7th Tamil Unit 8 Questions

7th Tamil Unit 8 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 7th Tamil Unit 8 Questions With Answers Uploaded Below.

1) இறைவழிபாட்டில் சடங்கைவிட எதுவே முதன்மையானது?

A) உள்ளத் தூய்மை

B) உடல் தூய்மை

C) இறைவழிபாட்டு தல தூய்மை

D) அனைத்தும்

விளக்கம்: உள்ளத்தூய்மையொடு நன்னெறியில் நடப்பதே சான்றோரின் இயல்பு. இறைவழிபாட்டில் சடங்குகளைவிட உள்ளத் தூய்மையே முதன்மையானது.

2) “வையம் கேளியா வார்கடலே நெய்யாக” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?

A) பேயாழ்வார்

B) ஆண்டாள்

C) பூதத்தாழ்வார்

D) பொய்கையாழ்வார்

விளக்கம்: “வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய

சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடர்ஆழி நீங்குகவே என்று” – பொய்கையாழ்வார்

3) பொருத்துக

அ. உலகம் – 1. இடர்ஆழி

ஆ. வெப்பக்கதிர் வீசும் – 2. பாமாலை

இ. துன்பக்கடல் – 3. வெய்ய

ஈ. சொல்மாலை – 4. வையம்

A) 4, 3, 2, 1

B) 3, 4, 2, 1

C) 4, 2, 3, 1

D) 4, 2, 3, 1

விளக்கம்: உலகம் – வையம்

வெப்பக்கதிர் வீசும் – வெய்ய

துன்பக்கடல் – இடர்ஆழி

சொல்மாலை – பாமாலை

4) “சுடர் ஆழியான்” எனப் போற்றப்படும் கடவுள் யார்?

A) திருமால்

B) ஈசன்

C) பிரம்மா

D) முருகன்

விளக்கம்: ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால் என்பதே ‘சுடர் ஆழியான்’ என்பதன் பொருளாகும்.

5) பொய்கையாழ்வாரின் எண்ணத்தில் நின்று பொருத்துக

அ. பூமி – 1. சிவந்த ஒளிவீசும் சக்கரம் உடையது

ஆ. ஒலிக்கின்ற கடல் – 2. சுடர்

இ. கதிரவன் – 3. நெய்

ஈ. திருவடி – 4. அகல்விளக்கு

A) 3, 2, 4, 1

B) 2, 4, 3, 1

C) 4, 3, 2, 1

D) 1, 4, 3, 2

விளக்கம்: பூமியை அகல்விளக்காகவும், ஒலிக்கின்ற கடலை நெய்யாகவும், வெப்பக்கதிர் வீசும் கதிரவனைச் சுடராகவும் கொண்டவர் திருமால். சிவந்த ஒளிவீசும் சக்கரத்தை வேண்டிப் பாடலால் மாலை சூட்டினேன் என்று

பொய்கையாழ்வார் உரைக்கிறார்.

6) பொய்கையாழ்வார் பிறந்த இடம் எது?

A) மதுரை

B) காஞ்சிபுரம்

C) திருச்சி

D) திருப்பதி

விளக்கம்: பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தார்.

7) நாலாயிர திவ்வியப் பிரபந்தம் யாரால் பாடப்பட்டது?

A) சமணர்கள்

B) ஆழ்வார்கள்

C) பௌத்தர்கள்

D) மாணிக்கவாசகர்

விளக்கம்: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்னும் நூலை 12 ஆழ்வார்கள் சேர்ந்து உருவாக்கினார்கள். ஆழ்வார்கள் என்பவர்கள் திருமாலின் மீது பற்றுக் கொண்டவர்கள்.

8) நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதியை பாடியவர் யார்?

A) பொய்கையாழ்வார்

B) பேயாழ்வார்

C) பூதத்தாழ்வார்

D) ஆண்டாள்

விளக்கம்:நாலாயிரத் திவ்வியப் பிரபந்த்ததிலுள்ள முதல் திருவந்தாதியை பொய்கையாழ்வார் பாடியதாகும். இதன் முதல் பாடலே “வையம் தகளியா வார்கடலே நெய்யாக” எனத் தொடங்கும் பாடலாகும்.

9) “அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக”என்ற பாடலைப் பாடியவர் யார்?

A) பொய்கையாழ்வார்

B) பேயாழ்வார்

C) பூதத்தாழ்வார்

D) ஆண்டாள்

விளக்கம்: “அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரயா – நன்புஉருகி

ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு

ஞானத்தமிழ் புரிந்த நான்”- பூதத்தாழ்வார்

10) பொருத்துக.

அ. தகளி – 1. அறிவு

ஆ. ஞானம் – 2. திருமால்

இ. நாரணன் – 3. அகல்விளக்கு

A) 3, 2, 1

B) 2, 1, 3

C) 1, 3, 2

D) 3, 1, 2

விளக்கம்:

தகளி – அகல்விளக்கு

ஞானம் – அறிவு

நாரணன் – திருமால்

11) பூதத்தாழ்வாரின் எண்ணத்தில் நின்று பொருத்துக

அ. அன்பு – 1. நெய்

ஆ. ஆர்வம் – 2. அகல்விளக்கு

இ. மனம் – 3. சுடர் விளக்கு

ஈ. ஞான ஒளி – 4. திரி

A) 2, 1, 4, 3

B) 2, 1, 3, 4

C) 4, 2, 3, 1

D) 3, 4, 2, 1

விளக்கம்: ஞானத்தமிழ் பயின்ற பூதத்தாழ்வார் அன்பையே அகல்விளக்காகவும், ஆர்வத்தையே நெய்யாகவும், இனிமையால் உருகும் மனத்தையே இடுகின்றன. திரியாகவும் கொண்டு ஞான ஒளியாகிய சுடர் விளக்கை மனம் உருக திருமாலுக்கு ஏற்றினார்.

12) பூதத்தாழ்வார் எங்கு பிறந்தார்?

A) விழுப்புரம்

B) மாமல்லபுரம்

C) தஞ்சாவூர்

D) காஞ்சிபுரம்

விளக்கம்: பூதத்தாழ்வார் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பிறந்தார்.

13) பூதத்தாழ்வார், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் எத்தனையாவது திருவந்தாதியை இயற்றினார்?

A) முதல்

B) இரண்டாவது

C) மூன்றாவது

D) நான்காவது

விளக்கம்: பூதத்தாழ்வார், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாவது திருவந்தாதியை இயற்றியுள்ளார். “அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக” எனத் தொடங்கும் பாடல் இரண்டாம் திருவந்தாதியிலுள்ள முதல் பாடலாகும்.

14) ஒரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவது எது?

A) மோனை

B) எதுகை

C) அந்தாதி

D) இயைபு

விளக்கம்: பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவதை அந்தாதி என்பர். (அந்தம் – முடிவு, ஆதி – முதல்)

15) அந்தாதியை அமையும் பாடல்களைக் கொண்டு அமையும் சிற்றிலக்கிய வகை எது?

A) உலா

B) பரணி

C) அந்தாதி

D) புறநிலை

விளக்கம்: அந்தாதியாக அமையும் பாடல்களைக் கொண்டு அமைவது அந்தாதி என்னும் சிற்றிலக்கிய வகையாகும்.

16) நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தை தொகுத்தவர் யார்?

A) பரிமேலழகர்

B) நாதமுனி

C) உ.வே.சா

D) ஆழ்வார்கள்

விளக்கம்: திருமாலைப் போற்றிப் பாடியவர்கள் 12 ஆழ்வார்கள் . அவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் ஆகும். இதனைத் தொகுத்தவர் நாதமுனி.

17) முதலாழ்வார்கள் எனப்படுபவர்கள் யார்?

1. பொய்கையாழ்வார்

2. பூதத்தாழ்வார்

3. பேயாழ்வார்

A) 1, 2

B) 2, 3

C) 1, 3

D) 1, 2, 3

விளக்கம்: பன்னிரு ஆழ்வார்களுள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும் முதலாழ்வார்கள் என்பர்.

18) ‘இடர்’ என்பதன் பொருள் என்ன?

A) துன்பம்

B) மகிழ்ச்சி

C) ஆர்வம்

D) இன்பம்

விளக்கம்: இடம் என்பதன் பொருள் துன்பம் ஆகும்.

19) “ஞானச்சுடர்” – பிரித்தெழுக

A) ஞா + சுடர்

B) ஞானச் + சுடர்

C) ஞானம் + சுடர்

D) ஞானி + சுடர்

விளக்கம்: ஞானச்சுடர் – ஞானம் + சுடர் எனப் பிரியும்

20) இன்ப + உருகு – சேர்த்தெழுக

A) இன்புஉருகு

B) இன்பும்உருகு

C) இன்புருகு

D) இன்பருகு

விளக்கம்: இன்ப + உருகு – இன்பருகு எனப் புணரும்

21) “இன்சொல் விளைநிலனா ஈதலே வித்ததாக” எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?

A) பூதத்தாழ்வார்

B) பேயாழ்வார்

C) ஆண்டாள்

D) முளைப்பாடியார்

விளக்கம்: “இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக

வன்சொல் கலைகட்டு வாய்மை எருவட்டி

அன்புநீர் பாய்ச்சி அறந்கதிர் ஈனர்

பைந்கூழ் சிறுகாலைச் செய்” – முனைப்பாடியர்

22) பொருத்துக.

அ. வித்து – 1. பசுமையான பயிர்

ஆ. பைங்கூழ் – 2. விதை

இ. ஈன – 3. பெற

A) 3, 2, 1

B) 2, 1, 3

C) 2, 3, 1

D) 1, 3, 2

விளக்கம்: வித்து – விதை

பைங்கூழ் – பசுமையான பயிர்

ஈன – பெற

23) பொருத்துக

அ. நிலன் – 1. வேண்டாடி செடி

ஆ. வன்சொல் – 2. நிலம்

இ. களை – 3. கடுஞ்சொல்

A) 2, 3, 1

B) 3, 2, 1

C) 2, 1, 3

D) 3, 1, 2

விளக்கம்: நிலன் – நிலம்

வன்சொல் – கடுஞ்சொல்

களை – வேண்டாத செடி

24) முனைப்பாடியார் எண்ணத்தில் நின்று பொருத்துக.

அ. விளைநிலம் – 1. அறம்

ஆ. விதை – 2. அன்பு

இ. களை – 3. இனியசொல்

ஈ. எரு – 4. ஈகை பண்பு

உ. நீர் – 5. உண்மை பேசுதல்

ஊ. கதிர் – 6. வன்சொல்

A) 3 4 5 2 1 6

B) 4 3 2 5 6 1

C) 3 4 6 5 2 1

D) 3 4 5 6 2 1

விளக்கம்: விளைநிலம் – இனியசொல்

விதை – ஈகை பண்பு

களை – வன்சொல்

எடு – உண்மை பேசு

நீர் – அன்பு

கதிர் – அறம்

25) முனைப்பாடியர் எந்த சமயப்புலவர்?

A) பௌத்தம்

B) சமணம்

C) சைவம்

D) வைணவம்

விளக்கம்: முனைப்பாடியார் திருமுனைபாடி என்னும் ஊரைச் சேர்ந்த சமணப்புலவர். இவரது காலம் 13-ஆம் நூற்றாண்டு.

26) அறநெறிச்சாரம் எத்தனை பாடல்களைக் கொண்டது?

A) 220

B) 225

C) 230

D) 280

விளக்கம்: முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம் 225 பாடல்களைக் கொண்டது. அறநெறிகளைத் தொகுத்துக் கூறுவதால் இது அறநெறிச்சாரம் எனப் பெயர்பெற்றது. “இன்சொல் விளைநிலனா……” என்பது 15-வது பாடலாகும்.

27) காந்தியடிகள் எப்போதும்_________பேசினார்

A) வன்சொற்கள்

B) அரசியல்

C) கதை

D) வாய்மை

விளக்கம்: காந்தியடிகள் எப்போதும் வாய்மைப் பேசினார்.

வாய்மை – உண்மை

வன்சொல் – கடுஞ்சொல்

28) இன்சொல் – பிரித்தெழுதுக

A) இனி + சொல்

B) இன்மை + சொல்

C) இனிமை + சொல்

D) இன் + சொல்

விளக்கம்: இன்சொல் – இனிமை + சொல் எனப் பிரியும்

29) அறம் + கதிர் – சேர்த்தெழுதுக

A) அறகதிர்

B) அறுகதிர்

C) அறக்கதிர்

D) அறம்கதிர்

விளக்கம்: அறம் + கதிர் – அறக்கதிர் எனப் புணரும்.

30) இளமை – எதிர்சொல் தருக

A) முதுமை

B) புதுமை

C) தனிமை

D) இனிமை

விளக்கம்: இளமை என்பதன் எதிர்சொல் முதுமை ஆகும்.

31) சரியான கூற்றைத் தேர்க.

1. பிறருக்கு உதவி செய்யும் பொழுது அவர்களுக்குத் தாழ்வு ஏற்படாவண்ணம்

உதவுவதே சிறந்த பண்பு

2. அறநெறியில் பொருளீட்டித் தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வையாத ஒப்புரவு நெறியாகும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: பிறருக்கு உதவி செய்யும் போது அவர்களுக்குத் தாழ்வு ஏற்படா வண்ணம் தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்பதே ஒப்புரவு நெறியாகும்.

32) வாழ்க்கை எதை குறிக்கோளாக உடையது?

A) அறம்

B) இல்லறம்

C) தொண்டு

D) தியாகம்

விளக்கம்: வாழ்க்கை தொண்டினையே குறிக்கோளாக உடையது. இந்தக் குறிக்கோளுடன் தான் ஒப்புரவு நெறியை திருக்குறள் அறிமுகப்படுத்துகிறது.

33) திருவள்ளுவர் கூறிய வாழும் நெறி எது?

A) பொதுவுடைமை நெறி

B) தனியுடைமை நெறி

C) அரசுடைமை நெறி

D) A மற்றும் C

விளக்கம்: திருக்குறள் நெறியில் மக்கள் ஒருவருக்கொருவர் கடமைகளைச் செய்வதற்கு உரியவர்கள் உரிமைகளைப் பெறவும் உரியவர்கள். “ஒருவர் எல்லாருக்காவும், எல்லாரும் ஒருவருக்காவும்” என்னும் பொதுவுடைமை நெறியே திருவள்ளுவரின் வாழும் நெறியாகும்.

34) தவறான கூற்றைத் தேர்க.

1. உதவி பெறுபவரை உறவுப் பாங்கில் எண்ணி, உரிமை உடையவராக, நினைத்து, உதவிசெய்வதற்குப் பதில் அவரே எடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்குதலே ஒப்புரவு ஆகும்.

2. ஒப்புரவில் ஈதல் – ஏற்றல் என்பதன் வழியாக அமையும் புரவலர் – இரவலர் உழவு உண்டு

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) இரண்டும் தவறு

D) எதுவுமில்லை

விளக்கம்: ஒப்புரவில் ஈதல் – ஏற்றல் என்பதன் வழியாக அமையும் புரவலர் – இரவலர் உறவு இல்லை.

35) அயலவர் உண்ணாது இருக்கும்போது, நாம் மட்டும் உண்பது நெறியும் அன்று, முறையும் அன்று அதுமட்டுமல்லாமல் பாதுகாப்பும் அன்று. அயலவன் விழித்து எழுந்தால் நமது நிலை பாதிக்கும். ஆதலால் வாழ்வு அறநிலையப் பாதுகாவல் வாழ்வாக அமைய வேண்டும் இவ்வாறு கூறியவர் யார்?

A) அப்பர்

B) சுந்தரர்

C) சம்பந்தர்

D) மாணிக்கவாசகர்

விளக்கம்: இவ்வாறு அப்பரடிகள் கூறினார், அதை அண்ணல் காந்தியடிகள் வழி மொழிந்தார்.

36) “உலகம் உன்ன உண் உடுத்த உடுப்பாய்”- இதனை கூறியவர் யார்?

A) பாரதி

B) பாரதிதாசன்

C) சுரதா

D) மௌலி

விளக்கம்: பாவேந்தர் பாரதிதாசன் “உலகம் உண்ண உண், உடுத்த உடுப்பாய்” என்று கூறுகிறார்.

37) எதை மருந்து என்றும் கூறுவது தமிழ் மரபு?

A) வறுமை

B) நோய்

C) செல்வம்

D) உதவி

விளக்கம்: வறுமையைப் பிணி என்றும், செல்வத்தை மருந்து என்றும் கூறுவது தமிழ் மரபு.

38) “செல்வத்துப் பயனே ஈதல்

துய்ப்பேம் எனினே தப்புந பலவே” என்று உரைக்கும் நூல் எது?

A) நன்னூல்

B) பத்துப்பாட்டு

C) நற்றிணை

D) புறநானூறு

விளக்கம்: “செல்வத்துப் பயனே ஈதல்

துய்ப்பேம் எனினே தப்புந பலவே” என்று புறநானூறு கூறுகிறது.

39) “ஊருணி நீரநிறைந்து அற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?

A) திருக்குறள்

B) புறநானூறு

C) நன்னூல்

D) பத்துப்பாட்டு

விளக்கம்: உலகினர் விரும்புமாறு உதவி செய்து வாழ்பவரது செல்வமானது ஊருணியில் நிரம்பிய நீர்போலப் பலருக்கும் பயன்படும்.

40) “பயன்மரம் உள்ளுர்ப் பழுத்துஅற்றால் செல்வம்

நயனுடை யான்கண் படின்” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?

A) திருக்குறள்

B) புறநானூறு

C) நன்னூல்

D) பத்துப்பாட்டு

விளக்கம்: நற்பண்பு உடையவரிடம் செல்வம் சேர்வது ஊருக்குள் பயன் தரும் பழங்கள் பழுத்திருப்பதைப் போன்றது.

41) திருக்குறள் நெறியைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் முழுவதும் கடமையாகக் கொண்டவர் யார்?

A) பரிமேலகழகர்

B) குன்றக்குடி அடிகளார்

C) கவிமணி

D) ஜி.யு.போப்

விளக்கம்: மக்கள் பணியையே இறைப் பணியாக எண்ணி தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார். இவர் திருக்குறள் நெறியைப் பரப்புதவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டார்.

42) குன்றக்குடி அடிகளார் நடத்திய இதழ் எது?

A) நாயன்மார் அடிச்சுவட்டில்

B) அறிக அறிவியல்

C) குறட்செல்வம்

D) ஆலயங்கள் சமுதாய மையங்கள்

விளக்கம்: குன்றக்குடி அடிகளார் நடத்திய இதழ்கள் 1. அருளோசை 2. அறிக அறிவியல்

43) செல்வத்தின் பயன்_______வாழ்வு

A) ஆடம்பர

B) நீண்ட

C) ஒப்புரவு

D) நோயற்ற

விளக்கம்: செல்வத்தின் பயன் என்பது மற்றவருக்குக் கொடுத்து உதவி மகிழும் ஒப்புரவு வாழ்வாகும்.

44) பொருத்துக (எதிர்ச்சொற்களை பொருத்துக).

அ. எளிது – 1. புரவலர்

ஆ. ஈதல் – 2. அரிது

இ. அந்நியர் – 3. ஏற்றல்

ஈ. இரவலர் – 4. உறவினர்

A) 4, 3, 2, 1

B) 2, 4, 3, 1

C) 2, 3, 4, 1

D) 4, 3, 1, 2

விளக்கம்: எளிது X அரிது

ஈதல் X ஏற்றல்

அந்நியர் X உறவினர்

இரவலர் X புரவலர்

45) ‘எஜன்’ என்னும் ஜப்பானிய மொழிச் சொல்லுக்கு என்ன பொருள்?

A) அறிவு

B) கடவுள்

C) குரு

D) தியானம் செய்

விளக்கம்: ‘ஜென்’ என்னும் ஜப்பானிய மொழிச் சொல்லுக்கு ‘தியானம் செய்’ என்பது பொருள். புத்த மதத்தைச் சார்ந்த துறவியரில் ஒரு பிரிவினரே ஜென் சிந்தனையாளர்கள்

46) ஜென் துறவியர் பெரும்பர்லும் எந்நாட்டில் வசிப்பர்?

A) ஜப்பான்

B) சீனா

C) A மற்றும் B

D) இலங்கை

விளக்கம்: இவர்கள் பெரும்பாலும் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்தனர்.

47) இருள் கலைந்து வெளிச்சம் வந்துவிட்டதை எந்த நொடியில் உணர முடியும் என ஜென் குரு, உண்மை ஒளி என்ற கதையில் கூறுகிறார்?

A) சூரியன் உதிப்பு

B) தொலைவில் நிற்பது கழுதையா குதிரையா என அறியும் போது

C) தூரத்திலுள்ளது ஆலமரமா அல்லது அரசமரமா என்பதை உணரும்போது

D) ஒரு மனிதனைக் காணும்போது, இவர் என் உடன்பிறந்தவர் என்ற எண்ணம் வரும்போது

விளக்கம்: ஒரு மனிதரைக் காணும்போது இவர் என் உடன்பிறந்தவர் என்று எப்போது நீங்கள் உணர்கிறீர்களோ, அப்போதுதான் உண்மையான ஒளி உங்களுக்கு ஏற்படுகிறது என்று ஜென் குரு கூறுகிறார்.

48) கூற்றுகளை ஆராய்க.

1. உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்ற இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணி

2. உருவக அணியில் உவமிக்கப்படும் பொருள் பின்னும் உவகை முன்னுமாக அமையும்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: உருவக அணியில் உவமிக்கப்படும் பொருள் முன்னும், உவமை பின்னுமாக அமையும்.

49) கூற்றுகளை ஆராய்க.

1. தேன் போன்ற தமிழ் – உவமை

2. வெள்ளம் போன்ற இல்லம் – உருவகம்

A) 1 சரி

B) 2 சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: தேன் போன்ற தமிழ் – உவமை

தமித்தேன் – உருவகம்

வெள்ளம் போன்ற இல்லம் – உவமை

இன்ப வெள்ளம் – உருவகம்

கடல் போன்ற துன்பம் – உவமை

துன்பக்க கடல் – உருவகம்

50) “வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச் செய்ய…….” இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி எது?

A) உவமை அணி

B) உருவக அணி

C) ஏகதேச உருவக அணி

D) வஞ்சப்புகழ்ச்சி அணி

விளக்கம்: இப்பாடலில் பூமி அகல்விளக்காகவும் கடல் நெய்யாகவும், கதிரவன் சுடராகவும் உருகப்படுத்தப்பட்டு உள்ளன. எனவே, இப்பாடல் உருவக அணி அமைந்ததாகும்.

51) “அறிவு என்னும் விளக்கைக் கொண்டு அறியாமை நீக்க வேண்டும்” – இதில் பயின்று வந்துள்ள அணி எது?

A) உவமை அணி

B) உருவக அணி

C) ஏகதேச உருவக அணி

D) வஞ்சப்புகழ்ச்சி அணி

விளக்கம்: இதில் அறிவு விளக்காக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. அறியாமை இருளாக உருவகப்படுத்தப்படவில்லை. இவ்வாறு கூறப்படும் இரு பொருளில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.

52) “பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்” இக்குறளில் பயின்ற வந்துள்ள அணி என்ன?

A) உவமை அணி

B) உருவக அணி

C) ஏகதேச உருவக அணி

D) வஞ்சப்புகழ்ச்சி அணி

விளக்கம்: வள்ளுவர் மக்களின் செயல்களைப் பொன்ணிண் தரத்தை அறிய உதவும் உரைக்கல்லாக உருவகம். செய்துவிட்டு, மக்களது உயர்வையும் தாழ்வையும் பொன்னாக உருவகம் செய்யவில்லை. எனவே, இது ஏகதேச உருவக அணி.

53) வினாச்சொற்கள் எத்தனை?

A) 10

B) 11

C) 15

D) 12

விளக்கம்: ஏதேனும் ஒன்றை அறிந்துகொள்வதாக வினவப்படுவது வினாவாகும். வினா கேட்க பயன்படுத்தும் சொற்கள் ‘வினாச்சொற்கள்’. எது, என்ன, எங்கு, எப்படி, எத்தனை, எப்போது, எவற்றை, எதற்கு, ஏன், யார், யாது, யாவை ஆகியவை வினாச் சொற்களாகும்.

54) பொருத்துக.

அ.குறிக்கோள் – 1. Ambition

ஆ.செல்வம் – 2. Objectives

இ.லட்சியம் – 3. Wealth

A) 2, 3, 1

B) 2, 1, 3

C) 3, 2, 1

D) 1, 3, 2

விளக்கம்: குறிக்கோள் – Objective

செல்வம் – Wealth

லட்சியம் – Ambition

55) பொருத்துக.

அ. பொதுவுடைமை – 1. Neighbour

ஆ. கடமை – 2. Communism

இ. அயலவர் – 3. Responsibility

A) 2, 1, 3

B) 3, 2, 1

C) 3, 1, 2

D) 2, 3, 1

விளக்கம்: பொதுவுடைமை – Communism

கடமை – Responsibility

அயலவர் – Neighbour

56) _________ ஒரு நாட்டின் அரணன்று

A) காடு

B) வயல்

C) மலை

D) தெளிந்த நீர்

விளக்கம்: மணநீரும் மண்ணும் மலையும் அணிநிழல் காடு உடையது அரண் – இக்குறளில் தெளிந்த நீரும், நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய 4-ம் உள்ளதே அரண் ஆகும் என்று கூறுகிறது.

57) மக்கள் அனைவரும்_________ஒத்த இயல்புடையவர்கள்

A) பிறப்பால்

B) நிறத்தால்

C) குணத்தால்

D) பணத்தால்

விளக்கம்: “பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்” – இக்குறள் மூலம் பிறப்பால் மக்கள் அனைவரும் ஒத்த இயல்புடையவர்களே. அவர்கள் செய்யும் நன்மை, தீமையாகிய செயல்களில் அவர்களது சிறப்பியல்புகள் ஒத்திருப்பதில்லை.

58) நாடென்ப – பிரித்தெழுதுக

A) நாடு + என்ப

B) நா + என்ப

C) நாடு + என்ப

D) நாடு + டென்ப

விளக்கம்: நாடென்ப என்பது நாடு + என்ப எனப் பிரியும்

59) கண் + இல்லது – சேர்த்தெழுதுக

A) கணிஇல்லது

B) கணில்லது

C) கண்ணில்லாது

D) கண்ணில்லது

விளக்கம்:கண் + இல்லது – கண்ணில்லது எனப் புணரும்

60) எவை சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடு என திருவள்ளுவர் கூறுகிறார்?

A) மிக்க பசி

B) ஓயாத நோய்

C) அழிவு செய்யும் பகை

D) அனைத்தும்

விளக்கம்: மிக்க பசியும், ஓயாத நோயும், அழிவு செய்யும் பகையும் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும் என திருவள்ளுவர் கூறுகிறார்.

Exit mobile version