General Tamil Model Question Paper 24

General Tamil Model Question Paper 24

General Tamil Model Question Paper 24: Tnpsc Aspirants can use this opportunity to check General Tamil Model Question Papers For Tnpsc. General Tamil Model Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Model Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. உம், என்று, கொல், அம்ம – எவ்வகைச் சொல் என்பதைக் கண்டறிக:

(அ) பெயர்ச்சொல்

(ஆ) வினைச்சொல்

(இ) உரிச்சொல்

(ஈ) இடைச்சொல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) இடைச்சொல்

பெயர்ச்சொற்களுக்கும் வினைச்சொற்களுக்கும் இடையே வந்து பொருள் உணர்த்தும் சொற்கள் இடைச்சொற்கள் எனப்படும்.

உம், கொல், மன், மற்று, என, என்று முதலியவை இடைச்சொற்களாகும்.

எ.கா: உம்-வயிற்றிற்கும் ஈயப்படும்.

கொல்-இவன் தந்தை என்நோற்றான் கொல்.

மன்-கூரியதோர் வாள்மன்.

மற்று-மற்றென்னை யாள்க.

என-மழை பொழிந்ததென மக்கள் மகிழ்ந்தனர்.

என்று-வெள்ளென்று விளர்த்தது.

2. “கண்ணன் நோயின்றி வாழ்ந்தான்” – எவ்வகையான எச்சம்?

(அ) வினையெச்சம்

(ஆ) தெரிநிலை வினையெச்சம்

(இ) குறிப்பு வினையெச்சம்

(ஈ) முற்றெச்சம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) குறிப்பு வினையெச்சம்

குறிப்பு வினையெச்சம்

காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் குறிப்பால் உணர்த்தி வினைச்சொல்லைத் தழுவி வருவது குறிப்பு வினையெச்சம் ஆகும்.

எ.கா: மெல்லச் சென்றான்.

வந்து போனான்.

நோயின்றி வாழ்ந்தான்.

3. “பண்ணொடு தமிழொப்பாய்” எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்.

(அ) திருவாசகம்

(ஆ) தேவாரம்

(இ) திருக்குறள்

(ஈ) பட்டினப்பாலை.

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) தேவாரம்

4. 4 என்ற எண்ணைக் குறிக்கும் தமிழெழுத்து எது?

(அ) அ

(ஆ) ச

(இ) உ

(ஈ) ரு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) ச

அ – எட்டு,

ச-நான்கு,

உ-இரண்டு,

ரு-ஐந்து

5. மாணவர்களே! உங்களுக்குச் சீருடை இல்லையோ? – என வினவும் வினா

(அ) அறிவினா

(ஆ) ஐயவினா

(இ) கொடை வினா

(ஈ) ஏவல் வினா

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) கொடை வினா

6. பொருந்தாத மரபுத் தொடரைக் குறிப்பிடுக:

(அ) குயில் கூவும்

(ஆ) மயில் அகவும்

(இ) கோழி கூவும்

(ஈ) கிளி பேசும்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) கோழி கூவும்

கோழி கொக்கரிக்கும்

7. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக:

மணம் வைத்தாய், புதுமை, மண்ணில், மலர்க்குள்

(அ) மலர்க்குள் புதுமை மண்ணில் மணம் வைத்தாய்

(ஆ) மண்ணில் புதுமை மலர்க்குள் மணம் வைத்தாய்

(இ) மணம் வைத்தாய் மலர்க்குள் மண்ணில் புதுமை

(ஈ) மலர்க்குள் புதுமை மணம் வைத்தாய் மண்ணில்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) மண்ணில் புதுமை மலர்க்குள் மணம் வைத்தாய்

8. திருவாசகத்தில் இடம் பெற்ற பாடல்களின் எண்ணிக்கை

(அ) அறுநூற்று ஐம்பத்தெட்டு

(ஆ) அறநூற்று எண்பத்தைந்து

(இ) நானூற்று ஐம்பத்தெட்டு

(ஈ) அறுநூற்றுப் பத்து

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) அறுநூற்று ஐம்பத்தெட்டு

9. சொல்லிசை அளபெடை தேர்க:

(அ) உண்பதூஉம்

(ஆ) பெறா அவிடின

(இ) தழீஇ

(ஈ) அண்ணன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) தழீஇ

சொல்லிசை அளபெடை:

தழீஇ – “தழீ” என்னும் தொழிற்பெயர்ச்சொல் ‘தழீஇ’ (தழுவி) என வினையெச்சம் சொல்லாக அளபெடுத்ததால் இது சொல்லிசை அளபெடை ஆயிற்று. இவ்வளபெடை “இ” என்னும் எழுத்தில் முடிந்திருக்கும்.

10. பிரித்தெழுதுக:

வெவ்விரும்பாணி

(அ) வெம்+இரும்பு+ஆணி

(ஆ) வெம்+இருப்பு+ஆணி

(இ) வெம்மை+இரும்பு+ஆணி

(ஈ) வெம்மை+இருப்பு+ஆணி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) வெம்மை+இரும்பு+ஆணி

வெம்மை+இரும்பு

வெம்மை என்பதன் ஈறு(மை)விகுதி கெட்டு முன் ஒற்றாகிய மகரவொற்று வகர ஒற்றாகத் திரிந்து வெவ்+இரும்பு என்றானது. இது “முன்னின்ற மெய்திரிதல்” விதியாகும்.

“தனிக்குறில் முன் ஒற்றுயிர்வரின் இரட்டும்” என்ற விதிப்படி “வெவ்வ்+இரும்பு” என்றானது. “உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “வெவ்விரும்பு” என்றானது.

“மென்றொடர் மொழியுள் சிலவேற் றுமையில்

தம்மின வன்றொட ராகா மன்னே”

– நன்னூல் – 184.

என்ற விதிப்படி “வெவ்விரும்பு+ஆணி” என்றானது.

“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி வருமொழி முதலில் உயிரெழுத்து வந்ததால் வெவ்விரும்ப்+ஆணி என்றானது.

“உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “வெவ்விரும்பாணி” என்றானது.

11. பொருந்தா இணையைக் கண்டறிக:

(அ) பையுள்-இன்பம்

(ஆ) பனவன்-அந்தணன்

(இ) விபுதர்-புலவர்

(ஈ) அல்கு-இரவு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) பையுள்-இன்பம்

பையுள்-வருத்தம்(அ) துன்பம்

General Tamil Study Materials

General Tamil Model Questions Pdf

12. பிரித்தெழுதுக:

நன்கணியர்.

(அ) நன்கு+அணியர்

(ஆ) நன்+அணியர்

(இ) நான்கு+அணியர்

(ஈ) நன்கு+கணியர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) நன்கு+அணியர்

நன்கு+அணியர்.

“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி.

“நன்க்+உ+அணியர்”. உ கெட்டு நன்க்+அணியர் என்றானது.

“உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி நன்கணியர் என்று புணர்ந்தது.

13. பொருத்துக:

அ. வைதருப்பம் – 1. மதுரகவி

ஆ. கௌடம் – 2. ஆசுகவி

இ. பாஞ்சாலம் – 3. வித்தாரகவி

ஈ. மாகதம் – 4. சித்திரகவி

அ ஆ இ ஈ

அ. 2 3 1 4

ஆ. 4 3 1 2

இ. 2 1 4 3

ஈ. 3 4 2 1

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

இ. 2 1 4 3

நான்கு செய்யுள் நெறிகள்:

வைதருப்பம்-ஆசுகவி.

கௌடம்-மதுரகவி.

பாஞ்சாலம்-சித்திரக்கவி.

மாகதம்-வித்தாரகவி.

ஆசுகவி-“பாடு” எனக் கூறியவுடன் பாடுபவர்.

மதுரகவி-செவிக்கினிய ஓசை நலம் சிறக்கப்பாடுபவர்.

சித்திரக்கவி-சொல்லணி அமைத்துச் சுவை வளம் செழிக்கப் பாடுபவர்.

வித்தாரகவி-தொடர்நிலைச் செய்யுள்களும் தூயக் காப்பியங்களும் இயற்றுபவர்.

14. “விளம்பி” என்பது ———– பெயர்.

(அ) இயற்பெயர்

(ஆ) புனைப்பெயர்

(இ) ஊர்ப்பெயர்

(ஈ) இறைவனின் பெயர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) ஊர்ப்பெயர்

நான்மணிக்கடிகையின் ஆசிரியர் விளம்பிநாகனார். “விளம்பி” என்பது ஊர்ப்பெயராகும். “நாகனார்” என்பது ஆசிரியரின் பெயராகும்.

15. “அற்பு தப்பழ ஆவணங் காட்டி

அடியனா என்னை ஆளது கொண்” – பாடியவர் யார்?

(அ) அப்பர்

(ஆ) சம்பந்தர்

(இ) சுந்தரர்

(ஈ) திருமூலர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) சுந்தரர்

சுந்தரர் தேவாரம்

கற்ப கத்தினைக் கனகமால் வரையைக்

காம கோபனைக் கண்ணுத லானைச்

சொற்ப தப்பொருள் இருள றுத்திடும்

துய்ய சோதியை வெண்ணெய் நல்லூரில்

அற்பு தப்பழ ஆவணங் காட்டி

அடிய னாஎன்னை ஆளது கொண்ட

நற்ப தத்தைநள் ளாறனை அமுதை

நாயி னேன்மறந் தென்னினைக் கேனே

– சுந்தரர்.

பொருள்: “இறைவன், வேண்டுவோர் வேண்டியவற்றை வழங்கும் கற்பகத் தருவினைப் போன்றவன். பெரிய பொன்மலையைப் போன்றவன். தன் தவத்தினைக் கலைத்த காமனைக் கோபம் கொண்டு எரித்தவன். நெற்றிக்கண் உடையவன். அக இருளை நீக்கி தூய ஒளியாய் நிற்பவன். திருவெண்ணெய் நல்லூரில் எழுதப்பட்ட பனைஓலை ஒன்றினைக் காட்டி என்னை (சுந்தரரை) அடிமை கொண்டவன். நன்னிலையில் இருப்பவன். இத்தகைய அமுதம் போன்றவனை மறந்து வேறு எதனை நினைக்க முடியும்?”

16. சங்க நூல்களுக்குப் பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு

(அ) எட்டுத்தொகை

(ஆ) பத்துப்பாட்டு

(இ) பதினெண்கீழ்க்கணக்கு

(ஈ) பதினெண் மேல்கணக்கு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பதினெண்கீழ்க்கணக்கு

சங்க நூல்கள் பதினெண்மேற்கணக்கு நூல்களாகும். அவை எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு ஆகியனவாகும். சங்கம் மருவிய காலத்தில் தோன்றியவை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களாகும். அவையாவன, நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி, முதுமொழிக்காஞ்சி, திருக்குறள், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கைந்திலை, கார்நாற்பது, களவழிநாற்பது.

17. பொருந்தாத இணையைக் கண்டறிக:

அ. சிறுபஞ்சமூலம்-காரியாசன்

(ஆ) ஞானரதம்-பாரதியார்

ஆ. எழுத்து-சி.சு.செல்லப்பா

(ஈ) குயில்பாட்டு-கண்ணதாசன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) குயில்பாட்டு-கண்ணதாசன்

குயில்பாட்டு-பாரதியார்

18. “பண்ணொடு தமிழொப்பாய்” என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது?

(அ) திருவாசகம்

(ஆ) திருக்குறள்

(இ) தேவாரம்

(ஈ) திருத்தொண்டர் புராணம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) தேவாரம்

19. ஆயிரம் யானைகளைப் போரில் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் எது?

(அ) உலா

(ஆ) தூது

(இ) பரணி

(ஈ) பள்ளு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பரணி

ஆயிரம் யானைகளைப் போரில் கொன்ற வீரனைப் புழ்ந்து பாடும் இலக்கியம் பரணி. பரணி இலக்கியம் தோல்வியுற்றவர் பெயரால் பாடப்படும்.

எ.கா: கலிங்கத்துப்பரணி. கலிங்கநாடு தோல்வியடைந்த நாடாகும்.

“ஆனை ஆயிரம் அமரிடை வென்ற

மான வனுக்கு வகுப்பது பரணி”

– இலக்கண விளக்கப்பாட்டியல்.

20. கிறித்தவக் கம்பர் எனப் புகழப்பெறுபவர்

(அ) ஜான்பன்யன்

(ஆ) எச்.எ.கிருட்டிணனார்

(இ) ஹென்றி

(ஈ) வீரமாமுனிவர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) எச்.எ.கிருட்டிணனார்

கிறித்துவக் கம்பர் எனப் புகழப்பட்டவர் ஹென்றி ஆல்பர்ட் கிருட்டிணனார். இவர் இரட்சணிய யாத்ரீகம், இரட்சணிய சமயநிர்ணயம், இரட்சணிய மனோகரம், இரட்சணியக்குறள் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

21. நற்றிணையைத் தொகுப்பித்தவர்

(அ) பன்னாடு தந்நத மாறன் வழுதி

(ஆ) உக்கிரப் பெருவழுதி

(இ) இளம் பெருவழுதி

(ஈ) மிளை கிழான்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) பன்னாடு தந்நத மாறன் வழுதி

நற்றிணை: இந்நூலை தொகுப்பித்தவர் பன்னாடு தந்த மாறன் வழுதி. பாடிய புலவர்கள் 275 பேர். கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். அடி வரையறை 9-12.

22. திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?

(அ) 33

(ஆ) 133

(இ) 13

(ஈ) 1330

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) 133

23. பாரதிதாசனார் எச்சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்?

(அ) புரட்சிக் கவிஞர்

(ஆ) தேசியக் கவிஞர்

(இ) உவகைக் கவிஞர்

(ஈ) கவிக்குயில்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) புரட்சிக் கவிஞர்

புரட்சிக் கவிஞர்-பாரதிதாசன்.

தேசியக்கவிஞர்-பாரதியார்.

உவமைக்கவிஞர்-சுரதா.

கவிக்குயில் -சரோஜினி நாயுடு.

24. “உரையிடையிட்ட பாட்டுடைச்செய்யுள்” என் வழங்கப்படும் காப்பியம் எது?

(அ) சிலப்பதிகாரம்

(ஆ) மணிமேகலை

(இ) சீவகசிந்தாமணி

(ஈ) வளையாபதி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரத்தில், பாடல்களின் இடையிடையே உரைநடையும் அமைந்திருப்பதால்” உரையிடையிட்ட பாட்டுடைச்செய்யுள்” என்று இந்நூல் வழங்கப்பெற்றது.

25. பொருத்துக:

அ. மேதி – 1.சிவன்

ஆ. சந்தம் – 2. எருமை

இ. கோதில் – 3. அழகு

ஈ. அங்கணர் – 4. குற்றமில்லாத

அ ஆ இ ஈ

அ. 2 3 4 1

ஆ. 2 3 1 4

இ. 3 1 4 2

ஈ. 3 2 1 4

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. 2 3 4 1

26. பொருத்துக:

தொடர் பொருள்

அ. ஆகாயத்தாமரை – 1. மிகுதியாகப் பேசுதல்

ஆ. ஆயிரங்காலத்துப்பயிர் – 2. பொய்யழுகை

இ. முதலைக்கண்ணீர் – 3. நீண்ட காலத்திற்குரியது

ஈ. கொட்டியளத்தல் – 4. இல்லாத ஒன்று

அ ஆ இ ஈ

அ. 4 3 2 1

ஆ. 4 3 1 2

இ. 3 4 1 2

ஈ. 3 4 2 1

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. 4 3 2 1

27. சைவத்திருமுறைகளில் ————— திருமுறை திருமந்திரம்

(அ) ஏழாவது

(ஆ) பத்தாவது

(இ) எட்டாவது

(ஈ) மூன்றாவது

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) பத்தாவது

பன்னிரு திருமுறைகள்:

முதல் மூன்று-திருஞானசம்பந்தர் திருமுறைகள் தேவாரம்.

4,5,6-ம் திருமுறை-திருநாவுக்கரசர் திருமுறைகள் தேவாரம்.

7-ம் திருமுறை-சுந்தரர் தேவாரம்.

8-ம் திருமுறைகள்-திருவாசகம், திருக்கோவையார்.

9-ம் திருமுறை-ஒன்பதின்மர் நூல்கள்.

10-ம் திருமுறை-திருமந்திரம்.

11-ம் திருமுறை-பன்னிருவர் நூல்கள்.

12-ம் திருமுறை-பெரியபுராணம்.

28.”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” – என்பது எந்நூலின் புகழ்மிக்கத் தொடர்?

(அ) தேவாரம்

(ஆ) வேதியர் ஒழுக்கம்

(இ) திருமந்திரம்

(ஈ) நாலாயிர திவ்வியப்பிரபந்தம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) திருமந்திரம்

29. தவறானவற்றைத் தேர்வு செய்க.

குமரகுரபரரின் நூல்கள்

(அ) சுந்தர் கலிவெண்பா

(ஆ) வேதியர் ஒழுக்கம்

(இ) நீதிநெறி விளக்கம்

(ஈ) சகலகலாவல்லி மாலை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

வேதியர் ஒழுக்கம்-வீரமாமுனிவர்

30. கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகைகளின் எப்பகுதி உடல்நோயைத் தீர்ப்பன.

(அ) இலை

(ஆ) வேர்

(இ) பட்டை

(ஈ) காய்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) வேர்

31. முக்கூடற்பள்ளு கற்பதன் பயன்

(அ) உழவுத்தொழில்

(ஆ) மீன்வகைகள்

(இ) விதைகளின் பெயர்கள்

(ஈ) அனைத்தும்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) அனைத்தும்

32. “சூழ்ந்து மாமயி லாடி நாடகம் துளக்குறுத்தனவே” – இடம் பெற்றுள்ள காப்பியம்

(அ) மணிமேகலை

(ஆ) சிலப்பதிகாரம்

(இ) சீவகசிந்தாமணி

(ஈ) குண்டலகேசி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) சீவகசிந்தாமணி

சீவகசிந்தாமணி

வீழ்ந்து வெண்மழை தவழும் விண்ணுறு பெருவரை பெரும் பாம்பு

ஊழ்ந்து தோலுரிப் பனபோல் ஒத்த மற்றவற் றருவி

தாழ்ந்து வீழ்ந்தவை முழவின் ததும்பின் மதுகரம் பாடச்

சூழ்ந்து மாமயி லாடி நாடகம் துளக்குறுத் தனவே

– திருத்தக்கத்தேவர்.

பொருள்: மலையின் மீது வெண்மேகங்கள் தவழ்ந்து செல்கின்றன. அவ்வாறு மலையைவிட்டு வெண்மேகம் நகர்வது பாம்பு தோலுரிப்பதைப் போன்று இருக்கிறது. மேகம் நகர்ந்துவிட்ட பின், அம்மலையானது தோலுரிக்கப்பட்ட பாம்பு போல் இருக்கிறது. அங்கே வீழ்கின்ற அருவியின் ஒலி, மத்தளம் போன்று ஒலிக்கின்றது. தேன் உண்ணும் வண்டுகள் பாடுகின்றன. மயில்கள் ஆடுகின்றன. ஆகையால் இக்காட்சி ஒரு நாடகம் நடப்பது போன்று இருக்கிறது.

33. பொருள் தருக:

“மயரி”

(அ) உறக்கம்

(ஆ) தயக்கம்

(இ) மயக்கம்

(ஈ) கலக்கம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) மயக்கம்

34. திருவிளையாடற் புராணத்தில் வரும் விருத்தப்பாக்கள்

(அ) மூவாயிரத்து முந்றூற்று அறுபத்து மூன்று

(ஆ) மூவாயிரத்து இருநூற்று அறுபத்து மூன்று

(இ) மூவாயிரத்து மூன்று

(ஈ) மூவாயிரத்து எழுபத்து மூன்று

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) மூவாயிரத்து முந்றூற்று அறுபத்து மூன்று

திருவிளையாடற்புராணம்.

காண்டம்-3.

மதுரைக்காண்டம்-18 படலங்கள்.

திருவாலவாயக்காண்டம்-16 படலங்கள்.

கூடற்காண்டம்-30 படலங்கள்.

பாவகை-விருத்தப்பா.

பாடல்கள்-3363.

35. மணிமேகலை குறிப்பிடும் குற்றங்கள் எத்தனை?

(அ) எட்டு

(ஆ) ஏழு

(இ) பத்து

(ஈ) ஒன்பது

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பத்து

மணிமேகலை குறிப்பிடும் குற்றங்கள் பத்து.

உடலில் தோன்றுவன (3): கொலை, களவு, காமம்.

சொல்லில் தோன்றுவன (4): பொய்பேசுதல், புறங்கூறுதல், கடுஞ்சொல், பயனற்ற சொல்.

உள்ளத்தில் தோன்றுவன (3): பேரவா, கடுஞ்சினம் கொள்ளுதல், தெளிவிலா அறிவு.

36. “உடம்பார் அழியின் உயிரார் அழிவர்” என்ற கூற்று யாருடையது?

(அ) திருமூலர்

(ஆ) திருநாவுக்கரசர்

(இ) இராமலிங்க அடிகள்

(ஈ) திருஞானசம்பந்தர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) திருமூலர்

37. “என்னுடைய சகோதரியின் மரணத்தைவிடவும் வள்ளியம்மையின் மரணம் பேரிடியாக இருந்தது” என்று கூறியவர்

(அ) திலகர்

(ஆ) காந்தியடிகள்

(இ) வ.உ.சிதம்பரனார்

(ஈ) திருப்பூர் குமரன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) காந்தியடிகள்

38. இந்திய நாட்டை மொழிகளின “காட்சிசாலை” எனக் குறிப்பிட்டவர்

(அ) அகத்தியலிங்கம்

(ஆ) குற்றாலலிங்கம்

(இ) வைத்தியலிங்கம்

(ஈ) நாகலிங்கம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) அகத்தியலிங்கம்

நம்நாட்டில் 1300-க்கும் மேற்பட்ட மொழிகளும், அதன் கிளை மொழிகளும் பேசப்பட்டு வருகின்றன. ஆதலால் இந்திய நாட்டை “மொழிகளின் காட்சி சாலை” என்று குறிப்பிட்டுள்ளார் மொழியியல் பேராசிரியர் ச.அகத்தியலிங்கம்.

39. “இந்தியாவின் தேசியப் பங்குவீதம்” – இந்நூலுக்குரியவர் மூச்சைவிட்டுச் சென்ற நாள்

(அ) 1926-டிசம்பர்-6

(ஆ) 1936-டிசம்பர்-6

(இ) 1946-டிசம்பர்-6

(ஈ) 1956-டிசம்பர்-6

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) 1956-டிசம்பர்-6

“இந்தியாவின் தேசிய பங்கு வீதம்” என்ற நூலுக்குரியவர் அம்பேத்கர் ஆவார். இவர் 1956, டிசம்பர் 6-ம் தேதி மறைந்தார்.

40. “கோட்டோவியங்கள்” என்பது

(அ) நேர்கோடு வரைவது

(ஆ) கோணக்கோடு வரைவது

(இ) வளைகோடு வரைவது

(ஈ) மூன்று கோடும் வரைவது

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) மூன்று கோடும் வரைவது

நேர்கோடு, கோணக்கோடு, வளைகோடு போன்றவற்றால் வரையப்படுபவை கோட்டோவியங்கள் ஆகும்.

41. தமிழர் வளர்த்த நுண்கலைகளில் முன்னணியில் நிற்கும் கலை

(அ) பேச்சுக்கலை

(ஆ) ஓவியக்கலை

(இ) சிற்பக்கலை

(ஈ) கட்டக்கலை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) ஓவியக்கலை

கி.மு.2000 ஆண்டுகட்கு முற்பட்ட காலத்தில் வாழந்த தமிழர், தரம் தங்கிய மலைக்குகைளிலும், பாறைகளிலும் ஓவியங்களை கீறி எழுதினர். இவை தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 25-ற்கும் மேற்பட்ட இடங்களில் குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கபட்டுள்ளன. சங்க காலத்திற்கு முன்னரே ஓவியங்கள் வரையப்பட்டதற்கான சான்றுகளைப் பரிபாடல், குறுந்தொகை பாடல் வரிகள் மூலமாக நாம் அறியலாம்.

42. “நாளை என் தாய்மொழி சாகுமானால் – இன்றே நான் இறந்து விடுவேன்” – என்றவர்

(அ) பாரதியார்

(ஆ) ஷெல்லி

(இ) பாரதிதாசன்

(ஈ) இரசூல் கம்சதேவ்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) இரசூல் கம்சதேவ்

“நாளை என் தாய்மொழி சாகுமானால், இன்றே நான் இறந்து விடுவேன்” – என்று கூறியவர் ருஷ்யக் கவிஞர் இரசூல் கம்சதேவ்.

43. “கண்ணுள் வினைஞர்” என்றழைக்கப்பட்டவர்

(அ) பாடகர்

(ஆ) ஓவியர்

(இ) நாட்டியர்

(ஈ) வனைபவர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) ஓவியர்

பண்டைத் தமிழகத்தில் ஓவியக் கலைஞர்கள் ஓவியர், ஓவியப் புலவர், கண்ணுள் வினைஞர், சித்திரக்காரர், வித்தக வினைஞன், வித்தகர், கிளவி வல்லோன் எனப்பட்டனர்.

ஆண் ஓவியர் “சித்திராங்கதன்” எனவும், பெண் ஓவியர் “சித்திரசேனா” எனவும் அழைக்கப்பட்டனர்.

44. மோகனரங்கனின் தமிழ் ஒலித்துக்கொண்டு இருக்கும் பொருள்கள்

(அ) வானொலி

(ஆ) பாவரங்கமேடை

(இ) தொலைக்காட்சி

(ஈ) அனைத்தும்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) அனைத்தும்

ஆலந்தூர் கோ. மோகனரங்கன்.

இவர் எண்ணற்ற இசைப்பாடல்களையும் கவிதை நாடகங்களையும் படைத்துள்ளார். இவருடைய “”இமயம் எங்கள் காலடியில்” என்னும் கவிதைத் தொகுப்பு நூல் தமிழக அரசின் விருதினைப் பெற்றுள்ளது.

வானொலி, தொலைக்காட்சி, பாவரங்கமேடை இவற்றுள் ஏதேனும் ஒன்றனுள் இவரது தமிழ் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

45. “இரட்டைக் கிளவிபோல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளிலில்லை” என்றவர் யார்?

(அ) முடியரசன்

(ஆ) சுரதா

(இ) வாணிதாசன்

(ஈ) கண்ணதாசன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) சுரதா

46. “போலச் செய்தல்” பண்பை அடிப்படையாகக் கொண்ட கலை

(அ) சிற்பக்கலை

(ஆ) பேச்சுக்கலை

(இ) நாடகக்கலை

(ஈ) ஓவியக்கலை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) நாடகக்கலை

நாடகம்-நாடு+அகம். நாட்டை அகத்தில் கொண்டது நாடகம். நாட்டின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதால் நாடகம் எனப்பட்டது. “போலச் செய்தல்” என்னும் பண்பை அடிப்படையாகக் கொண்டது.

47. “தமிழ்வேலி” எனறு மதுரைத் தமிழ்சங்கத்தினைக் கூறிய நூல்

(அ) பரிபாடல்

(ஆ) புறநாநூறு

(இ) திருவாசகம்

(ஈ) தேவாரம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) பரிபாடல்

48. முனுசாமி, மங்களம் இணையருக்குப் பிறந்த மங்கை

(அ) அன்னிபெசண்ட் அம்மையார்

(ஆ) தில்லையாடி வள்ளியம்மை

(இ) முத்துலெட்சுமி ரெட்டி

(ஈ) இராணிமங்கம்மாள்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) தில்லையாடி வள்ளியம்மை

தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் 1898-ஆம் ஆண்டு முனுசாமி-மங்களம் இணையருக்கு மகளாய்ப் பிறந்தார்.

49. “என்றுமுள தென்தமிழ்” என்றவர்

(அ) பாவாணர்

(ஆ) கம்பர்

(இ) திரு.வி.க

(ஈ) உ.வே.சா

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) கம்பர்

கம்பராமாயணம்-ஆரண்ய காண்டம்.

நின்றவனை வந்த நெடியோன் அடி பணிந்தான்

அன்று அவனும் அன்பொடு தழீஇ அமுத கண்ணால்

நன்று வரவு என்று பல நல்உரை பகர்ந்தான்

என்றுமுள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான்

  • கம்பர்.

பொருள்: அங்கே நின்று கொண்டிருந்த அகத்தியனின் கால்களில் விழுந்து நெடியோனாகிய ராமன் வணங்கினான். அப்போது எக்காலத்திலும் நிலைத்து நிற்கும் இனிய தமிழுக்கு இலக்கண நூல் இயற்றிப் புகழ் பெற்றவனாகிய அகத்தியன் ராமனை அன்போடு அணைத்து, ஆனந்தக் கண்ணீர் விட்டு, உன் வரவு நல்வரவாகுக என்று பல உபசார மொழிகளைப் பகர்ந்தான். உலகம் தோன்றிய போதே தோன்றிய தமிழை அதன் தொன்மையைக் கருதி “என்றுமுள தென்தமிழ்” என்று கம்பர் கூறியுள்ளார்

50. “அந்தமான்” – எவ்வகை மொழி?

(அ) தனிமொழி

(ஆ) தொடர்மொழி

(இ) பொதுமொழி

(ஈ) ஓரெழுத்து ஒருமொழி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பொதுமொழி

பொதுமொழி என்பது ஒரே சொல்லாக இருந்து ஒரு பொருளையும், பிரித்தெழுதும் போது வேறொரு பொருளையும் தருவதும் ஆகும்.

எ.கா.அந்தமான்-ஒரு தீவு.

அந்த+மான்-ஒரு வகை விலங்கைச் சுட்டுகிறது

51. தொகைச் சொல்லை விரித்தெழுதுக:

நானிலம்

(அ) குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்

(ஆ) குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை

(இ) குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை

(ஈ) முல்லை, மருதம், நெய்தல், பாலை

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்

52. பின்வரும் இலக்கணக்குறிப்புக்குரிய பொருந்தாச் சொல்லைத் தேர்க:

உருவகம்.

(அ) பாதமலர்

(ஆ) அடிமலர்

(இ) தேன்தமிழ்

(ஈ) பொழியமுது

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) தேன்தமிழ்

தேன்தமிழ் – உவமை. ஏனைய மூன்றும் உருவகங்கள்

உருவகம் உவமை

மலர்ப்பாதம் பாதமலர்

அடிமலர் மலரடி

தமிழ்த்தேன் தேன்தமிழ்

மொழியமுது அமுதமொழி

53. தமிழில் ஓரெழுத்து ஒருமொழி ———- உள்ளன.

(அ) நாற்பத்திரண்டு

(ஆ) ஐம்பத்திரண்டு

(இ) அறுபத்திரண்டு

(ஈ) எழுபத்திரண்டு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) நாற்பத்திரண்டு

ஓரெழுத்து ஒருமொழி.

நெடில் எழுத்துகள்.

உயிர் இனம்(6)-ஆ,ஈ,ஊ,ஏ,ஐ, ஒ.

“ம” இனம்(6)-மா,மீ,மு,மே,மை,மோ.

“த”இனம் (5)-தா,தீ,தூ,தே,தை.

“ப” இனம்(5)-பா,பூ,பே,பை,போ.

“ந” இனம்(5)-நா,நீ,நே,நை,நோ.

“க” இனம்(4)-கா,கூ,கை,கோ.

“வ”இனம் (4)- வா,வீ,வை,வெள.

“ச”இனம்(4)-சா,சீ,சே,சோ.

“ய” இனம்(1)-யா.

குறில் எழுத்துகள்:

நொ-1. து-1.

6+6+5+5+5+4+4+4+1+1+1=42

54. பொருத்துக:

அ. பெயர்ச்சொல் – 1. வந்தான்

ஆ. வினைச்சொல் – 2. ஐந்தும் ஆறும்

இ. இடைச்சொல் – 3. மாவீரன்

ஈ. உரிச்சொல் – 4. வேலன்

அ ஆ இ ஈ

அ. 1 4 3 2

ஆ. 4 1 2 3

இ. 3 4 1 2

ஈ. 4 1 3 2

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 4 1 2 3

55. ஆங்கில சொல்லிற்கு சரியான தமிழ் சொல் யாது?

“Indian Succession Act”

(அ) இந்தியச் சான்றுச் சட்டம்

(ஆ) இந்திய உரிமைச்சட்டம்

(இ) இந்திய வாரிசுரிமைச் சட்டம்

(ஈ) இந்திய அரசியலமைப்புச் சட்டம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) இந்திய வாரிசுரிமைச் சட்டம்

Indian Sucession Act – இந்திய வாரிசுரிமைச் சட்டம்.

Indian Evidence Act – இந்திய சான்றுச் சட்டம்.

Indian Constitutional Law – இந்திய அரசியலமைப்புச் சட்டம்.

Indian Substantive Law – இந்திய உரிமைச்சட்டம்

56. என்னே தமிழின் இனிமை! – என்பது

(அ) செய்தித் தொடர்

(ஆ) விழைவுத் தொடர்

(இ) உணர்ச்சித் தொடர்

(ஈ) உன்பாட்டுத் தொடர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) உணர்ச்சித் தொடர்

57. “திருத்தப்படாத அச்சுப்படி” – இதற்கு சரியான ஆங்கிலச் சொல்லைக் காண்க:

(அ) Fake News

(ஆ) Layoout

(இ) Green Proof

(ஈ) Bulletin

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) Green Proof

Green Proof – திருத்தப்படாத அச்சுப்படி.

Fake News – பொய்ச்செய்தி.

Layout – செய்தித்தாள் வடிவமைப்பு.

Bulletin – சிறப்புச் செய்தி இதழ்

58. “முற்றியலுகரச் சொல்” – யாது?

(அ) கோங்கு

(ஆ) பாலாறு

(இ) மார்பு

(ஈ) கதவு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) கதவு

முற்றியலுகரம்: தனித்குறிலை அடுத்து சொல்லின் ஈற்றில் வல்லின மெய்யின் மேல் ஏறிவரும் உகரமும் மெல்லின எழுத்துகளோ இடையின எழுத்துகளோ சொல்லின் ஈற்றில் அமைந்து அவற்றின் மேல் ஏறிவரும் உகரமும் முற்றியலுகரம் எனப்படும். இது தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறையாது ஒலிக்கும்.

எ.கா: எழு, தள்ளு, கதவு, காணு, உண்ணு, உருமு, பகு, பசு படு, அது, தபு, பெறு.

குற்றியலுகரங்கள்-கோங்கு, பாலாறு, மார்பு.

59. ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின் – இக்குறளில் முதலிரு சீர்களில் வந்துள்ள எதுகை என்ன வகை?

(அ) பொழிப்பு எதுகை

(ஆ) இணை எதுகை

(இ) ஒரூஉ எதுகை

(ஈ) கூழை எதுகை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) இணை எதுகை

ற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை 1 மற்றும் 2ம் சீர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது இணை எதுகையாகும்.

60. பொருத்துக:

அ. முருகன் உழைப்பால் உயர்ந்தான் – 1. எழுவாய் வேற்றுமை

ஆ. பண்டைய மன்னர்கள் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டனர் – 2. இரண்டாம் வேற்றுமை

இ. அமுதா பாடத்தை எழுதினாள் – 3. மூன்றாம் வேற்றுமை

ஈ. கண்ணன் வந்தான் – 4. நான்காம் வேற்றுமை

அ ஆ இ ஈ

அ. 3 4 2 1

ஆ. 1 2 4 3

இ. 3 2 1 4

ஈ. 4 2 3 1

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

அ. 3 4 2 1

முருகன் உழைப்பால் உயர்ந்தான் என்பது மூன்றாம் வேற்றுமை. “ஆல்” மூன்றாம் வேற்றுமை உருபாகும்.

பண்டைய மன்னர்கள் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டனர் என்பது நான்காம் வேற்றுமை. “கு” நான்காம் வேற்றுமை உருவாகும்.

அமுதா பாடத்தை எழுதினாள் என்பது இரண்டாம் வேற்றுமை, “ஐ” என்பது இரண்டாம் வேற்றுமை உருபாகும்.

கண்ணன் வந்தான் என்பது முதல் வேற்றுமை. இதற்கு உருபு கிடையாது. இது “எழுவாய் வேற்றுமை” எனவும் வழங்கப்படுகிறது

61. குறுந்தொகைக்கு கடவுள் வாழ்த்துப் பாடியவர்

(அ) தேவ குலத்தார்

(ஆ) விளம்பி நாகனார்

(இ) பூரிக்கோ

(ஈ) பெருந்தேவனார்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) பெருந்தேவனார்

குறுத்தொகைக்கு கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ. இந்நூலில் உள்ள பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 205. அவர்களில் ஒருவர் தேவகுலத்தார். இவர் பாடிய “நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று” என்ற பாடல் குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது.

விளம்பிநாகனார் என்பவர் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான நான்மணிக்கடிகையின் ஆசிரியர் ஆவார்.

62. தனிச்சொல் இன்றி நான்கடியாய் வரும் வெண்பா

(அ) குறள் வெண்பா

(ஆ) நேரிசை வெண்பா

(இ) இன்னிசை வெண்பா

(ஈ) பஃறொடை வெண்பா

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) இன்னிசை வெண்பா

இன்னிசை வெண்பா:

வெண்பாவின் பொது இலக்கணத்தைப் பெற்றுத் தனிச்சொல் இன்றி நான்கடிகள் உடையதாய் வரும்

63. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக:

மாலதி திருக்குறள் கற்றாள்

(அ) தன்வினை

(ஆ) பிறவினை

(இ) செய்வினை

(ஈ) செயப்பாட்டுவினை

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) தன்வினை

64.ஒரு பொருளின் தன்மையை மிகைப்படுத்திக் கூறுவது

(அ) தற்குறிப்பேற்ற அணி

(ஆ) இயல்பு நவிற்சி அணி

(இ) உயர்வு நவிற்சி அணி

(ஈ) உவமை அணி

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) உயர்வு நவிற்சி அணி

65. குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை

(அ) 401

(ஆ) 501

(இ) 601

(ஈ) 301

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) 401

66. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை எழுதுக:

வாலை-வாளை

(அ) இளம்பெண்-மீன்வகை

(ஆ) மீன்வகை-இளம்பெண்

(இ) மரவகை-மீன்வகை

(ஈ) இளம்பெண்-மரவகை

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) இளம்பெண்-மீன்வகை

67. வையை நாடவன் யார்?

(அ) சேரன்

(ஆ) சோழன்

(இ) பாண்டியன்

(ஈ) பல்லவன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) பாண்டியன்

68. தவறான விடையைத் தேர்வு செய்க:

(அ) சிலப்பதிகாரம்-கையிலாயமலை

(ஆ) கம்பராமாயணம்-சிருங்கிபேரம்

(இ) தேம்பாவணி-வளன்

(ஈ) சீறாப்புராணம்-மந்தராசலம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) சிலப்பதிகாரம்-கையிலாயமலை

சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்காக கோயில் கட்டுவதற்கு இமயமலையிலிருந்து கல்லெடுத்து வந்தார். வட இந்திய மன்னர்களான கனக விசயர்கள் மீது போர் தொடுத்து வெற்றி கண்டு அவர்கள் தலை மீது கல்லை சுமக்க வைத்து, கொண்டு வந்து பத்தினி தெய்வத்திற்கு கோயில் கட்டினார்

69. வெட்ட வெளியையே கடவுளாக வழிபட்ட சித்தர்

(அ) பாம்பாட்டிச் சித்தர்

(ஆ) கடுவெளிச் சித்தர்

(இ) குதம்பைச் சித்தர்

(ஈ) அழுகுணிச் சித்தர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) கடுவெளிச் சித்தர்

உருவ வழிபாடு செய்யாமல் வெட்டவெளியையே கடவுள் என்றெண்ணி வழிபட்டார். அதனால் இவரை கடுவெளிச் சித்தர் என அழைத்தனர். இவர் மிக எளிய சொற்களில் அறக்கருத்துகளை எடுத்துரைத்தவர் ஆவார்.

70. ஐங்குறுநூறு நூலைத் தொகுப்பித்தவர் யார்?

(அ) புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்

(ஆ) பன்னாடு தந்த மாறன் வழுதி

(இ) பாரதம் பாடிய பெருந்தேவனார்

(ஈ) யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை

ஐங்குறுநூறு:

இந்நூலைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார். தொகுப்பித்தவர் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்ற சேரமன்னன் ஆவார். இவர், இன்பப் பொருள் அமைந்த அகப்பொருள் பாடல்கள் திணைக்கு நூறாய் ஐந்நூறு பாடல்களைக் கொண்ட நூல் ஒன்றை உருவாக்கித் தமிழ் உலகிற்கு அளிக்க விரும்பினார். தன் விருப்பத்தைக் கூடலூர்க் கிழார் என்ற புலவரிடம் கூறினார். அவர் அந்தந்த திணை பாடுதலில் வல்ல புலவர்களைக் கொண்டு நூறு நூறு பாடல்களைப் பாடச் செய்து இந்நூலைத் தொகுத்தளித்தார்

71. “பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ” என மகா வித்வான் மீனாட்சி சுந்தரனாரால் பாராட்டப்பட்டவர்

(அ) சேக்கிழார்

(ஆ) கம்பர்

(இ) மாணிக்கவாசகர்

(ஈ) எவருமில்லை

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) சேக்கிழார்

72. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனப் பாடியவர் யார்?

(அ) அப்பர்

(ஆ) திருமூலர்

(இ) சம்பந்தர்

(ஈ) சுந்தரர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) திருமூலர்

73. “எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே” யார் கூற்று?

(அ) திரு.வி.க

(ஆ) ரா.பி.சேதுப்பிள்ளை

(இ) பேரறிஞர் அண்ணா

(ஈ) ஜி.யூ.போப்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) பேரறிஞர் அண்ணா

74. திருக்குறளுக்கு பதின்மர் உரை எழுதியுள்ளனர். அவ்வுரைகளுள் சிறந்த உரை எழுதிய தமிழ்ச் சான்றோர் யார்?

(அ) இளம்பூரணார்

(ஆ) நச்சர்

(இ) பரிமேலழகர்

(ஈ) ந.மு.வேங்கடசாமி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பரிமேலழகர்

திருக்குறளுக்கு முற்காலத்தில் பதின்மர் உரை எழுதியுள்ளனர்.

தருமர், மணக்குடவர், தாமதத்தர், பரிதி, பரிமேலழகர், திருமலையார், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர், நச்சர் ஆகியோர் ஆவர். பரிமேலழகர் எழுதிய உரை மிகச் சிறப்பானது எனப் போற்றப்படுகிறது. முதன்முதலில் திருக்குறளுக்கு உரை எழுதியவர் மணக்குடவர் ஆவார்.

75. ஏலாதி-நூல்களுள் ஒன்று

(அ) பதிணென் மேற்கணக்கு

(ஆ) பதினெண் கீழ்க்கணக்கு

(இ) காப்பியம்

(ஈ) பாயிரம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) பதினெண் கீழ்க்கணக்கு

76. “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என்று பாடியவர்

(அ) இளங்கோவன்

(ஆ) பாரதிதாசன்

(இ) பாரதியார்

(ஈ) கவிமணி

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) பாரதியார்

77. சைவ சமயக்குரவர் நால்வருள் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராகப் பணியாற்றியவர் யார்?

(அ) திருநாவுக்கரசர்

(ஆ) திருஞான சம்பந்தர்

(இ) சுந்தரர்

(ஈ) மாணிக்கவாசகர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர் அரிமர்த்தனப் பாண்டியனிடம் தலைமை அமைச்சராகப் பணியாற்றினார். பாண்டிய மன்னுக்காக குதிரை வாங்கச் சென்ற போது திருப்பெருந்துறை இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார். நரியைப் பரியாக்கிய திருவிளையாடல் இறைவன் இவருக்காக நடத்தியதாகும்.

78. மருந்துப் பொருள்களின் பெயரில் அமைந்த இரு நூல்கள்

(அ) திரிகடுகம், ஏலாதி

(ஆ) இன்னாநாற்பது, இனியவை நாற்பது

(இ) திருக்குறள், நன்னூல்

(ஈ) நன்றிணை, அகநானூறு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) திரிகடுகம், ஏலாதி

திரிகடுகம்: இதனை இயற்றியவர் நல்லாதனார். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய முப்பொருள்களால் ஆன மருந்து உடல் பிணியைப் போக்குவது போல இந்நூலில் அமைந்துள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மும்மூன்று கருத்துகளும் உள்ளத்தில் ஏற்படும் நோயைப் போக்கும் தன்மையுடையன.

ஏலாதி: 1:2:3:4:5:6 என்ற விகிதத்தில் கலக்கப்பட்ட ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு என்ற ஆறுவகைப் பொருட்களால் ஆன மருந்து ஏலாதி. இம்மருந்து உடல்நோயை நீக்குவது போல இவற்றிலுள்ள பாடல்கள் மக்களின் அறியாமையை நீக்கும் தன்மையுடையன.

79. சரியானவற்றைப்பொருத்துக:

அ. கான் – 1.கரடி

ஆ. உழுவை – 2.சிங்கம்

இ. மடங்கல் – 3.புலி

ஈ. எண்கு – 4.காடு

அ ஆ இ ஈ

அ. 4 3 2 1

ஆ. 4 3 2 1

இ. 3 4 1 2

ஈ. 3 4 2 1

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. 4 3 2 1

80. பகைவனிடமும் அன்பு காட்டு எனக்கூறிய நூல்

(அ) பகவத்கீதை

(ஆ) நன்னூல்

(இ) பைபிள்

(ஈ) சீறாப்புராணம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) பைபிள்

81. பொருந்தாததைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

கடுவெளிச் சித்தர் அறிவுரைகள்:

(அ) பெண்களைப் பழித்துப் பேசாதே!

(ஆ) பாம்போடு விளையாடாதே!

(இ) போலி வேடங்களைப் போடாதே!

(ஈ) தியொழுக்கம் செய்யாதே!

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) தியொழுக்கம் செய்யாதே!

வைதோரைக் கூட வையாதே – இந்த

வைய முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே!

வெய்ய வினைகள் செய்யாதே – கல்லை

வீணில் பறவைகள் மீதில் எய்யாதே!

பாம்பினைப் பற்றி ஆட்டாதே – உன்றன்

பத்தினி மார்களைப் பழித்துக் காட்டாதே!

வேம்பினை உலகில் ஊட்டாதே – உன்றன்

வீறாப்பு தன்னை விளங்க நாட்டாதே!

போற்றும் சடங்கை நண்ணாதே – உன்னைப்

புகழ்ந்து பலரில் புகலல் ஒண்ணாதே!

சாற்றும்முன் வாழ்வை எண்ணாதே – பிறர்

தாமும் படிக்குநீ தாழ்வைப் பண்ணாதே!

கள்ளவேடம் புனையாதே – பல

கங்கையிலே உன்கம் நனையாதே!

கொள்ளை கொள்ள நினையாதே – நட்புக்

கொண்டு பிரிந்துநீ கோள் முனையாதே!

– கடுவெளிச் சித்தர்

82. பொருத்தமான பழமொழியைக் கண்டறி:

“கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா”

(அ) ஞாயிறைக் கைமறைப்பார் இல்

(ஆ) முள்ளினால் முள்களையும் ஆறு

(இ) ஆற்றுணா வேண்டுவது இல்

(ஈ) பாம்பு அறியும் பாம்பின் கால்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) ஆற்றுணா வேண்டுவது இல்

பழமொழி நானூறு

ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃதுடையார்

நாற்றிசையும் செல்லாத நாடில்லை; அந்நாடு

வேற்றுநாடு ஆகா; தமவேயாம்; ஆயினால்

ஆற்றுணா வேண்டுவது இல்

– முன்றுறை அரையனார்.

பொருள்: கற்க வேண்டிய நூல்களை நிறைவாகக் கற்றவர் அறிவுடையவர் ஆவார். அவருடைய புகழ் நான்கு திசைகளிலும் பரவும். அவருடைய புகழ் பரவாத நாடு இல்லை. அந்த நாடுகள் எல்லாம் வேற்றுநாடுகள் இல்லை. தம்முடைய நாடுகளே. எனவே அந்நாடுகளுக்குச் செல்லும் போது வழிநடை உணவை, அவர் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை

83. அகநானூற்றில் முதல் 120 பாடல்கள் அடங்கிய பகுதி

(அ) நித்திலக்கோவை

(ஆ) மணிமிடைப்பவளம்

(இ) களிற்றுயானைநிரை

(ஈ) வெண்பாமாலை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) களிற்றுயானைநிரை

அகநானூறு முப்பெரும் பிரிவுகளை உடையது.

களிற்றியானைநிரை – முதல் 120 பாடல்கள்.

மணிமிடைப்பவளம்-அடுத்துள்ள 180 பாடல்கள்.

நித்திலக்கோவை-இறுதி 100 பாடல்கள்.

84. வியாசரின் பாரதத்தைத் தழுவி எழுதப்பட்ட நூல்

(அ) பெரியபுராணம்

(ஆ) திருவிளையாடற்புராணம்

(இ) பாஞ்சாலி சபதம்

(ஈ) ஞானரதம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பாஞ்சாலி சபதம்

பாஞ்சாலிசபதம்:

இந்நூலை இயற்றியவர் மகாகவி பாரதியார் ஆவார். இந்நூல் வியாசர் எழுதிய மகாபாரதத்தைத் தழுவி எழுதப்பட்டதாகும். இது சூழ்ச்சிச் சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என ஐந்து பிரிவுகளையும் 412 பாடல்களையும் கொண்ட குறுங்காப்பியமாகும்.

85. “முன்றுறை அரையனார்” – என்ற பெயரில் அரையனார் என்னும் சொல்லின் பொருள்

(அ) ஊர்

(ஆ) அரசன்

(இ) ஆறு

(ஈ) நாடு

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) அரசன்

86. “செரு அடுதோள் நல்லாதன்” எனப்பாராட்டுவது

(அ) தொல்காப்பியம்

(ஆ) அகத்தியம்

(இ) பாயிரம்

(ஈ) நன்னூல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பாயிரம்

திரிகடுகம் என்ற நூலை இயற்றியவர் நல்லாதனார். காப்புச் செய்யுளில், “காயாம் பூவைப் போன்ற கரிய நிறமுடைய திருமாலின் திருவடிகள்” என்று பாடப்பட்டுள்ளதால், இந்நூல் ஆசிரியர் வைணவ மதத்தினர் என்று குறிக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த “திருத்து” என்னும் ஊரினைச் சேர்ந்தவர் என்று குறிக்கப்பட்டுள்ளது. இவரை “செரு அடுதோள் நல்லாதன்” எனப் பாயிரம் குறிப்பிடுவதனால், இவர் போர் வீரராய் இருந்திருக்கலாம் எனக்கருதப்படுகிறது.

குறிப்பு: கொள்குறியில் நூலின் பெயர் (திரிகடுகம்) அமைந்திருக்க வேண்டும். “பாயிரம்” என்ற பிரிவு ஒவ்வொரு நூலிலும் முதல் பகுதியாக அமைந்திருக்கும். பொதுவாகப் பாயிரம் என்று குறிப்பிட்டு உள்ளது மிகத் தவறானதாகும்.

87. திருவிளையாடற்புராணத்திற்கு உரையெழுதியவர்

(அ) அடியார்க்கு நல்லார்

(ஆ) அரும்பதவுரைக்காரர்

(இ) ந.மு.வேங்கடசாமி

(ஈ) நச்சினார்க்கினியார்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) ந.மு.வேங்கடசாமி

பண்டிதமணி ந.மு.வேங்கடசாமி திருவிடையாடற் புராணத்திற்கு உரை எழுதியுள்ளார்

88. பொருத்துக:

அ. விபுதர் – 1. அந்தணன்

ஆ. பனவன் – 2. இரவு

இ. வேணி – 3. புலவர்

ஈ. அல்கு – 4. செஞ்சடை

அ ஆ இ ஈ

அ 3 1 4 2

ஆ. 2 1 4 3

இ. 2 3 4 1

ஈ. 3 4 1 2

விடை மற்றும் விளக்கம்

விடை: அ 3 1 4 2

89. பிரித்தெழுதுக:

“வாயினீர்”

(அ) வாய்+நீர்

(ஆ) வாய்ன்+நீர்

(இ) வாயின்+நீர்

(ஈ) வா+நீர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) வாயின்+நீர்

தனிக்குறில் முன் ஒற்று புணர்ச்சி.

நிலைமொழியின் ஈற்றில் “ன” கர ஒற்று வந்து வருமொழி முதலில் “ந”கரம் வந்தால் அந்த ‘ந”கரம் “ன” கரமாகத் திரியும்.

எ.கா: வாயின்+நீர்-வாயினீர்.

பொன்+நாடு-பொன்னாடு

90. நடுவணரசு தமிழ்மொழியை செம்மொழியாக அறிவித்த வருடம்

(அ) 2004

(ஆ) 2002

(இ) 2005

(ஈ) 2001

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) 2004

91. நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை எது?

(அ) பேச்சுக்கலை

(ஆ) ஓவியக்கலை

(இ) இசைக்கலை

(ஈ) சிற்பக்கலை

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) பேச்சுக்கலை

92. “என்னுடைய நாடு” என்னும் பாடல் இடம் பெற்றுள்ள தலைப்பு

(அ) சமுதாயமலர்

(ஆ) காந்திமலர்

(இ) தேசியமலர்

(ஈ) இசைமலர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) தேசியமலர்

என்னுடைய நாடு

இந்திய நாடிது என்னுடைய நாடே

என்று தினந்தினம் நீயதைப் பாடு

சொந்தமில் லாதவர் வந்தவர் ஆள

தூங்கிக் கிடந்தது போனது மாள

வந்தவர் யாரையும் நம்பி

வாடின காலங்கள் ஓடின தம்பி

இந்தத் தினம் முதல் “இந்திய நாடு

என்னுடை நாடெ” என்ற எண்ணத்தைக் கூடு

– நாமக்கல் கவிஞர்

மேற்கண்ட பாடல் “நாமக்கல் கவிஞர் பாடல்கள்” என்னும் நூலில் தேசியமலர் என்னும் பகுதியில் “என்னுடைய நாடு” என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது

93. “சூரியஒளி பெறாத செடியும், பகுத்தறிவு ஒளி பெறாத சமுதாயமும் வளர்ச்சி அடையாது” என உணர்ந்தவர்

(அ) பாரதி

(ஆ) சுரதா

(இ) பாரதிதாசன்

(ஈ) கவிமணி

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) பாரதிதாசன்

94.அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம் அமைந்துள்ள இடம்

(அ) சென்னை

(ஆ) மதுரை

(இ) சிதம்பரம்

(ஈ) தஞ்சை

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) சென்னை

95. “திராவிட” எனும் சொல்லே தமிழ் எனும் சொல்லிலிருந்து உருவானதாகும் என்று கூறியவர்

(அ) ஈராஸ் பாரதியார்

(ஆ) கால்டுவெல்

(இ) ஜி.யூ.போப்

(ஈ) வீரமாமுனிவர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) ஈராஸ் பாரதியார்

ஹீராஸ் பாதிரியாரின் கூற்று:

தமிழ் > திரமிள > திரவிட > திராவிட எனத் “தமிழ்” என்னும் சொல்லில் இருந்தே “திராவிடம்” என்னும் சொல் உருவாயிற்று.

96. நிலத்திலும் அடர் உப்புத்தன்மை நீரிலும் வாழும் பறவை

(அ) பூநாரை

(ஆ) அன்னம்

(இ) கொக்கு

(ஈ) குருகு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) பூநாரை

பூநாரை:

நிலத்திலும் அடர் உப்புத் தன்மை உள்ள நீரிலும் வாழும். கடும் வெப்பத்தை எதிர்கொள்ளும் தன்மையுடையது.

97. “தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்” என அழைக்கப்படுபவர்

(அ) கம்பதாசன்

(ஆ) வாணிதாசன்

(இ) கண்ணதாசன்

(ஈ) பாரதிதாசன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) வாணிதாசன்

98. “நாடகச்சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து” யார் கூற்று?

(அ) பம்மல் சம்பந்தனார்

(ஆ) சங்கரதாஸ் சுவாமிகள்

(இ) கவிமணி

(ஈ) பரிதிமாற்கலைஞர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) கவிமணி

99. ஒளிப்படம் எடுக்கும் முறையைக் கண்டுபிடித்த ஆண்டு

(அ) 1830

(ஆ) 1840

(இ) 1810

(ஈ) 1820

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) 1830

1830-ல் போட்

டோ எடுக்கும் முறையைக் கண்டுபிடித்தவர் எட்வர்டு மைபிரிட்ஜ் என்பராவார்

100. பாவேந்தர் பாரதிதாசன் பாடியது.

(அ) “பழமையிருந்த நிலை கிளியே பாமரர் ஏதறிவர்”

(ஆ) “தேனொக்கும் செந்தமிழே! நீ கனி! நான் கிளி!”

(இ) “சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்”

(ஈ) “தோள்கள் உனது தொழிற்சாலை நீ தொடுமிடமெல்லாம் மலர்ச்சோலை”

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) “தேனொக்கும் செந்தமிழே! நீ கனி! நான் கிளி!”

“பழமை பழமை யென்று பாவனை பேசலன்றிப்

பழமையிருந்த நிலை – கிளியே

பாமரர் எதறிவார்”

– பாரதியார்.

“தேனொக்கும் செந்தமிழே நீகனி! நான் கிளி!

வேறென்ன வேண்டும் இனி”

– பாரதிதாசன்.

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்

– நாமக்கல் கவிஞர்.

தோள்கள் உனது தொழிற்சாலை – நீ

தொடுமிட மெல்லாம் மலர்ச்சோலை!

தோல்விகள் ஏதும் உனக்கில்லை – இனித்

தொடுவானம்தான் உன் எல்லை!

– கவிஞர் தாராபாரதி.

 

Exit mobile version