General Tamil Model Question Paper 21

General Tamil Model Question Paper 21

General Tamil Model Question Paper 21: Tnpsc Aspirants can use this opportunity to check General Tamil Model Question Papers For Tnpsc. General Tamil Model Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Model Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. சரியானவற்றைக் காண்க

1. யான்+கு=எனக்கு

2. யான்+கண்=என்னின்கண்

3. யான்+அது=என்னது

4. யான்+ஆல்=என்னால்

(அ) 2, 3 சரி

(ஆ) 1, 2 சரி

(இ) 1, 4 சரி

(ஈ) நான்கும் சரி

விளக்கம்:

விடை மற்றும் விளக்கம்

(இ) 1, 4 சரி

யான்+கு=எனக்கு; யான்+கண்=என்கண்; யான்+அது=எனது; யான்+ஆல்=என்னால்

2. பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க: தொழிற்பெயர்

(அ) காலங்காட்டாது

(ஆ) மூவிடங்களிலும் வரும்

(இ) தொழிலுக்குப் பெயராய் வரும்

(ஈ) இருவகைப்படும்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) மூவிடங்களிலும் வரும்

ஒரு தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர் எனப்டும். இது எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் காட்டாது. இது இருவகைப்படும். அவையாவன, முதனிலைத் தொழிற்பெயர், முதனிலை திரிந்த தொழிற்பெயர்.

3. கொடுக்கப்படும் சொல்லுக்குரிய சரியான பொருள் எது? ‘கவிகை’

(அ) தேவருலகம்

(ஆ) கவிதை

(இ) பாட்டு

(ஈ) குடை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) குடை

4. கொடுக்கப்பட்ட சொற்களுள் சரியான மரபுச் சொல்லைத் தேர்க.

(அ) மான்குட்டி

(ஆ) சிங்கக்குருளை

(இ) கீரிக்குட்டி

(ஈ) கழுதைக்கன்று

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) சிங்கக்குருளை

மரபுச் சொற்கள்: மான் கன்று, சிங்கக்குருளை, கீரிப்பிள்ளை, கழுதைக்குட்டி.

5. கீழ்க்காணும் “வல்லினம் மிகா இடம்” குறித்த இலக்கணக்கூற்றில் பிழையான கூற்று எது?

(அ) எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது

(ஆ) வினைத்தொகையில் வல்லினம் மிகாது

(இ) இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகாது

(ஈ) உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகாது

எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது. எ.கா: நாய்+போனது-நாய்போனது. மாடு+பாய்ந்தது-மாடு பாய்ந்தது.

இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும். எ.கா: பொருளை+தேடு-பொருளைத்தேடு. அவளை+கண்டேன்-அவளைக்கண்டேன். உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது. எ.கா: தாய்+தந்தை-தாய்தந்தை. இரவு+பகல்-இரவுபகல்.

6. PROJECTOR-என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க:

(அ) படப்பிடிப்பு

(ஆ) படப்பிடிப்புக் கருவி

(இ) பட வீழ்த்தி

(ஈ) பார்வை நிலைப்பு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பட வீழ்த்தி

Projector-படவீழ்த்தி (அ) திரைப்படக்கருவி

7. மரபுத் தொடருக்குப் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக: “ஆகாயத் தாமரை”

(அ) அலைந்து திரிதல்

(ஆ) இல்லாத ஒன்று

(இ) பயனின்றி இருத்தல்

(ஈ) இருப்பது போல் தோன்றும் ஆனால் இராது

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) இல்லாத ஒன்று

8. இலக்கணக் குறிப்பு அறிக: கெடுப்பதூஉம்

(அ) இன்னிசை அளபெடை

(ஆ) இசைநிறை அளபெடை

(இ) சொல்லிசை அளபெடை

(ஈ) செய்யுளிசைஅளபெடை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) இன்னிசை அளபெடை

1. இவ்வளபெடை மூன்று அசைகளைக் கொண்ட காய்ச்சீராக இருக்கும். கெடுப்/பதூ/உம். நிறை நிரை நேர் -கருவிளங்காய்

2. “இ” என்னும் எழுத்தில் முடியாது.

3. பெரும்பாலும் “உ” என்னும் எழுத்தில் முடிந்திருக்கும்.

9. “பார்குலாம் செல்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை” கீழ் உள்ள விடைகளில் சரியான விடையை எழுதுக:

(அ) எதுகை மட்டும் வந்துள்ளது

(ஆ) எதுகையும் இயைபும் வந்துள்ளது

(இ) மோனையும் எதுகையும் வந்துள்ளது

(ஈ) மோனை, எதுகை, இயைபு வந்துள்ளது

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) மோனை, எதுகை, இயைபு வந்துள்ளது

பார்குலாம் செவ்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை. மோனை: முதற்சீரில் வந்த முதல் எழுத்து அடுத்து வரும் சீர்களில் வருவது மோனையாகும். பார்குலாம் செல்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை. எதுகை: முதற்சீரில் வந்த இரண்டாம் எழுத்து அடுத்து வரும் சீர்களில் ஒன்றி வருவது எதுகையாகும். பார்குலாம் செவ்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை இயைபு: இறுதிச்சீர் ஒன்றி வருவது இயைபு ஆகும்.

10. விடைக்கேற்ற வினாவைக் கண்டறிக.

திரைப்படம் எடுப்பதனைவிடச் செய்திப்படம் எடுப்பது கடினமான பணியாகும்.

(அ) திரைப்படம் எடுப்பதனைவிட எப்படம் எடுப்பது கடினமான பணியாகும்?

(ஆ) திரைப்படம் எடுப்பதனைவிட எந்தப்படம் எடுப்பது கடினமான பணியாகும்?

(இ) திரைப்படம் எடுப்பதனைவிட கடினமான பணி எது?

(ஈ) திரைப்படம் எடுப்பதனைவிட எவ்வகைப்படம் எடுப்பது கடினமான பணியாகும்?

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) திரைப்படம் எடுப்பதனைவிட எப்படம் எடுப்பது கடினமான பணியாகும்?

General Tamil Study Materials

General Tamil Model Questions Pdf

11. பொருந்தாத சொல்லைக் கண்டறிக:

(அ) கெடாஅ

(ஆ) அரங்ங்கம்

(இ) எடுப்பதூஉம்

(ஈ) தழீஇ

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) அரங்ங்கம்

அளபெடை: உயிர் அளபெடை, ஒற்றளபெடை-அரங்கம்

உயிர்அளபெடை: செய்யுளிசை அளபெடை-எ.கா:கெடாஅ.

இன்னிசை அளபெடை:எ.கா:எடுப்பதூஉம்,

சொல்லிசை அளபெடை: தழீஇ.

கெடாஅ, எடுப்பதூஉம், தழீஇ, – மூன்றும் உயிர் அளபெடைகளின் வகைகள்.

அரங்ங்கம்-ஒற்றளபெடை.

12. பாதபீடிகை உள்ள இடம்:

(அ) வஞ்சிமாநகர்

(ஆ) மணிபல்லவத் தீவு

(இ) ஆபுத்திரன் நாடு

(ஈ) சேரநாடு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) மணிபல்லவத் தீவு

மணிமேகலை-ஆபுத்திரன் நாடு அடைந்த காதை. “ஆபுத் திரனா டடைந்தற் பின்னாள் மாசில் மணிபல் லவம் தொழு தேத்தி” – சீத்தலைச் சாத்தனார். மணிமேகலையின் கூற்று: “நான் ஆபுத்திரன் நாட்டையடைந்து, பின்னர் அங்கிருந்து குற்றமற்ற மணிபல்லவத் தீவுக்குச் சென்று பாதபீடிகையை வணங்குவேன்”.

13. அறவண அடிகள் “அறிவுண்டாகுக” என யாரை எல்லாம் வாழ்த்தினார்?

(அ) அரசமாதேவி, தோழியர் கூட்டம்

(ஆ) சித்திராபதி

(இ) மணிமேகலை

(ஈ) அனைவரையும்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) அனைவரையும்

மணிமேகலை-ஆபத்திரன் நாடு அடைந்த காதை

தேவியும் ஆயமும் சித்திரா பதியும்

மாதவி மகளும் மாதவர்க் காண்டலும்

எழுத்தெதிர் சென்றாங்கு இணைவளைக் கையால்

தொழுந்தகை மாதவன் துணையடி வணங்க

அறிவுண் டாகவென் றாங்கவன் கூறலும்

பொருள்: அறவண அடிகளைக் கண்ட அளவில் அரசமாதேவியும் தோழியர் கூட்டமும் சித்திராபதியும் மணிமேகலையும் எழுந்து, அவர் எதிரே சென்றனர். வணங்கும் தகுதியுடைய அறவணரின் இருபாதத்தைத் தம் இரு கைகளாலும் தொட்டு வணங்கினர்; அடிகள் “அறிவுண்டாகுக” என அவர்களை வாழ்த்தினார்.

14. “புல்லாகிப் பூடாய்” இடம்பெற்றுள்ள நூல்

(அ) திருவாசகம்

(ஆ) திருமந்திரம்

(இ) தேவாரம்

(ஈ) பதிற்றுப்பத்து

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) திருவாசகம்

திருவாசகம்: புல்லாகிப் பூடாய்ப் புழவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று விடு உற்றேன் – மாணிக்கவாசகர். மேற்கண்ட பாடலடிகள் ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள பரிணாம வளர்ச்சியைக் கூறுகின்றன.

15. திருக்குறளில் அறத்துப்பாலுக்குரிய அதிகாரங்கள்

(அ) 70

(ஆ) 25

(இ) 38

(ஈ) 30

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) 38

அறத்துப்பாலுக்குரிய அதிகாரங்கள்-38. பொருட்பாலுக்குரிய அதிகாரங்கள்-70. இன்பத்துப்பாலுக்குரிய அதிகாரங்கள்-25

16. முழுவதும் விருத்தப்பாக்களால் ஆன காப்பியம்.

(அ) சிலப்பதிகாரம்

(ஆ) மணிமேகலை

(இ) கம்பராமாயணம்

(ஈ) குண்டலகேசி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) கம்பராமாயணம்

முழுதும் விருத்தப்பாக்களால் ஆன காப்பியம் கம்பராமாயணம் ஆகும். “விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்” என்ற தொடர் இதனை விளக்குகிறது.

17. எத்திராசுலு (எ) அரங்கசாமி என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்.

(அ) நா.காமராசன்

(ஆ) தாராபாரதி

(இ) அப்துல் ரகுமான்

(ஈ) வாணிதாசன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) வாணிதாசன்

கவிஞர் வாணிதாசனின் இயற்பெயர் எத்திராசலு (எ) அரகங்சாமி என்பதாகும். புதுவையில் பிறந்தார். இவருடைய காலம் 22.07.1915 முதல் 07.08.1974 வரையாகும். 34 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளை அறிந்திருந்தார். இவருடைய சிறப்புப் பெயர்கள் கவிஞரேறு, பாவலர் மணி, தமிழகத்தின் “வேர்ட்ஸ் வொர்த்” என்பவையாகும்.

18. தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் சிறப்பு குறித்து பாடப்பட்ட நூல் எது?

(அ) மும்மணிக்கோவை

(ஆ) முத்தொள்ளாயிரம்

(இ) மூவர் உலா

(ஈ) கலிங்கத்துப்பரணி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) முத்தொள்ளாயிரம்

முத்தொள்ளாயிரம்

இந்நூல் மூவேந்தர்களைப் (சேர,சோழ, பாண்டியர்) பற்றிய 900 பாடல்களைக் கொண்டது. ஆயினும் இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. “புறத்திரட்டு” என்னும் நூல் மூலமாக 108 பாடல்களும், பழைய உரை நூல்களில் மேற்கோள்களாக 22 பாடல்களும் கிடைத்துள்ளன. இந்நூல் மூவேந்தர்களின் ஆட்சிச்சிறப்பு, படைச்சிறப்பு, போர்த்திறன், கொடை முதலிய செய்திகளை விளக்குகிறது. இந்நூலின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.

19. மார்போலையில் எழுதும் எழுத்தாணி

(அ) ஈட்டி

(ஆ) தூரிகை

(இ) தந்தம்

(ஈ) ஊசி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) தந்தம்

முத்தொள்ளாயிரம்-பாண்டிய மன்னன் பற்றிய பாடல்

மருப்பூசி யாக மறங்கனல்வேல் மன்னர்

உருத்தகு மார்போலை யாகத் – திருத்தக்க

வையக மெல்லா மெமன் றெழுதுமே

மொய்யிலைவேல் மாறன் களிறு.

பொருள்: நெருங்கி அமைந்த இலை போன்ற வடிவிலான வேலை உடையவன் பாண்டிய மன்னன். அம்மன்னனின் யானை, தன் தந்தங்களை எழுத்தாணியாகவும் வீரம் செறிந்த வேற்படையையுடைய பகை மன்னரின் அகன்ற மார்புகளை ஓலைகளாகவும் கொண்டு, “செல்வம் நிலைத்த உலகமெல்லாம் எம் பாண்டியருக்கே உரியது” என எழுதும்.

20. “வனப்பு” என்னும் சொல்லின் பொருள்

(அ) அழகு

(ஆ) அறிவு

(இ) வளமை

(ஈ) ஆளுமை

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) அழகு

21. “விளம்பி” என்பது —– பெயர்

(அ) இயற்பெயர்

(ஆ) புனைபெயர்

(இ) ஊர்ப்பெயர்

(ஈ) சொல்பெயர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) ஊர்ப்பெயர்

“நான்மணிக்கடிகை” என்ற நூலின் ஆசிரியர் விளம்பி நாகனார். இவரது இயற்பெயர் நாகனார். இவரது ஊரின் பெயர் விளம்பி.

22. விக்டோரியா மகாராணி காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல்

(அ) விவியம்

(ஆ) திருக்குறள்

(இ) ஷேக்ஸ்பியரின் படைப்பகள்

(ஈ) கீட்சின் கவிதைகள்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) திருக்குறள்

23. திருவள்ளுவராண்டு எதை உறுதி செய்து கணக்கிடப்படுகிறது?

(அ) கி.மு.31

(ஆ) கி.மு.13

(இ) கி.மு.2

(ஈ) கி.மு.12

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) கி.மு.31

திருவள்ளுவரின் காலத்தை சரியாகக் கூற இயலவில்லை. எனினும் மறைமலையடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாக கி.மு.31 எனக் கணக்கிடப்பட்டு திருவள்ளுராண்டு நடைமுறைக்கு வந்தது.

24. “சாதியும் மதமுஞ் சமயமுந் தவிர்த்தேன் சாத்திரக் குப்பையும் தணந்தேன்” – எனப் பாடியவர்.

(அ) திருமூலர்

(ஆ) பெரியார்

(இ) வள்ளவர்

(ஈ) வள்ளலார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) வள்ளலார்

25. “அரியா சனமுனக்கே யானால் உனக்குச் சரியாரும் உண்டோ தமிழே?-இடம் பெற்ற நூல்.

(அ) தென்றல் விடு தூது

(ஆ) நெஞ்சு விடு தூது

(இ) தமிழ் விடு தூது

(ஈ)புகையிலை விடு தூது

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) தமிழ் விடு தூது

தமிழ்விடு தூது

அரியா சனமுனக்கே யானால் உனக்குச்

சரியாரும் உண்டோ தமிழே – விரிவார்

திகழ்பா ஒரு நான்குஞ் செய்யுள்வரம் பாகப்

புகழ்பா வினங்கள்மடைப் போக்கா – நிகழவே

நல்லேரி னால் செய்யுள் நாற்கரணத் தேர்பூட்டிச்

சொல்லேர் உழவர் தொகுத்தீண்டி – நல்லநெறி

நாலே விதையா நனி விதைத்து நாற்பொருளும்

மேலே பலன்பெறச்செய் விக்குநாள்.

– ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.

பொருள்: தமிழே! உமக்குத் தலைமைப் பேறு அளித்தால், உமக்கு ஒப்பாவார் ஒருவருமிலர். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களும் வயலின் வரப்புகளாகவும், துறை, தாழிசை, விருத்தம் என்னும் பாவினங்கள் மடைகளாகவும், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நாற்கரணங்களையும் நல்ல ஏர்களாகவும் கொண்டு சொல்லேருழவர் உழவு செய்ய, வைதருப்பம், கௌடம், பாஞ்சாலம், மாகதம் ஆகிய செய்யுள் நன்னெறிகளே அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய விளைபொருள்களாயின.

26. “கண் வனப்புக் கண்ணோட்டம்,

கால் வனப்புச் செல்லாமை” – என உறுப்பழகு பாடியவர்

(அ) பரணர்

(ஆ) கபிலர்

(இ) காரியாசான்

(ஈ) முடியரசன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) காரியாசான்

சிறுபஞ்சமூலம்

கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை

எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல்-பண்வனப்புக்

கேட்டார்நன் றென்றல், கிளர்வேந்தன் தன்னாடு

வாட்டான்நன் றென்றல் வனப்பு.

– காரியாசன்.

பொருள்: கண்ணுக்கு அழகு இரக்கம் கொள்ளல். காலுக்கு அழகு பிறரிடம் இரந்து செல்லாமை.

ஆராய்ச்சிக்கு அழகு தமது முடிவை துணிந்துரைத்தல்.

இசைக்கு அழகு அதனைக் கேட்போர் நன்றெனப் புகழ்தல்.

அரசனுக்கு அழகு குடிமக்களை வருத்தாமல் காப்பவன் என்று பிறர் அவனைப் புகழ்ந்துரைத்தல்.

27. “பராய்க்கடன் உரைத்தல்” என்பது

(அ) கடன் கேட்டல்

(ஆ) கடன் கொடுத்தல்

(இ) வேண்டியது நிறைவேறினால் இன்னது தருவேன் எனல்

(ஈ) வாங்கிய கடனைத் தர மறுத்தல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) வேண்டியது நிறைவேறினால் இன்னது தருவேன் எனல்

“பாராய்க் கடன் உரைத்தல்” என்பது, தான் வேண்டியது நிறைவேறினால் இன்னது தருவேன் என்றுரைத்தல்.

ஐங்குறுநூறு

மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை

அன்புடை மரபினன் கிளையோ டாரப்

பச்சூன் பெய்த பெற்றிண வல்கி,

பொலம்புனை கலத்திற் றருகுவென் மாதோ

வெஞ்சின விறல்வேற் காளையொ

டஞ்சி லோதியை வரக்கரைந் தீமே.

– ஓதலாந்தையார்.

பொருள்: தன் மகள் உடன்போக்காய் தலைவனோடு சென்று விட்டதை அறிந்த நற்றாய், தன் மகள் திரும்பி வந்து விட்டால், பொன்னால் செய்யப்பட்ட பாத்திரத்திலே பச்சை ஊன் இடப்பட்டு சமைக்கப்பட்ட நல்ல உணவினைப் பலியாயக் கொடுப்பதாக காகத்திடம் உரைக்கிறாள்.

28. கோவலன், கண்ணகி மதுரையில் யாரிடம் அடைக்கலப்படுத்தப்பட்டனர்?

(அ) கவுந்தியடிகள்

(ஆ) மாதரி

(இ) மாதவி

(ஈ) நெடுஞ்செழியன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) மாதரி

கோவலன், கண்ணகியை வழிநடத்திச் சென்றவர் கவுந்தியடிகள். அவர்களுக்கு மதுரையில் அடைக்கலம் கொடுத்தவள் மாதரி.

29. “Charity begins at home” என்பதற்கு இணையான தமிழ்ப்பழமொழி

(அ) தன் கையே தனக்குதவி

(ஆ) அறநிலையம் வீட்டிலேயே துவக்கம்

(இ) தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும்

(ஈ) வீட்டிலேயே தானம் செய்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) அறநிலையம் வீட்டிலேயே துவக்கம்

30. அகப்புறப்பாடல்களைக் கொண்ட சங்க நூல் எது?

(அ) பதிற்றுப்பத்து

(ஆ) பரிபாடல்

(இ) புறநானூறு

(ஈ) அகநானூறு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) பரிபாடல்

பரிபாடல்:

திணை-அகமும் புறமும், பாவகை-பரிபாட்டு.

பாடல்கள்-70 (கிடைத்தவை 22); பாடிய புலவர்கள் 13 பேர்.

அடிவரையறை-25 முதல் 400.

பெயர்க்காரணம்: வெண்பா, ஆசிரியப்பர், கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களுக்கும் பல வகையான அடிகளுக்கும் பரிந்து இடம் கொடுக்கும் தன்மையால் பரிபாட்டு ஆனது.

வேறுபெயர்கள்: பரிபாட்டு, ஓங்கு பரிபாடல், இசைப்பாட்டு, பொருட்கலவை நூல், தமிழின் முதல் இசைப்பாடல் நூல்.

பதிப்பித்தவர்: உ.வே.சாமிநாதய்யர்.

தொல்காப்பிய விதிப்படி அமைந்த தொகை நூலாகும்.

தெய்வங்கள் அடிப்படையில் பகுப்பு முறை அமைந்த ஒரே தொகுப்பு நூலாகும்.

பாண்டிய நாட்டை மட்டுமே கூறுகிறது.

பாண்டிய நாட்டை மட்டும் கூறும் தொகை நூல்கள் பரிபாடல், கலித்தொகை.

“கின்று” என்னும் காலம் காட்டும் இடைநிலை முதலில் பரிபாடலில் தான் அமைந்துள்ளது. உலகத் தோற்றம் குறித்தும் கூறுகிறது.

பரிபாடலில் அமைந்துள்ள எண்ணுப் பெயர்களாவன, 0–பாழ். 1/2-பாகு, 9-தொண்டு.

பகுப்புமுறை:

தெய்வம் பாடல் எண்ணிக்கை கிடைத்தவை

திருமால் 8 6

செவ்வேள் (முருகன்) 31 8

காடுகாள்(காளி) 1 0

வையை 26 8

மதுரை 4 0

மொத்தம் 70 22

31. நான்மணிக்கடிகையைப் பாடியவர் யார்?

(அ) விளம்பிநாகனார்

(ஆ) கபிலர்

(இ) முன்றுறை அரையனார்

(ஈ) கடுவெளிச்சித்தர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) விளம்பிநாகனார்

திருவாரூர் நான்மணிமாலையைப் பாடியவர் குமரகுருபரர் ஆவார். திருவாரூரில் எழுந்தருளியுள்ள தியாகராசர் மீது பாடப்பெற்ற நூல் நான்மணிமாலைஆகும். முத்து, பவளம், மரகதம், மாணிக்கம் என்னும் நால்வகையான மணிகளால் ஆன மாலையைப் போன்று நால்வகையான பாடல்களால் (வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா) ஆன நாற்பது செய்யுள்களைக் கொண்டது.

32. திருவாரூர் நான்மணிமாலையைப் பாடியவர்

(அ) திருமூலர்

(ஆ) குமரகுருபரர்

(இ) சிவபெருமான்

(ஈ) திருஞானசம்பந்தர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) குமரகுருபரர்

திருவாரூர் நான்மணிமாலையைப் பாடியவர் குமரகுருபரர் ஆவார். திருவாரூரில் எழுந்தருளியுள்ள தியாகராசர் மீது பாடப்பெற்ற நூல் நான்மணிமாலை ஆகும். முத்து, பவளம், மரகதம், மாணிக்கம் என்னும் நால்வகையான மணிகளால் ஆன மாலையைப் போன்று நால்வகையான பாடல்களால் (வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா) ஆன நாற்பது செய்யுள்களைக் கொண்டது.

33. “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்” என்று கம்பரைப் புகழ்ந்து பாடியவர் யார்?

(அ) பாரதியார்

(ஆ) பாரதிதாசன்

(இ) புகழேந்தி

(ஈ) சடையப்ப வள்ளல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) பாரதியார்

யாமறிந்த புலவர்களிலே

கம்பனைப்போல் வள்ளுவனைப்போல்

இளங்கோவைப்போல் பூமிதனில்

யாங்கணுமே கண்டதில்லை

உண்மை வெறும் புகழ்ச்சியில்லை

– பாரதியார்

34. குறுந்தொகையின் அடிவரையறை

(அ) 8-16

(ஆ) 13-31

(இ) 4-8

(ஈ) 9-12

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) 4-8

குறுந்தொகையின் அடிவரையறை 4-8 ஆனால் ஒன்பதடியில் இருபாடல்கள் (307, 391) இந்நூலில் அமைந்துள்ளன.

35. சரியான விடையைத் தேர்வு செய்

சொல் பொருள்

(அ) விசும்பு – 1.தந்தம்

(ஆ) துலை – 2. யானை

(இ) மருப்பு – 3. துலாக்கோல்

(ஈ) களிற – 4. வானம்

அ ஆ இ ஈ

(அ) 4 3 2 1

(ஆ) 4 3 1 2

(இ) 3 1 4 2

(ஈ) 4 2 1 3

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) 4 3 1 2

36. கலித்தொகை ————- நூல்களில் ஒன்று

(அ) பத்துப்பாட்டு

(ஆ) எட்டுத்தொகை

(இ) பதினெண்கீழ்க்கணக்கு

(ஈ) பதினெண்மேல்கணக்கு

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) எட்டுத்தொகை

37. சரியானவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

கலம்பகம் ——— வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று

(அ) தொண்ணூற்றாறு

(ஆ) பதினெட்டு

(இ) பத்து

(ஈ) தொண்ணுற்றொன்பது

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) தொண்ணூற்றாறு

38. பெருமாள் திருமொழியில் ——– பாசுரங்கள் உள்ளன.

(அ) இருநூற்றைந்து

(ஆ) நூற்றைந்து

(இ) நூறு

(ஈ) பதினெட்டு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) நூற்றைந்து

பெருமாள் திருமொழி குலசேகர ஆழ்வாரால் இயற்றப்பட்டதாகும். இந்நூலில் 105 பாசுரங்கள் உள்ளன.

39. உ.வே.சா.வின் தமிழ்ப்பணியைப் பாராட்டிய மேலைநாட்டவர்

(அ) கோலரிட்ஜ்

(ஆ) வோர்ட்ஸ்வொர்த்

(இ) கீட்ஸ்

(ஈ) சூலியஸ் வின்சோன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) சூலியஸ் வின்சோன்

உ.வே.சா அவர்களின் தமிழ்ப்பணிகளைப் பாராட்டிய அயல்நாட்டவர்கள் ஜி.யூ.போப் மற்றும் சூலியல் வின்சோன் ஆவர்.

40. உடற்பிணியைப் போக்கும் மருத்துவ நூல்கள் இயற்றிய சித்தர்கள்

1.அகத்தியர். 2.தேரையர். 3.போகர். 4.புலிப்பாணி

(அ) 1,4 சரி

(ஆ) 1,3,4 சரி

(இ) 3,4 சரி

(ஈ) 1,2,3,4 சரி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) 1,2,3,4 சரி

பதினெண் சித்தர்கள் வளர்த்த மருத்துவம் சித்த மருத்துவம் ஆகும். தேரையர், அகத்தியர். போகர், புலிப்பாணி முதலிய சித்தர்களின் மருத்துவ நூல்கள் இன்றும் மனிதர்களின் உடற்பிணியைப் போக்குகின்றன். உலகில் பின்விளைவுகளற்ற ஒரே மருத்துவம் சித்த மருத்துவமாகும்.

41. பெரியார் இரு கண்களாகக் கருதியவை

(அ) அன்பு, ஈகை

(ஆ) மரியாதை சுயமரியாதை

(இ) வாய்மை, தூய்மை

(ஈ) ஈகை, வாய்மை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) மரியாதை சுயமரியாதை

42. “பிருங்கராசம்”, “தேகராசம்” – எந்த மூலிகையின் வேறு பெயர்கள்

(அ) குப்பைமேனி

(ஆ) கரிசாலாங்கண்ணி

(இ) கறிவேப்பிலை

(ஈ) கற்றாழை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) கரிசாலாங்கண்ணி

கரிசலாங்கண்ணியின் வேறு பெயர்களாவன, கரிசாலை, கையாந்தகரை, பிருங்கராசம், தேகராசம்.

43. குரல்வளத்தை மேம்படுத்தும் மூலிகை

(அ) துளசி

(ஆ) ஞானப் பச்சிலை

(இ) குப்பைமேனி

(ஈ) கற்றாழை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) ஞானப் பச்சிலை

குரல்வளத்தை மேம்படுத்தும் மூலிகை தூதுவளை. இதன் வேறுபெயர்களாவன தூதுளை, சிங்கவல்லி. இதனை வள்ளலார் “ஞானப்பச்சிலை” எனப் போற்றுகிறார்.

44 “மீதூண் விரும்பேல்” என்றவர்

(அ) கம்பர்

(ஆ) ஒளவையார்

(இ) வள்ளுவர்

(ஈ) திருமூலர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) ஒளவையார்

45. “சித்திரக்காபரப்புலி” என்றழைக்கப்பட்டவர்

(அ) மகேந்திரவர்மன்

(ஆ) நந்திவர்மன்

(இ) கோப்பெருஞ்சோழன்

(ஈ) குலோத்துங்கன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) மகேந்திரவர்மன்

முதலாம் மகேந்திரவர்மன் சிறந்த ஓவியனாகப் புகழ் பெற்றிருந்தான். “சித்திரக்காரப்புலி” என்று புகழப்பட்டான் “தட்சண சித்திரம்” என்ற ஓவிய இலக்கண நூலுக்கு இம்மன்னன் உரை எழுதியுள்ளான்.

46. “தேவாரம்” என்பது

(அ) இக்காலத்து இசைத்தமிழ் நூல்

(ஆ) இடைக்காலத்து இசைத்தமிழ் நூல்

(இ) முற்காலத்து இசைத்தமிழ் நூல்

(ஈ) சங்ககாலத்து இசைத்தமிழ் நூல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) இடைக்காலத்து இசைத்தமிழ் நூல்

இடைக்காலத்து இசைத்தமிழ் நூல்கள்: தேவாரம், திருவாசகம், நாலாயிரத் திவ்யபிரபந்தம்.

முற்காலத்து இசைத்தமிழ் நூல்கள்: முதுநாரை, முதுகுருகு, பெருநாரை, பெருங்குருகு, பஞ்சபாரதீயம், இசை நுணுக்கம், பஞ்சமரபு.

சங்ககாலத்து இசைத்தமிழ் நூல்கள்: பரிபாடல், கலித்தொகை.

47. உரிய விடையை எழுதுக:

முத்துவீரப்பன் ஆட்சிக்காலம்

(அ)நான்காண்டு

(ஆ) ஐந்தாண்டு

(இ) ஏழாண்டு

(ஈ) ஆறாண்டு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) ஏழாண்டு

மதுரையை ஆண்டு வந்த சொக்கநாத நாயக்கரின் மனைவி இராணி மங்கம்மாள். தன் கணவர் இறந்த பின்பு காப்பாட்சியாளராக இருந்து மதுரையை ஆண்டு வந்தார். பின்னர் அவரது மகன் முத்து வீரப்பன் பதவிக்கு வந்து ஏழாண்டு காலம் ஆட்சி செய்தார். முத்து வீரப்பன் திடீரென இறந்து விடவே ராணி மங்கம்மாள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றார்.

48. பொருத்தமான விடையை எழுதுக:

“நாடகத்தமிழ்”

(அ) இயற்றமிழில் பிறந்தது

(ஆ) இயல் இசை சேர்ந்த வழியே பிறந்தது

(இ) இசைத்தமிழில் பிறந்தது

(ஈ) ஏதுவுமில்லை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) இயல் இசை சேர்ந்த வழியே பிறந்தது

49. “எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரியாக நடத்துவது சமத்துவம்” என்றவர்

(அ) பெரியார்

(ஆ) அண்ணல் அம்பேத்கர்

(இ) காந்தியடிகள்

(ஈ) திரு.விக.

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) அண்ணல் அம்பேத்கர்

50. எண்பது விழுக்காடு திராவிட மொழிக்கூறுகளை கொண்ட மொழி

(அ) மலையாளம்

(ஆ) தமிழ்

(இ) தெலுங்கு

(ஈ) கன்னடம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) தமிழ்

51. “பசுவும் கன்றும் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருக்கின்றன” இத்தொடரானது எம்மொழி வகையைச் சார்ந்தது?

(அ) தனி மொழி

(ஆ) செம்மொழி

(இ) தொடர் மொழி

(ஈ) பொது மொழி

(இ) தொடர் மொழி

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) தொடர் மொழி

52. பின்வரும் இலக்கணக்குறிப்புக்கு பொருந்திய சொல்லைத் தேர்ந்தெடுக்க. உரிச்சொற்றொடர்

(அ) நெடுநாவாய்

(ஆ) நனி கடிது

(இ) நன்னுதல்

(ஈ) நின்கேள்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) நனி கடிது

நெடுநாவாய்-பண்புத்தொகை.

நனிகடிது-உரிச்சொல்.

நன்னுதல்-பண்புத்தொகை.

நின்கேள்-நான்காம் வேற்றுமைத்தொகை.

53. உலகத்தமிழ் மாநாடு குடியரசுத் தலைவரால் தொடங்கி வைக்கப் பெற்றது – இது எவ்வகையானத் தொடர்?

(அ) தன்வினைத் தொடர்

(ஆ) பிறவினைத் தொடர்

(இ) செய்வினைத் தொடர்

(ஈ) செயப்பாட்டுவினைத் தொடர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) செயப்பாட்டுவினைத் தொடர்

54. சொற்களை இரண்டு முதல் ———— உறுப்புகளாகப் பகுப்பலாம்.

(அ) 3

(ஆ) 4

(இ) 5

(ஈ) 6

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) 6

சொற்களை இரண்டு முதல் ஆறு உறுப்புகளாகப் பிரிக்கலாம். அவையாவன: பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்.

55. ஓரெழுத்து தனித்து நின்று பொருள் தருவது

(அ) ஓரெழுத்து ஒரு மொழி

(ஆ) சொல்

(இ) கிளவி

(ஈ) மொழி

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) ஓரெழுத்து ஒரு மொழி

56. முதற் பொருளாவது

(அ) நிலமும் பொழுதும்

(ஆ) அகமும் புறமும்

(இ) உயிரும் மெய்யும்

(ஈ) திணையும் ஒழுக்கமும்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) நிலமும் பொழுதும்

முதற்பொருளாவது நிலமும் பொழுதும் ஆகும். கருப்பொருளாவது ஐந்து திணைகளுக்கும் உரிய தெய்வம், மக்கள், உணவு, பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், பண், யாழ், பறை, தொழில் ஆகியவையாகும்.

உரிப்பொருளாவது ஒவ்வொரு நிலத்திற்குமுரிய அக ஒழுக்கம் ஆகும்.

57. இலக்கணத்தில் பொருளாவது யாது?

(அ) செல்வம்

(ஆ) ஒழுக்க முறை

(இ) அடக்கம்

(ஈ) அறிவு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) ஒழுக்க முறை

இலக்கணத்தில் பொருளாவது ஒழுக்கமுறையாகும். அவை அக ஒழுக்கம், புற ஒழுக்கம் என இரண்டு வகைப்படும்.

58. தலைவன் – இச்சொல்லின் ஐகாரம் ——–மாத்திரை குறைந்து ஒலிக்கிறது

(அ) ஒன்றரை

(ஆ) ஒரு

(இ) அரை

(ஈ) இரண்டு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) ஒரு

“தலைவன்” – இச்சொல் இடையில் அமைந்த ஐகாரக்குறுக்கம் ஆகும். இதில் “ஐ” என்னும் எழுத்து தனக்குரிய 2 மாத்திரை அளவிலிருந்து 1 மாத்திரை அளவில் குறுகி ஒலித்தது

59. மதில்போர் பற்றிய புறத்திணைகளுக்குரிய புறப்பொருளைத் தேர்க

(அ) வட்கார்மேற் செல்வது, எதிரூன்றல்

(ஆ) நிரைகவர்தல், மீட்டல்

(இ) எயில்காத்தல், வளைத்தல்

(ஈ) அதிரப்பொருவது, செருவென்றது

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) எயில்காத்தல், வளைத்தல்

உழிஞைத்திணை: பகைவர்களுடைய மதிலை வளைத்து போர் புரிதல் ஆகும்.

நொச்சித்திணை: பகைவர்கள் மதிலைக் கைப்பற்றாதவாறு பாதுகாத்தல் ஆகும்.

60. நேற்று புயல் வீசியதால், பள்ளிக்கு விடுமுறை – எவ்வகைச் சொற்றொடரைச் சார்ந்தது?

(அ) செய்தித் தொடர்

(ஆ) தனிநிலைத் தொடர்

(இ) கலவைத் தொடர்

(ஈ) தொடர்நிலைத் தொடர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) கலவைத் தொடர்

கலவை வாக்கியம்: ஒரு தனிச் சொற்றொடர், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணைத் தொடர்களுடன் கலந்து வருவது கலவை வாக்கியமாகும்.

எ.கா:நேற்று புயல் வீசியதால், பள்ளிக்கு விடுமுறை.

தொடர் வாக்கியம்: ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிவது தொடர் வாக்கியம்.

எ.கா:நேற்று புயல் வீசியது. அதனால் பள்ளிக்கு விடுமுறை.

61. “கால்நகம் கீறிய கோடுகள் வழியே கங்கையும் சிந்துவும் ஓடிவரும்”

அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக:

(அ) உம்மைத் தொகை

(ஆ) வினைத்தொகை

(இ) எண்ணும்மை

(ஈ) இழிவு சிறப்பும்மை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) எண்ணும்மை

எண்ணும்மை: “உம்” விகுதி வெளிப்படையாக வருவதாகும்.

எ.கா:கங்கையும் சிந்துவும், இரவும் பகலும் எண்ணும் எழுத்தும்.

62. பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க

(அ) நாலடியார்

(ஆ) நான்மணிக்கடிகை

(இ) பழமொழி

(ஈ) கலித்தொகை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) கலித்தொகை

நாலடியார்h, நான்மணிக்கடிகை, பழமொழி ஆகியவை பதினெண்கீழ்கணக்கு நூல்களாகும். கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும்.

63. இலக்கணக்குறிப்பறிதல்: பின்வரும் இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

வினைத்தொகை.

(அ) பொங்குதாமரை

(ஆ) பூதரப்புயம்

(இ) அலைகடல்

(ஈ) அகல்முகில்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) பூதரப்புயம்

பொங்குதாமரை, அலைகடல், அகல்முகில் ஆகிய மூன்றும் வினைத்தொகைகள். பூதரப்புயம்-உவமைத்தொகை.

64. ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:

நான் வாங்கிய நூல் இது அல்ல.

(அ) நான் வாங்கிய நூல் இஃது அல்ல

(ஆ) நான் வாங்கிய நூல் இஃது அன்று

(இ) நான் வாங்கிய நூல் இது அன்று

(ஈ) நான் வாங்கின நூல் இது அன்று

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) நான் வாங்கிய நூல் இஃது அன்று

நான் வாங்கிய நூல் இஃது அன்று-சரியான தொடர்

நான் வாங்கிய நூல் இஃது அல்ல-தவறான தொடர்.

ஏனெனில் “நூல்” ஒருமைச்சொல். “அல்ல”பன்மைச்சொல்” நூல்கள் இவை அல்ல” என்பது சரியான தொடராகும்.

ஒருமைக்கு “அன்று” என்ற சொல்லே அமையும்.

அன்று, அல்ல ஆகிய சொற்களில் முதலெழுத்து உயிரெழுத்தாக இருப்பதால், “இது” என்ற சொல் அதற்கு முன்னே அமையக்கூடாது. இஃது, அஃது என்ற சொற்களே உயிரெழுத்திற்கு முன்பு அமைய வேண்டும்.

65. நற்றிணை ———- சிற்றெல்லையும் ————- பேரெல்லையும் கொண்ட நூல்.

(அ) 4, 8

(ஆ) 3, 6

(இ) 9, 12

(ஈ) 13, 31

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) 9, 12

நூல் அடிவரையறை:

நற்றிணை 9-12.

குறுந்தொகை 4-8.

ஐங்குறுநூறு 3-6.

அகநானூறு 13-31.

66. முதல் சமய காப்பியம் எது?

(அ) மணிமேகலை

(ஆ) சிலப்பதிகாரம்

(இ) வளையாபதி

(ஈ) குண்டலகேசி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) மணிமேகலை

தமிழில் தோன்றிய முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள் சமண சமயத்தை சார்ந்தவர். எனினும் அக்காப்பியத்தில் எச்சமயத்தையும் உயர்த்தியோ தாழ்த்தியோ அவர் கூறவில்லை. அதன் பின்னர் இயற்றப்பட்ட மணிமேகலை புத்த சமய சார்புடையதாகும்.

சீவகசிந்தாமணி-சமண சமய சார்புடையது.

வளையாபதி-சமண சமய சார்புடையது.

குண்டலகேசி-புத்த சமய சார்புடையது.

67.பொருத்தமான விடையைத் தேர்வு செய்க:

“தெள்ளு தமிழ்நடை சின்னஞ்சிறிய இரண்டடிகள்-திருக்குறள் குறித்து இப்படிக் கூறியவர் யார்?

(அ) திரு.வி.க

(ஆ) ஒளவையார்

(இ) பாரதியார்

(ஈ) பாரதிதாசன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) பாரதிதாசன்

68. வீரமாமுனிவர் பிறந்த நாடு

(அ) பாரிசு

(ஆ) இத்தாலி

(இ) இங்கிலாந்து

(ஈ) சுவிட்சர்லாந்து

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) இத்தாலி

69. “இனியவை நாற்பது” நூலின் ஆசிரியர் யார்?

(அ) தாயுமானவர்

(ஆ) சச்திதானந்தன்

(இ) பூதஞ்சேந்தனார்

(ஈ) கபிலர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) பூதஞ்சேந்தனார்

70. “அம்மானை” என்பது ———- விளையாடும் விளையாட்டு

(அ) ஆண்கள்

(ஆ) பெண்கள்

(இ) குழந்தைகள்

(ஈ) பெரியவர்கள்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) பெண்கள்

71. முருகனால் சிறையிலிடப்பட்டவன்

(அ) நான்முகன்

(ஆ) சிவன்

(இ) திருமால்

(ஈ) இந்திரன்

 

விளக்கம்:

(அ) நான்முகன்

அம்மானை (திருச்செந்திற்கலம்பகம்)

வீரன்நெடு வெள்வேல் வியன் செந்தில் எம்பெருமான்

பாரில்உயி ரெல்லாம் படைத்தனன் காண் அம்மானை,

பாரில் உயி ரெல்லாம் படைத்தனனே யாமாகில்

ஆரணங்கள் நான்கும் அறிவனோ அம்மானை,

அறிந்து சிறை அயனுக் காக்கினன்காண் அம்மானை

– சுவாமிநாத தேசிகர்.

பொருள்: ஒளி பொருந்திய நெடிய வேலை ஏந்திய வீரனும் பெருமை பொருந்திய திருச்செந்தூரில் விளங்குபவனும் ஆகிய முருகப் பெருமான், உலகிலுள்ள உயிர்களை எல்லாம் படைத்தனன். உலகிலுள்ள உயிர்களை எல்லாம் படைத்தவனேயானாலும் அவன் நான்கு மறைகளையும் அறிவானோ? அவன், இவற்றையெல்லாம் அறிந்தே நான்முகனைச் சிறையிலிட்டனன்[/toggle]

72. திருக்குறள் ——- நூல்களுள் ஒன்று

(அ) பதினெண்கீழ்க்கணக்கு

(ஆ) பத்துப்பாட்டு

(இ) எட்டுத்தொகை

(ஈ) பக்தி நூல்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) பதினெண்கீழ்க்கணக்கு

73. குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் எத்தனை வகையான பூக்களின் பெயர்கள் உள்ளன?

(அ) 79

(ஆ) 99

(இ) 119

(ஈ) 9

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) 99

74. “மூவருலா” எந்த மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்டது?

(அ) சேரர்

(ஆ) சோழர்

(இ) பாண்டியர்

(ஈ) பல்லவர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) சோழர்

சோழ மன்னர்களாகிய விக்கிரமச்சோழன், இரண்டாம் குலேத்துங்கச்சோழன், இரண்டாம் இராசராசசோழன் ஆகிய மூன்று அரசர்களையும் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு பாடப்பட்ட நூல் “மூவருலா” ஆகும். இந்நூலை இயற்றியவர் ஒட்டக்கூத்தர் ஆவார்.

75. “வளன்” என்னும் பெயரால் அழைக்கப்பெறுபவர்

(அ) சூசை

(ஆ) பீட்டர்

(இ) டேவிட்

(ஈ) சேவியர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) சூசை

தேம்பாவணியின் காப்பியத் தலைவன் சூசை மாமுனிவர். யோசேப்பு என்றும் சூசை என்றும் ஒலிபெயர்க்கப்பட்ட ஜோசப் என்னும் பெயரை வீரமாமுனிவர் “வளன்” என்று தமிழ்ப்படுத்தியுள்ளார். வளங்களை வளரச் செய்பவன் என்னும் கருத்திற்றான் எபிரேய மொழியில் “சூசை” என்ற பெயர் வழங்குகிறது. அதன் நேரிய மொழி பெயர்ப்பாகவே “வளன்” என்ற பெயரை வீரமாமுனிவர் இட்டு வழங்கியுள்ளார்

76. நூலின் 97 வெண்பாவிலும் மனநோய் போக்கும் 5 கருத்துகள் கொண்டது

(அ) மலைபடுகடாம்

(ஆ) சிறுபஞ்சமூலம்

(இ) ஏலாதி

(ஈ) திரிகடுகம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம்:

இந்நூலை இயற்றியவர் காரியாசான். இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர். கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சில் ஆகியவற்றின் வேர்கள் சேர்ந்து மருந்தாகி உடல் நோய் தீர்ப்பது போது, இந்நூலில் உள்ள 97 வெண்பாக்களிலும் அமைந்துள்ள ஐந்தைந்து அரிய கருத்துகள் மனிதர்களின் மனநோயைப் போக்குகின்றன.

77. களிற்றியானை, நிரை, மணிமிடைபவளம், நித்திலக்கோவை என 3 பகுதிகளை உடைய நூல்

(அ) புறநானூறு

(ஆ) அகநானூறு

(இ) பரிபாடல்

(ஈ) பதிற்றுப்பத்து

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) அகநானூறு

அகநானூறு

களிற்றியானை நிரை – 120 பாடல்கள்.

மணிமிடைப்பவளம்-180 பாடல்கள்.

நித்திலக்கோவை-100 பாடல்கள்.

78. “நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று” என்று தலைவி தலைவன் மீதான நட்பை வியந்து பாடுவதாய் அமைந்த பாடலின் நூல்

(அ) நற்றிணை

(ஆ) ஐங்குறுநூறு

(இ) குறுந்தொகை

(ஈ) அகநானூறு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) குறுந்தொகை

குறுந்தொகை

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று’

நீரினும் ஆரள வின்றே சாரல்

கடுங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

– தேவகுலத்தார்.

பொருள்: மலைப்பகுதியிலுள்ள குறிஞ்சியின் கரிய கொம்புகளில் குறிஞ்சிப் பூக்கள் பூத்திருக்கின்றன. அப்பூக்களிலிருந்து வண்டுகள் தேனைத் திரட்டுவதற்கு இடமாகிய நாட்டை உடைய தலைவனோடு “யான் கொண்ட நட்பானது நிலத்தை விடப் பெரியது; வானத்தை விட உயர்ந்தது; கடலை விட ஆழமானது” எனத் தலைவி கூறுகிறாள்.

79. “கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்” எனப் போற்றப்படுவது

(அ) தேம்பாவணி

(ஆ) இரட்சண்ய யாத்ரீகம்

(இ) இரட்சண்ய மனோகரம்

(ஈ) கிறித்துவின் அருள்வேட்டல்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) தேம்பாவணி

80. இயேசு பொருமானின் வளர்ப்புத் தந்தை யார்?

(அ) அந்தோணியார்

(ஆ) சூசை

(இ) தாவீது

(ஈ) பேதுரு

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) சூசை

81. “திருத்தொண்டர் புராணம்” எனும் பெரியபுராணத்துக்கு முதனூலாக அமைந்தது எது?

(அ) திருத்தொண்டத்தொகை

(ஆ) திருவாசகம்

(இ) திருமந்திரம்

(ஈ) திருக்கோவையார்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) திருத்தொண்டத்தொகை

சேக்கிழாரால் இயற்றப்பட்டது பெரியபுராணம். இந்நூலுக்கு சேக்கிழார் இட்ட பெயர் “திருத்தொண்டர் புராணம்” ஆகும்.

சுந்தரமூர்த்தி நாயனாரின் “திருத்தொண்டத்தொகை” எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும் சுந்தரமூர்த்தி நாயனாரை காப்பித் தலைவராகக் கொண்டும், நம்பியாண்டார் நம்பி அவர்கள் எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை வழிநூலாகக் கொண்டும் பெரியபுராணத்தை சேக்கிழார் இயற்றினார்

82. “நாலடி நானூறு” என அழைக்கப்படும் நூல் எது?

(அ) நான்மணிக்கடிகை

(ஆ) நாலடியார்

(இ) இன்னாநாற்பது

(ஈ) இனியவை நாற்பது

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) நாலடியார்

83. கருதிமுதல் – என்ற சொல்லின் பொருள் யாரைக் குறிக்கின்றது?

(அ) யூதர்

(ஆ) இயேசுநாதர்

(இ) சீடர்

(ஈ) குற்றவாளி

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) இயேசுநாதர்

84. சொல்லில் தோன்றும் குற்றங்கள் எத்தனை?

(அ) 3

(ஆ) 4

(இ) 6

(ஈ) 10

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) 4

குற்றங்கள் 10 வகையாகும்.

உடலில் தோன்றுவன (3)-கொலை, களவு, காமம்.

சொல்லில் தோன்றுவன (4)-பொய் பேசுதல், புறங்கூறுதல், கடுஞ்சொல், பயனற்ற சொல்.

உள்ளத்தில் தோன்றுவன (3)-பேரவா, கடுஞ்சினம் கொள்ளுதல், தெளிவிலா அறிவு.

மேற்கண்ட குற்றங்களை, மணிமேகலையிடம் அறவண அடிகள் கூறினார்.

85. திருவிளையாடற் புராணத்தை இயற்றியவர்.

(அ) நக்கீரன்

(ஆ) பரஞ்சோதி முனிவர்

(இ) தருமி

(ஈ) சிவபெருமாள்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) பரஞ்சோதி முனிவர்

86. சிறுபஞ்சமூலம் என்ற நூலில் கடவுள் வாழ்த்துடன் ——- வெண்பாக்கள் உள்ளன.

(அ) தொண்ணுற்றொன்பது

(ஆ) தொண்ணூற்றேழு

(இ) தொண்ணூற்றாறு

(ஈ) நூற்றெட்டு

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) தொண்ணூற்றேழு

87. ஆண்பால் பிள்ளைத் தமிழுக்குரிய பருவம் எது?

(அ) அம்மானை

(ஆ) ஊசல்

(இ) சிறுதேர்

(ஈ) கழங்கு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) சிறுதேர்

அம்மானை, ஊசல், கழங்கு ஆகியவை பெண்பால் பிள்ளைத் தமிழுக்குரிய பருவங்களாகும்

88. “நான்” என்பது நான்காம் வேற்றுமை உருபு பெற்றால் ———– என ஆகும்.

(அ) என்னை

(ஆ) என்னால்

(இ) எனக்கு

(ஈ) நின்னை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) எனக்கு

நான்+கு-எனக்கு (4-ஆம் வேற்றுமை உருபு).

நான்+ஐ-என்னை (2-ஆம் வேற்றுமை உருபு).

நான்+ஆல்-என்னால் (3-ஆம் வேற்றுமை உருபு).

நீ+ஐ-நின்னை (2-ஆம் வேற்றுமை உருபு)

89. பொருந்தாததை எழுதுக.

உ.வே.சா. பதிப்பித்த நூல்கள்

(அ) உலா

(ஆ) கோவை

(இ) பிள்ளைத்தமிழ்

(ஈ) பரணி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பிள்ளைத்தமிழ்

“உ.வே.சா” பதிப்பிக்காத நூல் எது?” என்று வினா அமைந்திருக்க வேண்டும்.

பிள்ளைத் தமிழ் நூலை உ.வே.சா. பதிப்பிக்கவில்லை.

உ.வே.சா. அவர்கள் உலா நூல்கள் 9, கேவை நூல்கள் 6, பரணி நூல்கள் 2 ஆகியவற்றைப் பதிப்பித்துள்ளார்.

90. “சாமிநாதன்” என்று ஆசிரியரால் பெயரிடப்பட்டவர்

(அ) அம்பேத்கர்

(ஆ) காமராசர்

(இ) உ.வே.சா

(ஈ) அண்ணா

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) உ.வே.சா

“உ.வே.சா. அவர்களின் இயற்பெயர் வேங்கடரத்தினம். அவருடைய ஆசிரியரான மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் “சாமிநாதன்” என்ற பெயரை இவருக்கு வைத்தார்.

உ.வே.சா. உத்தமதானபுரம் வேங்கடரத்தினம் சாமிநாதன்

91. உ.வே.சா.வின் வாழ்க்கை வரலாறு தொடராக வந்த இதழ்

(அ) இந்தியா

(ஆ) குயில்

(இ) ஆனந்தவிகடன்

(ஈ) நவசக்தி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) ஆனந்தவிகடன்

உ.வே.சா. தம் வாழ்க்கை வரலாற்றை “என் சரிதம்” என்னும் பெயரில் ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார்

92. தமிழகத்தில் காந்தியடிகள் மேடைப் பேச்சினை மொழிப்பெயர்த்தவர்

(அ) மு.வரதராசனார்

(ஆ) பெரியார்

(இ) திரு.வி.க.

(ஈ) பேரறிஞர் அண்ணா

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) திரு.வி.க.

93. திரு.வி.க-வின் செய்யுள் நூல்கள்

1.உரிமை வேட்டல்.

2.சைவத்திறவு.

3.பொருளும் அருளும்.

4.கடவுட்காட்சியும் தாயுமானவரும்.

(அ) 2, 3சரி

(ஆ) 1, 2 சரி

(இ) 1, 3 சரி

(ஈ) நான்கும் சரி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) 1, 3 சரி

“சைவத்திறவு” கடவுட் காட்சியும் தாயுமானவரும்” என்ற நூல்கள் திரு.வி.க.வின் உரைநடை நூல்களாகும்

94. “மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையின் மலர்பார்த்தவர்” என்று பாராட்டப்படுபவர்.

(அ) மு.மேத்தா

(ஆ) சிற்பி

(இ)அப்துல்ரகுமான்

(ஈ) சி.மணி

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ)அப்துல்ரகுமான்

95. வாணிதாசனுக்கு வழங்கப்பட்ட விருது

(அ) கவிஞரேறு

(ஆ) புலவரேறு

(இ) செவாலியர்

(ஈ) பாவலர்மணி

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) செவாலியர்

96. எழுத்து என்பதற்கு ஓவியம் எனப்பொருள் கூறும் நூல்கள்

(அ) நற்றிணை, குறுந்தொகை

(ஆ) அகநானூறு, புறநானூறு

(இ) பரிபாடல், குறுந்தொகை

(ஈ) குறுந்தொகை, புறநானூறு

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) பரிபாடல், குறுந்தொகை

97. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

(அ) திராவிட>திரவிட>திரமிள>தமிழ்

(ஆ) திராவிட>திரமிள>திரவிட>தமிழ்

(இ) தமிழ்>திரமிள>திரவிட>திராவிட

(ஈ) தமிழ்>திராவிட>திரமிள>திரவிட

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) தமிழ்>திரமிள>திரவிட>திராவிட

தமிழ்>திரமிள>திரவிட>திராவிட என்ற தொடர் ஹீராஸ் பாதிரியாரின் கூற்றாகும். திராவிட என்னும் சொல் தமிழ்ச்சொல்லிலிருந்து உருவானது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அவரின் ஆய்வில் மேற்கண்ட தொடர் அமைந்துள்ளது

98. சரியான விடையை எழுதுக:

நடுத்திராவிட மொழிகள் யாவை?

(அ) கதபா,பெங்கோ,கோயா

(ஆ) தோடா, கோத்தா, கொரகா

(இ) மால்தோ, குரூக், பிராகுய்

(ஈ) கோத்தா, கூவி, மால்தோ

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) கதபா,பெங்கோ,கோயா

தென்திராவிட மொழிகள்:

தமிழ்,மலையாளம், கன்னடம், குடகு, துளு,தோடா, கோத்தா, கொரகா, இருளா.

நடுத்திராவிட மொழிகள்:

தெலுங்கு, கோண்டி, கோயா, கூயி, கூவி, கோலாமி, பர்ஜி, கதபா, கோண்டா, நாயக்கு, பெங்கோ, முண்டா.

வடதிராவிட மொழிகள்:

குரூக், மால்தோ, பிராகுய்.

99. கோடிட்ட இடங்களை நிரப்புக:

இராணி மங்கம்மாள் கட்டிய அன்னச்சத்திரம் உள்ள இடம் ———–

(அ) தஞ்சை

(ஆ) மதுரை

(இ) கோவை

(ஈ) திருச்சி

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) மதுரை

100. ஈகைச் சிகரத்தின் உச்சியில் நின்றவர்

(அ) அம்பேத்கர்

(ஆ) பெரியார்

(இ) அண்ணா

(ஈ) காந்தியடிகள்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) காந்தியடிகள்

Exit mobile version