9th & 10th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English

9th & 10th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 9th & 10th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

9th & 10th August 2022 Tnpsc Current Affairs in Tamil

1. `4.3 இலட்சம் கோடி மதிப்புள்ள 5G அலைக்கற்றைகளின் ____Ghz-க்கான இந்தியாவின் மிகப்பெரிய அலைக்கற்றை ஏலம் சமீபத்தில் தொடங்கியது.

அ. 1.2 ஜிகாஹெர்ட்ஸ்

ஆ. 12 ஜிகாஹெர்ட்ஸ்

இ. 7.2 ஜிகாஹெர்ட்ஸ்

ஈ. 72 ஜிகாஹெர்ட்ஸ் 

2. உலகின் பரபரப்பான முதல் இருபது வானூர்தி நிலையங்களின் ACI பட்டியலில் 13ஆம் இடத்தில் உள்ள இந்திய வானூர்தி நிலையம் எது?

அ. இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம், புது தில்லி 

ஆ. சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்

இ. சத்ரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம், மும்பை

ஈ. கெம்பேகௌடா பன்னாட்டு வானூர்தி நிலையம், பெங்களூரு

3. இந்திய ராணுவத்திற்கு உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விரைவாக எதிர்வினையாற்றும் போர் வாகனத்தை வழங்கிய நிறுவனம் எது?

அ. TATA அதிநவீன அமைப்பு 

ஆ. பாரத் மின்னணு நிறுவனம்

இ. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிட்

ஈ. DRDO

4. 2022 – உலக கல்லீரல் அழற்சி நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Leaving No one Behind.

ஆ. Hepatitis can’t wait. 

இ. One dies every 30 seconds.

ஈ. Ramping up Healthcare.

5. 2022 – உலக இளையோர் திறன்கள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Transforming Youth Skills for the Future 

ஆ. Reimagining Youth Skills Post Pandemic

இ. Learning to Learn for Life and Work

ஈ. Skills Development to Improve Youth Employment

6. ‘உலக இயற்கை பாதுகாப்பு நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. ஜூலை.28 

ஆ. ஜனவரி.28

இ. அக்டோபர்.28

ஈ. மார்ச்.28

7. சதுப்புநில சுற்றுச்சூழலைக் காப்பதற்கான உலக நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. ஜூலை.26 

ஆ. ஆகஸ்ட்.26

இ. செப்டம்பர்.26

ஈ. ஜனவரி.26

8. இங்கிலாந்தின் லீசெஸ்டர் கிரிக்கெட் மைதானத்திற்கு எந்த இந்திய கிரிக்கெட் வீரரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது?

அ. கபில் தேவ்

ஆ. சுனில் கவாஸ்கர் 

இ. சச்சின் டெண்டுல்கர்

ஈ. மகேந்திர சிங் தோனி

9. ‘ஹிம் டிரோன்-ஏ-தோன்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய இந்திய ஆயுதப்படை எது?

அ. இந்திய வான்படை

ஆ. இந்திய கடற்படை

இ. இந்திய இராணுவம் 

ஈ. இந்திய கடலோர காவல்படை

10. ‘புது தில்லி பன்னாட்டு நடுவர் மையத்தின்’ புதிய பெயர் என்ன?

அ. பாரத் பன்னாட்டு நடுவர் மையம்

ஆ. இந்திய பன்னாட்டு நடுவர் மையம் 

இ. பிரதமர் நடுவர் மையம்

ஈ. ஆத்மநிர்பர் நடுவர் மையம்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்   

1. கொந்தகை அகழாய்வில் 74 சூது பவள மணிகள் கண்டெடுப்பு

கொந்தகை அகழாய்வில் முதுமக்கள் தாழிக்குள் 74 சூது பவள மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய பகுதிகளில் எட்டாம் கட்ட அகழாய்வுப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில் இதுவரை 57 முதுமக்கள் தாழிகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒரு தாழியினுள் அடர்சிவப்பு நிறமுடைய 74 சூது பவள மணிகள் உள்ளன. பழங்காலத்தில் இறந்தவர்களை தாழியுனுள் வைத்து புதைக்கும்போது, அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும் வைத்து புதைப்பது வழக்கம். அந்தவகையில், தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள சூது பவள மணிகளும் வைக்கப்பட்டிருக்கலாம். இவை அனைத்தும் 3 செமீ நீளமுள்ள பவளமணிகள். இதனை இறந்தவர் மாலையாக அணிந்திருக்கலாம் என தொல்லியலாளர்கள் தெரிவித்தனர்.

2. செஸ் ஒலிம்பியாட் நிறைவு: 17 இந்தியர்களுக்கு பதக்கம்

மாமல்லபுரத்தில் நடந்த 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மொத்தம் 17 இந்தியர்கள் பதக்கம் வென்றுள்ளனர். இதில் 2 பேருக்கு தனிநபர் தங்கம், ஒரு வெள்ளி, தலா 4 வெண்கலம், அணிகள் சார்பில் 10 பேருக்கு வெண்கலம் என 17 பதக்கங்கள் அடங்கும்.

தமிழ்நாடு அரசு, சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE), அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (AICFI) சார்பில் `100 கோடி செலவில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரம் போர் பாயிண்ட் ஷெரட்டன் ஹோட்டலில் கடந்த ஜூலை 28ஆம் தேதி தொடங்கியது.

ஓபன் பிரிவில் 187, மகளிர் பிரிவில் 162 நாடுகளைச் சேர்ந்த ஈராயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மொத்தம் 11 சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை 11-ஆம் சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெற்றன. ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான், ஆர்மீனியா, இந்திய பி அணிகள் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றன.

மகளிர் பிரிவில் உக்ரைன், ஜார்ஜியா, இந்திய ஏ அணிகள் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனர்.

இந்திய பி, ஏ அணிகளுக்கு வெண்கலம்:

இந்திய பி அணியில் அதிபன், குகேஷ், பிரக்ஞானந்தா, நிஹால் சரீன், ரௌனக் சத்வானி இடம்பெற்றிருந்தனர். இந்திய மகளிர் ஏ அணியில் ஹரிகா துரோணவல்லி, கொனேரு ஹம்பி, ஆர் வைஷாலி, பக்தி குல்கர்னி, தான்யா சச்தேவ் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் வெண்கலப்பதக்கங்கள் வழங்கப்பட்டன.

குகேஷ், நிஹால் சரீனுக்கு தங்கம்:

விளையாட்டு வீரர்களின் வெற்றி, ரேட்டிங் அடிப்படையில் வழங்கப்படும் தனிநபர் பதக்கங்களில் இந்திய இளம் வீரர்கள் டி குகேஷ், நிஹால் சரீன் ஆகியோர் தங்கம் வென்றனர். ஏ அணி வீரர் அர்ஜுன் எரிகைசி வெள்ளியும் பி அணி வீரர் பிரக்ஞானந்தா வெண்கலமும் வென்றனர். மகளிர் பிரிவில் தான்யா சச்தேவ், திவ்யா தேஷ்முக், ஆர் வைஷாலி வெண்கலம் வென்றனர்.

3. `25 கோடியில் ஒலிம்பிக் தங்கவேட்டை திட்டம்: முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வகையில் விளையாட்டு வீரர்களை உருவாக்க, `25 கோடியில் ஒலிம்பிக் தங்கவேட்டை திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தார்.

ஒலிம்பிக் தங்கவேட்டை: தமிழ்நாட்டில் உலகத்தரம்வாய்ந்த விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் பதக்கங்கள் வெல்வோரை உருவாக்கும் பொருட்டு “ஒலிம்பிக் தங்கவேட்டை” என்ற திட்டம் `25 கோடியில் நடைமுறைப்படுத்த -ப்படவுள்ளது. இதன்படி, ஐம்பது விளையாட்டு வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டு, நான்கு ஆண்டுகளில் அவர்களின் திறன்களை மேம்படுத்த `60 கோடி செலவுசெய்யப்படும்.

இந்தியாவின் முதல் சர்வதேச மாஸ்டர் ஆரோனுக்கு கௌரவம்

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில், இந்தியாவின் முதல் செஸ் சர்வதேச மாஸ்டர் மானுவல் ஆரோன் கௌரவிக்கப்பட்டார்.

4. 44ஆவது செஸ் ஒலிம்பியாட் நிறைவு: ஹங்கேரியிடம் FIDE கொடி ஒப்படைப்பு

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கொள்கை விளக்கப்பாடலுடன் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் விழா நிறைவுபெற்றது. அதனைத் தொடர்ந்து செஸ் போட்டியின் அடையாளமாக கொண்டுவரப்பட்ட தீப்பந்தம் அணைக்கப்பட்டது. முன்னதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கொடி ஹங்கேரி நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. 45ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரியில் நடைபெறவுள்ளது.

5. திறமையான தலைமைத்துவ திட்டம்

2022 ஜுலையில், இந்திய வான்படை, எகிப்திய வான்படையுடன் இணைந்து, கைரோ மேற்கு வான்படை தளத்தில் உள்ள ஆயுதப்பள்ளியில் ஒருமாதகால கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டன. இருநாட்டுப் படைகளின் போர் வானூர்திகளு -க்கு இடையே, முதன்முறையாக இக்கூட்டுப்பயிற்சி நடத்தப்பட்டது. இந்திய வான்படையின், போர்தந்திர உத்திகள் மற்றும் வான்படை போர்தந்திர மேம்பாட்டு நிறுவனத்தின் மூன்று சுகோய்-30 ரக MKI வானூர்திகள் இதில் இடம்பெற்றன. மேலும், போர் வானூர்திகளின் பயிற்றுவிப்பாளர் அறுவர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

9th & 10th August 2022 Tnpsc Current Affairs in English

1. India’s biggest spectrum auction for ……………….. of 5G airwaves worth ₹4.3 lakh crore has commenced recently.

A. 1.2 Gigahertz

B. 12 Gigahertz

C. 7.2 Gigahertz

D. 72 Gigahertz 

2. Which Indian airport was ranked 13th in the ACI List of top 20 busiest airports in the world?

A. Indira Gandhi International Airport, New Delhi 

B. Chennai International Airport

C. Chhatrapati Shivaji International Airport, Mumbai

D. Kempegowda International Airport, Bengaluru

3. Which company delivered the indigenously developed Quick Reaction Fighting Vehicle to the Indian Army?

A. TATA Advanced System 

B. Bharat Electronics Ltd

C. Hindustan Aeronautics Ltd

D. DRDO

4. What is the theme of the ‘World Hepatitis Day – 2022?

A. Leaving No one Behind.

B. Hepatitis can’t wait. 

C. One dies every 30 seconds.

D. Ramping up Healthcare.

5. What is the theme of ‘World Youth Skills Day – 2022’?

A. Transforming Youth Skills for the Future 

B. Reimagining Youth Skills Post Pandemic

C. Learning to Learn for Life and Work

D. Skills Development to Improve Youth Employment

6. When is the ‘World Nature Conservation Day’ celebrated?

A. July.28 

B. January.28

C. October.28

D. March.28

7. When is the ‘International Day for the Conservation of the Mangrove Ecosystem’ observed?

A. July.26 

B. August.26

C. September.26

D. January.25

8. England’s Leicester Cricket Ground has been named after which Indian cricketer?

A. Kapil Dev

B. Sunil Gavaskar 

C. Sachin Tendulkar

D. Mahendra Singh Dhoni

9. Which Indian Armed Force launched the ‘Him Drone–a–thon’ programme?

A. Indian Air Force

B. Indian Navy

C. Indian Army 

D. Indian Coast Guard

10. What is the new name of the ‘New Delhi International Arbitration Centre’?

A. Bharat International Arbitration Centre

B. India International Arbitration Centre 

C. Pradhan Mantri Arbitration Centre

D. Atmanirbhar Arbitration Centre

Exit mobile version