8th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

8th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 8th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

February Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. டாக்கா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிறந்த திரைப் படத்திற்கான’ விருதை வென்ற இந்திய திரைப்படம் எது?

அ) கூழாங்கல் 

ஆ) ஜெய் பீம்

இ) நிமிர்

ஈ) அண்ணாத்த

2. சமீப செய்திகளில் இடம்பெற்ற ‘UNCITRAL’ என்ற ஐநா நிறுவனத்துடன் தொடர்புடைய துறை எது?

அ) குழந்தைகள் நலன்

ஆ) பருவநிலை மாற்றம்

இ) திவால் நிலை 

ஈ) பாரம்பரியம்

3. ‘Services e-Health Assistance and Teleconsultation (SeHAT)’ என்ற முன்னெடுப்பைத் தொடங்கிய நடுவண் அமைச்சகம் எது?

அ) பாதுகாப்பு அமைச்சகம் 

ஆ) சுகாதாரம் & குடும்பநல அமைச்சகம்

இ) அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ) மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

4. “வயம் ரக்ஷமா” அல்லது “நாங்கள் பாதுகாக்கிறோம்” என்பது எந்த ஆயுதப்படையின் குறிக்கோளாகும்?

அ) இந்திய கடலோரக் காவல்படை 

ஆ) இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை

இ) அஸ்ஸாம் சென்டினல்ஸ்

ஈ) எல்லைப் பாதுகாப்புப் படை

5. US FDA’இடமிருந்து முழு அனுமதி பெற்ற ‘Spikevax’, எந்த மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது?

அ) பைசர்

ஆ) மாடர்னா 

இ) ஜான்சன் & ஜான்சன்

ஈ) அஸ்ட்ராசெனெகா

6. ‘AK 203’ என்ற ஒப்பந்தத்தில் எந்த நாட்டுடன் சேர்ந்து இந்தியா கையெழுத்திட்டது?

அ) அமெரிக்கா

ஆ) ரஷ்யா 

இ) பிரான்ஸ்

ஈ) இஸ்ரேல்

7. ‘பத்ம பூஷன்’ விருதை மறுத்த புத்ததேவ் பட்டாச்சார்ஜி, எந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார்?

அ) ஒடிஸா

ஆ) மேற்கு வங்கம் 

இ) உத்தர பிரதேசம்

ஈ) பீகார்

8. பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியானது (PMC வங்கி) எந்த வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது?

அ) யூனிட்டி சிறு நிதி வங்கி 

ஆ) ஜனா சிறு நிதி வங்கி

இ) ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி

ஈ) கேரளா வங்கி

9. 2021 – ஊழல் புலனாய்வுக் குறியீட்டில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?

அ) 64

ஆ) 75

இ) 85 

ஈ) 101

10. “மன்யம் மற்றும் அல்லூரி சீதாராம ராஜு” ஆகியவை எந்த மாநிலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பழங்குடியின மாவட்டங்களாகும்?

அ) கர்நாடகா

ஆ) ஆந்திர பிரதேசம் 

இ) தெலுங்கானா

ஈ) மத்திய பிரதேசம்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 07-02-2022 – தேவநேயப்பாவாணரின் 120ஆவது பிறந்தநாள்.

2. ஜேஎன்யு முதல் பெண் துணைவேந்தராக முன்னாள் மாணவர் சாந்திஸ்ரீ பண்டிட் நியமனம்!

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சாந்திஸ்ரீ பண்டிட் முதல் பெண் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் உள்ள சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்து வரும் சாந்திஸ்ரீ பண்டிட் (59) தற்போது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2. சேதி தெரியுமா?

ஜன.29: 2019-20ஆம் நிதியாண்டில் தேசியக் கட்சிகளின் சொத்துக் கணக்கு அடிப்படையில் பாஜக ரூ. 4,874 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளது.

ஜன.30: சீனாவில் ‘நியோகோவ்’ என்கிற புதிய கரோனா வைரஸ் வகை வௌவால்களிடம் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது.

ஜன.30: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை ஸ்பெயினின் ரபேல் நடால் வென்றார். இதன்மூலம் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று நடால் சாதனை புரிந்தார்.

ஜன.31: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரியை தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது.

பிப்ரவரி.1: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2022-23ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

பிப்ரவரி.2: ‘நட்சத்திரவாசிகள்’ நாவலுக்காக 2021-ஆம் ஆண்டின் சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருது கார்த்திக் பாலசுப்ரமணியனுக்கு அறிவிக்கப்பட்டது.

பிப்ரவரி.3: நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும் தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் RN ரவி, சபாநாயகருக்குத் திருப்பி அனுப்பினார்.

பிப்ரவரி.4: பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தலைவராக ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எம்.ஜெகதேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிப்ரவரி.4: தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 74,416 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

பிப்ரவரி.5: நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க சட்டப்பேரவை அனைத்துக் கட்சி கூட்டத்தைத் தமிழக அரசு கூட்டியது.

1. Which Indian movie won the Best Film award at Dhaka International Film Festival?

A) Koozhangal 

B) Jai Bhim

C) Nimir

D) Annaatthe

2. UNCITRAL, seen in the news, is a UN Agency associated with which field?

A) Children Welfare

B) Climate Change

C) Insolvency 

D) Heritage

3. Which Union Ministry launched the ‘Services e–Health Assistance and Teleconsultation (SeHAT)’ initiative?

A) Defence Ministry 

B) Health and Family Welfare Ministry

C) Science and Technology Ministry

D) Electronics and IT Ministry

4. “Vayam Rakshamah” or “We Protect” is the theme of which armed force?

A) Indian Coast Guard 

B) Indo–Tibetan Border Police Force

C) Assam Sentinels

D) Border Security Force

5. Spikevax, which received full approval from US FDA, was manufactured by which pharma company?

A) Pfizer

B) Moderna 

C) Johnson and Johnson

D) Astrazeneca

6. ‘AK 203 Deal’ was signed by India with which country?

A) USA

B) Russia 

C) France

D) Israel

7. Buddhadeb Bhattacharjee, who refused the Padma Bhushan award, was the Chief Minister of which state?

A) Odisha

B) West Bengal 

C) Uttar Pradesh

D) Bihar

8. The Punjab and Maharashtra Co–operative Bank (PMC Bank) was amalgamated with which bank?

A) Unity Small Finance Bank 

B) Jana Small Finance Bank

C) Equitas Small Finance Bank

D) Kerala Bank

9. What is the rank of India in the Corruption perception index (CPI) of 2021?

A) 64

B) 75

C) 85 

D) 101

10. “Manyam and Alluri Sitarama Raju” are the newly formed tribal districts of which state?

A) Karnataka

B) Andhra Pradesh 

C) Telangana

D) Madhya Pradesh

Exit mobile version