General Tamil Model Question Paper 7

General Tamil Model Question Paper 7

General Tamil Model Question Paper 7: Tnpsc Aspirants can use this opportunity to check General Tamil Model Question Papers For Tnpsc. General Tamil Model Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Model Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

21. முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர்

(அ) குமரகுருபரர்

(ஆ) பலபட்டடைச் சொக்கநாதர்

(இ) சேக்கிழார்

(ஈ) சிவஞான சுவாமிகள்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) குமரகுருபரர்

22. இந்திய நூலகத் தந்தை எனப்போற்றப்படுகிறவர்

(அ) உ.வே.சாமிநாத அய்யர்

(ஆ) மாயூரம் வேதநாயகம் பிள்ளை

(இ) சீர்காழி சீ.இரா.அரங்கநாதன்

(ஈ) தஞ்சை வாணன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) சீர்காழி சீ.இரா.அரங்கநாதன்

நூலகப் பயன்பாட்டிற்கான விதிகளை உருவாக்கித் தந்த சீர்காழி இர.அரங்கநாதன் “இந்திய நூலகத் தந்தை” எனப் போற்றப்படுகிறார்.

23. “நல்ல” எனும் அடைமொழியைப் பெற்ற நூல் எது?

(அ) நற்றிணை

(ஆ) குறுந்தொகை

(இ) அகநானூறு

(ஈ) ஐங்குறுநூறு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) குறுந்தொகை

“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

ஓத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று

இத்திறத்த எட்டுத் தொகை”

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை சங்க நூல்களாகும். இவற்றை பதினெண் மேல் கணக்கு நூல்கள் என்றும் கூறுவர்.

24. “கடலில் கரைத்த பெருங்காயம் போல” இந்த உவமை வாக்கியம் உணர்த்தும் பொருள்

(அ) பகர்தல்

(ஆ) கலத்தல்

(இ) வீணாதல்

(ஈ) ஏமாறல்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) வீணாதல்

25. தெரிநிலை வினையெச்சத்தை எடுத்து எழுதுக:

(அ) நோயின்றி வாழ்கிறான்

(ஆ) மெல்ல நடந்தான்

(இ) நடந்து வந்தான்

(ஈ) நன்கு பாடினான்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) நடந்து வந்தான்

நடந்து வந்தான்-தெரிநிலை வினையெச்சம். வெளிப்படையாகக் காலம் காட்டுவது தெரிநிலை வினையெச்சமாகும். ஏனைய மூன்றும் குறிப்பு வினையெச்சங்களாகும்.

General Tamil Study Materials

General Tamil Model Questions Pdf

26. பொருத்துக:

(அ) கை – 1. துன்பம்

(ஆ) நோ – 2. கைப்பற்றுதல்

(இ) யா – 3. ஒழுக்கம்

(ஈ) வெள – 4. ஒருவகை மரம்

குறியீடுகள்:

அ ஆ இ ஈ

(அ) 2 4 3 1

(ஆ) 3 4 1 2

(இ) 3 2 4 1

(ஈ) 3 1 4 2

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) 3 1 4 2

27. ஈற்றயலடி “சிந்தடி” பெற்று வரும் பா வகை

(அ) நேரிசைச் சிந்தியல் வெண்பா

(ஆ) இன்னிசைச் சிந்தியல் வெண்பா

(இ) நிலைமண்டிலய ஆசிரியப்பா

(ஈ) நேரிசை ஆசிரியப்பா

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) நேரிசை ஆசிரியப்பா

நேரிசை ஆசிரியப்பாவின் ஈற்றயலடி (கடைசி அடிக்கு முதலடி) மூன்று சீர்களால் வருவதாகும். மூன்று சீர்களால் ஆகிய அடிக்கு சிந்தடி என்று பெயராகும்.

28. விடைக்கேற்ற வினாவைத் தேர்க:

“பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணம் பெறுதல் இன்பம்”

(அ) பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணத்தால் பெறுவது எது?

(ஆ) பெற்றதை வழங்கி ஏன் வாழ வேண்டும்?

(இ) பெருங்குணம் எப்போது வரும்?

(ஈ) பெறுவது எது?

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணத்தால் பெறுவது எது?

29. பொருந்தா இணையைக் கண்டறிக:

(அ) தினம் – நாள்

(ஆ) நெருநல் – நேற்று

(இ) சலவர் – நல்லவர்

(ஈ) மாரன் – மன்மதன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) சலவர் – நல்லவர்

சலவர்-வஞ்சகர். “சலவரைச் சாரா விடுதல் இனிதே”-இனியவை நாற்பது. ஆசிரியர்-பூதஞ்சேந்தனார்

30. வேர்ச்சொல் தேர்க:

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு

(அ) பற்றுக

(ஆ) பற்றற்றான்

(இ) பற்றி

(ஈ) பற்று

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) பற்று

பற்று-வேர்ச்சொல். பற்றுக-வியங்கோள் வினைமுற்று. பற்றற்றான்-எதிர்மறை வினைமுற்று. பற்றி-வினையெச்சம்.

31. “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” – எனப்பாடியவர்

(அ) அரிசில் கிழார்

(ஆ) மோசிகீரனார்

(இ) ஒளவையார்

(ஈ) பரணர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) மோசிகீரனார்

நெல்லும் உயிரன்றே: நீரும் உயிரன்றே:

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம். – மோசிகீரனார். புறநானூறில் 186-ஆவது பாடல்.

32. சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் இருந்து வடமொழி, தென்மொழிப் புலவர் போற்ற அரங்கேறிய நூல் எது?

(அ) பெரியபுராணம்

(ஆ) திவிளையாடற்புராணம்

(இ) கந்த புராணம்

(ஈ) திருவாசகம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) திருவிளையாடற்புராணம்

திருவிளையாடற் புராணத்தை இயற்றியவர் பரஞ்சோதி முனிவர். இவரது காலம் கி.பி. 16-ஆம் நூற்றாண்டு

33. பெரியபுராணத்தில் யாருடைய வரலாறு மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது?

(அ) திருநாவுக்கரசர்

(ஆ) திருஞானசம்பந்தர்

(இ) சுந்தரர்

(ஈ) காரைக்கால் அம்மையார்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) திருஞானசம்பந்தர்

பெரியபுராணத்தில் திருஞானசம்பந்தரின் வரலாறே அதிகமான பாடல்களைப் பெற்றுள்ளது. எனவேதான் பெரியபுராணத்தை “பிள்ளை பாதி புராணம்பாதி” என்று கூறுகின்றனர்.

34. சுந்தரர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இடம் எது?

(அ) திருச்செங்குன்றம்

(ஆ) திருவெண்ணெய் நல்லூர்

(இ) திருச்செந்தூர்

(ஈ) திருவாரூர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) திருவெண்ணெய் நல்லூர்

இறைவன் திருவெண்ணெய் நல்லூரில் சுந்தரரை தடுத்தாட் கொண்டார். அங்குதான் சுந்தரர் “பித்தா பிறைசூடி பெருமானே” என்ற தனது முதல் பதிகத்தைப் பாடினார்.

35. பிறவினை வாக்கியத்தை கண்டறிக:

(அ) புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார்.

(ஆ) அகநாநூற்றுப் பாடல்களை மதுரை உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திர சன்மர் தொகுத்தார்.

(இ) அகநானூற்றைப் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி தொகுப்பித்தான்.

(ஈ) ஐங்குறுநூறு நூலைப் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார் தொகுத்தார்.

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) அகநானூற்றைப் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி தொகுப்பித்தான்.

(அ)செய்வினை.

(ஆ) மற்றும்

(ஈ) தன்வினை.

(இ) பிறவினை

36. பின்வரும் இலக்கணக்குறிப்புக்குரிய பொருந்தாதச் சொல்லைத் தேர்க: பண்புத்தொகை

(அ) மென்கண்

(ஆ) செய்வினை

(இ) நன்கலம்

(ஈ) அருவிலை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) செய்வினை

செய்வினை-வினைத்தொகை: ஏனைய மூன்றும் பண்புத்தொகைகள்.

37. “நெறியினில் உயிர்செகுத் திடுவ” – இதில் “உயிர்செகுத்து” எவ்விலக்கணத்தைச் சார்ந்தது?

(அ) ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்

(ஆ) வினையாலணையும் பெயர்

(இ) வியங்கோள் வினைமுற்று

(ஈ) இரண்டாம் வேற்றுமைத் தொகை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) இரண்டாம் வேற்றுமைத் தொகை

இரண்டு சொற்களுக்கிடையே வேற்றுமை உருபுகள் மறைந்துவரச் சொற்கள் தொடர்ந்து நிற்பதற்கு வேற்றுமைத் தொகை என்று பெயர். இரண்டாம் வேற்றுமை உருபு “ஐ” மறைந்து வந்துள்ளது. “உயிரை செகுத்து” என்பது “உயிர்செகுத்து” என வந்துள்ளது

38. சரியானவற்றைத் தேர்க:

பொருள் – திணை

(அ) எதிரூன்றல் – 1. வெட்சி

(ஆ) மீட்டல் – 2. வஞ்சி

(இ) செருவென்றது – 3. வாகை

(ஈ) எயில்காத்தல் – 4. நொச்சி

(அ) 1ம், 2ம் சரி

(ஆ) 2ம், 3ம் சரி

(இ) 3ம், 4ம் சரி

(ஈ) 1ம், 4ம் சரி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) 3ம், 4ம் சரி

(அ) கவர்தல் – வெட்சித் திணையாகும்

(ஆ) மீட்டல் – கரந்தைத் திணையாகும்

(இ) செருவென்றது – வாகைத் திணையாகும்

(ஈ) எயில்காத்தல் – நொச்சித் திணையாகும்

39. பிரித்தெழுதுக: நெடுநாவாய்

(அ) நெடு+நாவாய்

(ஆ) நெடுமை+நா+வாய்

(இ) நெடுமை+நாவாய்

(ஈ) நெடுநா+வாய்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) நெடுமை+நாவாய்

நெடுநாவாய் என்பது பண்புப்பெயர் புணர்ச்சியாகும். நெடுமை+நாவாய் – நெடுநாவாய். ஈறுபோதல் விதிப்படி “மை” விகுதி கெட்டு இயல்பாய் புணர்ந்தது.

40. செய் – என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு:

(அ) செய்தீர்

(ஆ) செய்வாய்

(இ) செய்தவன்

(ஈ) செய்தான்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) செய்தவன்

செய்தீர் – இறந்தகால முன்னிலை ஒருமை வினைமுற்று.

செய்வாய் – எதிர்கால முன்னிலை ஒருமை வினைமுற்று

செய்தவன் – வினையாலணையும் பெயர்

செய்தான் – இறந்தகால வினைமுற்று

Exit mobile version