General Tamil Model Question Paper 22

General Tamil Model Question Paper 22

General Tamil Model Question Paper 22: Tnpsc Aspirants can use this opportunity to check General Tamil Model Question Papers For Tnpsc. General Tamil Model Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Model Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. “கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூக்காடு;

நானோர் தும்பி” – என்று தமிழின் மீது காதல் கொண்டு பாடிய கவிஞர்

(அ) பாரதியார்

(ஆ) சுப்புரத்தினம்

(இ) வெ.இராமலிங்கம் பிள்ளை

(ஈ) சுரதா

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) சுப்புரத்தினம்

வினாவில் கொடுக்கப்பட்டுள்ள பாடலைப் பாடியவர் பாரதிதாசன் ஆவர் அவரது இயற்பெயர் கனக சுப்புரத்தினம்

2. எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்

புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும் —–

-இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

(அ) சிலப்பதிகாரம்

(ஆ) மணிமேகலை

(இ) கம்பராமாயணம்

(ஈ) வில்லிபாரதம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் – மதுரைக்காண்டம்-வழக்குரை காதை

“எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்

புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்

வாயிற் கடைமணி நடுநா நடுங்க

ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்

அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்

பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்

ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி

மாசாத்து வாணிகன் மகனை யாகி

வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்பச்

சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்

கென்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற்

கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி”

  • இளங்கோவடிகள்.

பொருள்: “புறாவின் துன்பத்தைப் போக்கிய சிபி மன்னனும், தன் அரண்மனை மணி ஒலித்ததைக் கேட்டுப் பசுவின் துயரை அறிந்து, தன் ஒப்பற்ற மகனையே தேர்ச்சக்கரத்திலிட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்த, பெரும்புகழுடைய புகார் நகரமே யான் பிறந்த ஊர். அப்புகார் நகரில் பழியில்லாத சிறப்பினையுடைய புகழ்மிக்க குடியில் தோன்றிய மாசாத்துவான் மகனை மணம் புரிந்தேன். வீரக்கழலணிந்த மன்னனே! ஊழ்வினைப் பயனால், வாழ்வதற்காக நின் மதுரை நகரத்துக்கு வந்து, என் காற்சிலம்பினை விற்க முயன்று, உன்னால் கொலை செய்யப்பட்ட கோவலன் மனைவி நான், கண்ணகி என்பது என்பெயர்” என்று கூறினாள்

3. எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால்

இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்.

– இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்

(அ) அழகின் சிரிப்பு

(ஆ) தமிழ் வளர்ச்சி

(இ) இளைஞர் இலக்கியம்

(ஈ) இருண்ட வீடு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) தமிழ் வளர்ச்சி

தமிழ் வளர்ச்சி

தெளிவுறுத்தும் படங்களோடு சுவடியெல்லாம் செய்து

செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதும் வேண்டும்

எளிமையினால் ஒருதமிழன் படிப்பில்லை யென்றால்

இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்

-பாரதிதாசன்

4. அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல்

தெரிதரக் கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்தவன்றே

– இவ்வடிகள் இடம்பெறும் நூல்

(அ) பெரிய புராணம்

(ஆ) சிலப்பதிகாரம்

(இ) கம்பராமாயணம்

(ஈ) தேவாரம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) கம்பராமாயணம்

கம்பராமாயணம் – அயோத்தியா காண்டம் – குகப்படலம்.

“அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல்

தெரிதரக் கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்த வன்றே

பரிவினில் தழீஇய என்னில் பவித்திரம் எம்ம னோர்க்கும்

உரியன இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ என்றான்”

– கம்பர்.

பொருள்: உள்ளத்து அன்பு முதிர்வினால் எழுந்த பரிவின் காரணமாகக் குகன் கொண்டு வந்த இப்பொருள்கள் கிடைத்தற்கரியன; அமுதத்தைவிடச் சிறந்தன. இவை எத்தகையவையாய் இருப்பினும், அன்பு கலந்ததெனில் தூய்மையானவையே! எம் போன்றோர்க்கும் உரியன; ஆகையால் இனிமையான இவை, நாங்கள் விரும்பி உண்டதற்குச் சமமாகும்.

5. “ஒருவழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர்

சான்றோர் பாலர் ஆப” –எனக் கூறும் நூல்.

(அ) அகநானூறு

(ஆ) குறுந்தொகை

(இ) கலித்தொகை

(ஈ) புறநானூறு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) புறநானூறு

புறநானூறு

பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய

மாமலை பயந்த காமரு மணியும்

இடைப்படச் சேய ஆயினும் தொடை புணர்ந்து

அருவிலை நன்கலம் அமைக்கும் காலை

ஒருவழித் தோன்றி யாங்கு என்றும் சான்றோர்,

சான்றோர் பாலர் ஆப

சாலார் சாலார் பாலர் ஆகுபவே

– கண்ணகனார்.

பொருள்: பொன்னும் பவளமும் முத்தும் நிலைத்த பெருமலையில் பிறக்கும் மாணிக்கமும் தோன்றும் இடங்களால் ஒன்றுக்கொன்று தொலைவின் இருப்பினும், மாலையாகக் கோர்த்து மதிப்பு மிக்க அணிகலனாக அமைக்கும் போது தம்முள் ஒருங்குசேரும். அதுபோல, சான்றோர் என்றும் சான்றோர் பக்கமே இருப்பர். சான்றாண்மை இல்லாதவர் தீயவர் பக்கமே சேருவர்.

6. “பள்ளிக்கூடம் வீட்டைப் போன்று இருத்தல் வேண்டும்” என்று சொன்னவர்

(அ) காந்திஅடிகள்

(ஆ) திரு.வி.கல்யாணசுந்தரனார்

(இ) இராமலிங்க அடிகள்

(ஈ) தனிநாயக அடிகள்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) காந்திஅடிகள்

1917-ஆம் ஆண்டு புரோச் நகரில் நடைபெற்ற 2-ஆவது கல்வி மாநாட்டில் காந்தியடிகள் உரை நிகழ்த்திய போது, “பள்ளிக்கூடம் வீட்டைப்போல இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு வீட்டில் தோன்றும் எண்ணங்களுக்கும் பள்ளியில் ஏற்படும் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும். தெரிந்தறியாத ஒரு மொழியின் மூலம் கல்வி கற்பிக்கக் கூடாது” என்று கூறினார்.

7. “கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்” எனத் தமிழ்மொழியைப் போற்றும் நூல்.

(அ) சிலப்பதிகாரம்

(ஆ) புறநானூறு

(இ) பரிபாடல்

(ஈ) திருவாசகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) திருவாசகம்

8. பொருத்துக:

அ. விசும்பு  -1.தந்தம்

ஆ. துலை – 2.நெருப்பு

இ. மருப்பு – 3.துலாக்கோல்

ஈ. கனல் – 4. வானம்

அ ஆ இ ஈ

அ. 4 3 1 2

ஆ. 2 1 3 4

இ. 1 3 4 2

ஈ. 4 3 2 1

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. 4 3 1 2

9. “மன்னனுக்குத் தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச்

சென்றவிட மெல்லாஞ்சிறப்பு”

– இப்பாடலடிகளை இயற்றிய புலவர்

(அ) திருவள்ளுவர்

(ஆ) ஒளவையார்

(இ) பட்டினத்தார்

(ஈ) காளமேகப்புலவர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) ஒளவையார்

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கில்

மன்னனில் கற்றோன் சிறப்புடையன் – மன்னர்க்குத்

தன்தேச மல்லால் சிறப்பில்லை

கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

– ஒளவையார்.

10. ஒளிப்படம் எடுக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு

(அ) 1830

(ஆ) 1840

(இ) 1850

(ஈ) 1820

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) 1830

1830-இல் ஒளிப்படம் எடுக்கும் முறையைக் கண்டுபிடித்த பின்னர் இயக்கத்தைப் படம் பிடிக்க எட்வர்டு மைபிரிட்ஜ் என்ற ஆங்கிலேயர் முயன்றார். அதன் பயனாக ஓடும் குதிரையின் இயக்கத்தினை முதன்முதலில் படம் பிடித்தார்.

11. பொருத்துக:

அ. வட்டி – 1. எருமை

ஆ. யாணர் – 2. பவளம்

இ. துகிர் – 3. பனையோலைப்பெட்டி

ஈ. மேதி – 4. புதுவருவாய்

அ ஆ இ ஈ

அ. 3 2 4 1

ஆ. 3 4 2 1

இ. 2 3 4 1

ஈ. 4 1 2 3

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 3 4 2 1

12. “வந்தது யாருக்கும் தெரியாது – நீ

வாழ்ந்ததை உலகம் அறியாது”

– இவ்வடிகள் இடம் பெறும் பாடலைப் பாடியவர்

(அ) முத்துக்குமார்

(ஆ) கபிலன்

(இ) தாரா பாரதி

(ஈ) இளைய கம்பன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) தாரா பாரதி

திண்ணையை இடித்துத் தெருவாக்கு

வந்தது யாருக்கும் தெரியாது – நீ

வாழ்ந்ததை உலகம் அறியாது;

சந்ததி கூட மறந்துவிடும் – உன்

சரித்திரம் யாருக்கும் நினைவு வரும்?

– கவிஞர் தாராபாரதி

General Tamil Study Materials

General Tamil Model Questions Pdf

13. நாலாயிர திவ்வியப்பிரபந்தத்தைத் தொகுத்தவர்

(அ) நம்பியாண்டார் நம்பி

(ஆ) வேதமுனி

(இ) நாதமுனி

(ஈ)பெரியவாச்சான் பிள்ளை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) நாதமுனி

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

திவ்ய-மேலான; பிரபந்தம்-பலவகைப் பாடல்களின் தொகுப்பு.

இது பெருமாளைப் பற்றி பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். கி.பி. 6-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.9ஆம் நூற்றாண்டிற்குள் வாழ்ந்த வைணவ சமய ஆழ்வார்கள் பன்னிருவர்களால் இயற்றப்பட்ட பாடல்கள் கி.பி.10-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனிகள் என்பவரால் தொகுக்கப்பட்டது. பின்னர் வந்த மணவாள மாமுனிகள், நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின் பிரபந்தத்தோடு, திருவரங்கத்தமுதனார் செய்த “இராமனுஜ நூற்றந்தாதியையும்” சேர்த்து நாலாயிர திவ்யப் பிரபந்தம் என அழைக்கும்படி அருளினார்

14. எட்டுத்தொகை நூல்களில் அகம் சார்ந்த நூல்எண்ணிக்கை எத்தனை?

(அ) 3

(ஆ) 7

(இ) 2

(ஈ) 5

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) 5

எட்டுத்தொகை நூல்கள்

அகப்பொருள் பற்றியவை: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு.

புறப்பொருள் பற்றியவை: புறநானூறு, பதிற்றுப்பத்து.

அகமும்புறமும் கலந்து வருவது: பரிபாடல்.

15. பொருத்துக:

அ. புள் – 1. எருமை

ஆ. நுதல் – 2. துன்பம்

இ. மேதி – 3. பறவை

ஈ. நடலை – 4. நெற்றி

அ ஆ இ ஈ

அ. 1 3 2 4

ஆ. 3 4 1 2

இ. 4 2 3 1

ஈ. 2 1 4 3

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 3 4 1 2

16. “முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்” என்னும் அடிகள் இடமபெற்றுள்ள நூல்

(அ) நாலடியார்

(ஆ) புறநானூறு

(இ) திருக்குறள்

(ஈ) நற்றிணை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) நற்றிணை

நற்றிணை (பாடல் எண் 355)

முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்

நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்

அம்சில் ஓதிஎன் தோழி தோள்துயில்

நெஞ்சின் இன்புறாய் ஆயினும் அதுநீ

என்கண் ஓடி அறிமதி

நின்கண் அல்லது பிறிதுயாதும் இலளே

– இயற்றியவர் பெயர் அறியப்படவில்லை.

17. ஊழிபெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்(கு)

ஆழி எனப்படு வார் – எனும் குறட்பாவில் “ஊழி” என்பதன் பொருள்.

(அ) கடல்

(ஆ) நிலம்

(இ) காலம்

(ஈ) உலகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) உலகம்

18. அகநானூற்றில் ஒற்றைப்படை எண்களாக வரும் பாடல்களை சார்ந்த திணை

(அ) குறிஞ்சித்திணை

(ஆ) பாலைத்திணை

(இ) முல்லைத்திணை

(ஈ) நெய்தல் திணை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) பாலைத்திணை

அகநானூறு பாடல் வைப்பு முறை:

1,3,5,7 —- பாலைத்திணை.

2,8,12,18— குறிஞ்சித்திணை.

4,14,24,34 —- முல்லைத்திணை.

6,16,26— மருதத்திணை.

10,20,30,— நெய்தல் திணை.

19. பொருந்தாத சொல்லைத் தெரிவு செய்க:

(அ) கலித்தொகை

(ஆ) குறுந்தொகை

(இ) நெடுந்தொகை

(ஈ) நறுந்தொகை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) நறுந்தொகை

கலித்தொகை, குறுந்தொகை, நெடுந்தொகை (அகநானூறு) ஆகியவை எட்டுத்தொகை நூல்களாகும்.

நறுந்தொகை என்பது பிற்காலத்தில் எழுந்த நீதிநூல்களுள் ஒன்றாகும். இது வெற்றிவேற்கை எனவும் அறியப்படும். இந்நூலின் ஆசிரியர் அதிவீரராம பாண்டிய மன்னர் ஆவார். இவர் இயற்றிய வேறு நூல்கள் நைடதம், கூர்மபுராணம், இலிங்கபுராணம், காசிக்காண்டம், வாயுசங்கிதை, திருக்கருவை அந்தாதிகள் ஆகியவையாகும். இவர் வடமொழியிலும் வல்லவராக இருந்தார் என்பதை மேற்கண்ட நூல்களை தமிழில் எழுதியது மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. இவரின் காலம் கி.பி16-ஆம் நூற்றாண்டு என ஆய்வறிஞர்கள் கருதுகின்றனர்.

1564 முதல் 1604 வரை இவர் ஆட்சி செய்தார் என ஆய்வாளர்கள் கருகின்றனர்.

20. திரிகடுகம் நூலின் ஆசிரியர்

(அ) விளம்பி நாகனார்

(ஆ) நல்லாதனார்

(இ) முன்றுறையரையயார்

(ஈ) பெருவாயின் முள்ளியார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) நல்லாதனார்

21. தொண்ணூற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் இடம் பெறும் நூல்

(அ) பரிபாடல்

(ஆ) கலிப்பாடல்

(இ) முல்லைப்பாட்டு

(ஈ) குறிஞ்சிப்பாட்டு

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) குறிஞ்சிப்பாட்டு

22. உருவ வழிபாடு செய்யாமல் வெட்டவெளியையே கடவுளாக வழிப்பட்ட சித்தர் யார்?

(அ) பாம்பாட்டி சித்தர்

(ஆ) கடுவெளிச்சித்தர்

(இ) குதம்பைச் சித்தர்

(ஈ) அழுகுணிச் சித்தர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) கடுவெளிச்சித்தர்

கடுவெளிச்சித்தர்:

இவர், உருவ வழிபாடு செய்யாமல் வெட்டவெளியையே கடவுள் என்றெண்ணி வழிபட்டார். அதனால் இவருக்கு கடுவெளிச்சித்தர் என்ற பெயர் வழங்கி வந்தது. மிக எளிய சொற்களில் அறக்கருத்துகளை எடுத்துரைத்தவர்

23. “குறட்டை ஒலி” சிறுகதையின் ஆசிரியர்

(அ) மு.வரதராசனார்

(ஆ) அகிலன்

(இ) விந்தன்

(ஈ) புதுமைப்பித்தன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) மு.வரதராசனார்

24. “மீதூண் விரும்பேல்” என்று கூறியவர்

(அ) திருமூலர்

(ஆ) திருவள்ளுவர்

(இ) பாரதியார்

(ஈ) ஒளவையார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) ஒளவையார்

25. தமிழக மக்களால் “காந்தியக் கவிஞர்” எனப் பெருமையுடன் அழைக்கப்பெற்றவர்

(அ) வெ.இராமலிங்கனார்

(ஆ) பாரதியார்

(இ) திரு.வி.கல்யாண சுந்தரனார்

(ஈ) மீனாட்சி சுந்தரனார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) வெ.இராமலிங்கனார்

26. “மலரும் மாலையும்” என்ற நூலை இயற்றியவர்

(அ) திரு.வி.கல்யாணசுந்தரனார்

(ஆ) மு.வரதராசனார்

(இ) கவிமணி தேசிக விநாயகம்

(ஈ) மீனாட்சி சுந்தரனார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) திரு.வி.கல்யாணசுந்தரனார்

27. இந்திய நாட்டை “மொழிகளின் காட்சிச்சாலை” (Museum of Languages) எனக் குறிப்பிட்டுள்ள தமிழ் அறிஞர் யார்?

(அ) ஹீராஸ் பாதிரியார்

(ஆ) தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

(இ) நேரு

(ஈ) ச.அகத்தியலிங்கம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) ச.அகத்தியலிங்கம்

நம்நாட்டில் 1300-க்கும் மேற்பட்ட மொழிகளும் அதன் கிளைமொழிகளும் பேசப்பட்டு வருகின்றன. ஆதலால் இந்திய நாட்டை “மொழிகளின் காட்சி சாலை” என்று குறிப்பிட்டுள்ளார். மொழியியல் பேராசிரியர் ச.அகத்தியலிங்கம்.

28. “பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி” எனக் கூறியவர்.

(அ) திரு.வி.கல்யாணசுந்தரனார்

(ஆ) தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

(இ) உ.வே.சாமிநாத ஐயர்

(ஈ) தேவநேயப் பாவாணர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) தேவநேயப் பாவாணர்

“பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி” எனக் கூறியவர் தேவநேயப் பாவாணர்.

16 செவ்வியல் தன்மைகள்: தென்மை, முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை, தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை, வியன்மை.

29. “நுணங்கிநூல் நோக்கி இழையா” இத்தொடரில் “நுணங்கி” என்பதன் பொருள்

(அ)ஆராய்ந்து

(ஆ) நுண்ணறிவு

(இ) வணங்கி

(ஈ) பணிந்து

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) நுண்ணறிவு

30. “புத்தரது ஆதி வேதம்” என்னும் நூலை எழுதியவர்

(அ) அம்பேத்கர்

(ஆ) பெரியார்

(இ) அயோத்திதாசப் பண்டிதர்

(ஈ) ஆறு.அழகப்பன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) அயோத்திதாசப் பண்டிதர்

“புத்தரது ஆதிவேதம்” என்னும் நூலை 28 காதைக் கொண்ட பெருநூலாக அயோத்திதாசப் பண்டிதர் இயற்றியுள்ளார்.

31. “புரட்சி முழக்கம்” என்ற நூலை இயற்றியவர்

(அ) பாரதிதாசன்

(ஆ) பெரியார்

(இ) சாலை.இளந்திரையன்

(ஈ) வண்ணதாசன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) சாலை.இளந்திரையன்

32. பொருத்துக:

சிறப்பு அடைமொழிப்பெயர் பெயர்

அ. தமிழ்நாட்டின் இரசூல் கம்சதேவ – 1. புதுமைப்பித்தன்

ஆ. தமிழ்நாட்டின் மாபசான் – 2. அனுத்தமா

இ. தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட் – 3. பாரதிதாசன்

ஈ. தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டின் – 4. கல்கி

அ ஆ இ ஈ

அ. 4 1 2 3

ஆ. 3 1 4 2

இ. 2 1 3 4

ஈ. 4 1 3 2

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 3 1 4 2

33. பொருத்துக:

நூல் ஆசிரியர்

அ. தமழிச்சுடர்மணிகள் – 1. மறைமலையடிகள்

ஆ. தமிழர் மதம் – 2. திரு.வி.கல்யாண சுந்தரனார்

இ. சைவத்திறவு – 3. ரா.பி. சேதுப்பிள்ளை

ஈ. செந்தமிழும்கொடுந்தமிழும் – 4. எஸ்.வையாபுரிப்பிள்ளை

அ ஆ இ ஈ

அ. 4 1 2 3

ஆ. 3 4 1 2

இ. 2 3 4 1

ஈ. 2 4 1 3

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. 4 1 2 3

34. பொருத்துக:

தழிழறிஞர் சிறப்பு அடைமொழி

அ. பெருஞ்சித்திரனார் – 1. தமிழ்த்தாத்தா

ஆ. உ.வே.சா – 2. சொல்லின் செல்வர்

இ. ரா.பி.சேதுப்பிள்ளை – 3. தமிழ்த் தென்றல்

ஈ. திரு.வி.க – 4. தனித்தமிழ் இயக்க மறவர்

அ ஆ இ ஈ

அ. 3 2 4 1

ஆ. 2 4 1 3

இ. 4 1 2 3

ஈ. 2 3 4 1

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. 4 1 2 3

35. “கவிஞர் முடியரசன்” எழுதாத நூல்

(அ) காளியப்பாவை

(ஆ) தேன்மழை

(இ) வீரகாவியம்

(ஈ) பூங்கொடி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) தேன்மழை

“தேன்மழை என்ற நூலின் ஆசிரியர் சுரதா ஆவார். இந்நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் சிறந்த நூலுக்கான பரிசைப் பெற்றது.

36. இந்தியாவில் உள்ள நூலகங்களில் முதன்மையானது

(அ) சரசுவதி மகால்

(ஆ) கன்னிமாரா நூலகம்

(இ) கொல்கத்தா தேசிய நூலகம்

(ஈ) தேவநேயப் பாவாணர் நூலகம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) கொல்கத்தா தேசிய நூலகம்

இந்தியாவில் உள்ள நூலகங்களில் கொல்கத்தா தேசிய நூலகம் முதன்மையானது. இதில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன.

37. “வசனநடை கைவந்த வல்லாளர்” – எனப் பாராட்டப்பட்டவர்

(அ) ஆறுமுகநாவலர்

(ஆ) மறைமலையடிகள்

(இ) பரிதிமாற்கலைஞர்

(ஈ) இரா.பி.சேதுப்பிள்ளை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) ஆறுமுகநாவலர்

தமிழ் உரைநடை வளர்ச்சிக்குப் பெருந்தொண்டாற்றிய ஆறுமுக நாவலரை, ‘வாசனநடை கைவந்த வல்லாளர்” என்று பரிமாற் கலைஞர் பாராட்டியுள்ளார்.

38. “ஈசான தேசிகர்” என்று அழைக்கப்படுபவர்

(அ) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

(ஆ) ஞானதேசிகர்

(இ) சுவாமிநாத தேசிகர்

(ஈ) மறைமலை அடிகள்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) சுவாமிநாத தேசிகர்

“திருச்செந்திற்கலம்பகம்” என்ற நூலின் ஆசிரியர் சுவாமிநாத தேசிகர் ஆவார். இவரின் சிறப்புப் பெயர் “ஈசான தேசிகர்” என்பதாகும்.

39. களிற்று மருப்பு“ – இலக்கணக்குறிப்பு கூறுக:

(அ) வினைத்தொகை

(ஆ) இரண்டாம் வேற்றுமைத் தொகை

(இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை

(ஈ) ஆறாம் வேற்றுமைத் தொகை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) ஆறாம் வேற்றுமைத் தொகை

40. “குயில்கள் கூவியது” என்பது

(அ) பால் வழு

(ஆ) திணை வழு

(இ) எண் வழு

(ஈ) இட வழு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) எண் வழு

குயில்கள் கூவின-சரியான தொடர்.

குயில் கூவியது-சரியான தொடர்.

குயில்கள் கூவியது-எண்வழு தொடர்

41. “பிசிராந்தையார், நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறார்” என்பது

(அ) உணர்ச்சி வாக்கியம்

(ஆ) வினா வாக்கியம்

(இ) செய்தி வாக்கியம்

(ஈ) தன்வினை வாக்கியம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) செய்தி வாக்கியம்

42. பின்வருவனவற்றுள் இரட்டைக்கிளவி எது?

(அ) கலகலவெனச் சிரித்தாள்

(ஆ) வருக வருக என வரவேற்றான்

(இ) பார்த்துப் பார்த்துப் பேசினான்

(ஈ) நொந்தேன் நொந்தேன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) கலகலவெனச் சிரித்தாள்

எ.கா:கலகலவென, மடமடவென, சலசலவெனச் சொற்களைப் பிரித்தால் பொருள் தராதவை இரட்டைக்கிளவி ஆகும்.

எ.கா: வருகவருக, பார்த்துப் பார்த்து, நொந்தேன் நோந்தேன் என சொற்களைப் பிரித்தால் பொருள் தருவது அடுக்குத் தொடராகும்.

43. “கை” என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்

(அ) காத்தல்

(ஆ) ஒலிக்குறிப்பு

(இ) ஒழுக்கம்

(ஈ) சோர்தல்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) ஒழுக்கம்

44. “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு” என்னும் திருக்குறளில் பயின்று வரும் அணி.

(அ) எடுத்துக்காட்டுவமை அணி

(ஆ) தற்குறிப்பேற்ற அணி

(இ) இல்பொருள் உவமையணி

(ஈ) வேற்றுப்பொருள் வைப்பணி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) எடுத்துக்காட்டுவமை அணி

எடுத்துக்காட்டு உவமையணி: உவமை தனி வாக்கியமாகவும் உவமேயம் தனிவாக்கியமாகவும் அமைந்து உவம உருபு பெறாமல் வருவது எடுத்துக்காட்டு உவமையணி ஆகும்.

அகரமுதல எழுத்தெல்லாம் – உவமை.

ஆதிபகவன் முதற்றே உலகு-உவமேயம்.

போல என்ற உவமஉருபு மறைந்து வந்துள்ளது

45. “கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக” என்னும் குறட்பாவில் அமைந்துள்ள மோனை.

(அ) ஒரூஉ மோனை

(ஆ) பொழிப்பு மோனை

(இ) கூழை மோனை

(ஈ) முற்று மோனை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) முற்று மோனை

1,2,3,4 –ஆம் சீர்களில் முதலெழுத்து ஒன்றிவருவது முற்றுமோனையாகும்.

1 2 3 4

ற்க சடறக் ற்பவை ற்றபின்

46. “சீதையைக் கண்டேன்” என்னும் தொடர்

(அ) விளித்தொடர்

(ஆ) பெயரெச்சத் தொடர்

(இ) வினைமுற்றுத்தொடர்

(ஈ) உரிச்சொற்றொடர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) வினைமுற்றுத்தொடர்

47. இடைச்சொல் கண்டறிக:

(அ) தவ

(ஆ) நடந்தான்

(இ) தாமரை

(ஈ) மற்று

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) மற்று

பெயர்ச்சொற்களுக்கும் வினைச்சொற்களுக்கும் இடையே வந்து பொருள் உணர்த்தும் சொற்கள் இடைச்சொற்கள் ஆகும்.

வேற்றுமை உருபுகள், வினையுருபுகள், பண்பு உருபுகள், உவம உருபுகள், சாரியைகள், சுட்டு, வினாக்கள், அசைநிலைகள் ஆகிய யாவும் இடைச்சொற்களாகும். தமக்கெனப் பொருளுடைய ஏ, ஒ, மற்று, தான் முதலியனவும் இடைச்சொற்களாகும். தொல்காப்பியர் சொல்லதிகாரம் இடையியலில் 40 இடைச்சொற்களைக் குறிப்பிட்டுள்ளார். “மற்று” என்பது அசைநிலை இடைச்சொல்லாகும்.

48. வளர்பிறை என்பது ———- ஆகும்

(அ) பண்புத்தொகை

(ஆ) வினைத்தொகை

(இ) வேற்றுமைத்தொகை

(ஈ) உவமைத்தொகை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) வினைத்தொகை

முக்காலங்களையும் உணர்த்துவது வினைத்தொகை ஆகும்.

வளர்பிறை:வளர்ந்த பிறை, வளருகின்ற பிறை, வளரும் பிறை.

49. பிழையில்லாமல் இலக்கணத்தைக் கல்.

– தன்வினை வாக்கியத்திற்குச் சரியான பிறவினை வாக்கியத்தைத் தேர்க.

(அ) பிழையில்லாமல் இலக்கணத்தை எழுது

(ஆ) பிழையில்லாமல் இலக்கணத்தைக் கற்பி

(இ) பிழையில்லாமல் இலக்கணத்தைப் படி

(ஈ) பிழையில்லாமல் இலக்கணத்தைப் பேசு

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) பிழையில்லாமல் இலக்கணத்தைக் கற்பி

50. செல்வச் செவிலி என்பதன் இலக்கணக்குறிப்பு

(அ) உவமைத்தொடர்

(ஆ) பண்புத்தொகை

(இ) உருவகம்

(ஈ) நான்காம் வேற்றுமைத் தொகை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) உருவகம்

உருவகம்: இதில் உவமேயம் முதல் பகுதியாகவும் உவமை இரண்டாவது பகுதியாகவும் அமைந்திருக்கும். உவமானம், உவமேயம் இரண்டும் ஒன்றாகவே அமைந்திருக்கும்.

எ.கா: வாய்ப்பவளம், மொழியமுது, செல்வச் செவிலி

51. “ஐ” என்பதன் பொருள்

(அ) கண்

(ஆ) நான்

(இ) அழகு

(ஈ) அம்பு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) அழகு

ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்கள்:

ஐ-தலைவன், அழகு, வியப்பு.

52. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் பிறந்த ஆண்டு

(அ) 1715

(ஆ) 1755

(இ) 1785

(ஈ) 1815

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) 1815

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனாரின் காலம் 06.04.1815 முதல் 02.01.1876 வரையாகும்

53. “குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வது” —— பருவம்

(அ) சப்பாணிப்பருவம்

(ஆ) அம்புலிப்பருவம்

(இ) வருகைப்பருவம்

(ஈ) முத்தப்பருவம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) வருகைப்பருவம்

சப்பாணி பருவம்-9-ஆம் திங்கள்.

அம்புலிப்பருவம்-15-ஆம் திங்கள்.

வருகைப்பருவம்-13-ஆம் திங்கள்.

முத்தப்பருவம்-11-ஆம் திங்கள்.

54. பொருத்துக:

அ. மதுரகவி – 1. நால்வகைக் கவிகளையும் பாட வல்லவர்

ஆ. வித்தாரக்கவி – 2. “பாடு” எனக் கூறியவுடன் பாடுபவர்

இ. பாவலரேறு – 3. தொடர்நிலைச் செய்யுளும், தூய காப்பியங்களும் இயற்றுபவர்

ஈ. ஆசுகவி – 4. ஓசை நலம் சிறக்கப் பாடுபவர்

அ ஆ இ ஈ

அ. 3 2 1 4

ஆ. 4 3 1 2

இ. 1 2 4 3

ஈ. 2 4 3 1

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 4 3 1 2

55. ”மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம் தகுதியால் வாழ்தல்”

– இவ்வடிகள் இடம் பெறும் நூல்.

(அ) கார் நாற்பது

(ஆ) மதுரைக்காஞ்சி

(இ) இனியவை நாற்பது

(ஈ) ஐந்திணை ஐம்பது

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) இனியவை நாற்பது

இனியவை நாற்பது

சலவரைச் சாரா விடுதல் இனிதே

புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே

மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்

தகுதியால் வாழ்தல் இனிது.

– பூதஞ்சேந்தனார்

பொருள்: வஞ்சகரைச் சேராமல் விலகியிருத்தல் இனியது. அறிவுடையாரின் வாய்ச் சொற்களைப் பின்பற்றி ஒழுகுதல் இனிது. நிலையான உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் உரிமைப்பட வாழ்தல் இனியது.

56. “ஆசனத்தில் பூசனைகள் அமர்வித்து விருப்பினுடன்

வாசம் நிறை திருநீற்றுக் காப்பேந்தி மனந்தழைப்ப”

– இப்பாடலடிகள் இடம் பெறும் நூல்.

(அ) பெரியபுராணம்

(ஆ) கந்தபுராணம்

(இ) சிலப்பதிகாரம்

(ஈ) மணிமேகலை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) பெரியபுராணம்

பெரியபுராணம்-அப்பூதியடிகள் புராணம்.

ஆசனத்தில் பூசனைகள் அமர்வித்து விரும்பினுடன்

வாசம்நிறை திருநீற்றுக் காப்பேந்தி மனந்தழைப்பத்

தேசமுய்ய வந்தவரைத் திருவமுது செய்விக்கும்

நேசமுற விண்ணப்பம் செயஅவரும் அதுநேர்ந்தார்

-சேக்கிழார்.

பொருள்: அப்பூதியடிகள், திருநாவுக்கரசரை ஓர் இருக்கையில் உட்காரச் செய்தார்;. விருப்பமுடன் பூசித்து வழிபட்டார்; திருநீற்றுக் காப்பேந்தி அணிந்தார்; மனமகிழ்வுற்றவராய் நாடுய்ய வந்தவரைத் திருவமுது செய்தருள விண்ணப்ப செய்தார்; திருநாவுக்கரசரும் அதற்கு இசைந்தார்.

57. “நீலமுடி தரித்த பல மலை சேர்நாடு

நீரமுத மெனப் பாய்ந்து நிரம்பு நாடு”

– இப்புகழ்மிக்க பாடலடிகள் இடம் பெற்றுள்ள நூல்.

(அ) குயில்பாட்டு

(ஆ) பாஞ்சாலி சபதம்

(இ) கண்ணன் பாட்டு

(ஈ) அழகின் சிரிப்பு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) பாஞ்சாலி சபதம்

பாஞ்சாலி சபதம் – சூழ்ச்சிச் சுருக்கம்.

நீலமுடி தரித்தபல மலைசேர் நாடு

நீரமுத மெனப்பாய்ந்து நிரம்பு நாடு

கோலமுறு பயன்பமரங்கள் செறிந்து வாழுங்

குளிர்காவுஞ் சோலைகளுங் குலவு நாடு

ஞாலமெலாம் பசியின்றிக் காத்தல் வல்ல

நன்செய்யும் புன்செய்யும் நலமிக் கோங்கப்

பாலாடையும் நறுசெய்யும் தேனும் உண்டு

பண்ணவர்போல் மக்களெலாம் பயிலு நாடு

-பாரதியார்.

தூது சென்ற விதுரன் பாண்டவரின் நாட்டுவளம் கண்டு மகிழும் பகுதி.

பொருள்: நீலநிற மேகங்கள் தவழ்கின்ற பல மலைகளைக் கொண்ட நாடு; அம்மலைகளிலிருந்து வருகின்ற அருவி நீரானது அமுதமாகப் பாய்ந்து வளஞ்செய்கின்ற நாடு. அழகு மிக்க பயன்தரு மரங்கள் நிறைந்த குளிர்ந்த காடுகளும், பூக்கள் நிறைந்த சோலைகளும் கலந்திருக்கின்ற நாடு. உலகில் வாழ்கின்ற மக்களைப் பசியின்றிக் காப்பதற்கு ஏற்ற நன்செய், புன்செய்ப் பயிர்கள் செழித்து வளம் சேர்க்கின்ற நாடு. பாலாடை, நறுமண நெய், தேன் ஆகியவற்றை உண்டு தேவர்கள் போல் மக்கள் மகிழ்ந்திருக்கின்ற நாடு.

58. “நாற்கரணங்கள்” எனப்படுவது ———-

(அ) அறம், பொருள், இன்பம், வீடு

(ஆ) வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா

(இ) மனம், புத்தி, சித்தம், அகங்காரம்

(ஈ) வைதருப்பம், கௌடம், பாஞ்சாலம், மாகதம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) மனம், புத்தி, சித்தம், அகங்காரம்

தமிழ்விடு தூது

அறம், பொருள், இன்பம், வீடு-விளைபொருள்கள்.

வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா-வயலின் வரப்புகள்.

மனம், புத்தி, சித்தம், அகங்காரம்-நாற்கரணங்கள்.

வைதருப்பம், கௌடம், பாஞ்சாலம், மாகதம்-செய்யுள் நன்னெறிகள்

59. “தமிழ் கெழு கூடல்” என்று மதுரையைப் போற்றிய நூல்

(அ)அகநானூறு

(ஆ) சிலப்பதிகாரம்

(இ) புறநானூறு

(ஈ) பரிபாடல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) புறநானூறு

மதுரையைப் போற்றிய இலக்கியங்கள்.

“தமிழ்கெழு கூடல்” – புறநானூறு.

“தமிழ்நிலை பெற்று தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை”

– சிறுபாணாற்றுப்படை.

“ஓங்குசீர் மதுரை, மதுரைமூதூர் மாநகர், தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர்மதுரை, மாண்புடை மரபின் மதுரை, வானவர் உறையும் மதுரை, பதியெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர்” – சிலப்பதிகாரம்.

60. “சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன்” – எனக் கூறியவர்.

(அ) காந்தியடிகள்

(ஆ) இராமானுஜர்

(இ) பெரியார்

(ஈ) வள்ளலார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) வள்ளலார்

61. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தின் மூன்றாம் திருவந்தாதியை இயற்றியவர்

(அ) பொய்கையாழ்வார்

(ஆ) பூதத்தாழ்வார்

(இ) நம்மாழ்வார்

(ஈ) பேயாழ்வார்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) பேயாழ்வார்

பேயாழ்வார்:

“திருமயிலை” என வழங்கப்படும் மயிலாப்பூரில் பிறந்த இவர் முதலாழ்வார்களில் மூன்றாமவர் ஆவார். இவருடைய பாசுரங்கள் “மூன்றாம் திருவந்தாதி” எனப்படுகிறது. இது நூறு வெண்பாக்களால் ஆனது.

62. தமிழ் எண் கணக்கைத் தீர்க்க:

ஙஅ+க0 ———?

(அ) ருஅ

(ஆ) சஅ

(இ) சஅ

(ஈ) எஅ

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) சஅ

ங-மூன்று; அ-எட்டு; ஙஅ-38.

க-ஒன்று; 0-பூஜ்ஜியம்; க0-10; 38+10=48.

ச-நான்கு; அ-எட்டு; சஅ=48.

63. தென்னம் பொருப்பு என்பது

(அ) பொதிகை மலை

(ஆ) மேரு மலை

(இ) கழுகு மலை

(ஈ) நீல மலை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) பொதிகை மலை

பொருப்பு-மலை. “தென்னம்” என்பது இங்கு தென் திசையைக் குறிக்கிறது. தென்திசையில் உள்ள மலை பொதிகைமலையாகும்.

64. “யான் பெற்ற பெருந்தவப் பே(று) என்னை அன்றி

இருநிலத்தில் பிறந்தோரில் யார் பெற்றாரே”

இவ்வடிகள் இடம் பெறும் நூல்

(அ) இராமாயணம்

(ஆ) நளவெண்பா

(இ) சிலப்பதிகாரம்

(ஈ) வில்லிபாரதம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) வில்லிபாரதம்

வில்லிபாரதம் (கர்ணன் கூற்று)

ஊன் பெற்ற பகழியினால் அழிந்தும் வீழ்ந்தும்

உணர்வுடன்நின் திருநாமம் உரைக்கப் பெற்றேன்

யான்பெற்ற பெருந்தவப்பேறு என்னை அன்றி

இருநிலத்தில் பிறந்தோரில் யார்பெற் றாரே!

– வில்லிபுத்தூரார்.

பொருள்: அர்ஜீனனுடைய கூரிய அம்பினால் துளைக்கப் பெற்று வலிமையிழந்து நான் வாடினாலும் உணர்வு உடையவனாகி, உன்னுடைய திருப்பெயரை உரைக்கும் பேறு பெற்றேன். நான் பெற்ற பெரும் பேறு இவ்வுலகில் யார்தாம் பெற்றார்? எனக்கூறி கர்ணன், கண்ணனைப் போற்றி வணங்கினான்.

65. “உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்

உறவு கலவாமை வேண்டும்” எனப் பாடியவர்.

(அ) வள்ளலார்

(ஆ) தாயுமானவர்

(இ) திருமூலர்

(ஈ) அப்பர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) வள்ளலார்

“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற

உத்தமர்தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்

உறவு கலவாமை வேண்டும்”

– வள்ளலார்

66. “நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்

அல்லது செய்தல் ஓம்புமின்”

இப்பாடல் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்

(அ) அகநானூறு

(ஆ) புறநானூறு

(இ) குறுந்தொகை

(ஈ) கலித்தொகை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) புறநானூறு

புறநானூறு

பல்சான் நீரே பல்சான் நீரே

கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட்

பயனின் மூப்பிற் பல்சான் நீரே

கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்

பிணிக்குங் காலை யிரங்கு விர் மாதோ

நல்லது செய்த லாற்றீ ராயினும்

அல்லது செய்த லோம்புமி னதுதான்

எல்லாரு முவப்ப தன்றியும்

நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே

– நரிவெரூஉத் தலையார்.

பொருள்: வயதின் முதிர்ச்சியால் மீனின் முள்ளைப் போன்று தலைமயிர் வெளுத்து, உடலிலும் கன்னத்திலும் தோல் சுருங்கியுள்ள பயனில்லாத மூப்பினை அடைந்த சான்றோர்கள். எமன் உயிரைக் கவர வரும்போது வருந்திப் பயனில்லை. உயிருடன் வாழும்போதே நல்லவற்றை செய்ய வேண்டும். அஃது இயலாத போது தீயதை செய்தலையாவது கைவிட வேண்டும்.

67. கலித்தொகையில் நெய்தல் கலியைப் பாடியவர்

(அ) நல்லந்துவனார்

(ஆ) நக்கீரர்

(இ) கபிலர்

(ஈ) ஓரம்போகியார்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) நல்லந்துவனார்

கலித்தொகை.

திணை பாடியவர் பாடல்கள்

குறிஞ்சி கபிலர் 29

முல்லை சோழன் நல்லுருத்திரன் 17

மருதம் மருதன் இளநாகனார் 35

நெய்தல் நல்லந்துவனார் 33

பாலை பெருங்கடுங்கோ 35

68. நம்மாழ்வாரையே தெய்வமாகக் கருதிப் பாசுரங்களைப் பாடியவர்

(அ) மதுரகவியாழ்வார்

(ஆ) திருமழிசையாழ்வார்

(இ) திருமங்கையாழ்வார்

(ஈ) தொண்டரடிப்பொடியாழ்வார்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) மதுரகவியாழ்வார்

நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் மதுரகவி ஆழ்வார் அருளிச் செய்தது “கண்ணிநுண் சிறுதாம்பு” என்ற ஒரேயொரு பாசுரம்தான். இவர் பெருமாளைத் தன் பாசுரங்களால் பாடாமல் தன் ஆச்சாரியரான நம்மாழ்வாரேயே சிறந்த தெய்வமாக எண்ணி அவரைப் போற்றியே 11 பாசுரங்களைப் பாடியுள்ளார்.

69. காந்தியடிகள் எந்த நாடக நூலைப் படித்தது முதல் தன் பெற்றோரிடம் அன்பு செலுத்தலானார்?

(அ) சிரவணபிதூர்பத்தி

(ஆ) அரிசந்திரன்

(இ)பக்தப்பிரகலாதன்

(ஈ) இராமநாடகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) சிரவணபிதூர்பத்தி

70. ”நாமார்க்கும் குடியல்லோம்” என்னும் பாடல் யாரை “அச்சமில்லை அச்சமில்லை” எனப் பாடத் தூண்டியது?

(அ) பாரதிதாசன்

(ஆ) சுரதா

(இ) பாரதியார்

(ஈ) வெ.இராமலிங்கம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பாரதியார்

“நாமார்க்கும் குடியல்லோம்” என்ற பாடல் அப்பர் தேவாரத்தில் இடம்பெற்றுள்ளது. அந்தப் பாடல்தான் பாரதியாரை “அச்சமில்லை அச்சமில்லை” எனப் பாடத் தூண்டியது.

71. நிரப்புக:

1. சிலம்பு – கண்ணகி

2. மணிமேகலை – மாதவி

3. கம்பராமாயணம் – சீதை

4. சூளாமணி – _______________

(அ) வளையாபதி

(ஆ) நீலகேசி

(இ) கேமசரி

(ஈ) சுயம்பிரபை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) சுயம்பிரபை

72. “அளை” என்ற சொல்லின் பொருள்

(அ) ஒலி

(ஆ) கூப்பிடு

(இ) கொடு

(ஈ) புற்று

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) புற்று

73. குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வம்

(அ) முருகன்

(ஆ) இந்திரன்

(இ) திருமால்

(ஈ) வருணன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) முருகன்

74. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளையுடைய நூல்

(அ) நெடுநல்வாடை

(ஆ) முல்லைப்பாட்டு

(இ) குறிஞ்சிப்பாட்டு

(ஈ) மதுரைக்காஞ்சி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) முல்லைப்பாட்டு

பத்துப்பாட்டு நூல்கள் அடிகள் ஆசிரியர்

திருமுருகாற்றுப்படை 317 நக்கீரர்

பொருநராற்றுப்படை 248 முடத்தாமக் கண்ணியார்

சிறுபாணாற்றுப்படை 269 நல்லூர் நத்தத்தனார்

பெரும்பாணாற்றுப்படை 500 உருத்திரங் கண்ணனார்

முல்லைப்பாட்டு 103 நம்பூதனார்

மதுரைக்காஞ்சி 782 மாங்குடி மருதனார்

நெடுநல்வாடை 188 நக்கீரர்

குறிஞ்சிப்பாட்டு 261 கபிலர்

பட்டினப்பாலை 301 உருத்திரங் கண்ணனார்

மலைபடுகடாம் 583 இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார்

75. “நாடகவியல்” என்னும நூலின் ஆசிரியர்

(அ) சங்கரதாஸ் சுவாமிகள்

(ஆ) பரிதிமாற்கலைஞர்

(இ) பம்மல் சம்பந்தனார்

(ஈ) ஒளவை சண்முகம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) பரிதிமாற்கலைஞர்

பரிதிமாற்கலைஞர் செய்யுள் வடிவில் இயற்றிய நூல் “நாடகவியல்” ஆகும்

76. பொருத்துக:

அ. திரிகடுகம் – 1. விளம்பிநாகனார்

ஆ. ஏலாதி – 2. நல்லாதனார்

இ. நான்மணிக்கடிகை – 3. காரியாசான்

ஈ. சிறுபஞ்சமூலம் – 4. கணிமோதவியார்

அ ஆ இ ஈ

அ. 3 1 4 2

ஆ. 1 3 2 4

இ. 2 4 1 3

ஈ. 4 2 3 1

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. 2 4 1 3

77. சரசுவதி அந்தாதி என்னும் நூலை எழுதியவர்

(அ) புகழேந்தி

(ஆ) கம்பர்

(இ) ஒட்டக்கூத்தர்

(ஈ) ஒளவையார்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) கம்பர்

கம்பர் இயற்றிய நூல்கள்:

கம்பராமாயணம், சடகோபர் அந்தாதி, ஏர்எழுவது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம், சிலை எழுபது.

78. கூத்தராற்றுப்படை என்ற சிறப்புப் பெயர் பெற்ற பத்துப்பாட்டு நூல்

(அ) சிறுபாணாற்றுப்படை

(ஆ) நெடுநல்வாடை

(இ) மலைபடுகடாம்

(ஈ) மதுரைக்காஞ்சி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) மலைபடுகடாம்

மலைபடுகடாம் என்ற நூலில் அமைந்துள்ள பாடல்கள் கூத்தன் ஒருவன் மற்றொரு கூத்தனை மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது. எனவே இந்நூல் “கூத்தராற்றுப்படை” என்றும் வழங்கப்படுகிறது.

79. பொருத்துக:

அ. வினையே ஆடர்வர்க்குயிர் – 1. தாரா பாரதி

ஆ. முந்நீர் வழக்கம் மகடூஉவோடு டில்லை – 2. குறுந்தொகை

இ. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே – 3. தொல்காப்பியர்

ஈ. விரல்கள் பத்தும் மூலதனம் – 4. திருமூலர்

அ ஆ இ ஈ

அ. 4 3 2 1

ஆ. 2 3 4 1

இ. 2 4 3 1

ஈ. 3 2 1 4

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 2 3 4 1

80. கால்டுவெல் – பிறந்த நாடு

(அ) இங்கிலாந்து

(ஆ) ஜெர்மனி

(இ) அயர்லாந்து

(ஈ) இத்தாலி

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) அயர்லாந்து

81. “மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்’

– என்று பாராட்டப்படுபவர்

(அ) பாரதியார்

(ஆ) முடியரசன்

(இ) சுரதா

(ஈ) அப்துல் ரகுமான்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) அப்துல் ரகுமான்

“மரபுக்கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” என்று புகழப்பட்டவர் கவிக்கோ அப்துல் ரகுமான் ஆவார். “தமிழ்நாட்டு இக்பால்” என்றும் புகழப்பட்டார். 1999-ஆம் ஆண்டு “ஆலாபனை” என்ற இவருடைய படைப்பிற்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றார். 02.06.2017 அன்று இவர் இயற்கை எய்தினார்.

82. திருக்குறளின் பெருமைகளைப் போற்றி “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” எனப் புகழ்ந்து பாடியவர்

(அ) பாரதியார்

(ஆ) பாரதிதாசன்

(இ) சுரதா

(ஈ) தாரா பாரதி

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) பாரதிதாசன்

83. “நான் தனியாக வாழவில்லை; தமிழோடு வாழ்கிறேன்” என்று கூறியவர்

(அ) தனிநாயகம் அடிகள்

(ஆ) திரு.வி.கல்யாணசுந்தரனார்

(இ) மறைமலையடிகள்

(ஈ) உ.வே.சாமிநாதர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) திரு.வி.கல்யாணசுந்தரனார்

திரு.வி.க. அவர்கள் தம் மனைவியை இழந்தபோது அவரின் நண்பர், “மனைவியை இழந்து வாழ்வது கடினமாக இல்லையா?” எனக் கேட்டார். அதற்கு திரு.வி.க. “நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன்” எனக் கூறினார்.

84. பொருத்துக:

நூல் ஆசிரியர்

அ. போற்றித் திருவகவல் – 1. உமறுப்புலவர்

ஆ. பரமார்த்த குரு கதை – 2. எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை

இ. முதுமொழி மாலை – 3. வேதநாயகம் பிள்ளை

ஈ. பெண்மதி மாலை – 4. வீரமாமுனிவர்

அ ஆ இ ஈ

அ. 2 4 1 3

ஆ. 1 4 2 3

இ. 3 4 1 2

ஈ. 3 4 2 1

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. 3 4 1 2

85. பொருத்துக

நூல் ஆசிரியர்

அ. பெத்லகேம் குறவஞ்சி – 1. பலபட்டடைச் சொக்கநாதப் பிள்ளை

ஆ. முத்துக்குமராசுவாமி பிள்ளைத்தமிழ் – 2. ஒட்டக்கூத்தர்

இ. அழகர் கிள்ளைவிடு தூது – 3. தஞ்சை வேதநாயக சாத்திரியார்

ஈ. தக்கயாகப்பரணி – 4. குமரகுருபரர்

அ ஆ இ ஈ

அ. 4 3 2 1

ஆ. 2 4 3 1

இ. 3 4 1 2

ஈ. 1 3 2 4

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. 3 4 1 2

86. “தமிழன் என்றோர் இனமுண்டு

தனியே அவற்கொரு குணமுண்டு” எனக் கூறியவர்

(அ) பாரதியார்

(ஆ) பாரதிதாசன்

(இ) வாணிதாசன்

(ஈ) நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை

87. “தாதுகு சோலை தோறும் சண்பகக் காடுதோறும் போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்கள் தோறும்” என்று பாடிய கவிஞர்

(அ) பாரதிதாசன்

(ஆ) பாரதியார்

(இ) கம்பர்

(ஈ) இளங்கோவடிகள்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) கம்பர்

கம்பராமாயணம்

தாதுகு சோலை தோறும் சண்பக் காடு தோறும்

போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்கள் தோறும்

மாதவி வேலிப் பூக வனந்தோறும் வயல்கள் தோறும்

ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே

– கம்பர்.

பொருள்: சரயு ஆறு, மகரந்தப் பொடிகளைச் சிந்தும் சோலைகளை வளப்படுத்தியும், சண்பக வனங்களைக் கடந்தும், அரும்புகள் விரிந்திருக்கின்ற குளங்களை நிரப்பியும், புது மணல் மிக்க நீர்நிலைகள் வழியாகவும், குருகத்தி வேலியிட்ட கமுகத் தோட்டங்களில் பாய்ந்தும், வயல்களை செழிக்கச் செய்தும் பாய்ந்து செல்வது, உடலினுள் உயிர் புகுந்து பரவுவதைப் போன்று விளங்குகின்றது

88. “வீறுடைச் செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி” என்று தமிழின் பெருமைகளைப் பறைசாற்றியவர்

(அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்

(ஆ) பரிதிமாற் கலைஞர்

(இ) அயோத்திதாசப் பண்டிதர்

(ஈ) பாவாணர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்

“வீறுடைச் செம்மொழி தமிழ்மொழி உலகம்

வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி”

– பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

“திருத்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய

தூயமொழி தமிழ்ச் செம்மொழி”

– பரிதிமாற்கலைஞர்

“16 செவ்வியல் தன்மைகளைக்கொண்ட செம்மொழி

நம் தமிழ் மொழி”

– தேவநேயப் பாவாணர்

89. கீழுள்ள சொற்களுள் காரணப் பெயரெச்ச சொல் எது?

(அ) காற்று

(ஆ) மரம்

(இ) விண்

(ஈ) முக்காலி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) முக்காலி

ஏதேனும் ஒரு காரணம் பற்றியோ பல காரணங்கள் பற்றியோ வழங்கி வரும் பெயர் காரணப்பெயர் ஆகும்.

முக்காலி-மூன்று கால்கள் அமைந்திருக்கும் காரணத்தால் முக்காலி எனக் காரணப்பெயராய் அமைந்தது.

காற்று, மரம், விண் ஆகியவை இடுகுறிப்பெயராகும். ஒரு காரணமும் இன்றி தொன்றுதொட்டு ஆன்றோரால் வழங்கி வரும் பெயர் இடுகுறிப்பெயராகும்.

குறிப்பு: வினாவில்காரணப் பெயர்ச் சொல் என்று அமைந்திருகு;க வேண்டும். “காரணப் பெயரரெச்சசொல்” எனப் பிழையாகக் கேட்கப்பட்டுள்ளது.

90. குன்றேறி என்பதன் இலக்கணக் குறிப்பு

(அ) ஏழாம் வேற்றுமைத் தொகை

(ஆ) ஆறாம் வேற்றுமைத் தொகை

(இ) ஐந்தாம் வேற்றுமைத் தொகை

(ஈ) நான்காம் வேற்றுமைத் தொகை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) ஏழாம் வேற்றுமைத் தொகை

இரண்டு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகள் மறைந்து வருவது வேற்றுமைத் தொகை ஆகும். குன்றின் கண் ஏறி என்ற சொல்லில் உள்ள “கண்” என்ற ஏழாம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது

91. செயப்பாட்டுவினைத் தொடரைக் கண்டறிக

(அ) குடியரசுத் தலைவர் உலகத்தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

(ஆ) பாத்திமா திருக்குறள் கற்பித்தாள்

(இ) உலகத்தமிழ் மாநாடு குடியரசுத் தலைவரால் தொடங்கி வைக்கப்பெற்றது

(ஈ) நான் நாளை மதுரைக்குச் செல்வேன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) உலகத்தமிழ் மாநாடு குடியரசுத் தலைவரால் தொடங்கி வைக்கப்பெற்றது

அ-செய்வினை.

ஆ-பிறவினை.

இ-செயப்பாட்டுவினை.

ஈ-செய்தித் தொடர்.

92. பிழை நீக்கி எழுதுக:

“கண்டதைக் கூறவே”

(அ) கண்டது கூறவே

(ஆ) கண்டதை கூறவே

(இ) காண்பது கூறவே

(ஈ) கண்டதனைக் கூறவே

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) கண்டதனைக் கூறவே

93. நீர், நீவிர், நீங்கள் ஆகியன ———— பெயர்கள்

(அ) முன்னிலை ஒருமை

(ஆ) தன்மை ஒருமை

(இ) முன்னிலைப் பன்மை

(ஈ) தன்மைப்பன்மை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) முன்னிலைப் பன்மை

நீ-முன்னிலை ஒருமை.

நான்,யான்-தன்மை ஒருமை.

நாம், யாம்-தன்மைப் பன்மை

94. “ஓ” என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்

(அ) உயர்ச்சி

(ஆ) தூய்மை

(இ) மகிழ்ச்சி

(ஈ) கொள்கலம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) மகிழ்ச்சி

95. அண்பல் அடிநா முடிவுறத் ———- வரும்

(அ) தந

(ஆ) பம

(இ) ரழ

(ஈ) றன

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) தந

“அண்பல் அடிநா முடியுறத் தந வரும்”

– நன்னூல் 80.

த்ந்-மேல்வாய்ப் பல்லின் அடியை, நாக்கின் நுனி பொருந்துவதனால் இவ்வெழுத்துகள் தோன்றுகின்றன.

“மீகீழ் இதழுறப் பம்மப் பிறக்கும்”

– நன்னூல் 81.

ப்,ம் – மேல் உதடும் கீழ் உதடும் பெருந்த இவை தோன்றும்

“அண்ணம் நுனிநா வருட ரழ வரும்’ – நன்னூல் 83

ர்,ழ்-இவை மேல்வாயை நாக்கின் நுனி தடவுவதனால் பிறக்கின்றன.

“அண்ணம் நுனிநா நனியுறின் றனவாகும்” – நன்னூல் 86.

ற், ன்-இவை மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதனால் பிறக்கின்றன.

96. வயிற்றுக்கும் என்பதில் வரும் உம்மை

(அ) முற்றும்மை

(ஆ) எண்ணும்மை

(இ) உயர்வுச் சிறப்பும்மை

(ஈ) இழிவுச் சிறப்பும்மை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) இழிவுச் சிறப்பும்மை

97. வெண்பாவிற்குரிய ஓசை

(அ) அகவல்

(ஆ) செப்பல்

(ஈ) தூங்கல்

(ஈ) துள்ளல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) செப்பல்

வெண்பா-செப்பலோசை;

ஆசிரியப்பா-அகவலோசை;

கலிப்பா-துள்ளலோசை;

வஞ்சிப்பா-தூங்கலோசை.

98. கார் காலத்திற்குரிய மாதங்கள்

(அ) ஐப்பசி, கார்த்திகை

(ஆ) ஆனி, ஆடி

(இ) ஆவணி, புரட்டாசி

(ஈ) மார்கழி, தை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) ஆவணி, புரட்டாசி

அகப்பொருள் இலக்கணம்- பெரும் பொழுதுகள்

இளவேனில்- சித்திரை, வைகாசி.

முதுவேனில்- ஆனி,ஆடி.

கார்காலம்- ஆவணி,புராட்டாசி.

குளிர்காலம்- ஐப்பசி, கார்த்திகை.

முன்பனி- மார்கழி, தை.

பின்பனி- மாசி,பங்குனி.

99. ஐந்திணை, ஐம்பால், ஐம்புலன், ஐம்பொறி ________ இவை ஆகும்.

(அ) பெயர்ச்சொற்கள்

(ஆ) வினைச்சொற்கள்

(இ) தொகைச்சொற்கள்

(ஈ) இடைச்சொற்கள்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) தொகைச்சொற்கள்

தொகைச் சொற்கள்:

ஐந்திணை-குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை.

ஐம்பால்-ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால், பலவின்பால்.

ஐம்புலன்-சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.

ஐம்பொறி-மெய், வாய், கண், மூக்கு, செவி.

100. தேன்மொழி கட்டுரை எழுதிலன். இது ——– தொடர் ஆகும்.

(அ) உடன்பாட்டுத்தொடர்

(ஆ) எதிர்மறைத் தொடர்

(இ) பொருள்மாறா எதிர்மறைத் தொடர்

(ஈ) அயற்கூற்றுத் தொடர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) எதிர்மறைத் தொடர்

தேன்மொழி கட்டுரை எழுதினாள்-உடன்பாட்டுத் தொடர்.

தேன்மொழி கட்டுரை எழுதாமல் இராள்-பொருள் மாறா எதிர்மறைத் தொடர்.

தேன்மொழி கட்டுரை எழுதியதாக ஆசிரியர் கூறினார்-அயற்கூற்றுத் தொடர்.

Exit mobile version