9th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

9th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 9th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

9th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. “World 2030: Public Survey” என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

ஆ) உலக வங்கி

இ) ஐ நா வளர்ச்சித் திட்டம்

ஈ) UNESCO

2. “இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் 2020” அறிக்கையை வெளியிட்டுள்ள அமைச்சகம் எது?

அ) உள்துறை அமைச்சகம்

ஆ) பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

இ) புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்

ஈ) பாதுகாப்பு அமைச்சகம்

3. நாட்டின் நகர்ப்புற வீதியோர விற்பனையாளர்களுக்கு ஆண்டுக் -கு `10,000 வரை நடப்பு மூலதன வசதியை வழங்க முடிவு செய்து உள்ள திட்டத்தின் பெயர் என்ன?

அ) பிரதமர் கிஸான்

ஆ) முத்ரா யோஜனா

இ) பிரதமர் ஸ்வநிதி

ஈ) TLTRO

4. தேசிய சேமிப்பு நிறுவனத்தின் தரவுகளின்படி, அரசாங்கத்தின் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு அதிக பங்களிப்பு செய்துள்ள மாநிலம் எது?

அ) உத்தர பிரதேசம்

ஆ) மத்திய பிரதேசம்

இ) மேற்கு வங்கம்

ஈ) ஹரியானா

5. 2020ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழகங்களின் தரவரி -சையில், இந்திய பல்கலைக்கழகங்களுள் முதலிடம் பிடித்த பல்கலைக்கழகம் எது?

அ) அண்ணா பல்கலைக்கழகம்

ஆ) ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்

இ) ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

ஈ) கல்கத்தா பல்கலைக்கழகம்

6. “சங்கல்ப் சே சித்தி” – கிராமம் மற்றும் டிஜிட்டல் இணைவு இயக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ள அமைப்பு எது?

அ) UNICEF

ஆ) இந்திய ரிசர்வ் வங்கி

இ) NABARD

ஈ) TRIFED

7. 2022ஆம் ஆண்டளவில், பெட்ரோலில் எத்தனை சதவீத அளவிற்கு எத்தனால் கலப்பதற்கு இந்திய இலக்கு நிர்ணயித்துள்ளது?

அ) 1%

ஆ) 1.5%

இ) 2%

ஈ) 10%

8. தேசிய கடல்சார் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) ஏப்ரல் 2

ஆ) ஏப்ரல் 3

இ) ஏப்ரல் 4

ஈ) ஏப்ரல் 5

9. முதன்முறையாக, 2020ஆம் ஆண்டில், ஏப்ரல்.5ஆம் தேதியை எந்த நாளாக ஐநா அவை கடைப்பிடித்தது?

அ) பன்னாட்டு மனச்சான்று நாள்

ஆ) அன்பை ஊக்குவிப்பதற்கான பன்னாட்டு நாள்

இ) பன்னாட்டு அமைதி நாள்

ஈ) கலாசாரத்தை ஊக்குவிப்பதற்கான பன்னாட்டு நாள்

10. BCCI’இன் ஊழல் தடுப்பு பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டு -ள்ளவர் யார்?

அ) ஷபீர் உசேன் சேகாதம் கண்ட்வாவாலா

ஆ) V K சிங்

இ) அஜை குமார் பல்லா

ஈ) விஜை குமார்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து பணியாற்ற இந்தியா-இலங்கை உறுதி

பயங்கரவாத குழுக்கள், தலைமறைவாக உள்ளவர்களுக்கு எதிராக இணைந்து பணியாற்ற இந்தியாவும் இலங்கையும் மீண்டும் உறுதியேற்றுள்ளன. இந்தியா-இலங்கை காவல் உயரதிகாரிகள் இடையேயான காணொலிக் கூட்டம் நடைபெற்றது. அதில் இந்தியா தரப்பில் உளவுத்துறையின் இயக்குநர் அர்விந்த் குமார் தலைமையிலான குழு பங்கேற்றது. இலங்கை சார்பில் அந்நாட்டின் காவல்துறைத்தலைவர் சி டி விக்ரமரத்னே தலைமையிலான குழு பங்கேற்றது.

2. ஒலிம்பிக் பாய்மர படகு போட்டிக்கு மேலும் 2 தமிழக வீரர்கள் உள்பட 3 பேர் தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய மண்டல தகுதிச்சுற்று பாய்மர படகு சாம்பியன்ஷிப் போட்டி ஓமனில் நடந்தது. இதில் ஆண்களுக்கான லேசர் ஸ்டாண்டர்டு பிரிவில் இந்திய வீரர் விஷ்ணு சரவணன் ஒட்டுமொத்தமாக 2ஆவது இடத்தை பிடித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். இதேபோல் 49 ER கிளாஸ் பிரிவில் இந்தியாவின் கே சி கணபதி – வருண் தாக்கர் ஜோடி முதலிடத்தை பிடித்து ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்தது. இவர்கள் இருவரும் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர்.

ஏற்கனவே இந்த போட்டியின் மூலம் இந்திய வீராங்கனை 23 வயதான நேத்ரா குமணன் (சென்னை கல்லூரி மாணவி) லேசர் ரேடியல் பிரிவில் ஒலிம்பிக்குக்கு தகுதிபெற்றதுடன், ஒலிம்பிக் பாய்மரபடகு போட்டியில் அடி எடுத்துவைக்கவிருக்கும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்திருந்தார்.

3. இராமநாதபுரம் வனச்சரகருக்கு சர்வதேச விருது

இராமநாதபுரம் வனச்சரகருக்கு வன பாதுகாப்பு தொடர்பான சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. சுவிச்சர்லாந்தை தலைமையிடமாகக்கொண்ட பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்க அமைப்பு நடப்பு ஆண்டு முதல் சர்வதேச அளவில் சிறந்த வனச்சரகர் விருதை வழங்குகிறது.

இந்த அமைப்பானது உலக வனச்சரகர் கூட்டமைப்பு, உலக வனவுயிரின பாதுகாப்பு மையம் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனவுயிரின அமைப்புமூலம் சிறந்த வனச்சரகருக்கான விருதை தெரிவுசெய்து வழங்குகிறது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார்வளைகுடா தேசியபூங்கா பகுதியில் கடல் அட்டை கடத்தலை தடுத்து, அலையாத்தி காடுகளை காப்பாற்றும் வகையில் செயல்பட்டதற்காக இராமநாதபுரம் வனச்சரக அலுவலர் சு சதீஷ் விருதுக்குத் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார். டேராடூனில் உள்ள இந்திய வன உயிரின நிறுவன மூத்த ஆய்வாளர் சிவகுமார் பரிந்துரை அடிப்படையில் அவரை விருதுக்கு தேர்ந்தெடுத்துள்ளனர். சதீஷுக்கு ஏப்.7 அன்று இணை -யதளம்மூலம் பாராட்டுச்சான்றுடன், `7.25 இலட்சம் நிதியும் வழங்கப்பட்டு -ள்ளது. சதீஷூடன் கம்போடியா, மியான்மர், ரஷ்யா, கொலம்பியா உள்ளிட்ட 8 நாட்டு வனச்சரகர்களும், நம் நாட்டில் உத்தரகாண்ட் ராஜாஜி புலிகள் காப்பக வனச்சரகர் மகேந்திரகிரி ஆகியோரும் விருது பெற்றுள்ள -னர் என்பது குறிப்பிடத்தக்கது.

4. உயர்நீதிமன்றத்தில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் நியமனம்:

சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கான புதிய உதவி சொலிசிட்டர் ஜெனரலாக வழக்கறிஞர் R ராஜேஷ் விவேகானந்தனை குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வழக்குகளில் ஆஜராகி வாதிடுவதற்காக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் உதவி சொலிசிட்டர் ஜெனரல் தவிர்த்து, மத்திய அரசு பேனல் வழக்கறிஞர்கள் துறை வாரியாக நியமிக்கப்படுவது வழக்கம்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் உதவிசொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்த கார்த்திகேயனின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து, புதிய உதவி சொலிசிட்டர் ஜெனரலாக வழக்கறிஞர் ஆர் ராஜேஷ் விவேகானந்தனை குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார்.

1. Which international organization has released the “World 2030: Public Survey” Report?

A) IMF

B) World Bank

C) UNDP

D) UNESCO

2. Which Ministry has released the “Women and Men in India 2020” report?

A) Ministry of Home Affairs

B) Ministry of Women and Child Development

C) Ministry of Statistics and Programme Implementation

D) Ministry of Defence

3. What is the name of the scheme that intends to provide working capital facility of Rs.10,000 per year to urban street vendors of the country?

A) PM KISAN

B) MUDRA Yojana

C) PM SVANIDHI

D) TLTRO

4. As per the data by National Savings Institute, which state has made highest contribution to government’s small savings schemes?

A) Uttar Pradesh

B) Madhya Pradesh

C) West Bengal

D) Haryana

5. Which University has secured the 1st place among Indian Universities in Academic Ranking of World Universities 2020?

A) Anna University

B) JNU

C) JNTU

D) Calcutta University

6. Which organisation has launched the “Sankalp se Siddhi” – Village & Digital Connect Drive?

A) UNICEF

B) RBI

C) NABARD

D) TRIFED

7. What is India’s target for ethanol blending in petrol for the year 2022?

A) 1%

B) 1.5%

C) 2%

D) 10%

8. When is the National Maritime Day celebrated every year?

A) April 2

B) April 3

C) April 4

D) April 5

9. For the first time in 2020, April 5 is observed as which day by the United Nations?

A) International Day of Conscience

B) International Day of Promotion of Love

C) International Day of Peace

D) International Day of Promotion of Culture

10. Who has been appointed as the head of the BCCI’s Anti–Corruption Unit?

A) Shabir Hussein Shekhadam Khandwawala

B) V K Singh

C) Ajay Kumar Bhalla

D) Vijay Kumar

Exit mobile version