரு

காவிரி வளநாடா!

பொருள்: ஊர்தோறும் மேகங்கள் பொழிகின்ற மணிகளையும், மூங்கில் தந்த பெரிய முத்துகளையும் கொடுத்து அவ்வூர்களிலுள்ள நெற்கதிர்களைத் தொகுத்து கொண்டு வருகின்ற நீர், கரையோடு மோதி வழியும் காவிரியின் வளம் பொருந்திய நாட்டை உடையவனே!

56. கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?

(அ) சே-சோலை

(ஆ) சோ-சிவப்பு

(இ) கா-மதில்

(ஈ) மா-விலங்கு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) மா-விலங்கு

சே-காளைமாடு, சிவப்பு. கா-காத்தல், சோலை. மதில், நகர். மா-விலங்கு, அழகு, மேன்மை.

57. ‘ஷெல்லிதாசன்” என்று தன்னைக் கூறிக்கொண்டவர் யார்?

(அ) சுப்பிரமணிய பாரதியார்

(ஆ) சுத்தானந்த பாரதியர்

(இ) சோமசுந்தர பாரதியார்

(ஈ) சுப்பிரமணிய சிவா

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) சுப்பிரமணிய பாரதியார்

58. குண்டலகேசிக்கு எதிராக எழுந்த வாதநூல் எது?

(அ) சூளாமணி

(ஆ) நாககுமார காவியம்

(இ) யசோதர காவியம்

(ஈ) நீலகேசி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) நீலகேசி

குண்டலகேசி என்ற பௌத்தசமய நூலுக்கு எதிராக எழுதப்பட்ட நீலகேசி சமண சமயம் சார்ந்த நூலாகும்.

59. “சேமமுற நாள் முழுவதும் உழைப்பதனாலே” – இந்தத் தேசமெல்லாம் செழுத்திடுது – எனப் பாடியவர்

(அ) கண்ணதாசன்

(ஆ) தஞ்சை இராமையாதாஸ்

(இ) மருதகாசி

(ஈ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) மருதகாசி

60. கீழ்வருவனவற்றுள் கவிஞர் கண்ணதாசன் இயற்றாத நூல் எது?

(அ) ஆயிரந்தீவு அங்கயற்கண்ணி

(ஆ) இராஜ தண்டனை

(இ) மாங்கனி

(ஈ) கொய்யாக்கனி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) மாங்கனி

“கொய்யாக்கனி” – இயற்றியவர் பெருஞ்சித்திரனார்

Exit mobile version